You are on page 1of 16

படைத்த இறைவனுக்கு வணக்கம்,

கற்ற தமிழுக்கு வணக்கம்,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

எத்திசையும் புகழ் மணக்க, இருந்துவரும் தமிழ் அணங்கின் புகழ் காக்க, எட்டுத்

திக்கிலும் தமிழின் பெருமைக் கொட்டி , முழக்க வந்துள்ள அவைத்தலைவர்

அவர்களே, நீதி வழுவா நீதிமான்களே, ஆசிரியர்கள் பெருந்தகைகளே,

மணிகாப்பாளர் அவர்களே மற்றும் என் சக நண்பர்களே, உங்கள்

அனைவருக்கும் என் முத்தான முத்தமிழ் வணக்கம் உரித்தாகுக. நான் உங்கள்

முன் ஆற்ற வந்த உரையின் தலைப்பு 'சுகாதார வாழ்வு'.

இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது தொற்று


நோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்று
நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். சுகாதாரம் என்பது நம்மை
மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும்
சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம்.தொற்று நோய்களில் இருந்து நம்மை
பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க
வேண்டியது மிக அவசியம்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” மனித வாழ்க்கை என்பது நிலையற்ற


நீர்க்குமிழி போன்றது.வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக வாழ
வேண்டுமாயின் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின்பற்றி சுத்தமான
உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள்
போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன்
ஆரோக்கியமாக வாழ முடியும்.ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக
இருந்தாலும் செல்வந்தராய் இருந்தாலும் அவர் நோய்வாய்ப்பட்டவராயின்
அனைத்தும் வீணாகும்.அதாவது ஒரு மனிதனுடைய நலமான வாழ்வு என்பது
ஆரோக்கியம் தான்.

நாம் சுத்தமாக இல்லாவிடில் இலகுவாக நோயாளியாகி விடுவோம். நல்ல


ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கும் காரணமாக
அமையும். ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோசமான மனிதனின் வெற்றி
ரகசியமாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனால் தான் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். நாம் எம்மையும் சுத்தமாக வைத்து எமது
சூழலையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.சுத்தமான காற்று, உணவு
கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு
போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதனால் மட்டுமே எம்மால்
ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும். சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை
இலகுவில் உண்டாக்கி நம் வாழ்வை இருளாக்கி விடும்.

நாம் சுத்தமாக இருப்பதனால் நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்மை


அடைவார்கள். சுத்தமாக இருப்பதனால் நம்மால் ஆரோக்கியமான மனிதனாக
வாழ முடியும்.ஒரு குடும்பத்தில் ஒருவர் நோயாளியாக இருந்தால் அது
அக்குடும்பத்தையே பாதிக்கும். ஆகவே நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை
நம்பி இருக்கின்ற குடும்பம், பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
போன்றவர்களும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
நமது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் நமக்கு உளரீதியாக மகிழ்ச்சி ஏற்படும்.
சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும் என விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர்.நாம் வாழுமிடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும்
நலமாக வாழலாம்.

இக்காலத்தில் மக்கள் நாகரீக போதைக்கு அடிமையாகி மதுப்பாவனை,


புகைத்தல், போதைப்பழக்கம் போன்றவற்றால் தமது வாழ்வை தாமே சீரழித்து
கொள்கிறார்கள்.போதைகளற்ற நல்ல மனிதர்களை இன்று காண்பது அரிதாகி
விட்டது. இது பாரிய சீரழிவு நிலையாகும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும்
இருப்பதே அனைவருக்கும் அதிக நன்மை தரும்.

