You are on page 1of 20

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


nrhg»UJ, á¤âiu - 30 rÅ 13.05.2023 ky® - 4, ïjœ - 24

டிஆர். பாலு அவதூறு வழக்கு தாக்கல்


தமிழக பா.ஜ.க தலைவர்
அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம்
தேதி தி.மு.க தலைவர்கள் சிலரின்
ச�ொத்து பட்டியலை வெளியிட்டார்.
நாட்டையே உலுக்கிய இந்த
பட்டியல் த�ொடர்பாக, தி.மு.க
அரசின் முதல்வர் ஸ்டாலின்,
உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட vijayabharatham.org

சிலர் அண்ணாமலைக்கு ந�ோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில்,


ச�ொத்து பட்டியல் விவகாரம் த�ொடர்பாக அண்ணாமலை மீது
தி.மு.க ப�ொருளாளர் டி.ஆர். பாலு அவதூறு வழக்கு ஒன்றை
தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது
நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் தாக்கல் செய்யப்பட்ட
இந்த அவதூறு வழக்கில், அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி
அவதூறு கருத்துக்களை கூறியதாக அண்ணாமலை மீது
டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை முதன்மை
அமர்வு நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் சமீபத்தில் அவதூறு
வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சூழலில் இந்த வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.

டி.ஆர். பாலு வழக்கு நகைப்புக்குரியது


தமிழக
பா.ஜ.க தலைவர்
அண்ணாமலை நேற்று
செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "டி.ஆர் பாலு
என்மீது வழக்கு த�ொடர்ந்திருப்பது
நகைப்புக்குரியது. என் மீது
த�ொடரப்பட்ட வழக்குகளை
vijayabharatham.org சட்டரீதியாக சந்திப்பேன்.
வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை
நிறுத்த மாட்டேன். அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் குடும்பத்தினர்
பெரிய நிறுவங்களை நடத்தி வருவதால் அவருக்கு த�ொழில்துறை
ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற
முறைகேடுகள் காரணமாகவே நாசர் அமைச்சரவையில்
இருந்து விடுவிக்கப்பட்டுள்ளர். பால் விலையை புதிதாக
வந்துள்ள பால்வள்த்துறை அமைச்சர் குறைக்க வேண்டும் என
கேட்டுக்கொள்கிறேன். ஆடிய�ோ விவகாரத்திற்காக பி.டி.ஆர் துறை
மாற்றப்பட்டது தவறு. 3 தலைமுறையாக மாநில வளர்ச்சிக்கு
அர்ப்பணித்து க�ொண்டது என பி.டி.ஆர் குடும்பத்தை முதல்வரே
பாராட்டியுள்ளார். ஆடிய�ோவில் பி.டி.ஆர் பேசியது உண்மை தான்.
பி.டி.ஆர் ஆடிய�ோ வெளியிட்டது த�ொடர்பாக என் மீது வழக்கு
த�ொடருங்கள். வழக்கு த�ொடந்தால் தானே ஆடிய�ோவின் உண்மை
தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்" என கூறினார்.
1
தமிழக அரசுக்கு எதிராக உண்ணாவிரத ப�ோராட்டம்
மத்திய அரசின் இலவச
கட்டாயக் கல்வி உரிமை
சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு
வரை ஆசிரியராக பணிபுரிய
ஆசிரியர் தகுதித் தேர்வில்
(டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.
இதனையடுத்து, தமிழகத்தில்
vijayabharatham.org 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி
நியமனத்துக்காக மீண்டும் ஒரு ப�ோட்டித் தேர்வு நடத்தப்படும்
என்று 2019ம் ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இந்த நடைமுறையை கைவிடக் க�ோரி ஆசிரியர்கள் த�ொடர்ந்து
க�ோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம்
சார்பில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த மே 9ம் தேதி முதல்
த�ொடர் உண்ணாவிரதப் ப�ோராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 300க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தங்கள் க�ோரிக்கையை வலியுறுத்தி ப�ோராடி வரும் அவர்களில்
சுமார் 35 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய ப�ோராட்டக்
குழுவினர், "தி.மு.க தனது தேர்தல் அறிக்கை 177ல் கூறியபடி
எங்களுக்கு பணிவாய்ப்பை வழங்க வேண்டும். ஆசிரியர்
பணிக்கான வயது உச்சவரம்பை 57 ஆக உயர்த்தவேண்டும்.
கடந்த 3 நாட்களாக ப�ோராடி வருகிற�ோம். ஆனால், இதுவரை
அரசு எங்களை கண்டுக�ொள்ளவில்லை. எங்கள் க�ோரிக்கை
நிறைவேறும் வரை ப�ோராட்டம் த�ொடரும்" என்றனர்.

பழமைவாய்ந்த ம�ொழி தமிழ்


'ஒரே பாரதம் உன்னத
பாரதம்' என்ற திட்டத்தின் கீழ்
தமிழகம் வந்த 45 பீகார் மாநில
மாணவர்களுடன் சென்னை
கிண்டியில் உள்ள ராஜ்பவனில்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
கலந்துரையாடினார். அப்போது
அவர், "பாரதம் என்பது 1947ம் vijayabharatham.org

ஆண்டு உருவாக்கப்படவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு


முன்பாகவே அது உருவானது. பாரத நாடு என்பது கலாச்சாரம்
மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் உருவானது. ப�ொதுவாக, பழமையான ம�ொழிகளாக
தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தைக் கூறுவார்கள். ஆனால் அதற்கு
தற்போது வரை முடிவு கிடைக்கவில்லை. தமிழில் இருந்து
சமஸ்கிருதத்திற்கும், சமஸ்கிருதத்தில் இருந்தும் தமிழுக்கும் பல
ச�ொற்கள் வந்துள்ளன. அரசர்கள் ஆண்ட அந்த காலம் முதல் யார்
வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்
என்ற சூழல் இருந்தது. மிகவும் பழமைவாய்ந்த ம�ொழி தமிழ்.
தமிழகம், மிகவும் பழமையான ம�ொழி மற்றும் கலாச்சாரத்தை
க�ொண்டது. பன்மொழி இருப்பது நமது பாரதத்திற்கு அழகு. பக்தி
2
இயக்கம் தமிழக மண்ணில் தான் த�ொடங்கியது. கலாச்சாரம்,
பாரம்பரியம், பண்பாடுகளால் மிகவும் பழமையான நாடு பாரதம்"
என கூறினார்.

தமிழுக்கு மரியாதை
பன்னிரெண்டாம் வகுப்பு
ப�ொதுத்தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி
மாணவ, மாணவிகளை நேரில்
வரவழைத்து தமிழக ஆளுநர்
ஆர்.என் ரவி கலந்துரையாடினார்.
அவ்வகையில், தென்காசி
மாவட்டம் கடையநல்லூரில் vijayabharatham.org

இருந்து மாணவி ஷப்ரீன் இமானா தனது பெற்றோருடன்


சென்னை வந்திருந்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட
முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்காக ஆளுநர் மாளிகையில்
கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் மாணவி ஷப்ரீன்
இமானா தங்க வைக்க ஆளுநர் கூறினார். விதிமுறைப்படி தனி
நபர்கள் இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை என ஆளுநர்
மாளிகை அதிகாரிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர். அப்போது,
'தமிழ் வழியில் கல்வி பயின்று சாதனை படைத்த மாணவிக்காக
விதிமுறைகளை தளர்த்துவதில் எந்த விதமான தவறும் இல்லை'
என ஆளுநர் கூறியதையடுத்து மாணவி ஷப்ரீன் இமானாவிற்காக
ஆளுநர் மாளிகையின் விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டது.
தமிழுக்கு ஆளுநர் ரவி அளித்த மரியாதையை அறிந்த பலரும்
பாராட்டி வருகின்றனர்.

