You are on page 1of 12

அறிவியல்

பலகை!
காலத்திற்கு எதிரான பந்தயம்!
வணக்கம்! அனைத்து ஊடகங்களும், குறிப்பாக அச்சு ஊடகம்,
வாழ்வில் ஒருசிலவற்றைக் கடந்து ப�ோவதென்பது நமக்கு த�ொலைக்காட்சி, சமூக மற்றும் மின்னணு ஊடகங்கள், தினமும்
மிகவும் கடினமாக இருக்கும், “இதுவும் கடந்து ப�ோகும்” எவ்வளவு பேர் இந்த க�ொர�ோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
என்கிற தன்னம்பிக்கை மனதில் ஊற்றெடுத்து அது நமக்கு உயிரிழந்துள்ளனர் மற்றும் குணமடைந்துள்ளனர் என்கிற
ஆறுதலை அளிக்கும். அத்தகைய ஒரு மனநிலையில்தான் எண்ணிக்கைகளை பட்டியலிட்டு படம்பிடித்துக் காட்டுகின்றன.
நாம் அனைவரும் தற்போது இருக்கின்றோம். இவை, ஒரு டம்ளரில் மீதமிருக்கும் அரை பங்கு தண்ணீர்
நமது இந்தியாவின் அறிவியல் த�ொழில்நுட்பம் குறித்து குறித்து பகிரப்படும் எதிர்மறை-நேர்மறை விமர்சனங்களையே
தற்போது சில அவதூறு அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. நினைவுபடுத்துகிறது. இந்த ந�ோயால், உயிரிழந்தவர்களின்
இம்மாதிரியான, உலகளாவிய ந�ோய்த்தொற்று ஏற்படும் ப�ோது எண்ணிக்கை குறித்து அறியும்போது நம் மனதில் மிகுந்த
நாம் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிற�ோம் வேதனையும், துக்கமும் த�ொற்றுகிறது; குணமடைந்தவர்கள்
என்ற சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன, இந்த இக்கட்டான குறித்து அறியும் ப�ோது மனதில் நிம்மதியும், நம்பிக்கையும்
சூழ்நிலையில், அறிவியல் த�ொழில்நுட்ப ஆய்வில் ஈடுபட்டுள்ள துளிர்க்கிறது. மேலும், மரணித்தவர்களின் எண்ணிக்கை என்பது
அனைவரும் தற்போதைய அசாதாரண நிலைமையை உணர்ந்து இந்த ந�ோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைய�ோடு
ஒற்றுமையாக ஒருமித்து எழுந்து நிற்கின்றனர். ந�ோயைக் ஒப்பிடும் ப�ோது மிகவும் குறைவாகவே உள்ளது என்பது நமக்கு
கண்டறிவதற்கான பரிச�ோதனை கருவிகள், ந�ோய்த்தொற்றை பெரிதும் ஆறுதலைத் தருகிறது. இந்த ந�ோயிற்கான தீர்வை
தடுப்பதற்கான பாதுகாப்பு (PPE) உடைகள், முகக்கவசங்கள், ந�ோக்கிய ஆய்வுப் பணிகள், பல ஆய்வு நிறுவனங்களில்,
கிருமிநாசினிகள் ஆகியவை தேவையினை ஈடுசெய்யும் வெகு தீவிரமாக நடந்தேறி வருகின்றன. நிபுணர்கள் இது
அளவிற்கு தயாரிக்கப்பட்டு, தட்டுப்பாடுகள் உடனுக்குடன் குறித்து பல்வேறு கால அட்டவணையைத் தருகின்றனர்.
சரிசெய்யப்படுகிறது. தேவையான சில முக்கிய மருந்துகளும் இது ஒரு புறமிருக்க, ஊரடங்கு என்பது பல சுவாரசியமான
கிடைக்கப்பெறுகின்றன. நமது விஞ்ஞானிகள், த�ொழில்நுட்ப தகவலையும் தருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலாளர்கள், வானிலை
வல்லுநர்கள், த�ொழில் முனைவ�ோர், க�ொள்கை வகுப்பவர்கள் நிபுணர்கள், மேலும் பறவையியலாளர்கள் கூறும் தகவல்கள்
ஆகிய�ோர் தங்கள் முன்னிருக்கும் மிகப்பெருஞ் சவாலை ஆச்சரியம் தருகின்றன. அழிவு நிலைக்கு சென்ற பறவைகள்
உறுதியுடன் சந்தித்து திறம்பட சமாளித்து வருகின்றனர். தற்போது தென்படுகின்றன. வழக்கமாக, இந்த காலகட்டத்தில்
அறிவியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞான் பிரச்சார் பல்வேறு இடங்களுக்கு பறந்து செல்லும் பறவைகளின்
அமைப்பில் உள்ளவர்களுக்கும் இது ஒரு நெருக்கடியான இடம்பெயரும் நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாசு குறைந்து
காலகட்டம்தான். நாட்டில் உள்ள அனைத்து அறிவியல் மாற்றம் நிகழ்கிறது. இந்த மாற்றங்கள் எப்போதும் இருக்க
த�ொழில் நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் பல்வேறு வேண்டும், ஊரடங்கு அமலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்
ச�ோதனை முயற்சிகள் குறித்த விரிவான விவரங்களை நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
தினசரி த�ொகுத்துத் தருகிற�ோம். புதிய ச�ோதனை முயற்சிகள் இந்த உலகளாவிய ந�ோய் த�ொற்றிற்கு முற்றுப்புள்ளியைத்
மற்றும் ஆய்வுகளை சரியாக த�ொகுத்து, அதனை எளிதாக்கி, தேடி, நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு தினத்தையும்
குறித்த நேரத்திற்குள் வெளியிடுவத�ோடு, பல்வேறு ஆவலுடன் எதிர்பார்த்து கடந்து சென்று க�ொண்டிருக்கிற�ோம்.
ஊடகங்களுக்கும் அனுப்பி வருகிற�ோம். இந்தத் தகவல்கள் “எப்போது அந்த தினம் வரும்” என்று உலகமே இதனை
பல லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேருகிறது. எப்படி உற்று ந�ோக்கி காத்திருக்கின்றது. விஞ்ஞானிகளும் தீவிரமான
நமது விஞ்ஞானிகள், த�ொழில்நுட்ப வல்லுநர்கள் இடைவிடாது ஆய்வுகளில் ஈடுபட்டு உடனடியாக மருந்தினை தயாரிக்க
பணியாற்றிக் க�ொண்டிருக்கிறார்கள�ோ, அது ப�ோல, இந்த முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த முயற்சி
ஊரடங்கு காலத்தில், கள நிலைமையை உணர்ந்து, பல்வேறு நமக்கு பெரிய நம்பிக்கையைத் தருகிறது. க�ொர�ோனாவுக்கு
தடைகளைத் தாண்டி, நாமும் சிறப்பாக செயல்படுகிற�ோம் எதிரான இந்த ப�ோரில், நாம் நிச்சயம் வெற்றி பெறுவ�ோம்!
என்பதை நினைக்கும் ப�ோது பெருமையாக இருக்கிறது. நம்பிக்கையுடன்...

