You are on page 1of 17

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


Rg»UJ, òu£lhá - 24 br›thŒ 11.10.2022 ky® - 3, ïjœ - 188

பாரதம் குறித்து அறிய வேண்டும்


சென்னை கிண்டியில் உள்ள
ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம்
உன்னத பாரதம் இணைக்கும் பாரதம்
த�ொடர் திட்டம் குறித்த இரண்டு
நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.
என்.ரவி த�ொடங்கி வைத்தார். இந்த
இரண்டு நாள் கருத்தரங்கத்தில் vijayabharatham.org
அண்ணாமலை பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக்
கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், திருவள்ளுவர்
பல்கலைக் கழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களில் இருந்து
156 மாணவ மாணவிகள் கலந்து க�ொண்டனர். இந்நிகழ்ச்சியில்
கலந்துக�ொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, "தேசிய
கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா,
கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கியதுதான்.
ஆனால், தற்போது திராவிடம் என்றால் தமிழ் என சிலர் கூறி
வருகின்றனர். வெள்ளையர்கள் தான் பாரதத்தை இணைத்தனர்
என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை.
பாரதம் என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது
இல்லை. ஆங்கிலேயர்கள் 1905ம் ஆண்டு வங்கத்தை மேற்கு
வங்கம், கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட
நேரத்தில் தமிழகத்தில் வ.உ.சி, பாரதியார் ப�ோராடினார்கள்.
இந்தியாவை தெரிந்துக�ொள்ள புரிந்து க�ொள்ள வேண்டும்
என்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து க�ொள்ள வேண்டும்.
ஆனால், பாரதம் குறித்து நமக்கு தெரியப்படுத்தவில்லை.
பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையாகக்
க�ொண்டது. ஆனால் பாரதம் என்பது யார�ோ ஒருவரின் கீழ்
இருப்பதில்லை. பாரதத்தின் வளர்ச்சி என்பது பல ஆயிரம்
ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அது எப்போதும்
தர்மத்தை கடைபிடிப்பதாக இருந்தது. முந்தைய காலங்களில்
அரசர்கள் தர்மத்தின் வழியில் ஆட்சி நடந்தனர். அவர்கள்
தர்மத்தை தவறும் பட்சத்தில் அவர்கள் யாராக இருந்தாலும்
தூக்கி எறியப்பட்டனர். 1956ம் ஆண்டு வரை மதராஸ்
மாகாணமாக இருந்தது அதன் பின் ம�ொழி அடிப்படையில்
கேரளா, கர்நாடக, ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலுங்கானா
என அரசியலுக்காக ம�ொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது.
பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான்,
நீ என தற்போது பேசி வருகின்றனர். அடிப்படையில்
அரசியல் என்பது அதிகாரத்துக்கானது. இது பாரதத்தில்
உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ப�ொருந்தும். அரசியல்
கட்சிகள் நம்முடைய பார்வையை குறுக்கிவிட்டன. அரசியல்
கட்சிகள் அதிகாரத்கிற்காக ம�ொழி அடிப்படையிலும் ஜாதி
அடிப்படையிலும், ஜாதியின் உட்கட்டமைப்புகளை எல்லாம்
வைத்து அரசியல் செய்வார்கள். பாரதம் என்பது அடிப்படையில்
அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக
ஒற்றுமை தான்" என தெரிவித்தார்.
1
தமிழக பள்ளிகளில் கலா உத்சவ் ப�ோட்டிகள்
மத்திய கலாசாரத் துறை
சார்பில், பள்ளி மாணவர்களுக்கு
ஆண்டுத�ோறும், 'கலா உத்சவ்'
என்ற கலை, பண்பாட்டு ப�ோட்டிகள்
நடத்தப்பட்டு வருகின்றன. இந்த
ஆண்டுக்கான ப�ோட்டிகளை
நடத்தி, மாநில அளவில் தேர்ச்சி
பெறுவ�ோரை, ஒடிசாவில் நடக்கும்
தேசிய அளவிலான இறுதி vijayabharatham.org
ப�ோட்டிக்கு அனுப்பும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக ஒருங்கிணைந்த கல்வி
திட்ட இயக்குனரகம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள
சுற்றறிக்கையில், 'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 9ம்
வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு
வாய்ப்பாட்டு இசை, பாரம்பரிய நாட்டு புற வாய்ப்பாட்டு
இசை, தாள வாத்தியம், மெல்லிசை, செவ்வியல் நடனம்,
பாரம்பரிய நாட்டுப்புற நடனம், காட்சி கலை இரு பரிமாணம்
மற்றும் முப்பரிமாணம், உள்ளூர் த�ொன்மை ப�ொம்மைகள்,
விளையாட்டுகள் மற்றும் நாடகம் தனி நபர் நடிப்பு என
தனித்தனியாக 10 வகை ப�ோட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
ப�ோட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட வேண்டும்'
என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூட்டணி தேவையில்லை
தி.மு.க.வின் ப�ொதுக்குழு
கூட்டத்தில் பேசிய தி.மு.க மூத்த
தலைவரும், கூட்டுறவுத்துறை
அமைச்சருமான ஐ. பெரியசாமி,
"நேரத்தை துளியும் வீணடிக்காமல்,
முதல்வர் ஸ்டாலின் ஓய்வில்லாமல்
பணியாற்றி வருகிறார். அவரை
பார்க்கும்போது எல்லாருக்கும் vijayabharatham.org
ஒரு உற்சாகம் வந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் நாம்
வெற்றி பெற்று விடுவ�ோம் என்று பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி
கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், எல்லா கட்சியும், ஒன்றாக
சேர்ந்தாலும், தி.மு.க தனித்து நின்று வெற்றி பெறும் அளவிற்கு
நாங்கள் தயார்" என்று கூறினார். அவரது இந்த கருத்து
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சி த�ொண்டர்களிடயே
சலசலப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக
கூறப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் 2026ல் பயன்பாட்டுக்கு வரும்


தர்மபுரி மாவட்டத்தில் நடந்த
பா.ஜ.க மண்டல நிர்வாகிகள்
ஆல�ோசனை கூட்டத்தில் பங்கேற்று
பேசிய இணையமைச்சர் பாரதி
பிரவின் பவார், "தமிழகத்துக்கு தேசிய
சுகாதார திட்டத்துக்காக மத்திய அரசு
vijayabharatham.org
2
ரூ. 3,226 க�ோடிநிதி ஒதுக்கி பல்வேறு சுகாதார திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப
நலத்துறையில் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த, தமிழக
அரசுக்கு மத்திய அரசு 24 க�ோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
ஆனால், தமிழக அரசு, அத்திட்டங்களில் பிரதமர் ம�ோடியின்
படம், மத்திய அரசின் சின்னங்களை வெளியிடாமல்
புறக்கணித்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி,
க�ொர�ோனா த�ொற்றால் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு
இதற்கான நிதியை மறு மதிப்பீடு செய்து ரூ. 1,977 க�ோடி
ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள், 2026க்குள் நிறைவடைந்து
பயன்பாட்டுக்கு வரும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மாணவர் சேர்க்கை ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது" என
கூறினார்.

