You are on page 1of 7

உரத்த சிந்தனை

அச்சுறுத்தல்கள்

S .R ராஜகோபாலன்(சமூக ஆர்வலர் கல்வி ஆலோசகர்)

அச்சுறுத்தல் - I :

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில்


" கிரேட்டா துன்பர்க்" என்ற ஒரு இளம் பெண், இயற்கையை காக்க தன் பள்ளி
படிப்பைப் துறந்தார். ஆட்டிசம் நோயால் படிக்கப்பட்ட கிரேட்டா துன்பர்க், பருவ
நிலையை காக்க தொடர்ந்து போராடி வருகிறார். அவர் அன்று ஐரோப்பிய
ஒன்றிய பாராளுமன்றத்தில், உலகமனைத்திலும்முள்ள விஞ்ஞானிகளைப்
சாடினார். “உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம்? உலகம் வெப்பமயமாதலை
தடுக்க இவ்வளவு நாட்கள் என்ன ஆராய்ச்சிகள் செய்தீர்கள்? என்ன
கண்டுபிடிதீர்கள் ? உங்களுக்கெல்லாம் எந்தவித கவலையும், மனச் சாட்சியும்
இல்லையா? எங்கள் எதிர்காலமே ஓரு கேள்விக்குறியாக உள்ளது என்பதை உலக
விஞ்ஞானிகளாகிய நீங்கள் இன்னமும் உணரவில்லையா”? என சரமாரியாக
உலக விஞ்ஞானிகளைச் சாடினார். இதை எதிர்பாராத விஞ்ஞானிகள்
அதிர்ச்சியில் வாயடைத்துப் போயினர்.
20-21 ம் நூறாண்டுகளில் உலக வெப்பமயமாதல் ஒரு மிகப்பெரிய சுற்றுச் சுழல்
பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்க போகிறது. அதை தடுக்க, முதலில் அதன்
காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரி செய்ய என்னென்ன செய்ய வேண்டும்
என்று விஞ்ஞானிகளால் கூற முடியதா? . முடியும் ஆனால் ஏன் இவ்வளவு
மெத்தனம்?

சரி , விஞ்ஞானிகள் கூறாவிட்டால், சாமானியர்களாகிய நாம் இதைப் பற்றி சற்று


சிந்திக்கலாம் என்ற நினைப்பில் எழுதப்பட்ட கட்டுரை இது.
/2/

உலகளவில் , பல நாடுகளில் வெப்ப மய மாதலால் ஏற்பட்ட விபரீதங்கள் கீ ழே


பட்டியலிடப்பட்டுள்ளன :

1. ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 2019 ல் ஆரம்பித்த சரித்திரம் உலகின் பல


நாடுகள் அந்தக் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன .
2. ஜனவரி 2020 ல் நார்வேயில் இதுவரை பார்த்திராத நெருப்பு அலையினால்
மக்கள் அவதிப்பட்டுவந்தனர்
3. ஆர்க்டிக் பகுதியில் இருந்த 125 ஏரிகள் கடந்த 30 ஆண்டுகளில்
மறைந்துவிட்டன
4. மாறிவரும் தட்ப வெப்பம் நிலையின் விளைவாக பெய்யும் பெரும்
மழையாலும், வசும்
ீ புயல் காற்றுகளாலும் உலகின் 15 பெரிய நகரங்கள்
மூழ்கும் அபாயத்தில் உள்ளன. அவற்றில் 13 நகரங்கள் கடற்கரைப்
பகுதிகளில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ், லாங்பீச்,
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா ஆகிய நகரங்கள் ஆபத்தை
எதிர்க்கநோக்கியுள்ளன.
5. பசிபிக் பெருங்கடல் 100 மில்லியன் டன்கள் கழிவுகள் சேர்ந்துள்ளன.
கழிவுகள் நிறைந்துள்ள பகுதி பரப்பளவில் அமெரிக்கக் கண்டத்தைப்போல்
இரு மடங்கு பெரியது.
6. இங்கிலாந்தில் 1976 ம் ஆண்டில் மிகக் கடுமையான நீண்ட கோடைக்காலம்
நிலவியது. விளைச்சல் பாதிக்கப்பட்தால் , பஞ்சம் ஏற்பட்டது. ஆனால்
கரும்புள்ளிகளைக் கொண்ட செந்நிற பெண் பறவைகள் இட்ட
லட்சக்கணக்கான முட்டைகள், வெப்பத்தால் பொரிந்து அவற்றிலிருந்து
குஞ்சுகள் வெளிப்பட்டன. அப்பறவைகளின் எண்ணிக்கை பெருமளவில்
உயர்ந்தது. இது மட்டும் சற்று ஆறுதல் தரும் விஷயம்.

