You are on page 1of 10

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


ãyt, kh®fÊ - 13 br›thŒ 28.12.2021 ky® - 2, ïjœ - 265

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது தாக்குதல்


ஆக்ராவில் அமைந்துள்ள டாக்டர்
ஹெட்கேவார் ஆய்வு மையம், ஆர்.
எஸ்.எஸ் அலுவலகத்திற்கு எதிரே
ராதா கிருஷ்ணர் க�ோயில் உள்ளது.
அங்கு சில முஸ்லிம்கள் அமர்ந்து
vijayabharatham.org மது அருந்திக்கொண்டும் ஆபாசமாக
உரையாடி க�ொண்டும் இருந்தனர். இதைப்பார்த்த அங்கிருந்த
ஆர்.எஸ்.எஸ் த�ொண்டர்கள் அவர்களை க�ோயிலில் அமர்ந்து
மது அருந்த வேண்டாம் என்று கேட்டுக் க�ொண்டனர்.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அங்கு
திரண்ட சுமார் என்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மதவெறி
கும்பல் ஆக்ரா ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் புகுந்து
அங்குள்ளவர்களை கடுமையாகத் தாக்கினர். இதில், 13
ஸ்வயம்சேவகர்கள் காயமடைந்தனர். அவர்களில் விகாஸ்
குப்தா மற்றும் சிவம் குமார் ஆகிய இருவர் உயிருக்கு ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அலுவலக வளாகத்தில் இருந்த பாரத மாதா சிலையையும்
கலவரக்காரர்கள் சேதப்படுத்தினர்.
தாக்குதல் பற்றிய தகவல் பரவியதும், ஆர்.எஸ்.எஸ்.
த�ொண்டர்கள் மீது நடந்த இந்த தாக்குதலை கண்டித்து பா.ஜ.க,
ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி த�ொண்டர்களுடன் ப�ொதுமக்களும்
ப�ோராட்டம் நடத்தினர். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள்
ய�ோகேந்திர உபாத்யாய, மகேஷ் க�ோயல், புருஷ�ோத்தம்
கண்டேல்வால் ஆகிய�ோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தாக்குதல் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
என்று ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் சுதிர் குமார்
உறுதியளித்தார்.

மதமாற்றம் தடுப்பு
திருவண்ணாமலை மாத்தூர் காமராஜ்
நகரில் ஹிந்துக் குழந்தைகள் மற்றும்
பெண்களை கிறிஸ்துமஸ் விழாவை vijayabharatham.org
காரணம் காட்டி, மதமாற்றம் செய்யும் பணி நடைபெற்றுக்
க�ொண்டிருந்தது. இதனை தடுக்கச் சென்ற இந்து முன்னணி
ஒன்றியத் தலைவர் ராமகிருஷ்ணனுக்கு கிறிஸ்தவ மதமாற்றுக்
கும்பலை சேர்ந்தவர்கள் க�ொலை மிரட்டல் விடுத்தனர். இது
சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேப�ோல, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ
மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் பரிசு தருவதாகக் கூறி
மதம்மாற்றும் ந�ோக்கத்தோடு ஹிந்து குழந்தைகளை
மருத்துவமனை நிர்வாகம் அழைத்தது. தகவலறிந்த
இந்துமுன்னணி ப�ொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து
சென்று மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினர்.
ஆக்கிரமிப்பு இடத்தில் தி.மு.க அலுவலகம்
மதுரை பழங்காநத்தம் பைபாஸ்
ர�ோடு அரசு ப�ோக்குவரத்து கழக
தலைமை அலுவலகத்தில் உள்ள
சுமார் ஒரு க�ோடி ரூபாய் மதிப்புள்ள
இடம் தி.மு.க த�ொழிற்சங்கத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு
vijayabharatham.org
தி,.மு.கவின் த�ொழிற்சங்கத்திற்காக
மாடியுடன் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு
நிர்வாகமும் அனுமதி அளிக்கவில்லை. மாநகராட்சி அனுமதியும்
பெறப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கேட்டு
மாநகராட்சி மூன்று முறை 'ந�ோட்டீஸ்' அனுப்பியது. எனினும்
எதையும் கண்டுக�ொள்ளாமல் கட்டுமானப் பணிகளை தி.மு.க
த�ொழிற்சங்கம் த�ொடர்ந்து வருகிறது. இதனையடுத்து இறுதி
எச்சரிக்கையாக நான்காவது ந�ோட்டீஸ' அனுப்பப்பட்டு
உள்ளது. அனுப்பப்பட்ட ந�ோட்டீஸ்களுக்கு நிர்வாகம் சார்பில்
'எந்த கட்டடமும் எங்களால் கட்டவில்லை. நடைபெறும்
கட்டுமானத்திற்கும் நிர்வாகத்திற்கும் த�ொடர்பில்லை' என
பதில் அளித்துள்ளது. இதனால், கட்டுமானப் பணி மேலும்
த�ொடர்ந்தால் அந்த இடத்திற்கு 'சீல்' வைக்க வாய்ப்புள்ளதாகத்
தெரிகிறது.

