You are on page 1of 56

நஞ்சராயன் குளம்

அமைவிடம்:

இக்குளமானது திருப்பூர் மாவட்டம்,

உத்துக்குளி தாலுகா, சர்க்கார் பெரியபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட
சர்க்கார் பெரியபாளையம் ஊர் எல்லையில் அமை்துள்ளது. குளத்துபாளையம்,
கூலிபாளையம், மற்றும் சர்க்கார் பெரியபாளையம் இம்மூன்று ஊர்களின்
எல்லைகளை இணைக்கும் மையப்புள்ளியாக இந்த குளம் உள்ளது.

குளத்தைப் பற்றிய விவரம்:

இக்குளமானது 440 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து

காணப்படுகிறது. இக்குளம் 5,22,70,000 கனஅடி(0.05TMC) கொள்ளளவு கொண்டது.
இது 400 ஆண்டுகள் வரை பழமையானதாக கருதப்படுகிறது. இது
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரியகுளம் ஆகும். இதற்கு நீர்வரத்தானது
நல்லாற்றின் மூலமும், மழை நீரின் மூலமும் கிடைக்கிறது. இதில் கழிவு
நீரும் கலக்கிறது. இக்குளத்தின் வெளியே மூன்று நீரோடைகள்
பாசனத்திற்காக பிரிகின்றன. மீண்டும் அவை இணைந்து சர்க்கார்
பெரியபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் நீரை நிரப்பி விட்டு
வெள்ளியம்பாளையம் கடந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இக்குளத்தை
வாழிடமாகக் கொண்டு பல உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. அதில்
நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளும் இருக்கிறது. பல பறவைகள்
வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து சில மாதங்கள் தங்கி விட்டுச் செல்லும்.
சில இங்கேயே இனப்பெருக்கம் செய்து செல்லும். இக்குளமானது
பறவைகளின் சொர்க்கமாக உள்ளது. இங்கு வசிக்கும் மற்றும் வருகை புரியும்
பறவைகளைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

பறவைகளின் விவரங்கள்:

இங்கு வரும் பலவிதமான பறவைகளின் எங்களால் அடையாளம்

காணப்பட்ட சில பறவைகளின் விவரங்கள்:

1. ஆண்டி வாத்து (Northern Shoveler) :

இவை தட்டை வாயன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆசியாவின்

வட பகுதிகளில் வாழும் இவை இங்கே குளிர்காலத்தில் வருகை
புரிகின்றன. இவை குளத்தின் கரையோரங்களில் வாழ்கின்றன.
இவ்வாத்துகள் சேற்றில் உள்ள நண்டு, புழு, பூச்சிகளை உண்டு
வாழ்கின்றன. இவை கூட்டமாகவே காணப்படும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

2. நீலச்சிறகி (Garganey):
இப்பறவையும் வாத்து வகைகளில் ஒன்றுதான். இவை மேற்கு
ஆசியாவில் வாழ்கின்றன. குளிர்காலத்தில் குளத்திற்கு வருகின்றன
இவை நீரின் மேற்பரப்பில் இருந்துகொண்டு மீனை பிடித்து
உண்ணும். இப்பறவை Agreement on the conservation of African-Eurasian migratory
water birds (AEWA) ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பறவை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

3. கிளுவை (Common Teal):

இதுவும் வாத்து வகைகளில் ஒன்றுதான். இப்பறவைகள்

ஐரோப்பாவில் வாழ்கின்றன. இங்கு குளிர்காலத்தில் வருகின்றன.
இவை பார்ப்பதற்கு சிறிய தோற்றத்தில் இருக்கும். இவை நீரில்
வாழும் சிறு புழுகள், பூச்சிகள், மற்றும் தலைப்பிரட்டைகளை உண்டு
வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

4. ஊசிவால் வாத்து (Northern Pintail):

இந்த வாத்துகள் வட ஆசியாவில் வாழ்கின்றன. குளிர்காலத்தில்
இங்கு வருகின்றன. இவை நீரின் மேல்மட்டத்தில் நீந்திக் கொண்டு
சிறு மீன்களையும், நீரில் வாழும் புழு, பூச்சிகளையும் உண்டு
வாழ்கின்றன.இப்பறவை Agreement on the conservation of African-Eurasian
migratory water birds (AEWA) ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பறவை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

5. பேதை உள்ளான் (Ruff):

இந்த வகை உள்ளான்கள் ஐரோஆசிய பகுதிகளில் வாழ்பவை. இவை

குளிர்காலத்தில் இங்கு வருகின்றன. இப்பறவைகள் கரையோரத்தில்
வாழக்கூடியவை. இவை சேற்றில் உள்ள புழு, பூச்சி மற்றும் இதர
சிறு ஊர்வனவற்றை உண்ணும். இந்தியா முழுவதும் பரவலாக
காணப்படும் இப்பறவை 15000 கிலோ மீட்டர் வரை இடம்பெயரும். .
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

6. சின்ன பச்சைக்காலி (Marsh Sandpiper):

இப்பறவைகள் வட ஆசியாவில் காணப்படுகின்றன.
குளிர்காலங்களில் இங்கு வந்து செல்கின்றன. இவை நீரில்
நீந்தியபடி இரைதேடும். நீரில் வாழும் சிறுநத்தைகள், புழுகள்,
பூச்சிகள் இதன் உணவு. இவை கரையோரங்களில் உள்ள மரங்களில்
கூடுகட்டி தங்குகின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

7. பொரி உள்ளான் (Wood Sandpiper):

இப்பறவைகள் குளத்தின் கரையோரமாக வாழக்கூடியவை. இவை

சேற்றிலும், கரையோர ஈரநிலங்களிலும் இரை தேடும். சிறிய
பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்டு வாழும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

8. உள்ளான் (Common Sandpiper):

இவை நீர்வாழ் பறவைகள் ஆகும். கரைகளின் ஓரத்தில் உள்ள
மரங்களில் கூடு கட்டி வாழ்பவை. கரையோரத்தில் கிடைக்கும்
மண்புழு மற்றும் பூச்சிகளை இரையாக உட்கொள்ளும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