Dr  நகுல் பராசர், இயக்குனர், விஞ்ஞான் பிரச்சார், புது டெல்லி


2   மே 2020 அறிவியல் பலகை!

நாவல் க�ொர�ோனா வைரஸ்:


அறிந்ததும் அறியாததும்!
த. வி. வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி,
விஞ்ஞான் பிரச்சார், புது டெல்லி

த�ொற்று: ந�ோய் பரப்புக ிற (அ) பரவுக ிற காலம்:


த�ொண்டை மற்றும் நுரையீரல் புறத்தோல்களில் கிருமி த�ொற்று ஏற்பட்ட ஒருவர் எவ்வளவு நாட்கள்
உள்ள செல்களில் மட்டுமே SARS-CoV-2 வகை வரை பிறருக்கு த�ொற்றினை பரப்ப முடியும் (அ)
கிருமி (Virus) த�ொற்ற முடியும். இந்த செல்களில் கிருமி த�ொற்று ஏற்பட்ட ஒருவரிடமிருந்து எவ்வளவு
தான் ACE2 வகை ஏற்பிகள் (Receptors) நாட்கள் வரை பிறருக்கு த�ொற்று பரவலாம் என்பது
உள்ளன. ACE2 ஏற்பிகளுடன் மட்டுமே SARS- இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை. சுமார் 10-14
CoV-2 வைரஸ் பற்றிக்கொண்டு செல்களுக்குள் புக நாட்கள் என மதிப்பீடு செய்கிறார்கள்.
முடியும். எனவே ACE2 ஏற்பிகள் இல்லாத த�ோல் எனவேதான், கிருமி த�ொற்று அறிகுறி உள்ளவர்கள்
மூலம் இந்த வைரஸ் உடலில் புக முடியாது. மற்றும் கிருமி த�ொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய
யானை தன் தும்பிக்கையால் தன் தலையில் வாய்ப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி த�ொற்று
தானே மண்ணை வாரி ப�ோட்டுக்கொள்வது ப�ோல, பரப்புகிற (அ) பரவுகிற காலத்தை செயற்கையாக
நாமும் நமது கைகளின் வழியேதான் இந்த கிருமியை குறைப்பதன் மூலம் த�ொற்று பரவும் வேகத்தைக்
நமது கண் (அ) வாய் (அ) மூக்குப் பகுதியை கட்டுப்படுத்துகிறார்கள். இதற்கென, ந�ோயாளிகளை
அடையச்செய்து பின் அது அங்கிருந்து நமது மருத்துவமனைகளில் தனித்தனி படுக்கைகளில்
த�ொண்டை மற்றும் நுரையீரலுக்குள் செல்ல வழி அனுமதித்தல், வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்துதல்,
வகுக்கிற�ோம். எனவே அடிக்கடி நம் கைகளை ச�ோப்பு ஊரடங்கு முதலிய வழிமுறைகளை கையாள்கிறார்கள்.
ப�ோட்டு இருபது ந�ொடிகள் நன்கு தேய்த்து சுத்தம்
செய்வதன் மூலம் த�ொற்றுப் பரவலைத் தடுக்கலாம். த�ொற்று எப்படிப் பரவுக ிறது?
யார்-யாரால் த�ொற்று பரப்ப முடியும்?
த�ொற்று ஊட்டு அளவு: எச்சில், தும்மல், மற்றும் மூக்கு-சளி திவலைகள்
சிறு-குரங்கிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதன் வழியாகத்தான் இந்த கிருமி த�ொற்று ஒருவரிடமிருந்து
மூக்கு த�ொண்டை வழியே குறைந்தபட்சம் 700000 மற்றவருக்கு பரவுகிறது. அதுவும் ஆறு அடி
PFU ட�ோஸ் ஊட்டு அளவு கிருமி செலுத்தப்பட்ட த�ொலைவுக்கு தான் பரவும். ந�ோய் அறிகுறி
பின்னர் தான் அதனிடம் ந�ோய்த்தொற்று ஏதுமில்லை என்றாலும் கிருமி த�ொற்று உள்ளவர்கள்
கண்டறியப்பட்டது. மேலும், ந�ோயிற்கான அறிகுறிகள் அனைவராலும் த�ொற்று பரப்ப முடியும். கிருமி
ஏதும் முறையே அதனிடம் தென்படவில்லை த�ொற்று உள்ளவரின் உமிழ்-நீர், மூக்கு-சளி மற்றும்
என்றாலும் அதன் உமிழ்நீர் மற்றும் மூக்கு-சளி மலத்தில் வைரஸ் இருக்கும், இவைகளின் மூலம்
திவலைகளில் வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது. த�ொற்று பரவும்.
அதே ப�ோல செயற்கையாக ACE2 ஏற்பிகளை தும்மல்-இருமல் வரும்போது மூக்கையும் வாயையும்
ப�ொருத்தி மரபணுமாற்றம் செய்த எலிகளிடம் துணியால் நன்கு மூடிக்கொள்வது த�ொற்றுப் பரவலைக்
ச�ோதனை செய்தப�ோது 240 PFU ட�ோசிலேயே SARS குறைக்கும். மேலும், மளிகைக் கடை, காய்கறிக்
கிருமி த�ொற்று ஏற்பட்டுவிடும் என்ற நிலையில், கடை முதலிய ப�ொது இடங்களில் ஒருவருக்கொருவர்
இந்த SARS-CoV-2 த�ொற்று ஏற்பட 70000 PFU மத்தியில் 1.5 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட
ட�ோஸானது தேவைப்பட்டது. வேண்டி அறிவுறுத்துகிறார்கள். இதன்மூலம் சுமார் 44%
அறிவியல் பலகை!மே 2020 3