தி.மு.கவின் சமூக நீதி


தி.மு.க ப�ொதுக்குழு கூட்டத்தில்
கலந்துக�ொண்ட டி.ஆர் பாலு,
மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து
ஈ.வெ.ரா, அண்ணாதுரை,
கருணாநிதி படங்களுக்கு மலர்
துாவி மரியாதை செய்தார். இதற்காக
vijayabharatham.org
கழற்றிப்போட்ட செருப்பை அணிய
மறந்து இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். பின்னர்
அருகில் இருந்த ஒரு த�ொண்டரிடம் தன் செருப்பை எடுத்து
வரும்படி கூற, அவரும் தன் கையில் செருப்பை எடுத்து
வந்து பவ்யமாக டி.ஆர்.பாலு கால் அருகே வைத்தார். இந்த
சம்பவம் தி.மு.கவினரிடமும் ப�ொதுமக்களிடமும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. 'இதுதான் தி.மு.கவின் சமூக நீதியா,
திராவிட மாடலா?' என்று ப�ொதுமக்கள் கேள்வியெழுப்பி
வருகின்றனர்.

பிராந்திய ம�ொழிக்கு முக்கியத்துவம்


மத்திய உள்துறை அமைச்சர் அமித்
ஷா தலைமையிலான 20 ல�ோக்சபா
எம்.பிக்கள், 10 ராஜ்யசபா எம்.பிக்கள்
அடங்கிய அலுவல் ம�ொழிக்கான
பார்லிமென்ட் குழு, தனது, 11வது
vijayabharatham.org
அறிக்கையை குடியரசுத் தலைவர்
திர�ௌபதி முர்முவிடம் கடந்த மாதம் தாக்கல் செய்தது. இந்தக்
குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து அதன் துணைத்
தலைவரான பிஜு ஜனதா தள கட்சியின் எம்.பி., பார்த்ருஹரி
மஹதப் பேசுகையில், "பல்வேறு துணைக் குழுக்கள் மற்றும்
பார்லிமென்ட் குழுவில் நடத்தப்பட்ட ஆல�ோசனைகளின்
அடிப்படையிலேயே பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் என்பது அன்னிய ம�ொழி. ஆங்கில வழிக் கல்வி
என்ற காலனியாதிக்க நடைமுறையை கைவிட வேண்டும்.
புதிய தேசிய கல்விக் க�ொள்கையின் அடிப்படையில், ஹிந்தி
மற்றும் பிராந்திய ம�ொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று
பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
3
அதன்படி அனைத்து உயர்நிலைக் கல்வி நிறுவனங்களிலும்
ஹிந்தி மற்றும் பிராந்திய ம�ொழி வழியிலேயே
பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு
உள்ளது. மேலும், ஐ.நாவின் அலுவல் ம�ொழியாக ஹிந்தியை
சேர்க்கவும் பரிந்துரைத்துள்ளோம்" என கூறினார். இந்தப்
பரிந்துரைகளை ஏற்பது குறித்து குடியரசுத் தலைவரே முடிவு
செய்வார்.

மற்றொரு ம�ொழிப்போர் சாத்தியமா?


குடியரசுத் தலைவர் திர�ௌபதி
முர்முவிடம் மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா தலைமையிலான
அலுவல் ம�ொழி த�ொடர்பான
நாடாளுமன்றக் குழு கடந்த மாதம்
அளித்துள்ள அறிக்கையில் மத்திய vijayabharatham.org
அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ்
ப�ோன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் ஹிந்தி
மற்றும் உள்ளூர் பிராந்திய ம�ொழிகள் பயிற்று ம�ொழியாக
இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுத�ொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள
அறிக்கையில், "ஹிந்தியைக் கட்டாயமாக்க முயன்று,
இன்னொரு ம�ொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.
எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட
வேண்டாம். ஹிந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு,
இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர்
தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்
க�ொள்கிறேன்" என கூறியுள்ளார்.
ஆனால், சமீபத்தில் ஹிந்தி பிரச்சார சபா வெளியிட்டுள்ள
செய்தியில், "தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி கற்பவர்களின்
எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
ஆண்டுத�ோறும் இங்கு ஹிந்தி கற்பவர்களின் எண்ணிக்கை
5 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் மட்டும்
1,31,592 பேர் தமிழகத்தில் ஹிந்தி கற்கின்றனர். இதில் 34,589
பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 2021ல் தென்னிந்திய
மாநிலங்களில் ஹிந்தி கற்போர் எண்ணிக்கை 3.17 லட்சமாக
இருந்த நிலையில் 2022ல் இது 3.28 லட்சமாக உயர்ந்துள்ளது"
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஸ்டாலின் கூறுவது ப�ோல ம�ொழி ப�ோர் என்பது
தமிழகத்தில் எவ்வகையிலும் தற்போது சாத்தியமில்லாத
ஒன்று. மக்கள் அறியாமையில் இருந்த அந்த காலம்
மலையேறிவிட்டது. இது 1960 அல்ல 2022 என்பதை மக்கள்
நன்றாகவே புரிந்து க�ொண்டுள்ளனர்.
மேலும், ஹிந்தியை மட்டும் நாடாளுமன்றக் குழு
வலியுறுத்தவில்லை அல்லது அதனை திணிக்கவில்லை.
மாறாக, பிராந்திய ம�ொழிகளுக்கும் சமபங்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டுள்ளது. அன்னிய நாட்டு ம�ொழியான
ஆங்கிலத்தை தவிர்க்க மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது.
தி.மு.கவினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் ஆங்கிலம்,
ஹிந்தி ம�ொழிகளை கற்பித்துவிட்டு தமிழகத்தில் புதிய
4
கல்விக்கொள்கை வேண்டாம், ஹிந்தி எதிர்ப்பு என
கூறிக்கொண்டு அப்பாவி ஏழை மக்களின் குழந்தைகள் அரசு
பள்ளிகளில் மாற்று ம�ொழிகள் கற்பதை தடுத்து வருவதை
இந்த இணைய யுகத்தில் மக்கள் அறியாமல் இல்லை.
மேலும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தி.மு.கவின்
எம்.பி ஜகத்ரட்சகன், காங்கிரசை சேர்ந்த எம்.பிகள் கீதா க�ோரா,
கவிதா மல�ோத், கே.சி வேணுக�ோபால், நரன் பாய் ரத்வா,
சமாஜ்வாதி கட்சியின் எஸ்.டி. ஹசன், பகுஜன் சமாஜ் கட்சியின்
எம்.பி சங்கீதா ஆசாத், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி
கே. கேசவ ராவ் ஆகிய�ோர் இடம் பெற்றுள்ளனர். முதலில்
தனது கட்சியின் எம்.பி மற்றும் கூட்டணி எம்.பிக்களிடம்
ஏன் ஹிந்தியை பரிந்துரைத்தீர்கள் என கேள்வி கேட்காத
ஸ்டாலின், நேரடியாக மத்திய அரசை கண்டித்து அறிக்கை
விடுப்பது என்பது அரசியல் தவிர வேறு இல்லை என்பதையே
சுட்டிக்காட்டுகிறது.  மதிமுகன்

