You are on page 1of 5

மனித இனத்தையே இல்லாமல் செய்ய வல்ல தேனீக்களின் அழிவு..!

அனைத்து தேனீக்களும் இறந்தால் என்ன நடக்கும்?

எங்கு பார்த்தாலும் வாடி வறண்ட செடிகள், விரிசல் விழுந்து இப்பவோ அப்பவோ என்று மரங்கள் இழுத்துக்
கொண்டிருக்கின்றன. புதியதாக எந்த மரங்களையுமே காணோம். ஆங்காங்கே ஒன்றிரண்டு செடிகளும்
புற்களுமே செழிப்பாக வளர்கின்றன. உலகின் கடைசி விலங்கையும் அடித்துக் கொன்று
தின்றுகொண்டிருந்தார்கள், உடலில் எலும்பைத் தவிர வேறெதுவும் இல்லாத ஒரு சிலர். அது தான் கடைசி
விலங்கு, இனி சாப்பிட மாமிசம் கூட கிடைக்காது. மனித மாமிசத்தைத் தவிர. அதையும் சில பகுதிகளில்
தொடங்கிவிட்டனர். சைவ உணவு உண்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தாகிவிட்டது. ஒரு
கிலோ தக்காளியின் விலை ஒரு லட்சம் ரூபாய். உலகின் ஒவ்வொரு மனிதனும் வாரத்திற்கு ஒருவேளை
சாப்பிடுவதற்கே உணவைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். செயற்கை மகரந்தச் சேர்க்கை மூலம்
வளர்க்கப்படும் தாவரங்கள் தாராளமாக அனைவருக்கும் வாரி வழங்கும் அளவிற்கு இல்லை. கொத்துக்
கொத்தாக பஞ்சத்தால், பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

இது கற்பனையல்ல. நிஜத்தில் வரும் காலத்தில் நிகழக்கூடியவை. உலகின் கடைசித் தேனீ


அழியும்போது நமது நிலை இதுதான். அளவில் மிகச்சிறிய தேனீக்கள் சூழலுக்கும், தாவரங்களின் பசுமைக்கும்
இன்றியமையாதது. ஒரு விதையை விதைத்து அதற்குத் தேவையான உரங்களைப் போடுங்கள், தேவையான
நீரைத் தாருங்கள். ஆனால் அவற்றைத் தேனீக்கள் அண்டாத வகையில் பாதுகாத்து வையுங்கள். அத்தாவரத்தின்
வளார்ச்சி நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நமக்குத் தேவையான பூக்களோ, பழங்களோ மேலும் அவற்றை
வளரச் செய்வதற்குத் தேவையான விதைகளோ எதையுமே அது தராது.

செடிகள் கருத்தரிப்பதற்கும், பல்கிப் பெருகுவதற்கும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். அது


இரண்டு முறைகளில் நடைபெறும். சுய மகரந்தச் சேர்க்கையில் ஒரே செடியில் பிறக்கும் ஆண் பூக்கள் அதே
செடியின் பெண் பூக்களுக்குத் தனது மகரந்தத் துகள்களை அனுப்பி கருத்தரிக்கச் செய்கிறது. இது உலகின்
மொத்த தாவரங்களில் சிலவற்றிலேயே நடைபெறும். ஆனால், பெரும்பாலான செடிகள் அயல் மகரந்தச்
சேக்கை மூலமே வம்சவிருத்தி அடைகின்றன. அதாவது, ஒரு செடியில் இருக்கும் ஆண் மலரின் மகரந்தத்
துகள்களை வேறொரு செடியின் பெண் மலருக்குத் தந்து கருத்தரிக்கச் செய்வது. செடிகளால் நகர
முடியாதல்லவா, அதனால் அவற்றுக்குப் பூச்சிகள் உதவுகின்றன. அவை ஆணின் வித்துக்களைச் சுமந்துசென்று
பெண் மலரிடம் சேர்க்கிறது. இவ்வாறு செய்பவற்றைப் பூந்து சேர்ப்பிகள் (Pollinators) என்று அழைப்பார்கள்.
இந்தப் பணியில் பங்கெடுப்பதில் 90% பணியாளர்கள் தேனீக்கள் தான்.