அளவுக்கு த�ொற்று பரவலை குறைக்கலாம் என


ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
ப�ொது இடங்களில், கதவுகளின் கைப்பிடி, செல்பேசிகள்,
லிப்ட் ப�ொத்தான்கள், கவுண்டர் மேசைகள், மற்றும்
உல�ோகப் ப�ொருட்கள் முதலியவற்றை கைகளால்
தீண்டுவதன் த�ொடர்ச்சியாகவும் த�ொற்று பரவ முடியும்
என்றாலும் இவற்றால் மெய்யாக எவ்வளவு த�ொற்று
பரவல் ஏற்படுகிறது என்பது குறித்த ஆய்வுப்பூர்வமான
ஆதாரங்கள் ஏதுமில்லை. எனவே ப�ொது இடங்களில்
கை-கைவிரல்கள் புழங்கிய பிறகு எவ்வளவு விரைவாக
இயலும�ோ அவ்வளவு விரைவாக கை-கைவிரல்களை மற்றொரு ஆய்வு, பல காலமாக இந்த வைரஸ்
சுத்தம் செய்வது நலம் பயக்கும். மனிதர்களிடமே சுற்றிக் க�ொண்டிருந்தது எனவும்
சமீபத்தில் தான் வீரியம் க�ொண்டதாக மாறியது
எனவும் கூறுகிறது. மென்மேலும் வெளிவரும் ஆய்வு
எவ்வளவு பேருக்கு த�ொற்று பரவலாம்? முடிவுகளில் தான் இதில் எது சரி என்பது விளங்கும்.
சராசரியாக, த�ொற்று ஏற்பட்ட ஒருவர் 2.2 நபர்
முதல் 3.1 நபருக்கு கிருமியை பரப்புவார்கள் என த�ொற்று எப்படி பரிணம ித்திருக்கலாம்?
ஆய்வுகள் கூறுகின்றன. மனிதனுக்கு ந�ோய் ஏற்படுத்தவல்ல திறன் க�ொண்ட
தும்மல்-இருமல் வரும்போது மூக்கையும் SARS-CoV-2 வைரஸ் முதலில் விலங்குகளில்
வாயையும் துணியால் நன்கு மூடிக்கொள்வது; பரிணமித்த பின்னர் தற்செயலாக மனிதரிடம்
ப�ொது இடங்களில் ஒருவருக்கொருவர் மத்தியில் 1.5 தாவியிருக்கலாம் என்றும் (அல்லது) ஆரம்பத்தில்
மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிப்பது; அவ்வளவாக ந�ோய் ஏற்படுத்தும் குணம் இல்லாமல்
கை-கைவிரல்களை அடிக்கடி ச�ோப்பு க�ொண்டு இருந்திருந்து பின் அது மனிதரிடம் குடிபுகுந்த
சுத்தம் செய்வது; கிருமி த�ொற்று அறிகுறி உள்ளவர்கள் பின்னர் ந�ோய் ஏற்படுத்­தவல்ல திறன் க�ொண்ட
மற்றும் கிருமி த�ொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு SARS-CoV-2-வாக பரிணமித்திருக்கலாம் என்றும்
உள்ளவர்களை தனிமைப்படுத்துவது ஆகியவற்றின் இரண்டு விதமான கருத்துக்களை விஞ்ஞானிகள்
மூலமாக இந்த த�ொற்று பரவலை தடுக்கவும் முன்வைக்கின்றனர். மென்மேலும் செய்யப்படும்
கட்டுப்படுத்தவும் முடியும். ஆய்வுகளில் தான் இதில் எது சரி என்பது விளங்கும்.

த�ொற்று எங்கிருந்து த�ோன்றிய ிருக்கலாம்? SARS-CoV-2 வைரஸ் உருவானது எப்போது?


துவக்கத்தில், வெளவால் சூப்பினை மனிதன் டிசம்பர் 2019-க்கு முன்னர் SARS-CoV-2
குடித்ததினால்தான் மனிதனுக்கு SARS-CoV-2 வைரஸ் த�ொற்றுக்கான தடயங்கள் ஏதுமில்லை. எனினும்,
வெளவாலிடமிருந்து த�ொற்றியது என கருதினர். மரபணு த�ொடரை ஆராய்ச்சி செய்தப�ோது
ஆனால், இது வெளவால் சூப் குடித்ததால் நிச்சயம் 2019 அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர்
த�ொற்றவில்லை. ஏனெனில், உணவை சமைக்கும் நடுப்பகுதிக்குள் இது பிறந்துள்ளது என
ப�ோது அதன் வெப்பத்தில் வைரஸ் நிச்சயம் மடிந்து தெரியவருகிறது. இதன் ப�ொருள், முதல் ந�ோயாளி
விடும். மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாகவே
சமீபத்திய மரபணு ஆய்வுகளுக்கு பிறகு அவர் மூலமாக மற்ற மனிதர்களிடம் இத்தொற்று
வெளவால்களில் த�ோற்றுவாய் இருந்தாலும் இடையே பரவியிருந்திருக்கும். குறிப்பிட்டு யாரும் இனம்
வேறு ஒரு விலங்குக்கு தாவிய பின்னர் தான் அது காண முடியாதபடி சளி இருமல் காய்ச்சல் உருவில்
மனிதனிடம் வந்து சேர்ந்தது என புலனாகியுள்ளது. அது வந்து சென்றிருக்கும் என நம்பப்படுகிறது.
4   மே 2020 அறிவியல் பலகை!

நாய், பூனை ப�ோன்ற வ ிலங்குகளுக்கும்


த�ொற்று இருக்குமா? COVID-19 ந�ோய் எவ்வளவு ஆபத்தானது:
SARS-CoV-2 மரபணு பரிச�ோதனைக்கு பிறகு, COVID-19 ந�ோய் த�ொற்று ஏற்பட்ட ந�ோயாளிகள்
இந்த வைரஸ் மனிதனிடம் மட்டுமன்றி வெளவால், அனைவருக்குமே மரணம் சம்பவிப்பதில்லை.
புனுகுப்பூனை, குரங்கு, பன்றிகளிடமும் வளர முடியும் COVID-19 கிருமி த�ொற்று ஏற்பட்டவர்களில்
என தெரியவந்துள்ளது, ஆனால், இது நாய், பூனை, பெரும்பான்மையினருக்கு மருத்துவ சிகிச்சை ஏதும்
க�ோழி, ஆடு-மாடுகளிடம் வளர முடியாது எனவும் தேவைப்படுவதில்லை. சுமார் 81% ந�ோயாளிகளுக்கு
தெரியவந்துள்ளது. ஆகையால், க�ோழி மற்றும் மிதமான ந�ோயே (சளி மற்றும் ஜலத�ோஷம்)
முட்டை உண்பதால் எந்தவித க�ொர�ோனா ஆபத்தும் தென்படுகிறது; சுமார் 15% ந�ோயாளிகளுக்கே
இல்லை. மருத்துவ சிகிச்சையானது அவசியம் தேவைப்படுகிறது
என்பது தெரியவருகிறது. இதில், தீவிர ந�ோயறிகுறி
தென்படும் சுமார் 5% ந�ோயாளிகளுக்கே தீவிர
ஒரு முறை த�ொற்று ஏற்பட்டவருக்கு
சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்க்க நேரிடுகிறது,
மறுமுறையும் ஏற்படுமா?
இவர்களுக்கே பெரும்பாலும் மரணம் சம்பவிக்கின்றது.
தட்டம்மை த�ொற்று ஒருவரை அவரது வாழ்நாளில் இத்தாலியில், லம்பார்டியாவில் கர�ோனா ந�ோய்க்கு
ஒருமுறை தான் த�ொற்றும். அதன் பின்னர் அந்த மருத்துவம் பார்த்த மருத்துவ ஊழியர்களில் சுமார்
வைரசுக்கு எதிரான ந�ோயெதிர்ப்பு தன்மையானது 15% முதல் 20% வரை கர�ோனா ந�ோய் முற்றிய
அவரது உடலில் உருவாகிவிடும். குரங்குகளில் நிலையில் மரணித்திருக்கின்றனர்.
நடத்தப்பட ஆய்வில் ஒரு முறை SARS-CoV-2 த�ொற்று
ஏற்பட்ட பின்னர் மறுமுறை அது ஏற்படவில்லை. அதே
ப�ோல, ந�ோய் குணமடைந்த மனிதர்களிடமும் மறுமுறை யாருக்கு ஆபத்து:
த�ொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை. ஆனால் இந்த ந�ோயால், ந�ோய்க்கு மருத்துவம் பார்க்கும்
இந்த ந�ோயெதிர்ப்புத் தன்மையானது ந�ோயிலிருந்து மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும்தான் மிக அதிக
முற்றிலும் குணமடைந்தவர்களின் உடல்களில் ஆயுள் அளவு ஆபத்திற்குள்ளாகின்றனர். மேலும், அறுபது
முழுவதும் நீடிக்குமா அல்லது சில காலம் மட்டுமே வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக ஏற்கெனவே இருதய
நீடிக்குமா என்பது இன்னமும் புதிர் தான். ந�ோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை ந�ோய், சுவாசக் க�ோளாறு
அறிவியல் பலகை!மே 2020 5