ஒரு மனிதன் தினமும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல், ஓடுதல் போன்றனவற்றை


செய்வதோடு ஆரோக்கியமான ஊட்டசத்து மிக்க உணவுகளை உண்பதனதால்
நோயற்ற வாழ்வை வாழ முடியும்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்க கூடிய பொதுவான எதிர்பார்ப்பே தாம்


நலமாக வாழவேண்டும் என்பது தான் நல்வாழ்வு என்ற அடிப்படையான
எண்ணக்கருவையே வளர்ச்சியடைந்த நாடுகள் அடிப்படையாக கொண்டு தமது
நாட்டை வளர்ச்சியடைய செய்கின்றன.

சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம்


சார்ந்தஆரோக்கியம் என்பன தொடர்பானதாகும். ஊட்டசத்துள்ள உணவுகளை
உண்ணுதல், நிம்மதியாக உறங்குதல், மகிழ்ச்சியான குடும்பம், போதுமான
வருவாயை தருகின்ற வேலை, தரமான சுகாதார சேவைகளை வழங்கும்
வைத்தியசாலைகள் இவை அனைத்தும் கிடைக்க பெறுவதே சிறந்த
நல்வாழ்வாகும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆக சிறந்த நல வாழ்வை வழங்குவதே அரசாங்கத்தின்
பணியாகும் ஆனால் நமது சமூகத்தில் இவை எல்லா மக்களுக்கும்
கிடைப்பதில்லை.நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இவர்களது பொருளாதார
நிலை அவர்களது சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.
இருப்பினும் நம்மால் முடிந்தளவிற்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க
வேண்டும்.

மனித வாழ்க்கையே சவாலாகி வரும் இக்கால கட்டத்தில் நாம் விழிப்படைய


வேண்டியது அவசியமாகும்.

மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் குறைவடைந்து வருகிறது. இளம்


வயதிலேயே கொடூரமான நோய்கள் வந்து இறக்கவும் நேரிடுகிறது. இதற்கு
காரணம் நாம் தவறான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதும் சூழலை
மாசடைய செய்வதும் ஆகும்.

நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தான் நம்மால்


சாதிக்கமுடியும் . “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” ஆகவே, நாம்
சுத்தம் சுகாதாரம் போன்றவற்றை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
படைத்த இறைவனுக்கு வணக்கம்,

கற்ற தமிழுக்கு வணக்கம்,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

எத்திசையும் புகழ் மணக்க, இருந்துவரும் தமிழ் அணங்கின் புகழ் காக்க, எட்டுத்

திக்கிலும் தமிழின் பெருமைக் கொட்டி , முழக்க வந்துள்ள அவைத்தலைவர்

அவர்களே, நீதி வழுவா நீதிமான்களே, ஆசிரியர்கள் பெருந்தகைகளே,

மணிகாப்பாளர் அவர்களே மற்றும் என் சக நண்பர்களே, உங்கள்

அனைவருக்கும் என் முத்தான முத்தமிழ் வணக்கம் உரித்தாகுக. நான் உங்கள்

முன் ஆற்ற வந்த உரையின் தலைப்பு 'ஒற்றுமையே உயர்வு'.

ஒற்றுமையோடு கூடிய உயிரினங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி


அடையும். ஒற்றுமையில்லாத உயிரினங்கள் எவ்வளவு வலிமை உடையனவாய்
இருந்தாலும், அவை வாழ்க்கைப் போரில் தோல்வி அடையும். இவ்வுண்மையை
உயிரினங்கள் பற்றிய உண்மையை ஆய்வோர் உணர்வர். வாழ்க்கைப் போரில்
வெற்றிகாண விரும்புவோர் ஒற்றுமையைப் பேணுவாராயின்,
செயற்கரியவற்றைச் செய்து பெரும்புகழ் அடைவார்.

ஒற்றுமை என்னும் எழில் மாளிகையை அன்பு என்னும் அடிப்படை அமைத்தும்,


ஒருவருக்கொருவர் உதவுதல் என்னும் செஞ்சாந்திட் டும், செவ்விய
சிந்தனையென்னும் செங்கற்களை அடுக்கியும் எழுப்ப வேண்டும்
அப்பொழுதுதான் ஒற்றுமை உருவாகும். மற்றும் பிறர் குற்றங்களை மன்னித்தல்,
கோபங்கொள்ளாமல் பொறுமையுடன் வாழ்தல் ஆகியவை அம்மாளிகையில்
ஒளிவீசவல்ல ஒற்றுமை என்னும் சுடர்விளக்கின் உறுப்புக்களாகும்.

