You are on page 1of 3

முகநூல் படுத்தும் பாடு

மதிப்பிற்குரிய அவை தலைவர் அவர்களே, நீதி தவறா நீதிமான்களெ,

கடமையைக் கண்ணென செய்யும் தலைமையாசிரியர்களே, ஆசிரியப்

பெருமக்களே, பெற்றோர்களே, மாணவர்களே உங்கள் அனைவருக்கும் எனது

அன்பு வணக்கங்கள். இவ்வினிய காலை பொழுதில் நான் பேச எடுத்துக்

கொண்ட தலைப்பு ‘முகநூல் படுத்தும் பாடு’.

மதிப்பிற்குரிய சபையோர்களே,

வீடியோக்கள், நாளாந்த செய்திகள், பொழுது போக்கு அம்சங்கள் என

எதுவாக இருந்தாலும் இன்று உடனுக்குடன் மக்கள் தங்கள்

கைத்தொலைப்பேசியில் அறிந்து கொள்ளும் அளவுக்கு வேகமான தொடர்பு

ஊடகமாக மக்கள் மயப்பட்டிருப்பது முகநூல் என்ற சமூக வலை தளமாகும்.

இம்முகநூலினால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன.

அன்பார்ந்த கல்விமான்களெ,

முகநூல் தனித்துவமான ஒரு கட்டமைப்பு அல்ல, இது சிறிது சிறிதாகச்

சிறார்களை ஆழ்ந்த கடல்போன்ற கட்டற்ற மின்வலைக்கு எடுத்துச் செல்ல

மிகுதியான வாய்ப்புக்கள் உண்டு. பிள்ளைகள் மின் வலையத்திற்குத் தாமாகவே

செல்ல வயது குறைந்தவர்கள் எனப் பெற்றோர் நினைத்தால், சமூகவலை

உபயோகத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். குறிப்பாகத் தகாத தொடர்புகளை

பிள்ளைகள் பெறாமல் காக்க வேண்டும்.


வருகையாளர்களே,

முகநூல் போன்ற சமூகவலையில் வரையறையின்றி யாரும் யாரிடமும்

தொடர்பு கொள்ளலாம். குறிப்பாகப் பிள்ளைகள் பெற்றோர், சுற்றார் மூலமே

இயல்பாக சமூகவரையறைகளைப் பெறுவர். ஆயினும் முகநூல் போன்ற

சாதனங்களில் சிலர் தமது கொடிமைத்தனத்தை நேரடியாகவும்,

அனாமதேயமாகவும் காட்ட வழிவகுக்கும். ஒருத்தருக்கு ஒருவர்

அல்லது ஒரு குழுவாகப் பிள்ளைகளை உளவியல் ரீதியில் தாக்கவும்

வழியுண்டு.

பெருமதிப்பிற்குரிய அவையினரே,

முகநூலில் ஆழ்ந்து உலக சிந்தனையே இல்லாமல் கனவு லோகத்தில்

சதா சஞ்சரித்துக்கொண்டு, பித்து பிடித்தாற்போல் நடமாடும் இளைஞர்களைக்

கண்டு மனம் வெதும்பும் பெற்றோர்கள் அதிகரித்துவருகின்றனர்; தங்களின் உலக

சிந்தனையை வளர்க்கின்றோம் என்ற பெயரில் இளைஞர்கள் செய்யும்

காரியங்கள் எண்ணில் அடங்கா.

வருகையாளர்களே,

வழிகாட்டுவதற்காகவும் வழிகாட்டியாகவும் முகநூல் இருக்க வேண்டும்

என்ற நோக்கத்தை அது முற்றிலும் சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல

வேண்டும். பெரும்பாலும் அதில் காணப்படும் தகவல்கள், சுய புராணப்

புகழ்ச்சிகளாகவும் கவனத்தை திசை திருப்பும் தகவல்களாகவும்தான்


இருக்கின்றன. மேலும், பிடிக்காத நபர்களைப் பற்றி பழிவாங்கும் உள்

எண்ணத்துடன் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

ஒரு ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உரித்தான தகவல்கள்

முகநூலில் குறைவதால் தவறான வழிகாட்டலில்தான் முடிகின்றன. இதுவும்

கத்திபோன்றதுதான்; காய் நறுக்க மட்டுமே பயன்படும்வரை கத்தி நல்லதுதான்.

பலர் பலன் பெறும் வகையில் மட்டுமே முகநூல் பயன்படுத்தப்பட வேண்டும்.

இளமை வேகம் பொல்லாதது என்பதுடன் பயமறியாது என்பதால்

வழிதவறத்தான் செய்கின்றன.

மதிப்பிற்குரிய கல்விமான்களெ,

எனவே முகநூல் போன்ற சமூகவலைய தளங்களை நாம்

ஒன்றாகக்கூடிச் சிந்தித்து உள, உடல் ஆரோக்கியத்தையும் பேணும்

வகையில் கையாளுதல் நன்மையே. நன்றி, வணக்கம்.

You might also like