ப�ோன்ற ந�ோயுள்ளவர்கள், மூன்றாம் நபர்கள் (அ) ப�ொது


மக்களிடம் பழக நேரிடும்போது, தகுந்த எச்சரிக்கையுடனும்
காற்றில் க ிரும ி பரவுமா:
காற்றில் வெறும் 2.7 மணி நேரம் மட்டுமே
பாதுகாப்புடனும் பழக வேண்டும். கிருமி உயிர்ப்புடன் இருக்கும். எனவே ஊரடங்கு
நேரத்தில் ம�ொட்டை மாடி, பால்கனி முதலியவற்றில்
மரணம் எதனால் சம்பவ ிக்கும்:
அச்சமின்றி நடமாடலாம்.
சுவாச முட்டல் மற்றும் சுவாச முட்டலுடன் இருதயம்
செயலிழப்பு ஆகியவைதான் மரணத்துக்கு
வித்திடுகின்ற முக்கிய காரணங்கள். நுரையீரலுக்குள்
வரியம்
ீ குறைவான ரக SARS-CoV-2

திரவம் சேர்ந்து மூச்சுவிட முடியாமல் தவிப்பது


உள்ளனவா:
இதுவரை பல ரகங்கள் இனம் காணபட்டுள்ளன.
தான் தீவிர ந�ோயறிகுறி. வெண்டிலேட்டர் மூலமான எனினும், வீரியம் குறைவான ரக SARS-CoV-2
செயற்கை சுவாச உதவிதான் அதற்கு முக்கிய ஏதும் கண்டறியப்படவில்லை. அதுப�ோல், பரவு
சிகிச்சை. ந�ோயை குணமாக்கவல்ல மருந்துகள் விகிதம் அல்லது ந�ோய் கடுமைத் தன்மையை
குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன, பாதிக்கும் எந்த ஒரு மரபணு மாற்றமும் இதுவரை
ஆய்வு முடிவுகள் இன்னமும் தெரியவரவில்லை. இனம் காணப்படவில்லை.

பால் கவர், செய்தித்தாள் மூலம்


வேன ில் காலத்தில் SARS-CoV-2
க ிரும ி பரவுமா:
பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில்
மடிந்து வ ிடுமா:
வேனில் காலத்தில் SARS-CoV-2 மடிந்து விடும்
சுமார் மூன்று நாட்கள் வரை கிருமி உயிர்ப்புடன்
என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. அதுப�ோல்,
இருக்கும். பால் கவரை நன்கு கழுவுவதன் மூலமும்,
பருவ காலங்களைச் சார்ந்து இதன் பரவல் தன்மை
பாத்திரங்களை நன்கு துலக்குவதன் மூலமும்
மாறுபடும் என்பதற்கான எந்தவ�ொரு உறுதியான
கிருமியானது அகன்றுவிடும். 10000 PFU அளவு
சான்றுகளும் இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை.
SARS-CoV-2 கிருமிகளை செய்தித்தாள் மற்றும்
பருத்தி ஆடைகளில் செலுத்தி ஆய்வு செய்தப�ோது,
சுமார் ஐந்து நிமிடங்கள் தான் கிருமியால்
அவைகளில் உயிர்ப்புடன் இருக்க முடிந்தது.
6   மே 2020 அறிவியல் பலகை!

