You are on page 1of 17

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


nrhg»UJ, I¥gá - 22 òj‹ 8.11.2023 ky® - 4, ïjœ - 204

இஸ்ரேல் ப�ோருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தனது


அனைத்து திறன்களையும் பயன்படுத்த வேண்டும்; - ஈரான் அதிபர்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேலின்


நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தனது
'அனைத்து திறன்களையும்' பயன்படுத்த வேண்டும் என்று
பிரதமர் ம�ோடியை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் ப�ோர் இன்னும் நீடித்து வரும்நிலையில்,
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியை பிரதமர் ம�ோடி நேற்று
த�ொலைபேசி வாயிலாக த�ொடர்பு க�ொண்டு பேசினார். இந்த
உரையாடலின்போது இஸ்ரேல்-ஹமாஸ் ப�ோர் குறித்தும், இந்திய
- ஈரான் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும்
இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர் எனக் கூறப்படுகிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேலின்
நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தனது
'அனைத்து திறன்களையும்' பயன்படுத்த வேண்டும் என்று
பிரதமர் ம�ோடியை வலியுறுத்தியுள்ளார். மேலும்,"உடனடி ப�ோர்
நிறுத்தம், தடையை நீக்குதல் மற்றும் காசாவின் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு உதவி வழங்குதல் ப�ோன்ற உலகளாவிய கூட்டு
முயற்சிகளை தெஹ்ரான் ஆதரிக்கிறது. பாலஸ்தீன மக்களைக்
க�ொலை செய்வது த�ொடர்வது உலகின் அனைத்து சுதந்திர
நாடுகளையும் க�ோபத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் இந்தப் ப�ோர்
பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒடுக்கப்பட்ட மற்றும் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள்
க�ொல்லப்படுவது, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள்
மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் எந்தவ�ொரு
மனிதனின் பார்வையில் இருந்தும் கண்டனத்துக்குரியது. மேலும்
அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் ம�ோடி இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில்
இந்தியாவின் நீண்டகால நிலையான நிலைப்பாட்டை
1
மீண்டும் வலியுறுத்தினார். மேலும் ப�ோர் தீவிரமடைவதை
தடுப்பது, த�ொடர்ந்து மனிதாபிமான உதவிகளை உறுதி
செய்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட காசாவில் அமைதி மற்றும்
ஸ்திரத்தன்மையை சீக்கிரமாக மீட்டெடுப்பதன் அவசியத்தையும்
அவர் வலியுறுத்தினார்.

ப�ொன்முடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதிபதி ஆனந்த்


வெங்கடேஷ்க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு
தமிழக உயர்கல்வித் துறை
அமைச்சராக உள்ள ப�ொன்முடி,
கடந்த 1996–--2001 திமுக ஆட்சியில்
ப�ோக்குவரத்து துறை அமைச்சராக
பதவி வகித்தார். அப்போது,
வருமானத்துக்கு அதிகமாக
ரூ.1.36 க�ோடி ச�ொத்து சேர்த்ததாக
அவர் மீதும், அவரது மனைவி vijayabharatham.org
விசாலாட்சி உள்ளிட்ட 5 பேர் மீதும் கடந்த 2002-ம் ஆண்டு
அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு ப�ோலீஸார் வழக்கு
த�ொடர்ந்தனர்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு,
பின்னர் வேலூர் முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது. சுமார்
20 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ப�ோதிய
ஆதாரங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கில் இருந்து
ப�ொன்முடி உள்ளிட்ட அனைவரும் கடந்த ஜூன் 28-ம் தேதி
விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு
செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.
ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆக.10-ம் தேதி தானாக முன்வந்து
வழக்காக (‘சூம�ோட்டோ’) எடுத்து விசாரித்தார்.
அப்போது, ‘‘இந்த வழக்கு மிக ம�ோசமாக
கையாளப்பட்டுள்ளது. ஒரு நீதிமன்றத்தில் இருந்து
இன்னொரு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியப�ோது, உரிய
விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை’’ என்று அவர்
கருத்து தெரிவித்தார். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு
துறை, அமைச்சர் ப�ொன்முடி தரப்பில் பதில் அளிக்கவும்
உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை
கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கை நீதிபதி என்.
ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த
வழக்கு விசாரணைக்கு எதிராக அமைச்சர் ப�ொன்முடி சார்பில்
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில்
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
ப�ொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து
தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தாமாக இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது சரிதான். அவரைப்
போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு

2
நன்றி கூற வேண்டும். ப�ொன்முடிக்கு எதிரான ச�ொத்துக்
குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க
தடை இல்லை. அதற்கு தடை க�ோரிய மனுவை ஏற்க முடியாது.
அதை தள்ளுபடி செய்கிறோம். இதில் மனுதாரருக்கு ஏதேனும்
குறை இருந்தால், தனி நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு
வரும்போது முறையிடலாம்.

விமானத்தில் மறைத்து வைத்திருந்த


ரூ.1 க�ோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
வங்கதேச தலைநகர் டாக்காவில்
இருந்து இண்டிக�ோ ஏர்லைன்ஸ்
பயணிகள் விமானம், சென்னை
சர்வதேச விமான நிலையத்துக்கு
நேற்று முன்தினம் இரவு வந்தது.
பயணிகள் அனைவரும் கீழே
இறங்கி சென்ற பிறகு, அந்த
vijayabharatham.org விமானம் உள்நாட்டு விமானமாக
கேரள மாநிலம் க�ொச்சி செல்ல இருந்தது, அதனால், விமானத்தை
சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் த�ொட்டிக்குள்
ஒரு பார்சல் இருந்ததை பார்த்த ஊழியர்கள், உடனடியாக
அதிகாரிகளுக்கு தகவல் க�ொடுத்தனர். விமான நிலைய
பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மூலம், வெடிகுண்டு
ஏதாவது இருக்கிறதா என்று ச�ோதனை செய்தனர். வெடிகுண்டு
எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகு பார்சலை
பிரித்துப் பார்த்தனர். அதில், ரூ.1 க�ோடி மதிப்புள்ள 1.6 கில�ோ
தங்கக் கட்டிகள் இருந்தன. இதையடுத்து, தங்கக் கட்டிகளை
சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்கத்தை
கடத்தி வந்தது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் எ.வ.வேலு த�ொடர்புடைய இடங்களில்


