You are on page 1of 4

சூழல் அறிவோம் - 8

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு


இந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் தடை விதித்துள்ளது
மத்திய அரசு. வரும் 75 ஆவது சுதந்திர பெருவிழாவை மேலும்
முன்னெடுத்துச் செல்லும் வகையில், குப்பையில் வசப்படும்
ீ மற்றும்
முறையாக கையாளப்படாத, பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை
தடுக்க, இந்தியா முக்கியமான நடவடிக்கையாக இந்த தடையை
அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. அரசின் அறிவிப்பின் படி, ஒரு முறை
மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி,
இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் அவைகளைப்
பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த SUP எனப்படும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்


என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? ஐரோப்பிய ஒன்றியம்
வழங்கிய வரையறையின்படி, அன்றாடத் தேவைக்காகப்
பயன்படுத்தப்படுகின்ற, 50 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுடைய
பிளாஸ்டிக்கை ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் என்று அழைக்கலாம்.

ஆனால், இந்த வரையறை இடத்திற்கு இடம் மாறுபடலாம். குறிப்பாக


ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரையறை இந்திய நாட்டின் சூழலுக்கு
மாறுபட்ட பொருள் கொண்டதாக பார்க்கப்படுகிறது. சான்றாக,
இந்தியாவை எடுத்துக்கொண்டால், 2021-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு
மேலாண்மை திருத்த விதிகளின்படி, ஒருமுறை பயன்படுத்திய பின்
அப்புறப்படுத்தப்படும் எந்த பிளாஸ்டிக்கும் ஒற்றை பயன்பாட்டு
பிளாஸ்டிக் எனக் கூறப்படுகிறது. சில நேரங்களில் அவை மறுசுழற்சி
செய்யப்படலாம், சில நேரங்களில் அவை வெறுமனே நிராகரிக்கப்படலாம்.
அதாவது, பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை
நாம் அன்றாடம் உபயோகிக்கும் இவை அனைத்துமே ஒருமுறை
பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படுவதால் இந்த SUP வகையில்
சேர்க்கப்படுகின்றன. இவற்றின் தடிமன் போன்ற பரிமாணங்கள்,
மறுசுழற்சி போன்றவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. புதிதாக
அமலுக்கு வந்துள்ள இந்த தடை குறித்த மற்ற பிற விவரங்களை நாளைய
சூழல் அறிவோம் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

சூழல் அறிவோம் - 9

பிளாஸ்டிக் கழிவுகள் - இவை முறையாக மறுசுழற்சி


செய்யப்படாவிட்டால், பல நூறு ஆண்டுகளுக்கு பூமியில் படிந்து
உயிர்க்கோளத்தின் உயிர் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி
எடுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

பிளாஸ்டிக் கழிவுகள் பட்டியலில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற


ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள், முதலிடத்தில் உள்ளன.
இன்று வரை 77 நாடுகளில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள்
முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்யப்பட்டுள்ளது.
சமீ பத்தில், நமது நாடும் ஜூலை 1, 2022 முதல் ஒற்றைப் பயன்பாட்டு
பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்


இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின்
பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள பொருட்கள்
என்னென்ன தெரியுமா?

பிளாஸ்டிக் குச்சுகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, பிளாஸ்டிக்


குச்சுகளுடன் கூடிய பலூன்கள், பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ்கிரீம் குச்சுகள்,
அலங்காரத்திற்கான தெர்மோகோல், பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள்,
பிளாஸ்டிக் கத்தி, ஸ்பூன், ஃபோர்க், உறிஞ்சுக் குழல், ட்ரே, மற்றும் ஸ்வட்

பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்கள், 100
மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள்
போன்றவை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.

