You are on page 1of 5

Tel.

+91 99442 49934 133/31A, 5th A cross, Sha Nagar


pec.itcwing@gmail.com Pallapatti, Karur(Dt) 639207

(Registered under
Tamilnadu Societies Registration Act, 1975
SRG/KARUR/59/2021)

Date : 16/02/2023

உயர்கல்வியே சமூக மறுமலர்ச்சி..!!


உயர்கல்வி கற்பதில் நம் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது.
இதை நாம் கவனத்தில்கொண்டு அல்லாஹ்வின் உதவியோடு
நம் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில்
ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு தான் இது.

இந்த நிகழ்வில் பல கல்வியாளர்களும்,சாதனையாளர்களும்


சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பயனுள்ள கருத்துக்களை
பகிர்ந்துகொணடனர்.அல்ஹம்துலில்லாஹ்!

நம் சமூகம் முன்னேற்றமடைய/வலுவாக கட்டமைக்க என்ன செய்ய


வேண்டும் என்பது குறித்து ஆலசோனைகளை வழங்கினர்.

சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன்


ஏறத்தாழ 2 1/2 மணி நேரம் நடைபெற்றது நமது இணையவழி மஷ்வரா.
மாஷா அல்லாஹ்!

சமூக முன்னேற்றத்திற்காக தங்களது நேரத்தை செலவிட்டு தங்களது


பொன்னான கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
பகிர்ந்துகொண்ட மற்றும் பங்கேற்ற அத்துணை நல் உள்ளங்களையும்
அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக என்று துஆ செய்வதோடு
எங்களது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்கள்/ஆலோசனைகள்


சுருக்கமாக உங்கள் பார்வைக்கு:

ஜனாப் சேட் அவர்கள் மிக சிறப்பாக நிகழ்வை தொகுத்து


வழங்கினார்கள்.

ஜனாப் மாணா மூனா இஸ்மாயில் சேட் அவர்கள்:

உயர்கல்வியில் நம் மாணவ மாணவிகளை வெற்றிபெற செய்ய


நாம் ஆரம்பக்கல்வி முதலே அதிக கவனம் செலுத்த வேண்டும்
என்பதை மிக அழகாக விளக்கினார்கள்.
உருவாகுவோம் உருவாக்குவோம்
இணைவோம் இணைப்போம்
தரமான ஆரம்பக்கல்வி திறமையான சமூகத்தை உருவாக்குவதில்
முக்கிய பங்கு வகிக்கும் என்பதை எடுத்துரைத்தார்கள்.

ஜனாப் ஷேக் பாதுஷா அவர்கள்:


10 முதல் 12ம் வகுப்பு மாணவ , மாணவியருக்கு தொடர் வழிகாட்டல்


வழங்க வேண்டும் எனவும்.பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வூட்ட
வேண்டும் எனவும் கூறினார்.

அரசு கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகளை நம் சமுதாயத்தினர்


சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியதோடு
இன்னும் பல பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

ஜனாப் அப்துல் காதர் அவர்கள்:


சிறந்த கட்டமைப்பை உருவாக்கி தொடந்து களத்தில் இறங்கி


செயல்பட வேண்டும்,

பள்ளிவாசல்களை மைய்யப்படுத்தி கணினி வசதியுடன்


நூலகங்களை அமைக்க வேண்டும்.

அரசாங்கம் வழங்கும் திட்டங்கள்/ உதவி தொகைகளை முழுமையாக


பயன்படுத்த வேண்டும் என்றும் இன்னும் பல பயனுள்ள
கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

ஜனாப் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்:

பயணத்தில் இருந்த போதும் சிரமம் பாராமல் நமது நிகழ்வில்


கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

கல்வியாளர்களை உருவாக்குவதோடு சேர்த்து


திறன்படைத்தவர்களை/துறைசார்ந்த வல்லுநர்களை
உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்களது கனவை பிள்ளைகள் மீது திணிக்காமல்


அவர்கள் சாதிக்க விரும்பும் துறையில் உருவாக ஒத்துழைக்க
வேண்டும் போன்ற பல விஷயங்களை அறிவுறுத்தினார்கள்.

ஜனாபா சுமையா பேகம் அவர்கள்:

இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்வு மிக பெறிய மாற்றத்தை ஏற்படுத்த


வேண்டும் என்ற துஆவோடு தனது உரையை துவங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
உருவாகுவோம் உருவாக்குவோம்
இணைவோம் இணைப்போம்
பெண் பிள்ளைகளின் உயர்கல்வி, பொது அறிவு மற்றும் ஆரோக்கிய
மேம்பாடு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவச்செல்வங்களின் திறன் மேம்பாட்டிற்கு உதவும் வகையில்


"KNOWLEDGE SCHOOLS" துவங்க வேண்டும் என அறிவுத்தினார்கள்.

ஜனாபா பாத்திமா முஜஃபர் அவர்கள்:

இந்த நிகழ்வு பற்றி "It's not a program It's a Project" என்று


தொலைநோக்கு பார்வையுடன் அழகிய வார்த்தைகளால் தனது
உரையை துவங்கினார்கள். மாஷா அல்லாஹ்!

தங்களது குழந்தைகளை திறமையாளர்களாக உருவாக்குவதில்


பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் அதிக கவனம் செலுத்த
வேண்டும் என்பதை “The hand that rocks the cradle is the hand that rules
the world” என்ற பொன்மொழியை எடுத்துக்காட்டாக கூறி
வலியுறுத்தினார்கள்.

