Professional Documents
Culture Documents
மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா
மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா
மருத்துவத்துடன் தொடர்புடைய,
பண்டைய கிரேக்கச் சின்னமான
ஒற்றைப் பாம்புடன் கூடிய
அஸ்கிளெப்பியஸ் கோல்.
மருத்துவத் தொடர்புள்ள பல
தற்காலக் கழகங்களும்,
நிறுவனங்களும்
அஸ்கிளெப்பியஸ் கோலைத்
தமது சின்னங்களில்
சேர்த்துள்ளன.
மருத்துவர் நோயாளிக்கு
மருத்துவம் செய்கிறார். லூவர்
அருங்காட்சியகம், பாரிஸ்,
பிரான்ஸ்.
வரலாறு
முதன்மைக் கட்டுரை:
மருத்துவத்துறையின் வரலாறு
பண்டைய மருத்துவ முறை
வரலாற்றுக்கு முந்திய கால
மருத்துவத்தில் தாவரங்கள், விலங்கு
உறுப்புக்கள், கனிமங்கள்
அடங்கியிருந்தன. பல வேளைகளில்
இவை சடங்குகளோடு மந்திர சக்தி
வாய்ந்த பொருள்களாகப்
பயன்படுத்தப்பட்டன. பெயர் பெற்ற
ஆன்மீக முறைகளில், ஆன்மவாதம்
(animism), ஆன்மீகவாதம் (spiritualism),
ஆவித்தொடர்பு (shamanism),
குறிசொல்லல் (divination) என்பவை
அடங்கும். மருத்துவ மானிடவியல்
பல்வேறு வரலாற்றுக்கு முந்திய
மருத்துவ முறைகள் குறித்தும்
அவற்றுக்குச் சமூகத்துடன் இருந்த
தொடர்புகள் பற்றியும் ஆய்வு
செய்கிறது. சங்ககால மருத்துவ
முறைகள் இங்குக் கருதத் தக்கவை.
உற்றான் அளவும்
பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச்
செயல்.திருக்குறள்; 949
மருத் துவக் கல் வி
மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி
உலகெங்கிலும் வேறுபடுகிறது. இது
பொதுவாக ஒரு பல்கலைக்கழக
மருத்துவ பள்ளியில்
கற்பிக்கபடுகிறது. இதைத்
தொடர்ந்து முதுகலை தொழில்
பயிற்சியாக மருத்துவ கல்வி
கற்பிக்கபடுகிறது. கனடா மற்றும்
ஐக்கிய அமெரிக்காவில் முதுகலை
மருத்துவ பட்டம், பெரும்பாலும் Doctor
of Medicine சுருக்கமாக MD(எம்.டி)
எனப்படும். மருத்துவ தொழில்நுட்பம்
ஒரு விரைவான விகிதத்தில்
வளர்வதற்கு ஏற்ப தொடர்ந்து
மருத்துவ கல்வியில் பல
திருத்தங்கள்
செய்யப்பட்டுவருகின்றன. மேலும்
மருத்துவர்கள் தங்கள் மருத்துவ
அறிவை மேம்படுத்த மருத்துவப்
பத்திரிகைகள், கருத்தரங்குகள்,
மாநாடுகள் மற்றும் தவிர
மற்றவர்களிடம் இணையவழிக்
கல்வி மூலம்
வளர்த்துக்கொள்கின்றனர்.
உடற்கூற்றியல் - உயிரினங்களின்
அக, புற உடற்கூறு
அமைப்புகளைப் பற்றிய
அறிவியல்.
இவ்வுள்ளுறுப்பமைப்பியல்
மருத்துவத் துறையின் அறுவை
சிகிச்சை வளர்ச்சிக்கு பெரும்பங்கு
ஆற்றியுள்ளது.
உயிரணுவியல் - உயிரின
அடிப்படை அலகான
உயிரணுக்களைப் பற்றிய
அறிவியல். இச்செல்லியல் (அ)
கலயியல் புற்றுநோயியலிலும்,
உயிரணு சார்ந்த
நோய்க்காரணிகளைப் பற்றி
மேலும் அறியவும் உதவுகிறது.
