You are on page 1of 13

1.

1 முன்னுரை

1957 ஆம் ஆண்டிலே அன்றைய மலாயாவாக இருந்த இன்றைய நமது

மலேசியா விடுதலைக் காற்றைச் சுவாசிக்க தொடங்கிய அந்த

நொடியிலிருந்து, சுமார் 60 ஆண்டுகள் இந்நாட்டைத் தலைமையேற்று

வழிநடத்திய அரசாங்கம் தேசிய முன்னணி அரசாங்கம். ஆசியா அளவில்

மட்டுமல்லாது உலக அளவில் பொதுவாக அனைத்து நாடுகளும் ஒவ்வொரு

பொதுத் தேர்தல்களிலும் ஆட்சி மாற்றங்களைக் கண்டு வந்த நிலையில்,

தொடர்ச்சியாக 60 ஆண்டுகள் ஒரே கட்சியைச் சேர்ந்த வெவ்வேறு

தலைவர்களின் கீழ் மலேசியா வளர்ந்து வந்தது.

12 பொதுத் தேர்தல்கள் இப்படியே செல்ல, 13 வது பொதுத் தேர்தல் நம்

நாட்டின் அரசியல் தலையெழுத்தை மாற்றுமா என்ற கேள்வியைப் பலருக்கு

எழுப்பியது. அந்த 13 வது பொதுத் தேர்தலில் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக்

அவர்களின் தேசிய முன்னணிக் கூட்டணியை எதிர்த்து, எதிர்க்கட்சிகள்

அனைத்தும் ஒன்றாக இணைந்து டத்தோ ஶ்ரீ அன்வார் இப்புராகிம்

தலைமையில் ‘பக்காத்தான் ராக்யாட் – மக்கள் கூட்டணி’ என்ற சின்னத்தோடு

களம் கண்டது. சொற்ப நாடாளுமன்ற தொகுதிகள் வேறுபாட்டில் மீண்டும்

தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது.


14 வது பொதுத் தேர்தல் 2018 ஆம் ஆண்டிலே நடைபெற்றது. இதில்

மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு மேனாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது

தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெற்று புத்ராஜெயாவைக்

கைப்பற்றியது. இருந்த போதும் அரசியல் உட்பூசல் காரணமாக அந்த

ஆட்சியும் இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்தது.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்ட உடனே,

நமது நாடு 2022 ஆம் ஆண்டு 15 வது பொதுத் தேர்தலைச் சந்தித்தது. இதில்,

மீண்டும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்புராகிம் தலைமையிலான நம்பிக்கைக்

கூட்டணி அதிகமான இடங்களை வெற்றிக் கொண்ட போதும், ஆட்சி

அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற தவறியிருந்தது. நாட்டில்

தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் அறிஞர்கள்

கோடி காட்டிய வேளையில், இதில் மாட்சிமை தங்கிய மாமன்னர் தலையிட்டு,

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்க

அறிவுறுத்தினார். மாமன்னரின் அறிவுரையை ஏற்று நம்பிக்கைக் கூட்டணியும்

தேசிய முன்னணியும் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தைத் தோற்றுவித்தனர்.

பெரிய போராட்டத்திற்கு பிற்கு அமைந்த இந்த ஒற்றுமை

அரசாங்கத்தை மக்கள் தங்களுக்கான அரசாங்கமாகக் கருதுகின்றனர். இந்த

அரசாங்கமானது மக்களின் நலனைக் காக்கும் பல நலத்திட்டங்களை

அமல்படுத்துவது அவர்களின் தலையாயக் கடமையாகும்.


1.2 வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைத்தல்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு மலேசியர்கள் வேகமாக அதிகரித்து

வரும் வாழ்க்கை செலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021-ஆம்

ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 2.1%-இல் இருந்து 3.1% அதிகரித்துள்ளது.

இந்த பணவீக்கமானது நாட்டில் ஏற்பட்டுள்ள சந்தை தேவை, அடிப்படை

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வழங்கீட்டுச் சங்கிலியில் ஏற்படும்

குறைப்பாடுகள் ஆகியவற்றின் மூலமாகவே ஏற்படுகிறது.

