You are on page 1of 12

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


ãyt, I¥gá - 213 br›thŒ 09.11.2021 ky® - 2, ïjœ - 217

c©lhdjh? cUth¡f¥g£ljh?
இரண்டு நாட்களுக்கு
முன்பு ப�ொழிந்த ஒரேநாள்
மழையில் சென்னையும் அதன்
சுற்றுவட்டாரப் பகுதிகளும்
வெள்ளக்காடானது. 2015ல்
É#aghuj«
வந்த மழையின்போதும்
சென்னை வெள்ளக்காடானது. ஆனால், அப்போது பெய்த
மழையின் அளவு 45 செ.மீ. தற்பொது வெறும் 23 செ.மீ
மட்டுமே. அப்படியெனில் எப்படி சென்னை ஒரே இரவில்
வெள்ளக்காடானது, ஏன் இவ்வளவு சேதங்கள் என்ற கேள்வி
நம் மனதில் எழாமல் இல்லை.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் நிலையப்
பணிகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகள்,
அ.தி.மு.க கடந்த 10 ஆண்டுகளாக எந்த பணியையும்
செய்யவில்லை, மக்கள்தொகை பெருக்கம் என எவ்வளவு
காரணங்களை இதற்கு தி.மு.கவினர் அடுக்கினாலும் ஏன�ோ
சந்தேகம் நீங்கியபாடில்லை.
இந்த மழையில், பல நூறு க�ோடி செலவழித்துக்
கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் மழை நீர் வடியவில்லை,
கழிவு நீர் வடிகால்களில் கழிவு நீர் செல்லவில்லை. பல
இடங்களில் கழிவு நீர் சாலைகளில் வெளியேறுகிறது. கழிவு
நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் இயங்கவில்லை.
ஒரு சில இடங்களில் மட்டுமே ம�ோட்டார் வைத்து வெள்ளம்
வெளியேற்றப்பட்டது. இது ப�ோன்ற பல சம்பவங்கள் மனதில்
நெருடலை ஏற்படுத்தவே செய்கின்றன.
இது ப�ோன்ற பேரிடர் காலங்களில் டெண்டரே இல்லாமல்
ப�ொருட்கள் வாங்கலாம் என்ற அவசரகால நடைமுறைகளை
பயன்படுத்தி கமிஷன் அடிக்கலாம். மத்திய அரசிடம் இழப்பீடு
பெற்று அதன் செலவழிப்பில் கணிசமாக லாபம் பார்க்கலாம்,
சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறி புதிய டெண்டர்களை விட்டு
காசு பார்க்கலாம் என மழையை வைத்து சம்பாதிக்க பல
வழிவகைகள் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தி.மு.கவினர்
நழுவ விடுவார்களா என்ன?
மழை வெள்ளத்தை பார்வையிட முதல்வர் ஸ்டலினின்
திடீர் விஜயம், விரைவில் வரவுள்ள நகராட்சித் தேர்தல்களில்
வெற்றிபெற, வெள்ளத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்த
தி.மு.கவினர் முயற்சிக்கின்றனர�ோ என்ற சந்தேகத்தையும்
எழுப்பவே செய்கிறது. ஏனெனில் தி.மு.கவின் கடந்த கால
வரலாறு அப்படி.
மதிமுகன்
â.K.f. muá‹ muh#f«
தி ரு ச்செந் தூ ர்
செந்திலாண்டவர் க�ோயிலில் கந்த
சஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி
த�ொடங்கி நடைபெற்று வருகிறது.
க�ொர�ோனாவை காரணம்
காட்டி பக்தர்கள் பங்கேற்பின்றி
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தி.மு.க É#aghuj«
அரசின் கீழ் உள்ள ஹிந்து அறநிலையத்துறை நடத்துகிறது.
கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கவும் முருகனை கண்டு
வழிபடவும் இக்கோயில் கலையரங்கம், வளாகத்தில் தங்கிய
பக்தர்களை, தி.மு.க அரசின் உத்தரவின்படி காவல்துறை
கட்டாயப்படுத்தி வெளியேற்றியது. பெண்களின்
தலைமுடியை பிடித்து இழுத்துத் தள்ளுதல் என அராஜகங்களும்
அரங்கேறின. பக்தர்கள் அருகில் உள்ள கடை வாசல்கள்
திண்ணைகளில் மழையில் நனைந்தபடி துன்பப்பட்டனர்.
பக்தர்கள் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
க�ோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு
அனுமதிக்க க�ோரியும் பா.ஜ.கவினர் ப�ோராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை பா.ஜ.கவினரை
கைது செய்தனர். இந்து முன்னணியினரும் க�ோயில்
வளாகத்தில் பிரார்த்தனை ப�ோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த
ப�ோராட்டங்களால் திருச்செந்தூர் முருகன் க�ோயில் வளாகத்தில்
பரபரப்பு நிலவியது. ஹிந்து விர�ோத தி.மு.க ஆட்சியினரின்
அடக்குமுறை ஹிந்துக்களின் கண்டனத்திற்கும் உள்ளானது.
இந்து முன்னணி நேற்று மாலை 5 மணியளவில் திருச்செந்தூர்
க�ோயில் அலுவலகம் முற்றுகை ப�ோராட்டம் நடத்தியது.