தடுமனும், பிடிபடாத சிகிச்சையும்

L. பாரதி, M.Sc (நுண்ம உயிரி மூலக்கூறியல்)

த டுமன் எனப்படும் சளித்தொல்லை என்பது


இந்த உலகத்தின் மிகப்பழமையான மற்றும்
இல்லை சனி பிடித்தத�ோ! என்று ஒரு பழம�ொழியே
உண்டு. அந்தளவிற்கு “காமன் க�ோல்டு” என்று
பரவலான ஒரு த�ொற்றுந�ோய், இருந்தப�ோதும் அழைக்கப்படும் இந்த “ப�ொதுவான சளித்தொல்லை”
இந்த ந�ோய்த்தடுப்பு பற்றிய முழுமையான தெளிவு உலக மக்கள் அனைவரையும் பலநூறு ஆண்டு
இன்று வரைக்கும் நமக்கு கிடைக்கவில்லை காலமாய் பாடாய் படுத்தி வருகின்றது.
என்றே கூறலாம். ப�ொதுவாக இந்த த�ொற்றுந�ோய் ப�ொது பிரிவினர் அன்றி, சின்னஞ்சிறு குழந்தைகள்,
பற்றி அனைத்து நாடுகளிலும் இது குறைந்த முதியவர்கள், ந�ோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள்
வெப்பநிலையில் அல்லது குளிர்ந்த நிலையில் மற்றும் முன்பே மூச்சு மண்டல பாதிப்பு
ஏற்படுகிறது என்றே நம்பப்படுகிறது. உள்ளவர்கள் என்று, எளிதாக ந�ோய்த்தொற்றுக்கு
தற்போது ஏற்பட்டுள்ள COVID-19 உலகளாவிய ஆளாகக் கூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்க
ஒரு த�ொற்றுந�ோய். இந்த ந�ோயின் பரவுதலையும், வேண்டியுள்ளது. ஆனால், ஆதிகாலம் முதல் இந்த
அதைத் தடுப்பதில் தனி நபர் பங்களிப்பும் அவர்தம் சளிந�ோய்க்கு சிகிச்சை என்பது ப�ொதுமக்கள் மற்றும்
தனிப்பட்ட சுகாதாரமும் தற்பொழுது நிலவி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு பிடிபடாததாகவே உள்ளது.
சூழலில் மிகவும் முக்கியத்துவத்தைப் பெருகின்றன.
ஆனால், இதில் பலரும் அறிய மறந்த ஒரு
உண்மை என்ன? எளிய சுகாதாரமும் அதனைக் தடுமனை அழ ிப்பது ஏன் ம ிகவும் கடினம்?
கடைபிடித்தலின் மூலம் பல க�ொடிய ந�ோய்களையும் இந்த ந�ோய்த்தொற்றுக்கு காரணிகளாக உள்ள
குறிப்பாக மூச்சு மண்டல ந�ோய்களையும் எளிதாகத் வைரஸ்களில் காணப்படும் அபரிமிதமான
தடுக்கலாம் என்பதே அது. பன்முகத்தன்மை கட்டமைப்பு நமது எண்ணத்தை
ஆண்டுத�ோறும் சராசரியாக ஒரு நபர் 4-6 முறை நிறைவேறாமல் செய்கிறது.
தடுமன் ந�ோயால் பாதிப்புக்கு உள்ளாகிறார். இந்த இந்தச் சளித்தொல்லையானது ரைன�ோவைரஸ்,
சளி, ந�ோயின் ப�ோது, ஒருவருக்கு மூச்சுக் குழாயில் மூச்சு ஒத்திசைவு வைரஸ் (ஆர்.எஸ்.வி),
வைரஸ் த�ொற்று அழற்சியை ஏற்படுத்துகிறது. மெட்டாப்நியூம�ோவைரஸ், அடின�ோ வைரஸ்கள்,
இதனால், த�ொண்டைப் புண், மூக்கடைப்பு, இருமல், க�ொர�ோனா வைரஸ்கள், இன்ஃப்ளூயன்ஸா மற்றும்
மூக்கு ஒழுகுதல், சைனஸ் அழற்சி மற்றும் சிலருக்கு பாரா இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் ப�ோன்ற பல
அரிதாக காய்ச்சலும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த மூச்சு மண்டல வைரஸ்களால் ஏற்படுகின்றன.
ந�ோயின் தாக்கம் மற்றும் அறிகுறிகள் லேசாகவும், 70% ந�ோய்த்தொற்றுகள், புற உறை அற்ற, சிறிய
தானாகவே கட்டுப்படுவதாகவும் உள்ளது. அதனால் ஒற்றை இழை ஆர்.என்.ஏ மரபணுவை உடைய
எளிய சிகிச்சை மட்டுமே ப�ோதுமானது. ஆனால், ரைன�ோ வைரஸ்களால் (30 நேந�ோ மீட்டர் விட்டம்)
ஆண்டுத�ோறும், ஒருவர் ந�ோய்வாய்படுவதால் உண்டாகின்றன. இவை மேல் மூச்சுக் குழிகளில்
நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் நுழைந்து அமர்ந்து அங்கே உள்ள கதகதப்பான (32-
உற்பத்தித்திறன் இழப்பு பல ஆயிரங்கோடி இழப்பை 35°C) சூழலில் பல்கிப் பெருகுகின்றன. இவற்றுக்கு
ஏற்படுத்துகிறது. இதற்கான மருத்துவம் மற்றும் சுய புரதத்தினாலான கேப்சிட் எனப்படும் புற அடுக்கு
மருத்துவம் என மருந்து விற்பனை ஆண்டுத�ோறும் உள்ளது. இந்த புற அடுக்கு, புரதத்தின் வெவ்வேறு
பல ஆயிரங்கோடிகளைத் தாண்டுகிறது. கட்டமைப்புக் க�ொண்ட 3 துணை துணுக்கு
ப�ொதுவாக, பெரும்பால�ோருக்கு இந்தச் சளி த�ொடர்களால் ஆக்கப்பட்டுள்ளது.
என்பது ஒரு ந�ோயாக இல்லாமல் அன்றாட இந்த தனித்தன்மை உடைய புரதத்தின்
வாழ்வில் மிகுந்த சிரமத்தை உண்டாக்குவதாகவே அடிப்படையில், ரைந�ோ வைரஸ்கள் 160-க்கும்
உள்ளது. அதனாலேயே நம்மூரில் சளி பிடித்தத�ோ! மேற்பட்ட செர�ோடைப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவியல் பலகை!மே 2020 7

சளித்தொற்றை உருவாக்கும் 3 ரைந�ோ வகை வைரஸ்களின் கட்டமைப்பு

இவற்றின் மரபணு பிறழ்வு வீதம் மிக அதிகமாக ஓர் உடலில் நுழையும் வைரஸ், தான்
உள்ளதால், புதிது புதிதாகவும் விரைவாகவும் மரபணு தாக்கும் உடலில் உள்ள செல்லில் இருக்கும்,
மாறிய வைரஸ் வகைகள் வெளிப்படுகின்றன. என்-மைரிஸ்டோயல் ட்ரான்ஸ்ஃபெரேஸ்
இதனால், எந்த ஒரு நேரத்திலும், ஒரு மக்கள் (NMT) என்ற ந�ொதியை தன் பெருக்கத்திற்குப்
த�ொகை கூட்டத்தில் விரவி உள்ள அனைத்து பயன்படுத்திக் க�ொள்கிறது. அவ்வாறு உள்ளே
செர�ோடைப்பு வைரஸ்களை கண்டறிந்து இவற்றுக்கு நுழையும் வைரஸ் அந்த NMT ந�ொதியை
எல்லாம் ஏற்ற ஒருமித்த மற்றும் பரந்த வைரஸ் பயன்படுத்தாதவாறு இந்த மூலக்கூறானது
எதிர்ப்பு மருந்தினை உருவாக்குவது என்பது மிகுந்த தடுக்கிறது. இதனால் வைரஸ்கள் தான் தாக்கும்
சவாலான செயல். செல்லை தன் கட்டுப்பாட்டில் க�ொண்டு வருவதும்
இந்த எளிய ந�ோய்க்கு? தடுப்பூசி அல்லது புதிய வைரஸ் செல்களைப் பிரதி எடுப்பதும்
தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல ஆண்டுகளின் பாதிப்பதும் முடியாது.
முயற்சி மற்றும் பல ஆயிரங்கோடி செலவிற்குப் இந்த NMT தடுப்பின் விளைவாக, குறைந்த
பின்னர் தற்பொழுது தூரத்தில் ஒரு ஒளி நச்சுதன்மை க�ொண்ட ந�ோய் த�ொற்றே செல்
த�ோன்றுவது ப�ோல உள்ளது. அடிக்கடி மாறும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த
தன்மை உடைய வைரஸ்களுக்கு எதிராக ஒரு முறையில் வைரஸ்களின் பல்வேறு திடீர் மரபணு
தீர்வு கண்டுபிடிப்பதற்கு பதிலாக மனித உடலில் மாற்றம் பற்றிய எந்த வித அச்சமுமின்றி ந�ோய்த்
உள்ள ந�ோய் ஏற்பு செல்களின் கட்டமைப்பை த�ொற்றை நீக்கமுடிகிறது. எனவே, IMP-1088 வகை
மாற்றுவதன் மூலம் வைரஸ்களின் பெருக்கத்தைக் மருத்துவம் முன்னேற்றம் அடையும் வரையில் நாம்
கட்டுப்படுத்துவதை ஒரு தீர்வாக எண்ணியுள்ளனர். தற்போது கடைபிடித்து வரும் சமூக விலகலையும்
இலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றவதே
ஆராய்ச்சியாளர்கள் IMP-1088 என்ற ஒரு புதிய COVID19 ப�ோன்ற க�ொடிய ந�ோய்களிலிலிருந்து
மூலக்கூறு ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர். தப்பிக்க எளிய வழி.
8   மே 2020 அறிவியல் பலகை!

க�ொர�ோனாவுக்கு நன்றி!