இவ்வாறான வாழ்க்கை செலவீன அதிகரிப்புச் சிக்கல்களைக்

களைவதற்கு நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்க்ச் செயல்படுவது

அவசியமாகிறது. பணவீக்கம் நாட்டின் தற்போதைய சந்தை நிலையைப்

பொறுத்து அமைந்திருந்தாலும், நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தும்

அரசாங்கம் கண்டிப்பாகப் பணவீக்கத்தை குறைக்கும் அல்லது மக்களின்

பணச்சுமையைக் குறைக்கும் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த

வேண்டும். எனவே, இந்த ஒற்றுமை அரசாங்கமானது இவ்வாறான

வாழ்க்கைச் செலவீனங்களின் மூலம் எதிர்கொள்ளும் சிக்கல்களை

களைவதற்கு குறுகிய காலத் திட்டங்களையும் நீண்ட கால தீர்வையும் வழங்க

முணைப்புக் காட்ட வேண்டும்.

1.3 ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்குதல்


கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் நாட்டின் கல்வி முறைமையின்

பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. ஊரடங்கினால் பள்ளிகள்

மூடப்பட்ட நிலையில், இல்லிருப்புக் கற்றல் நடைபெற்றது. இது நாடு நழுவிய

நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமாகச் சென்று சேர்ந்ததா?

என்பது பெரிய கேள்விக்குறி.

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், கற்றலில்

ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் வண்ணம், வாசித்தல், எழுதுதல்,

எண்ணுதல் திறன்களை மாணவர்களிடையே மதிப்பீடு செய்ய சிறப்பு வரவுச்

செலவு ஒதுக்கப்பட வேண்டும். அதே வேளையில், இத்திறனில் இருந்து

விடுப்பட்டுள்ள மாணவர்கள், குறிப்பாக வறுமை கோட்டிலும் புறநகர்

பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கும் கூடுதல் கவனம்

வழங்கப்பட வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகை

வழங்குவதன் வழி இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி

மாணவர்களுக்கான மீட்புத் திட்டத்தைச் முறையாக வழிநடந்த ஓர்

உந்துகோலாக அமையும். இதன் வாயிலாக, இம்மூன்று திறன்களில்

பிந்தங்கியிருக்கும் மாணவர்களின் விழுகாட்டை குறைக்கலாம்.

1.4 சுகாதாரத் துறையை மேம்படுத்துதல்


பொது சுகாதாரம் என்பது மக்களின் நல்வாழ்வோடு நெருங்கிய

தொடர்புடையது. அனைவராலும் அணுகக்கூடிய நல்ல பொது சுகாதாரம்

உள்ள நாடுகளில் ஒன்றாக மலேசியா சான்றளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய வளர்ச்சி மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப

பொது சுகாதாரப் பாதுகாப்புக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட

வேண்டும்.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மக்கள்தொகையில் 15%க்கும்

அதிகமானோர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்

என்று தேசிய கணக்கெடுப்பு வாரியம் கூறுகின்றது. இதன் அடிப்படையில்

பொது மருத்துவமனைகளின் சிகிக்சைக்காகக் காத்திருக்கும் நேரத்தைக்

குறைக்க அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும். பொது

மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும்

என்ற பார்வையை மக்களிடமிருந்து நீக்கும் கடப்பாடு இந்த அரசாங்கத்திற்கு

உண்டு. எனவே, மருத்துவச் செயலிகள், இயந்திரங்கள், மருத்துவர்கள்,

தாதியர்கள் என அனைத்தையும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப

அதிகரிக்க வேண்டும்.

1.5 இணைய வேகத்தை அதிகரித்தல்


இன்றைய நாளில் அதிவேக அகன்ற அலைவரிசை இணையமானது நாட்டின்

சமுதாய மற்றும் எண்மிய பொருளாதார வளர்சிக்கு இன்றியமையாத ஒன்றாக

திகழ்கிறது. அதிவேக இணையம் மூலம் நம்மால் அன்றாட வாழ்கைக்கான

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு, மின்-வர்த்தகத் துறையிலும்

ஈடுபட முடிகிறது.