uhk»UZzD¡F g¤k$
1975 ஜனவரி 10ம் தேதியன்று நடந்த கடற்படைக்கான
தகுதித் தேர்வின்போது ஏற்பட்ட விபத்தினால் முதுகுத்
தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் எஸ். ராமகிருஷ்ணன்,
இவருக்கு தலையைத்தவிர உடலின் எந்த உறுப்பும் இயங்காது.
தன்னைப் ப�ோன்ற மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களைப்
ப�ோக்க எண்ணி, 1981ல் அமர் சேவா சங்கத்தைத் த�ொடங்கி,
கடந்த 38 வருடங்களாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமான
பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு, உறைவிடம்,
கல்வி, த�ொழிற்பயிற்சி, உடலியக்கப் பயிற்சிகள் ப�ோன்ற
அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்க ஆவன செய்து
வருகிறார். தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள அவரது
அமர்சேவா சங்கத்தில் மாற்றுத் திறனாளிகள், மனநலம்
பாதிக்கப்பட்ட ஏராளமான�ோர் தங்கி பயின்று வருகின்றனர்.
எஸ். ராமகிருஷ்ணனின் மாபெரும் ப�ொதுசேவையை பாராட்டி
க�ௌரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் அவருக்கு
‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி க�ௌரவித்தார்.
Ãidî k©lg« f£l murhiz
கருணாநிதிக்கு 2.21 ஏக்கர்
பரப்பளவில், 39 க�ோடி ரூபாய்
செலவில் நினைவு மண்டபம் கட்ட
தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டு
உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை
உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள்
É#aghuj« தத்தளிக்கின்றன. சுரங்கப்பாதைகளும்
சாலைகளும் குளங்களாக காட்சி அளிக்கின்றன. உண்ண
உணவின்றி மக்கள் அலைகின்றனர். குடிக்க நல்ல குடிநீர்
இல்லை. ஏரிகள் திறப்பால் எத்தனை உயிர்கள் காவு
வாங்கப்படும�ோ தெரியாது. கனமழை நீடிக்கும் என்ற வானிலை
மையத்தின் மிரட்டல்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கம் மறுபுறம்,
தமிழகம் நீரில் மட்டுமல்ல கடனிலும் தத்தளிக்கிறது. பெட்ரோல்
டீசல் விலையை ஜி.எஸ்.டியில் க�ொண்டு வருவ�ோம், எரிவாயு
உருளைக்கு மானியம் பெண்களுக்கு உரிமைத் த�ொகை 1,000
ரூபாய் உள்ளிட்ட பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல்
இருக்கின்றன. ஆனால், இதை பற்றியெல்லாம் சிறிதும்
கவலைப்படாமல், மக்களின் காசில் கருணாநிதிக்கு நினைவு
மண்டபம்! "கிடப்தெல்லாம் கிடக்கட்டும் கிழவியை எடுத்து
மனையில் வை" என்ற பழம�ொழி கிராமங்களில் உண்டு,
அதனை மெய்ப்பிக்கிறது தி.மு.க இன்று.