உயிர்வேதியியல் -
உயிரினங்களில் நிகழும்
வேதியியற் செயல் முறைகளைப்
பற்றியும், உயிர்-வேதிய
மூலக்கூறுகளின் அமைப்பு
பற்றியும் அறிய உதவும்
அறிவியல்[5]. மருத்துவத்தில்
வேதிமருந்துகளின் வினைகள்
மற்றும் குணப்படுத்தும்
முறைகளைப் பற்றி அறிய
உதவுகிறது.
உயிர்விசையியல் - விசையியல்
அறிவின் துணைகொண்டு,
உயிரியல் தொகுதிகளின்
அமைப்பு, தொழிற்பாடு
என்பவைபற்றிப் படித்தல்.
உயிரிப் புள்ளிவிபரவியல்
(Biostatistics) - உயிரியல் துறையில்
புள்ளிவிபரவியலின் முறைகளைப்
பற்றி அறிந்து அவற்றைப்
பயன்படுத்தல். மருத்துவ
ஆய்வுகளில் திட்டமிடல், கணிப்பீடு
செய்தல், அவற்றின் அர்த்தம்
புரிந்துகொள்ளல் போன்றவற்றில்
இவ்வறிவு உதவும்.
நோய்ப்பரவலியல் பற்றிய
ஆய்வுகளுக்கும் இது மிகவும்
உதவியாக இருக்கும்.
உயிரி இயற்பியல் - இயற்பியக்
காரணிகளான வெப்பம், ஒளி,
ஒலி, அழுத்தம், இன்ன பிற
பரிமாண அலகுகளால் உயிரின
மாற்றத்தை அளவிடவும்,
நோய்க்காரணிகளின் இயற்பியல்
மாற்றத்தை பகுத்தாரயவும் உதவும்
உயிரியல் மற்றும் இயற்பியலின்
இணைப்புப் பாலமும் ஆகும்.
கருவியல் - உயிரினங்களின்
உருவாகும் கருமுட்டையில் இருந்து
கரு வளர்ச்சி அடையும் அடிப்படை
முறைமைப் பற்றிய அறிவியல்.
உட்சுரப்பியல் - உயிரிகளின்
உடலில் சுரக்கும் இயக்குநீர் மூலம்
உடல் முழுதும் ஏற்படும்
மாறுதல்களைப் பற்றிய
அறிவியல். இயக்குநீரானது உடல்
வளர்சிதை மாற்றம், கட்டுப்பாடு,
ஒருங்கமைவு, போன்ற பணிகளில்
இன்றியமயாதது.
நோய்ப்பரவலியல் - ஒரு
நோயானது எப்படிப் பரவுகிறது
என்பது பற்றிய அறிவைப் பெறல்.
மரபியல் - மரபணுக்கள், அவை
எவ்வாறு தொடரும் மரபினூடாகக்
கடத்தப்படுகிறன, அவற்றின்
பங்களிப்பு என்ன என்பவை
போன்ற அறிவைக் கொடுக்கும்.
இழையவியல் - உயிர்
இழையங்களின் அமைப்பினை,
பல்வேறு வகையான
நுண்நோக்கிகள் கொண்டும்,
நோயெதிர்ப்பு இழைய வேதியியல்
(Immunohistochemistry) மூலமும்
ஆய்ந்தறிதல்.
நோயெதிர்ப்பியல் -
உயிரினங்களில் நோய்
எதிர்ப்பாற்றல் முறைமை அதன்
தொழிற்பாடு பற்றிய அறிவைக்
கொடுக்கும்.
நுண்ணுயிரியல் - நோயுண்டக்கும்
நுண்ணுயிரகளான பாக்டீரியா,
தீநுண்மி, பூஞ்சைகள், ஒருசெல்
உயிரிகளின் தாக்கம், கட்டுப்பாடு,
நச்சு, மருந்தாக்கம் மற்றும்
குணப்படுத்தும் மருத்துவ
முறைகள் பற்றிய அறிவியல்.
மூலக்கூற்று உயிரியல் - உயிர்
மூலக்கூறுகளின் செயற்பாடு
(டி.என்.ஏ இரட்டித்தல் ஆர்.என்.ஏ.
படியெடுப்பு, மொழிபெயர்ப்பு
(உயிரியல்), புரதம் மற்றும் மரபியல்
சார்ந்த உயிர் வேதியியலின் ஒரு
பிரிவு.
மருத்துவ இயற்பியல் -
மருத்திவத்தில் இயற்பியலின்
பயன்பாடு பற்றிய அறிவு.