புத்தக வெளியீட்டு விழா


சுதந்திரப் ப�ோராட்ட வீரர்கள்
பற்றிய தொகுப்புகள் அடங்கிய
‘தி இண்டோமிடேபிள்ஸ்’ (THE
INDOMITABLES) என்ற புத்தக
வெளியீட்டு விழா, சென்னை
ஆழ்வார்பேட்டை டி.டி.கே
சாலையில் உள்ள நாரதகான
vijayabharatham.org சபாவில் நடைபெற்றது.
தென்னிந்திய ஆய்வு மையம் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில்,
சென்னை வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கே. கணேசன்,
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல்
பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது
அவர், இப்புத்தகம் எதிர்கால இளைய தலைமுறையினரை
அவசியம் சென்று சேர வேண்டும். ஆகவே, இப்புத்தகம் தனது
நிறுவனத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சென்று
சேரும் வகையில், தனது கல்லூரி நூலகத்தில் வைப்பதாக
வாக்குறுதி அளித்தார். புத்தகத்தின் ஆசிரியர் சுதாகர் நாராயணன்
முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அலயென்ஸ் பப்ளிகேஷன் வெளியீட்டாளர்
மற்றும் விற்பனையாளர் சீனிவாசன் கலந்துகொண்டு
வாழ்த்துரை வழங்கி பேசுகையில், இப்புத்தகத்தை தமிழாக்கம்
செய்து தமிழில் வெளியிட உறுதியளித்தார். விவேகானந்தா
3
எஜுகேஷனல் சொசைட்டியின் செயலாளர் வெங்கடேசன்
வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சிவா,
மகாகவி பாரதியார், ஜெய்ஹிந்த் செண்பகராமன் உள்ளிட்ட
10க்கும் மேற்பட்ட சுதந்திரப் ப�ோராட்ட வீரர்களின் வாரிசுகள்
கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் விழாவில்
க�ௌரவிக்கப்பட்டனர். இப்புத்தகத்தில், தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களையும் சேர்ந்த, சுதந்திர ப�ோராட்ட வீரர்கள்
126 பேரை பற்றிய தொகுப்புகள் அடங்கியுள்ளன. மேலும்,
பூலித்தேவன் முதல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில்
பணியாற்றியவர்கள் வரையிலான 300 ஆண்டு வரலாறும்
இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு


கர்நாடக சட்டப்பேரவைத்
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட
மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள், முன்பு
தென்னாப் பி ரி க்கா வி ல்
பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ்
கட்சி கூறிய குற்றச்சாட்டை
vijayabharatham.org தேர்தல் ஆணையம்
நிராகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தேவையற்ற
வதந்திகள் என்று நிராகரித்த தேர்தல் ஆணையக்குழு, இதுப�ோன்ற
தவறான தகவல்களைப் பரப்பும் ஆதாரங்களை ப�ொதுவில்
அம்பலப்படுத்த காங்கிரஸ் கட்சியை கேட்டுக் க�ொண்டது. மே
15ம் தேதி மாலை 5.00 மணிக்குள் இதுகுறித்து எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சித் தெரிவிக்கவும் தேர்தல்
ஆணையம் க�ோரியுள்ளது. முன்னதாக, மே 8ம் தேதி தேர்தல்
ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், கர்நாடகா தேர்தலில்,
தென்னாப்பிரிக்காவில் முன்பு பயன்படுத்தப்பட்ட மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேவையான மறுமதிப்பீடு மற்றும்
மறு சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படாமல் மீண்டும்
பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காங்கிரஸ் கவலை
தெரிவித்து அதுகுறித்த விளக்கம் கேட்டிருந்தது. காங்கிரஸின்
ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் எழுதிய
கடிதத்தில், இந்தத் தேர்தலுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்
ஆஃப் இந்தியா லிமிடெட்டின் புதிய மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறியது. மேலும்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்னாப்பிரிக்காவிற்கு
அனுப்பப்படவில்லை, அந்த நாடு அந்த இயந்திரங்களைப்
பயன்படுத்தவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம்
அளித்தது. அதற்கான பதிவேட்டு ஆதாரங்களையும் மேற்கோள்
காட்டியுள்ளது.

சபரிமலை நடை திறப்பு


சபரிமலை ஐயப்பன்
க�ோயிலில் வரும் 15ம் தேதி
முதல் 19ம் தேதி வரை வைகாசி
மாத பூஜை நடைபெற உள்ளது.
இதற்காக கோயில் நடை நாளை
vijayabharatham.org
4
(14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி
கண்டரரு மகேஷ் ம�ோகனரு முன்னிலையில் மேல்சாந்தி
ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். இதையடுத்து
மறுநாள் (15ம் தேதி) முதல் 5 நாட்கள் க�ோயிலில் சிறப்பு
பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும். சபரிமலையில் நடை
திறக்கப்படுவதை முன்னிட்டு கேரள அரசு ப�ோக்குவரத்துக்
கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுவாமி தரிசனத்திற்கு
ஆன்லைன் முன்பதிவு த�ொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்
பதிவு செய்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்,
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல்
மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள்
மூலம் முன்பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

அக்னி வீரர்களுக்கு ரயில்வே பணி


பாரதத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த
அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக 'அக்னிபத்'
என்ற புரட்சிகர திட்டத்தை மத்திய
அரசு க�ொண்டு வந்தது. இதில் 4
ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத
வீரர்கள் பணியில் நீடிக்கலாம்.
மற்றவர்கள் பணியில் நல்ல
பணப் பலன்களுடன் பணியில்
இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
vijayabharatham.org அவர்களுக்கு ச�ொந்தத் த�ொழில்
துவங்க உதவி, அசாம் ரைப்பிள்ஸ் உள்ளிட்ட படைகளில் சேர
முன்னுரிமைகள் மற்றும் சலுகைகள், ப�ொது மற்றும் தனியார்
துறைகளில் பணிகளில் சேர உதவி என பல உதவிகள் வழங்கப்பட
உள்ளன. பல ப�ொது மற்றும் தனியார் நிறுவனங்களும் அக்னி
வீரர்களை பணியில் அமர்த்த காத்திருக்கின்றன. இந்நிலையில்,
அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு
ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது சலுகை வழங்க
ரயில்வே நிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது. அவ்வகையில்,
லெவல் 1 பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடும்,
லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு 5
சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படும். முதல் பேட்ச் அக்னி
வீரர்களுக்கு வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகளும், அதற்கடுத்த
பேட்ச் அக்னிவீரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வும்
அளிக்கப்படும். மேலும், உடல் தகுதி தேர்வில் இருந்து
அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம்
தெரிவித்து உள்ளது.

ஊட்டச்சத்துடன் கூடிய கல்வித் திட்டம்


ஆரம்பகால குழந்தைப்பருவ
பராமரிப்பு மற்றும் கல்வியை
வ லு ப ்ப டு த் து வ த ற்கா க
டெல்லியின் விஞ்ஞான் பவனில்
நடைபெற்ற தேசிய அளவிலான
நிகழ்ச்சியில் ‘ஊட்டச்சத்துடன்
கூடிய கல்வி' என்ற திட்டத்தை
vijayabharatham.org
5
மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி
த�ொடங்கி வைத்தார். மத்திய இணையமைச்சர் முஞ்சாபரா
மகேந்திரபாய், செயலாளர் இந்தேவர் பாண்டே மற்றும்
அமைச்சகத்தின் ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு
மற்றும் கல்வி பணிக்குழுவின் தலைவர் சஞ்சய் க�ௌல்
ஆகிய�ோர் நிகழ்ச்சியில் கலந்து க�ொண்டனர். விழாவில் பேசிய
ஸ்மிருதி ஜூபின் இரானி, "தேசியக் கல்விக் க�ொள்கை 2020ல்
குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில்
கவனம் செலுத்தி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே
முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக
இருக்கிறது. ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும்
கல்வி பணிக்குழு மற்றும் தேசியக் கல்விக் க�ொள்கையின்
பரிந்துரைகளின் அடிப்படையில் ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி
என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள்,
நிபுணர்கள், பெற்றோர் முதலிய�ோருடன் நடைபெற்ற விரிவான
ஆல�ோசனைகளின் அடிப்படையில் பணிக்குழு பரிந்துரைகளை
முன் வைத்துள்ளது. குழந்தைகளின் அடிப்படை வளர்ச்சியில்
ப�ொம்மைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்நாட்டில்
தயாரிக்கப்படும் மற்றும் மரம், துணி, மண் ப�ோன்று எளிதாக
கிடைக்கக்கூடிய ப�ொருட்களைக் க�ொண்டு உருவாக்கப்படும்
ப�ொம்மைகள் ப�ோன்ற தயாரிப்புகளால் அங்கன்வாடி மையங்கள்,
தேசிய ப�ொம்மைகள் செயல் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது"
என தெரிவித்தார்.

ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு எதிர்ப்பு


ஓரினச்சேர்க்கை திருமணங்களை
சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது
த�ொடர்பான நிலைப்பாட்டிற்காக
மத்திய அரசால் அணுகப்பட்ட ஏழு
மாநிலங்களில், ராஜஸ்தான், அசாம்
vijayabharatham.org மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று
மாநிலங்கள், ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு தங்கள்
எதிர்ப்பை அறிவித்துள்ளன. சட்டங்களை உருவாக்குவதற்கான
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் உரிமைகளை
மேற்கோள் காட்டியுள்ளதுடன் பல்வேறு மதங்களின் ப�ொதுக்
கருத்தை கருத்தில் க�ொண்டும் அந்த மாநிலங்கள் இதற்கு
தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, உத்தரப்
பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களும்
இந்த விஷயத்தில் சிந்திக்க கூடுதல் அவகாசம் க�ோரியுள்ளன.
ராஜஸ்தானில் காங்கிரஸும், அசாமில் பா.ஜ.கவும், ஆந்திராவில்
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்கின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.

மருத்துவ அறிவியல் த�ொழில்நுட்பத் துறை பாடங்கள்


நவீன மருத்துவத்தில், ந�ோய் வளர்ச்சியைப் புரிந்து க�ொள்ளுதல்
மற்றும் ந�ோய்க்கான சிகிச்சைகள், மருத்துவ உபகரணங்கள்,
த�ொழில்நுட்பங்கள் ப�ோன்றவை மருத்துவர் விஞ்ஞானிகளை
சார்ந்தே உள்ளன. இந்த சூழலில், சென்னையில் உள்ள
இந்திய த�ொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) மருத்துவ
அறிவியல் மற்றும் த�ொழில்நுட்பம் என்ற துறையை புதிதாகத்
6
த�ொடங்கியுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் ப�ொறியியல்
பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பு (B.S. Program
in Medical Sciences and Engineering) அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தப் பாடத் திட்டம் பாரதத்திலேயே முதன்முறையாகும்.
காக்னிசன்ட் இணை நிறுவனர் லட்சுமி நாராயணன்,
ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமக�ோடி,
துறையின் வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவ
நிபுணர்கள் மற்றும் த�ொடர்புடைய�ோர் முன்னிலையில் இந்தத்
துறைத�ொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருத்துவ
சாதனங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை
நுண்ணறிவு, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை
மாணவர்கள் வடிவமைக்கும் வகையில் அவர்களைத்
தயார்படுத்தும் இடைநிலை அணுகுமுறையை இப்பாடத்திட்டம்
வழங்குகிறது. மருத்துவ நடைமுறைகளில் த�ொழில்நுட்பத்தை
திறம்படப் பயன்படுத்த ஏதுவாக
மருத்துவர்களுக்கு பயிற்சி
அளிப்பதுடன், பாரதத்தில்
மருத்துவர் விஞ்ஞானிகளுக்கான
அடித்தளத்தை அமைக்கும்
பணியினை இந்தத் துறை
மேற்கொள்ளும். இப்பாடத்
vijayabharatham.org
திட்டத்திற்கான மேம்பாட்டுப்
பணிகளை கவனிக்கும் பாரதம் மற்றும் வெளிநாடுகளின்
உயர்மட்ட மருத்துவ நிபுணர்கள், இத்துறையின் 'நடைமுறை
பேராசிரியர்களாக' இருப்பார்கள். பாரதத்தில் உள்ள முதன்மை
மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன்
இத்துறை ஏற்கனவே த�ொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ அறிவியல் மற்றும் த�ொழில்நுட்பத் துறை
மூலம், பிஎஸ் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் என்ஜினியரிங் (4
ஆண்டுக் கல்வி), பி.எச்.டி. புர�ோகிராம் ஃபார் டாக்டர்ஸ், எம்.
எஸ் பை ரிசர்ச் ஃபார் டாக்டர்ஸ், எம்எஸ் மெடிக்கல் சயின்சஸ்
அண்ட் என்ஜினியரிங், பிஎச்.டி புர�ோகிராம் ஃபார் சயின்ஸ்
அண்ட் என்ஜினியரிங் கிராஜுவேட்ஸ் ஆகிய பாடத்திட்டங்கள்
த�ொடங்கப்பட உள்ளன. த�ொழில்முனைவில் மருத்துவர் பட்டம்
எனப்படும் மருத்துவர்களுக்கான பிரத்யேக பாடத்திட்டத்தையும்
இந்தத் துறை அறிமுகப்படுத்துகிறது. இப்பாடத்திட்டத்தின்
வாயிலாக மருத்துவர்கள் ஒரு தயாரிப்பை உருவாக்க முடியும்.
அவர்களின் த�ொழில் முனைவு முயற்சிகளுக்கான வழிகாட்டுதல்
மற்றும் ஆதரவு ஐ.ஐ.டி அமைப்பின் மூலம் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் விவரங்களை
துறையின் https://mst.iitm.ac.in/ என்ற இணையதளத்தில்
காணலாம்.

திரைப்பட இயக்குனருக்கு மிரட்டல்


தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதில்
இருந்தே அந்த படத்துடன் த�ொடர்புடையவர்களை மிரட்டும்
பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில் இப்போது
அந்த படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென்னுக்கு புதிய
மிரட்டல் வந்துள்ளது. ‘ஹக் இ ஹிந்துஸ்தான்’ என்ற ஒரு
முஸ்லிம் அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டலில்,
இயக்குனர் சுதிப்தோ சென்னின் கண்களைப் பறிப்பவர்களுக்கு
7
ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த
அமைப்பின் தலைவர் தமன்னா ஹாஷ்மி, இந்த படத்தின் மூலம்
முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு
உள்ளது. படம் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதல் அதற்குத்
தடை விதிக்க வேண்டும் என கூறினார். ஷாஹீத் குதிராம் ப�ோஸ்
நினைவிடத்திற்கு அருகில் இந்த குழு உறுப்பினர்கள் நடத்திய
ஆர்ப்பாட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
முன்னதாக, படத்தின் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஒரு
தெரியாத எண்ணிலிருந்து ஒரு மிரட்டல் செய்தி வந்தது,
அதில் “வீட்டை விட்டு தனியாக
வெளியே செல்ல வேண்டாம்.
இந்தக் திரப்படத்தால் நீங்கள்
நன்மை எதுவும் செய்யவில்லை”
என கூறப்பட்டு இருந்தது.
சுதிப்தோ சென் இதுகுறித்து
மும்பை காவல் நிலையத்தில்
புகார் அளித்திருந்தார்.
vijayabharatham.org
காவல்த்குறை அவருக்கு
பாதுகாப்பு அளித்துள்ளது. அதேப�ோல, தி கேரளா ஸ்டோரி
திரைப்படத்தை பார்க்கச் சென்றவர்களுக்கு இலவச ஆட்டோ
சவாரி வழங்கிய ஆட்டோ ஓட்டுநரான சாது மகருக்கு பாரதம்
மற்றும் பல வெளிநாடுகளில் இருந்து தலை துண்டிப்பு உள்ளிட்ட
பல க�ொலை மிரட்டல்கள் வந்ததால் அவருக்கு காவல்துறை
பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ஜி20 எரிசக்தி மாற்ற பணிக்குழு கூட்டம்


