You are on page 1of 3

நீங்கள் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். அது இல்லாத போது, நீங்கள் மனக்கவலையடைவீர்கள்.

அது இருக்கும் போது , அதைப் பற்றியே யோசிப்பீர்கள். ஆம், அது வேறொன்றும் இல்லை, உங்கள் கை
தொலைப்பேசி தான். கை தொலபேசி நம் தினசரி வாழ்கை நடையே மாற்றிவட்டது .  இன்றைய உலகில்
ஐந்து பேரில் ஒருவருக்கு ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது. கைதொலைபேசியால் பல நன்மைகள் உள்ளன,
அதே சமயத்தில் பல பாதிப்புகளும் உள்ளன.

1. உரையாடும் திறமை பாதிப்படையும் (நேருக்கு நேர் பேசாமல் கைதொலைபேசியில் உரையாடுவது)

 பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பதை மறந்து விடுவிவோம். உதாரணத்திற்கு,


நேர்முக்த்தேர்வின் பொழுது முறைபடி நடந்துகொள்ள தெரிந்திருக்க மாட்டோம்.
 அடுத்தவர்களுடைய உடல்மொழி/நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள
முடியாமல் போய் விடுகிறோம். 
 பழைய நட்பு வட்டங்களோடு மட்டுமே தொடர்பு கொள்வதால், பதிய நண்பர்களை
ஏற்படுத்துவதில்லை. 
 சிறுவர்கள் கைபேசியில் குறுஞ்செய்தியை (SMS/IM) அதிகமாக உபயோகப்படுத்துவதால் எழுத்து
பிழையும் இலக்கணமும் அதிகரிக்கின்றன. 
 தொலைபேசியில் உரையாடும்பொழுது அடுத்தவர்களுடைய முகம் தெரியாத்தால் ஈடுப்பாட்டுடன் 
பேசுவதில்லை

2. உடல் பருமன்

 மக்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் நிறைய நேரம் செலவழிப்பதால் அவர்கள் வெளியே


சென்று காற்பந்து விளையாட அல்லது மெதுவோட்டம் ஓட விரும்புவதில்லை. அவர்கள்
உடற்பயிற்சிகளில் ஈடுப்படாததால், அவர்களின் உடல் பருமனாகும், உடல் எடை அதிகரிக்கும்.
 ஒருவன் வயதாகும்போது அவர் உடல் பருமன்-சார்ந்த நோய்களால் அவதிப்பட அதிக
வாய்ப்புண்டு. மாரடைப்பும் புற்றுநோயும் உதாரணங்களாகும்.
 உடல் ஆரோக்கியமாக இல்லாததால், பலர் படிகளில் ஏறவும் சிறு காலங்களுக்கு மெதுவோட்டம்
ஓடவும் சிறமப்படுகின்றனர். அதாவது, உடல் ஆரோக்கியமாக இல்லாததால் அன்றாட
வாழ்க்கையில் செய்ய வேண்டிய சிறு சிறு காரியங்களுக்கும் சிறம்ப்படுகிறார்கள்.
 உலகில் நடக்கும் மரணங்களுக்கு உடல் பருமன் ஐந்தாவது காரணமாக கருதப்படுகிறது.
 அமெரிக்கைக்கிய நாடுகளில் எழுபத்தைந்து மில்லியன் (75) மக்கள் அதிக இரத்த அழுத்தத்தினால்
அவதிப்படுகிறார்க

3. குடும்ப ஒற்றுமை குறையும்

 எப்போதும் கைத்தொலைப்பேசியும் கையுமாக இருப்பதால் குடும்பத்துடன் உரையாடுதல்


குறைகிறது 
 இதனால் குடும்ப உறுப்பினர்கள் அந்நியர்கள் ஆகிறார்கள்
 நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் 
 தனிமரம் ஆகிறார்கள் 
 உதவி என்று கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் 
 மனதில் இருக்கும் பாரத்தை இறக்க குடும்பத்தாரிடம் கலந்துரையாட முடிவதில்லை எனவே மன
அழுத்தம் கூடுகிறது 
4. நிகழாத பாகெட் அதிர்வு