மேற்கு வங்கத்தில் வன்முறை


மேற்கு வங்கம் மாநிலம்
க�ொல்கத்தாவின் புறநகர் பகுதியான
ம�ொமின்பூரில் சரத் பூஜை
எனப்படும் லட்சுமி பூஜை நேற்று
நடைபெற்றது. இந்த பூஜையில்
ஏராளமான ஹிந்துக்கள் கலந்து
vijayabharatham.org க�ொண்டனர். அப்போது அங்குள்ள
முஸ்லிம்கள், லட்சுமி பூஜையில் பங்கேற்ற ஹிந்துக்களின்
வாகனங்களை அடித்து ந�ொறுக்கினர். கடைகளை தீ வைத்து
க�ொளுத்தினர். இந்த வன்முறையால் ஏராளாமான ஹிந்துக்கள்
பாதிக்கப்பட்டனர்.
அம்மாநில பா.ஜ.க தலைவர் சுகந்த மஜும்தர், இந்த வன்முறை
சம்பவ வீடிய�ோக்களை வெளியிட்டு, "காவல்துறையினர்
அமைதியாகப் பார்த்துக் க�ொண்டிருக்கிறார்கள். சட்டம்
ஒழுங்கு சரியில்லை. நிலைமை ம�ோசமாக உள்ளது, ஆனால்
முதல்வர் மமதா பானர்ஜிய�ோ ஹிந்துக்கள் பாதிக்கப்படுவதை
வேடிக்கை பார்த்துக் க�ொண்டிருக்கிறார். எனவே, ம�ொமின்பூர்
வன்முறையை தடுக்க மாநில காவல்துறை தவறியதால்,
உடனடியாக மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப
வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு
கடிதம் எழுதியுள்ளார்.
பா.ஜ.க தலைவர் ப்ரீதம் சூர், தெருக்களில் வன்முறையை
கட்டவிழ்த்து விடப்படுவதை காட்டும் பயங்கரமான
காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “எங்கள்
மீது வெடிகுண்டுகள் மற்றும் செங்கற்கள் வீசப்படுகின்றன.
காவலர்கள் கூட தங்களை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து
ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. லட்சுமி பூஜையின்
ப�ோது ஜனநாயகத்தின் முகம் கருமையாகிவிடும் அளவுக்கு
நிலைமை மிகவும் ம�ோசமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி, எக்பால்பூர்
காவல் நிலையத்தில் குண்டர்கள் முற்றுகையிட்டதால்,
காவல்துறையினர் அங்கிருந்து தப்பிய�ோடும் வீடிய�ோவைப்
பகிர்ந்துள்ளார். அந்த கும்பல் முஸ்லிம் க�ொடிகளை

5
காவல் நிலையத்தில் அசைத்துக்கொண்டிருந்தது. சுவேந்து
அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சருக்கு நிலைமையை
கட்டுப்படுத்த மத்திய படைகளை அனுப்ப வேண்டுக�ோள்
விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ம�ொமின்பூர் ஹிந்து எதிர்ப்பு வன்முறையின்
பின்னணியில், குலாம் அஸ்ரஃப் (பீனிக்ஸ் குழும
உரிமையாளர்), ரெஹான் கான் (திருணமூல் காங்கிரஸ் கட்சி
கவுன்சிலரின் மருமகன்) மற்றும் திருணமூல் காங்கிரஸ் கட்சித்
தலைவர் ஃபிர்ஹாத் ஹக்கீமின் நெருங்கிய உதவியாளர்
ஷாபாஸ் ஆலம் ஆகிய�ோர் உள்ளதாக டுவிட்டர் பயனாளர்
சையத் இஷ்டியாக் ஆலம் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிக திறன் வாய்ந்த ராக்கெட்


வேலூர் வி.ஐ.டி பல்கலைக்
கழகத்தில் விண்வெளி
வாரத்தைய�ொட்டி மூன்று நாள்
உலக ராக்கெட் கண்காட்சி
நடைபெற்றது. அதன் நிறைவு
நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற
vijayabharatham.org
ஸ்ரீஹரிக�ோட்டா விண்வெளி
ஏவுதள முதன்மை ப�ொது மேலாளர் சங்கரன், "இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) வாயிலாக,
ஜி.எஸ்.எல்.வி மார்க் - 3 ராக்கெட், உலகில் அதிக திறன் மற்றும்
சக்தி வாய்ந்ததாக தயாராகி வருகிறது. விரைவில் விண்ணில்
ஏவப்பட உள்ளது. தற்போது சந்திராயன் - 3க்கான ஆராய்ச்சி
நடந்து வருகிறது. விரைவில் அதுவிண்வெளியில் ஏவப்படும்.
உலகளவில் பாரதம் விண்வெளி ஆராய்ச்சியில் இரண்டாவது
இடத்தில் உள்ளது" என கூறினார். நிகழ்ச்சியில் வி.ஐ.டி வேந்தர்
விஸ்வநாதன், வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஐ.ஐ.டி வழங்கும் நிதித்துறை படிப்புகள்


வங்கித் துறையில்
வேலைவாய்ப்பை உருவாக்கிக்
க�ொள்ள மாணவர்களிடையே
அதிக ஆர்வம் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ
30 லட்சம் பேர் வெவ்வேறு
vijayabharatham.org
வங்கித் தேர்வுகளை எழுதிவரும்
நிலையில், அதில் 0.5 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
பெறுகின்றனர். இந்த மாணவர்கள் திறன் மேம்பாட்டைப்
பெறத் தயாராக இருந்தால் நிதி மற்றும் வங்கித் துறைகளில்
ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அடுக்கு 2, அடுக்கு
3 நகரங்களில் வங்கி மற்றும் நிதிஸ் சேவைகளுக்கான
தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் இதுப�ோன்ற
நகரங்களில் பயிற்சி வல்லுநர்களுக்கான தேவைகளும்
இயற்கையாகவே அதிகரித்து வருகின்றன. மாணவர்களை
இதற்கு தயார்படுத்தும் விதமாக, ஐ.ஐ.டி மெட்ராசின் முன்முயற்சி
அமைப்பான ஐ.ஐ.டி மெட்ராஸ் ப்ரவர்த்தக்ஃபவுண்டேஷன்,
6
டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமியும் சென்னையில் நிதித்துறை
சான்றளிக்கப்பட்ட முதன்மைப் பயிற்சியாளரான இன்ஃபேக்ட்
ப்ரோ நிறுவனத்துடன் (InFactPro) இணைந்து நிதி த�ொடர்பான
திறன் மேம்பாட்டுப் படிப்புகளை நடத்துகின்றன. இதற்கு
தற்போது மாணவர் சேர்க்கைத் த�ொடங்கியுள்ளது. திறன்
மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் வங்கி மற்றும்
நிதிச்சேவைகள், காப்பீட்டுத் துறை திறன் கவுன்சிலுடன்
இணைந்து இன்ஃபேக்ட்ப்ரோ பயிற்சிகளை அளித்து வருகிறது.
இதில், வங்கி மற்றும் நிதிச்சேவைகளில் பணிவாய்ப்புக்காக
மாணவர்களைத் தயார்படுத்த 7 படிப்புகள் உள்ளன.
மியூச்சுவல் பண்ட், ஈக்விட்டி டெரிவேட்டிவ், டிஜிட்டல்
பேங்கிங், செக்யூரிட்டீஸ் ஆபரேஷன், ரிஸ்க் மேனேஜ்மெண்ட்
ப�ோன்றவற்றில் பணிவாய்ப்புகளுக்கு மாணவர்களை அவர்கள்
தயார்படுத்துகின்றனர். மேலும் என்.எஸ்.இ, என்.ஐ.எஸ்.
எம், பி.எஸ்.இ, ஐ.ஐ.பி.எஃப் ப�ோன்றவற்றால் நடத்தப்படும்
சான்றிதழ் தேர்வுகளை நம்பிக்கையுடன் கையாளும் வகையில்
மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இளங்கலைப்
பட்டப்படிப்பு படிப்பவர்கள் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில்
இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், வங்கி, நிதி மற்றும்
காப்பீட்டுத் துறைகளில் திறமையை வெளிப்படுத்த ஆர்வம்
இருப்போர் இந்த சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு தகுதி
உடையவர்கள். மேலும், இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை,
பாடத் திட்டம் ப�ோன்றவை குறித்த கூடுதல் விவரங்களை
https://iit.infactpro.com அல்லது https://skillsacademy.iitm.ac.in
இணையதளங்களில் அறிந்து க�ொள்ளலாம்.

கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை


மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னப்பூர்ணா
தேவி, நாமக்கல் மாவட்டத்தில், மாநில அமைச்சர் மா.
மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர், அரசு துறை அலுவலர்களுடன்
ஆய்வு கூட்டம் நடத்தினார். நாமக்கல் மாவட்டத்தில் மத்திய
அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு
வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு
செய்த அமைச்சர், திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து
அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர்,
"தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், பிரதமர்
நரேந்திர ம�ோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு
திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நமது
நாட்டின் வளர்ச்சி கிராமப்புறங்களில் இருந்து த�ொடங்குவதால்
பிரதமர் கிராமப்புறங்களில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு
முன்னுரிமை க�ொடுத்து செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசு,
கல்வித்துறையில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இதுவரை 15
ஆயிரம் க�ோடி ரூபாய்க்கு மேல் திட்டங்களை செயல்படுத்தி
வருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்க
வேண்டும் என்பதற்காக 15 நேதாஜி சுபாஷ் சந்திரப�ோஸ் கல்வி
நிலையங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளை
படிக்க வைப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்
திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் இதுவரை 15 கஸ்தூரிபா
காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளை நிறுவி உள்ளது.
7
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் 226
பள்ளிகளில் தனித்திறன் மேம்பாட்டு மையத்திற்கு அனுமதி
அளித்துள்ளது. ப�ோஷான் அபியான் திட்டத்தின்கீழ் 2022ம்
கல்வியாண்டில் பள்ளியில் மதிய உணவு திட்டத்திற்கு அதிக
அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது"
என தெரிவித்தார்.

பல மாநில கூட்டுறவு சங்கம்


மத்திய உள்துறை
மற்றும் கூட்டுறவுத்துறை
அமைச்சர் அமித்ஷா, 3
நாள் பயணமாக அசாம்
மாநிலத்துக்கு சென்றார்.
க� ௌ ஹ ா த் தி யி ல்
வடகிழக்கு கவுன்சிலின்
vijayabharatham.org
70வது மாநாடு மற்றும்
வடகிழக்கு கூட்டுறவு பால் பண்ணை மாநாடுகளில் கலந்து
க�ொண்டு பேசிய அவர், "பிரதமர் ம�ோடி தலைமையிலான மத்திய
அரசு, இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு
முன்னுரிமை அளித்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில்
நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும். இது
உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளின்
தேவையையும் பூர்த்தி செய்யும். அண்டை நாடுகளான பூட்டான்,
நேபாளம், வங்கதேசம், இலங்கை ப�ோன்ற நாடுகளுக்கு பால்
விநிய�ோகம் செய்ய நமக்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த உலக
சந்தையை ஆராய, அரசு பல மாநில கூட்டுறவு சங்கத்தை
நிறுவுகிறது, இது ஏற்றுமதி நிறுவனமாகவும் செயல்படும்.
அதன்படி, அமுல் மற்றும் ஐந்து கூட்டுறவு சங்கங்களை
இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணி
த�ொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயற்கை ப�ொருட்களுக்கு
சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற பின்
தயாரிப்புகளின் ஏற்றுமதியை பல மாநில கூட்டுறவு சங்கங்கள்
உறுதி செய்யும், இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம்
கிடைக்கும். அந்த லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்
கணக்குகளுக்கு செல்லும். கிளர்ச்சி, த�ொடர்பு இன்மை,
முந்தைய அரசுகளின் அக்கறையின்மை ஆகியவற்றால் பல
ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் பின்தங்கி இருந்தன.
மத்தியில் ம�ோடி தலைமையிலான அரசு வந்த பிறகு,
இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு, வடகிழக்கு
பிராந்தியங்களை வளர்ச்சி பாதைக்கு க�ொண்டு செல்ல
வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அமைதியை உருவாக்க
பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாரதத்தை
ப�ொருளாதாரத்தில் உலகின் 2வது இடத்துக்கு க�ொண்டுவர
வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில்
நிதி ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம்" என்று கூறினார்.

8
க�ொள்கைகளை கைவிட்ட முதல்வர்
ராஷ்டிரிய ஜனதாதள தலைவர்
லாலுபிரசாத் யாதவ், ரயில்வேத்துறை
அமைச்சராக இருந்தப�ோது, ரயில்வே
வேலை வழங்க நிலங்களை
லஞ்சமாக பெற்ற வழக்கில்
லாலுபிரசாத், அவருடைய மனைவி
ராப்ரிதேவி, மூத்த மகள் மிசா பாரதி vijayabharatham.org

உட்பட 14 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து


வந்தது. இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தெரிவித்தது. ஆனால் இதுபற்றி
கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், ''அந்த
வழக்கில் எதுவுமே வெளியாகவில்லை. நான் இப்போது
லாலுவுடன் தான் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ.
தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது'' என்று கூறினார்.
இதனையடுத்து நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்
பேசிய பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
"நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிவந்த
முக்கிய க�ொள்கைகளை ஊழல் வழக்கில் சிக்கியுள்ள
லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஆதரித்து பேசுவதன்
மூலம் சமரசம் செய்து க�ொண்டுள்ளார். 2017ம் ஆண்டு,
ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார்
விலகினார். ஆனால் அவரே இப்போது, ஊழல் விவகாரத்தில்
கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
நிதிஷ்குமார் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில்
குறுக்கிடக்கூடாது" என கூறினார்.