நரம்பியல் - நரம்பு மண்டலம்
பற்றியது. மூளையும்,
தண்டுவடமும் சார்ந்த
உடற்செயலியல். நரம்பு சார்ந்த
அறுவை சிகிச்சை, நோய்கள்,
மற்றும் உளவியலின் அடிப்படை
அறிவியல்.
உளவியல் - மனதின்
செயல்பாடுகள் மற்றும் நடத்தை
சார்ந்த அறிவியல்.
ஊட்டச்சத்து அறிவியல் -
உணவுக்கட்டுபாடு, செரிமானம்,
சமிபாடு, சத்தான உடலுக்கு
இன்றியமையாத
ஊட்டச்சத்துகளைப் பற்றியும்
அதன் குறைபாடுகள் சார்ந்த
நோய்களைப் பற்றியும் அறிய
உதவும் அறிவியல்.
மருந்தியல் - மருந்து மற்றும் அதன்
வினை, செயற்பாடுகள் குறித்த
அறிவியல்.
ஒளி உயிரியல் - அயனாக்காத
கதிர்கள் (அகச்சிவப்பு கதிர்கள்,
ரேடியோ அலைகள்,
நுண்ணலைகள்) உயிரிகளின்
உடலில் ஏற்படுத்தும்
மாறுதல்களைப் பற்றிய
அறிவியல்.
உடலியங்கியல் - உடலுறுப்புகளின்
அன்றாட இயக்கம் பற்றிய
அறிவியல்.
கதிரியக்க உயிரியல் -
அயனிக்கதிர்களின் உயிரியியல்
பயன்பாடு மற்றும் விளைவுகளைப்
பற்றிய அறிவியல்.
நோயியல் - நோய்கள், அவை
உருவாகும் விதங்கள்,
தொற்றுநோய்கள்,
நோய்த்தொற்று,
நோய்க்காரணிகள் என்பவை
பற்றிய அறிவியலாகும்.
சிறப்பு மருத்துவம்
நாளும் மாறிவரும் மருந்துகளின்
எதிர்ப்புத்திறன், புதிய ஆய்வுகளின்
இற்றைப்படுத்தல் சிறப்பு
மருத்துவத்தின் முக்கியத்துவத்தை
உணர்த்துகிறது. அடிப்படை
மருத்துவ கல்விக்கு பிறகு
மேற்படிப்பாக சிறப்பு மருத்துவம்
பயிற்சி மருத்துவர்களால்
பயிலப்படுகிறது.
சித்த மருத்துவம்
மரபு வழி மருத்துவத்தில்
சித்தர்களால் தமிழில் வழங்கப்பட்ட
மருத்துவ முறை சித்த
மருத்துவம்.[6][7] அகத்தியர் ஆசானாக
பதினெண் சித்தர்கள் தொகுத்து
வழங்கிய தமிழ் மருத்துவ முறை
ஆகும்.[8] தோசங்கள் மூன்றாக வாத,
பித்த, கப [9] முறை கொண்டு
ஆராயப்படுகின்றன.
முத்தோசங்களில் ஏற்படும்
மாற்றங்களே நோயாகக்
கணிக்கப்படுகிறது.
சித்த மருந்துகள்
ஆயுர்வேதம்
எலக்ட்ரோபதி மருத்துவம்
அக்குபங்சர்
சப்பானிய காம்போ
மருத்துவம்
இயற்கை வைத்தியம்
இயற்கை வைத்தியம் (அ) பாட்டி
வைத்தியம் (அ) வீட்டு மருத்துவம் -
சமையற் சார்ந்த, உணவுப்
பொருட்களைக் கொண்டு
செய்யப்படும் தற்காலிக நிவாரண
முறைகள். தமிழினத்தில்
வழிவழியாக பெண்பால்
உறவுகளுக்கு கற்பிக்கப்பட்டது.
5. http://portal.acs.org/portal/acs/corg/c
ontent?
_nfpb=true&_pageLabel=PP_ARTICLE
MAIN&node_id=1188&content_id=CTP
_003379&use_sec=true&sec_url_var=r
egion1&__uuid=aa3f2aa3-8047-4fa2-
88b8-32ffcad3a93e
9. http://www.sysrevpharm.org/sites/def
ault/files/2-7.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?
title=மருத்துவம்&oldid=3587827" இருந்து
மீள்விக்கப்பட்டது