பா. குமார்

ஒ ரு சலனமுமற்ற சாலைகள், எங்கும் பேரமைதி


பெருவெள்ளம், நான் எவ்வளவு பெரிய ஆள்
அளவிற்கு ஹாரன் அடித்து பறந்து செல்லும் வாகன
ஓட்டிகளே எங்கே ஓடி ப�ோனீர்கள்? இத�ோ, சாலைகள்
என்று நிறைந்து ததும்பும் ஈக�ோவ�ோடு அலைந்து எல்லாம் ஆள் அரவமற்று வெறிச்சோடி இருக்கிறது
திரியும் மனித இனத்தை சற்று கதி கலங்க இப்போது காற்றை விட வேகமாக வாகனத்தை ஒட்டி
செய்திருக்கிறது, கண்ணுக்கு தெரியாத க�ொர�ோனா. செல்லுங்கள், யாரும் உங்களை நிறுத்தப்போவதில்லை.
இயற்கையின் பேரெழிலை ரசிக்காமல், க�ொஞ்சம் வெளியே வாங்க ப்ரோ.
தனக்கு மட்டும்தான் இந்த பூமிப்பந்து ச�ொந்தம் வீட்டிற்கு உள்ளேயும் உலகம் உண்டு என்பதை
என்று க�ொக்கரித்து, தன் சுய லாபத்திற்காக மண் உணர்ந்து க�ொள்ளும் நேரம் இது. காலில் சக்கரம்
வளம், மரம் வெட்டுவது, காட்டை அழிப்பது, கட்டிக்கொண்டு, தலை கவிழ்ந்து ம�ொபைல்
நீரை உறிஞ்சுவது என்று இயற்கையின் அத்தனை ப�ோனை பார்த்து, விரலால் தள்ளி தள்ளி, புதிய
செல்வங்களையும் க�ொள்ளை அடித்து விட்டு புதிய விஷயங்களை த�ோண்டி எடுத்து களைத்து
மற்ற உயிரினங்களை மதிக்காமல் காலில் ப�ோட்டு ப�ோயுள்ள நீங்கள் க�ொஞ்சம் இளைப்பாருங்கள் என்று
மிதிக்கும் ஆறறிவு ஜீவராசிகளை இன்று கதற ச�ொல்லி, உங்கள் செயல்களை கண்காணிக்கிறது
விடுகிறது மறைந்து இருந்து தாக்கும் க�ோவிட் 19. க�ொர�ோனா.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் நலம் அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என்ற
மட்டும் ந�ோக்கி பாய்ந்து செல்லும் தனி மனிதன் அன்பு வட்டம் சூழ்ந்துள்ளது. அன்பு சூழ் உலகில்
ஆனாலும் சரி, ஒரு சமூகமாக இருந்தாலும் சரி, ஆனந்தம் க�ொட்டி கிடக்கிறது. அதில் ஆர்ப்பரிப்புடன்
ஒரு நாடாக இருந்தாலும் சரி எல்லாவரையும் அளவலாவும் நேரம் இது. அமைதியின் நிழலில்
அசையவிடாமல் விளையாடி பார்க்கிறது க�ொர�ோனா. ஆகாயத்தை பாருங்கள், பறவைகளின் ஒலியையே
எத்தனை ஜாதிகள், மதங்கள், பணக்காரன் கேட்காத உங்கள் காதுகளில் குக்கு கூக்கூ கவிதைகளை
ஏழை என்ற ஏற்ற தாழ்வுகள், படித்தவன், கேளுங்கள், வண்ண வண்ணமாய் பூத்து குலுங்கும்
படிக்காதவன், பிடித்தவன், பிடிக்காதவன் என்ற பூக்களின் அழகையும், அதன் வாசனையையும்
அணுகுமுறைகள் எல்லோரையும் பிடித்திருக்கிறது நுகருங்கள். குழந்தைகளின் மழலை ம�ொழியில்,
க�ொர�ோனாவிற்கு. வாருங்கள் ஒரு கை பார்க்கலாம் சிரிப்பில் உங்களை இழந்திடுங்கள். செய்ய நினைத்த
என்று மனித குலதத்தோடு மல்லுக்கு நிற்கிறது அல்லது விட்டுப்போன வேலைகளை செய்யும்
கண்ணுக்குத்தெரியாத வைரஸ். இந்த யுத்தத்தில் இது நேரம் இது. நல்ல புத்தகங்களை படியுங்கள், நல்ல
வரை க�ொர�ோனா 178 நாடுகளில் பரவியுள்ளது. திரைப்படத்தை பாருங்கள்.
அலப்பறை காட்டுபவர்களை அலைக்கழிக்கிறது எப்பொழுதும் சுயந�ோக்கத்துடன் செயல்படும்
க�ொர�ோனா, பீதியில், அச்சத்தில் உறைந்து மனிதன் இப்போதுதான் என் பக்கத்து வீட்டுகாரனுக்கு
ப�ோயிருக்கிறது உலகின் எல்லா மூலையிலும் க�ொர�ோனா பாதிப்பு இருக்கக் கூடாது என்று
வாழ்ந்து வரும் மனித இனம். கும்பிட்டு வருகிறான்.
கிரீடங்களை ந�ோக்கி அலைபாயும் மனித பயம் மட்டுமே மனிதனை மண்டியிட வைக்கிறது.
மனம் கிரீடத்துடன் வரும் க�ொர�ோனாவை கண்டு இந்த பூவுலகில் நிரந்தரமாக வாழப்போவதாக
பயப்படுகிறது. மூடத்தனமாக எண்ணி வாழ்க்கைக்கும் மீறி
இத�ோ, இப்பவே இந்த உலகத்தை மாற்றப்போகிறேன் ச�ொத்துக்களை சேர்ப்பது, தனது பத்து தலைமுறைக்கும்
என்ற வேகத்துடன் சாலைகளில் ப�ோக்குவரத்து தேவை என உலகை க�ொள்ளையடிப்பது, அடுத்து
விதிகளை மதிக்காது, மதித்து நிறுத்தி நிதானமாக வரும் மனித தலைமுறைக்கு இந்த பூமியின்
ப�ோவ�ோரின் பின்னால் இருந்து வெறுப்பு ஏற்றும் இயற்கை வளங்கள் வேண்டாம் என்ற ரீதியில்
அறிவியல் பலகை!மே 2020 9