தெய்வீக முதலை பபியா


கேரளாவின் காசர்கோட்டில்
உள்ள அனந்தபுரம் அனந்த
பத்மநாபசுவாமி க�ோயிலில்
வசித்து வந்த 75 வயது
மதிக்கத்தக்க தெய்வீக
முதலையான பபியா உயிரிழந்தது.
1945ம் ஆண்டில், ஒரு vijayabharatham.org
ஆங்கிலேய அதிகாரி அக்கோயிலில் ஒரு முதலையை சுட்டுக்
க�ொன்றார். சில நாட்களில் பபியா அந்த
க�ோயில் குளத்தில் த�ோன்றியது என்று
கூறப்படுகிறது. அந்த முதலை முற்றிலும்
சைவ உணவை மட்டுமே உண்ணும். காலை,
மதியம் பிரார்த்தனைக்குப் பிறகு அதற்கு
உணவு வழங்கப்படும். திருவனந்தபுரத்தில்
உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி க�ோயிலின்
பிறப்பிடம் அனந்த பத்மநாபசுவாமி என்று
நம்பப்படுகிறது. இந்த க�ோயிலில் தெய்வீக
முதலையான பபியாவுக்கு பிரசாதம்
அளிப்பது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்.
பக்தர்கள், பிரசாதத்தை அர்ச்சகரிடம்
க�ொடுத்த பிறகு, அவர் ஏரியில் சென்று
அதனை பபியாவுக்குக் க�ொடுப்பார்.
9
பபியாவும் குளத்திலிருந்து வெளியே வந்து அதை சாப்பிடும்.
பபியா அந்த குளத்தில் யாருக்கும் எந்த தீங்கு செய்ததில்லை.
என்னதான் குளத்தில் இருந்தாலும் அதில் உள்ள மீன்களை
உண்ணாது. இதனால் இதற்கு சைவ முதலை என்ற பெயரும்
உண்டு.அனந்தபத்மநாப சுவாமியை பபியா காப்பதாக
பக்தர்கள் நம்பினர். அதன் மறைவு செய்தி பரவியவுடன்,
ச�ோகத்தில் ஆழ்ந்த பக்தர்கள், திரளாக வந்து அதற்கு அஞ்சலி
செலுத்தினர்.திருக்கோயில் சார்பில் மாலைஅணிவிக்கப்பட்டு
பூஜைகள் செய்த பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சனாதன
தர்மத்தில் பக்தியுடன் உள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல,
விலங்குகளுக்குக்கூட தனி மரியாதை உண்டு.

கிக் ஆப் த ட்ரீம் இயக்கம்


அக்டோபர் 11ம் தேதி
முதல் த�ொடங்கவுள்ள 17
வயதுக்குட்பட்ட மகளிர் உலக
க�ோப்பை கால்பந்து ப�ோட்டியில்
பங்கேற்க உள்ள இந்திய மகளிர்
கால்பந்து அணிக்கு ஆதரவு
vijayabharatham.org தெரிவிக்கும் வகையில், “கிக் ஆப்
த ட்ரீம்” என்ற இயக்கத்தை மத்திய அமைச்சர் அனுராக் சிங்
தாக்கூர் த�ொடங்கிவைத்தார். இப்போட்டியை முதன் முறையாக
இந்தியா நடத்துகிறது. இதுகுறித்து தமது டுவிட்டரில்
பதிவிட்டுள்ள அனுராக் தாக்கூர், இந்த சவாலை முன்னெடுத்துச்
செல்ல தனது அமைச்சரவை சகா கிரண் ரிஜிஜூ, ஒலிம்பிக்கில்
தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் ச�ோப்ராமற்றும் நடிகர் அஜய்
தேவ்கன் ஆகிய�ோரை அழைப்பதாக குறிப்பிட்டுள்ளார். க�ோவா,
மும்பை மற்றும் புவனேஸ்வர் மைதானங்களில் நடைபெற
உள்ள ப�ோட்டிகளை அனைத்து இந்தியர்களும் காண வருமாறு
கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், கால்பந்து விளையாட்டின்
சுவாரசியமான வீடிய�ோ காட்சிகளை பதிவிட்டு அவர்களுடைய
ஆதரவை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹிஜாப் வழக்கு தீர்ப்பு


க ர்நா ட க ா வி ல்
கல்வி நிறுவனங்களில்
பெண்கள் ஹிஜாப் அணிய
விதிக்கப்பட்ட தடையை
எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
த �ொ ட ர ப ்ப ட ்ட
மே ல் மு றை யீ ட் டு
vijayabharatham.org வழக்கில், அனைத்துக்கட்ட
விசாரணையும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள்
கடந்த 22ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம்
இந்த வாரம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான
ஹிமந்த் குப்தா வரும் 16ம் தேதி பணியில் இருந்து ஓய்வு
பெறுகிறார். இதனால், ஹிஜாப் தடை வழக்கில் இந்த வார
இறுதிக்குள் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கும் என தகவல்
வெளியாகியுள்ளது.
10
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் அஞ்சலி
முலாயம் சிங் யாதவின்
மறைவுக்கு பிரதமர் நரேந்திர
ம�ோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த பிரதமரது
டுவிட்டர் பதிவில் “முலாயம்
சிங் யாதவ் ஆளுமை மிகுந்த
vijayabharatham.org தலைவர். மக்களின் அடிப்படை
பிரச்சினைகளை உணர்ந்த ஒரு சிறந்த தலைவராகவும்,
பணிவுமிக்க தலைவராகவும் அறியப்பட்டார். யாதவ்
விடாமுயற்சியுடன் மக்களுக்கு த�ொடர்ந்து சேவை
ஆற்றினார். ஜேபி. ல�ோக்நாயக் மற்றும் டாக்டர்.ல�ோகியாவின்
க�ொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து
க�ொண்டவர். உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய
அரசியலிலும் தனித்துவமிக்கவராக திகழ்ந்தார். அவரது மறைவு
மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும்,
ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி”
என தெரிவித்துள்ளார்.

பாரதம் 7 சதவீதம் வளர்ச்சியடையும்


பிரபல ப�ொருளாதார
நிபுணரும், பிரதமரின்
ப�ொருளாதார ஆல�ோசனை
குழுவின் உறுப்பினருமான
சஞ்சீவ் சன்யால், செய்தி
நிறுவனம் ஒன்றுக்கு
அளித்த பேட்டியில்,
vijayabharatham.org "உலகின் பல நாடுகள்
மெதுவான ப�ொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ளும்
அல்லது மந்த நிலையை அடையும். இதற்கு கடுமையான
பணக்கொள்கைகள், எரிசக்திக்கு அதிகப்படியான விலை,
உக்ரைன் ரஷ்ய ப�ோர் என பல காரணங்கள் உள்ளன.
இத்தகைய சூழ்நிலைகளிலும் பாரதம் நன்றாக செயல்பட்டு
7 சதவீத ப�ொருளாதார வளர்ச்சியை அடைந்து உலகில்
வலுவான ப�ொருளாதார நாடாக தனித்து நிற்கும். மத்திய அரசு
பல ஆண்டுகளாக செய்துவரும் வினிய�ோக சீர்திருத்தங்களின்
ஒட்டும�ொத்த தாக்கம் காரணமாக, பாரதத்தின் ப�ொருளாதாரம்
முன்பைவிட மிகவும் நெகிழ்வானதாகவும், மீள்தன்மையுடனும்
உள்ளது. ஒருவேளை 2003ல் இருந்து 2007 வரையில் இருந்த
உலகளாவிய ப�ொருளாதார சூழல், பணவீக்கம், ப�ோன்றவை
இப்போது அமைந்தால், நமது நாட்டின் ப�ொருளாதார
வளர்ச்சி என்பது 9 சதவீத அளவைகூட எட்ட முடியும்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. இப்போதுள்ள
ம�ோசமான சூழலிலும் நாம் 7 சதவீத ப�ொருளாதார வளர்ச்சியை
எட்டிப்பிடிப்பது என்பது மிகநல்ல செயல்பாடுதான். சாலையில்
பல வேகத்தடைகள் உள்ளப�ோது தேவையின்றி வாகனத்தின்
வேகத்தை கூட்டக்கூடாது என்பதுப�ோலவே தேவையில்லாமல்
ப�ொருளாதார வளர்ச்சியில் அழுத்தம் க�ொடுக்கக்கூடாது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு
காணாத வீழ்ச்சி அடைந்தது பற்றி பேசுகையில் இதை
மட்டுமே அடிப்படையாக வைத்து நாம் பெரிதாக பதற்றம்
11
அடையத் தேவையில்லை. உலகின் அனைத்ஹ்டு நாட்டு
நாணயங்களுக்கு எதிராகவும் டாலர் வலுவாகி இருக்கிறது.
நமது ரூபாய் மதிப்பு, டாலரைத் தவிர்த்து பிற நாணயங்களுக்கு
எதிராக உயர் மதிப்பை அடைந்திருக்கிறது என்பதை நாம்
கவனிக்க வேண்டும்" என்று கூறினார்.