இம் மாதிரியான தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் உலகில் உயிர்களும், நீர்


நிலைகளும் பாதிக்க படுகின்றன .உலகம் வெப்பமய மாவதற்கான வேறு பல
காரணங்களையும் ஆராயலாம்:
/3/

1. உலகில் கோடிக்கணக்கான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனகளிருந்து வரும்


வெப்ப புகையும், ஒரு காரணம் . இந்த புகையில் கார்பன் மோனோக்சைட் என்ற
நச்சு உள்ளது. இது மனிதர்களின் நுரையீரல்களை பாதித்து, இது சம்பந்தமான

நோய்களை ஏற்படுத்துகிறது. பயிர் பச்சைகளும் பாதிக்கப்படுகின்றன.,


வான்வெளி வெப்பமடைகிறது.

2. உலகமெங்கும் பல கோடிக் கணக்கான மனிதர்கள் புகைக்கும் சிகரெட்டின்


புகையிலைப் புகையில் ஆயிரக்கணக்கான விஷங்கள் உள்ளன என்று
ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப் புகை சுற்றுச்சூழலை வெப்பமயமாக்குவது
உலகெங்கும் புகைபிடிப்பவர்கள் தான்.

புகை பிடிப்பதை தடுக்க ஒரே வழி புகையிலை பயிரிடுவதை தடுக்க வேண்டும்.


புகையிலை விவசாயிகள் வேறு நல்ல, மனிதற்கு உகந்தவற்றை பயிர்
செய்யட்டும். பீடி , சுருட்டு, சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வேறு
எதாவது தொழில் ஆரம்பித்து, தங்களிடம் வேலை செய்துவரும்
தொழிலாளிகளுக்கு தகுந்த பயிற்சி அளித்து வேறு வேலையில் அமர்த்திக்
கொள்ளலாம். அவர்கள் ஆரம்பிக்கும் புதிய தொழிலுக்கு அரசாங்கம் கடன்
வழங்கும். மனிதர்களின் உடல் நலத்தை பாதிக்கக்கூடிய எதையும் யாரும்
உற்பத்தி செய்யக் கூடாது என்று உலகளவில் சட்டம் இயற்ற வேண்டும்.

3. காட்டை அழிப்பதால் ஏற்படும் விபரீதங்கள் :உலகில் தற்போது புவியின்


வெப்ப நிலை உயரந்ததற்கு காரணம் , காடுகள் அதிகமாக அழிக்கப்பட்டு வருவது
தான். உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் காடுகள் அழிக்கப்படுவதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வன பாதுகாப்பு சட்டத்தின் ( FLA ) கீ ழ் ஒப்புதல்
பெறப்பட்டு பல்வேறு நிறுவனங்களால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான
மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19 ம் ஆண்டில் மட்டும் 30,36,642
லட்சம் மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட்டன. இதில்
மனிதர்களின் ஊடுருவலுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன.
/4/

உலக வனத்துறை சட்டப்படி ஒரு மரத்தை வெட்டும் போது, பத்து மரங்கள்


நடப்பட வேண்டும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சதவிதம் மட்டுமே புதிய
மரங்கள் நடப்பட்டுள்ளன.

இந்திய நிலப்பரப்பில் 33 சதவிதம் அளவுக்கு காடுகள் இருக்கவேண்டுமென்ற


இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017 ல் 21.54 சதவதமாக
ீ இருந்த வனப்பரப்பு 2019
ம் ஆண்டில் 21.67 சதவதமாக
ீ உயர்ந்துள்ளது. அவ்வளவு தான்.