gh.#.f M®gh£l«

É#aghuj«
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தண்ணீர்
திறந்து விட்டதையும், அணையின் உரிமை தமிழகத்தின் கைகளி
இருந்தும் அதனை தட்டிக் கேட்காமல் வாய்மூடி ம�ௌனமாக
இருக்கும் தி.மு.க அரசை கண்டித்தும், 142 அடி தண்ணீர்
தேக்கிவைக்கும் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்ட முதல்வர்
ஸ்டாலினை கண்டித்தும் பா.ஜ.க சார்பில், தேனி மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்பாட்டம் நடத்தினர். இதில்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துக�ொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை
ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பா.ஜ.கவினர்
மழையையும் ப�ொருட்படுத்தாது கலந்துக�ொண்டனர்.
jL¥óáÆš Kiwnflh?
த மி ழக த் தி ல்
கர�ோனா தடுப்பூசி
செலுத்தப்படுவதில்
மு றைகே டு க ள்
நடப்பதாக பலர்
சந்தேகம் தெரிவித்து
வருகின்றனர். சில
ம ா வ ட ்ட ங ்க ளி ல் É#aghuj«

தடுப்பூசி ப�ோடுவ�ோரின் எண்ணிக்கையை அதிகரித்துக்


காட்டும் வகையில் முறைகேடுகள் நடப்பதாக சுகாதாரத் துறை
அலுவலர்கள் சிலரே குற்றம்சாட்டியுள்ளனர். தடுப்பூசி செலுத்த
ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட்
ப�ோன்ற ஆவணங்களுடன் செல்போன் எண்ணும் வழங்க
வேண்டும். தடுப்பூசி செலுத்திய பின் செலுத்திக் க�ொண்ட
நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்மூலம் அவர்
தடுப்பூசி செலுத்திக் க�ொண்டதை அரசு உறுதி செய்யும்.
ஆனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில், சில ஆரம்ப
சுகாதார நிலையங்களில் பயன்பாடற்ற அலைபேசி எண்களைப்
பயன்படுத்தி, ஆதார் அட்டைக்கு மாற்றாக ஓட்டுநர் உரிமம்
ப�ோன்றவற்றை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக
பதிவேற்றம் செய்கின்றனர். சம்பந்தப்பட்டவருக்கு அலைபேசி
குறுஞ்செய்தி செல்வதையும் முடக்கி விடுகின்றனர். முதல்
கட்டத் தடுப்பூசி செலுத்திக் க�ொண்ட நபர் 2ம் கட்டத் தடுப்பூசி
செலுத்திக் க�ொள்ள வரும்போது, வேறு ஆவணங்களை
பயன்படுத்தி அவருக்கு தடுப்பூசி செலுத்துகின்றனர்.
குறுஞ்செய்தி வரவில்லை எனக் கேட்டால், சிக்னல் க�ோளாறு
எனக் கூறி, தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை
வழங்குகின்றனர் என்றும் புகார்கள் உள்ளன.
சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே தடுப்பூசி
செலுத்திக் க�ொண்டதாக செய்தி வருவதும், தடுப்பூசி
செலுத்தியும் பலருக்கு அதற்கான குறுஞ்செய்தி வராததும்
முறைகேடு எனும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. சட்டவிர�ோத
குடியேறிகளான ர�ோஹிங்கியா, வங்க தேசத்தவர்களின்
புகலிடமாக தமிழகம் மாறிவருவதால், அவர்களுக்கு
க�ொர�ோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, இத்திட்டத்தில்
முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், க�ொர�ோனா
தடுப்பூசிகள் அவர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படலாம்
என்றும் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனை மத்திய
அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும். முறைகேடுகள்
நடைபெறுவது உண்மையெனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின்
எதிர்பார்ப்பு.
f«ôÅr bfhiyahËfŸ
கேரளாவின் தலசேரியை சேர்ந்த
நாளிதழ் விற்பனையாளர் முகமது பாசில்.
இவர் ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
É#aghuj« கட்சியில் இருந்தார். பின்னர் முஸ்லிம்
பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப்
இந்தியாவில் இணைந்தார். கடந்த 2006 அக்டோபர் 22 அன்று
தலசேரி மசூதி அருகே மர்ம நபர்கள், முகமது பாசிலை க�ொலை
செய்தனர். இவ்வழக்கை முதலில் மாநில குற்றப்பிரிவு
காவல்துறையும் பின்னர் 2008ல் சி.பி.ஐயும் விசாரித்தது.
இவ்வழக்கில் 2012ம் ஆண்டில் 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி நிர்வாகிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 2016ல் கேரள காவல்துறையினர், ஆர்.
எஸ்.எஸ் அமைப்பின் மீது ப�ொய்யாக குற்றம் சாட்டினர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகி சுபேஷ் என்பவரையும்
கைது செய்தனர். இவ்வழக்கில் தற்போது க�ொச்சி சிறப்பு
நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்தது. அதில்,
'முகமது பாசில் க�ொலை வழக்கில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள்
காரை ராஜன், காரை சந்திரசேகரன் ஆகிய�ோருக்கு
த�ொடர்புள்ளது. அவர்களின் உத்தரவின்படி, க�ொடி மணியும்
அவரது அடியாட்களும் முகமது பாசிலை க�ொலை செய்தனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இதில் எவ்வித த�ொடர்பும் இல்லை'
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