தாய்மதம் திரும்பும் குடும்பங்கள்


மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ஜல்னா மாவட்டம்
மந்தாவில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர்
கிறிஸ்தவ மதத்தில் இருந்து தங்கள் தாய்மதமான ஹிந்து
மதத்துக்கு மாறியுள்ளனர். இதற்கான சடங்குகளை ‘பைதான்
பிராமண சபை’ ஏற்பாடு செய்தது. அவுரங்காபாத்தில் உள்ள
பைதான் என்ற இடத்தில் உள்ள நாத் க�ோயிலில் அமைந்துள்ள
ஏக்நாத் மகாராஜ் சமாதிக் க�ோயிலில் இதற்கான சடங்குகள்
நடைபெற்றன. இந்த குடும்பங்களை ஹபாப் நத்வன்ஷாஜ்
ராவ்சாஹேப் மகராஜ் க�ோசாவி மற்றும் கீர்த்தன் மகரிஷி
பிரபுல்லபுவா தலேக�ோங்கர், நத்வன்ஷாஜ் ரகுநாத் மகாராஜ்
க�ோசாவி ஆகிய�ோர் வரவேற்றனர். இதைத்தவிர, மாந்தை
தாலுகாவில் உள்ள 22 கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த
சுமார் 65 பேர் கிறிஸ்தவ மதத்தை கைவிட்டு தாய்மதம் திரும்ப
விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதற்கான விழா வரும் ஜனவரி
5ம் தேதி இதே இடத்தில் நடைபெற உள்ளது. vijayabharatham.org
அடிக்கல் நாட்டிய ம�ோடி
ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி
மாவட்டத்தில் ரூ. 11 ஆயிரம்
க�ோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில்
மேற்கொள்ளப்படவுள்ள நீர்மின்
திட்டம், 30 ஆண்டுகளாக கிடப்பில்
ப�ோடப்பட்டு இருந்த 7 ஆயிரம்
க�ோடி மதிப்பீட்டிலான ரேணுகாஜி
அணை திட்டம் உள்ளிட்டவற்றிற்கு
vijayabharatham.org நேற்று பிரதமர் ம�ோடி அடிக்கல்
நாட்டினார். இதுகுறித்து பேசிய ம�ோடி, சுற்றுச்சூழலை
காப்பாற்றும் அதேவேளையில் நமது தேசம் வளர்ச்சியை
எவ்வாறு துரிதப்படுத்துகிறது என்று பார்த்து உலகமே நம்மை
பாராட்டுகிறது. சூரிய சக்தி, நீர்மின் திட்டம், காற்றாலை,
பசுமை ஹைட்ரஜன் என நமது தேசம் வளர்ந்து வருகிறது என
தெரிவித்தார்.

தி.மு.கவின் அடுத்த ஸ்டிக்கர்


ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு
திட்டம் 60 சதவீத மத்திய அரசின்
பங்களிப்பில் நடைபெற்று வருகிறது.
ஆனால் அதற்கான தமிழக அரசின்
விளம்பரத்தில், முன்னாள் முதல்வரின்
படமும், இந்நாள் முதல்வரின் படமும்
அட்டையில் இடம்பெற்றுள்ளது.
முக்கியமாக இடம்பெறவேண்டிய vijayabharatham.org

பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை. மத்திய அரசின்


திட்டங்களை மறைப்பது, அதன் திட்டங்களின் மீது ஸ்டிக்கர்
ஒட்டுவதை தான் தி.மு.க அரசு த�ொடர்ந்து செய்து வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 4
வருடங்களில், 54.48 லட்சம் ந�ோயாளிகளுக்கு இலவச
மருத்துவ வசதி வழங்கியதற்கு மத்திய நரேந்திர ம�ோடி அரசால்
ரூ. 1106.56 க�ோடிகள் செலவிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே
அதிக பயன்பெற்ற மாநிலம் நம்முடைய தமிழகம்தான் என்பது
குறிப்பிடத்தக்கது என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர்
அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊரக வேலைவாய்ப்பு முகாம்