9. கொசு உள்ளான் (Little Stint):

இப்பறவைகள் ஐரோப்பா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து

வாழ்கின்றன. இங்கு குளிர்காலத்தில் வந்து செல்கின்றன. இவை
கரையோரமாக உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன.
கரையோரத்தில் சேற்றில் உள்ள புழு பூச்சிகளை உண்ணும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

10. பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover):

இவை இந்தியா முழுமைக்கும் காணப்படும் பறவை இனமாகும்.
இப்பறவைகள் குளத்தின் கரையோரங்களில் கூடுகட்டி வாழ்பவை.
இவை கரையோரங்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்டு வாழ்பவை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

11. மணல் நிற உப்புக்கொத்தி (Lesser Sandpiper):

இப்பறவைகள் யூரோ ஆசியா பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில்

இங்கு வந்து செல்லும். இவை கரையோரம் வசிக்கின்ற பறவைகள்
ஆகும். கரையோரங்களில் உள்ள தலைப்பிரட்டை, நத்தைகள்,
புழுக்களையும், ஆழமற்ற நீரிலுள்ள சிறுமீன்களையும் உண்டு
வாழ்கின்றன. இப்பறவை Agreement on the conservation of African-Eurasian
migratory water birds (AEWA) ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பறவை.

12. கருவால் மூக்கன் (Black-tailed Godwit):

இப்பறவைகள் நியூசிலாந்தை சேர்ந்தவை. குளிர்காலத்தில் இங்கு
வந்து செல்கின்றன. இவை சிறு நீர் வாழ் உயிரிகளை உண்ணும்.
வெட்டுக்கிளி தட்டான் போன்ற பறக்கும் பூச்சிகளையும் உண்ணும்.
இவை கரையோர மரங்களில் வாழ்பவை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை அச்சுறு நிலையை அண்மித்த
இனம் பட்டியலில் வைத்துள்ளது.

13. ஆற்று உள்ளான் (Green Sandpiper):

இப்பறவைகள் வட ஆசியாவில் இருந்து குளிர்காலத்தில் இங்கு

வந்து செல்கின்றன. இவை கரையோரங்களில் உள்ள மரங்களில்
கூடுகட்டி வாழும். இப்பறவை Agreement on the conservation of African-Eurasian
migratory water birds (AEWA) ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பறவை
மற்றும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) ஆபத்தில் உள்ள
பறவை இனமாக அறிவித்துள்ளது.

14. சோழப்பட்சி (Rosy Starling):

இப்பறவைகள் குளக்கரை ஓரங்களில் வாழ்பவை. இவை இங்கு
இனப்பெருக்கம் செய்து, குளிர்காலங்களில் இலங்கையின்
அம்பாந்தோட்டை, புத்தளம், கட்டுநாயக்க போன்ற பகுதிகளுக்குச்
சென்று கோடைகாலத்தில் திரும்பும். இவை கூட்டமாக பயணிக்கும்.
இப்பறவைகள் வெட்டுக்கிளிகளை பெருமளவில் உண்பதால்,
உழவனின் நண்பன் என அழைக்கப்படுகிறது. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

15. மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail):

வட ஆசியப் பகுதிகளில் இருந்து குளிர்காலங்களில் இங்கு வந்து

செல்கின்றன. நீரோடைகளின் ஓரங்களில் இவை கூடுகட்டும்.
சேற்றில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்ளும்.

16. நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater):

இவை கரையோரப் பறவைகளாகும். இப்பறவை கரையோரங்களில்
உள்ள மண் புதர்களில் சிறு பொந்துகள் அமைத்து வாழ்பவை. இவை
தேனி, வண்டு, ஈ போன்ற பறக்கும் பூச்சிகளை உண்ணும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

17. வால் காக்கை (Rufus Treepie):

இப்பறவைகள் குளத்தைச் சுற்றியுள்ள புதர் மண்டிய இடங்களில் கூடு

அமைத்து வாழும். இவை பல்லி, மீன்கள், தவளை, பூரான், பழங்கள் என
அனைத்தையும் உண்ணும். இவை வெயில் காலத்தில் இனப்பெருக்கம்
செய்கின்றன. இவை குடும்பமாக வாழும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

18. கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் (Bay-backed Shrike):

இவைகளும் கரையோரப் பறவைகளாகும். இப்பறவைகள் குளத்தைச்
சுற்றி உள்ள முள் மரங்களில் கூடுகட்டி வாழ்பவை. வெட்டுக்கிளி,
ஓணான், சில்வண்டு போன்றவற்றை உணவாக உட்கொள்ளும்.
இளவேனில் காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

19. சிருநீல மீன்கொத்தி (Kingfisher):

இப்பறவைகள் குளத்திற்கு அருகிலுள்ள மரக் கிளைகளிலும்,

பாறைகளிலும் இருக்கும். இவை மீன்களை வேட்டையாடும். நீரின்
மேற்பரப்பில் பறந்து நீரினுள் பாய்ந்து மீனை கவ்வும். இவை இடம்
பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

20. கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher):

இவைகளும் பரவலாக காணப்படும் மீன்கொத்தி இனம் தான். இவை
நீரின் மேற்பரப்பில் பறந்து திடீரென்று நீரினுள் பாய்ந்து மீனை
அல்லது பெரிய பூச்சி வகைகளை கவ்வி கொண்டு வெளிவந்து
உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

21. வெண்தொண்டை மீன்கொத்தி (White-throated Kingfisher):

இப்பறவைகள் குளத்தின் கரையோரங்களில் உள்ள மரங்களில் கூடு

கட்டாமல் மாறாக மணற்பாங்கான பகுதிகளில் பொந்து அமைத்து
வாழ்பவை. இவை சிறிய மீன்கள், சிறிய ஊர்வன, நண்டுகள்
முதலியவற்றை உண்ணும் இப்பறவைகள் இடம்பெயறுவதில்லை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

22. செம்பருந்து (Brahminy Kite):