gh.#.f bjh©l® gLbfhiy


மேற்கு வங்க மாநிலம் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில்
உள்ள பாகபன்பூரில் பா.ஜ.க சக்தி கேந்திராவின் தலைவர்
ஷம்பு மைதி வெட்டிக் க�ொல்லப்பட்டார். அப்பகுதி மக்கள்
கூறுகையில், அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் மைதியை
வலுக்கட்டாயமாக ம�ோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
சென்றனர். ஞாயிற்றுக்கிழமை
காலை ஆற்றங்கரையில் மைதியின்
சடலம் கிடந்தது. இதைக் கண்டு
காவல்துறையில் புகார் அளித்தனர்.
மைதியின் உடல் முழுவதும் வெட்டுக்
காயங்கள் இருந்தன. வழக்கம்போல
திருணமூல் காங்கிரஸ் கட்சி இதனை
தாங்கள் செய்யவில்லை என மறுத்து
உள்ளது. இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 17ல்,
É#aghuj«
உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள
இதாஹார் பகுதியில் பா.ஜ.கவின் இளைஞர்
பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர் மிதுன் க�ோஷ், அவரது
வீட்டில் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்
க�ொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
ghuj ÉŠPhÅfŸ f©Lão¥ò
ஐ.ஐ.டி கரக்பூர் மற்றும் இந்திய
அறிவியல் படிப்பு மற்றும் ஆய்வு
கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த
விஞ்ஞானிகள், தன்னைத் தானே
சரி செய்து க�ொள்ளும் உல�ோகம்
ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த É#aghuj«
உல�ோகத்தால் சில ந�ொடிகளில் தனது சேதங்களை தானாகவே
சரி செய்து க�ொள்ள முடியும். மேலும், இந்த உல�ோகம் மற்றும்
உல�ோகங்களை விடவும் 10 மடங்கு கடினமானது என
கூறப்படுகிறது. ஏற்கனவே, தற்போதுள்ள இந்த வகையிலான
பல உல�ோகங்களில் சில குறைகள் உள்ளன. அவை
குணமாவதற்கு வெப்பம், ஒளி உள்ளிட்ட ஏதேனும் வேதியியல்
உதவி தேவைப்படும். ஆனால், நமது விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ள இந்த புதிய உல�ோகமானது இத்தகைய
குறைபாடுகள் ஏதும் இல்லாதது. எவ்வித உதவியும் இல்லாமல்
தானாகவே குணமாகும் திறன் க�ொண்டுள்ளது என்பது இதன்
கூடுதல் சிறப்பு. இந்த புதிய உல�ோகத்தை வருங்காலத்தில் ப�ோர்
விமானங்கள், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், ப�ோர் கப்பல்கள்
உள்ளிட்ட ராணுவ தளவாடங்களில் பயன்படுத்திக்கொள்ள
முடியும்.