சுதந்திரமடைந்த 75வது
வருட க�ொண்டாட்டத்தின்
ஒருபகுதியாக, தீன் தயாள்
உபாத்யாயா கிராம கவுசல்யா
திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி
அமைச்சகத்தால், டிசம்பர் 17
முதல் 23 வரை ஏழு நாட்களுக்கு
வேலை வாய்ப்பு முகாம்கள் vijayabharatham.org

நாடு முழுவதும் நடத்தப்பட்டன. 30 பெரிய துறைகளைச்


சேர்ந்த த�ொழில் நிறுவனங்கள் இதில் கலந்து க�ொண்டன.
இத்திட்டம் 27 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,891 திட்டங்களுக்கான
2,369 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம்
2014ல் துவங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 7.13 லட்சம் பேர்
பயிற்சி பெற்றுள்ளனர்.
பழங்குடியினரின் விழிப்புணர்வு
நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள
சத்தீஸ்கரின் அபுஜ்மத் பகுதியில்
வசிக்கும் மலைவாழ் பழங்குடியின
vijayabharatham.org மக்கள், சமூகப் பணி என்ற
ப�ோர்வையில் தங்கள் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளால்
அப்பட்டமாக மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களைத் தடுக்கக்
க�ோரி ஒரு இயக்கத்தைத் த�ொடங்கியுள்ளனர். அபுஜ்மத்தில்
உள்ள 10 கிராம பஞ்சாயத்துகளில் இந்த இயக்கம் இதற்கான
கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டத்தில் தங்களின் பூர்வீக
கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத பழக்கவழக்கங்களை
காப்பாற்றுவதே இயக்கத்தின் முக்கிய ந�ோக்கம். சதிகாரர்களை
விட்டுவிட மாட்டோம். மதமாற்ற சம்பவங்களால்
அப்பகுதிகளில் பகுதியில் ம�ோதல்கள் அதிகரித்து வருகிறது.
மதம் மாறிய பழங்குடியினர் சட்டவிர�ோதமாக இடஒதுக்கீட்டின்
பலன்களை த�ொடர்ந்து பெற்று வருகின்றனர். இதனை
நிறுத்த வேண்டும் என்று க�ோரிக்கை விடுத்தனர். மேலும்,
தங்கள் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளின் இத்தகைய
மதமாற்ற முயற்சிகளைத் தடுப்பதில் மாநில அரசு நிர்வாகம்,
காவல்துறையின் செயலற்று ப�ோய்விட்டன. இதனால்தான்
இயற்கையை நேசிக்கும் ஏழைகளான நாங்கள் தெருவில்
இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என கூறிய
அவர்கள், மதமாற்றத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் பெரிய
ப�ோராட்டம் நடத்தப்படும் என, உள்ளாட்சி நிர்வாகத்திற்கு
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மமதாவுக்கு பின்னடைவு
க�ோவாவில் சமீபத்தில் காங்கிரஸ்
கூட்டணியை விட்டு வெளியேறி திருணமூல்
காங்கிரஸ் கட்சிக்குத் தாவிய முன்னாள்
க�ோவா சட்டமன்ற உறுப்பினர் லாவ�ோ vijayabharatham.org
மம்லேதார், மற்றும் சுஜய் மல்லிக், ராம் மந்த்ரேக்கர், க�ோமல்
பர்வார், கிஷ�ோர் பர்வார் உள்ளிட்ட ஐந்து பேர் திருணமூல்
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இதுகுறித்து
அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘க�ோவாவிற்கும் க�ோவா
மக்களுக்கு பிரகாசமான நாட்களைக் க�ொண்டு வருவார்கள்
என்ற நம்பிக்கையுடன் நாங்கள் திருணமூல் கட்சியில்
இணைந்தோம். ஆனால் அக்கட்சி க�ோவாவையும் க�ோவா
மக்களையும் புரிந்து க�ொள்ளவில்லை. மக்களை மதரீதியாக
பிளவுபடுத்துகிறது. க�ோவா மக்களை பிரிக்கும் முயற்சிக்கு
நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தாங்கள் ஆளும் மேற்கு
வங்கத்திலேயே பெண்கள் நிலையை மேம்படுத்துவதில்
தவறிவிட்ட திரிணாமுல் காங்கிரஸ், க�ோவாவில் எதையும்
பெரிதாக செய்யப்போவது இல்லை’ என தெரிவித்து உள்ளனர்.
மேலும், இதற்கு பிரசாந்த் கிஷ�ோரின் ஐபேக் நிறுவனத்தை
அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். ‘அவர்கள் க�ோவா
மக்களை முட்டாளாக்குகிறார்கள், மாநில மக்கள் குறித்த புரிதல்
அவர்களுக்கு இல்லை’ என்றும் கூறியுள்ளனர். விரைவில்
க�ோவாவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது, மமதா
பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மின்விநிய�ோகத்திற்கு மத்திய அரசு உதவி
மாநிலங்களுக்கு ச�ொந்தமான மின்
விநிய�ோக நிறுவனங்களின் செயல்பாட்டு
திறனை மேம்படுத்தவும், அவற்றின் நிதி
நிலையைச் சீர்படுத்தவும், சீர்திருத்தங்கள்
அடிப்படையிலான, முடிவுகள் சார்ந்த,
சீரமைக்கப்பட்ட விநிய�ோகத் திட்டத்தை vijayabharatham.org
மத்திய மின்சார அமைச்சகம் த�ொடங்கியது. மின் விநிய�ோகத்தை
நவீனப்படுத்துதல், கட்டமைப்பை வலுப்படுத்துதல்
ஆகியவற்றுக்கு மின் விநிய�ோக நிறுவனங்களுக்கு மத்திய
அரசு நிதி உதவி வழங்குகிறது. ரூ. 3,03,758 க�ோடி மதிப்பில்
ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில்
ரூ. 97,631 க�ோடி ஒதுக்கியுள்ளது. 2025 - 26 நிதியாண்டு
வரை இது செயல்பாட்டில் இருக்கும். சீர்திருத்தங்களின்
அடிப்படையில் நிதி உதவி அளிக்கப்படும். அனைவருக்கும்
ஒரே அணுகுமுறை என்ற வகையில் இல்லாமல், ஒவ்வொரு
மாநிலமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்
வகையிலான செயல் திட்டத்தின் அடிப்படையில் இதன்
அமலாக்கம் இருக்கும் என்பது இதன் தனித்துவமாகும். இந்தச்
சீர்திருத்தங்களை மேற்கொண்டு தங்கள் நிறுவனங்களின்
இயக்கத்தை சீர்படுத்தும் முனைப்பில், அசாம், மேகாலயா
ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில்
உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி காங்கிரஸ் பரிதாபம்


