You are on page 1of 1

இயற்கை எரு

இக்காலக்கட்டத்தில் மனிதர்கள் தங்களின் உடல் நலத்தைப் பேண நிறைய


காய்கறிகளையும் பழங்களையும் உண்கின்றனர். ஆனால், அவர்கள் காய்கறி அல்லது
பழங்களின் தோலை சீவி குப்பை தொட்டியில் வீசுகின்றனர். இதனால், அவர்கள் காய்கறித்
தோல்களில் பயன்களை உணரமுடியவில்லை. காய்கறி தோல்களை வைத்து நாம் பல வகையான
மறுபயனீடு பொருட்களை தயாரிக்கலாம்.
அதில் ஒன்றுதான் இயற்கை எரு. பல வகையான காய்கறிகளை வைத்து இயற்கை எரு
தயாரிக்கப்பட்டது. இயற்கை எருவை தயாரிக்க எந்த ஒரு இரசாயனக் கலவையும்
பயன்படுத்தப்படவில்லை. இதன் மூலம் எந்த தாவரத்திற்கும் இவ்வியற்கை எருவை
பயன்படுத்தினாலும் அத்தாவரத்தில் இருந்து வரும் காய்களை நாம் உண்டால் நம் உடல் மிகவும்
ஆரோக்கியமாக இருக்கும். இவ்வியற்கை எருவை தயாரிக்க பல பொருட்கள் பயன்பட்டன.
முதலில், நான் என் அம்மா அகற்றிய காய்கறி கழிவுகளை சேகரித்தேன். நான் அக்காய்கறி
கழிவுகளை ஒரு காற்று புகாக் கலனில் சேகரித்து வைத்தேன். பிறகு, நான் என் அப்பா
தோட்டத்தில் குப்பைகளை எரித்த மண்ணை எடுத்துக் கொண்டு குப்பை எரித்த மண்ணை
காய்கறி கழிவுகள் உடன் கலக்க வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இடைவேளையில்
அக்கலவையை கிளறிவிட வேண்டும். பிறகு, அக்கலவையைக் காய வைக்கவேண்டும்.
அதன் பிறகு சிதைவுறுதல் செய்வதற்கு இரண்டு திரவங்கள் உருவாக்கப்பட்டன. தயிர்,
தண்ணீர், உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டு திரவம் A தயாரிக்கப்பட்டது. மேலும், பலத்தோள்,
தண்ணீர், உப்பு ஆகியவை பயன்படுத்தி திரவம் B தயாரித்தேன். அவ்விரண்டு திரவத்தையும்
இரண்டு வாரம் ஊற வைக்க வேண்டும்.
இரண்டு வாரம் கழித்து ஊற வைத்த இரண்டு திரவத்தையும் காயவைத்த கலவையுடன்
கலக்க வேண்டும். அதனை கலந்தவுடன் இரண்டு வாரத்திற்கு ஒரு நாள் இடைவெளியில்
நன்றாக கிளறி விடவேண்டும். மேலும், நன்றாக உலர வைக்க வேண்டும்.
பிறகு, உலற வைத்த கலவையில் மரத்தூளை கலக்க வேண்டும். அதனை இரண்டு வாரம்
காய வைக்க வேண்டும். அம்மரத்தூளில் ‘கார்பன்’ இருப்பதால் அக்கலவையின் தரம்
அதிகரிக்கும். மேலும், மரத்தூள் கலவையில் உள்ள நீரை ஈர்த்து விடும். இரண்டு
வாரங்களுக்குப் தோட்ட மண்ணை அந்த கலவையோடு கலக்க வேண்டும். இறுதியில் இயற்கை
எரு தயாரிக்கப்பட்டது. இவ்வியற்கை எருவை தயாரிக்க எட்டு வாரம் வாரக்கால அளவு
எடுத்துக் கொண்டேன். ஆகவே, அனைவரும் எல்லா பொருட்களும் தேவையில்லாதது என்பதை
எண்ணாமல் நன்றாக யோசித்து ஒரு சிறந்த முடிவை எடுத்து பயன்பெறுவோம்.

Nama : Geethaloshini A/P Saravanan


Tahun : 5

You might also like