இவை குளத்தின் மேல் உயரமாக பறந்து திரியும். இறந்த
மீன்களையும், சில ஊர்வனவற்றையும், பிற பறவை குஞ்சுகளையும்
உண்ணும். இவைகளும் இடம்பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

23. பூஞ்சை பருந்து (Booted eagle):

இவை பெரிய மரங்களில் வாழ்பவை. இப்பறவைகள்

அனைத்துவித ஊனுண்ணிகள் ஆகும். இவைகளும்
இடம்பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

24. தகைவிலான் (Barn Swallows):

இப்பறவைகள் வட இந்தியாவிலிருந்து குளிர்காலத்தில் இங்கு வந்து
செல்லும். இவை கூட்டமாக பயணம் செய்யக் கூடியவை.
நீரோடையில் உள்ள நானல் கதிர்கள் நிறைந்த இடங்களில்
பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழும். இவை மிக அரிதாகவே
தரையிறங்கும். நீண்ட நேரம் பறந்து கொண்டிருக்கும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

25. சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia):

இப்பறவைகள் குளத்தின் கரையோரங்களில் உள்ள நீண்ட புற்களின்

மீது கூடு கட்டி வாழ்பவை. இவை பூச்சிகளை உண்டு வாழும்.
மேலும், இப்பறவைகள் வெயில் காலத்தில் இனப்பெருக்கம்
செய்யும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

26. செம்போத்து (Greater coucal):

இப்பறவைகள் குளக்கரை மற்றும் நீரோடையின் ஓரங்களில் உள்ள
மரங்களில் வாழ்கின்றன. இப்பறவைகள் புழு, பூச்சிகள், சிறுபாம்பு,
முட்டை, பழம், விதை ஆகியவற்றை உண்ணும். இவை இடம்
பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

27. புள்ளிமூக்கு வாத்து (Spot-billed duck):

இப்பறவைகள் குளக்கரையில் உள்ள புல் தரையில் கூடு அமைத்து

வாழும். இவை நீரின் மேற்புறத்தில் மிதந்தவாறு பாசி மற்றும்
சிறுதாவரங்களை உண்டு வாழும். பகல் பொழுதில் நீரில் மிதந்தபடி
உறங்கும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

28. பனை உழவாரன் (Asian palm Swift):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள மரங்களில் வாழ்பவை.
இவை பரந்தவாறு மட்டுமே வேட்டையாடும். வண்டு, தட்டான்,
வண்ணத்துப்பூச்சி போன்ற பறக்கும் பூச்சி இனங்களை மட்டுமே
உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

29. பனங்காடை (Indian Roller):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள மரப் பொந்துகளிலும், புல்

வெளிகளிலும் வாழ்கின்றன. இவை சிறு பூச்சிகள், தவளைகள்
மற்றும் ஊர்வனவற்றை உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

30. கருங்கரிச்சான் (Black Drongo):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள புல்வெளிகள் மற்றும்

புதர்களில் கூடு கட்டி வாழும். இவை அனைத்து பூச்சிகளையும்
உண்ணும். இப்பறவை இனத்தை இரட்டைவால் குருவி எனவும்
அழைப்பர். இவை இடம்பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

31. நெடுங்கால் உள்ளான் (Black-Winged Stilt):

இவை கரையோர பறவைகள் ஆகும். மரப் புதர்களில் கூடு அமைத்து

வாழும். இப்பறவைகள் தனது கால்களைப் பயன்படுத்தி புழு, பூச்சி
போன்ற இரைகளைப் பிடித்து உண்ணும். ஆபத்தான சூழ்நிலைகளில்
நீரில் மூழ்கும். இவை இடம் பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

32. கள்ளப் பருந்து (Black Kite):

இவை ஊர் பருந்து எனவும் அழைக்கப்படுகின்றன. இவை

கொன்றுண்ணிப் பறவைகள் ஆகும். இப்பறவைகள் குளத்தில் உள்ள
மீன்களை பிடித்து உண்ணும். கரையை சுற்றியுள்ள ஊர்வன மற்றும்
பிற பறவை குஞ்சுகளை பிடித்து உண்ணும். இவை இடம்பெயர்வது
இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

33. முக்குளிப்பான் (Little Grebe):

இப்பறவைகள் ஐரோ ஆசியப் பகுதிகளில் வாழ்கின்றன.

குளிர்காலத்தில் இங்கு வரும். இவை நீரிலுள்ள மீன்கள், பூச்சிகள்,
ஒட்டு மீன்கள் என அனைத்தையும் உணவாக உட்கொள்ளும்.
இப்பறவைகள் தண்ணீரில் மிதக்கும் தாவரங்களில் கூடுகட்டும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

34. சிறிய நீர்க்காகம் (Little Cormorant):

இப்பறவைகள் குளக்கரையின் ஓரங்களில் உள்ள மரங்களில் கூடு

அமைத்து வாழும். இவை நீருக்குள் மூழ்கி இரையைப் பிடிக்கின்றன.
இவை இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

35. புள்ளி அலகு கூழைக்கிடா (Spot-billed Pelican):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள பெரிய மரங்களில் கூடு
அமைத்து வாழும். இவை நீரில் நீந்தி சென்று நீருக்கடியில்
மீன்களைப் பிடிக்கும். இப்பறவைகள் குளிர்காலத்தில்
இனப்பெருக்கம் செய்யும். இவை இடம் பெயர்வதில்லை. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை அச்சுறு நிலையை
அண்மித்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

36. பாம்பு தாரா (Darter):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள மரங்களில் கூடுகட்டி

வாழும். பாம்பைப் போல தலையை மட்டும் வெளியே நீட்டி நீந்தும்.
இவை மீனை மட்டுமே உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை அச்சுறு நிலையை அண்மித்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

37. சாம்பல் நாரை (Grey Heron):

இப்பறவைகள் கரையோர மரங்கள் அல்லது கோரைப் புற்கள் மீது
கூடு அமைக்கும் இவை ஆழமற்ற நீரில் உள்ள மீன்கள், பாம்புகள்,
தேரை, பல்லி, சிறுபாலூட்டிகளை உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

38. மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork):

இப்பறவைகள் நீர்வாழ் உயிரினங்களையும், மீன்களையும் உண்டு

வாழ்கின்றன. இவை கரையோர மரங்களில் கூடுகட்டும். இவை
இடம் பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை அச்சுறு நிலையை அண்மித்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

39. சின்ன வெள்ளை கொக்கு (Little Egret):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள மரங்களில் கூட அமைத்து
வாழும். மீன்களே இதன் பிரதான உணவு. இவை இடம்பெயர்வது
இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

40. கரை கொக்கு (Reef Heron):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள சமவெளிப் பகுதிகளில்

கூடு அமைக்கும். நீரில் வாழும் பூச்சி, நண்டு, இறால்
போன்றவற்றை உண்ணும். இவை இடம் பெயர்வதில்லை. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

41. தாமரை இலைக் கோழி (Bronze-winged Jacana):

இப்பறவைகள் தாமரை இலைகளில் வாழ்பவை. நீரிலுள்ள பூச்சி,
சிறு மீன்கள் போன்றவற்றை உண்டு வாழும். இவை இடம்பெயர்வது
இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

42. கரிச்சான் (Ashy Drongo):

இவை கரையோர பறவைகள் ஆகும். இப்பறவைகள்

கரையோரங்களில் கூடு அமைத்து வாழும். இப்பறவைகள்
கரையான், வெட்டுக்கிளி, குளவி, எறும்பு புழுக்களை உண்ணும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

43. கல் குருவி (Indian Courser):

இவை கரையோர பறவைகள் ஆகும். இப்பறவைகள் குளத்தைச்

சுற்றியுள்ள கல்லும், கட்டுமான இடங்களில் வசிக்கும். இவை
வண்டு, சில்வண்டு, வெட்டுக்கிளி ஆகியவற்றை உண்ணும்.
மண்ணில் குழி பறித்து முட்டையிடும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

44. கம்பி வால் தகைவிலான் (Wire-tailed Swallow):

இப்பறவைகள் ஆசியா முழுவதும் சுற்றும் பறவையினம். இவை

குளிர்காலத்தில் இங்கு வந்து செல்கின்றன. இப்பறவைகள் குளத்தின்
அருகிலேயே தங்கள் வாழிடங்களை அமைகின்றன. இங்கு
இனப்பெருக்கம் செய்வது பற்றி குறிப்பு இல்லை. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

45. சாம்பல் தகைவிலான் (Ashy Wood Swallow):

இப்பறவைகள் குளத்தின் அருகில் உள்ள பட்டுப்போன மரம்,

பனைமரம் ஆகியவற்றில் வாழ்கின்றன. இவை வெயில் காலத்தில்
இனப்பெருக்கம் செய்யும். இவை இடம்பெயர்வது இல்லை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

46. பாறை தகைவிலான் (Crag Martin):

இப்பறவைகள் பாறைகளின் இடுக்கில் சேற்றைக் கொண்டு சிறு
குகைகள் அமைத்து வாழும். குளிர்காலங்களில் இங்கு வந்து
செல்லும். வண்டு மற்றும் சில பறக்கும் பூச்சிகளை உண்ணும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

47. அன்றில் பறவை (Glossy ibis):

இப்பறவைகள் குளிர்காலத்தில் இங்கு வந்து செல்லும். கரையோர

மரங்களில் கூடு அமைத்து வாழும். சேற்றில் உள்ள மீன், நீர்வாழ்
உயிரினங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

48. மஞ்சள் குறுகு (Yellow bittern):

இப்பறவைகள் கரையோரங்களில் காணப்படுகின்றன. இவை
கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் கூடு அமைத்து
வாழும். இப்பறவைகள் நீர்வாழ் உயிர்களை உண்ணும். இவை
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

49. கருவால் வாத்து (Gadwall):

இப்பறவைகள் குளிர்காலத்தில் இங்கு பரவலாக காணப்படும் வாத்து

வகையாகும். இவை குளத்தின் அருகில் உள்ள சிறு தாவரங்களுக்கு
இடையில் பள்ளம் தோண்டி கூடுகட்டும். நீருக்கடியில் வாழும்
தாவரங்களை மட்டுமே உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது. இவை Agreement on the conservation of African-
Eurasian migratory water birds (AEWA) ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படும்
பறவை இனம்.

50. செங்கால் நாரை (White Stork):

இப்பறவைகள் ஐரோப்பாவைச் சேர்ந்தது. குளிர் காலங்களில் மட்டும்
வந்து செல்லும். மீன், தவளை ஊர்வனவற்றை மற்றும் பூச்சிகளை
உண்ணும். இவை நீரிலும், நிலத்திலும் இறை தேடும்.
கரையோரங்களில் உள்ள முள் மரங்களில் வசிக்கும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

51. ஓணான் கொத்திக் கழுகு (Short-toed Snake eagle):

இப்பறவைகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. இங்கு வலசை வரும்.

கரையோரம் உள்ள பெரிய மரங்களின் உச்சியில் கூடுகட்டும். இவை
அனைத்து ஊர்வன வற்றையும் உண்டு வாழும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

52. கல் பொறுக்கி உப்புக்கொத்தி (Pacific Golden Plover):

இப்பறவைகள் சைபீரியாவில் வாழ்கின்றன. இவை குளிர்காலத்தில்
இங்கு வந்து செல்லும். இப்பறவைகள் நீரிலுள்ள உயிரினங்களை
உண்டு வாழும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

53. நீளவால் தாழைக்கோழி (Pheasant-tailed Jacana):

இப்பறவைகள் மிதக்கும் தாவரங்களில் கூடு அமைத்து வாழும். இவை

மிதக்கும் தாவரங்களுக்கு இடையில் இரை தேடும். பூச்சிகள் மற்றும்
மிதக்கும் நீர்வாழ் உயிரினங்களை உண்ணும். இவை இடம்பெயர்வு
செய்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

54. பசைக்காலி (Common green Shank):