ghJfh¥ghd
ngh¡Ftu¤J Ka‰á
வரும் 2030ம் ஆண்டுக்குள்
É#aghuj«
சாலை விபத்துக்களை 50
சதவிகிதம் குறைக்கவும், சாலை விபத்துகளால் ஏற்படும்
உயிரிழப்புகளை பூஜ்ஜியமாகக் குறைக்கவும் மத்திய சாலை
ப�ோக்குவரத்துத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு
வருகிறது. அவ்வகையில், ஐ.ஐ.டி மெட்ராஸ் உருவாக்கிய
‘தரவு உந்துதல்’ மாதிரியைப் பயன்படுத்தி, சாலைகளைப்
பாதுகாப்பானதாக்கவும், அவசரகால சிகிச்சைகளை
மேம்படுத்தவும் நாடு முழுவதும் சாலைகளை மேம்படுத்த
முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உலக வங்கியின்
நிதியுதவியுடன் சாலை ப�ோக்குவரத்து அமைச்சகத்தால் ஐ.ஐ.டி
மெட்ராஸ் உருவாக்கிய இந்த மாதிரி ஏற்றுக்கொள்ளப்பட்டு
உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு அலைபேசி செயலி
உருவாக்கப்பட்டுள்ளது. அதில், காவல்துறையினர் சாலை
விபத்து பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் வீடிய�ோக்களை
பதிவேற்றம் செய்ய வேண்டும். அச்சம்பவத்திற்கான தனிப்பட்ட
குறியீட்டு எண் உருவாக்கப்படும். உடனே, ப�ொதுப்பணித்
துறை, உள்ளாட்சி அமைப்பின் ப�ொறியாளர் இதுகுறித்த
விவரங்களைப் பெறுவார்கள். அவர்கள் விபத்து நடந்த
இடத்திற்குச் சென்று, ஆய்வு செய்து, சாலை வடிவமைப்பு
மாற்றம் ப�ோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
சேகரிக்கப்பட்ட இத்தரவுகள், ஐ.ஐ.டி மெட்ராஸில் உள்ள
ஒரு குழுவால் பகுப்பாய்வு செய்யப்படும். அக்குழு சாலை
வடிவமைப்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை
பரிந்துரைக்கும்.
óŠ¢ Mgnuõ‹
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில்
உள்ள காட்டில் பதுங்கியுள்ள
É#aghuj« பயங்கரவாதிகளை தேடி அழிக்கும்
ராணுவ ஆபரேஷனானது இன்றுடன் 29வது நாளை
எட்டியுள்ளது. த�ொடர்ந்து பயங்கரவாதிகளை ராணுவம்
தேடி வருகிறது. இதுவரை 2 இடைநிலை அதிகாரிகள்
உட்பட 9 ராணுவ வீரர்கள் இந்த ஆபரேஷனில் வீர மரணம்
அடைந்துள்ளனர். தற்போது ரஜ�ோரி, தானமன்டி இடையிலான
தேசிய நெடுஞ்சாலை உட்பட என்கவுன்டரின் பரப்பளவு
அதிகரித்துள்ளது. முடப்பட்டு காப்லா காட்டு பகுதியிலும்
தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
v‹.o.ã.á ts®¢á
என்.டி.பி.சி நிறுவன தினத்தை
ய�ொட்டி மத்திய மின்சாரம், புதிய மற்றும்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்
É#aghuj«
ஆர்.கே.சிங் பேசுகையில், 'ஒவ்வொரு
நாளும் ஏறக்குறைய ஒரு பில்லியன் யூனிட் மின்சாரத்தை
தயாரிக்கும் என்.டி.பி.சியின் சாதனை மகத்தானது. கடந்த
நிதியாண்டில், மாநிலங்களின் மின் தேவையை சுமார் 4,500 க�ோடி
ரூபாய் அளவுக்கு அளித்துள்ளது. நாட்டின் மின்தேவையைப்
பூர்த்தி செய்வதில் நிறுவனத்தின் பங்கு அபரிமிதமானது.
தேசத்தின் எரிசக்தி தேவை பெருமளவில் அதிகரித்து வருவதால்
என்.டி.பி.சி த�ொடர்ந்து வளர்ச்சியடைவது அவசியம். என்.டி.பி.
சி தேசிய நிறுவனம் என்ற அளவைத் தாண்டி, மின் துறையில்
மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து, சர்வதேச
நிறுவனமாக மாற தன்னை உயர்த்திக் க�ொள்ள வேண்டும்' என
கூறினார். மேலும், சிறப்பாக செயல்பட்டு வரும் என்.டி.பி.சி மின்
உற்பத்தி நிலையங்களுக்கு ஸ்வர்ண சக்தி விருதுகளையும்,
திட்ட மேலாண்மை விருதுகளையும் வழங்கினார். ‘ஷ்ரம்
க�ௌசல்’ இணையதளத்தையும் த�ொடங்கி வைத்தார்.