அகன்ற அலைவரிசை இல்லாமல் நம்மால் இணையப் பொருட்கள்

(IOT), தன்னியக்கம் மற்றும் தொழிற்புரட்சி 4.0 போன்ற நவீன

புத்தாக்கங்களைப் பயன்படுத்தவே இயலாது. இவ்வாறு, அதிவேக மற்றும்

தரமான இணையத்தை நமக்குக் கிடைக்கச் செய்யாமல் இருப்பின், குறு, சிறு

மற்றும் நடுத்தர வணிகம் (PMKS) மற்றும் உயர்ச்சிந்தனைத் திறன் படைத்த

வர்த்தர்களையும் அதிகமாக இழக்கும் சூழல் நேரிடும். இவர்களின்

வர்த்தகத்தை நம்மால் உலகளாவிய நிலைக்கு எடுத்துச் செல்ல அதிவேக

இணையமே அன்றி வேறு வழிவகை இல்லை.

1.6 பேரிடர் முன் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்

நாட்டில் நிகழ்ந்த மிகவும் மோசமான ஒரு வெள்ளப் பேரிடரைக் கடந்த 2021

ஆம் ஆண்டின் இறுதியிலும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும்

கண்டுள்ளோம். இயற்கையின் இந்தச் சீற்றத்தினால் 56 உயிர்கள் பலியானது.

ஏறத்தாழ 71,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளப் பேரிடரால் தங்களது


இருப்பிடத்தை இழந்தனர். மேலும், 125,000 மக்களின் வாழ்வாதாரம்

கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சேதத்தின் மதிப்பு சுமார் ரி.ம 6.5

பில்லியனை நெருங்கும் என மலேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு (நட்மா)

கூறுகின்றது.

இதே போல் ஒரு சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்

கூறுகளை எவராலும் மறுக்க இயலாது. காரணம், இந்தச் சம்பவம்

இயற்கையின் சீற்றத்தால் ஏற்படக்கூடிய ஒன்று. இது மக்களுக்கு ஏற்படகூடிய

பாதிப்புகளையும் அதன் நெருக்கடிகளையும் நமக்கு நினைவுறுத்தியுள்ளது.

ஆகையால், இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள நாடு எப்போதும் தயார்

நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

1.7 சிறார் நலனைப் பேணுதல்

2021 ஆம் மக்கள் தொகையின் புள்ளிவிவரப்படி 18 வயதுக்கும் குறைவான

சிறார்களின் எண்ணிக்கை சுமார் 9.13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிகை மொத்த மலேசிய மக்கள் தொகையில் 28% ஆகும். மொத்த

மலேசிய தொகையில் 1/3 அளவிலான விகிதத்தில் இருக்கும் அவர்களுக்குக்

கட்டாயம் பல முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும். சிறப்பான வாழ்க்கை

முறையில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ எல்லா வகையிலும்

சிறார்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்.


குழந்தைகள் மற்றும் இளவயதினர்கள் தகுந்த முறையில்

பாராமறிக்கப்பட்டால்தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

பண்பான மற்றும் நேர்மறையான எண்ணங்கள் அவர்களுள் நீண்ட நாள்

விதைக்கப்பட்ட பலனாக அவர்களின் எதிர்காலம் அர்த்தமுள்ளதாக

அமையும். சிறுவயதினரின் நலனைக் கருதி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு

செயற்பாடும் நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கு வித்திடும்

முதலீடுகளாகும். எனவே, சிறுவர்களின் பாதுகாப்பு, உடல் உள ஆரோக்கியம்

அனைத்திற்கும் வித்திடும் நலத்திட்டங்களை அரசாங்கள் அமல்படுத்த

வேண்டும்.