இப்பறவைகள் வடஆசியாவில் காணப்படுகின்றன. இவை
குளிர்காலத்தில் இங்கு வந்து செல்லும். இவை நீரில் இறங்கி நத்தை,
புழு, பூச்சிகள், தவளைக் குஞ்சுகள் ஆகியவற்றை உண்ணும்.
கரையோரங்களில் கூடுகட்டி வாழும். இவை Agreement on the conservation
of African-Eurasian migratory water birds (AEWA) ஒப்பந்தத்தின் கீழ்
பாதுகாக்கப்படும் பறவை இனம். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

55. விசிறிவால் உள்ளான் (Common Snipe):

இப்பறவைகள் வட ஆசியாவில் வாழும். குளிர்காலத்தில் இங்கு

வந்து செல்லும். குளத்தின் அருகே உள்ள பொருள் புதர்களுக்கு
இடையே கூடு அமைத்து தங்கும். காலை மாலை நேரங்களில்
இறை தேடும். புழு, பூச்சிகள், நத்தைகளை உண்ணும். இவை
Agreement on the conservation of African-Eurasian migratory water birds (AEWA)
ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பறவை இனம். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

56. பசைவாயன் (Blue-faced Malkoha):

இப்பறவைகள் குளக்கரையில் உள்ள முள் மரங்களுக்கிடையே கூடு

அமைக்கும். பூச்சிகள், சிறு ஊர்வனவற்றை உண்ணும். இவை
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

57. குட்டைகாது ஆந்தை (Short-eared Owl):

இப்பறவைகள் வட ஆசியப் பகுதிகளில் இருந்து இங்கு வருகின்றன.

இப்பறவைகள் குளத்தின் கரையோரத்தில் உள்ள புல் புதர்களின்
இடையில் கூடு அமைக்கும். இவை காலை மாலை நேரங்களில்
இறை தேடும். எலிகள், புழு, பூச்சிகள், தட்டான், சிறு பறக்கும்
உயிரினங்களை உணவாக உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

58. கூகை ஆந்தை (Barn owl):

இப்பறவைகள் குளக்கரை ஓரங்களில் உள்ள மரங்களிலோ அல்லது

நிலங்களில் வளையமைத்து வாழும். இவை வேட்டை பறவையினம்
எலிகள், மீன்கள் மற்றும் பிற ஊர்வனவற்றை உண்ணும். இவை
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

59. புள்ளி ஆந்தை (Spotted Owlet):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள மரங்களில் மற்ற

பறவைகளின் கூட்டையோ அல்லது பொந்துகளையோ
ஆக்கிரமித்துக் கொள்ளும். இவை வேட்டை பறவைகள் ஆகும்.
பாம்புகள், பல்லிகள், தேரை, மீன்கள், தேரை, வவ்வால், தவளை
போன்றவற்றை உண்ணும். இப்பறவைகள் இடம்பெயர்வது இல்லை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

60. கள்ளிப் புறா (Eurasian collared Dove):

இப்பறவைகள் நீரோடைகளின் ஓரங்களில் மரங்களில் கூடு

அமைக்கும். இவை இங்கே பரவலாக காணப்படும் பறவை இனம்.
இப்பறவைகள் விதை, பழங்கள், பூச்சிகளை உண்ணும். இவை
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

61. நீலமயில் (Indian Peafowl):

இப்பறவைகள் குளத்தின் நீர் ஓடை பகுதிகளில் வாழ்கின்றன. இவை

ஊர்வனவற்றை உண்ணும். இப்பறவைகள் முட்புதர்கள்
தங்குகின்றன. இவை இடம் பெறுவதில்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

62. வரித்தலை வாத்து (Bar-headed Goose):

இப்பறவைகள் மங்கோலியாவில் இருந்து குளிர் காலத்தில் இங்கு

வந்து செல்லும். இவை குளத்தைச் சுற்றியுள்ள புல், பூண்டுகளை
உண்டு வாழ்கின்றன. இப்பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம்
செய்து விட்டு மீண்டும் திரும்பிச் சென்று விடும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

63. தேன் பருந்து (Oriental honey Buzzard):

இப்பறவைகள் குளக்கரையில் வாழும். இவை ஒரு ஊனுண்ணி
உயரமான இடங்களில் கூடு கட்டும். எலிகள், தேரை, மீன்களை
உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

64. ஆற்று ஆலா (River tern):

இப்பறவைகள் குளிர்காலத்தில் இங்கு காணப்படும். இவை நீரின்

மேற்புறத்தில் பறந்து இறையை குறிவைத்து நீரில் பாய்ந்து
பிடிக்கும். மீன், இறால் மற்றும் நீரில் வாழும் பூச்சிகள் இதன்
உணவு. மணற்பாங்கான பகுதிகளில் சிறு குழி பறித்து தங்கும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை அழிவாய்ப்பு
இனம் பட்டியலில் வைத்துள்ளது.

65. மலை உழவாரன் (Alpine Swift):

இப்பறவைகள் ஐரோ-ஆசிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை
குளிர்காலத்தில் இங்கு வந்து செல்லும். இவை தரை இறங்குவது
இல்லை. மரங்களில் வாழும். இப்பறவைகள் பறக்கும் வகை
பூச்சிகளை உணவாக உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

66. சின்ன வானம்பாடி (Oriental Skylark):

இவை குளக்கரையின் புல்வெளிகளில் சுற்றித்திரியும். விதைகள்,

பூச்சிகளை, புழுக்களை உண்ணும். இவை இடம்பெயர்வது இல்லை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

67. வெண்முதுகுச் சில்லை (White-rumped munia):

இப்பறவைகள் முட்புதரில் கூடு அமைத்து வாழும். புழு மற்றும்
பூச்சிகளை உண்ணும். இவை இடம் பெறுவதில்லை. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

68. வெள்ளை வாலாட்டி (White Wagtail):

இப்பறவைகள் ஐரோ-ஆசியப் பகுதிகளில் காணப்படுகின்றன. குளிர்

காலங்களில் இங்கு வந்து செல்லும். கரையோரங்களில் கூட
அமைத்து வாழும். இவை புழு, பூச்சிகளை உண்ணுகின்றன.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