ஒற்றுமை வாழ்வு என்னும் விளக்கு ஒளிவீச வேண்டுமானால், அன்பு என்னும்


எண்ணெய் வேண்டும். அறம் என்னும் திரி வேண்டும். அளவோடு
செயல்படுதல் என்னும் காற்று வேண்டும். அப்பொழுது வாழ்வாம் விளக்கு ஒளி
வீசுவதைக் காணமுடியும். எனவே, வாழ்க்கையாகிய விளக்கு ஒளிவீச
வேண்டுமானால், கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும்.

இல்வாழ்வின் ஒற்றுமையே ஊரின் ஒற்றுமையாய் நாட்டின் ஒற்றுமையாய்


உலகின் ஒற்றுமையாய் வளர்ச்சி அடையும். அவ்வளர்ச்சியிலே கல்வியின்
மாண்பைக் காணலாம்; கலையின் நலத்தைக் காணலாம்; செல்வத்தின்
செழிப்பைக் காணலாம்; இன்பத்தின் எழிலைக் காணலாம்; வீரத்தின்
பொலிவைக் காணலாம்; வெற்றியின் விளைவைக் காணலாம்.

சின்னஞ்சிறு மழைத்துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் பொங்கிவரும் பெரிய


ஆறு உருவாகிறது. மெல்லிய மயிலிறகுகளை எல்லாம் மொத்தமாக வண்டியில்
மேலும் மேலும் ஏற்றினால் அவை வலிய வண்டியின் இரும்பு அச்சையும்
முறிக்கின்றது. சின்னஞ்சிறு மீன்கள் எல்லாம் ஒன்று சேரக் குவிந்தால் பெரிய
கப்பலையே தடுத்து நிறுத்தி விடுகின்றன. ஆதலின், ஒற்றுமையின் வலிமையை
ஏளனமாகக் கருதாதீர். அஃது மாபெரும் ஆற்றலை உடையது. ஏழைகள் எல்லாம்
ஒன்றுபட்டு எதிர்த்த பொழுது கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சி அமைப்புக்கள்
அழிந்தன வன்றோ?.

ஒற்றுமை யின்மையால் விளைந்த கேடுகள் மிகப்பலவாகும். பண்டைத் தமிழ்


மன்னர்கள் அழிந்ததற்குக் காரணம் யாது? ஒற்றுமை இன்மையால் அல்லவா?
மாபெரும் இந்தியா சிறிய பிரிட்டனிடம் சிக்கியதற்கு இதுவன்றோ காரணம்.
தொழில் வளமும் பொருள் வளமும் ஏன் நசுங்கின? ஒற்றுமையோடு உழைக்கும்
மனப்பாண்மை இல்லை. ஒற்றுமையோடு பாடுபடும் செயல்திறன் இல்லை.
எனவே, துன்பம் மிகுந்தது. இன்பம் குறைந்தது.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும்


தாழ்வு'' என்னும் பாரதி பாடல் நமக்கு ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும்
காவியமாகத் திகழ்கின்றது. ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்ற உயரிய
குறிக்கோள் உலக ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் திருமந்திரமாய் நிலவுகின்றது,
வான்புகழ் வள்ளுவர் வழங்கிய திருக்குறள் ஒற்றுமையை வளர்க்கும்
தாயுள்ளமாய்த் தொண்டு புரிகின்றது.
படைத்த இறைவனுக்கு வணக்கம்,