நீர் விளையாட்டு மையம்


ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள க�ோல்டம்
பர்மானாவில் நீர் விளையாட்டு மையத்தை மத்திய அமைச்சர்
திரு அனுராக் சிங் தாக்கூர் திறந்துவைத்தார். இந்திய
விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய அனல் மின் கழகம்
இணைந்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக நீர்
விளையாட்டு மையத்தை த�ொடங்கியுள்ளது. இந்நிகழ்வின்
ப�ோது இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய
அனல் மின் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும்
பரிமாறிக்கொள்ளப்பட்டது. குறுகிய காலத்தில் இந்த மையம்
எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதைப் பகிர்ந்து க�ொண்ட
அனுராக் சிங் தாக்கூர், “ஒரு மாதத்தில், நீர் விளையாட்டு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை சாத்தியமாக்கிய
இந்த இரு அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் நன்றி. ர�ோயிங்,
கயாக்கிங், கன�ோயிங் ஆகிய முறையில் படகுப் ப�ோட்டிகளில்
பங்கேற்கும் 40 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிநவீன
உபகரணங்கள், சிறுவர், சிறுமியர் விடுதி மற்றும் பயிற்சி
வசதிகள் உள்ளன. இந்த மையத்தில் தேசிய ப�ோட்டிகளும்
இருக்கும் என்று நாங்கள் நம்புகிற�ோம்." என்றார்.

வரி வருவாய் அதிகரிப்பு


தனி நபர் மற்றும் கார்ப்பரேட்
நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட
ம�ொத்த வரி வருவாய் 24 சதவீதம்
அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம்
தெரிவித்துள்ளது. இது பட்ஜெட்
மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட
52 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு
அக்டோபர் 8 வரையிலான இதே vijayabharatham.org
காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வரி வசூல் விகிதமானது
23.8 அதிகரித்துள்ளது. ரீபண்டுக்கு பிறகு கிடைத்த நேரடி வரி
வருவாய் விகிதம் 16.3 சதவீதம் அதிகரித்து, 7.45 லட்சம் க�ோடி
ரூபாயாக உள்ளது. ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 வரையில்
கார்ப்பரேட்கள் மூலம் கிடைத்த வரி வசூல் 16.73 சதவீதம்
அதிகரித்துள்ளது. தனி நபர் மூலம் கிடைத்த வருமான வரி
வருவாய் 32.30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சரி செய்தல்
மற்றும் ரீபண்டுக்கு பிறகு 16.29 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துபவர்களுக்கான ரீபண்ட் கடந்த ஆண்டை விட 81
சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் 1ம் தேதி
முதல் அக்டோபர் 8ம் தேதி வரை 1.53 லட்சம் க�ோடி ரூபாய்
ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.
12
ரயில் பெயர் மாற்றம்
குடகு பா.ஜ.க
நாடாளுமன்ற உறுப்பினர்
பிரதாப் சிம்ஹா, மைசூரு -
பெங்களூரு இடையேயான
திப்பு சுல்தான் எக்ஸ்பிரஸ்
ரயிலின் பெயரை மாற்ற
வேண்டும் என ரயில்வே
vijayabharatham.org துறைக்கு க�ோரிக்கை
விடுத்தார். அவரது க�ோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே
நிர்வாகம், திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை ‘உடையார்
எக்ஸ்பிரஸ்' என மாற்றியது. இதற்கு காங்கிரஸ், ம.ஜ.த கட்சிகள்
எதிர்ப்புத் தெரிவித்தன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த
மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,
‘‘மைசூரை ஆண்ட உடையார் மன்னர் ரயில்வே கட்டமைப்புக்கு
செய்த உதவியை க�ௌரவிக்கும் விதமாகவே பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியல் ஏதுமில்லை'' என
விளக்கம் அளித்துள்ளார்.
ஜெர்மனிக்கு கடும் கண்டனம்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை
அமைச்சர் பிலவல் புட்டோ ஜர்தாரி,
2 நாள் பயணமாக ஜெர்மனி
சென்றிருந்தார். அங்கு ஜர்தாரியும்
அந்நாட்டு வெளியுறவுத்துறை
vijayabharatham.org
அமைச்சர் அன்னலினா பார்பாக்கும்
செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது
ஜர்தாரி, “காஷ்மீரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள்
நடைபெறுவது கவலை அளிக்கிறது. இது பிராந்திய
அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
சர்வதேச சட்டத்தின்படியும் ஐ.நா. தீர்மானங்களின்படியும்
காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணாத வரை தெற்கு ஆசியாவில்
அமைதி நிலவ வாய்ப்பில்லை” என்றார். பின்னர் பேசிய
அன்னலினா, “காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண ஐ.நா.
தலையிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட
ஜெர்மனி ஆதரவு அளிக்கும். சம்பந்தப்பட்ட இரு நாடுகளும்
அரசியல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார். இதற்கு
பாரதத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்
த�ொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, “காஷ்மீர் விவகாரம் பாரதத்துக்கும்
பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இருதரப்பு பிரச்சினை என்று
த�ொடர்ந்து கூறி வருகிற�ோம். இதில் 3ம் தரப்பு தலையிடுவதற்கு
எந்த பங்கும் இல்லை. அதற்கு பதிலாக, நீண்ட காலமாக
காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து செயல்படும்
பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள்
கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