69. புதர் வானம்பாடி (Jerdon’s bush lark):

இப்பறவைகள் கரையோரப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும்

கால்நடைகளின் குளம்புகள் ஏற்படுத்திய குழியில் கூடு அமைத்து
தங்கும். இவை புல்விதை, வண்டு, புழு, பூச்சிகளை உண்டு வாழும்.
குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். இவை இடம்
பெறுவதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.
70. செம்பிட்டத் தகைவிலான் (Red-rumped Swallow):

இப்பறவைகள் குளக் கரையோரங்களில் உள்ள புதர்களில் கூடு

அமைக்கும். புழு, பூச்சிகளே இதன் முதன்மை உணவு. இவை
குளிர்காலங்களில் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

71. சின்னத் தகைவிலான் (Streak-throated Swallow):

இப்பறவைகள் கூட்டமாக இரை தேடித் திரியும். சிறு பூச்சிகளை

உணவாக உண்ணும். நீரில் வாழும் சிறு உயிரினங்களையும்
உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

72. சாம்பல் தலை வானம்பாடி (Ashy crowned Sparrow-lark):

இப்பறவைகள் சிறு கூட்டமாக சுற்றித்திரியும். இவை கரையோர
சேற்றில் இரை தேடும். பூச்சிகளை உண்ணும். இப்பறவைகள்
இடம்பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

73. கருஞ்சிவப்பு முதுகு கீச்சான் (Bay-backed Shrike):

இப்பறவைகள் குளக்கரை ஓரம் உள்ள முள் மரங்களில் கூடு அமைத்து

வாழும். இவை சில்வண்டு, தட்டான், ஓனான் மற்றும் ஊர்வனவற்றை
உண்ணும். இவை இடம்பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

74. பழுப்புக் கீச்சான் (Brown shrike):

இப்பறவைகளைக் குளிர்காலங்களில் இங்கு காணலாம்.
முட்புதர்களில் கூடு அமைக்கும். கூட்டைச் சுற்றியுள்ள பகுதியில்
வரும் பூச்சிகளை பிடித்து உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

75. மரக்கதிர் குருவி (Booted warbler):

இப்பறவைகள் குளிர் காலங்களில் இங்கு வந்து தங்கிச்

செல்கின்றனர். இவை கரையோரங்களில் உள்ள முள் மரங்களில்
தங்கும். முள் மரங்களுக்கிடையில் பறந்து தனது இரையை
பிடிக்கும். புழு, பூச்சிகளை உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

76. வயல் கதிர்க்குருவி (Paddy field Warbler):

இவை கரையோர தாவரங்களின் மேல் காணப்படும். நீரில் வாழும்

புழு, பூச்சிகளை இப்பறவைகள் உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

77. பிளைத் நாணல் கதிர்க்குருவி (Blyth’s reed warbler):

இப்பறவைகள் ஐரோ-ஆசியப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை
குளிர்காலத்தில் இங்கு வந்து செல்கின்றன. இப்பறவைகள்
கரையோர மரங்களில் தங்கும். இவை பூச்சிகளை பிடித்து உண்ணும்.
நீரில் இறங்காது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

78. நாணல் கதிர்க்குருவி (Clamorous reed warbler):

இப்பறவைகள் குளிர்காலங்களில் இங்கு காணப்படுகின்றன. இவை

கரையோர நாணல் புதர்களில் தங்கும். இப்பறவைகள் பூச்சிகளை
பிடித்து உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

79. தையல் சிட்டு (Common Tailorbird):

இப்பறவைகள் மரங்களில் உள்ள பெரிய இலைகளில் துளையிட்டு
நார்களை பயன்படுத்தி கூடுகட்டும். இவை பூச்சிகளை பிடித்து
உண்ணும். இவை இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

80. காட்டு கதிர்க்குருவி (Jungle Prinia):

இப்பறவைகள் குளக்கரை மற்றும் நீரோடை பகுதிகளில் உள்ள

புதர்களில் காணப்படும். உயரமான புற்களுக்கு இடையில்
கூடுகட்டும். புழு, பூச்சிகளை உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

81. சாம்பல் வாலாட்டி (Grey Wagtail):

இப்பறவைகள் குளிர் காலங்களில் இங்கு காணப்படும் இவை

நீரோடைகளின் அருகில் கூடு அமைக்கும் இப்பறவைகள்
ஊக்கிகளை இரையாக உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.
82. கதிர்க்குருவி (Plain prinia):

இப்பறவைகள் நீரோடையின் ஓரத்தில் வளர்ந்த கோரைப் புற்களில்

கூடுகள் அமைக்கும். இவை பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.
இவை இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

83. நாகணவாய் (Common Myna):

இப்பறவைகள் குளக்கரையில் உள்ள பொந்துகளில் மற்றும்

மரங்களில் கூடு கட்டும். பூச்சிகள் மற்றும் பழங்களை உணவாக
உண்ணும். இவை சிறிய வகை உயிரின உண்ணிகள் ஆகும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

84. வயல் நெட்டைக்காலி (Paddy field Pipit):

இவை கரையோர பறவைகள் ஆகும். இப்பறவைகள்
கரையோரங்களில் உள்ள புதர்களின் வாழும். இவை பூச்சிகளை
உணவாக உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

85. காகம் (House crow):

இப்பறவைகள் கரையோரங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து

வாழும். இவை இடம் பெயர்வதில்லை. இறந்த மீன்கள், எலி, பிற
ஊர்வன என அனைத்துன்னியாக இப்பறவை உள்ளது. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

86. தூக்கணாங்குருவி (Baya weaver):

இப்பறவைகள் குளக் கரையோர மற்றும் நீரோடையின் ஓரத்தில்

உள்ள முள் மரங்கள் மற்றும் ஈச்ச மரங்களில் கூடுகட்டும். இவை
புழு, பூச்சிகள், பட்டாம்பூச்சி, வண்டு, சிலந்தி மற்றும் கரையான்
ஆகியவற்றை உணவாக உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

87. கருங்கொண்டை நாகணவாய் (Brahminy starling):

இப்பறவைகள் கரையோர முட்புதரில் காணப்படும். இவை

அங்கேயே கூடுகட்டும். இப்பறவைகள் பூச்சிகளை பிடித்து உண்ணும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

88. குயில் (Cuckoo):

இவை பரவலாக காணப்படுகின்றன. மரப் பொந்துகளில் வாழ்கின்றன.