பாரதத்தின் ஜி20
தலைமைத்துவத்தின் கீழ்
மூன்றாவது எரிசக்தி மாற்ற
பணிக்குழு கூட்டம் மும்பையில்
2023 மே 15 முதல் 17 வரை
நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள்
நடைபெறவுள்ள இக்கூட்டத்தில்
vijayabharatham.org
ஜி20 நாடுகளின் உறுப்பினர்கள்,
சிறப்பு அழைப்பாளர் நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச
அமைப்புகளான சர்வதேச எரிசக்தி முகமை, உலக வங்கி,
இந்திய உலக எரிசக்தி குழுமம் ஆகியவற்றின் உறுப்பினர்கள்
என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, முன்னுரிமை பகுதிகள்
குறித்து விவாதிக்கவுள்ளனர். கூட்டத்தின் முதல் நாளில்
ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கள்கள் துறை இணையமைச்சர்
ராவ் சாஹேப் தன்வே சிறப்புரை ஆற்றவுள்ளார்.

ஷாஹீன் பாக்கில் என்.ஐ.ஏ ச�ோதனை


கேரள மாநிலம், க�ோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கு
த�ொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கடந்த மே
11 அன்று பயங்கரவாதி ஷாருக் சைஃபி வசித்து வந்த டெல்லி
ஷாஹீன் பாக் பகுதியில் பல இடங்களில் ச�ோதனை நடத்தியது.
இந்த பயங்கரவாத செயலில் சைஃபி தானே செயல்பட்டதாகக்
கூறியிருந்தார். ஆனால் கேரள காவல்துறையின் சிறப்புப்
புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி), அவரது த�ொடர்புகளில் உள்ள
8
பலர், பல்வேறு மாநிலங்களின்
பயங்கரவாத எதிர்ப்புப்
படைகளின் (ஏ.டி.எஸ்) மற்றும்
என்.ஐ.ஏ கண்காணிப்பின் கீழ்
இருப்பதைக் கண்டறிந்தது.
மேலும், பயங்கரவாத செயலை
புரிவதற்கு ஷாருக் சைஃபிக்கு பல
vijayabharatham.org
கையாளுபவர்கள் மற்றும் உள்ளூர்
ஆதரவாளர்கள் இருந்திருப்பதற்காக ஆதாரங்கள் சிக்கின.
இதனையடுத்து ஷாருக் சைஃபி எதிராக உபா சட்டத்தின்
கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு
என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. எஸ்.ஐ.டியின் தலைவரான
கூடுதல் காவல்துறை இயக்குநர் எம்.ஆர் அஜித்குமார்,
பயங்கரவாதி ஷாருக் சைஃபி, மதப�ோதகர் ஜாகிர் நாயக்கால்
உந்துதல் பெற்றவர் என்று கூறியிருந்தார்.

ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி


நாட்டின் சுகாதார
உள்கட்டமைப்பை வலுப்படுத்து
வதும் ந�ோக்கிலும், பாரம்பரிய
மருத்துவத்தை முன்னிலைப்
படுத்தும் வகையிலும், மத்திய
சுகாதார அமைச்சகத்தின்
கீழுள்ள இந்திய மருத்துவ
vijayabharatham.org ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.
ஆர்) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையே ஒருங்கிணைந்த
மருத்துவத் துறையில் இணைந்து ஆய்வு செய்வதற்கான
ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அமைச்சர்கள் டாக்டர்
மன்சுக் மாண்டவியா, சர்பானந்தா ச�ோன�ோவால், டாக்டர் பாரதி
பிரவின் பவார் ஆகிய�ோர் முன்னிலையில், மத்திய ஆயுஷ்
அமைச்சகத்தின் செயலாளர்மற்றும் ஐ.சி.எம்.ஆர் செயலாளர்
ஆகிய�ோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தேசிய
அளவில் முக்கியத்துவம் அளிக்கவேண்டிய ந�ோய்களுக்கு
சிகிச்சையளிப்பதில், ப�ொது சுகாதார ஆராய்ச்சி முயற்சிகளில்
ஆயுஷ் அமைச்சகமும், ஐ.சி.எம்.ஆரும் இணைந்து
பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த
ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு
பகுதியாக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இடையே
ஒரு குழு உருவாக்கப்படும். இக்குழு காலாண்டுக்கு ஒருமுறை
கூடி ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்த
வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஆர்வமுள்ள
ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் மாநாடுகள், பட்டறைகள்,
கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்ட இந்த
முயற்சியைப் பாராட்டிய டாக்டர் மாண்டவியா, "பாரம்பரிய
அறிவை நவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுடன்
இணைத்து கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், அறிவியல்
சான்றுகளின் அடிப்படையில் ஆயுர்வேதம் தனக்கான
அடையாளத்தை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கும். நவீன
அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தேசிய முக்கியத்துவம்
வாய்ந்த ந�ோய்களுக்கான சிகிச்சை குறித்த ஆதாரங்களை
9
உருவாக்குவதற்காக ஒருங்கிணைந்த ஆராய்ச்சியை இந்த
ஒப்பந்தம் ஊக்குவிக்கும்” எனக் கூறினார். சர்பானந்தா
ச�ோன�ோவால் பேசுகையில், "இந்த ஒப்பந்தம் சான்றுகள்
அடிப்படையிலான ஆராய்ச்சியை வலுப்படுத்த உதவும். இரு
வேறு நிறுவனங்களின் பலம், வளங்கள் மற்றும் திறன்களை
ஒருங்கிணைப்பது நல்ல முடிவுகளைத் தரும்" என்றார்.

ம�ௌசம் கானின் லவ்ஜிஹாத்


ஹரியானாவில் உள்ள
நூஹ் நகரில் லவ் ஜிஹாத்
த�ொடர்பான புதிய வழக்கு
ஒன்று வெளிவந்துள்ளது, அங்கு
வசிக்கும் ஒரு ஹிந்து பெண்,
ம�ௌசம் கான் என்ற முஸ்லிம்
இளைஞரை ஏமாற்றுதல், கடத்தல்,
vijayabharatham.org கற்பழிப்பு, சித்திரவதை மற்றும்
கட்டாய மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டி காவல்துறையை
அணுகியுள்ளார். அவரது புகாரில், ஹரியானாவில் உள்ள ரேவாரி
மாவட்டத்தில் உள்ள தருஹேரா பகுதியில் பி.ஏ இரண்டாம்
ஆண்டு படித்து வரும் அவரை 2020ல் ம�ௌசம் கான் தனது
அடையாளத்தை மறைத்து பிரேம் என்ற ஹிந்து நபராக
காட்டிக்கொண்டு நட்பு க�ொண்டார். விலையுயர்ந்த பரிசுகளை
க�ொடுத்து, அவரது ப�ோலி காதல் வலையில் விழ வைத்தார்.
பிறகு, பாலியல் அத்துமீறல் செய்தார். பின்னர், ம�ௌசம் கான்,
ம�ௌசம் கானின் தந்தை தாஹிர் கான், மாமாக்கள் தசவ்வார்,
அக்பர், சுலைமான், தாஹிர் கானின் நண்பர் பாபுலால் ஆகிய�ோர்
அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில்
மதம் மாறி திருமணம் செய்ய வற்புறுத்தினார். இதற்கு அந்த
பெண் எதிர்ப்பு தெரிவித்தப�ோது, ம�ௌசம் கானின் சக�ோதரர்
சலீம் அந்த பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்து
பாலியல் பலாத்காரம் செய்தார். உறவினர்களால் ம�ோசமாகத்
தாக்கப்பட்டார். ஏப்ரல் 19, 2023 அன்று அந்த பெண் அங்கிருந்து
தப்பித்து ரேவாரியில் உள்ள தனது பெற்றோரிடம் திரும்பும்
வரை இந்த சித்திரவதை மூன்று ஆண்டுகளாகத் த�ொடர்ந்தது.
அவர் தன் தந்தையிடம் தனக்கு நேர்ந்த க�ொடுமையைப் பற்றி
கூறியதையடுத்து ம�ௌசம் கான் மீது புகார் அளிக்கப்பட்டது.
அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து
விசாரணையை த�ொடங்கியுள்ளனர்.