நமது குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் அறிவு, ஓழுக்கம், திறன்


மேம்பாடு போன்றவற்றை கற்றுக்கொடுத்து வளர்த்தாளே இன்ஷா
அல்லாஹ் அவர்கள் சிறந்த சாதனையாளர்களை உருவாகுவார்கள்
என்று கூறியதோடு மற்றும் பல விஷயங்களை பகிர்ந்து
கொண்டார்கள்.

ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்:

நமது முன்னோர்கள் பல சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை


உருவாக்கினார்கள்.சிறந்த பதவிகளில் இருந்தார்கள். ஆனால்
தற்போது உயர்கல்வி பயிலும் நம் மாணவர்களின் எண்ணிக்கை
குறைந்து வருகிறது என்று கூறினார்கள்.

நம் ஒட்டுமொத்த சமுதாயமும் பொறுப்பெடுத்து இதற்கான


காரணங்களை கண்டறிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு தேவையான


கோரிக்கைகளை அரசிடம் முன்வைப்போம் என்றும்
தெரிவித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

ஜனாப் C M N சலீம் அவர்கள்:

இதுபோன்ற நிகழ்வுகள் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும்


என்றும் இப்படிபட்ட நிகழ்வுகளை நேரடியாகவும் (physical events) நடத்த
வேண்டுமென்றும் விருப்பம் தெரிவித்தார்கள்.

உருவாகுவோம் உருவாக்குவோம்
இணைவோம் இணைப்போம்
"படைத்தவனை அறிந்துகொள் படைப்பினங்களை ஆராய்ச்சி செய்"
என்ற அழகிய வார்த்தைகளோடு ஆராய்ச்சி கல்வியின் அவசியத்தை
உணர்த்தினார்கள். ஆராய்ச்சி கல்விக்கென ஒரு தனி குழு அமைக்க
வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்:

பெற்றோர்களிடம் தெளிவான சிந்தனையை விதைக்க வேண்டும்


என்று கூறினார்கள்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் உதவியோடு 8ம் வகுப்பிலிருந்தே


மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உள்ள சிரமங்களை இலகுவாக்கி
வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள்:

வேறு ஒரு நிகழ்வில் பங்கேற்று இருந்த போதும் அதனிடையே


நம்முடைய இந்த நிகழ்விற்காக நேரம் ஒதுக்கி உரையாடினார்கள்.
மாஷா அல்லாஹ்!

உயர்கல்வி படிப்பவர்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது இருப்பினும்


நம் சமுதாயத்தினரின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் இருப்பது
வருத்தத்திற்குரிய விஷயம் என்று கூறினார்கள்.

சமூக வலைத்தளங்களின் மூலம் மத்திய அரசின் பல்கலைக்கழகத்தை


பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் அந்த வாய்ப்புகளை நம்
சமுதாயத்தினர் பயன்படுத்திக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது
என்று தெரிவித்தார்கள்.

நம் சமூக முன்னேற்றதிற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு


மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

ஜனாப் கலீல் மௌலானா அவர்கள்:

நிகழ்வின் நிறைவாக ஜனாப் கலீல் மௌலானா அவர்கள் நிறைவுரை


வழங்கினார்கள் அடுத்தகட்ட ஏற்பாடுகள் செய்வதில் கவனம்
செலுத்தப்படும் என்பதை தெரிவித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

உருவாகுவோம் உருவாக்குவோம்
இணைவோம் இணைப்போம்

ஏறத்தாழ இரண்டரை மணி நேரமும் நிகழ்வில் முழுமையாக


கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்த பெருமதிப்பிற்குரிய
பங்கேற்பாளர்கள் பகிர்ந்துக்கொண்ட அவர்களது பொன்னான
கருத்துக்களில் சில:

ஜனாப் மர்ஜுக் (UK )அவர்கள்:

நம் மக்களிடையே IIT, IIM, NIT போன்ற கல்வி நிறுவங்களை பற்றி


விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஜனாப் சையத் ஹுசைன் (UK)அவர்கள்:

நம் சமூகத்தை சார்ந்த சிறந்த கல்வியாளர்கள்/ சாதனையாளர்களை


கொண்டு மாணவர்களை ஊக்குவிக்க/வழிகாட்டல்கள் வழங்க வேண்டும்.

ஜனாப் முஹைதீன் மாலிக் அவர்கள் :

ஒவ்வொரு மொஹல்லாவிலும் டியூஷன்கள் நடத்த வேண்டும்

ஜனாப் அவர்கள் :

இதற்காக ஒரு தனி வாட்ஸாப் குழு துவங்கினால் சிறப்பாக செயல்பட


உதவும்.

மேலும் கல்வி சார்ந்த வழிகாட்டல்களுக்கு தங்களை தொடர்பு


கொள்ளுமாறும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காக உதவ தாங்கள்
தயாராக இருப்பதாகவும் பலரும் குறிப்பிட்டிருந்தது மனம் மகிழச்
செய்தது. அல்ஹம்துலில்லாஹ்!

ஜஜாகல்லாஹ்!
ஷாஹுல் ஹமீது
அட்மின் - PEC

உருவாகுவோம் உருவாக்குவோம்
இணைவோம் இணைப்போம்

You might also like