4-வது நாளாக வருமானவரித் துறை ச�ோதனை
அமைச்சர் எ.வ.வேலு
த�ொடர்புடைய இடங்களில் 4-வது
நாளாக வருமானவரித் துறை
ச�ோதனை நடைபெற்று வருகிறது.
அப்போது, வங்கி லாக்கரில் த�ொழில்
முதலீடு ஆவணங்கள் கிடைத்ததாக
தகவல் வெளியாகி உள்ளது. வரி
ஏய்ப்பு புகார் த�ொடர்பாக தமிழக vijayabharatham.org
ப�ொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை
அமைச்சர் எ.வ.வேலு த�ொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம்
தேதி முதல் ச�ோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி,
சென்னை ஆழ்வார்ப்பேட்டை, க�ோட்டூர்புரம், தி.நகர்,
அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு வீடு, அவரது
மகன் கம்பன், உறவினர்களுக்கு ச�ொந்தமான இடங்களில்
வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 4-வது நாளாக ச�ோதனை
நடத்தினர். இதேப�ோல் செனாய்நகர், வேப்பேரி, அண்ணாநகர்
மேற்கு, புரசைவாக்கத்தில் உள்ள ப�ொதுப்பணிகள் துறை
3
ஒப்பந்ததாரர்கள், பைனான்சியர்கள் வீடுகளிலும் 4-வது நாளாக
நேற்று ச�ோதனை நடைபெற்றது. மேலும், திருவான்மியூரில்
உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகம், அந்நிறுவனத்தின்
ஊழியர்கள் வீடுகளிலும், தி.நகரில் உள்ள அப்பாசாமி
ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகம், நிறுவனத்தின்
உரிமையாளர் வீடு, அந்நிறுவனத்துக்கு ச�ொந்தமான ஓட்டல்கள்,
ஊழியர்கள் வீடுகள் என சென்னையில் 15-க்கும் மேற்பட்ட
இடங்களில் ச�ோதனை நடந்தது. திருவண்ணாமலையில்
எ.வ.வேலு வீடு, அவரது மகன் கம்பன் வீடு, கல்வி
நிறுவனங்கள், த�ொழில் நிறுவனங்கள், நெடுஞ்சாலைத் துறை
ஒப்பந்ததாரர் அருணை வெங்கட் வீடு மற்றும் அலுவலகம்
உட்பட 20 இடங்களில் நடைபெற்று வரும் ச�ோதனை 4-வது
நாளாக நேற்றும் த�ொடர்ந்தது. இந்நிலையில், தண்டராம்பட்டு
அடுத்த தானிப்பாடியில் வசிக்கும் கம்பி வியாபாரி ஜமால், நெல்
- அரிசி வியாபாரி முருகேசன் ஆகிய�ோரது வீடு, அலுவலகம்
மற்றும் கிடங்குகளில் நடைபெற்ற வந்த ச�ோதனை நிறைவு
பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அமைச்சர்
எ.வ.வேலுவின் மகன்கள் கம்பன், குமரன் மற்றும் அவருக்கு
நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களையும் வருமானவரித்
துறையினர் ச�ோதனையிட்டுள்ளனர். இதில், த�ொழில் முதலீடு
சார்ந்த ஆவணங்கள் மற்றும் தரவுகள் கிடைத்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளன.
இதேப�ோல், க�ோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன்
குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்
ஜெயக்குமாரின் இல்லம், இவரது மகன் ராமுக்கு ச�ொந்தமாக
பீளமேட்டில் உள்ள உணவு மற்றும் கட்டுமானம் சார்ந்த
நிறுவனம், சவுரிபாளையத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தின்
அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று 4-வது நாளாக ச�ோதனை
நடக்கிறது. கட்டுமான நிறுவனத்தில் இயக்குநராக முன்பு
பணியாற்றிய ஒருவரின் வீடு சிங்காநல்லூரில் உள்ளது. இங்கும்
வருமானவரித் துறையினர் நேற்று ச�ோதனை நடத்தினர்.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு வீடு, த�ொடர்புடைய
இடங்கள், காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட்
நிறுவனங்களில் 4-வது நாளாக நடத்தப்பட்ட ச�ோதனையில்,
பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத பல க�ோடி
மதிப்பிலான கட்டண ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு
அதிகாரப்பூர்வ தகவலையும் வருமானவரித் துறை சார்பில்
தெரிவிக்கப்படவில்லை. வருமான வரி ச�ோதனை த�ொடர்ந்து
நடைபெற்று வருவதால், ச�ோதனை முழுமையாக முடிவடைந்த
பின்னரே முழு விவரங்களையும் வெளியிடுவார்கள் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பி.ஏ.,க்கள் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்


பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த
பா.ஜ., ஊராட்சி மன்றத்தலைவர்
மற்றும் நிர்வாகியை தாக்கிய
தி.மு.க.,வினர் மீது, பெரம்பலுார்
ப�ோலீசார் வன்கொடுமை தடுப்பு
சட்டம் உட்பட எட்டு பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்துள்ளனர்.
vijayabharatham.org பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த
4
பா.ஜ., கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன்,
அவரது தம்பி முருகேசன், பா.ஜ., நிர்வாகி முருகேசன்
ஆகிய மூவரும், கடந்த 30ம் தேதி, பெரம்பலுார் கலெக்டர்
அலுவலகத்தில், கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிக்க
சென்றனர். அப்போது, அமைச்சர் சிவசங்கர் பி.ஏ., மகேந்திரன்,
பெரம்பலுார் எம்.எல்.ஏ., பிரபாகரன் பி.ஏ., சிவசங்கர், தி.மு.க.,
மாவட்ட செயலர் ராஜேந்திரன் மகன் ரமேஷ், தி.மு.க., நிர்வாகி
க�ோபி உள்ளிட்ட தி.மு.க.,வினர், ஜாதி பெயரை ச�ொல்லி
திட்டி, சரமாரியாக அடித்து உதைத்தனர். கனிமவள துறை
அலுவலர்கள், ப�ோலீசாரும் தாக்குதலுக்குள்ளாகினர்.
இதுகுறித்து, 13 பேரை ப�ோலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தங்களை தாக்கிய தி.மு.க.,வினர் மீது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு,
பெரம்பலுார் ப�ோலீசில், 2ம் தேதி கலைச்செல்வன் புகார்
க�ொடுத்தார். ஆனாலும் தி.மு.க.,வினர் மீது வழக்கு பதியாமல்,
ப�ோலீசார் தயக்கம் காட்டினர். இது குறித்து, நமது நாளிதழில்
செய்தி வெளியானது. அதையடுத்து, கலைச்செல்வன் உட்பட
பாதிக்கப்பட்ட மூவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்,
தலைமறைவாக உள்ள ஆறு பேர் உள்ளிட்ட 19 பேர் மற்றும்
பலர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பிற பிரிவுகளில்,
நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