கற்ற தமிழுக்கு வணக்கம்,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

எத்திசையும் புகழ் மணக்க, இருந்துவரும் தமிழ் அணங்கின் புகழ் காக்க, எட்டுத்

திக்கிலும் தமிழின் பெருமைக் கொட்டி , முழக்க வந்துள்ள அவைத்தலைவர்

அவர்களே, நீதி வழுவா நீதிமான்களே, ஆசிரியர்கள் பெருந்தகைகளே,

மணிகாப்பாளர் அவர்களே மற்றும் என் சக நண்பர்களே, உங்கள்

அனைவருக்கும் என் முத்தான முத்தமிழ் வணக்கம் உரித்தாகுக. நான் உங்கள்

முன் ஆற்ற வந்த உரையின் தலைப்பு 'ஆரோக்கியமான வாழ்க்கை'.

“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது கூன் குறுடு செவிடு நீங்கி பிறத்தல்

அதனிலும் அரிது” என்று பாடுகிறார் ஒளவையார்.அவ்வாறே நோய்நொடிகள்


இன்றி இக்காலத்தில் வாழ்வது அரிதிலும் அரிதாகி விட்டது. இக்காலத்தில்
மனிதன் எவ்வாறு நாகரிக மாற்றத்துக்குள்ளாகி ஆடம்பரமாக வாழ்ந்தாலும் கூட
நோயற்ற வாழ்வை வாழமுடியவில்லை.இளம் வயதிலேயே கொடூரமான
நோய்களுக்காளாகி இறந்து போகின்றவர்கள் அதிகமாகும்.
“உடலினை உறுதி செய்” என்பது ஒளவையார் வாக்கு நாம் உண்கின்ற உணவு
குடிக்கின்ற நீர் வாழுகின்ற சூழல் சுத்தமாக இருந்தால் நோய்கள் எம்மை
தீண்டாது.

இன்றைக்கு அந்த நிலமை மாறியிருக்கிறது. உண்ணும் உணவு நஞ்சாகிறது குடிநீர்


மாசடைந்து வருகிறது. சூழல் மனிதர்கள் வாழமுடியாத அளவிற்கு
மாறிப்போயிருக்கிறது. இதுவே மனிதனின் ஆரோக்கிய சீர்கேட்டுக்கு காரணம்
என்பதை மனிதன் இன்னும் உணரவில்லை.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையென்பது மக்களுடைய பழக்கவழக்கத்தில்

தங்கியுள்ளது. “உணவே மருந்து” என்று கூறுவார்கள். நாம் எடுத்து கொள்கின்ற


உணவே எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.

உடலுக்கு கேடு விளைவிக்காத காபோவைதரேற், புரதம், கொழுப்பு,


விற்றமின்கள் போன்றன உள்ளடக்கிய நல்ல உணவை எடுத்து கொள்வதால்
அநேகமான நோய்களை தடுக்கலாம்.

குறித்த நேரத்தில் உணவுண்ணாமையால் “அல்சர்”, அதிக கொழுப்பு உணவை

உண்பதால் “கொலஸ்ரோல்”, அதிக சீனி பண்டங்களால் “நீரிழிவு”, அதிக


உப்பால் உயர் குருதியமுக்கம், நஞ்ஞான உணவை உண்பதால் புற்றுநோய் என
தவறான உணவு பழக்கங்களாலேயே நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன.

மேலும் தூய்மையற்ற குடிநீரால் கொலரா, வாந்தபேதி, வயிற்றோட்டம்,


சிறுநீரக பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. சுத்தமான குடிநீரை எடுத்து கொள்வதால்
இப்பாதிப்புக்களில் இருந்து விடுபடமுடியும்.

இயற்கையான சேதன முறையில் பெறப்படும் நஞ்சற்ற காய்கறிகள், மாசடையாத


சுத்தமான நீர், மாசடையாத இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை எம்மை
என்றைக்கும் நோய் வராமல் காக்கும்.நோயற்ற வாழ்வு என்பது ஆரோக்கியமான
உணவுகளில் தங்கியுள்ளது.