விரைவில் தேர்தல் நடைபெற உள்ள
உத்தர பிரதேசத்தில் பெண்களின் வாக்குகளை
பெறுவதற்காக ஜான்சியில் காங்கிரஸ் கட்சி,
மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம்
ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இதில்
vijayabharatham.org கலந்துக�ொண்ட மாணவிகள், மாரத்தான்
ஓட்டப்பந்தயம் துவங்கும் ப�ொழுது "ம�ோடி ம�ோடி . . " என்று
முழக்கம் ப�ோட்டனர். இதனை பார்த்த காங்கிரஸ் கட்சியினர்
வெறுத்து ப�ோயினர். பெண் குழந்தைகளைக்கூட கவரமுடியாத
பிரியங்காவினால் உத்தர பிரதேசத்தில் எப்படி ஆட்சியை
பிடிக்க முடியும் என அவர்கள் புலம்பி வருகின்றனர். இதில்
உச்சபட்ச காமெடி என்னவென்றால், ய�ோகி ஆதித்தியநாத்
தலைமையிலான அம்மாநில அரசு இந்த மாரத்தானுக்கு
அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி ஜான்சி ராணிகள்
வலம் வருவார்கள் என்றார் பிரியங்கா. ஆனால் வலம் வந்த
ஜான்சி ராணிகள் "ம�ோடி ம�ோடி . . ." என்று முழங்கி காங்கிரஸ்
இளவரசியின் முகத்தில் கரியை பூசி விட்டார்கள்.

கம்யூனிச பயங்கரவாதிகள் க�ொலை


தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர்
எல்லையில் உள்ள கிஸ்டாரம் காவல் vijayabharatham.org
நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் திங்கட் கிழமை
நடந்த என்கவுன்டரில் குறைந்தது 6 கம்யூனிச மாவ�ோயிச
பயங்கரவாதிகள் க�ொல்லப்பட்டனர். இது தெலுங்கானா,
சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் ப�ோலீஸ்
படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை என்று காவல்துறை
கண்காணிப்பாளர் சுனில் தத் கூறினார்.
டி.ஆர்.டி.ஓ’வின் அப்யாஸ் ச�ோதனை

vijayabharatham.org

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.