தடை செய்யப்பட்டபொருட்களை சட்டத்திற்கு புறம்பாக தயாரித்தல்,


இறக்குமதி செய்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டை
தடுக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள்
அமைக்கப்படுவதுடன், மாநில எல்லைகளில் சோதனை சாவடிகளை
அமைத்து தடை செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாநிலத்திலிருந்து
மற்றொரு மாநிலத்திற்கு எடுத்து செல்வதை தடுக்கவும் நடவடிக்கை
எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தடை அமலுக்கு வந்த
முதல் வாரத்திலேயே ஒரு சில இடங்களில் தடையை மீ றி பிளாஸ்டிக்
பொருட்களை பயன்படுத்திய பல கடைகள் மீ து நடவடிக்கை எடுத்து, பல
டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
பிளாஸ்டிக் தடை பிரச்சினையில் அரசுக்கு உதவும் வகையில், மக்களுக்கு
அதிகாரம் அளிக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறைதீர்ப்பு செயலி
ஒன்றையும் உருவாக்கியுள்ளது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை
முறையாக பின்பற்றி நாமும் சுற்றுசூழல் பாதுகாப்பில் பங்கேற்போம்!
பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம்!!
சூழல் அறிவோம் - 10

சுற்றுசூழலுக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்கள்


மீ து விதிக்கப்பட்டுள்ள புதிய தடை குறித்து சூழல் அறிவோம் பகுதியில்
பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நம் நாட்டில் ஏற்கனவே
கொண்டுவரப்பட்ட தடைகள் குருத்து கண்டறிய நிகழ்ச்சியில் தெரிந்து
கொள்ளலாம்.

2016-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி,


பொருட்களை வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும்
குட்கா, புகையிலை, பான் மசாலா பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும்
பாலித்தீன் பாக்கெட்டுகளுக்கு தடை விதித்தது.

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட


தாள், தட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு பிளாஸ்டிக்
பொருட்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு.

2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும்


காலநிலை மாற்ற அமைச்சகம், 75 மைக்ரானுக்கும் குறைவான
தடிமனுடைய பாலித்தீன் பைகளுக்குத் தடை விதித்தது. 120
மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கு
அதே ஆண்டு டிசம்பரில் தடை விதித்தது. பிளாஸ்டிக் பை
உற்பத்தியாளர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி நோட்டீஸ்
அனுப்பியதாகவும் படிப்படியாக தடையை அமல்படுத்தி வருவதாகவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை மட்டுமல்லாது , தமிழகம் போலவே மற்ற பல மாநில அரசுகளும்


தத்தம் மாநில அளவிலும், சில மாவட்டங்களில் மாவட்ட அளவிலும்,
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தளங்களிலும் இது போன்ற
பல அரசாணைகளும் தடை உத்தரவுகளும் போடப்பட்டிருந்தாலும், அவை
ஏதோ சில காரணங்களுக்காக நீர்த்து போகின்றன என்றே சொல்ல
வேண்டும். விதிகளை அரசு அமல்படுத்திவிட்டு அமைதியாக
இருந்துவிடாமல், தொடர் சோதனைகள், அபராதம் என கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் தடை இல்லாமலேயே கழிவுகளை சிறப்பாக கையாளும்


நாடுகளும் உண்டு. அதற்கு மிக சிறந்த உதாரணம் ஜப்பான். உலகில் மிக
குறைவாக பிளாஸ்டிக் கழிவுகள் உள்ள நாடு ஜப்பான். பிளாஸ்டிக்கை
சிறப்பாகத் திரட்டி மறுசுழற்சி செய்துவிடுகிறது. அவற்றிடமிருந்து நாம்
பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
என்னதான் அரசு பல ஆணைகளை வெளியிட்டாலும், தடை உத்தரவுகளை
பிறப்பித்தாலும் ஒரு விதியை அரசால் மட்டுமே வெற்றியடைய செய்ய
முடியாது, அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது
மக்களாகிய நாமும் நம் கடமையை உணர்ந்து பொறுப்பாக
செயல்படுவோம். தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அறவே
தவிர்ப்போம். வரும் தலைமுறையினருக்கு பசுமையானதொரு
வையத்தை விட்டுச் செல்வோம்.

You might also like