தேனீக்கள் அழிந்துவிட்டால், இந்தப் பணி முழுவதும் நிறைவடையாமல் ஸ்தம்பித்துவிடும். உலகப்


பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் சுமார் 250,000 தாவர வகைகள் கருத்தரிப்பதற்குத் தேனீக்களைச் சார்ந்து
தான் இருக்கின்றன. மகரந்தச் சேர்க்கை நிகழாமல் இனப்பெருக்கம் நிகழுமா, உணவுப் பொருள்கள் தான்
கிடைக்குமா?

பிறகு இந்த அயல் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டியது மனிதர்களின் கடமையாகிவிடும். இந்தப்


பணிச் சுமையைத் தாங்குவது எளிதான காரியமல்ல. அதனால் அதன்மூலம் கிடைக்கும்
உணவுப்பொருள்களின் விலையும் தாறுமாறாக உயரும். 100 இல் 99 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால்
பாதிக்கப்படுவார்கள். உணவுப் பஞ்சம் மனித இனமே அழியக்கூடிய நிலைக்கு ஏற்படும். உலகப்
பொருளாதாரமே முடங்கிவிடும். உணவைத் தேடுவதே பிரதான வேலையாகிவிடும். சுய மகரந்தச்
சேர்க்கையில் வளரும் தாவரங்களில் உணவைத் தேடிக்கொள்ளும் நிலைக்கு நமது உணவுப் பழக்கம்
பழகுவதற்குள் உலகின் பாதி மக்கள் தொகையை இழந்துவிடுவோம். ஆடைப் பொருளாதாரத்தில் பெரும்
பங்கு வகிக்கும் பருத்தி இல்லாமலே ஆடை உடுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

அட இதையெல்லாம் இப்ப எதுக்குப்பா சொல்லிகிட்டு இருக்க? தேனீக்களுக்கு இப்ப என்ன குறை


வந்துடுச்சு?

கடந்த 20 வருடமாகச் சிற்றுயிர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வடக்கில் பஞ்சாபில் இருந்து


தெற்கில் கேரளா வரையிலும், மேற்கில் மகாராஷ்டிராவில் இருந்து மேற்கில் திரிபுரா வரையிலும் அனைத்து
மாநில விவசாயிகளும் அவர்களது பகுதிகளில் தேனீக்களின் வரத்து முன்பிருந்ததைவிட குறைந்துவிட்டதாகக்
கூறியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தேனீ என்றில்லை, தேனீ இனத்தைச் சேர்ந்த எந்த வகையும்
பெருமளவில் வருவதில்லை என்று அஞ்சுகிறார்கள். அரிசி, கோதுமை போன்றவற்றில் சுய மகரந்தச்
சேர்க்கையே நடைபெற்றாலும் அவற்றை மட்டுமே உண்ணமுடியாது. காய் மற்றும் கனி வகைகளின் உற்பத்தி
இவற்றின் வருகை பாதிப்பால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வருந்துகிறார்கள்.

தேனீக்களின் வருகை ஏன் குறைகிறது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகளவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால்


பெரும்பாலான நாடுகள் ரசாயன உரங்களின் மூலம் அதீத உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். பின்னாளில்,
அவர்களது வியாபார வெறி அதை வைத்துப் பணத்தில் புரள நினைத்த வியாபாரிகளின் பேராசை அதை
உலகம் முழுக்கப் பரவச் செய்தது. இன்று விவசாயம் என்றால் ரசாயன உரமின்றி சாத்தியமில்லை என்ற
நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

நிலைமை இப்படியிருக்க, பெண் மலர்களைக் கருத்தரிக்கச் செய்வதற்கு மகரந்தத் துகள்களை ஆண்


மலரில் சேகரிக்கும் தேனீக்கள் அவற்றோடு ரசாயனத்தையும் உட்கொள்கின்றன. தொடக்கத்தில் அவற்றின்
உணர்கொம்பு திறனை இழப்பதால் மணங்களை நுகரும் திறனை இழந்து மலர்களைக் கண்டடைய
முடியாமல் தவிக்கின்றன. பிறகு, அந்த ரசாயனம் அவற்றின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால்
தசைகள் முடக்கப்பட்டு இறந்துவிடுகின்றன.