ng£lÇ k‰W« Ãiya«


ஆந்திராவின் க�ோயில் நகரமான திருப்பதியை பூஜ்ஜிய
மாசு வெளியேற்ற மண்டலமாக மாற்றும் வகையில், ஆந்திரப்
பிரதேச புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்
கழகம் (NREDCAP) திருப்பதியில் மின்கலன் மாற்றும் மாற்றும்
(பேட்டரி ஸ்வாப்) நிலையத்தைத் திறந்துள்ளது. மேலும்,
அடுத்த சில மாதங்களில் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து
நிலையம், அலிபிரி உள்ளிட்ட 20 இடங்களில் பேட்டரி ஸ்வாப்
நிலையங்களை நிறுவ உள்ளது. இந்த நெட்வொர்க் பின்நாட்களில்
காளஹஸ்தி, காணிப்பாக்கம், விசாகப்பட்டினம், விஜயவாடா,
காக்கிநாடா, ராஜமகேந்திராவரம் உள்ளிட்ட இடங்களுக்கும்
படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு
உள்ளது. இதனால், மின்சார ஆட்டோ ஓட்டுனர்கள் தீர்ந்துப�ோன
பேட்டரியை க�ொடுத்து இரண்டே நிமிடங்களில் சார்ஜ்
செய்யப்பட்ட பேட்டரியை மாற்றிக்கொண்டு ஆன்லைனில்
பணம் செலுத்தலாம். அவர்களின் செயல்பாட்டு செலவு 30
சதவீதம் குறையும். வருவாயும் அதிகரிக்கும்.
âiu¥gl« jL¤J ÃW¤j«
பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்
குமார் நடித்து வெளிவந்துள்ள
‘சூரியவன்ஷி’ திரைப்படத்தை
பஞ்சாபில் திரையிடுவதை
பஞ்சாப் விவசாய சங்க ப�ோராட்டக்
குழுவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
É#aghuj« திரையரங்குகளுக்கு வெளியே
ஒட்டப்பட்ட திரைப்பட சுவர�ொட்டிகளை கிழித்தெறிந்தனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடத்தினர். ஹ�ோஷியார்பூர்,
பர்னாலா, ஜலாலாபாத், ம�ோகா, ஜிராக்பூர் உள்ளிட்ட இடங்களில்
படத்தின் திரையிடலை அவர்கள் அராஜகமாக நிறுத்தினர்.
விவசாய சங்கத் தலைவர் மன்பிரீத் சிங் சந்து, ‘விவசாயிகள்
ப�ோராட்டத்தில் அக்‌ஷய் குமார் கலந்து க�ொள்ளவில்லை.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை அவர் ஆதரித்து பேசினார்.
பிரதமர் ம�ோடியையும் அவர் புகழ்ந்து பேசினார். எனவே அக்‌ஷய்
குமார் படம் எதுவும் பஞ்சாபில் ஓட அனுமதிக்கப்படாது’ என
தெரிவித்தார்.

kjkh‰w ifJ
ப ா கி ஸ ்தா னின்
ஐ . எ ஸ் . ஐ
உ ள வு த் து றை யின்
நிதியுதவியுடன் பல
சர்வதேச பயங்கரவாத
அ மை ப் பு க ளின் É#aghuj«
த�ொட ர் பு களை
க�ொண்ட மிகப்பெரிய மதமாற்ற ம�ோசடி த�ொடர்பாக மதமாற்ற
சிண்டிகேட்டின் தலைவர் உமர் கெளதமின் மகன் அப்துல்லாவை
உத்தரப் பிரதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது
செய்துள்ளது. கடந்த ஜூன் 20ம் தேதி உமர் க�ௌதம் கைது
செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் இரு நாட்களுக்கு முன்
க�ௌதம் புத்தா நகரில் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் என
ஆயிரக்கணக்கான பேரை ஆசைகாட்டி ஏமாற்றி மதம்
மாற்றியுள்ளனர். விசாரணையில், தனது தந்தையைப் ப�ோலவே
அப்துல்லாவும் தனது வங்கிக் கணக்கில் ரூ. 75 லட்சம்
நிதியை முறைகேடாகப் பெற்றுள்ளார், அதில் ரூ.17 லட்சம்
வெளிநாடுகள் மூலம் பெறப்பட்டது.
அல் ஃபரூக்கி மதரஸா மற்றும் இஸ்லாமிய தாவா
மையம் ஆகியவை மூலமே பெரும்பாலான மதமாற்றங்கள்
செய்யப்பட்டன. அப்துல்லாவின் கூட்டாளிகளின் வங்கிக்
கணக்கில் ரூ. 57 க�ோடி மதிப்புள்ள வெளிநாட்டு நிதி
பெறப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள்
தெரியவந்துள்ளது.
fhzhkš nghd rnfhâÇfŸ