டி.ஓ, ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள கடற்கரையில்
இருந்து ஒருங்கிணைந்த ச�ோதனை வரம்பில் (ஐ.டி.ஆர்)
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக எக்ஸ்பெண்டபிள்
ஏரியல் டார்கெட் (HEAT) அப்யாஸின் ச�ோதனையை
வெற்றிகரமாக நடத்தியது. ஏர�ோநாட்டிகல் டெவலப்மென்ட்
எஸ்டாப்லிஷ்மென்ட் (ஏ.டி.இ), டி.ஆர்.டி.ஓ பெங்களூரு
ஆய்வகம் மற்றும் பிற டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்கள் இணைந்து
ராணுவத்திற்கான வான்வழி இலக்குகளின் தேவைகளைப்
பூர்த்தி செய்ய இந்த உள்நாட்டு ஆளில்லா வான்வழி இலக்கு
அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த ஆளில்லா விமானம்
தரையில் இருந்து கட்டுப்படுத்தப்படும். பாதுகாப்புத்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

ம�ொசாம்பிக் நாட்டுக்கு உதவி


இந்திய பெருங்கடல் பகுதியில்
உள்ள நாடுகளின் பாதுகாப்பு
மற்றும் வளர்ச்சிக்காக சாகர் என்ற
திட்டம் பிரதமர் நரேந்திர ம�ோடியின்
த�ொலைந�ோக்கில் உருவானது. கடந்த
ஆண்டு மே மாதத்திலிருந்து இத்திட்டம்
செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
அண்டை நாடுகளுக்கு தேவையான
உதவிகளை இந்திய கடற்படை vijayabharatham.org

கப்பல்கள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது


வறட்சி நிலவும் ம�ொசாம்பிக் நாட்டில் க�ொர�ோனா தாக்கமும்
அதிகரித்து வருகிறது. சாகர் திட்டத்தின் கீழ் இந்நாட்டுக்கு
உதவும் விதமாக, 500 டன் உணவு ப�ொருட்கள், ஐ.என்.
எஸ் கேசரி ப�ோர்க்கப்பல் ம�ொசாம்பிக் க�ொண்டு சென்றது.
அத�ோடு, ம�ொசாம்பிக் ராணுவத்துக்கு உதவ, 2 அதிவிரைவு
படகுகள், தற்காப்பு பாதுகாப்புத் தளவாடங்களையும் க�ொண்டு
சென்றது. சாகர் திட்டத்தின் கீழ் 15 நட்பு நாடுகளுக்கு 3,000
மெட்ரிக் டன் உணவு ப�ொருட்கள், 300 மெட்ரிக் டன்னுக்கு
மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன்கள், 900 ஆக்ஸிஜன்
செறிவூட்டிகள், 20 கன்டெய்னர்கள் ஆகியவற்றை இந்திய
ப�ோர்க்கப்பல்கள் க�ொண்டு சென்றுள்ளன. இந்தப் பணியில்
இந்திய ப�ோர்க்கப்பல்கள் ம�ொத்தம் 40,000 நாடிகல் மைல்
தூரம் பயணம் செய்துள்ளன.
சுய உதவிக் குழுக்களுக்கு உதவி
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75
ஆவது ஆண்டைக் க�ொண்டாடும்
வகையில், தீன்தயாள் அந்த்யோதயா
திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார
இயக்கம் சார்பில் டிசம்பர் 18ம் தேதி
சிறப்பு விளக்கவுரை நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்திருந்தது. வங்கிகளின் vijayabharatham.org
மூத்த அதிகாரிகள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உயர்
அதிகாரிகள் இதில் கலந்து க�ொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு
பகுதியாக, இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களின்
உறுப்பினர்களுக்கு ரூ. 5,000 வரை ஓவர் டிராப்ட் வழங்கும் வசதி
த�ொடங்கி வைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி துறை செயலாளர்
நாகேந்திர நாத் சின்ஹா இதனைத் த�ொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், சுமார் 5 க�ோடி மகளிர் சுய உதவிக்குழு
உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்மய�ோகி
விருது
2021
vijayabharatham.org