நாட்டின் மொத்தப் பரப்பளவில் வெறும் மூன்றே சதவதம்தான்


ீ அடர்த்தியான
காடுகள் இருக்கின்றன என்பது ஆரோக்கியமான போக்கு கிடையாது. மொத்த
வனப்பரப்பில் 50 சதவதத்திற்கு
ீ அடர்த்தியான காடுகள் இருந்தால்தான்
அதிகமாகித் கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்து ஆக்ஸிஜனை
வெளியிட முடியும். அடர்த்தியான காடுகளின் இருப்புதான் பூமியை
குளிர்விப்பதில் அதிகம் பங்குவகிக்கின்றன.

வனத்துறை மற்றும் சுற்றுச் சுழல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மிசோரம்,


நாகலாந்து, அருணாசல பிரதேசம், ஆகிய மூன்று வட கிழக்கு மாநிலங்களில்
மட்டும் சுமார் 1200 சதுர கி மீ காடுகள் கடந்த 50 ஆண்டுகளில்
அழிக்கப்பட்டிருக்கிறது. உலக வெப்பமய மாதலுக்கு மூல காரணமே காடுகள்
அழிக்கபடுவதுதான். பூமிப்பந்தில் மனித குலம் ஆரோக்கியமாக தொடர்ந்து வாழ
, காடுகள் அவசியம். காடுகள் இல்லையெனில் நாடுகள் இல்லை. மழை இல்லை ,
விவசாயம் இல்லை . உணவு பற்றாக்குறை, பஞ்சம் என்று எல்லாம் வரிசையாக
வரும். வனம் இன்றிப் போனால் மனித இனம் அற்றுப் போகும் என்று நாம்
ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
/5/

4. காட்டுத்தீ காரணங்கள் :
(a ) காடுகளுக்குள் பிக்னிக் செல்லும் மக்கள் , அங்கு சமைத்து சாப்பிட்டபின்,
அடுப்புகளை சரியாக, நன்றாக அணைப்பதில்லை.
b ) சிகரெட் தீயை சரியாக அணைக்காமல் போட்டுவிடுவது
c ) உயரமான பெரிய மரங்கள் காற்றினால் ஆடி ஒன்றோடொன்று உராய்வதால்,
தீப்பற்றிக் கொள்கின்றன
d) நாட்டிலும், நாட்டிலுள்ள மரங்களை , வெட்டி, அங்கெல்லாம் தொழிற்
சாலைகள் , வடுகள்,
ீ காட்டுவதால், மழை பொய்த்து, அதனால்
வெப்பமயமாதல் ஏற்படுகிறது.
e) சில சமயம் காட்டின் ஊடே செல்லும் மின்சாரக் கம்பிகளின் உராய்தலினால் ,
தீ விபத்து ஏற்படுகிறது.
f) மின்னல் மூலமும் சில சமயம் தீ விபத்து ஏற்படலாம். இயற்கையால்
ஏற்படும் தீ விபத்தை விட , மனிதர்களால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகம்.

இம்மாதிரியான தீ விபத்துக்களால் உலகம் வெப்பமயமாதல் ஏற்படுகிறது.


g) உலகமெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான தொழிற்சாலைகள் வெளியிடும்
புகையும் ஒரு மூல காரணம் . உதாரணமாக சிமெண்ட் உற்பத்தி
தொழிற்சாலைகள் தங்கள் சிம்னிகளில் எலெக்ட்ரோஸ்டாடிக்
பிரெஸிபிடேட்டர்(Electro Static Precipitator) என்ற கருவியை பொறுத்தி புகை
நச்சை வடிகட்டி அனுப்புகின்றனர். இம்மாதிரி ரசாயன தொழிற்சாலைகளும்
எதாவது கண்டறிந்து , வெப்பமயமாவதை தடுக்க வேண்டும். ,மேற் கூறிய
காரணங்களை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொண்டால் ,
உலகம் வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கலாம்.

இயற்கையால் ஏற்படும் மழை பொய்த்தல், மின்னல், காற்று, புயல்


இவற்றால் ஏற்படும் தீ விபத்துகளை நம்மால் தடுக்க இயலாது. ஆனால்
மனிதர்களின் அஜாக்கிரதையால் ஏற்படும் தீ விபத்துகளை ஓரளவு நம்மால்
தவிர்க்க முடியுமென்று நம்பலாம்.