அதனை ம�ொட்டையடிப்பது என்று த�ொடரும் சில கால இடைவெளியில் வைரஸ்கள் நமக்கு


வெறி ஆட்டத்தை க�ொஞ்சம் அசைத்து பார்க்க வரலாற்றை ஞாபகபடுத்தும், க�ொள்ளை ந�ோய்,
வந்திருக்கிறது கண்ணுக்கு தெரியாத வைரஸ். ஸ்பானிஷ் காய்ச்சல் என்று வைரஸ் க�ொடுத்து
உலகின் வல்லரசு நாடுகள் சீனா, அமெரிக்கா, விட்டு, எடுத்து சென்ற மனித உயிர்கள் எத்தனை,
இத்தாலி என்று மார்தட்டி க�ொண்டவர்கள் தினசரி எத்தனை அறிவியல் த�ொழில்நுட்ப கண்டுபிப்புகள்
உயர்ந்து வரும் மரண பட்டியலை கண்டு மரணபயம் வழியே அடக்கினாலும் அதை உடைத்தெறிந்து
க�ொண்டுள்ளன. என்னிடம் அணு ஆயுதம் உண்டு, புதிய ப�ொலிவுடன் புறப்பட்டு வரும் இந்த கிருமிகள்.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த நாட்டை, அந்த இயற்கையை நேசி, இருப்பதை சம நிலையுடன்
நாட்டை தாக்குவேன் என்று க�ொக்கரித்த ப�ோர் பகிர்ந்து க�ொள், பூவுலகில் நாம் எல்லாம் வந்து
வெறியர்கள் கண்ணுக்கு தெரியாத கிருமியின் ப�ோகும் பயணிகள் என்பதை உணர்ந்து வாழும்
பெயரை கேட்டு வெல வெலத்து ப�ோய் நிற்கின்றனர். நாளில் இயற்கையை ரசி, இன்முகம் காட்டு,
க�ொர�ோனாவின் க�ோரத்தாண்டவம் க�ொத்து அன்பு செலுத்து, அரவணை, அத்துடன் நில்லாமல்
க�ொத்தாக மனிதனை க�ொத்திக் க�ொண்டு ப�ோகிறது. க�ொர�ோனாவுக்கு நன்றி செலுத்து.
மரண ஓலங்கள் மானுடத்தை தட்டி எழுப்புகிறது. வாட்சப், முகநூல் என்று எல்லாவற்றிலும்
க�ொர�ோனாவின் க�ோர பசிக்கு இதுவரை 19 ஆயிரம் அறிவியலுக்கு புறம்பான செய்திகளை பதிவிடுவதை
பேர் பலியாகியுள்ளனர். வெறும் 14 நாட்கள் மட்டுமே நிறுத்துங்கள். அன்றே ச�ொன்னார்கள் முன்னோர்கள்
ஒரு உடலில் பல்கி பெருகி உயிர் வாழும் கண்ணுக்கு என்று முனங்காதீர்கள். இலுமினாட்டிகள்
தெரியாத கிருமி மனிதனை ஆட்டம் காண செய்கிறது. இதை ச�ொன்னான், அதை ச�ொன்னான் என்று
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது அலறாதீர்கள், இதுவும் கடந்து ப�ோகும், உலகம்
ப�ோல, மனித இனம் காலாகாலமாக களவாடி வந்த இயங்கும். ஊழ்வினை அறுத்து உலகம் உய்ய நல்
இயற்கையின் பெரும் செல்வங்கள் சில நாட்களாக வழியில் உழையுங்கள். ம�ொத்தத்தில் தனித்திருங்கள்,
திருட்டு ப�ோகாமல் இருக்கிறது. விழித்திருங்கள்.
10   மே 2020 அறிவியல் பலகை!

மனித-தெய்வங்கள்!
கவிஞர் ராசி. பாஸ்கர்

இனம்புரியாத ஒரு அச்சமும்-பயமும் உயிர்காக்கும் மருத்துவர்களுமே


மனித-குலத்தை த�ொற்றியிருக்கின்றது! க�ொர�ோனாவிற்கு பலிகடாவாய்!
இதயத்தை உலுக்கி நம்மை உறக்கத்திலிருந்து த�ொடரும் உயிர்பலிக்கு தடுப்பணையாய்
சட்டென விழிக்கச்செய்திருக்கின்றது! தனிமைச்-சங்கிலித்தொடர்!
பலப்பல ஐயங்கள் நம் மனதில் தனிமைச்-சிறையில்
பாசிப�ோல் படர்ந்திருக்கின்றது!
“மனிதன், மனித-குலத்திடமிருந்தே”
பலிகடாக்கள�ோ நாமென மனித-குலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது - விந்தை!
பதை-பதைக்கின்றது!
தெய்வங்களின் இருப்பிடங்களுமே
இருபத்தொரு நூற்றாண்டுகளை மனிதயினம் தாழிடப்பட்டு, தெய்வங்களும்
இதுவரை இனங்கண்டிருக்கின்றது! தனிமைப்படுத்தப்பட்டுள்ளது -
விந்தையின் உச்சம்!
இருந்தாலும் கேள்விக்குறியாகவே
மனிதயினத்தின் நிகழ்-எதிர்காலமிருக்கின்றது! மாயையது அகன்று மடமையது புரிந்து
மனயிருளது விலகியது!
க�ொள்ளைந�ோய் க�ொர�ோனா-த�ொற்று தம்முயிரை க�ொர�ோனா-ப�ோர்க்களத்தில்
அதிகம் உலகில் பரவியிருக்கின்றது! பணயம் வைத்து ப�ோராடும்!
க�ொத்து-க�ொத்தாய் மனிதவுயிர்கள் ஒட்டும�ொத்த
தினமும் உலகில் செத்து-மடிகின்றது!
அரசு-சார்ந்த! அரசு-சாராத!
மர்ம-ந�ோய்க்குறிய மருந்தோ-மருத்துவம�ோ மருத்துவத்துறையினரும்!
இன்னமும் உலகினிலில்லை! மருத்துவ-ஆராய்ச்சித்துறையினரும்!
மரணத்திடம் மனிதயினம் மண்டியிட்டே தூய்மைப்-பணியாளர்களும்!
ஆகவேண்டிய துர்பாக்கிய-நிலை! காவல்துறையினரும்!
இராணுவத்துறையினரும்!
தீரமிக்க வல்லரசு நாடுகளெல்லாம் தன்னார்வலர்களும்! விவசாயிகளுமே!
திறமின்றி விழிபிதுங்கி நிற்கின்றது!
வாழும் மனித-தெய்வங்கள்
திரை-மறை பய�ோ-வார�ோ? என தெளிவது பிறந்தது!
மூன்றாம் உலகப்போர�ோ? ஐயமும் எழுகின்றது!
க�ொர�ோனா கற்றுத்தந்த பாடங்களும்-
அதி-நவீன ஆராய்ச்சி, உயிர்-காக்கும் மருத்துவம், படிப்பினைகளும் ஏராளம்!
ஆளுமை-சர்வாதிகாரம்!
மாண்டாலும் மீண்டும் மீண்டுவிடும் மனிதகுலம்!
அடிய�ோடு தகர்த்துவிட்டது க�ொள்ளை-ந�ோய்
க�ொர�ோனா அனைத்தையும்! துவண்டாலும் மீண்டும் துளிர்த்துவிடும்
மருத்துவத்துறையும்-விஞ்ஞானமும்!
உலகளாவிய மருத்துவத்திற்கே
க�ொர�ோனா பெருஞ்சவாலாய்! இதுவும் கடந்து ப�ோகும்!
அறிவியல் பலகையின் செயல்பாடுகள்!