ஆர்.எஸ்.பாரதியை நாகாலாந்து ப�ோலீஸ் கைது செய்யும்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் க�ோவிலில்
நேற்று சாமி தரிசனம் செய்த பின்,்
அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழக ப�ோலீஸ் துறையின் கவனம்
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில்
இல்லை; சிதறிப் ப�ோய் விட்டது.
கவர்னர் மாளிகை முன்பாகவே
பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தும் vijayabharatham.org
அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப் ப�ோய் இருக்கிறது.
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகிய�ோர் மீது தமிழக
ப�ோலீஸ் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம்
சுட்டிக்காட்டி உள்ளது. இதன் பின்பாவது, அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்
குடிமகனாக இருக்கும் கவர்னரை, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.
பாரதிமிகக் கடுமையான வார்த்தைகளைக் க�ொண்டு பேசுகிறார்.
அது த�ொடர்பான விமர்சனம் எழும்பியதும், தி.மு.க., அதை
மாற்ற முயற்சிக்கிறது. பாரதி பேசியதை விட, ஒரு சமுதாயத்தை
கேவலமாக, ம�ோசமாக வேறு யாரும் பேசமுடியாது. கடந்த
30 மாதங்களாக அவர் த�ொடர்ந்து அப்படித்தான் பேசுகிறார்.
ர�ோட்டில் செல்லும் ப�ொறுக்கி கூட, அந்த மாதிரி பேச மாட்டான்.
தி.மு.க.,வின் ச�ொத்தே ஆபாசமாக பேசுவது தான். அதனால்,
அவரது பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டாமல், உடனடியாக
ப�ோலீசார் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகலாந்து மக்கள் புகார் க�ொடுத்து, அங்குள்ள ப�ோலீசார்
வழக்கு பதிந்து, அவரை கைது செய்வதற்கு முன், தமிழக ப�ோலீஸ்
கைது நடவடிக்கை எடுத்தால் நல்லது. இல்லையென்றால்,
நாகாலாந்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு,
அவர் தெரிவித்தார்.
5
மானிய விலையில் பாரத் ஆட்டா அறிமுகம்:
கில�ோ ரூ.27.50க்கு மத்திய அரசு விற்பனை
விலையேற்றத்தில் இருந்து
மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்
வகையில், மானிய விலையில் 'பாரத்
ஆட்டா' என்ற பெயரில், க�ோதுமை
மாவு விற்பனையை, மத்திய
அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுடில்லியில், இதன் விற்பனை
vijayabharatham.org வாகனங்களை க�ொடியசைத்து
துவக்கி வைத்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர்
விவகாரத்துறை அமைச்சர் பியுஷ் க�ோயல் கூறியதாவது:
பண்டிகை காலங்களை முன்னிட்டு, நுகர்வோருக்கு அதிக
விலையில் இருந்து ஆறுதல் அளிக்கும் வகையில் பாரத் ஆட்டா
என்ற பெயரில், மத்திய அரசு, மானிய விலையில் க�ோதுமை
மாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மாவு கில�ோ 27.50
ரூபாய்க்கு விற்கப்படும். பாரத் ஆட்டா, என்.ஏ.எப்.இ.டி., என்.சி.சி.
எப்., மற்றும் கேந்திரிய பந்தர் ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள்
வாயிலாக, நாடு முழுதும் 800 நடமாடும் வேன்கள் மற்றும்
2,000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களின் வாயிலாக
விற்பனை செய்யப்படும். தரம் மற்றும் இடத்தைப் ப�ொறுத்து,
வெளிசந்தையில் 1 கில�ோ ஆட்டா, 36 ரூபாய் முதல் 70 ரூபாய்
வரை விற்கப்படுகிறது. அந்த விலையைக் காட்டிலும் பாரத்
ஆட்டா விலை குறைவானதாகும்.
கடந்த பிப்ரவரியில் பாரத் ஆட்டா விற்பனையை, ச�ோதனை
முயற்சியாக துவக்கி, கில�ோ 29.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த முயற்சி வெற்றியடைந்ததையடுத்து, நாடு முழுதும் இதை
செயல்படுத்தும் விதமாக 27.50 ரூபாய்க்கு நாடு முழுதும் உள்ள
நுகர்வோர்களுக்கு வழங்க முடிவு செய்து, அதன் விற்பனை
தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய
உணவுக் கழகத்திடம் இருந்து, கிட்டத்தட்ட 2.50 லட்சம் டன்
க�ோதுமையை, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக க�ொள்முதல்
செய்து, அதை மாவாக மாற்றி, மானிய விலையில் நுகர்வோருக்கு
வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளிப் பண்டிகை: பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க


19 அறிவுரைகளை வெளியிட்டது தமிழக காவல்துறை
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ப�ொதுமக்கள் பாதுகாப்பான
முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள்,
கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை
காவல்துறை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை
ஒட்டி கனம் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக
அரசின் வழிகாட்டுதல் படியும் ப�ொதுமக்கள் பாதுகாப்பான
முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள்,
விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. அதன்பேரில்,
வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய்
ரத்தோர், ப�ொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள்
6
வெடிப்பதற்கான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் மற்றும்
பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
1. கனம் உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட
சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் ப�ொருட்களால்
தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும்,
வெடிக்கப்படவும் வேண்டும்.
2. கணம் உச்ச நீதிமன்ற உத்திரவிற்கிணங்க பட்டாசுகள்
வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00
மணி வரையிலும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி
வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால்,
இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்படுகின்றனர்.
3. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு
வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125
டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை
தயாரிக்கவ�ோ, பயன்படுத்தவ�ோ, விற்கவ�ோ கூடாது என
தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு
வெடிகளை விற்பத�ோ, பயன்படுத்துவத�ோ (வெடிப்பத�ோ)
கூடாது.

4. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் ப�ொருட்கள் உள்ள


இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர
ம�ோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின்
அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல்
நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
5. பட்டாசுகளை க�ொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு,
வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு
அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை
விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை க�ொளுத்தி தூக்கி எறிந்து
விளையாடக்கூடாது.
6. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக
பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
7. பட்டாசுகளை வெடிக்கும் ப�ொழுது தகர டப்பாக்களை
ப�ோட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா
7
தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும்.
ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது.
8. குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும்
ராக்கெட் ப�ோன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.
9. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.
10. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து
உலர்த்தக்கூடாது.
11. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக
பட்டாசு வெடிகளை க�ொளுத்த அனுமதிக்காதீர்கள்.
12. எக்காரணத்தைக் க�ொண்டும் குடிசைகளின்
பக்கத்தில�ோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகில�ோ
வானவெடிகளைய�ோ அல்லது பட்டாசு வகைகளைய�ோ
க�ொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.
13. பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று
புகைபிடிப்பத�ோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை
அஜாக்கிரதையாக வீசி எறிவத�ோ கூடாது.
14. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று
விளம்பரத்துக்காகவ�ோ, ப�ோட்டிக்காகவ�ோ கூட பட்டாசுகளை
வெடிக்கக்கூடாது.
15. பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை
முன்னிட்டும் மெழுகுவர்த்தியைய�ோ பெட்ரோமாக்ஸ் அல்லது
சிம்னி விளக்கைய�ோ கடை அருகில�ோ அல்லது கடையில�ோ
உபய�ோகிக்கக் கூடாது.
16. பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டில�ோ
அல்லது கடைகளில�ோ ஊதுவத்தி க�ொளுத்தி வைக்கக்கூடாது.
17. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளைய�ோ அல்லது
நெருப்பைய�ோ உபய�ோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி
உபய�ோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.
18. கால் நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள்
மிரண்டு ஓடும்பொழுது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள்
மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம், அதை
தவிர்க்க வேண்டும்.
19. தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள்
வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள்
மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை
பெருநகர காவல்துறை அறிவித்துள்ள மேற்கூறிய பாதுகாப்பு
விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.
மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும்
விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100,
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101,
அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய
உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக த�ொடர்பு க�ொண்டு
மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை
தவிர்க்கும்படி ப�ொதுமக்களை சென்னை பெருநகர காவல்துறை
கேட்டுக் க�ொள்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளை
மீறி பட்டாசு கடை நடத்தியது த�ொடர்பாக 14 வழக்குகளும்,
கனம் நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு
பட்டாசு வெடித்ததற்காகவும் அனுமதிக்கப்பட்ட ஒலி
அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 271 வழக்குகளும்
பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள்
8
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ப�ொதுமக்கள் அனைவரும்
மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும்
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும்,
காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சுற்றுச்சூழலுக்கு
உகந்த வகையில், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும்
தீபாவளியை க�ொண்டாடும்படி சென்னை பெருநகர
காவல்துறை சார்பில் கேட்டுக் க�ொள்ளப்படுகிறது. இவ்வாறு
அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில்


வெளியிடப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
"குரூப்-2 முதன்மைத் தேர்வு
மதிப்பீட்டு பணிகள், 80
விழுக்காட்டுக்கும் மேல் நிறைவு
பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள்
வரும் டிசம்பர் முதல் வாரத்தில்
முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு
அரசுப் பணி நியமன ஆணைகள்
வழங்கப்படும்" என்று தமிழக vijayabharatham.org
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுத�ொடர்பாக அவர்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 மற்றும் 2அ
பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத்
தமிழ் ம�ொழி தகுதித்தாள் மற்றும் ப�ொது அறிவு ஆகிய இரு
தாள்களுக்கும் 25.2.2023 அன்று தேர்வு நடைபெற்றது. கட்டாயத்
தமிழ் ம�ொழி தகுதித் தேர்வு மற்றும் ப�ொது அறிவுத் தேர்வினை
51,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதியுள்ளனர்.
இது மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்தும்
முதன்மை எழுத்து தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையைக்
காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும். இத்தேர்வு முடிவுகளை
வெளியிட மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வாணையம்
எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் ஐந்து மாதங்களாகும்.
எனவே மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு
நமது மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன் எந்த
வகையிலும் குறைவானது இல்லை என்பதைத் தெரிவித்துக்
க�ொள்கின்றேன். மேலும், இப்பணி துவக்கப்பட்ட மார்ச்
மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம்
மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு
விடைத்தாட்களும் திருத்த வேண்டிய நிலையில் இருந்ததால்
இப்பணிகள் ஆரம்பிக்க சற்றே தாமதமானது.
இதுப�ோன்ற தாமதம் தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும்
வரக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் சுமார் ஒரு க�ோடி
ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கணிப்பொறி மதிப்பீட்டு
ஆய்வகம் அமைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில்,
ப�ோர்க்கால அடிப்படையில் இரண்டாவது கணிப்பொறி
ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது மதிப்பீட்டுப்
பணிகள் மிக விரைவாக செவ்வனே நடைபெற்று வருகின்றன.
80 விழுக்காட்டுக்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில்
முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன
9
ஆணைகள் முதல்வரால் வழங்கப்படும். இந்த ஆண்டில்
மட்டும் இதுவரை சுமார் 13,000 பேருக்கு பணி நியமன
ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முதல்வரால்
குரூப் 4 பணியில் தேர்வு பெற்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-
24ஆம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 நபர்களுக்கு பணி
நியமன ஆணைகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் க�ொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா பதவியேற்பு


