You are on page 1of 3

சித்த மருத்துவத்தின் ஆரம்பம்

இந்தியாவில் சித்த மருத்துவமானது மிகப்பழைமையான மருத்துவ முறையாகும். சித்தா என்பது மருத்துவத்தில்


துறவிகளான சித்தர்கள் முயன்று, ஆராய்நது
் செயல்படுத்தி வெற்றி பெற்றதால் ‘சித்தா’ எனப்பெயர் பெற்றது.
பதினெட்டு சித்தர்கள் இந்த சித்தமருத்துவத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தார்கள். சித்த இலக்கியம்,
அதிகமாக தமிழ்பேசும் இடங்களான இந்திய நாட்டிலும், வெளிநாடுகளிலும், நடைமுறையில் உள்ளது. சித்த
முறையானது இயற்கையான மருத்துவ முறையை சார்ந்தது.
சித்தாவின் வரலாறு

மனித இனம், கிழக்கிலே குறிப்பாக இந்தியாவிலே மிகவும் வளம் நிறைந்த இடத்திலே தோன்றியது. இங்கு மனித
இனத்தின் கலாசாரம் பண்பாடு உருவானது. இதன் மூலமாக மனித கலாசாரம், நாகரீகம் முதலானவை
இந்தியாவில் இருந்து பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்திய வரலாற்று கூற்று படி ஆரியர்கள்
வருவதற்கு முன்பே திராவிடர்கள் இந்தியாவில் இருந்தார்கள். அதிலும் தமிழர்கள் அதிகம் காணப்பட்டார்கள்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றெல்லா கலாசாரத்தை விட மிக வேகமாக வளர்ந்தோங்கியது. இந்தியாவின்
மொழிகள் இரண்டு பிரிவுகளாக இருந்தது. வடக்கே சமஸ்கிருதமும், தெற்கே திராவிட மொழிகளும் பிரதான
மொழிகளாக இருந்தது. மருத்துவ அறிவியல் மனிதனின் நீடித்த சுக வாழ்விற்கு அடிப்படை கூறாக
நாகரீகத்துடன் ஒன்றியிருந்தது. இதனால் மருத்துவ முறைகளும் மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து
வருகிறது.
சித்த முறைகள் தெற்கேயும், ஆயுர்வேதம் வடக்கேயும் வளர்ச்சி பெற்றது. இந்த மருத்துவ முறைகளுக்கு தனி
மனிதனின் பெயரை சூட்டாமல், மனித குலத்தை தோற்றுவித்தவரின் பெயரையே வைத்தனர். பாரம்பரிய
கூற்றுகளின் படி சித்த முறைகள் முதற்கடவுளான சிவனிடம் இருந்து பார்வதிக்கும், பின்பு நந்தி தேவருக்கும்,
பின்பு சித்தர்களுக்கும் கைமாறியது. ஆதி காலத்தில் சித்தர்கள் பெரும் அறிவியல் ஆராய்ச்சியளர்களாக
திகழ்ந்தார்கள்.
பாரம்பரிய வழிமுறைபடி, சித்த மருத்துவ முறையானது அகத்தியர் என்னும் சித்தரின் வழி தோன்றலே ஆகும்.
இன்றும் பல புத்தகங்களில் அகத்தியரின் மருத்துவ முறைகள் காணப்படுகிறது,அது இன்றைய மருத்துவர்களால்
பயன்படுத்தபடுகின்றது.
சித்தாவின் அடிப்படை
சித்த கோட்பாடுகள் மற்றும் முறைகள் ஆயுர்வேத முறைகளை ஒத்திருக்கும். வேதியல் கூற்றுபடி, நமது உடற்
கூறுகள் இயற்கையை சார்ந்து இருக்கும். ஆயுர்வேதாவில் ஏற்றுகொள்ளப்பட்டது போல், உடலானது ஐந்து
அடிப்படை தாதுக்களால் ஆனது. அவை நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகும். அதுபோல் உடல்
எடுத்து கொள்ளும் மருந்தும், உணவும் மேற்சொல்லப்பட்ட ஐந்து அடிப்படை கூறுகளால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த ஐந்து கூறுகளின் கலவைகளின் அளவுகள் வேறுபட்டு மருத்துவ ரீதியாக பலனளிக்கும். ஆயுர்வேதாவின்
மருத்துவ கருத்துகளைப் போல, சித்த முறையிலும் பல பிரிவுகள் உள்ளதாக கருதப்படுகிறது. ஏழு அடிப்படை உடல்
மூலக்கூறுகள், மற்றும் கழிவு பொருட்களாகிய மலம், சிறுநீர், வியர்வை ஆகும். மனிதனுக்கு அடிப்படையான
ஆதாரம், உணவு ஆகும் இதுவே உடல் கூறுகளில் திசுக்களை வளர்க்கும். ஆகாத கழிவு பொருட்களாகவும்
உருமாறும். மேற்கன்ட செயல்பாடுகளில் உண்டான சமநிலை உடலின் நலத்தை குறிக்கிறது. இந்த சமநிலை
குறைந்தால், தவறினால், சமமற்ற நிலையால் உடலில் நோய்கள் உருவாகும். இந்த முறையானது,வாழ்ககை
் யில்
இழந்த நிலை மீட்க சமநிலை ஆரோக்கியத்தை பேண வேண்டும்.இந்த சம நிலையை, ஆரோக்கியத்தை பேண
வேண்டும். இந்த சமநிலையை அடைவதற்கு மருத்துவமும்-தியானமும் துணை செய்கிறது.