குத்துச்சண்டை வீரர்களுக்கு வாழ்த்து


தாஷ்கண்டில் நடந்த
ஆடவர் உலக குத்துச்சண்டை
சாம்பியன்ஷிப் ப�ோட்டியில்
முதல்முறையாக பதக்கம் வென்ற
தீபக் ப�ோரியா, ஹுசாமுதீன்,
நிஷாந்த் தேவ் ஆகிய�ோருக்கு
பிரதமர் நரேந்திர ம�ோடி வாழ்த்து
தெரிவித்துள்ளார். மத்திய vijayabharatham.org

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அனுராக்


சிங் தாக்கூரின் டுவிட்டர் பதிவைப் பகிர்ந்த பிரதமர், “தீபக்
10
ப�ோரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் ஆகிய�ோருக்கு
வாழ்த்துக்கள். அவர்களின் சாதனைகள் மிகவும் உத்வேகம்
அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.சி.பி சிங் பா.ஜ.கவில் இணைந்தார்


தன் மீது சுமத்தப்பட்ட
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து
விளக்கம் கேட்டதையடுத்து,
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.
டி.யு) கட்சியில் இருந்து விலகிய
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.
சி.பி சிங் என்ற ராமச்சந்திர பிரசாத்
vijayabharatham.org சிங், பா.ஜ.கவில் இணைந்தார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் அவர் முறைப்படி பா.ஜ.கவில் இணைந்தார்.
பா.ஜ.கவில் இணைந்த பிறகு, அவர் பீகார் முதல்வர் நிதிஷ்
குமார் மீது கடுமையான தாக்குதலைத் த�ொடுத்தார். நிதீஷ்
குமாரை மாறி மாறி வெவ்வேறு கட்சிகளுடன் சேரும் ஒருவர் என
ப�ொருள்படும் வகையில், 'பல்டி மார்' என அழைத்தார். நிதீஷ்
குமாருக்கு பீகார் நலனுக்காக உழைக்கும் ப�ொறுப்பு கிடைத்தது,
ஆனால் அவர் இப்போது என்ன செய்கிறார்? அவர் ஒரு நாள்
ஒடிசாவில் இருக்கிறார், மற்றொரு நாள் ஜார்கண்டில் இருக்கிறார்,
இப்போது அவர் மகாராஷ்டிராவில் இருக்கிறார். அவர் இப்போது
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி பேசுகிறார், ஆனால் அதில்,
ஒரு முக்கிய கேள்வி. உங்கள் தலைவர் யார்? தலைவர் இல்லாமல்
எதிர்க்கட்சி ஒற்றுமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? நிதீஷ்
குமார் தனது ஏழு பிறப்பிலும் பிரதமராக முடியாது" என்றார்.

காலிஸ்தானி பயங்கரவாதத்தின் அறிகுறி


லண்டனில் உள்ள பாரதத்
தூதரகம் மீது காலிஸ்தானி
பிரிவினைவாதிகள் நடத்திய
தாக்குதல் 'முற்றிலும்
தவறானவை' என்று கூறியுள்ள
பாரதத்துக்கான பிரிட்டன்
தூதர் அலெக்ஸ் எல்லிஸ்,
இந்த சூழல் எங்கள் நாட்டுக்கு vijayabharatham.org

ஏற்பட்டிருந்தால், லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்தின் மீதான


தாக்குதலுக்கு பாரத அரசும் மக்களும் எவ்வளவு க�ோபமாக
உள்ளார்கள�ோ அதே க�ோபத்தில் நானும் இருந்திருப்பேன்
என்று கூறியுள்ளார். டெல்லியில் உள்ள அனந்தா மையத்தில்
நடைபெற்ற இங்கிலாந்தின் ஒருங்கிணைந்த மறுஆய்வு
புதுப்பிப்பு பற்றிய சிந்தனைவாதிகள் நிகழ்வில் எல்லிஸ்
பேசுகையில், "பாரதத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான
உறவு இங்கிலாந்தின் இந்தோ பசிபிக் திட்டங்களுக்கும் அதன்
எதிர்கால வெளியுறவுக் க�ொள்கைக்கும் முற்றிலும் மையமானது.
பயங்கரவாத விவகாரத்தில் இரு நாடுகளும் கருத்து
வேறுபாடுகளை சமாளிக்கும் திறன் க�ொண்டவை. பாரதத்
தூதரகத்தில் நடந்தது முற்றிலும் சரியில்லை என்பதில் இரு
நாடுகளுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று நான்
11
நினைக்கிறேன். இந்த சம்பவம் ஒரு பிரச்சனையின் அறிகுறி,
குறிப்பாக காலிஸ்தானி பயங்கரவாதத்தின் அறிகுறி இது.
இது எந்த ஒரு குறிப்பிட்ட குழுவினருடனும் அல்ல. ஆனால்
ஒட்டும�ொத்தமாக எந்த நாட்டிற்கும் பயங்கரவாதம் ஆபத்தானது
தான். பயங்கரவாதப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான
இங்கிலாந்து அரசின் அணுகுமுறை தவறான தகவல்களைக்
கையாளுதல், மத நிறுவனங்களில் தீவிரமயமாக்கல் மற்றும்
பலவற்றை உள்ளடக்கியது. 2024 மற்றும் 2025ல் இரு நாடுகளும்
தேர்தல் சுழற்சிகளுக்குள் நுழைவதற்கு முன்பு, நெருக்கமான
பாரத இங்கிலாந்து உறவுகள் என்பதில் இரு நாடுகளும் கவனம்
க�ொள்வது மிகவும் அவசியம்" என்று குறிப்பிட்டார். இந்த
ஆண்டு மார்ச் 19 அன்று லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்தில்
நடந்த தாக்குதல் சம்பவத்தைத் த�ொடர்ந்து இங்கிலாந்து நாட்டு
தூதரின் முதல் ப�ொது அறிக்கை இதுவாகும்.

நிலக்கரி துறையில் ஆராய்ச்சி மேம்பாடு


கல்வி நிறுவனங்கள் மற்றும்
ஆராய்ச்சி அமைப்புகளிடமிருந்து
ஆராய்ச்சி ஆல�ோசனைகளை
மத்திய நிலக்கரி அமைச்சகம்
வரவேற்றுள்ளது. நிலத்தடியில்
சுரங்கம் த�ோண்டுதல்,
திறந்தவெளியில் கனிமங்கள்
vijayabharatham.org கண்டறிதல் ஆகியவற்றில்
உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான
நவீன த�ொழில்நுட்பம், நடைமுறைகள், பாதுகாப்பு, சுகாதாரம்,
சுற்றுச்சூழலில் மேம்பாடு, கழிவிலிருந்து செல்வம், நிலக்கரி
மற்றும் தூய நிலக்கரி த�ொழில்நுட்பங்களின் பயன்பாட்டிற்கான
மாற்று நிலக்கரி பலன் மற்றும் பயன்பாடு கண்டறிதல், புதிய
கண்டுபிடிப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்குதல் ப�ோன்று நிலக்கரித்
துறையில் முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள்
பற்றி ஆல�ோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான
வழிகாட்டு நெறிமுறைகள், படிவம், இணையதளம் வழியாக
சமர்ப்பித்தல் ஆகியவற்றை https://scienceandtech.cmpdi.
co.in என்ற இணையதளத்தில் பெறலாம். ஆல�ோசனைகளை
சமர்ப்பிக்க கடைசி தேதி 15.07.2023.