 எப்போதும் கைத்தொலைப்பேசியில் யாருடனாவது தொடர்பு கொண்டு பழக்கமாகிவிடும்


 எனவே திடீரென யாரவது தொடர்பு கொள்ளாவிட்டாலும் தொடர்பு கொள்வது போல் இருக்கும்,
தொலைப்பேசி மணி ஒலிப்பது போல் இருக்கும். 
 நாம் அதிகமாக கைத்தொளைப்பெசியையே பார்த்து மற்ற வேலைகள் செய்யாமல் இருந்து
பலகப்பட்டதால், நாம் திடீரென கைத்தொலைப்பேசியை பார்க்காமல் இருக்கும் பொது, நமக்கு
என்ன செய்வது என்று தெரியாமல் போகிறது; அலுப்பு ஏற்படுகிறது. எனவே, நம்மை இந்த
அலுப்பிலிருந்து காப்பாற்ற நமது மூளை ஒரு பொய் தகவல் அளிக்கிறது. இதுவே,
கைத்தொலைப்பேசி அதிரும் உணர்வை ஏற்படுத்துகிறது.  இதிலிருந்து நம்மை நாமே
காப்பாற்றிக்கொள்ள, ஒரு குறிப்பிட்ட நேரம் தொலைப்பேசியை பயன்படுத்திவிட்டு, மற்ற நேரம்
மற்ற வேலைகளை செய்ய  வேண்டும்.
 மேலும் இதனால், பரீட்சைக்கு பயிலும் ஒருவனால் கவனம் selutthi padikka முடிவதில்லை.
அடிக்கடி அதிர்வை உணர்ந்து அது என்ன என்று ஆராய செல்லும் பொது அகன் கவனம்
சிதரிவிடுகின்றது

5. கண் நிலை மோசமடைவதல்

 உங்கள் கைதொலைப்பேசியில் உள்ள சிறிய எழுத்துகளை பார்த்துக்கொண்டே இருப்பதால்


கண்விகாரம் (eye strain), மங்கலான பார்வை, தலைச்சுற்றுதல் மற்றும் உலர்ந்த கண்கள் (dry eyes)
ஏற்படலாம்.
 கண் கோளாறுகளை சந்தித்தால், உங்கள் தொலைபேசி எழுத்தின் அளவை பெரிதாக்குங்கள்.
 கைதொலைப்பேசியை பார்க்கும்போது, கண்களுக்கும் கைதொலைப் பேசிக்கும் இடையே
குறைந்தது பதினாறு அங்குலங்கள் (inches) இருக்கவேண்டும் .
 ஒவ்வொரு சில நிமிடங்களும் குறுகிய இடைவேளைகளை எடுத்து தொலைவில் ஏதாவது
பார்க்கலாம்.
 இன்று சிங்கப்பூரில்  65-75 % சிறுவர்கள் கண்ணாடி அணிகிறார்கள். இதுவே உலகின் மற்ற
இடங்களிலுடன் ஒப்பிடும்போது 20%க்கும் குறைவாக சிறுவர்கள் கண்ணாடி அணிகின்றனர்.
 இதற்கு முக்கிய காரணம் வெளியில் குறைவான நேரம் கழித்து கை தொலைபேசியில் அதிக நேரம்
செலவிடுவதே ஆகும்.

6. எங்கே என் கை தொலைபேசி!

 ஆங்கிலத்தில் இதை "nomophobia" என்று அழைப்பார்கள். அதாவது உங்கள் கை தொலைபேசி


இல்லாமல் இருக்கும் பயம்.  
 ஒரு ஆய்வின்படி,1000 பேரில்  66% மக்களுக்கு கை தொலைபேசியை இழந்து அல்லது  தங்கள்
கை தொலைபேசிகள் இல்லாமல் இருக்கும் அச்சம் உள்ளது.
 இந்த நிலையால், அடிக்கடி நம் கை தொலைப்பேசி உள்ளதா என்று பார்ப்போம், தொடர்ந்து அதை
எங்காவது இழந்துவடுவோமோ என்ற கவலை இருக்கும், மற்றும் பதட்டமாக இருக்கும்.
 ஓர் ஆய்வில் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் இந்த நிலையால் பாதிக்கப்படுகின்றனர்
என்று கண்டறியப்பட்டுள்ளது.
 இதனால் நீங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று எண்ணினால், நிபுணர்கள் யோகா மற்றும் ஆழ்ந்த
சுவாசம் போன்ற பதட்டம் -நிவாரணிக்கும் தளர்வு நுட்பங்களை ( anxiety-relieving relaxation
techniques) தெரிவிக்கின்றன.

You might also like