நாட்டின் தலைமை தகவல்
ஆணையராக பதவி வகித்த
யஷ்வர்தன் குமார் சின்ஹா, கடந்த
அக்டோபர் மாதம் ஓய்வுபெற்றார்.
இதையடுத்து தகவல் ஆணையராக
பணியாற்றி வந்த ஹீராலால்
சமாரியா, புதிய தலைமை தகவல்
vijayabharatham.org ஆணையராக நேற்று பதவியேற்றுக்
க�ொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்கும் நாளில்
இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை தலைமை
தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பதவி
வகிப்பார்கள். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும்
பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் உள்ளிட்டோரின்
பரிந்துரையின் அடிப்படையில் மத்திய தகவல் ஆணையரை
குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

குழந்தைகளின் மயானமாகிறது காசா; ப�ோரை நிறுத்துங்கள் -


ஐ.நா. ப�ொதுச் செயலாளர் உருக்கமான வேண்டுக�ோள்
"காசா குழந்தைகளின்
மயானமாகிறது. உடனடியாகப்
ப�ோரை நிறுத்துங்கள்" என்று ஐ.நா.
ப�ொதுச் செயலாளர் அண்டோனிய�ோ
குத்ரேஸ் உருக்கமாக வேண்டுக�ோள்
விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் ப�ோர் ஒரு
மாதத்தைக் கடந்துவிட்டது. 4100 vijayabharatham.org
குழந்தைகள், 2640 பெண்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் காசாவில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்
அந்தப் பிராந்தியமே குழந்தைகளின் மயானமாகிறது.
உடனடியாகப் ப�ோரை நிறுத்துங்கள் என்று ஐ.நா. ப�ொதுச்
செயலாளர் அண்டோனிய�ோ குத்ரேஸ் உருக்கமாக
வேண்டுக�ோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் தரைவழித்
தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒட்டும�ொத்த காசாவையும்
சுற்றிவளைத்து விட்டதாகவும் வடக்கு, தெற்கென்றில்லாமல்
காசாவை இரண்டாகப் பிரித்து தாக்குதலைத்
தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பில்
இதுவரை 1400 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர்
பிணைக் கைதிகளாக ஹமாஸ்வசம் உள்ளனர்.
10
அதை க�ொஞ்சம் லாவகமாகச் செய்ய வேண்டும்:
மனிதாபிமான அடிப்படையில் ப�ோர் நிறுத்தம் செய்ய சர்வதேச
அமைப்புகள், உலக நாடுகள் பலவும் த�ொடர்ந்து அழுத்தம்
க�ொடுத்து வரும் சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு ப�ோர் நிறுத்தம் த�ொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் சென்று
சேர்வதை உறுதி செய்யவும், பிணைக் கைதிகள் பத்திரமாக
வெளியேற வழிவகுக்கவும் காசாவில் அவ்வப்போது சரியாக
திட்டமிட்டு சற்றே லாவகமாக தாக்குதலை நிறுத்துவது பற்றி
பரிசீலிப்போம். ஆனால் ஏற்கெனவே கூறியபடி ப�ோர் நிறுத்தம்
என்பதற்கு வாய்ப்பில்லை. ப�ோர் முடிந்த பின்னர் காசாவை
முழுக் கட்டுப்பாட்டுக்குள் சில காலம் எடுத்து பாதுகாப்பினை
உறுதி செய்யும் ப�ொறுப்பு இருக்கிறது" என்றார்.