1.8 முடிவுரை

15-வது பொதுத் தேர்தலில் வெற்றியடைந்தது ஒரு தனிப்பட்ட கட்சி என்பதை

விட, வெற்றியடைந்தது மக்கள் என அனைவரும் பரவலாகக் கருதுகின்றனர்.

அவர்களின் அந்த வெற்றியைப் பறைசாற்றும் வண்ணம் இம்மாதிரியான நலத்

திட்டங்களை அரசாங்கள் உடனடியாக மேற்கொள்வது சிறப்பாக அமையும்.


2.1 முன்னுரை

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் நாளிதழ்களின் பங்களிப்பு

முக்கியமானது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் எழுச்சிக்கும் கலை,

இலக்கிய வளர்ச்சிக்கும் இதழ்களே ஒவ்வொரு காலத்திலும் பெரும்

பங்காற்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக தமிழ் இதழ்களை

இயக்கியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்திருந்த படித்த

சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இந்தியாவில் இருக்கும்போது

பத்திரிகைத் துறையிலும் அரசியல் இயக்கங்களிலும் அனுபவம்

பெற்றவர்களாக இருந்ததால் மலாயாவில் அவர்களுக்கு இதழ் நடத்துவதில்

ஆர்வமும் அனுபவமும் இருந்தது.

இதே சூழலில் மேல்தட்டு இந்தியர்கள் ஆங்கில இதழ்களில் அதிக

ஆர்வம் காட்டினர். மொழி, கலாச்சாரம் போன்ற விவகாரங்களில்

இந்தியர்களால் நடத்தப்பட்ட ஆங்கில இதழ்கள் ஆர்வம் காட்டவில்லை.

இந்தியர்களின் சமூக அரசியல் பிரச்சினைகள், இந்தியர்களுக்கான

அடையாளங்கள் போன்றவைகளில் மட்டுமே இவர்களின் அக்கறை அடங்கி

இருந்தது. இவ்விதழ்கள் இந்தியர்களுக்கான அரசியல் சமூக அமைப்பினை

உருவாக்கும்படி தலைவர்களை வலியுறுத்தி வந்தன.


ஆய்வாளர் நா.பாலபாஸ்கரனின் கருத்துப்படி 1883-இல் பினாங்கில்

வெளிவந்த ‘வித்தியா விசாரிணி’ என்ற நாளிதழே மலேசியத் தமிழ் இதழ்கள்

உலகின் தொடக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. உலகத் தமிழ் நாளிதழ்களில்

சுமார் 82 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த மூத்த நாளிதழ் மலேசியாவில்

வெளிவந்த தமிழ் நேசன் என்கிறார் கவிஞர் முரசு நெடுமாறன். 1924-இல் கி.

நரசிம்ம ஐயங்காரால் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை தொடக்கத்தில் வார

இதழாகச் செயல்பட்டது. இந்தியாவுடனான வணிகத் தொடர்பு

உள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வணிகம் தொடர்பான

தகவல்களைத் தமிழ் நேசன் பிரசுரித்து வந்தது. இந்தியாவுக்கான கப்பல்

பயண அட்டவனை தகவல், சந்தைப் பொருட்களின் விலை நிலவரங்கள்,

வணிக முக்கியத்துவம் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின்

கொள்கைகள் போன்ற வணிகர்களுக்குத் தேவையான தகவலை தமிழ்

நேசனில் வெளிவந்தது. அதே சமயத்தில் கவிதைகள், சிறுகதைகளுக்கும் தமிழ்

நேசனில் இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல 1930 களில்

மிகவும் புகழ் பெற்ற தொழில் அதிபரான ஓ.ஏ.ஆர் அருணாசலம் செட்டியார்,

தமிழ் மொழி, இலக்கியம் வளர வேண்டும் எனும் நோக்கத்தில் 1938-இல்

வாராந்திர இதழாக தமிழ்க் கொடியை ஆரம்பித்தார்.