புழு, பூச்சிகள் ஆலம்பழம் அத்திப்பழம் போன்றவற்றை
உண்ணுகின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

89. மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled lapwing):

இப்பறவைகள் குளத்தைச் சுற்றியுள்ள காடுகளில் வாழ்கின்றன.
வண்டுகள், கரையான்கள், பூச்சிகளை உணவாக உண்ணுகின்றன.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

90. பெரிய நீர்க்காகம் (Large cormorant):

இப்பறவைகள் குளிர்காலத்தில் காணப்படும். குளத்தின்

கரையோரங்களில் கூடு அமைத்து வாழும். மீன்களை இதன்
முக்கிய உணவு. ஊர்வனவற்றையும் உண்ணும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

91. தோசி கொக்கு (Striated Heron):

இப்பறவைகள் குளக்கரையில் உள்ள முட்புதர்களில் கூடு அமைத்து
வாழும். இப்பறவைகள் மீன்கள், நீர்வண்டு, நண்டு, கூனிரால்,
தவளை போன்றவற்றை உணவாக உண்ணும் இவை பூச்சிகளை
தூண்டிலாகப் பயன்படுத்தி மீன்களை பிடிப்பது பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் இடம் பெயர்வதில்லை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

92. பெரிய கொக்கு (Great Egret):

இப்பறவைகள் குளிர்காலத்தில் அதிகமாக காணப்படும். கரையோர

முட்புதரில் தங்கும். இவை நீரில் காணப்படும் சிறிய பூச்சிகள்,
தவளைகள், மீன்கள் மற்றும் சில பாலூட்டி வகைகளை உணவாக
உட்கொள்ளும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

93. உண்ணி கொக்கு (Cattle Egret):

இப்பறவைகள் குளிர்காலங்களில் இங்கே வந்து தங்கிச்
செல்கின்றன. இவை குளத்தைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில்
அதிகம் இரைதேடும். கரையோரங்களில் உள்ள புதர்களில் தங்கும்.
இவை பெரும்பாலும் வெட்டுக்கிளி, தட்டான் போன்ற பூச்சி
இனங்களையே உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

94. சிறிய சீழ்க்கை சிறகி (Lesser whistling Duck):

இப்பறவைகள் கூட்டமாக பயணம் செய்யக் கூடியவை. இவை

கரையோர மரங்களில் தங்குகின்றன. இப்பறவைகள் ஆழமற்ற நீரில்
செடிகளுக்கு இடையே மறைந்து காணப்படும். இவை தவளை, மீன்,
நத்தை, இளந்தளிர், புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

95. வெள்ளை அரிவாள் மூக்கன் (Black-headed ibis):

இப்பறவைகள் கரையோர பெரிய மரங்களில் கூடுகட்டி வாழும்.
இவை ஆழமற்ற நீரில் உள்ள தவளைகளையும், பூச்சிகளையும்
மற்றும் புல்வெளிகளில் காணப்படும் பூச்சிகளையும் உண்ணும்.
இவை பெரும்பாலும் இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை அச்சுறு நிலையை அண்மித்த
இனம் பட்டியலில் வைத்துள்ளது.

96. இராக்கொக்கு (Black-crowned Night heron):

இப்பறவைகள் குளிர்காலங்களில் காணப்படும். இவை குளக்

கரையோர புதர்களில் தங்கும். பகல் பொழுதில் ஓய்வு எடுத்து
இரவில் இரை தேடி திரியும். இப்பறவைகள் மீன், தேரை, தவளை,
பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு
சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

97. கொண்டை நீர்க்காகம் ( Indian cormorant):

இப்பறவைகள் கரையோர முட்புதரில் தங்கும். இவை நீரில் நீந்தி
மீன்களைப் பிடித்து உணவாக உட்கொள்ளும். இவை
இடம்பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

98. குளத்து கொக்கு (Indian pond heron):

இப்பறவைகள் கரையோர முட்புதரில் தங்கும். இவை மீன்களையும்,

நீர்வாழ் உயிரினங்களையும் இறையாக பிடித்து உண்ணும். இவை
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

99. கம்புள் கோழி (White-breasted waterhen):

இப்பறவைகள் கரையோரம் உள்ள புல்தரையில் கூடுகட்டும். இவை
ஆழமான நீரிலும் சேற்றிலும் இறை தேடும். மண்ணிலுள்ள
புழுக்களையும் உணவாக உண்ணும். இவை பெரும்பாலும்
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

100. பச்சைக்கிளி (Rose-ringed parakeet):

இப்பறவைகள் நீரோடைகளில் அருகில் பெரிய மரங்களில் பொந்து

அமைத்து வாழ்கின்றன. இவை பழங்களை அதிகம் உண்ணும்.
இப்பறவைகள் இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

101. கொண்டலாத்தி (Hoopoe):

இப்பறவைகள் கரையோர பாறைகளின் இடுக்குகளில் கூடு
அமைக்கும். இவை மண்ணின் உள் வாழும் பூச்சிகள், வண்டுகள்,
புழுகள், கரையான் ஆகியவற்றை உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

102. கருங் கீற்று தூக்கணாங்குருவி (Streaked weaver):

இப்பறவைகள் நீரோடையின் அருகிலுள்ள முட்புதரில் கூடு

அமைத்து வாழும். இவை புழு மற்றும் பூச்சிகளை உணவாக
உட்கொள்ளும். இப்பறவைகள் பெரும்பாலும் இடம்பெயர்வதில்லை.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

103. ஊதா பிட்டு தேன் சிட்டு (Purple-rumped sunbird):

இப்பறவைகள் நீரோடையை ஒட்டியுள்ள மரங்களின் புதர்களில்
கூடுகட்டும். இவை உணவாக மலர்த்தேன், சிறிய பூச்சிகளை
உண்ணும். இவை இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

104. மாடப்புறா (Rock Dove):

இப்பறவைகள் உயர்ந்த மரங்களில் வசிக்கின்றன. இவை உணவாக

தானியங்கள், பழங்கள், விதைகளை உட்கொள்ளும். இப்பறவைகள்
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

105. வெள்ளைக்கண் வைரி (White-eyed buzzard):

இப்பறவைகள் குளத்திற்கு அருகில் உள்ள மரங்களில் கூடு கட்டும்.