அவற்றின் மகரந்தச் சேர்க்கைத் தாவரங்களைச் சார்ந்து வாழும் தாவர உண்ணிகள் உணவின்றி


அழியத்தொடங்குவதில் இருந்து உணவுப் பொருள்களின் உற்பத்தி பாதிப்பது, உலகளவில் பஞ்சம், புது
மரங்கள் வளராமல் போவதாலும் இருக்கும் மரங்களும் அழிந்துபோவதாலும் நீர்த்தேக்கச் செயல்பாடுகள்
நிகழாமல் நன்னீர் பற்றாக்குறை ஏற்படும். நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினிச் சாவுகள்
அதிகரிக்கும்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து சங்கிலித் தொடரில் பின்னிப்பிணைந்து
வாழும் வகையில் அமைத்திருக்கிறது இயற்கை. அதன் படைப்பில் அனைத்தும் செழித்து வாழ்வதற்கு அது
வகுத்தளித்த பாதையில் இருந்து பிறழ்ந்து சென்றது மனித இனம். அந்த ஒரு இனத்தின் பிறழ்வு உலகின்
இயக்கத்தையே ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

அனைத்து தேனீக்களும் இறந்தால் என்ன நடக்கும்?

உலகில் சுமார் 20,000 வகையான தேனீக்கள் உள்ளன, அவை மிக முக்கியமான பூச்சி மகரந்தச் சேர்க்கைகளாக
இருக்கலாம். ஆயிரக்கணக்கான தேனீ இனங்கள் தனித்துவமான பறக்கும் முறைகள் மற்றும் மலர்
விருப்பங்களைக் கொண்டுள்ளன, மேலும் பல அவற்றின் உடல் அளவுகள் மற்றும் நடத்தைகள் அவை
மகரந்தச் சேர்க்கை செய்யும் பூக்களுடன் கிட்டத்தட்ட முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் பூக்களுடன்
இணைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து வகையான தேனீக்களும் உலகம் முழுவதும் வீழ்ச்சியடைந்து
வருகின்றன, மற்ற பல பூச்சிகளைப் போலவே. பழக்கமான தேனீ காலனி சரிவு கோளாறால் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது, இதில் படை நோய் திடீரென தங்கள் வயதுவந்த உறுப்பினர்களை இழக்கிறது.
பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி பயன்பாடு, வாழ்விட இழப்பு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற
காரணங்களால் பல இடங்களில் பம்பல்பீக்கள் மற்றும் பிற தனித் தேனீக்களின் மக்கள் தொகை வெகுவாகக்
குறைந்துள்ளது. துருப்பிடித்த பம்பல்பீ போன்ற சில இனங்கள் அழிந்துவரும் உயிரினங்களாகவும்
பட்டியலிடப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்து தேனீக்களும் இறந்துவிட்டால், சுற்றுச்சூழல்
அமைப்புகள் முழுவதும் பெரும் அலைச்சல் விளைவுகள் ஏற்படும். தேனீ மல்லிகைகள் போன்ற பல
தாவரங்கள் குறிப்பிட்ட தேனீக்களால் மட்டுமே மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன, மேலும் அவை
மனித தலையீடு இல்லாமல் இறந்துவிடும். இது அவற்றின் வாழ்விடங்களின் கலவையை மாற்றியமைத்து,
அவை அங்கம் வகிக்கும் உணவு வலைகளை பாதிக்கும் மற்றும் சார்ந்திருக்கும் உயிரினங்களின் கூடுதலான
அழிவுகள் அல்லது சரிவைத் தூண்டும். மற்ற தாவரங்கள் பல்வேறு மகரந்தச் சேர்க்கைகளைப்
பயன்படுத்தலாம், ஆனால் பல தேனீக்களால் வெற்றிகரமாக மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.
தேனீக்கள் இல்லாமல், அவை குறைவான விதைகளை அமைத்து, குறைந்த இனப்பெருக்க வெற்றியைப்
பெறும். இதுவும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாற்றிவிடும். தாவரங்களுக்கு அப்பால், அழகான தேனீ-
உண்ணும் பறவைகள் போன்ற பல விலங்குகள் இறந்துவிட்டால், இரையை இழக்க நேரிடும், மேலும் இது
இயற்கை அமைப்புகளையும் உணவு வலைகளையும் பாதிக்கும். விவசாயத்தைப் பொறுத்தவரை,
தேனீக்களின் இழப்பு மனித உணவு முறைகளை வியத்தகு முறையில் மாற்றும் ஆனால் பஞ்சத்திற்கு
வழிவகுக்காது. மனித கலோரிகளில் பெரும்பாலானவை இன்னும் தானிய தானியங்களிலிருந்து வருகின்றன,
அவை காற்றினால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன, எனவே அவை தேனீக்களால்
பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும், பல பழங்கள் மற்றும் காய்கறிகள் பூச்சி-மகரந்தச் சேர்க்கை
கொண்டவை மற்றும் தேனீக்கள் இல்லாமல் இவ்வளவு பெரிய அளவில் அல்லது மலிவாக வளர்க்க
முடியாது. உதாரணமாக, அவுரிநெல்லிகள் மற்றும் செர்ரிகள், அவற்றின் மகரந்தச் சேர்க்கையில் 90 சதவீதம்
வரை தேனீக்களை நம்பியுள்ளன. பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறி பயிர்களுக்கு கை-மகரந்தச்
சேர்க்கை சாத்தியம் என்றாலும், இது நம்பமுடியாத அளவிற்கு உழைப்பு மற்றும் விலை உயர்ந்தது. சிறிய
ரோபோ மகரந்தச் சேர்க்கை ட்ரோன்கள் ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் முழு
பழத்தோட்டங்கள் அல்லது நேரத்தை உணர்திறன் கொண்ட பூக்களின் வயல்களுக்கு தடைசெய்யும் வகையில்
விலை உயர்ந்தவை. தேனீக்கள் இல்லாமல், புதிய உற்பத்தியின் கிடைக்கும் தன்மை மற்றும் பன்முகத்தன்மை
கணிசமாகக் குறையும், மேலும் மனித ஊட்டச்சத்து பாதிக்கப்படும். கை அல்லது ரோபோ மகரந்தச்
சேர்க்கைக்கு செலவு குறைந்த பயிர்கள் இழக்கப்படலாம் அல்லது மனித பொழுதுபோக்காளர்களின்
அர்ப்பணிப்புடன் மட்டுமே நீடித்திருக்கும்.