சீட் பெல்ட் அலாரம் விற்ற நிறுவனங்கள்


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
2019'ஐ மீறி சீட் பெல்ட் அலாரத்தை
நிறுத்தும் கிளிப்புகளை விற்பனை
செய்ததற்காக அமேசான்,
பிளிப்காட், ஸ்னாப்டீல்,
ஷாப்க்லூஸ், மீஷ�ோ ஆகிய
நிறுவனங்களுக்கு எதிராக
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு vijayabharatham.org

ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு


உரிமைகளை மீறி, நியாயமற்ற முறையில் வணிகம்
செய்ததற்காக, இந்த உத்தரவை ஆணையத்தின் தலைமை
ஆணையர் பிறப்பித்துள்ளார். ப�ொதுவாக கார்களில் பயணம்
12
செய்யும் ப�ோது ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் சீட் பெல்ட்
அணிய வேண்டியது மத்திய ம�ோட்டார் வாகன விதி 1989ன் படி
கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. காரில் பயணம் செய்வோர், சீட்
பெல்ட் அணிய தவறும் பட்சத்தில் அதில் ப�ொருத்தப்பட்டுள்ள
அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். ஆனால் இந்த அலார
எச்சரிக்கையை தங்களுக்கு த�ொந்தரவாக கருதும் பயணிகளை
ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய நிறுவனங்கள், சீட் பெல்ட்
அலாரத்தை நிறுத்தும் 13,118 கிளிப்புகளை இதுவரை விற்பனை
செய்துள்ளன. இதனை வாங்கி பயன்படுத்தியவர்கள் பலர்
விபத்துகளில் சிக்கியுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்த விபத்துகளில்
உயிரிழந்தவர்களுக்கு சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும்
கிளிப்புகளை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு
வழங்க மறுத்துள்ளன.
இதன் அடிப்படையில்
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு
ஆணையத்திற்கு வந்த
புகார்களை கருத்தில் க�ொண்டு
தற்போது ஆணையம்
நடவடிக்கை எடுத்துள்ளது.
சாலை ப�ோக்குவரத்து மற்றும்
நெ டு ஞ ்சா ல ை த் து றை vijayabharatham.org

அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,


கடந்த 2021ம் ஆண்டு 16,000த்திற்கும் மேற்பட்டோர் சீட்
பெல்ட் அணியாத காரணத்தினால் சாலை விபத்துகளில் சிக்கி
உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8,438
ஓட்டுநர்களும், 7,959 பயணிகளும் அடங்குவர். 39,231 பேர்
காயமடைந்துள்ளனர். அவர்களில் 16,416 பேர் ஓட்டுநர்கள்.
சாலை விபத்தில் சிக்கியவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர்
18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சீட் பெல்ட்
அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை தயாரித்த உற்பத்தியாளர்கள்
மீது நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

எஸ்.சி.ஓ ஸ்டார்ட் அப் மன்றம் 2023


ஸ்டார்ட் அப் குறித்து மெய்நிகர்
பயன்முறையில் ஏற்கனவே
இரண்டு வெற்றிகரமான
நிகழ்வுகளை நடத்திய பிறகு,
ஸ்டார்ட் அப் இந்தியாவும்,
மத்திய வர்த்தக அமைச்சகமும்
மூன்றாவது நிகழ்வை டெல்லியில்
vijayabharatham.org சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய்
ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்.சி.ஓ) ஸ்டார்ட் அப் மன்றம்
மூலம் முதன்முதலில் நேரடியாக ஏற்பாடு செய்தது. அரசு
அதிகாரிகள், தனியார் த�ொழில்துறையினர், ஸ்டார்ட் அப்களின்
பிரதிநிதிகள் என ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு
உறுப்பு நாடுகளிலிருந்து பலர் கலந்துக�ொண்டனர்.
மத்திய இணையமைச்சர் ச�ோம் பிரகாஷ், ஒரு நாட்டின்
ப�ொருளாதாரத்தை உயர்த்துவதில் ஸ்டார்ட் அப்களின் பங்கை
13
எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். மேலும், 'ஸ்டார்ட் அப்
சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் இருதரப்பு மற்றும்
பலதரப்பு ஒத்துழைப்பின் பங்கு' என்ற தலைப்பில் ஸ்டார்ட்
அப் இந்தியா நடத்திய பயிலரங்கில் பல்வேறு பிரதிநிதிகள்
கலந்து க�ொண்டனர். நாடுகளுக்கிடையில் நெருக்கமான
உறவுகளை வளர்ப்பது குறித்தும், எஸ்.சி.ஓ நாடுகளில்
ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது குறித்தும் இதில்
விவாதிக்கப்பட்டது. எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகளுக்காக ஸ்டார்ட்
அப் இந்தியா பல்வேறு முயற்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
டெல்லி ஐ.ஐ.டியில் உள்ள புத்தாக்கம் மற்றும் த�ொழில்நுட்ப
பரிமாற்றத்திற்கான அறக்கட்டளையைப் பார்வையிட்டனர். எஸ்.
சி.ஓ பிரதிநிதிகள், இந்த சுற்றுப்பயணத்தின் ப�ோது, பாரதத்தின்
த�ொழில்முனைவ�ோர் குறித்து அறிந்து க�ொண்டத�ோடு,
பாரதத்தில் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான
வாய்ப்புகளையும் தெரிந்து க�ொண்டனர்.

கடற்படைக் கப்பல்கள் கம்போடியா பயணம்


இந்தியக் கடற்படைக்
கப்பல்களின் ஆசிய
நாடுகளுக்கான பயணத்தின் ஒரு
பகுதியாக, கிழக்குப் பிராந்திய
கடற்படைத் தலைமை அதிகாரி
ரியர் அட்மிரல் குர்சரண்
சிங் தலைமையில் இந்தியக்
vijayabharatham.org கடற்படை கப்பல்களான
ஐ.என்.எஸ் டெல்லி மற்றும் ஐ.என்.எஸ் சத்புரா ஆகியவை
மே 11 முதல் 14 வரை கம்போடியாவின் சிஹன�ோக்வில்லே
துறைமுகத்திற்கு பயணிக்கின்றன. கம்போடியா நாட்டுடனான
பாரதத்தின் சுமுகமான உறவை எடுத்துரைக்கும் வகையில்
இந்தப் பயணம் அமைந்துள்ளது. பாரத ப�ோர் கப்பல்கள்
கம்போடியாவில் தங்கியிருக்கும் ப�ோது, பரஸ்பர புரிதல் மற்றும்
இயங்குதன்மையை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளின்
கடற்படை வீரர்களும் பணி சார்ந்த கலந்துரையாடல்கள்,
விளையாட்டுகள் ப�ோன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஐ.என்.
எஸ் டெல்லி, ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை
ப�ொருந்திய பாரதத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் ஆகும்.
ஐ.என்.எஸ் சத்புரா, எதிரிகளை மறைந்திருந்து தாக்கக்கூடிய
வகையில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கப்பல்.
பாரதத்தின் மேம்பட்ட கப்பல் வடிவமைப்பு மற்றும் கப்பல்கட்டும்
திறன்களுக்கு இவை சிறந்த உதாரணமாக விளங்குகின்றன.