13
கிறிஸ்தவ பள்ளிகளில் ஹிஜாப் தடை
ஈரானில் உள்ள பெண்கள்
ஹிஜாபுக்கு எதிராக
ப�ோராட்டம் நடத்தி வரும்
வேளையில், கேரளாவில்
ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு
ப�ோராட்டங்கள் நடைபெற்று
vijayabharatham.org
வருகிறது. கேரளாவில்
உள்ள கத்தோலிக்க பள்ளிகளுக்கு எதிராக முஸ்லிம் யூத்
லீக் (MYL), முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பு (MSF), மற்றும்
ஜமாத் இ இஸ்லாமி ஹிந்தின் மாணவர் பிரிவான மாணவர்கள்
இஸ்லாமிய அமைப்பு (SIO) ஆகிய முஸ்லிம் அமைப்புகள்
ப�ோராட்டம் நடத்தி வருகின்றன. க�ோழிக்கோட்டில் உள்ள
அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாணம் என்ற கிறிஸ்தவ
சபையால் நடத்தப்படும் பிராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப்
பள்ளி, ஹிஜாப் அணிவதைத் தடைசெய்ததால் எதிர்ப்புத்
தெரிவித்து இந்த ப�ோராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து
கருத்துத் தெரிவித்த பிராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப்
பள்ளி நிர்வாகம், இது சீருடையின் ஒரு பகுதியாக இல்லாததால்
இதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஹிஜாபை பள்ளி வளாகத்தில் தடை செய்த
இரண்டாவது கத்தோலிக்க பள்ளி இதுவாகும். முன்னதாக, இதே
கிறிஸ்தவ சபையால் நடத்தப்படும் க�ோழிக்கோடு பள்ளியும்,
பள்ளி வளாகத்தில் ஹிஜாபை தடை செய்தது. இதனால் அந்த
பள்ளிக்கு எதிராகவும் முஸ்லிம் அமைப்புகள் ப�ோராட்டம்
நடத்தின. முன்னதாக கடந்த 26 ஆகஸ்ட் 2022 அன்று, தடை
செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர்
பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உட்பட பல முஸ்லிம்
அமைப்புகள் இதே காரணத்துக்காக ஒரு ஆர்ப்பாட்டத்தை
ஏற்பாடு செய்தன, இதன் விளைவாக பள்ளிக்கு வெளியே
பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவத்தை கட்டுப்படுத்த
காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர் என்பது நினைவு
கூரத்தக்கது.

மேற்கத்திய நாடுகளின் ப�ோக்கு


மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் ஜெய்சங்கர் நியூசிலாந்து
பயணத்தை முடித்துக்கொண்டு,
ஆஸ்திரேலியா நாட்டுக்கு
சென்றுள்ளார். அந்நாட்டில்
பாரதத்தின் மூவர்ணம் வெளிப்படும்
வகையில் நாடாளுமன்ற vijayabharatham.org
இல்லம் ஒளியூட்டப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய
வெளியுறவுத்துறை அமைஸ்சர் பென்னி வாங்கை சந்தித்து
13வது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டமைப்பு
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய
14
ஜெய்சங்கர், "உக்ரைன் ப�ோரால் இந்தோ பசிபிக் பகுதியில்
ஏற்பட ப�ோகும் பின்விளைவுகள், குவாட் அமைப்பின்
முன்னேற்றம், ஜி 20 விவகாரங்கள், சர்வதேச அணு ஆற்றல்
கழகம், பருவகால நிதி இலக்குகள், இருதரப்பு ப�ொருளாதாரம்,
வர்த்தகம், கல்வி, ராணுவம், பாதுகாப்பு, தூய எரிசக்தி
உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசின�ோம்" என கூறினார்.
மேலும், "ரஷ்யாவுடன் நீண்டகால நட்புறவை நாங்கள்
க�ொண்டுள்ளோம். அந்த உறவு எங்களது நலன்களுக்கு
உதவியது. நாங்கள் ச�ோவியத் மற்றும் ரஷ்யா ஆயுதங்களை
அதிக அளவில் வைத்துள்ளோம். இந்த ஆயுத க�ொள்முதலுக்கு
பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, மேற்கத்திய நாடுகள்
பல தசாப்தங்களாக பாரதத்துக்கு ஆயுத வினிய�ோகம்
செய்யவில்லை. அவர்கள் எங்களுக்கு அடுத்துள்ள ராணுவ
சர்வாதிகார ப�ோக்கு க�ொண்ட நாட்டுடன் நட்பு பாராட்டினர்"
என கூறினார்.

ஜலதிபுரயாத்ரா மாநாடு
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் பன்முக
கலாச்சார இணைப்புகளைக் கண்டறித, கடல்சார்
பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட
அம்சங்களை உள்ளடக்கிய "ஜலதிபுரயாத்ரா: பன்முக -கலாச்சார
இணைப்புகளை ஆராய்தல்” எனும் வானிலை குறித்த இரண்டு
நாள் தேசிய மாநாட்டை இந்திய த�ொல்பொருள் ஆய்வுத்
துறை (ஏ.எஸ்.ஐ) நடத்தியது. மழைக்காலக் காற்று மற்றும்
பிற காலநிலை காரணிகள் மற்றும் இந்த இயற்கை கூறுகள்
தாக்கத்தை ஏற்படுத்திய விதங்கள், வரலாற்றின் வெவ்வேறு
காலகட்டங்களில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்
பல்வேறு நாடுகளுக்கு இடையேயான த�ொடர்புகளைப்
புரிந்துக�ொள்ளும் முயற்சியாக, 2014 ல் கத்தாரின் த�ோஹாவில்
நடைபெற்ற யுனெஸ்கோவின் 38வது உலகப் பாரம்பரியக்
குழுக் கூட்டத்தில் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால்
'ம�ௌசம் - வானிலை' திட்டம் த�ொடங்கப்பட்டது. தற்போது
இந்தத் திட்டம் ஏ.எஸ்.ஐ'யால் நிர்வகிக்கப்படுகிறது. மாநாட்டில்
மத்திய இணையமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், மீனாஷி
லேகி, பல இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தூதர்கள்
பங்கேற்றனர். மேலும், பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து
இருபதுக்கும் அதிகமான அறிஞர்கள், வானிலை ஆய்வாளர்கள்,
த�ொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும்
காலநிலை மாற்றம், நீருக்கடியில் ஆய்வுகள், கட்புலனாகாத
கலாச்சார பாரம்பரியம் ஆகிய துறைகளில் சர்வதேச அளவில்
புகழ்பெற்ற நிபுணர்கள் இதில் கலந்துக�ொண்டனர். வானிலை
திட்டத்தின் ந�ோக்கங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த கையேடு,
பாரதத்தின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் பாரதத்தின் உலக
பாரம்பரிய ச�ொத்துக்களின் பட்டியல் ஆகியவை இவ்விழாவில்
வெளியிடப்பட்டன. இதில் உரையாற்றிய மீனாஷி லேகி,
பிற நாடுகளுடனான பாரதத்தின் ப�ொருளாதார, கலாச்சார
உறவுகளின் பல அம்சங்களில் பாகுபாடற்ற ஆராய்ச்சியின்
அவசியத்தை வலியுறுத்தினார். அர்ஜுன் ராம் மேக்வால் தனது
உரையில், மற்ற நாடுகளுடனான பாரதத்தின் த�ொடர்புகள்
பற்றியபல சுவாரஸ்யமான வரலாற்று அத்தியாயங்களைப்
பகிர்ந்து க�ொண்டார்.
15
கந்தாட குடி படத்துக்கு வாழ்த்து
‘கர்நாடகாவின் இயற்கை அழகு
மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப்
ப�ோற்றும் வகையில் அமைந்துள்ள
மறைந்த கன்னட திரைப்பட
நடிகர் புனித் ராஜ்குமாரின்
அபிமான திட்டமான கந்தாட குடி
vijayabharatham.org
திரைப்படத்தின் முன்னோட்டம்
வெளியானதற்கு பிரதமர் நரேந்திர ம�ோடி தமது வாழ்த்துகளைத்
தெரிவித்துள்ளார். மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின்
மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாரின் டுவிட்டர் பதிவை
மேற்கோள் காட்டி, பிரதமர் ட்வீட் செய்துள்ள பதிவில், “உலகம்
முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில்
அப்பு இன்னும் வாழ்ந்து வருகிறார். அறிவு கூர்மையான
ஆளுமைய�ோடு, ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற
திறமை படைத்தவராகவும் அவர் விளங்கினார். இயற்கை
அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கந்தாட குடி, ஓர் சமர்ப்பணம்.
இந்த முயற்சிக்கு எனது நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

