You are on page 1of 3

உழவுத் தொழிலின் பெருமை

குறிப்பு சட்டகம்

1. முன்னுரை
2. உழவு தொழில் தமிழர் பண்பாட்டின் மகுடம்
3. உழவு தொழிலின் முக்கியத்துவம்
4. உழவு இல்லையேல் உணவு இல்லை
5. இலக்கியங்களில் உழவு
6. முடிவுரை

முன்னுரை

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்


தொழுதுண்டு பின் செல்பவர்” என்கிறார் தெய்வப்புலவர். அதாவது இந்த
உலகத்திலேயே மேன்மையான தொழில் உழவு . அதன் பெருமையினை
உலகத்தார்க்கு பதிவு செய்கின்றார்.

இந்த உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் அனைவருக்கும்


உணவளிக்கும் மேன்மையான தொழில் உழவுத்தொழில் ஆகும்.

இந்த உலகில் பசி என்பது இருக்கும் வரை விவசாயி என்பவன் அனைவர்க்கும்


தெய்வம் ஆவான். இக்கட்டுரையில் உழவு தொழிலின் பெருமைகள் பற்றி
காண்போம்.

உழவு தொழில் தமிழர் பண்பாட்டின் மகுடம்

“வரப்புயர நீர் உயரும் நீர் உயர்ந்தால் நெல் உயரும் நெல் உயர்ந்தால் குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்” என்கின்ற வரிகளானது ஒரு தேசத்தின் பெருமை
என்பது அங்கே உள்ள உழுது விதைப்பவர்களின் கையில் உள்ளது என்று
சூசகமாக கூறி செல்கின்றது.

பண்டை தமிழர் வாழ்வியலில் உழவு தொழில் ஒரு தனி அடையாளமாக


இருந்தது. அந்த மக்களின் அழகான வாழ்வியலில் “செம்புல பெயல் நீர்” என
மண்ணின் வளம் அறிந்து பயிரிட்ட தமிழர் வாழ்வியல் அங்கே
வெளிப்படுகின்றது.

உழவு தொழிலின் முக்கியத்துவம்


உழவு என்பது வெறுமனே தொழில் மட்டுமல்ல அதுவே இங்கே வாழ்கின்ற
அனைத்து மக்களின் உயிரின் ஆதாரமாகும்.

இதனை சங்க மருவிய கால இலக்கியங்களில் “உண்டி கொடுத்தோர்


உயிர்கொடுத்தோரே” என்ற உணவளிக்கும் விவசாய குடிமக்களின்
பெருமைகளை பாடியிருக்கின்றார்கள்.

இந்த உலக மக்களின் பசி, பட்டினி என்பது இல்லாமல் மக்கள் அனைவரும்


மகிழ்வாக வாழவேண்டும் என்றால் உழவு தொழில் மேன்மை அடைய வேண்டும்
என்பதில் அன்றைய மன்னர்கள் ஆர்வமாய் இருந்தனர்.

உழவு இல்லையேல் உணவு இல்லை

நாட்டில் மழையின் அளவு குறைந்து விட்டால் அந்த நாடு பசி மற்றும் பஞ்சத்தால்
வாட நேரிடும். மழை குறைந்தால் உழவு தொழில் பாதிக்கப்படும் உழவு
பாதிக்கப்பட்டால் பயிர்கள் விளையாது உணவுக்கு பஞ்சமானது ஏற்படும்.

இதனால் அனைவரும் பசியினால் வாட நேரிடும். இன்றைய காலகட்டத்தில்


அதிகளவான மக்கள் விவசாயத்தை கைவிட்டு வேறுபல தொழில்களை நாடி
செல்கின்றனர்.

இதனால் விவசாயம் குறைவடைந்து உணவு தட்டுப்பாடுகள் ஏற்படும் அபாயம்


எதிர்காலத்தில் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

இலக்கியங்களில் உழவு

தமிழ் இலக்கியங்கள் உழவு தொழிலின் பெருமைகளை அதிகம் எடுத்து


கூறுகின்றன. திருக்குறளில் வருகின்ற “104 ஆவது அதிகாரம் உழவின்
பெருமைகளை” வெளிப்படுத்துகின்றது.

அவ்வாறே ஒளவையாரது “நல்வழி” என்ற நூலனது உழவின் பெருமைகளை


பாடுகின்றது. மற்றும் சங்கமருவிய காலத்தில் எழுந்த “ஏர் எழுபது” என்ற நூல்
உழவின் பெருமைகளை அழகாக பாடியுள்ளது.

சங்க காலத்தில் மருத நிலம் தொடர்பாக எழுந்த பாடல்கள் உழவு தொழிலின்


அழகான வாழ்வியலை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
முடிவுரை

எமது வாழ்வனைத்தும் உணவின்றி எம்மால் ஒரு நாள் கூட இருப்பது கடினம்


அவ்வகையில் எமது பசிக்கு உணவளிக்கின்ற உன்னதமான தொழிலை
ஆற்றுகின்ற விவசாய பெருமக்களை நாம் போற்ற வேண்டும்.

எந்த தொழில்களை செய்தாலும் விவசாயம் என்ற ஆதார தொழிலை


அனைவரும் செய்ய வேண்டும் அப்போது தான் எமது உலகில் உள்ள அனைவரும்
பசியின்றி மகிழ்வாகவும் நலமாகவும் இங்கே வாழ முடியும்.

You might also like