You are on page 1of 4

Slide 1

SARANYA M
22B071
ENVIRONMENTAL EDUCATION
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிந்து மறைதல்:

 1992-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த புவி உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பான்மையான உலகநாடுகள்,
இப்புவியில் எஞ்சியுள்ள அனைத்து தாவர், விலங்கினங்களை அழிய விடாமல் போற்றி பாதுகாப்பதாக உறுதி
அளித்து, உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

 மனித இனம் வாழுமிடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், நாம் நாள்தோறும் ஒரு சிற்றினத்தை இழந்து
வருகிறோம்.

 உலகிலுள்ள பரம்பரை விவசாயிகள் பல்வகைப் பயிர்- களையும், கால்நடைகளையும் உருவாக்கினர்.


இலட்சக்கணக்கான பரம்பரை பயிர்களையும், கால்நடைகளையும் உள்ளடக்கிய விலைமதிப்பற்ற இவ்வளம், கடந்த
சில பத்து ஆண்டுகளில் அழிக்கப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக பணப்பயிர்களும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட
கலப்பினங்களும் இடம் பெறச்செய்யப்பட்டன.

 4000 காட்டுத் தாவரங்களின் சிற்றினங்களுடன், இந்தியாவின் உயிரின வளங்கள் என்பவை 370 வகை
பாலூட்டிகளையும், 1200 வகை பறவைகளையும், 180 வகை இருவித வாழ்வினங்களையும், 1700 வகை
மீன்களையும், மற்றும் 400 வகை ஊர்வனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
தாவரம் மற்றும் விலங்கினங்களின்மறைவுக்குப் பொறுப்பான காரணிகள்:

 நீர் மாசுபடுதல்
 காற்று மாசுபடுதல்
 அமில மழை
 உலக வெப்ப உயர்வும், ஒசோன் குறைதலும்
 மக்கட்தொகைப் பெருக்கம்
 மிதமிஞ்சிய பயன்பாடு
 தொழிற்சாலைகளின் பெருக்கம்
 நகரமயமாதல்
 காடுகளை அழித்தல்
 அனல் மற்றும் அணு சக்தி நிலையங்கள்
 உணவுச் சங்கிலியின் தடங்கல்களும் அதனால் ஏற்படும் உணவுப் பஞ்சமும்
 வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு
 வேதியியல் உரங்கள், உயிர்க்கொல்லிகள் கண்மூடித்தனமாக பயன்படுத்துவது.
 மழைபொழிவுக் குறைவு
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்:

 அரசு தனது வேளாண்மைக் கொள்கையை மாற்றி அமைத்து அதில் நம் நாட்டு பயிர் மற்றும் கால்நடை
பாதுகாப்பதற்கும் உயர்த்துவதற்கும்
வகைகளை முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 உயிரின பாதுகாப்பு சிறப்பு மண்டலங்களைத் தோற்றுவித்து, தனிக் கவனம் செலுத்தலாம்.
 உயிரின சிறப்பு பாதுகாப்பு மண்டலங்கள் அமைப்பதற்கான இடத் தேர்வு, அமைத்திடுதல், நிர்வகித்தல்
ஆகியவற்றிற்கான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்கி விடவேண்டும்.
 உயிரின பாதுகாப்பு சிறப்பு மண்டலங்களின் எல்லைக்குள் அமைந்துள்ள முக்கியமான உயிரியல் வளங்களின்
பயன்பாட்டை நெறிப்படுத்துவதன் மூலம் நீடித்து நிலைக்கச் செய்யலாம்.
 பாதுகாப்பான இடங்களில் வெவ்வேறு வகை சிறப்புச் சிற்றினங்களுக்கு சரணாலயங்கள் அமைத்து, அவை நீடித்து
நிலைப்பதற்கு சுற்றுச்சூழல் வழிவகை செய்ய வேண்டும்.
 இயற்கைச் சூழலில் தம் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு நன்கு செழித்து வளரும் சிற்றினக்கூட்டங்களை
போற்றி பாதுகாக்க, தகுந்த, சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றிட வேண்டும்.

You might also like