அன்றைய மனிதன் இயற்கையோடு வாழ்ந்தான்; இயற்கை முறைகளில் பயிர்


செய்தான்; இரசாயனம் கலக்காத இயற்கை பசளைகளை பயன்படுத்தினான்.
மனிதனை பாதிக்காத கிருமிநாசினிகளை பயன்படுத்தினான்.

இதனால் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தான் ஆறுகளையும் காடுகளையும்


பாதுகாத்தான் நிலத்தடி நீர் சுத்தமாக இருந்தது. இயந்திரங்களின் துணையின்றி
தானே உடலுழைப்பை பயன்படுத்தினான். உடலும் ஆரோக்கியமாக இருந்தது.

இதனை நம்மாழ்வார் இயற்கை வாழ்க்கை முறைக்கு திரும்பினால் தான்


மனிதகுலம் நோயற்ற வாழ்வை வாழும் என்று கூறிசென்றார்.இங்கே மனிதர்கள்
மட்டுமன்றி பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள் இவையும்
வாழவேண்டும் வாழ்ந்தால் தான் இயற்கை சமநிலையாக இருக்கும். இந்நிலமை
அன்று சீராக இருந்தது. இதனால் தான் எமது மூதாதையர் ஆரோக்கியமாக
வாழ்ந்தனர்.

இன்றைக்கு உலகம் மாறிவிட்டது. கதிர்வீச்சுக்கள் உலகமெங்கிலும் பரந்து


விட்டது. இரசாயனங்கள் மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன.
பச்சைவீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தையும் பூமியையும் வெப்பமடைய
செய்கின்றன.

பழமையான இயற்கை உணவு முறை மாறிவிட்டது. மண்பானைகளும் விறகு


அடுப்புக்களும், அம்மிகள், உரல் உலக்கைகள் மறக்கப்பட்டு
விட்டன.பழமையான இயற்கை உணவு முறைகள் இன்று மாறி நட்சத்திர உணவு
விடுதிகள், உல்லாச வாழ்க்கை மற்றும் துரித உணவு கலாச்சாரத்துக்கு உலகம்
மாறிவிட்டது.இளந்தலைமுறையினரும் அடிமையாக்கப்பட்டு விட்டனர். நாமும்
விதிவிலக்கல்ல அக்கலாச்சாரத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டோம்.
சுவை எனும் பெயரில் அதிக உப்பு அதிக கொழுப்பு அதிக சீனி மிக்க
ஆரோக்கியமற்ற உணவுகளை உண்கின்றோம்.இது வியாபார உலகமாக மாறி
விட்டது எனவே இயற்கை முறைகளை உலகம் ஏற்கும் வரை இயற்கை வாழ்க்கை
முறையும் நோயற்ற வாழ்வும் என்பது தொடர்கதை தான்.

இன்றைக்கு உலகம் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளது என்னதான் வளர்ச்சி


கண்டாலும் மனிதர்கள் ஆரோக்கியமின்றி இறந்து போகிறார்கள். குழந்தைகளும்
அடுத்த தலைமுறையும் மோசமான பாதிப்புக்களை எதிர்கொள்ள
போகிறது.ஆகவே நாம் இப்போதாவது விழிப்படைந்து கொள்ள வேண்டும்.

“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்று கூறுவார்கள் .எனவே நாம்


இங்கு ஆரோக்கியமாக வாழ நோயற்ற வாழ்விற்காக இயற்கையை பாதுகாத்து
இயற்கை உணவுமுறைகளுக்கு மாறவேண்டும்.
படைத்த இறைவனுக்கு வணக்கம்,

கற்ற தமிழுக்கு வணக்கம்,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

எத்திசையும் புகழ் மணக்க, இருந்துவரும் தமிழ் அணங்கின் புகழ் காக்க, எட்டுத்

திக்கிலும் தமிழின் பெருமைக் கொட்டி , முழக்க வந்துள்ள அவைத்தலைவர்

அவர்களே, நீதி வழுவா நீதிமான்களே, ஆசிரியர்கள் பெருந்தகைகளே,

மணிகாப்பாளர் அவர்களே மற்றும் என் சக நண்பர்களே, உங்கள்

அனைவருக்கும் என் முத்தான முத்தமிழ் வணக்கம் உரித்தாகுக. நான் உங்கள்

முன் ஆற்ற வந்த உரையின் தலைப்பு 'உடல் நலம் காப்போம்'.