சூரியனும் அதன் பங்கிற்கு மேலும் வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள்


கூறுகின்றனர்.
/6/
அச்சுறுத்தல் - II

இருபதாம் நூற்றாண்டில் உலகில் பயங்கர வாதம் ஒரு மிகப் பெரிய சவாலாக


இருக்கிறது. பயங்கரவாதத்தை கட்டோடு ஒழித்து , உலகில் அமைதியும்,
சமாதானமும், சுபிட்சமும் , சந்தோஷமும் ஏற்பட , உலக நாடுகள்
ஒன்றுகூடி , பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக் கட்ட , வழி வகைகள்
செய்ய வேண்டும். இயற்கையினால் ஏற்படும் மனித இழப்பு ஒரு பக்கம்,
பயங்கரவாதத்தால் ஏற்படும் மனித இழப்பு ஒரு பக்கம், உலக நாடுகளை
பெரிய கவலைக்குள்ளாக்கி வருகிறது. பயங்கரவாதிகள் யார் யார், அவர்களை
ஆட்டுவிக்கிறவர்கள் யார் , ஏன், என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலும்,
இன்று வரை , இந்த பயங்கரவாதத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை
யாராலும் குறைக்கவோ, நிறுத்தவோ முடியவில்லை. இதுவும் நம் முன்பு
ஒரு பெரிய அச்சுறுத்தலாகவும் உள்ளது.

மூன்றாம் உலகப் போர் (அச்சுறுத்தல்கள் – III)

ஈரான்,அமெரிக்காவின் உறவுகள் பாதிக்கப் பட்டால் மூன்றாம் உலகப் போரே


மூண்டு விடுமோ என உலக நாடுகளும் மக்களும் நடுங்கின. நல்ல வேளை அப்படி
ஏதும் நடக்கவில்லை. வட கொரிய அதிபர் ஒரு பக்கம் அணு ஆயுதங்களை
வைத்துக் கொண்டு, எல்லோரையும் மிரட்டி வருகிறார் . தினம் ஏதாவது ஒரு
சோதனையை கடலின் மீ தே நடத்தி வருகிறார். யாருக்கும் பயப்படாத, யார்
சொன்னாலும் கேட்காத , ஒரு தடாலடி பேர்வழியாக, வல்லரசுகளை வதைத்து
வருகிறார். உலக மக்கள் பயத்திலும், பதட்டத்திலும் கைகளை பிசைந்து கொண்டு
நிற்கின்றனர். இதெல்லாம்தான் அச்சுறுத்தல்கள்.
புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டினிடம் " மூன்றாம் உலகப் போர்
மூளுமா" ? என்று கேட்ட போது அவர் கூறினாராம் " எனக்கு அதைப் பற்றி ஏதும்
தெரியாது" என்று கூறி , சற்றுத் தயங்கி, ஆனால் எனக்கு நான்காம் உலக போர்
பற்றித் தெரியும்" என்றார் .
கேட்பவர் ஆர்வமாக " அப்படியா தயவு செய்து அதைப் பற்றிச் சொல்லுங்கள்"
என்றார்.

/7/
ஐன்ஸ்டைன் கூறினார் " நான்காம் உலகப் போர் வரவே வராது. ஏனெனில்
அப்போது இந்த உலகமே இருக்காது" என்று சொல்லி அப்பால் நகர்ந்து
விட்டாராம்.!

உலக நாடுகளிடையே உறவுகள் சுமுகமாக இல்லை, அணு ஆயுத பலம் பலரிடம்


அதிகரித்து வருகிறது. உலக நாடுகளிடையே உறவு நல்லிணக்கம் ஏற்பட,
எல்லோரும் ஒன்று கூடி , பேசி, உலகில் நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும்
நிலவ ஆவன செய்வது காலத்தின் கட்டாயம். " யாதும் ஊரே யாவரும் கேள ீர்"
என்ற தமிழ் ஓசை உலகமெங்கும் ஒலிக்க வேண்டும்.

உலகெங்கும் அமைதியும், பயமின்மையும் நிலவி நீடித்தால் தான், உணவு


உற்பத்தி பெருகி , தொழில்கள் வளர்ந்து , மக்கள் நிம்மதியாக இந்த புண்ணிய
பூமியில் வாழ முடியும்.

S.R. ராஜகோபாலன்
ஈமெயில் : srievatsa@gmail .com
மொபைல் : 99419-11656

You might also like