You are on page 1of 2

அவைத்தலைவர் அவர்களே, நீதி வழுவா நீதிபதிகளே.

மணிக்காப்பாளர்
அவர்களே, மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய தலைமையாசிரியர்களே,
அறிவுக்கும் ஆற்றலுக்கும் துணை நிற்கும் ஆசிரிய பெருந்தகைகளே, என்னுடன்
போட்டியிட வந்திருக்கும் சகத் தோழர், தோழிகளே மகிழ்ச்சி மிக்க இவ்வினிய
பொழுதினில் என் முத்தான முத்தமிழ் வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன். தங்கள்
முன்னிலையில் நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு சுகாதாரம் என்பதே
ஆகும்.

சபையோரே,
மனிதனானவன் உடல் மற்றும் உள ரீதியாக நலமாக வாழ வேண்டும். நலமான
வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல
வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் ஆகும். சுகாதாரம் அல்லது சுத்தம்
என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும்
பழக்க வழக்கங்களாகும். அது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும்
மனம் சார்ந்த ஆரோக்கியம் தொடர்பானதாகும். முதன் முதலில் 18 ம் ,19 ம்
நூற்றாண்டுகளில் ஐரோப்பா போன்ற நாடுகளில் நிலவிய சுகாதாரமற்ற
நிலைமை காரணமாகவே சுத்தம் பற்றிய கோட்பாட்டு முன்வைக்கப்பட்டது.
ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால்
அவர்களின் வாழ்வில் சுகாதாரம் என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது.
ஆனால் இன்றைய நவீன காலக்கட்டகத்தில் சிறந்த சுகாதாரமானது குறைந்து
கொண்டே வருகின்றது. இதற்குக் காரணம் இன்றைய கால மனிதர்களின்
செயற்கையே ஆகும்.

அவையினரே,
நற்சுகாதாரப் பழக்கமானது சீர்குலைவதற்குக் காரணம் என்ன என்று
சொல்லுங்கள் பார்ப்போம்? ஆம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே. உடல்
ஆரோக்கியம்தான் மற்ற எல்லா செல்வங்களை விடவும் சிறந்தது. நாம் சுத்தமான
உணவு, தூய குடிநீர், சுகாதாரமான சூழ்நிலை, சிறந்த நலச்சேவைகள்
போன்றவற்றை ஒரு மனிதன் அடையும் போது தான் அவன் ஆரோக்கியமாக
வாழ முடியும். அதாவது தற்காலத்தில் மனிதன் தன் தேவைகளை துரிதமாகப்
பெற்றுக் கொள்வதைப்போல இன்றைய உணவு முறையும் துரிதமாகவே
அமைந்துள்ளது. ஆரோக்கியம் என்பது மனிதனின் கருவறை தொடக்கம்
கல்லறை வரை பங்களிப்புச் செய்யும் ஒரு காரணியாகக் காணப்படுகின்றது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”.நாம் உட்கொள்ளும் உணவானது
ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல்
அவசியமானதாகும்.இதே போன்று நலமான வாழ்விற்கு தூக்கமும் ஓய்வும் மிக
அவசியமாகும். இரவுத் தூக்கத்தை பகல் தூக்கத்தால் ஈடு செய்ய
முடியாது.இவ்வறான விடயங்களை கவனத்திற் கொள்லாமல் இருந்தால்
மனநோய்களும் ஏற்படும் என்று ஆய்வார்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சுகாதாரமான வாழ்வை அமைத்துக்கொள்ள சுத்தமாக இருத்தல் அவசியமாகும்.
அதற்கு முக்கியமாக கைகளை கழுவுவதை ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்கு கீழுள்ள சுமார்
இருபது இலட்சம் குழந்தைகள் நியுமோனியா ,வயிற்றுப்போக்கு போன்ற
நோய்கள் மூலம் இறந்து போவதாக ஆய்வுகள் விபரிக்கின்றன. கைகளை
ஒழுங்காக கழுவுவதன் மூலம் இபோலா உயிர் கொல்லி நோய்கள்
பரவுவதையும் தடுக்கலாம். எனவே, கை கழுவுதலை நோய்கட்டுப்பாடு மற்றும்
நோய்த் தடுப்பிற்கான வழிமுறைகளாக அமெரிக்க மையங்கள் வலியுறுத்தி
வருகின்றன. இதைத்தான் , நம் முன்னோர்கள் ‘சுத்தம் சோறு போடும் சுகாதாரம்
வீட்டை காக்கும் ‘ என்று கூறியுள்ளனர்.

அன்புசால் சபையோரே,
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற ஔவையின் வாக்குப்படி
இறைவன் நமக்குக் கொடுத்த இந்த மேன்மையான மானுட வாழ்வினை
வாழ்நாள் முழுவதும் சுகாதாரமான வாழ்க்கை நடைமுறைகளை கடைப்பிடித்து
நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். "சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரையலாம்” என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஆரோக்கியமாக
இருந்தால் தான் நம்மால் எதனையும் சாதிக்கமுடியும்.

எனவே,
சுத்தம் சுகாதாரம் பேணுவோம் !
ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.!
ஆரோக்கியமான விவேகமிக்க வலுமிக்க சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்!
அனைவரும் இன்புற்று வாழ்வோம்!

நன்றி, வணக்கம்.

You might also like