சித்தாவில் வேதியியல்

சித்த முறையில் வேதியியல் பெரும்பங்காற்றி வருகிறது. மருந்துகள் தயாரிப்பதற்கும் அடிப்படை உலோகங்களை


தங்கமாக மாற்றுவதற்கும் வேதியியல் உதவி புரிகிறது,செடிகள் மற்றும் உலோகங்கள், கனிமங்கள்
ஆகியவைகளின் தன்மைகள் முழுவதும் இந்த துறையில் ஆராயப்படுகின்றன. சித்தர்கள், இவ்வகையான
வேதியியல் மாற்றங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தனர். காய்ச்சி வடித்தல், ஆவியாக்குதல், கலவை செய்தல்,
உருக்கி கலத்தல், புளிக்க வைத்தல், பொங்க வைத்தல் முதலான வேதி முறைகளை கையாண்டார்கள், தங்கம்
பிரித்தெடுத்தல், சுத்தப்படுத்துதல், நீர்மநிலையாக்குதல் ஆகிய முறைகளையும் அவர்கள பயன்படுத்தினார்கள்.
தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தமாக்கும் முறைகளை கையாண்ட அரேபியர்களுக்கு, பல
நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே,சித்தர்கள் இந்த நுணுக்கங்களை தெரிந்து வைத்திருந்தனர்.
மருந்து தயாரிப்பில் பல யுக்திகள் கையாளப்பட்டது. உதாரணமாக, கொதித்தல், கரைத்தல், வடிகட்டுதல், படியச்
செய்தல், வேதி பொருட்களை சேர்த்தல் மற்றும் ஒருசில ரகசிய முறைகளும் உண்டு. உதாரணமாக, நெருப்பில்
எளிதாக வாயுநிலையை அடையக்கூடிய பாதரசம், கந்தகம், அர்செனிக், வெர்மில்லியன் முதலியவைகளை
வினைபுரியாமல் செய்வது இன்றும் வியப்படையச் செய்கின்றது.
சித்தாவின் பலம்

ஆபத்தான அவசர நல பிரச்சனைகளுக்கு உடனடி சிகிச்சை சேவையைத் தவிர, மற்ற எல்லாவிதமான


வியாதிகளையும் சித்த மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடிகிறது. சோரியாசிஸ், சிறுநீரக தொல்லைகள்,
தோல் வியாதிகள், கல்லீரல் மற்றும் வயிறு பிரச்சனைகள், பொதுவான தன்மை, ஒவ்வாமை, சாதாரண காய்ச்சல்
முதலியவைகளுக்கு தேவையான அளவு மருத்துவ வசதி பயன்பாட்டில் உள்ளது.
சித்தாவில் நோய் கண்டறிதலும், வைத்தியமும்