நாய்க்கறி விவகாரம்: ஆர்.எஸ்.பாரதிக்கு


நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கண்டனம்
சென்னையில், சமீபத்தில்
நடந்த நிகழ்ச்சி ஒன்றில்,
தி.மு.க., அமைப்புச்செயலர்
ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
நாகாலாந்துகாரன் நாய்க்கறி
சாப்பிடுவான்; நாய்க்கறி
தின்கிறவனுக்கே, இவ்வளவு
ச�ொரணை வந்து, கவர்னர்
ரவியை ஓட ஓட விரட்டினான்
என்றால், உப்பு ப�ோட்டு
vijayabharatham.org ச�ோறு சாப்பிடும் தமிழனுக்கு,
எந்தளவுக்கு ச�ொரணை இருக்கும் என்பதை அவர் மறந்து விடக்
கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
நாகா இன மக்களை அவதுாறாக பேசிய ஆர்.எஸ்.பாரதிக்கு,
கவர்னர் ரவி, நாகாலாந்தின் சுற்றுலாத் துறை அமைச்சரும்,
பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான டெம்ஜென் இம்னா அல�ோங்
கண்டனம் தெரிவித்து இருந்தனர்
இந்நிலையில், நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன்
கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளதாவது: தமிழகம் - நாகா மக்களுக்கு இடையிலான
இணக்கத்தை கெடுத்து விட கூடாது. நாகாக்கள் அனைவரும்
நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என ஆர்எஸ் பாரதி கூறியது
ஏற்புடையது அல்ல.
உணவு பழக்கத்தை வைத்து நாகா மக்களை அவமரியாதை
செய்யக்கூடாது. தமிழர்கள் ஏராளமான�ோர் நாகாலாந்தில்
இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். நாகா மக்களும் தமிழகத்தில்
இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி நாகாலாந்தில் இருந்து
துரத்தியடிக்கப்பட்டார் என்பது உண்மைக்கு புறம்பானது.
அவர் மீது நாகா மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை புறக்கணிக்க வேண்டும். அவரது
செயல் தமிழக மக்களின் உண்மையான குரலை
பிரதிபலிக்கவில்லை . ஆர்எஸ் பாரதி பேச்சை நாகா மக்கள்
கண்டு க�ொள்ள வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில்
இல.கணேசன் கூறியுள்ளார்.
11
சாதிய வன்முறைகளுக்கு எதிராக நெல்லையில்
நவ.18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி தகவல்
“ தென்மா வ ட்டங்க ளி ல்
மீண்டும் தலைதூக்கும் சாதிய
வன்முறைகளை தடுக்க
வலியுறுத்தி நெல்லையில்
இம்மாதம் 18-ம் தேதி பேரணி,
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும்” என்று புதிய
தமிழகம் கட்சித் தலைவர்
டாக்டர் கிருஷ்ணசாமி vijayabharatham.org
தெரிவித்தார். இது த�ொடர்பாக மதுரையில் அவர் இன்று
செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மாவட்டத்தில் 1990
முதல் 2010 வரையிலான காலத்தில் இருந்த சாதிய வன்முறை,
மத நல்லிணக்கம் முயற்சியால் அமைதி ஏற்பட்டது. ஆனால்,
சில மாதமாக வன்முறை சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது. 3
மாதத்தில் மட்டும் தூத்துக்குடி, நெல்லை ப�ோன்ற இடங்களில்
30-க்கும் மேற்பட்ட க�ொலைகள் நடந்துள்ளன. இதற்கு அரசு
முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தென்மாவட்டங்களில்
நடக்கும் வன்முறையை தடுக்க நவம்பர் 18-ல் நெல்லையில்
மனித உரிமை மீட்பு, வன்கொடுமை தடுப்பு பேரணி, கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அரசியல் கட்சிகள் உட்பட
யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதற்கு அழைப்பு
விடுக்கப்படும்.
தமிழகத்தில் 2006 முதல் கனிமவளம் த�ொடர்ந்து க�ொள்ளை
ப�ோகிறது. குறிப்பாக மதுரை, திருப்புத்தூர், சேலம் ப�ோன்ற
பகுதியில் கிரானைட் க�ொள்ளை நடக்கிறது. ஏற்கெனவே,
மேலூர் பகுதியில் பெயருக்கு க�ொஞ்சம் பட்டா இடத்தை
குத்திகைக்கு எடுத்துவிட்டு, அருகிலுள்ள அரசு புறம்போக்கு
இடம், க�ோயில் குளம், மலைப்பகுதிகள் சூறையாடப்பட்டன.
மதுரை ஆட்சியராக இருந்த சகாயம் ரூ.1.50 லட்சம் க�ோடி கனிம
க�ொள்ளை நடந்திருப்பதாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இது த�ொடர்பாக 21 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
ஆனாலும், இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. இது
த�ொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 2014-ல்
எம்எல்ஏவாக இருந்தப�ோது, இரண்டு முறை சட்டப்பேரவையில்
கேள்வி எழுப்பினேன். ஆனாலும், வழக்குகள் த�ொடர்ந்து
நிலுவையிலுள்ளன.
இந்நிலையில், மீண்டும் கிரானைட் குவாரிகளுக்கு ஏலம்
அறிவித்து இருப்பது ஏற்க முடியாது. அரசு இதை கைவிட
வேண்டும். இனிமேல் எந்த அரசும் கிரானைட் குவாரிகளுக்கு
அனுமதி வழங்கக் கூடாது. மத்திய அரசும் உதவக் கூடாது.
தேவையெனில் நாங்கள் ப�ோராடவேண்டி வரும். தேர்தல் நிதி
பெறும் உள்நோக்கமாக சந்தேகிக்கிற�ோம். தமிழ்நாட்டிலுள்ள
இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை
எடுக்கவேண்டும். கிரானைட் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
கண்ட பிறகே அனுமதி பற்றி ய�ோசிக்க வேண்டும். தவறு
செய்தவர்களுக்கு தண்டனை இருந்தால் மட்டுமே பயம்
இருக்கும். தவறு நடக்காது. டிசம்பர் 15-ல் மது ஒழிப்பு மாநாடு
நடத்தப்படும். இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும்'' என்று
அவர் தெரிவித்தார்.
12
பாஜகவின் தாமரை சின்னம் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்
க�ோரி வழக்கு; மனுதாரருக்கு ஐக�ோர்ட் எச்சரிக்கை
இந்தியத் தேர்தல் ஆணையம்,
பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை
சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து
செய்ய உத்தரவிடக் க�ோரிய வழக்கு
விளம்பர ந�ோக்குடன் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு என கருத்து
தெரிவித்துள்ள சென்னை உயர்
vijayabharatham.org நீதிமன்றம், சின்னம் ஒதுக்கீட்டில்
விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடுமையான அபராதத்துடன்
வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச்
சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை ச�ோசலிச கட்சியின்
நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த
மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல்
கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை
இழிவுபடுத்துவது ஆகும். எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம்
ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது த�ொடர்பாக,
கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு
அளித்தேன். ஆனால், எனது மனு மீது இதுவரை இந்திய தேர்தல்
ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையத்தின்
இந்தச் செயல், இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, இந்த
மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை
ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் க�ோரியிருந்தார். இந்த
வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத
சக்கரவர்த்தி ஆகிய�ோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை
விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்குவதை எந்த சட்டப்பிரிவு
தடை செய்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது,
சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளது குறித்து விளக்கமளிக்க
கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில்
க�ோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, விசாரணையை
டிசம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும்,
இது விளம்பர ந�ோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.
சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை மனுதாரர் நிரூபிக்காவிட்டால்
கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்
என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கரும்பு விவசாயிகள் நலன்: ஹரியாணா, உ.பி.யை