மை ஹ�ோம் இந்தியா என்ற தேசிய அரசு சாரா அமைப்பு,


நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே
உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயல்கிறது.
இந்த அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான 8வது சுவாமி
விவேகானந்தா கர்மய�ோகி விருது திரிபுராவின் புகழ்பெற்ற
பழங்குடி மதத் தலைவரும் சமூக ஆர்வலருமான சுவாமி
சித்தரஞ்சன் டெபர்மாவுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில்
உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், கங்கா
மகாசபையின் ப�ொதுச்செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த்
சரஸ்வதி, கர்மய�ோகி விருதை சுவாமி டெபர்மாவுக்கு வழங்கி
க�ௌரவித்தார். 1 லட்சம் ர�ொக்கப் பரிசை சரஸ்வத் கூட்டுறவு
வங்கியின் தலைவர் க�ௌதம் இ தாக்கூர் வழங்கினார். “சுவாமி
சித்தரஞ்சன் டெபர்மா பழங்குடியினப் பகுதி மக்களின்
வாழ்க்கையை மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவர்
தனது வாழ்க்கையையும் சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ளார்.
மனித நேயத்திற்கான அவரது விலைமதிப்பற்ற பணி
அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. பழங்குடியினர் நலன்,
சமூக மேம்பாடு, கல்வி, சுகாதாரம், இயற்கை விவசாயம்,
தையல், திறன் மேம்பாடு ஆகியவற்றில் சுவாமி சித்தரஞ்சன்
டெபர்மா மகத்தான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
மதமாற்றத்தையும் தடுத்து வருகிறார்" என்று மை ஹ�ோம்
இந்தியா நிறுவனரும் பா.ஜ.கவின் தேசிய செயலாளருமான
சுனில் திய�ோதர் கூறினார். மேலும் கெளதம் இ தாக்கூர், சுவாமி
ஜிதேந்திரானந்த் சரஸ்வதி, டாக்டர் பகவத் கரத், பல்தேவ்
சச்தேவா ஆகிய�ோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
வி.ஹெச்.பி மத்தியக்குழு கூட்டம்
குஜராத் மாநிலம் ஜுனாகரில்
நடைபெற்ற விஷ்வ ஹிந்து
பரிஷத் அமைப்பின் மூன்று
நாள் மத்தியக்குழு கூட்டத்தில்,
மதம் மாறிய பட்டியலின
பழங்குடியினரை எஸ்.சி
மற்றும் எஸ்.டி பட்டியலில்
இருந்து நீக்க வேண்டும்.
மதம் மாறிய கிறிஸ்தவர்கள்,
முஸ்லிம்களையும் இந்த vijayabharatham.org
பட்டியலில் இருந்து விலக்க வேண்டு. உண்மையான படியலின
பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு உரிமை கிடைக்கும்
வகையில், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களை
மேற்கொள்ள வேண்டும். தர்மபிரசாரம், ஆச்சாரியர்கள், மடங்கள்,
க�ோயில்கள், அர்ச்சகர்கள், புர�ோகிதர்களை த�ொடர்பு க�ொண்டு,
தர்மயாத்திரைகள் வழியாக நடத்தப்படும் ஹித்தாசிந்தக்
பிரச்சாரத்தின் மூலம் 50 லட்சம் நலம் விரும்பிகள் நாடு
முழுவதும் உருவாக்கப்படுவார்கள். சமுதாயத்தில் நல்லிணக்க
உணர்வை ஏற்படுத்த முயற்சித்தல். சுற்றுச்சூழலையும்
சூழலியலையும் பாதுகாப்பதற்கான விரிவான திட்டத்தை
செயல்படுத்துதல். கிறிஸ்தவர்கள் கடந்த 350 ஆண்டுகளாக
ஹிந்துக்களை துன்புறுத்துதல், இனப்படுக�ொலைகள்,
வெகுஜன மரணதண்டனைகளை நடத்தினர். எனவே, ப�ோப்
பாரதத்திற்கு வரும்போது, இதற்கெல்லாம் அவர் மன்னிப்பு
கேட்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் மரியாதை காட்ட
வேண்டும், பாரதத்தில் மத மாற்றங்களை நிறுத்துமாறு அறிவிக்க
வேண்டும். 9வது சீக்கிய குருவான குரு தேக் பகதூர் ஜி, முகலாய
க�ொடுங்கோன்மையிலிருந்து ஹிந்துக்களைப் பாதுகாக்க
தனது உயிரைத் தியாகம் செய்தார். அவரது ப�ோதனைகளைப்
பிரச்சாரம் செய்ய, நாடு முழுவதும் நிகழ்ச்சிகள், மாநாடுகள்
ஏற்பாடு செய்யப்படும். கடந்த காலங்களில் ஏதேனும் ஒரு
காரணத்திற்காக அன்னிய மதத்தை ஏற்று, மதம் மாறியவர்கள்,
வி.ஹெச்.பியின் நாடு தழுவிய ‘தாய்மதம் திரும்புதல்’
பிரச்சாரத்தில் மீண்டும் தங்கள் மூதாதையர் மதத்திற்கு அழைத்து
வர முயற்சி. கட்டாயம், ப�ொய்யுரை, வசீகரம், ப�ொய் வாக்குறுதி,
பயம், சதி ப�ோன்ற காரணங்களால் மதம் மாறியவர்கள் தங்கள்
மூதாதையர்கள் பின்பற்றிய தாய்மதத்திற்குத் திரும்பி மதத்தைத்
அவர்களின் முன்னோர்களின் புகழ்பெற்ற பாரம்பரியங்களின்
பங்குதாரர்களாக இருக்க வி.ஹெச்.பி ஊக்குவித்தல். மத
மாற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்ற மத்திய
அரசை வலியுறுத்துதல். சமுதாயம் மற்றும் நாடு முழுவதும்
முன்னேற்றம் அடைய நமது பட்டியலின பழங்குடியின
சக�ோதரர்களை இணைத்து பணிபுரிதல், வி.ஹெச்.பி சமூக
விழிப்புணர்வு பணிக்காக சுமார் 1,000 இளைஞர்களை இதில்
இணைத்தல். மனிதநேயம் மதிப்பிழக்கப்படுவதைத் தடுக்க