É#aghuj«

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை


சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள்கள் ஸ்ரேயா, ஸ்ரேஜா
ஆகிய 14 வயது இரட்டை சக�ோதரிகள் கடந்த நவம்பர் 3ம் தேதி
காணாமல் ப�ோயுள்ளனர். காவல்துறை விசாரணையில், அவர்கள்
இருவரும் அவர்களின் வகுப்பு த�ோழர்களான அர்ஷத் மற்றும்
அப்சல் ஆகிய�ோருடன் தமிழகத்திற்கு பேருந்து ஏறி சென்றனர்
என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிற்குத்
தெரியாமல் ரகசியமாக அலைபேசிகளை உபய�ோகித்துள்ளனர்
என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட்
30ல் அதே ஆலத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகள்
சூர்ய கிருஷ்ணா புத்தகம் வாங்க சென்றப�ோது மாயமானார்.
இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்த ஜஸ்னா மரியா
ஜேம்ஸ், பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருந்து காணாமல்
ப�ோனார். பிறகு ஜஸ்னா மங்களூருவில் நடந்த ஒரு முஸ்லீம்
கருத்தரங்கில் மதம் மாறியவராக கண்டறியப்பட்டார். முந்தைய
இச்சம்பவங்களை ப�ோலவே இந்த நிகழ்வும், ஏமாற்றி கட்டாய
மத மாற்றம் செய்தல் என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.

ÓdhÉ‹ bghŒ brŒâfŸ


சீன அரசின் ஊடகமான குள�ோபல் டெலிவிஷன்
நெட்வொர்க், சமீபத்திய கல்வான் பள்ளத்தாக்கு ம�ோதலுக்குப்
பிறகு, பாரத ராணுவ வீரர்கள் பிடிபட்டதாகக் கூறி
புகைப்படங்களை வெளியிட்டது. ஆனால் பிடிக்கப்பட்டதாகக்
கூறப்படும் புகைப்படங்களில் உள்ளவர்களின் சீருடை, காலணி,
த�ொப்பி உள்ளிட்ட எவையும் நம் ராணுவத்தினர் பயன்படுத்தும்
வழக்கமான உடுப்புகளுடன் ப�ொருந்தவில்லை. நம் வீரர்கள்
பயன்படுத்தும் இன்சாஸ் வகை துப்பாக்கிகளும் அதில் இல்லை.
அதில் ஒரு சிலர் செருப்பு, சாதாரண ஸ்வெட்டர்கள், பைஜாமா
குர்தா ப�ோன்றவற்றை அணிந்துள்ளனர். நீண்ட தலைமுடியுடன்
சிலர் உள்ளனர். குளிர் மிகுந்த கல்வான் பள்ளத்தாக்குப்
பகுதியில் இந்த உடைகளுடன் யாரும் உயிர்வாழ முடியாது.
எனவே, கல்வான் பள்ளத்தாக்கில் இழந்த தனது மானத்தை
மீட்கவும் தனது தரப்பில் உயிரிழந்த 111 வீரர்கள் குறித்த
செய்திகளை திசை திருப்பவுமே சீனா இப்படி நாடகமாடுவதாகக்
கூறப்படுகிறது.
gh»°jhÅš ÔghtË
பாகிஸ்தானில் கைபர்
பக்துன்க்வா பகுதியில் உள்ள தேரி
க�ோயிலில் தீபாவளியை க�ொண்டாட
பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில் (PHC) É#aghuj«
ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்தது. இதற்கு சிந்து,
பலுசிஸ்தான் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமான
யாத்ரிகர்கள் வந்தனர். இதனைய�ொட்டி வருடாந்திர
கண்காட்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான்
தலைமை நீதிபதி குல்சார் அகமது மற்றும் பல உயரதிகாரிகள்
கலந்து க�ொண்டனர் என்று ‘டான்’ செய்தி நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.

lh¡áfS¡F jÈgh‹fŸ v¢rÇ¡if


ஆப்கானிஸ்தானின் கிழக்கு
நங்கர்ஹார் மாகாணத்தின் வாடகை
டாக்சி ஓட்டுநர்களுக்கு தலிபான்
அமைப்பு ஒரு எச்சரிக்கை உத்தரவை
பிறப்பித்துள்ளது. அதன்படி, தலிபான் É#aghuj«
மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தவிர வேறு எந்த துப்பாக்கி
ஏந்திய நபர்களையும் டாக்சிகளில் ஏற்றிச் செல்லக்கூடாது
என கூறப்பட்டு உள்ளது. மேலும், வாடகை வண்டிகளில்
சந்தேகத்திற்கிடமான ஆயுதமேந்தியவர்கள் பயணித்தால்
அது குறித்து தலிபான் அமைப்பினரிடம் தெரிவிக்குமாறும்
கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில்
தீவிரமாக செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை
இலக்காகக் க�ொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், தலிபான்கள் அதுகுறித்து
வெளிப்படையாக ஏதும் தெரிவிக்கவில்லை.