சர் தன் சே ஜூடா க�ோஷங்கள்


ராஜஸ்தான் மாநிலம்
ஜ�ோத்பூரின் பிபாட் நகரில், ஈத்
ஊர்வலத்தின் ப�ோது முஸ்லிம்கள்
‘சர் தன் சே ஜூடா’ (தலையை
வெட்டுவ�ோம்) என க�ோஷங்களை
எழுப்பியது சர்ச்சையை
vijayabharatham.org
ஏற்படுத்தியது. இதனையடுத்து
இத்தகைய க�ோஷங்களை எழுப்ப கும்பலைத் தூண்டிய முக்கிய
குற்றவாளியான ஜ�ோத்பூரைச் சேர்ந்த ர�ோஷன் அலி கைது
செய்யப்பட்டார். முன்னதாக, அகில இந்திய முஸ்லிம் ஜமாத்
அக்டோபர் 8ம் தேதி ஒரு ஆணையை வெளியிட்டது, அதில்
முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலத்தின் ப�ோது
‘சர் தான் சே ஜூடா’ க�ோஷங்களை எழுப்ப வேண்டாம் என்று
கேட்டுக் க�ொண்டது. நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், ஜ�ோத்பூரில் உள்ள முஸ்ளிம்கள் இந்த ஆணைக்கு
செவிசாய்க்கவில்லை.மேலும் வேண்டுமென்றே ஹிந்துக்கள்
அதிகம் உள்ள பகுதியான நயாபுரா சுபாஷ் காலனி வழியாக
செல்லும்போது சர்ச்சைக்குரிய இந்த முழக்கங்களை
எழுப்பினர். அந்த காலனி மக்கள் பிப்பாட் காவல் நிலையத்தில்
இதுகுறித்து புகார் அளித்தனர். சமூக நல்லிணக்கத்தை
சீர்குலைக்கும் வகையிலும், ஹிந்து மக்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தும் வகையிலும் க�ோஷங்கள் எழுப்பப்பட்டதாக
புகாரில் கூறப்பட்டது. ர�ோஷான் அலியை கைது செய்த
காவல்துறையினர், கடந்த காலங்களிலும் அவர் இத்தகைய
மதவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக, ஒரு சில மாத்ங்களுக்கு முன், பா.ஜ.கவின்
முன்னாள் செய்தித் த�ொடர்பாளர் நுபுர் சர்மாவை
ஆதரித்ததற்காக, ராஜஸ்தானை சேர்ந்த அப்பாவி ஏழை
தையல் த�ொழிலாளி கன்னையா லால், மகாராஷ்டிர மாநிலம்
16
அமராவதியைச் சேர்ந்த உமேஷ் க�ோஹ்லே உள்ளிட்ட சிலரை
முஸ்லிம் மதவெறியர்கள் க�ொடூரமாக தலையை வெட்டியும்
குத்தியும் க�ொன்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.
‘சர் தன் சே ஜூடா’ என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல,
முஸ்லிம்களின் கூற்றுப்படி, முஸ்லிம் மதத்தை அவமரியாதை
செய்த முஸ்லிம் அல்லாதவர்களின் தலையை துண்டிக்கும்
வன்முறை அழைப்பு அது. மக்களைக் க�ொல்லவும் பழைய
கணக்குகளைத் தீர்க்கவும் அவர்கள் பயன்படுத்தும் இந்த
க�ொலைக்கான அழைப்பு சமூக ஊடக இடுகைகளில்
மதவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. முகமது நபியைப் பற்றி
இடுகையிட்டதற்காகவ�ோ அல்லது நபியைப் பற்றி ஏதாவது
ச�ொன்னவர்களுக்கு ஆதரவாகவ�ோ கடந்த காலங்களில் பல
அப்பாவி மக்களை அவர்கள் க�ொன்றுள்ளனர்.

ஜெர்மனியில் பலூச் மக்கள் ப�ோராட்டம்


பாகிஸ்தான் அரசு மற்றும்
ராணுவத்தால் பலுசிஸ்தான்
மக்கள் படும் வேதனைகள்
ச�ொல்லி மாளாது. இதனால்
அவர்கள் தனி நாடு கேட்டு
vijayabharatham.org
பல்வேறு வழிகளில் ப�ோராடி
வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தால்
பலூச்மக்கள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல்
ப�ோவது, சிறைகளில் எவ்வித விசாரணையும் இன்றி
அடைக்கப்படுவது, க�ொலை செய்யப்படுவதை கண்டித்து
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் பலுசிஸ்தான் மக்களின்
'பலூச் தேசிய இயக்கம்' சார்பில் ப�ோராட்டம் நடத்தப்பட்டது.
ப�ோராட்டத்தில் இந்த அமைப்பின் ஜெர்மனி பிரிவின் தலைவர்
அஸ்கர் அலி பேசுகையில், "பாகிஸ்தானியர்களால் நாங்கள்
அட்டூழியங்களை எதிர்கொள்கிற�ோம். பலூச்சில் காணாமல்
ப�ோனவர்களின் குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களின்
விடுதலைக்காக ப�ோராட்டம் நடத்தி வருகின்றனர், ஆனால்
பாகிஸ்தான் படைகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையைகூட
பறித்துவிட்டன. பாகிஸ்தான் ராணுவமும் பிற சட்ட அமலாக்க
அமைப்புகளும் ஆயிரக்கணக்கான பலூச் அரசியல் மற்றும்
சமூக ஆர்வலர்களை கடத்திச் சென்றுள்ளன. மனித உரிமை
மீறல்களை ஆவணப்படுத்தும் அமைப்பான பலுசிஸ்தானின்
மனித உரிமைகள் கவுன்சிலின் ஆண்டு அறிக்கையில்,
பலுசிஸ்தானிலும் பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் இந்த
கடத்தல்களின் முக்கிய இலக்காக மாணவர்கள் உள்ளனர். ஜூலை
மாதம், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 10 மாணவர்கள்
உட்பட 45 பேரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர். அதில்
15 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 35 பேரின் இருப்பிடம்
இதுவரை தெரியவில்லை. கடந்த மாதங்களை விட ஜூலை
மாதம் க�ொலைகள் அதிகரித்துள்ளன. பலுசிஸ்தானின் மனித
உரிமைகள் கவுன்சில் இவ்வருடம் 48 க�ொலை வழக்குகளை
ஆவணப்படுத்தியது. இதில் பெண்கள் உட்பட பதினான்கு
உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அப்பாவி
பலூச்கள் ப�ோலி என்கவுன்டர்களில் க�ொல்லப்படுகிறார்கள்.
சிதைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் த�ொலைதூர இடங்களில்
கண்டுபிடிக்கப்படுகின்றன" என தெரிவித்தார்.

17

You might also like