சமுதாயத்தில் சம்ஸ்காரங்களை வளர்ப்பதை ஊக்குவித்தல்.
2024ல், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள்
நிறைவடையும். அதற்குள் நடைபெறவேண்டிய அமைப்பின்
விரிவாக்கத் திட்டம் குறித்தும் ஆல�ோசனை என்பது
உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதித்து தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
தலிபான்கள் அதிரடி உத்தரவு
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு
மாதம் முதல் தலிபான் பயங்கரவாதிகளின்
ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து
அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் vijayabharatham.org
விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது,
ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில்
அனுமதிக்கக்கூடாது, 72 கில�ோ மீட்டர்களுக்கு மேல் பயணம்
செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை
இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம்
செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும்.
பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள்
கேட்கக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம் பெண்கள் நடித்திருக்கும்
த�ொலைக்காட்சி த�ொடர்களை ஆப்கனில் ஒளிபரப்பக்கூடாது
என தலிபான்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதான் எதார்த்தம்
இந்த முதிய ஆப்பிரிக்கா சிங்கத்தின்
புகைப்படத்தைப் பாருங்கள். இன்னும்
சிறிது நேரத்தில் இது இறந்துவிடப்
ப�ோகிறது. ஒரு காலத்தில் இதனுடைய
ஒரு சிறிய உறுமல் ம�ொத்த காட்டையே
vijayabharatham.org குலைநடுங்கச் செய்தது. இதைக்
கண்டாலே அனைத்து விலங்குகளும் தலைத் தெறிக்க ஓடும்.
புலி, சிறுத்தைகள்கூட இதனை கண்டால் பதுங்கும். ஆனால்
இப்போது இது வயது முதிர்ச்சி பெற்ற சிங்கம். இதனால்
முன்புப�ோல துரத்தி சென்று வேட்டையாட முடியாது. கிடைக்கும்
மாமிசத்தை உண்ணக்கூட வாயில் பற்கள் கிடையாது. நகரவே
இப்பொழுது சிரமப்படுகிறது. இதுதான் நிகழும் என நன்றாகத்
தெரிந்து இந்த சிங்கம் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து
தனியே வந்துவிட்டது. காட்டு நாய்களின் கூட்டம் இதனை
பார்த்தால் அவ்வளவுதான். இந்த சிங்கத்தின் இறப்பு அவ்வளவு
சாதாரணமாக இருக்காது. அந்த சிங்கத்தை அவை க�ொஞ்ச
க�ொஞ்சமாக கடித்துக் க�ொல்லும். நரக வேதனை அது.
இதுதான் தனது முடிவு என்று இந்த சிங்கத்துக்கு நன்றாகத்
தெரியும். ஒரு துறவி ப�ோன்று அமைதியாக தனது மரணத்தை
ந�ோக்கி காத்துக் க�ொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில்
எல்லாம் முடிந்து விடும். எனினும் தன்னுள் இருக்கும் க�ொஞ்ச
சக்தியை க�ொண்டு நிற்க முயற்சிக்கிறது இந்த சிங்கம். சாவிலும்
சிங்கம் சிங்கமே.
நீ உன்னுடைய ப�ொருளின் மீது பெருமைக�ொள்கிறாயா?
நீ உன்னுடைய சரீர அழகின் மீது கர்வம் க�ொண்டவளாக
இருக்கிறாயா? நீ உன்னுடைய புகழ்ச்சியின் மீது இச்சை
க�ொண்டவனாக இருக்கிறாயா? உன் ச�ொந்தபந்தங்கள்,
நட்பின்மீது மிகுந்த அபிமானம் வைத்திருக்கிறாயா? நீயும் ஒரு
நாள் இந்த சிங்கத்தை நிலைக்கு வருவாய். நாம் எல்லோரும்
வருவ�ோம். அப்பொழுது நம்முடைய இந்த ப�ொருள், அழகு,
புகழ்ச்சி, பெருமை, ச�ொந்தபந்தங்கள், நட்பு எனும் மாயைகள்
அனைத்தும் ஒரு தேவையில்லாத ஒரு மலிவான ப�ொருளாக
மாறிவிடும். இதுவே வாழ்க்கையின் க�ொடிய எதார்த்தம். ஒரு
நாள் ஒரு சில நிமிடங்கள் உன்னுடைய ம�ொத்த வாழ்வும் உன்
கண் முன் பிரதிபலிக்கும். அப்பொழுது அந்த பிரதிபலிப்பை
பார்த்து ரசிக்கும் அளவிற்கு நீ வாழ்ந்திருக்க வேண்டும்.
திருப்பாவை 13
தூக்கத்திலிருக்கும் பெண்ணை
ந�ோக்கி," "பறவை உருவமெடுத்து
பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும்,
அரக்கனான ராவணனின் தலையைக்
க�ொய்யவும் அவதாரம்
எடுத்த நாராயணனின் புகழைப்
பாடியபடி நாம் அனைவரும் பாவை
ந�ோன்பு நிகழும் இடத்திற்குச் சென்று
விட்டோம். கீழ்வானத்தில் சுக்கிரன் என்ற
வெள்ளிக்கிரகம் உச்சிக்கு வந்து விட்டது,
குரு என்ற வியாழக் கிரகம் மறைந்து vijayabharatham.org
விட்டது! பறவைகள் பாடத் த�ொடங்கி விட்டன. விழித்தும்
விழிக்காமல் அரை நித்திரை காண்பவளே!
விடியலை உணர்த்தும் அறிகுறிகள் தெரிந்தும், குளிக்க
வராமல் படுக்கையில் கிடந்து என்ன செய்கிறாய் பெண்ணே!
தூக்கத்தைத் தவிர்த்து எங்களுடன் நீராட வா!," என
கண்ணனைப் பாடிவரும் த�ோழியர் அழைக்கின்றனர்.