பயங்கரவாதிகளை பாதுகாக்கும் சீனா


பயங்கரவாதத்தின் மீதான இடதுசாரிகளின்
பாசாங்குத்தனத்தின் மற்றொரு உதாரணமாக, பாகிஸ்தானை
சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின்
தளபதி அப்துல் ரவூப் அசாரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்
(UNSC) பயங்கரவாதியாக பட்டியலிட்டதை சீனா தனது
அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளது. இதன் மூலம்,
பாரதத்தின் மீதான வெறுப்பை சீனா மீண்டும் ஒருமுறை
வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஐ.நா பாதுகாப்பு
14
கவுன்சில் 1,267 தடைகள் கமிட்டியில் அப்துல் ரவூப்
அசாரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக பட்டியலிட,
அமெரிக்காவின் அனுசரணையுடன் பாரதத்தால் இந்த
முன்மொழிவு வைக்கப்பட்டது. இதனை சீனா நிறுத்தி
வைத்துள்ளது. இப்போது, பாரதம் மீண்டும் ஒரு புதிய
முன்மொழிவை பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில்
வைப்பது மட்டுமே அதற்குள்ள ஒரே வழி. முன்னதாக, ஜெய்ஷ்
இ முகமது பயங்கரவாதக் குழுவின் துணைத் தலைவரும், அதன்
நிறுவனர் மசூத் அசாரின் இளைய சக�ோதரருமான அப்துல் ரவூப்
அசார், 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தியது,
பாரத நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், 2001, மற்றும் 2016ல்
பாரத விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் உட்பட பல
பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக அறியப்பட்டவர்.
பாரதத்தால் மிகவும் தேடப்படும் நபர்களில் இவரும் ஒருவர்.
பாரதமும் அமெரிக்காவும் அசாரை
சர்வதேச பயங்கரவாதியாக
அறிவிக்கவும், உலகளாவிய
பயணத் தடை மற்றும் அவரது
ச�ொத்துக்கள் முடக்கம் செய்யப்பட
வேண்டும் என்றும் விரும்பின.
பயங்கரவாதிகளின் தயகமான
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை vijayabharatham.org

ஐ.நாவின் தடை பட்டியலில் இருந்து பாதுகாப்பது சீனாவின்


வழக்கம். இப்படி, சீனா பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஐ.நாவில்
பாதுகாத்த சம்பவம் குறைந்தது 4 முறை நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்
டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தானை தளமாகக் க�ொண்ட
பயங்கரவாதக் குழுவை ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில்
பட்டியலிடுவதற்கு சீனா தடையாக இருப்பதாக விமர்சித்தார்.
பாதுகாப்பு கவுன்சில் ஒரு தெளிவான மற்றும் வலிமையான
செய்தியை உலகுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தினார். மேலும் ப�ொறுப்பைத் தவிர்க்கவ�ோ அல்லது
தண்டனையிலிருந்து விடுபடுவதை செயல்படுத்தவ�ோ
அரசியல் பரிசீலனைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும்
வலியுறுத்தினார். சீனாவைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடாமல்,
இதுப�ோன்ற அரசியல் காரணங்களால் உலகின் மிகவும் ம�ோசமான
பயங்கரவாதிகள் மீதான தடைகளுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
அனுமதி வழங்கத் தவறிவிட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களுக்கு சம்பள உயர்வில்லை


மைக்ரோசாப்ட் இந்த
ஆண்டு ஊழியர்களுக்கான
சம்பளம் உயர்த்தப்படாது
என தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன்
தனது ஊழியர்களுக்கு வழங்கும்
ப�ோனஸ் மற்றும் பங்கு
vijayabharatham.org விருதுகளுக்கான பட்ஜெட்டை
கணிசமாகக் குறைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தனது
முழுநேர ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்காது
என்று அதன் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லாவின் உள்
15
மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்சைடர் அறிக்கை
தெரிவிக்கிறது. க�ொந்தளிப்பான உலகப் ப�ொருளாதாரம் மற்றும்
மந்தமான வளர்ச்சிக்கு மத்தியில், மைக்ரோசாப்ட் ஜனவரி மாதம்
10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இது த�ொழில்நுட்பத் துறையில் பல்லாயிரக்கணக்கான
வேலை இழப்புகளுக்கு வழி வகுத்தது. மைக்ரோசாப்ட்
இப்போது உருவாக்கி வரும் செயற்கை நுண்ணறிவு
(ஏ.ஐ) த�ொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. இது
த�ொழில்துறையால் தற்போது மிக நம்பிக்கைக்குரிய துறையாக
பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓப்பன் ஏ.ஐயின்
செயற்கை நுண்ணறிவு த�ொழில்நுட்பத்தை அதன் அலுவலக
தயாரிப்புகள் மற்றும் 'பிங்' தேடுப�ொறி ஆகியவற்றில் இணைத்து
வருகிறது. சாட் ஜி.பி.டியின் தயாரிப்பாளரான ஓப்பன் ஏ.ஐ
நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து கணிசமான
நிதி ஆதரவைப் பெற்றுள்ளது நினைவு கூரத்தக்கது.