Destruction of bees that can do without the human race..!

What Would Happen If All the Bees Died?


Everywhere you look, there are withered and dry plants, and trees that will fall and crack
now or then. We will see any new trees. Here and there a couple of plants and grasses grow
luxuriantly. They were slaughtering and eating the last animal in the world, a few with nothing
but bones in their bodies. It is the last animal, and no more meat is available. Except for human
flesh. It has also started in some areas. Vegetarianism has become the preserve of the wealthy.
A kilo of tomato costs one lakh rupees. Every person in the world is on the run looking for food
to eat for maybe a week. Artificially pollinated plants are not abundant enough to feed everyone.
People are dying due to famine and starvation.

This is not fiction. which may actually occur in the future. This is our situation when the
world's last bee dies. Tiny bees are vital to the environment and the greenness of plants. Sow a
seed and apply the necessary fertilizers and water it. But keep them safe from bees. The growth
of the plant will be good. But it doesn't give us the flowers, the fruits, and the seeds we need to
grow them.

Pollination is necessary for plants to fertilize and multiply. It will be done in two ways. In
self-pollination, the male flowers of the same plant send their pollen grains to the female flowers
of the same plant to fertilize them. It occurs in some of the world's total plants. However, most
plants cross-pollinate. That is, the transfer of pollen grains from the male flower of one plant to
the female flower of another plant for fertilization. Plants can't move, so insects help them. They
carry the male seeds and add them to the female flower. Those who do this are called
pollinators. 90% of the workers involved in this work are bees.