பார்த்து தமிழக அரசு பாடம் கற்க ராமதாஸ் அறிவுரை
“கரும்பு விவசாயிகளின்
நலன்களை எவ்வாறு
பாதுகாப்பது என்பதை
ஹரியாணா, பஞ்சாப்,
உத்தரப் பிரதேசம்
ப�ோன்ற மாநிலங்களைப்
பார்த்தாவது தமிழக அரசு
கற்றுக்கொள்ள வேண்டும்.
vijayabharatham.org
13
ஒரு டன் கரும்புக்கான க�ொள்முதல் விலையாக ரூ.5000
வழங்கப்பட வேண்டும். குறைந்தது ஹரியாணா மாநிலத்தில்
வழங்கப்படும் ரூ.3,860-ஐ விட சற்று அதிகமாக ரூ.4,000 ஆவது
க�ொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும்” என்று பாமக
நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஹரியாணா மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில்
கரும்புக்கான க�ொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,860
ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கரும்புக்கு
அறிவிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலை இதுவாகும்.
ஹரியாணா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.
அதேநேரத்தில் தமிழகத்தில் நடப்புப் பருவத்தில் கரும்பு
க�ொள்முதலுக்கான ஊக்கத்தொகை கூட இன்னும்
அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் அக்டோபர்
மாதத்தில் அரவைப் பருவம் த�ொடங்கியுள்ளது. நடப்பு அரவைப்
பருவத்தில் 9.50% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத்
திறன் க�ொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.2919.75, 10.25%
சர்க்கரைத் திறன் க�ொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,150
க�ொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு
அறிவித்திருக்கிறது. மாநில அரசுகள் விரும்பினால், கூடுதலாக
ஊக்கத்தொகை அறிவித்து க�ொள்முதல் விலையை உயர்த்தி
வழங்க முடியும். அந்த முறையில் தான் ஹரியானாவில் கரும்பு
க�ொள்முதல் விலை ரூ.3,860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த அரவைப் பருவத்தில் க�ொள்முதல் விலை ரூ.4,000
ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு க�ொள்முதல் விலை உயர்வு இந்த அளவுக்கு
உயர்த்தப்பட்டிருப்பது அம்மாநில உழவர்களிடம் மிகப்பெரிய
வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஹரியாணா மாநிலத்திற்கு அடுத்தபடியாக, பஞ்சாப்
மாநிலத்தில் கரும்பு க�ொள்முதல் விலை ரூ.3,800 ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கரும்பு
க�ொள்முதல் விலை ரூ.3,750 ஆக உயர்த்தப்படவுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் கரும்பு க�ொள்முதல் விலை
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகக்குறைவாக உள்ளது.
இன்றைய நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள
டன்னுக்கு ரூ.2919 என்பது தான் தமிழ்நாட்டில் கரும்பு
க�ொள்முதல் விலை ஆகும். நடப்பு அரவைப் பருவத்திற்கான
க�ொள்முதல் விலை மீது தமிழ்நாடு அரசு இதுவரை
எந்த ஊக்கத்தொகையையும் அறிவிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
ஒரு டன் கரும்புக்கான க�ொள்முதல் விலையாக
ரூ.5000 வழங்கப்பட வேண்டும். குறைந்தது ஹரியாணா
மாநிலத்தில் வழங்கப்படும் ரூ.3,860-ஐ விட சற்று அதிகமாக
ரூ.4 ஆயிரமாவது க�ொள்முதல் விலையாக வழங்கப்பட
வேண்டும். மத்திய அரசு ரூ.2919 க�ொள்முதல் விலையாக
அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அதன்
பங்கிற்கு டன்னுக்கு ரூ.1,081 ஊக்கத்தொகையாக வழங்க
வேண்டும். அதன் மூலம் தமிழக உழவர்களுக்கு கரும்புக்கு
டன்னுக்கு ரூ.4,000 க�ொள்முதல் விலையாக கிடைப்பதை
தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.
14
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்று ஜவுளித்
த�ொழிலை பாதுகாத்திட அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
"தமிழக அரசு மின் கட்டண
உயர்வை திரும்பப் பெறவேண்டும்.
விசைத்தறி மற்றும் திருப்பூர்,
க�ோவை மாவட்ட ஜவுளி
உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை
உடனடியாக அழைத்துப் பேசி,
ப�ோராட்டத்தைக் கைவிடச்
vijayabharatham.org செய்ய வேண்டும். புதிய ஜவுளிக்
க�ொள்கையை வகுத்து ஜவுளித் த�ொழிலை பாதுகாக்க
வேண்டும்" என்று அதிமுக ப�ொதுச் செயலாளர் எடப்பாடி
பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது த�ொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியாவின் உயிர் நாடியான வேளாண்மை, திமுகவின்
இருண்ட ஆட்சியில் இந்த ஆண்டு ப�ோதிய தண்ணீர் இல்லாமல்
ஏற்கெனவே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. த�ொடர்ந்து,
நிர்வாகத் திறமையற்ற திமுக அரசின் ப�ொம்மை முதல்வர்,
இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன்,
மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், ச�ோலார்
தகடுகள் ப�ொருத்தி அதன்மூலம் உபய�ோகிக்கப்படும்
மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக்
கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள
த�ொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து
வருகிறது.
குறிப்பாக, கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும்
நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில்
ப�ோர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி
உட்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும்
நூல்களை உற்பத்தி செய்யும் OE எனப்படும் ஓப்பன் எண்ட்
ஸ்பின்னிங் மில்களின் மறுசுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பு
கடந்த ஜூலை மாதம் நூல் விலை மற்றும் மின் கட்டண
உயர்வை திரும்பப் பெறக்கோரி ப�ோராட்டம் நடத்தியது.
ஆனால், இன்றுவரை திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான
நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனது தலைமையிலான
அதிமுக ஆட்சியின்போது, அவ்வப்போது த�ொழில்
முனைவ�ோர்கள் மற்றும் ஜவுளித் துறையினரை நானே நேரடியாக
சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு நிறைவேற்றி
வந்ததை த�ொழில் முனைவ�ோர்களும், ஜவுளித் துறையினரும்,
ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும் நன்கு அறிவார்கள்.
இதனால், வெளிநாடுகளுக்கு பல்லாயிரம் க�ோடி அளவில்
த�ொடர்ந்து ஏற்றுமதி நடைபெற்றது. த�ொழில் முனைவ�ோர்
அதிக அளவு அந்நிய செலாவணியை நம் நாட்டுக்கு ஈட்டித்
தந்தனர். இதனால், லட்சக்கணக்கான த�ொழிலாளர்களுக்கு
த�ொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.
மின் கட்டண உயர்வு தவிர, திமுக அரசு, அடிக்கடி மின்
கட்டணத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை மின்சார
ஒழுங்குமுறை ஆணையத்துக்கே வழங்கியது. இதனால்,
ஏற்கெனவே மின் கட்டண உயர்வால் தள்ளாடிக் க�ொண்டிருந்த
த�ொழில் துறையும், ஜவுளித் துறையும், திமுக அரசு கடந்த
ஜூலை மாதம் அறிவித்த இரண்டாம் முறை மின் கட்டண
15
உயர்வினால் இயங்க முடியாத நிலைக்கே சென்றுவிட்டது.
எனவேதான், திமுக அரசின் கடுமையான மின் கட்டண
உயர்வுக்கு த�ொழில் துறையும், ஜவுளித் துறையும் தங்களது
கடும் எதிர்ப்பை த�ொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இதுதவிர, திமுக அரசு, மத்திய அரசிடம் நூல்கள் மற்றும்
ஜவுளி ரகங்களுக்கு குறைத்துள்ள இறக்குமதி வரியை மீண்டும்
உயர்த்துவதற்கு வலியுறுத்த வேண்டும். வெளிநாடுகளைப்
ப�ோல் தமிழகத்திலும் ஜவுளி உற்பத்திக்கு அதிக மானியம்
வழங்க திமுக அரசை வலியுறுத்தியும், மின் கட்டணத்தை
குறைக்கக் க�ோரியும் ஜவுளித் துறையினர் அமைச்சர்களையும்,
அதிகாரிகளையும் சந்தித்து க�ோரிக்கை விடுத்தும் இதுவரை
எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால், விசைத்தறி மற்றும்
ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் சங்கம் 5.11.2023
முதல் 25.11.2023 வரை உற்பத்தி நிறுத்தப் ப�ோராட்டத்தை
அறிவித்துள்ளது. திமுக ஆட்சியாளர்கள், கடந்த 30 மாத காலமாக
தமிழகத்தையும், நாட்டு மக்களையும் பற்றி கவலைப்படாமல்
தான்தோன்றித்தனமாக செயல்படுவது வேதனைக்குரியது.
கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் மூலம் திமுக ஆட்சியாளர்கள்
க�ோடிகளை க�ொள்ளை அடித்துவிட்டார்கள் என்ற
குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், திமுக அமைச்சர்கள்
மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை ரெய்டுகள்
நடத்தி வருகின்றன. நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை
சிறப்பாகக் க�ொண்டாடும் நிலையில், விசைத்தறி மற்றும் ஜவுளி
உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் 20 நாட்கள் உற்பத்தி நிறுத்த
அறிவிப்பினால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான
த�ொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பதுடன், தீபாவளியை
குடும்பத்துடன் சந்தோஷமாகக் க�ொண்டாட முடியாத
சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை
அளிக்கிறது. எனவே, கடும் மின் கட்டண உயர்வை திரும்பப்
பெறவேண்டும் என்றும், ஜவுளித் த�ொழிலில் தமிழகம் முன்பு
எப்படி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கியத�ோ,
அதேப�ோல் இப்போதும் ஜவுளித் த�ொழிலில் முதன்மை
மாநிலமாக விளங்க விசைத்தறியாளர்கள், ஆட்டோலூம் மற்றும்
நூல் மில் உற்பத்தியாளர்களைக் க�ொண்டு புதிய ஜவுளிக்
க�ொள்கையை வகுத்து ஜவுளித் த�ொழிலை பாதுகாக்க திமுக
அரசை வலியுறுத்துகிறேன். விசைத்தறி மற்றும் திருப்பூர்,
க�ோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை
உடனடியாக அழைத்துப் பேசி, ப�ோராட்டத்தைக் கைவிடச்
செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்”
என்று அவர் கூறியுள்ளார்.