சீனாவின் சீரற்ற ப�ொருளாதார மீட்சி


சீனா கடந்த மாதம்
இறக்குமதி அளவிலும்,
ஏற்றுமதியில் எதிர்பார்த்ததை
விட மெதுவான வளர்ச்சியிலும்
குறிப்பிடத்தக்க சரிவை
சந்தித்துள்ளது. மிகக் கடுமையான
மூன்று வருட க�ொர�ோனா
vijayabharatham.org கட்டுப்பாடுகளுக்குப் பிறகு
அந்நாட்டின் ப�ொருளாதார மீட்சி கவலைகளை எழுப்பியது
என புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வின்படின்
கடந்த ஏப்ரல் மாதத்தில் சீன இறக்குமதி கடந்த ஆண்டை விட
7.9 சதவீதம் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் வியக்கத்தக்க
வகையில் அதிகரிப்பு இருந்தப�ோதிலும், முந்தைய ஆண்டை
விட ஏப்ரலில் ஏற்றுமதி 8.5 சதவீதம் வளர்ந்துள்ளது, 2020ல்
குறைந்த அடித்தளத்தால் இந்த ஊக்கம் பாதிக்கப்படலாம்.
சீனாவின் கலப்பு வர்த்தக தரவு, க�ொர�ோனா வைரஸ் எதிர்ப்பு
விதிகள் காரணமாக மூடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
அதன் ப�ொருளாதாரம் பற்றிய தடயங்களுக்காக உன்னிப்பாகக்
கவனிக்கப்பட்டது. முதல் காலாண்டில் ம�ொத்த உள்நாட்டு
உற்பத்தி 4.5 சதவீதம் வளர்ந்தது. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு
ஏற்றுமதிகள் அதிகரித்தன, மேலும் விடுமுறை சுற்றுலா முதல்
முறையாக த�ொற்றுந�ோய்க்கு முந்தைய நிலைகளை எட்டியது.
த�ொழிற்சாலை நடவடிக்கைகளில் சிறிது மீட்சி ஏற்பட்டாலும்,
உலகளாவிய தேவை குறைவதால் முழுமையடையாத
ப�ொருளாதார மீட்சி சந்தேகமே என தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஏப்ரலில் ஏற்றுமதி அளவுகள் முந்தைய
மாதத்துடன் ஒப்பிடும்போது 4.4 சதவீதம் சரிந்துள்ளது என்று
மூலதனப் ப�ொருளாதாரம் கூறுகிறது. ஹாங்காங்கில் ஹாங்
செங் சைனா எண்டர்பிரைசஸ் குறியீடு 2.1 சதவீதம் சரிவை
சந்தித்துள்ளது. சீனப் ப�ொருட்களுக்கு உலகளாவிய தேவை
பலவீனமாக உள்ளது என்று ப�ொருளாதார நிபுணர் ஜிச்சுன்
ஹுவாங் கூறியுள்ளார். க�ௌட்டாய் ஜனூன் இன்டர்நேஷனல்
நிறுவனத்தின் தலைமைப் ப�ொருளாதார நிபுணர், ஹவ் ஜ�ோ,
வர்த்தகம் மற்றும் இறக்குமதித் தரவுகள் சற்றே தாழ்ந்துள்ளதாக
விவரித்தார்.
16
கலிப�ோர்னியாவில் ஜாதி பாகுபாடு மச�ோதா நிறைவேற்றம்
அ மெ ரி க்கா வின்
கலிப�ோர்னியா மாகாண செனட்
சபை, ஜாதி பாகுபாடு மச�ோதாவை
வெற்றிகரமாக நிறைவேற்றியது.
கலிப�ோர்னியா செனட் நீதித்துறை
குழு ஏப்ரலில் இந்த மச�ோதாவை
ஒருமனதாக நிறைவேற்றிய சில
vijayabharatham.org வாரங்களுக்குப் பிறகு இந்த
முக்கிய மச�ோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதன் மூலம், கலிப�ோர்னியா அதன் ஜாதி பாகுபாடு எதிர்ப்புச்
சட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வகையாக ஜாதிகளை சேர்த்த
முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிஃப�ோர்னியா மாகாண செனட்டர் ஆயிஷா
வஹாப் அறிமுகப்படுத்திய எஸ்.பி 403 என்ற ஜாதி பாகுபாடு
மச�ோதா, தற்போதுள்ள சட்டமான Unruh சிவில் உரிமைகள்
சட்டத்தில் ஜாதியை ஒரு பாதுகாக்கப்பட்ட வகையாக
சேர்க்கிறது. இதன் மூலம், கலிப�ோர்னியா மாநிலத்தில் உள்ள
அனைத்து மக்களுக்கும் முழு மற்றும் சமமான இடவசதிகள்,
நன்மைகள், சலுகைகள் ஆகியவை கிடைக்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்.பி 403 சட்டம், ஜாதிய
சார்பு மற்றும் தப்பெண்ணம் காரணமாக அமைப்பு ரீதியாக
பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான பாதுகாப்பை
வழங்குகிறது. ஜாதி பாகுபாடு மற்றும் ஜாதி அடிப்படையிலான
வன்முறை பாதிப்புகளைத் தவிர்க்க உறுதியான சட்டரீதியான
பாதுகாப்பையும் வழங்குகிறது. தலைமுறை தலைமுறையாக
ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிராக ப�ோராடி வரும்
சமூகங்களுக்கு இது ஒரு வரலாற்று தருணம். இந்த ஆண்டின்
த�ொடக்கத்தில் ஜாதியப் பாகுபாட்டைத் தடைசெய்யும்
சியாட்டில் நகர சபையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் மற்றும்
கலிப�ோர்னியா ஜனநாயகக் கட்சி, கலிப�ோர்னியா ஸ்டேட்
யுனிவர்சிட்டி அமைப்பு, ஆல்பாபெட் த�ொழிலாளர்கள் சங்கம்,
ஆப்பிள், சிஸ்கோ மற்றும் பல த�ொழில்நுட்ப ஜாம்பவான்களால்
நிறைவேற்றப்பட்ட ஜாதியை பாதுகாக்கப்பட்ட பிரிவாகக்
குறிப்பிடும் தீர்மானங்களை இது பின்பற்றுகிறது.

ஆப்கனை வளைக்கும் சீனா


பாதுகாப்புவாதம், பனிப்போர்
மனப்பான்மை, மேலாதிக்கம்
மற்றும் அதிகார அரசியல்
ஆகியவற்றின் மீள் எழுச்சியை
உள்ளடக்கிய பல நெருக்கடிகள்
மற்றும் சவால்களை உலகம்
எதிர்கொள்கிறது. எஸ்சி.ஓ
vijayabharatham.org உறுப்பு நாடுகளை அவற்றின்
சுதந்திரத்தை நிலைநிறுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை
ஆழப்படுத்தவும் வேண்டும் என்று சீனா சமீபத்திய ஷாங்காய்
ஒத்துழைப்பு மாநாட்டின் (எஸ்.சி.ஓ) வெளியுறவு அமைச்சர்கள்
கூட்டத்தில் உலகை எச்சரித்தது. சீனா, தலிபான்கள் ஆளும்
ஆப்கானிஸ்தானை அதன் புதிய வள பிராந்தியமாக பார்க்கத்
17
துவங்கியுள்ள சூழலில், இது சீனாவின் மிகப்பெரிய துல்லியமான
திட்டமாகவேத் தெரிகிறது என அரசியல் ந�ோக்கர்கள்
கருதுகின்றனர். வெளிப்படையான சர்வ தேசியத்தின்
சிறப்புகளை சீனா புகழ்ந்து க�ொண்டிருக்கும் அதே சமயத்தில்,
ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்தும் தலிபான்கள்ளுடன்
பேச்சுவார்த்தை நடத்தி அதன் பெல்ட் அண்ட் ர�ோடு
முன்முயற்சியை ஆப்கானிஸ்தானுக்கும் நீட்டிக்க ஒப்புக்கொள்ள
வைத்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குய்ன் காங் மற்றும்
பாகிஸ்தான் பிரதமர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி ஆகிய�ோர்
இஸ்லாமாபாத்தில் சந்தித்து, ஆப்கனில் 60 பில்லியன் டாலர்கள்
முதலீட்டில் சீனா பாகிஸ்தான் ப�ொருளாதார வழித்தடத்தை
நீட்டிப்பது குறித்து பேசினர். இந்த செயல்பாட்டில்
இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்தனர். பணப்
பற்றாக்குறையில் உள்ள தலிபான் அரசு, இத்திட்டத்தில்
பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், மிகவும் தேவையான
உள்கட்டமைப்பு முதலீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பை
வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து
தலிபானின் உயர்மட்ட தூதர் அமீர் கான் முட்டாகி, தனது சீன
மற்றும் பாகிஸ்தான் தூதர்களை சந்திக்க இஸ்லாமாபாத்திற்குச்
சென்று பேசி இதில் ஒரு உடன்பாட்டை எட்டினார். ஒரு
டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட ஆப்கன் நாட்டின்
வளமான வளங்களில் முதலீடுகளை அதிகரிக்க சீனாவிற்கு
தலிபான்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். முன்னதாக, சீனா
நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் துணை நிறுவனம்
ஆப்கனின் வடக்கு அமு தர்யா படுகையில் இருந்து எண்ணெய்
எடுப்பதற்கான முதல் ஒப்பந்தத்தை சீன அரசு கடந்த ஜனவரி
மாதம் செய்துக�ொண்டது நினைவு கூரத்தக்கது.

கதறும் பாகிஸ்தானியர்கள்
பாகிஸ்தானில் முன்னாள்
பிரதமர் இம்ரான் கான் கைது
செய்யப்பட்டதை அடுத்து
அங்கு நாடு முழுவதும்
இம்ரான் கான் ஆதரவாளர்கள்
ப�ோராட்டங்களில் ஈடுபட்டு
வருகின்றனர். ராணுவ
vijayabharatham.org தலைமையகம், ஐ.எஸ்.ஐ
தலைமையகம், ராணுவ கண்டோன்மென்டுகள் என அனைத்து
இடங்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான்
ராணுவ வீரர்கள் மீது ப�ொதுமக்கள் தாக்குதல் நடத்தி
வருகின்றனர். மீண்டும் ஒரு ராணுவப் புரட்சிய�ோ என்று
சந்தேகிக்கும் அளவிற்கு நிலைமை சென்று க�ொண்டிருக்கிறது.
ப�ோராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல்கள்
நடத்தியதில் ப�ொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 150 விமானங்களில் நாட்டின்
முக்கிய புள்ளிகள் பலர் நாட்டை விட்டு வெளியேறியதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான்
ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பிடம் இருந்து
தங்களுக்கு விடுதலை வேண்டும் என பாகிஸ்தானியர்கள்
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ப�ோராட்டம்
நடத்தினர்.
18
கார்டூன் கார்னர்

19

You might also like