You are on page 1of 5

கோவிட்-19 பெருந்தொற்று சமூகத்தில் உண்டாக்கிய மாற்றம்

காலச்சக்கரத்தில் ஒவ்வொரு நிலையிலும் இந்த பூமியைப் புரட்டி போடக்கூடிய ஒரு நிகழ்வு


நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் சில நிகழ்வுகள் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு
நடப்பவை. சில நிகழ்வுகள் மனிதனின் முறையற்ற செயல்பாடுகளால் ஏற்படுபவை. இன்று
உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் கோறனி நச்சில் பாதிப்புகள் இயற்கையாக ஏற்பட்டதா?
அல்லது மனித செயல்பாடுகளின் விளைவாக ஏற்பட்டதா? என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும்
ஒரு நிதர்சனமான உண்மை சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆம் , இன்று
இச்சபையில் நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு கோவிட் -19 பெருந்தொற்று சமூகத்தில்
உண்டாக்கிய மாற்றம் .

உலகெங்கும் ஒரே மொழி கொரோனா மொழி . மாந்தர் அனைவரையும் மொழி, இன , மத ,இட , நாடு
, ஏழை , பணக்காரன் என்ற வேறுபாடின்றி தொற்றிக் கொண்டிருக்கும் ; ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கும் ஒரே மொழி… கண்ணுக்குப் புலப்படாத நுண்ணி , நுண்மியாகிய நச்சில்
கொரோனா…இன்று கண்ணுக்குப் புலப்படாத நீ சமூகத்தில் உண்டாக்கிய மாற்றங்கள்தான்
எத்தனை? எத்தனை ? ……….

முதலாவதாக தனி மனித ஒழுக்கம்

ஒட்டுமொத்த மனித குலத்தின் இன்றைய தேவை இந்நோயிலிருந்து மக்களைப்


பாதுகாப்பது எப்படி என்றும், இழந்த பாதிப்புகளால் ஏற்பட்ட தாக்கங்களில் இருந்து மீண்டு வருவது
எப்படி என்பதும் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த இடர்பாடுகளை வாய்ப்பாகப்
பயன்படுத்தி மக்களின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஓர் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக்
கொண்டு வருவதற்கு வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.. அதுவும் அவரவர் உயிர்
சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால் மக்கள் மத்தியில் பயத்துடன் கூடிய விழிப்புணர்வைப் பார்க்க
முடிகிறது. இந்த புதிய அத்தியாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நமது வாழ்க்கை முறையில் சில
நல்ல மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாற்றங்கள் இதோ...
அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்பது மருத்துவ ரீதியாக எத்தனையோ முறை
எடுத்துச் சொல்லப்பட்டு, அதற்கென்று ஒரு சர்வதேச தினமே உள்ளபோதும், அதுபற்றிய
விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்படாத நிலையில், கோறனி நச்சில் அச்சத்தால் இன்று மக்கள்
கைகளைக் கழுவுவதை பரவலாக பார்க்க முடிகிறது. இதை பயன்படுத்தி ஒவ்வொருவரும்
வாழ்வோடு ஒன்றிணைந்த பழக்க வழக்கமாக மாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

… இரும்பும் போதும், தும்மும் போதும், வாயை கையால் மறைத்துக் கொண்டு இருமாமல்,


நேருக்கு நேராக தும்மும்போது லட்சக்கணக்கான கிருமிகள் எதிரே நிற்போரை பாதிப்பதோடு
மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் அந்த நோய்க்கிருமிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பல்வேறு
நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதை உணரும் தருணம் இது. தும்மும் போதும், இருமும்
போதும் கடைபிடிக்க வேண்டிய தனிமனித ஒழுக்கத்தை இயல்பாகவே பழக்கப்படுத்துவதற்கு நல்ல
வாய்ப்பு. இந்த தவறான செயலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இதை விட சிறந்த
தருணம் இருக்க முடியாது.

மேலும் கண்ட இடங்களில் துப்பும் பழக்கம் மூலம் கிருமிகள் பரவுவதை எடுத்துக்கூறி


ஒவ்வொரு நபரும் நோய்களை உருவாக்கும் இயந்திரமாக செயல்படாமல் நல்ல பழக்கங்களை கற்றுக்
கொடுக்கும் நடமாடும் கல்விக் கூடங்களாக மாறுவதற்கு நல்ல வாய்ப்பு. எந்த ஒரு செயலாக
இருந்தாலும் தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் அது பழக்க வழக்கமாகிவிடும் என்ற
உளவியல் உண்மையை பயன்படுத்தி தனிமனித செயல்பாடுகளை ஒழுக்கத்தோடு செய்யும்
பழக்கத்ததை ஏற்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு ஆகும் .

இரண்டாவதாக மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன?

தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது


உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட
வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல்
மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர்.

ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப்


பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கோறனி நச்சில் நோய்த்
தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள்
சொல்கிறார்கள்; சமூக ஊடக தளங்களில் பயமுறுத்தும் புள்ளி விவரங்கள், நடைமுறை
ஆலோசனை என பல விஷயங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியான இந்தச் செய்தித்
தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கும், அது மன ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும்.