திருச்செந்தூர் க�ோயில் உட்பிரகாரத்தில்


சஷ்டி விரதம் இருக்க அனுமதி மறுப்பு
திருச்செந்துார் க�ோயிலில் கந்த சஷ்டி விழாவின் ப�ோது,
க�ோயில் உட்பிரகாரத்தில் விரதமிருக்க அனுமதி கிடையாது
என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி க�ோயிலுக்கு நேற்று
காலை வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் க�ோயிலுக்கு
சென்று சுவாமி தரிசனம் செய்தனர். த�ொடர்ந்து க�ோயில்
வளாகத்தில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான
16
நிகழ்ச்சியில் கலந்து க�ொண்ட அமைச்சர் சேகர் பாபு மண்டபம்
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். த�ொடர்ந்து க�ோயிலின்
உப க�ோயிலான வெயிலுகந்தம்மன் க�ோயில் வளாகத்தில் பசு
மடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். த�ொடர்ந்து அமைச்சர்
சேகர்பாபு கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத்துறை
சார்பில் திருத்தணி, திருவேற்காடு, திருச்செந்துார் உள்ளிட்ட
4 இடங்களில் பசு மடமும், 11 இடங்களில் யானை நினைவு
மண்டபமும் கட்டப்பட உள்ளது.
திருச்செந்துாரில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு
மண்டபம் கட்டப்படுகிறது. எச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200
க�ோடி மதிப்பில் 20 பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது
35 சதவீத பணிகள் நடந்துள்ளது. கந்த சஷ்டி திருவிழா
வில் 20 லட்சம் மக்கள் கூடுவார்கள் அதற்காக பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. கந்தசஷ்டியில் விரதம் இருக்கும்
பக்தர்களுக்காக க�ோவில் வளாகத்தில் 21 இடத்தில் கழிப்பறை,
குடிநீர் வசதியுடன் தற்காலிக க�ொட்டகைகள் அமைக்கப்பட
உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் தங்கி விரதம் இருக்கலாம்.
வளாக பணி பெருந்திட்ட 2025ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
மேலும், அரசின் சார்பில் ரூ.100 க�ோடியில் செய்யப்பட உள்ள
18 திட்ட பணிகள் கார்த்திகை மாதத்தில் த�ொடங்க உள்ளது.
யாத்திரிகர் நிவாஸ் 45 நாட்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு
வரும். கந்த சஷ்டி திருவிழாவின் ப�ோது நீதிமன்ற உத்தரவுபடி
உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî«.
93613 99006, 96004 78526
17

You might also like