திருவெம்பாவை 13
"தடாகம் நடுவே பூத்துக் குலுங்கிய
நிலையில் கருநீலக் குவளை மலர்கள்.
அருகில் பூத்துப் படர்ந்த அம்சமாய்
செந்நிறத்தாமரை மலர்கள் தங்கள்
அழுக்கை இக்குளத்தில் களைய மக்கள்
அணி அணியாய் வருகை. அவர்கள்
உதடுகளில் நமசிவாய மந்திரத்தின் ஒலி. vijayabharatham.org
எங்கள் பிரானான சிவனும், பார்வதியும் ப�ோல் இத்தகைய
பின்னணியில் தடாகத்தின் த�ோற்றம் தெரிகிறது.
தாமரை மலர்கள் நிறைந்த இந்தத் தெய்வீக குளத்தில், நம்
சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் ஒலியெழுப்ப,
நம் உள்ளமெல்லாம் ப�ொங்க பாய்ந்து நீராடுவ�ோம்," எனத்
த�ோழிகள் கூறுகின்றதாய் மணிவாசகர் இப்பாசுரத்தைக்
கட்டமைத்துள்ளார். "இயற்கையே இறைவனையும்
இறைவியையும் அடியார்களின் கண்களுக்கு நினைவூட்டிக்
க�ொண்டிருக்கிறது. மனமாகிற ப�ொய்கையில் இவ்விருவரும்
தங்கியிருப்பதை நாம் உணர வேண்டும்" என்பது பாடலின்
சாரம்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî« .
93613 99006

You might also like