You are on page 1of 3

வா சி ப் பி ன் பயன் (மு ன் னு ரை )

எ.கா 1

வாசிப்பு   மனிதனின்  அன்றாட  நடவடிக்கைகளில்  ஒன்றாகக்  கருதப்படுகிறது. வாசிப்பு  ஒரு 


தலைச்சிறந்தப்  பழக்கமாக  அன்றும்  இன்றும்  கூறப்படிகிறது. வாசிப்பதன்  மூலம்  நமக்கு  நிறைய 
நன்மைகள்  கிடைக்கின்றன.

எ.கா 2 :
     
அன்றாட  நிகழ்வுகளையும்  தகவல்களையும்  அறிந்து  அறிவை 
மேம்படுத்திக்  கொள்ள  உதவும்  சிறந்த  சாதனம்  வாசிப்பு  என்றால் 
மிகையாகா.

எ.கா 3 :

      வாசிப்பு  அறிவை  வளர்க்கும்  சிறந்த  நடவடிக்கையாகும். மனிதனின்  அடிப்படை 


வாழ்வியல்  திறன்களில் ஒன்று வாசிப்பாகும் சிறுவர்  முதல்  பெரியவர்  வரை  கடைபிடிக்க 
வேண்டிய  கட்டாய  நடவடிக்கை  வாசிப்பு  என்று  கூறலாம். ‘நூல்கள்  பல கல்’ ,
‘நவில்தொறும்  நூல்நயம்  போலும்  பயில்தொறும்  பண்புடையாளர் 
தொடர்பு’ போன்ற  முதுமொழிகள்  வாசிப்பின்  இன்றியமையாமையை 
உணர்த்துகின்றது.
வாசிப்பின் பயன்கள்

என்று மொழி உருவானதோ அன்றே வாசிப்புப் பழக்கமும் மனிதர்களிடையே உருவானது. இந்தப்


பூவுலகில் தோன்றிய அறிஞர்கள், மாமேதைகள் அனைவருமே
வாசிப்புப் பழக்கம் மூலம் உருவானவர்களே. 'சிறந்த புத்தகம் சிறந்த நண்பர்கள்' என்று கூறுவார்கள்.
ஆம், நமது ஓய்வு நேரங்களில் நாம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால்
நாமும் இவ்வுலகில் ஒரு மாமேதையாகலாம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

நாம் சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஓய்வு


நேரங்களில் சிறந்த புத்தகங்களை நாம் வாசிப்பதால் நமது அறிவு விருத்தியடைவது மாத்திரமல்லாது
ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியும். "நண்பர்கள் பலர் நமக்குத் துன்பம் நேரும்
போது நம்மை விட்டுப் பிரிகின்றனர். ஆனால், எச்சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டுப் பிரியாத நண்பர்கள்
புத்தகங்களே" என்கிறார் ஓர் அறிஞர்.

புத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்குப் பேரொளியாகவும் வழி தவறியவர்களுக்கு


ஒரு வழிகாட்டியாகவும் திகழும் ஓர் அற்புத பொக்கிஷம். புத்தகங்களை வாசிக்க வேண்டும்
என்பதற்காக் தேவையற்ற புத்தகங்களையெல்லாம் வாசித்தல் கூடாது. மாறாக, நமக்குத் தேவையான,
தகுதியான புத்தகங்களைத் தெரிந்தெடுத்து வாசிக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தால் நமது அறிவூற்று
பெருக்கெடுக்கும். நமக்குத் தகுதி வாய்ந்த புத்தகங்களைத் தெரிவு செய்வதற்கு நாம் தெரிந்திருக்க
வேண்டும். அறிவியல் நூல்கள், மாமேதைகளின் சரித்திர நூல்கள், சமய சம்பந்தப்பட்ட நூல்கள் என்பன
நமது அறிவுப் பசிக்குத் தீனி போடுவதாய் அமையும் நூல்களாகும்.

அன்று பல்வேறு துறைகளில் அறிஞர்கள் உருவாகினாலும் அவர்களுக்கு வாசிப்பதற்குப்


போதிய நூல்கள் காணப்படவில்லை. ஆனால், இன்றோ வாசிப்பதற்கு இலட்சக்கணக்கான புத்தகங்கள்
குவிந்து கிடப்பினும் அனேகர் அவற்றை உதாசீனப்படுத்துகின்றனர். அன்று புத்தகம் இல்லாமல் நாம்
அழுதோம் ; இன்றோ 'என்னை வாசிப்பதற்கு யாரும் இல்லையே' என்று புத்தகங்கள் ஏங்குகின்றன.
அந்தளவுக்கு இன்று புத்தகங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியிருக்கின்றன. புத்தகத்தின்
மகிமையை அனேகர் உணர்ந்தபாடில்லை. இன்று பெரும்பாலானோர் தமது ஓய்வு நேரத்தில் வீண்
விளையாட்டுக்களிலும் கேளிக்கைகளிலுமே ஈடுபடுகின்றனர். பாடசாலை நேரங்களில் மட்டுமே படிப்பது
; மற்றைய நேரங்களில், மற்றைய இடங்களில் வீண் பேச்சுகளில் ஈடுபடுவது இணையதளத்தில்
தேவையில்லாமல் வலம் வருதல் என்று இன்றைய இளம் சமுதாயத்தினர் தமது வாழ்க்கையை
வகுத்துள்ளனர்.

இந்நிலை மாற வேண்டும். வாசிப்பின் பயனை இவ்வுலகிலுள்ள அனைவரும் உணர


வேண்டும். நூல்கள், நூலகங்களில் தூசு படிந்து இருக்கக் கூடாது. வீடுகளில் புத்தகங்கள் அலங்காரப்
பொருளாகவன்றி அறிவைப் பெறும் பொருளாக மாற வேண்டும். இவை அனைத்தும் நிகழ
வேண்டுமாயின் மானிடர்களின் உள்ளத்தில் அறிவுத் தாகம் உணரப்பட வேண்டும்.

எனவே, 'இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என்ற கூற்றுக்கேற்ப மாணவர்கள் இந்த


வாசிப்புப் பழக்கத்தைக் கூட்டிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
'வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகிறது'
எனவே, இவ்வுலகிலுள்ள அனைவரும் ஓய்வு நேரங்களில் வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கிக்
கொள்வதன் மூலம் நாமும் ஒரு பூரண மனிதராக வாழ முயற்சிப்போமாக

You might also like