K¡»a¤Jt« bgW« ijth‹


ஆக்கிரமிப்பு மனப்பான்மை க�ொண்ட சர்வாதிகார கம்யூனிச
நாடான சீனா, தைவானை ச�ொந்தம் க�ொண்டாடிவருகிறது.
அடிக்கடி தனது ப�ோர் விமானங்களை அனுப்பி தைவான்
வான்வெளியில் அத்துமீறியும் வருகிறது. வரும் 2025க்குள்
தைவான் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்பை நடத்தி அதனை
தனது கட்டுப்பாட்டிற்குள் க�ொண்டுவரவும் முடிவெடுத்து
உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, பாரதம், உள்ளிட்ட
பல நாடுகள் தைவானுடன் நட்பு பாராட்டி வருகின்றன.
தற்போது ஐர�ோப்பாவும் தைவானுடன் நெருக்கம் காட்டி
வருகிறது. இங்கிலாந்தின் நாடாளுமன்ற அரசியல் குழுக்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பேர் க�ொண்ட தூதுக்குழு
ரஃபேல் க்ளக்ஸ்மேன் தலைமையில், தைவான் அதிபர் சாய் இங்
வென், பிரதமர், உள்ளிட்டோரை சந்தித்து பேசினர். ஐர�ோப்பிய
யூனியனின் இந்த நடவடிக்கைகளை சீனா வழக்கம்போல
கண்டித்துள்ளது.
tiyÆš á¡»a Û«fŸ
fªj rZo Éuj«:
சூரன், சிங்கன்,
தாரகன் முதலிய அசுரர்கள்
நெடுங்காலமாக தேவர்,
மனிதர்களை துன்புறுத்தி
வந்தனர். பரமசிவன்
இதற்கொரு முடிவு காணும்
ந�ோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப்
பிறப்பித்தார். முருகப் பெருமான் அசுரர்களுடன் ஆறு
நாட்கள் ப�ோரிட்டு வென்றார். மனிதர்களின் உட்பகையான
காமம், வெகுளி, உல�ோபம், மயக்கம், செருக்கு, ப�ொறாமை
ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக
நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவனின்
பெருமையே கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள்.
சூர சம்ஹார முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை
வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம், சேவலும்
மயிலுமாக மாறியது. சேவலை க�ொடியாகவும் மயிலை
வாகனமாகவும் ஏற்றார். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன்,
சிங்கமுகன், தாரகாசுரன், முறையே சைவ சித்தாந்தத்தில்
பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும்
மும்மலங்களைக் குறிக்கிறது.
தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு
நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. மாணவர்கள்
படிப்பிற்கும், குடும்ப நன்மைக்கும், பெண்கள் நல்ல
கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும்
இவ்விரதத்தை முருகனை குலதெய்வமாகவ�ோ, இஷ்ட
தெய்வமாகவ�ோ வழிபடும் ஆண்களும், பெண்களும்,
பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். 'சட்டியில்
இருந்தால் அகப்பையில் வரும்' என்பதன் உண்மையான
ப�ொருள், 'சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை
உண்டாகும்' என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும்
பெண்களுக்கு இது உகந்தது.
ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,
பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை
உட்பட, தென்காசி, ஆயக்குடி உள்ளிட்ட அனைத்து முருகன்
க�ோயில்களிலும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும்
சிறப்பாக இவ்விழா நடைபெறும். விழாவின் ஆறாம் நாள்
‘சூரன் ப�ோர்’ என்னும் நிகழ்வு நாடக பாணியில் நடைபெறும்.
விரத முறையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள்
ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள்
உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள்
முருகன் தெய்வானை திருக் கல்யாணத்தன்று பாரணை
அருந்தி விரதத்தை முடித்துக்கொள்வர்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி

You might also like