நாள் செயல்பாடுகள் குறித்த விவரங்கள்


● இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
3,4-ஆகஸ்ட்-2019 ● இதன் த�ொடர்ச்சியாக, கீழ்வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன; சில நிகழ்ச்சிகள்
எதிர்வரும் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன:
● 15-செப்டம்பர்-2019-ல், சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில், வளைய சூரிய கிரகணம்
பற்றிய திட்டமிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
● தமிழகம் முழுவதும், வளைய சூரிய கிரகணம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

● அதே காலகட்டத்தில், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2019-ற்கான ஒருங்கிணைப்பு
பணிகள் நடைபெற்றன.
● 7,8-டிசம்பர்-2019-ல், மாநில அளவிலான வளைய சூரிய கிரகணம் பற்றிய இரண்டு நாள்
பயிற்சி முகாம் க�ோயம்புத்தூர் மற்றும் மதுரையில் நடைபெற்றது.
● 14,15-டிசம்பர்-2019-ல், புதுச்சேரியில் வளைய சூரிய கிரகணம் பற்றிய விழிப்புணர்வு முகாம்
நடைபெற்றது.
● 13,14-டிசம்பர்-2019-ல், தஞ்சாவூரில், இளைஞர்களுக்கான வளைய சூரிய கிரகண பயிற்சி முகாம்
நடைபெற்றது.
● மேற்குறிப்பிட்ட முகாம்களில் சுமார் 75 பேர் கலந்து க�ொண்டனர்.
● வளைய சூரிய கிரகணம் குறித்த பின்வரும் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன:
செப்டம்பர்-2019 (1). வளைய சூரிய கிரகணம்; (2). சூரிய கிரகண செயல்பாடுகள் கையேடு; (3). சூரிய கிரகணம்
முதல் குறித்த கேள்வி-பதில்கள்.
டிசம்பர்-2019 ● வளைய சூரிய கிரகணம் பற்றி எளிமையாக புரியும் விதத்தில் 5 இரு நிமிட வீடிய�ோ படங்கள்
வரை தயாரிக்கப்பட்டு அனைவரிடமும் பகிரப்பட்டது.
● சுமார் 25 லட்சம் மக்களிடம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் சென்று சேர்ந்துள்ளது.
● வளைய சூரிய கிரகண ப�ோஸ்டர் மற்றும் 5 டிஜிட்டல் சிறு வடிவ பிரச்சுரம் தயாரிக்கப்பட்டு
அனைவரிடமும் பகிரப்பட்டது.
● 24-26-டிசம்பர்-2019-ல், திருப்பூர் அவினாசியில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் திருவிழா
ஒருங்கிணைப்பில், அறிவியல் பலகையும் பங்கெடுத்தது.
● 26-டிசம்பர்-2019-ல், வளைய சூரிய கிரகண தினத்தன்று, சென்னை, கரூர், ஈர�ோடு,

புதுக்கோட்டை, மதுரை, க�ோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் மக்கள் அதிக அளவில்
பங்கேற்று வளைய சூரிய கிரகணகத்தை கண்டுரசித்தனர்.
● முனைவர். த.வி. வெங்கடேஸ்வரன் தலைமையில், வளைய சூரிய கிரகணம் குறித்த
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு 21-டிசம்பர்-2019-ல் சென்னையிலும், 22-டிசம்பர்-2019-ல்
திருச்சியிலும், 23-டிசம்பர்-2019-ல் மதுரையிலும், 24-டிசம்பர்-2019-ல் ஈர�ோட்டிலும் நடைபெற்றது.
● 5-8-நவம்பர்-2019-ல் க�ொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா
2019-ல் பலர் பங்கேற்றனர்.
வளைய சூரிய கிரகண பிரச்சாரப் படிப்பினைகள் குறித்த கூட்டம், முனைவர். நகுல் பராசர்
20-ஜனவரி-2020

தலைமையில் சென்னை தமிழ்நாடு அறிவியல் த�ொழில்நுட்ப மையத்தில் நடைபெற்றது.
● அறிவியல் பலகையின் வெளியீட்டு குழு கூட்டம், முனைவர். மயில்சாமி அண்ணாதுரை
21-ஜனவரி-2020 தலைமையில் தமிழ்நாடு அறிவியல் த�ொழில்நுட்ப மையத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
முனைவர். நகுல் பராசர், முனைவர். த.வி. வெங்கடேஸ்வரன் ஆகிய�ோர் கலந்துக�ொண்டனர்.
கணித மேதை சீனிவாச ராமானுஜன் நூற்றாண்டு நினைவு க�ொண்டாட்டம் குறித்த கூட்டம்,
11-பிப்ரவரி-2020

விஞ்ஞான் பிரச்சார் புது தில்லி அலுவலகத்தில் நடைபெற்றது.
கும்பக�ோணத்தில், கணித மேதை சீனிவாச ராமானுஜன் நூற்றாண்டு நினைவு க�ொண்டாட்டம்
4-மார்ச்-2020

குறித்த திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.
● மார்ச்-ஏப்ரல் 2020, பல்வேறு தலைப்புகளிலான 7 அறிவியல் புத்தகங்கள் வெளியிடும் பணி
நடைபெறுகிறது.

12-ஏப்ரல்-2020 ● ஏப்ரல் 12 முதல் இதுவரை, க�ோவிட் 19 விழிப்புணர்வு பற்றிய 5 ஜூம் ஒலி-ஒளி


கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
● மே 2020, அறிவியல் பலகை இதழ் டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
தமிழில் அறிவியல் நூல்கள்
படைக்க விருப்பமுள்ளவரா நீங்கள்!

நூல் சாரும் துறை,


10 முதல் 18 வயது நூலின் உள்ளடக்கம்,
இளைய�ோருக்கு உங்களின் திட்டத்தினை,
பெரிதும் பயன்படும் வகையில், சுருக்கமாகவும்,
தமிழில்! தெளிவாகவும் குறிப்பிடவும்!

மத்திய அரசின்
விஞ்ஞான் பிரச்சார்

உங்கள் நூல்களை
வெளியிட காத்திருக்கின்றது!

பரிசீலனைக்காக,
உங்கள் நூல்களை, மாதிரியினை,
அருமையான நடையில், முதல்-அத்தியாயம் உள்ளிட்ட
அசலான வடிவில் தேவையானவற்றுடன்
எழுதுங்கள்! இணைத்து அனுப்புங்கள்!

உங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய


முகவரி & மின்னஞ்சல்: வெளியீட்டாளர்:
Dr த. வி. வெங்கடேஸ்வரன் Dr நகுல் பராசர்
முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார் இயக்குனர், விஞ்ஞான் பிரச்சார்
தலைமைப் ப�ொறுப்பாளர், அறிவியல் பலகை மத்திய அரசின்
Office: A-50, Institutional Area, Sector-62, அறிவியல் மற்றும் த�ொழில்நுட்பத் துறை
Noida-201309, UP, India Office: A-50, Institutional Area, Sector-62,
Noida-201309, UP, India
✉   tamil@vigyanprasar.gov.in
ஒவ்வொரு வருடமும் மூன்று முறை (ஜுலை, நவம்பர், பிப்ரவரி ஆகிய மாதங்களில்)
படைப்புகள் குறித்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் க�ொள்ளப்படும்.
இந்தத் திட்டம் குறித்த விதிமுறைகள் அறிய https://vigyanprasar.gov.in/tamil/ என்ற வலைதளத்தைக் காணவும்.

You might also like