மனித இனத்தின் நிலைத்திருத்தலிற்கு மிகவும் அவசியமாகவுள்ள மனித
உடலானது, ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பல்வேறு உடல் கூற்று
கட்டமைப்புக்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும்.

ஒரு மனிதன் நீண்ட ஆயுளைப் பெற்று இவ்வுலகில் வாழ வேண்டுமாயின், மனித


உடலின் சீரான செயற்பாடுகளில் மிகவும் அக்கறையுடன் செயற்படுதல்
வேண்டும்.

உடல்நலம் பேணும் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை


கடைப்பிடுப்பதோடு, உளத்திருப்தியோடு கூடிய தெளிந்த நீரோட்டம் போன்ற
அமைதியான வாழ்க்கையை வாழுதல் அவசியமாகும்.

இக்கட்டுரையில் உடல் நலம் பற்றிய சிறப்புகள், உடல் நலம் காப்பதன்


அவசியம், உடல் நலம் காக்கும் முறைகள் போன்றவற்றை நோக்கலாம்.

மனித உடலின் சிறப்புக்கள்

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற ஒளவையாரின் வாக்கிற்கமைய


இந்த உலகத்தில் காணப்படும் அனைத்து உயிர்ப் படைப்புக்களையும் விட
மனிதராய் பிறத்தலே மேன்மையானதாகக் கருதப்படுகின்றது.

மனிதன் அவன் படைப்பியல்புகளால் உயர்ந்து விளங்குவதோடு, ஐந்தறிவு


படைத்த உயிரினங்களை விட, ஆறறிவு கொண்ட மனிதன் போற்றுதலிற்கு
உரியவனாகின்றான்.

மனித உடலானது மரபணுக்கள் திசுக்கள், எலும்புத் தொகுதிகள், தசைப்


பகுதிகள் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உடலிலும் தனித்தன்மையுடன் கூடிய நுண்ணிய கலங்களினால்


உருவாக்கப்பட்ட மூளை, உடல் முழுவடும் இரத்தத்தைப் பாய்ச்சும் இதயம்
மற்றும் சுவாச சுற்றோட்டத்திற்கு வழிவகுக்கும் நுரையீரல் ஆகியவற்றைக்
கொண்டமைந்துள்ளது.

இவ் உடலியல் செயற்பாடுகள் திறம்பட இடம்பெறுவதற்கு சீரான நலம்


பேணலை கடைப்பிடித்தல் அவசியமாகும்.

உடல் நலம் பாதிக்கப்படல்

இவ்வுலகில் வாழ்கின்ற மக்களில் 75 சதவீதமானோர் ஏதேனும் ஒரு நோயால்


அவதிப்படுவோராகக் காணப்படுகின்றனர்.
மனித உடலின் பகுதிகள் மற்றும் உள ரீதியான நிலைமைகளில் ஏற்படும் எதிரான
தாக்கங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றது.

உடலின் புற ஆரோக்கியமானது, நவீன உலகின் விரைவான


வாழ்க்கையோட்டத்தாலும், முறையற்ற உணவுப் பழக்கவழக்கத்தாலும்
பாதிப்படைகின்றது.

அதீத மனஅழுத்தம் மற்றும் ஆகக்கூடிய வேலைப்பழுவால் ஏற்படும்


மனச்சோர்வினால் உள ஆரோக்கியம் அற்றுப்போகின்றது.

மனித ஆரோக்கியம் குறைவடையும் போது பல்வேறுபட்ட நோய்கள் உருவாகி


மனித ஆயுளை குறைவடையச் செய்கின்றன.