If the bees die out, the whole process will come to a standstill. About 250,000 plant
species that contribute to the global economy depend on bees for fertilization. Can reproduction
occur without pollination, just food?

Then it becomes the duty of humans to pollinate this alien. Carrying this workload is not
an easy task. Therefore, the price of the food products available will increase inversely. 99 out of
100 will suffer from malnutrition. Food shortages can lead to the extinction of the human race.
The world economy will be paralyzed. Foraging becomes the main task. We will lose half the
world's population before our diets adapt to foraging on self-pollinating plants. Without cotton,
which plays a major role in the clothing economy, we would be forced to dress.

Why are you saying all this now? What's wrong with bees?
Over the last 20 years, farmers in all states, from Punjab in the north to Kerala in the
south and from Maharashtra in the west to Tripura in the west, have reported that the supply of
bees in their areas has declined. It is feared that no particular bee, and no species of bee, is
abundant. Even though self-pollination occurs in rice and wheat, they alone cannot be eaten. It
is regretted that the production of pods and fruits will be greatly affected by their arrival.

Why is bee attendance declining?


Global food shortages after World War II enabled most countries to overproduce with
chemical fertilizers. Later, the greed of traders who wanted to make money with their
commercialism made it spread all over the world. Today, agriculture is impossible without
chemical fertilizers.

This being the case, the bees that collect the pollen grains on the male flowers ingest
the chemical along with them to fertilize the female flowers. Initially, they lose their sense of
smell and are unable to detect flowers. Then, the chemical affects their central nervous system,
causing the muscles to become paralyzed and die.

Food production will suffer from starvation of herbivores that depend on their pollinators,
global famine, and fresh water shortages as new trees fail to grow and existing trees die.
Starvation deaths will increase due to lack of water and food.

Nature has designed every living thing in the world to live in a chain of interdependence.
The human race has deviated from the path it laid out for all of its creation to thrive. The
mutation of that one species has threatened the very movement of the world.

What Would Happen If All the Bees Died?


There are about 20,000 species of bees in the world, and they are probably the most important
insect pollinators. The thousands of bee species have unique flight patterns and floral
preferences, and many have coevolved with flowers in such a way that their body sizes and
behaviors almost perfectly complement the flowers they pollinate. Sadly, bees of all types are in
decline worldwide, as are many other insects. The familiar honeybee has suffered greatly from
colony collapse disorder, in which hives suddenly lose their adult members. Populations of
bumblebees and other solitary bees have steeply declined in many places, largely because of
insecticide and herbicide use, habitat loss, and global warming. Some species, such as the
rusty patched bumblebee, are even listed as endangered species.    If all of the world's bees
died off, there would be major rippling effects throughout ecosystems. A number of plants, such
as many of the bee orchids, are pollinated exclusively by specific bees, and they would die off
without human intervention. This would alter the composition of their habitats and affect the food
webs they are part of and would likely trigger additional extinctions or declines of dependent
organisms. Other plants may utilize a variety of pollinators, but many are most successfully
pollinated by bees. Without bees, they would set fewer seeds and would have lower
reproductive success. This too would alter ecosystems. Beyond plants, many animals, such as
the beautiful bee-eater birds, would lose their prey in the event of a die-off, and this would also
impact natural systems and food webs.     In terms of agriculture, the loss of bees would
dramatically alter human food systems but would not likely lead to famine. The majority of
human calories still come from cereal grains, which are wind-pollinated and are therefore
unaffected by bee populations. Many fruits and vegetables, however, are insect-pollinated and
could not be grown at such a large scale, or so cheaply, without bees. Blueberries and cherries,
for example, rely on honeybees for up to 90 percent of their pollination. Although hand-
pollination is a possibility for most fruit and vegetable crops, it is incredibly labor-intensive and
expensive. Tiny robotic pollinator drones have been developed in Japan but remain prohibitively
expensive for entire orchards or fields of time-sensitive flowers. Without bees, the availability
and diversity of fresh produce would decline substantially, and human nutrition would likely
suffer. Crops that would not be cost-effective to hand- or robot-pollinate would likely be lost or
persist only with the dedication of human hobbyists.

You might also like