இவை பூச்சிகள், குழிமுயல், எலிகள் போன்றவற்றை
வேட்டையாடும். இப்பறவைகள் இடம்பெயர்வது இல்லை. இவை
வெயில் காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

106. தண்ணீர் கோழி (Water cock):

இப்பறவைகள் குளிர்காலங்களில் அதிகமாக காணப்படும். இவை

கரையோரங்களில் உள்ள முட்புதரில் வாழும். இப்பறவைகள் சிறு
மீன்கள், பூச்சிகளை உணவாக உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

107. மயில் உள்ளான் (Greater painted-snipe):

இவை கரையோர பறவைகள் ஆகும். இப்பறவைகள் புற்களின் மீது

கூடுகட்டும். இவை சேற்றில் உள்ள நண்டுகள், புழு, பூச்சிகள்,
மீன்களை தேடி உண்ணும் மற்றும் புல் விதைகளையும்,
நத்தைகளையும் உண்ணும். இவை பெரும்பாலும் இடம் பெயராது.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு
கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

108. பவளக்காலி (Common redshank):

இவை கரையோர பறவையாகும். இப்பறவைகள் ஐரோ-ஆசியப்
பகுதிகளில் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் இங்கு வந்து
செல்கின்றன. இப்பறவைகள் கரையோரங்களில் கூடுகட்டி வாழும்.
இவை புழு, பூச்சிகள், நத்தைகளை உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

109. புள்ளிப் புறா (Spotted Dove):

இப்பறவைகள் நீரோடைக்கு அருகில் உள்ள மரங்களில் தாழ்வாக

கூடுகட்டும். இவை தானியங்கள் மற்றும் புல் விதைகளை உணவாக
உண்ணும். இவை இடம் பெயர்வதில்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

110. மாம்பழச் சிட்டு (Common Iora):

இப்பறவைகள் நீரோடையின் ஓரங்களில் முட்புதரில் கூடுகட்டி
வாழும். இவை விதைகள், பழங்கள், புழு, பூச்சிகளை உணவாக
உட்கொள்ளும். இப்பறவைகள் இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

111. ரிச்சர்டு நெட்டைக்காலி (Richard’s pipit):

இப்பறவைகள் வட ஆசியாவில் காணப்படுகின்றன. இவை

குளிர்காலத்தில் இங்கு வந்து செல்கின்றன. இப்பறவைகள் புற்கள்
நிறைந்த பகுதிகளில் கூடு அமைக்கும். இவை புழு, பூச்சிகள்,
நத்தைகள், விதைகளை உணவாக உண்ணும். பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

112. கருங்கோட்டு கதிர்க்குருவி (Zitting cisticola):

இப்பறவைகள் கரையோர பாறைகளின் இடுக்கில் கூடு அமைக்கும்.
இவை பூச்சிகளை உணவாக உண்ணும். இப்பறவைகள் கரையோர
புல்வெளிகளில் சிறு கூட்டமாக இரை தேடி திரியும். இவை
இடம்பெயராது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

113. ஊதா தேன்சிட்டு ( Purple sunbird):

இப்பறவைகள் நீரோடை கரையோர மரங்களில் கூடு கட்டும். இவை

மலர்களில் உள்ள தேன், சிறு பூச்சிகளை உணவாக உண்ணும்.
இப்பறவைகள் இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

114. கருஞ்சிட்டு (Indian Robin):

இப்பறவைகள் நீரோடை கரையோர புதர்களில் கூடு கட்டும். இவை

புழுக்கள், சிறுபூச்சிகள் மற்றும் விதைகளை உணவாக உண்ணும்.
இப்பறவைகள் இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை
பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
பட்டியலில் வைத்துள்ளது.

115. மாங்குயில் (Golden oriole):

இப்பறவைகள் குளிர்காலங்களில் காணப்படும்.இப்பறவைகள்
நீரோடை கரையோர மரங்களில் காணப்படும். இவை பழங்கள்,
விதைகள், புழு மற்றும் பூச்சிகளை உணவாக உண்ணும். பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை தீவாய்ப்பு கவலை
குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

116. நடுத்தர கொக்கு (Intermediate Egret):

இப்பறவைகள் குளத்தின் கரையோர முள் மரங்களில் தங்கும்.

இவை மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஊர்வனவற்றை
உண்ணும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

117. கரண்டிவாயன் (Eurasian spoonbill):

இப்பறவைகள் குளத்தின் கரையோர மரங்களில் கூடு அமைக்கும்
இவை நீரிலுள்ள புழு, பூச்சிகள், தேரை, அட்டை, சிறுமீன்கள்,
தவளைகள், தாவரங்கள் மற்றும் பாசிகளை உணவாக
உட்கொள்கின்றன. இவை Agreement on the conservation of African-Eurasian
migratory water birds (AEWA) ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாகபாதிப் பறவை
இனம். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இப்பறவையை
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில் வைத்துள்ளது.

118. சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red wattled lapwing):

இப்பறவைகள் குளக்கரை மற்றும் நீரோடைகளை சுற்றிலும்

காணப்படும். இவை தரையில்தான் கூடுகட்டி வாழும். இவை
பூச்சிகள், நத்தைகள், சிறு நீர்வாழ் உயிரிகளை உண்ணும். இவை
இடம்பெயர்வது இல்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
இப்பறவையை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் பட்டியலில்
வைத்துள்ளது.

சூரியா👁️

சர்க்கார் பெரியபாளையம்

You might also like