முதலில் நோய்க்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. நாடி, சிறுநீர், கண்கள், வாய், குரல், தோலின் நிறம்,
நாக்கு ஜீரண முறைகளின் போக்கு முதலானவை ஆராயப்படுகின்றது. சிறுநீர் தன்மையை கண்டறிவதற்காக,
அதன் நிறம், மணம், அடர்த்தியான, அளவு, மேலும் எண்ணெய் போன்ற வழ்வழப்பான தன்மை ஆகியவை
கவனத்தில் கொள்ளப்படுகிறது. நோயின் எல்லா அம்சங்களையும்,அறிந்து நோயை கண்டுபிடித்து,சிகிச்சை
அளிப்பதன் மூலம்,நோய்களில் இருந்து விடுபட்டு நலமாக இருக்கலாம்.
சித்த முறையானது நோயை குணப்படுத்த மட்டுமே செயல்படாமல் அந்த நோயாளியின் சுற்றுப்புறம், வயது,
பாலினம், வகுப்பு, பழக்கவழக்கங்கள், மனநிலை, தங்குமிடம், உணவு மற்றும் கட்டுபாடு, தோற்றம்
ஆகியவைகளையும் கருத்தில் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனால் நோயின் தன்மை. குறைகிறது.
நோயாளியின் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்படுத்துகிறது.
சித்த முறை உடல்நலத்தில்,பாதிக்கப்பட்ட,பிரச்சனைக்குட்பட்ட பெண்களின் நலவாழ்விற்காக நிறையவழிகள்
வைத்துள்ளது. பெண்களுக்கு உரிய பிரச்சனைகளை கணக்கிட்டு இதன் மூலம் நல் வாழ்ககை
் நடத்துவதற்கு
உதவுகிறது. பெண் குழந்தையாக பிறந்த தினத்தன்றே பெண்களின் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டுகிறது.முதல்
மூன்று மாதத்திற்கு தாய்ப்பாலைமட்டுமே பரிந்துரை செய்கின்றது. உணவும் மருந்தும் ஒன்றே என்பது சித்த
மருத்துவத்தின் அடிப்படையாகும்.ஆகவே, தாய்ப்பாலூட்டும் காலத்தில் போதிய ஆரோக்கிய நிலை நீடிப்பதற்கு
தாய்மார்கள்,இரும்பு மற்றும் புரதச் சத்துள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த
சத்தான உணவு,தாய்,குழந்தை இருவருக்குமே சேருகிறது தாய்மார்கள் இரத்தசோகை தாக்குதலிருந்து விடுபட
15 நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெறவேண்டும்.
வாலிப வயதை எட்டிய உடன், அவளின் பிறப்பு உறுப்புகளின் வலிமை சேர்ப்பதற்கு சித்த முறையில் பல்வேறு
சிகிச்சைகள் உள்ளது ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க உதவுவதுமல்லாமல் ஹார்மோன்களை
சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
சித்த மருத்துவத்தில் சிறப்பாக, நாள்பட்ட கல்லீரல், தோல் வியாதிகள், எலும்பு தொல்லைகள், இரத்த சோகை,
மூலம்,இரத்த சோகை மற்றும் அல்சர் நோய்களை எளிதில் குணப்படுத்த முடியும். மருந்துகலவைகளில் பாதரசம்,
வெள்ளி, ஆர்சனிக், ஈயம் மற்றும் கந்தகம் முதலியவை மற்றும் சல்பர் ஆகியவை பால்வினை நோய்களை
குணமாக்க பேருதவி புரிகின்றது. எச்ஐவி/எய்ட்ஸ் ஆகிய நோய்களுக்கும் சித்த வைத்தியத்தில் சிகிச்சை
முறையானது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்க்காக அதிக ஆராய்ச்சிகளும் மேற்கக
் ொள்ளப்படுகிறது.
சித்தாவிற்கான தேசிய கல்விநிறுவனம்
சித்தாவிற்க்கான தேசிய கல்விநிறுவனம், சென்னையில், ஆயுஷ் துறையின் கீழ், ஆரோக்கியம் மற்றும் குடும்ப
நல அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படுகிறது. இது 14.78 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இது
மாணவர்களுக்கு சித்தாவில் முதுகலை பட்டப் படிப்பிற்கு ஊக்குவிக்கின்றது. இந்த கலாசாலை இந்திய அரசும்,
தமிழக அரசும் இணைந்து செயல்படுத்துகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் 46 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவம்(பொது மருத்துவம்),
குணப்பாடம்(பார்மகாலஜி), சிறப்பு மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்நாடல் மற்றும் நஞ்சு & மருத்துவ நீதி
நூல் முதலிய பாடங்களை அடிப்படையாக கொண்டு முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது.இந்த கல்விநிறுவனம்
சென்னையிலுள்ள MGR மருத்துவ பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

You might also like