கொரோனா தொற்று தடுப்பு எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று தொற்று தாக்கிய


காலங்களில் மனநலம் பேணுவதும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் நோய் தொற்று தாக்குதலில்
இருந்து விடுபடுவதற்கு தனிமைப்படுத்துதல் அவசியமாகி விடுகிறது. அவ்வாறு
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிறரிடம் தொடர்பு இல்லாமல் இருப்பதால் மனச்சோர்வு நோய்க்கு
ஆளாக வாய்ப்பு உள்ளது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிடும்
நிலையில் உதவி செய்ய ஆள் இல்லாதபோது மனம் பதற்றமடையும். கை கழுவுதல், சுகாதாரம்
குறித்த விழிப்புணர்வு செயல் ஆகியவற்றை சரிவர செய்தோமா? முக கவசம் சரியாக
அணிந்தோமா? போன்ற சந்தேகங்கள் வருவதால் திரும்ப, திரும்ப அந்த வேலைகளை செய்ய
முற்படுவதுண்டு. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் பிற உறவினர்களை சந்திக்க இயலாதபோது,
அவர்களுடைய ஆலோசனைகளை பெற இயலாததால் மனகுழப்பத்திற்கு ஆளாக நேரிடும். இது
தீவிரமடையும் போது தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும்.

தொடர்ந்து , கோவிட்-19 பெருந்தொற்று சமூகத்தில் உண்டாக்கிய பொருளாதார


மாற்றத்தப் பார்ப்போம் ….

கோறனி நச்சில் தாக்கம் காரணமாக உலக மக்கள் அனைவருமே பாதிப்பிற்கு


உள்ளாகியுள்ளமை புதிய விடயமல்ல. அரசன் முதல் ஆண்டிவரை கொரோனா எல்லோரிடமும் தனது
வக்கிரத்தைக் காட்டி இருக்கின்றது. ஊரடங்கால் உலக நாடுகளில் பொருளாதாரம்
பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடி ஒரு முக்கிய
பிரச்னையாக இருக்கிறது.கொரோனா வைரஸ் அனைவரிடத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள
நிலையில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற பின்தங்கிய மக்கள் கொரோனாவினால் கூடிய
பாதிப்பினை ஏதிர்கொண்டுள்ளனர். அன்றாட உழைப்பாளர்கள் பலரும் இதனால்
பாதிக்கப்பட்டுள்ளனர். முடித்திருத்துபவர்கள் ,சுய தொழில் செய்பவர்கள், வர்த்தக நிலையங்களில்
பணியாற்றுபவர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப்பலரும் இந்த வரிசையில் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வழியின்றி ஒரு வேளை சோற்றுக்கே இன்று அல்லல்படுவதனையும்
கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. கையில் பணவசதி இல்லாத நிலையில் உணவுப் பொருட்களைக்
கொள்வனவு செய்வதற்கு இவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் இவர்கள்
வாழ்நாளை மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே கழிக்க வேண்டியுள்ளது.

கொரோனா வைரசால் மாறிய மாணவர்களின் நிலை ;

பொதுவாகவே விடுமுறைகளுக்கு, ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் இயல்பு


உண்டு. குறிப்பாக மாணவர்களுக்கு. விடுமுறை என்ற உடன் கற்றல் தரும் இறுக்கம் தளர்ந்து,
உவகையும் உற்சாகமும் மாணவர்களிடம் குடியேறிவிடும். ஆனால், கோறனி நச்சில் பரவும்
அச்சத்தால் விடப்பட்டி ருக்கும் இந்த அசாதாரண விடுமுறையை அப்படிக் கருத முடியாது.
கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கல்வி வளாகங்கள்  மூடப்பட்டுள்ளன .
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான, மறக்க முடியாத காலங்கள் என்றால் அது பள்ளி
மற்றும் கல்லூரி காலங்கள் என்பார்கள். அந்த அழகான அனுபவத்தை தற்போதைய
தலைமுறையிடம் இருந்து கொரோனா தட்டி பறித்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.
அவநம்பிக்கையும் உலகெங்கும் பரவியிருப்பதால், வெளியே செல்ல முடியாமல் மாணவர்கள்
வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அலுப்பூட்டும் தெரிந்த முகங்கள், சலிப்பூட்டும் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் / வீடியோ கேம் என வீடே சிறையாகிவிட்டதால், கற்றலை கூடக் கூடுதல் இறுக்கத்தை
இந்த விடுமுறை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நச்சில் தொற்று தற்போது இருக்கும்
கல்வி கொள்கைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் மறு கட்டமைப்புகள்
உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் உலகெங்கிலுமுள்ள கல்வியாளர்களை சிந்திக்க
வைத்துள்ளது.

இணையதளம் மூலம் கல்வி கற்பது புதிய போக்காக உருவெடுத்து இருக்கலாம். ஆனால்


பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை சேர்நத
் மாணவர்களுக்கு இது எப்படிப்பட்டதாக
இருக்கும்? இணைய வழியாகச் சில கல்வி நிலையங்கள் கற்பிக்கத் தொடங்கினாலும்
பெரும்பான்மையான மாணவர்களால் அதில் பங்குபெற முடியாத நிலையே உள்ளது.

You might also like