You are on page 1of 1

உலகில் பல்வேறுபட்ட கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்துள்ளான்.

இன்றுவரை
கண்டுபிடித்தும் வருகின்றான். இத்தகைய கண்டுபிடிப்புகளில் நெகிழியும் ஒன்றாகும். இதனையே
பிளாஸ்டிக்கென பொதுவாக அழைக்கின்றனர்

சுற்றுச்சூழல் மாசடைவதில் முதன்மை வகிக்கின்றது. அதனாலேயே தான் நெகிழிப்


பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென அரசினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.நெகிழி
மனிதனுக்குப் பயன்படுகின்ற போதிலும் அதிக பாதிப்பை உலகிற்கு தருகின்றது.

நெகிழி பயன்பாடு நம் அன்றாட வாழ்வில் பெரிதும் கலந்துள்ளது. அன்று சாப்பிடுவதற்கு வாழை
இலை⸴ தையல் இலை போன்றவற்றைப் பயன்படுத்தினோம். ஆனால் இன்று கண்களைக் கவரும் பல
நிறமுள்ள வடிவங்களில் வீட்டில் நெகிழித் தட்டுக்களை பயன்படுத்துகின்றோம்.

நாம் பயன்படுத்தும் பொலித்தீன் பைகள் நகர வீதிகளிலே குவிந்து சூழலை மாசடையச்


செய்கின்றன. ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் டன் நெகிழி கடலுடன் கலந்து கடல் வாழ்
உயிரினங்களின் அழிவிற்கு வழிவகுக்கின்றன.

நெகிழிப் பொருட்களில் 10% பொருட்களை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. 90% ஆன


பொருட்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. நெகிழிப் பொருட்களை கண்ட இடங்களில் கொட்டுவதை
தவிர்த்து சேகரித்து மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் சூழலில் வீசக் கூடாது.

மாசுவை நீக்க நாம் ஒவ்வொருவரும் நம்மாலானவற்றைச் செய்திட வேண்டும். ஒரு முறை


மட்டும் பயன்படுத்தும் நெகிழியை ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும். நெகிழி ஒழிப்பில் நாமும்
பங்கெடுப்போம். செயற்கையை ஒழித்து இயற்கையுடன் வாழ்வோம்.

You might also like