ஆக, மலேசியத் தமிழர்கள் இந்நாட்டுக்கு உழைக்கும் வர்க்கமாக

வந்திறங்கினாலும் அவர்களுக்கும் இதழ்களுக்கும் இடையிலான


பயணத்தைத் தவிர்த்துவிட்டு முழு மலேசியத் தமிழர்களின் வரலாற்றைப்

பேசிவிட முடியாது. இப்படியாக, தமிழர்களுடன் ஒன்றர கலந்த தமிழ்

இதழ்களின் உள்ளடக்கங்கள் இளையோரின் நலமிக்க சிந்தனையைச்

சீரழிக்கின்றன எனச் சிலர் கருத்துகின்றனர்.

2.2 இளையோரின் வெற்றிக்கு உறுதுணையாய் நிற்கும் தமிழ்மொழி இதழ்கள்

ஒவ்வொரு இளைஞனும் தனது வாழ்நாளில் சாதிக்க பல்வேறு

இன்னல்களைக் கடந்து, தனக்கான பாதையைத் தானே அமைத்துக் கொள்ள

போராடுகிறான். அவனின் போராட்டம் என்பது, அவனுக்கானதாய்,

குடும்பத்திற்கானதாய், சமூகத்திற்கானதாய், நாட்டிற்கானதாய் அமையக்

கூடும். அவ்வாறு அவனின் போராட்டத்திலும், பின்னர் அவனின்

வெற்றியிலும் அவனுடன் உறுதுணையாக நிற்க தமிழ் இதழ்கள் என்றுமே

தயங்கியது இல்லை எனலாம்.

சான்றாக :

படம் 1.0 : மக்கள் ஓசை நாளிதழ், 06.09.2022


இங்கே, 21 வயதே ஆன, தயாளினி குணரேகரன் என்பவரின் கவிதை நூல்
வெளியீட்டு விழாவைப் பற்றி நாளிதழ் ஒன்று ஒரு முழுப்பக்கச் செய்தியை
வெளியீடு செய்துள்ளது. செல்வி தயாளினி என்பவர் நாடறிந்த எழுத்தாளரோ,
பெரிய அரசியல் தலைவரோ, செல்வந்தரோ கிடையாது. தமிழ் மீது பற்றுக்
கொண்டு கவிதைகள் எழுதுவதில் திறமைமிக்கவர். அவரின் திறமையையும்
ஆர்வத்தையும் மதித்து ஒரு முழுப்பக்கச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது, அவருக்கு
மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் புதிய முயற்சியில் துணிவுடன்
ஈடுபட தன்முனைப்பாகவும் உத்வேகமாகவும் அமையும் என்பது திண்ணம்.

2.3 இளையோரின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடும் தமிழ்மொழி இதழ்கள்

இன்றைய இளைஞர்களியே வாசிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் குறைந்து


கொண்டே வருகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. இப்படியான ஒரு சூழலில்,
அடுத்தக்கட்ட சமூகமானது அறிவுசார் சமூகமாக நிலைத்து நீடித்திருப்பதை உறுதி
செய்வது அனைவரின் கடமையாகும். அந்த வகையில், இதைக் கருத்தில் கொண்டு
நம் நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பிரிவுகள், குறிப்பாக
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் சுல்தான் இத்ரிஸ்
கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆகியன சில ஆண்டுகளாக
இளைஞர்களை இலக்காகக் கொண்டு ஆய்விதழ்களை வெளியிட்டு வருகின்றன.

சான்றாக :

படம் 2.0 : வளர்தமிழ் ஆய்விதழ், 18.08.2020


இந்த ஆய்விதழில், திருக்குறள் பரவலாக்கம், சங்க இலக்கியத்தில் கோள்கள்,
மலேசிய இந்தியர்களின் குண்டர் கும்பல் சிக்கல் எனப் பல்தரப்பட்ட
தலைப்புகளைச் சேர்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதனை இன்றைய
இளையோர்கள் படிக்கும் போது, அவர்கள் தமிழ்மொழி வளத்தைத் தாண்டி
சமூகவியல் சிந்தனையுடையவர்களாகவும் வளம் வருவார்கள்.

You might also like