உடல் நலம் பேணுதலின் அவசியம்

தற்காலத்தில் உடல் நலத்தை பேணுவதில் அக்கறையோடு, இயற்கையோடு


இணைந்த வாழ்வு வாழ்தலில் ஈடுபாடுடையவர்களாக மனிதர்கள் மாற்றமடைந்து
வரும் போக்கினை அவதானிக்கலாம்.

இதற்கான பிரதான காரணம் உடல் நலம் பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு


மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகும்.

மனிதர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கு


உடலானது வலிமையாக இருத்தல் அவசியமாகும்.

உடலியக்கமானது சீராக இடம் பெற்றால் மாத்திரமே மனிதர்களால் மகிழ்ச்சியாக


வாழமுடியும்.

அத்துடன் இளமைக் காலத்தில் கடினமாக ஓடி உழைத்து, முறையற்ற உணவுப்


பழக்கங்களைப் பேணிவிட்டு முதுமையில் அவதிப்படுவதனை விட சிறுவயது
தொடக்கம் உடல் ஆரோக்கியத்தை பேணி நலம்பெற்று வாழ்தல் நன்று.

உடல் நலம் பேணும் முறைகள்

உடல் நலத்தை பேணுவதற்கு பல்வேறு முறைகள் காணப்படுகின்ற போதும், மிக


முக்கியமான விடயமாகக் காணப்படுவது மனித அகநலனை பேணுவதாகும்.

அக நலனை பேணுவதானது தேவையற்ற மனஅழுத்தங்கள், ஓய்வற்ற


வேலைப்பழு மற்றும் சிக்கல்கள் நிறைந்த எண்ணவோட்டங்களை தவிர்ப்பதோடு
மனர்ச்சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளிலிருந்து தள்ளி இருத்தலாகும்.

உள ரீதியான மாற்றங்களானவை உடலின் செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தக்


கூடியவாக காணப்படுவதனால் மனமகிழ்ச்சி அவசியமாகும்.
சரியான தூக்கப் பழக்கம், யோகாசனம் செய்தல், தேவையானளவு ஓய்வு மற்றும்
இறைவழிபாடு போன்றன உள நலனை ஏற்படுத்தும்.

புற ரீதியான ஆரோக்கியமானது சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும்


வாழ்க்கை முறைமையிலும் தங்கியுள்ளது.

துரித உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம்


அடங்கிய உணவுகளை உட்கொள்வதோடு, நாம் வாழும் சூழலை நமக்கு பிடித்த
வகையில் மாற்றிக்கொள்ளல் அவசியமாகும்.

நோயற்ற வாழ்வு

“நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக


வாழ்வதே ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் பெறும் சிறந்த செல்வமாகும்.

பிற செல்வங்களால் மனிதனின் ஆரோக்கியத்தை வாங்கி விட இயலாது.


வரும்முன் காப்போம் என்ற கூற்றிக்கிணங்க நோய்கள் நம்மை அண்டும் முன்பே
உடல் நலத்தை பேண வேண்டும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்”


அதாவது உண்ட உணவு செரித்தபின் அடுத்தவேளை உணவை உண்பதே நோய்
வராமல் தடுப்பதற்கான சிறந்த வழியென வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

நோயற்று வாழ்வதே உடல் ஆரோக்கியத்தின் மிக முக்கிய இலக்கு ஆகும்.

முடிவுரை

உடல் நலனை மட்டும் பேணாது உள ரீதியிரான நலனையும் பேணுதலே மனித


ஆரோக்கியத்தின் ஆரம்ப படி நிலையாகும்.

உடலிற்கு தீங்கு விளைவிக்கும் மாசுக்கள் நிறைந்த இவ்வுலகில் உடல் நலனைக்


காத்து மனமகிழ்ச்சியைப் பேணி நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வோமாக.

You might also like