You are on page 1of 6

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் அறிக்கை

2022-2023 கல்வியாண்டு

09.03.2023 முதல் 15.03.2023 வரை


தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம்

திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் நாட்டு

நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 09.03.2023 முதல் 15.03.2023 வரை

நடைபெற்றது. கரைப்புதூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட

உப்பிலிபாளையம், கரைப்புதூர் மற்றும் செந்தூரன் காலனி ஆகிய

ஊர்களின் நாட்டு நலப்பணித் திட்ட களப்பணிகள் நடைபெற்றன.

எல் ஆர் ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர்

முனைவர் எழிலி அவர்கள் முகாம் அமைப்பாளராகவும், அழகு I, II,

III- ன் திட்ட அலுவலர்களாக முனைவர் ப.சுமதி, முனைவர் செ.சுதா

மற்றும் முனைவர் மா.சிவமணி ஆகியோருடன் 150 மாணவியர்


கொண்ட குழு இந்த நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

பணிகளில் செயலாற்றினர்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் முதல் நாளான 09.03.23

அன்று காலை 9.30 மணியளவில் மாணவிகள் முகாமிற்கு வந்து

சேர்ந்தனர். மதியம் இரண்டு மணி அளவில் கரைப்புதூர் ஊராட்சி

சமுதாயக்கூடத்தில் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் எல்

ஆர் ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் எழிலி, நாட்டு

நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் செ.சுதா, முனைவர்

ப.சுமதி முனைவர் மா.சிவமணி மற்றும் கரைப்புதூர் ஊராட்சி

தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் துவக்க

விழாவினைச் சிறப்பிக்க, விழாவின் நிகழ்ச்சிகள் இனிதே

நடைபெற்றன, பின்னர் நலப்பணித்திட்ட மாணவிகள் சிறு சிறு

குழுக்களாக பிரிக்கப்பட்டு நலப்பணித்திட்ட பணிகள் பகிர்ந்து

அளிக்கப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் இரண்டாம்

நாளான 10.03.2023 அன்று காலை 9:30 மணி அளவில்

உப்பிலிபாளையம் பள்ளி வளாகம் சுத்தம் செய்யும் பணி

நடைபெற்றது. பிற்பகல் 2:30 மணி காளி நாதம் பாளையம் அரசு

உயர்நிலைப்பள்ளி வளாகம் முன் சுத்தம் செய்யும் பணி

நடைபெற்றது பின்னர் களப்பணிகளான மழை நீர் சேகரிப்பு மற்றும்

சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.


நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாளான

11.3.2023 அன்று காலை 9. 30 மணி அளவில் கரைப்புதூர் ஊராட்சி,

காளிநாதம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்

லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் சிறப்பு கண் மருத்துவ

முகாம் நடைபெற்றது. இதனை கண் மருத்துவர் டாக்டர் எல்

சீனிவாசன் இனிதே துவக்கி வைத்தார். இதனை கரைப்புதூர்

ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

என கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ்

மற்றும் நலப்பணித்திட்ட மாணவிகள் சிறு சிறு குழுக்களாக வடு


வடாகச்
ீ சென்று நோட்டீஸ் கொடுத்தும், முதியவர்கள் முகாமிற்குச்

செல்லவும் உதவினார்கள்.

பிற்பகல் 2:30 மணி அளவில் பிற களப்பணிகளான மதுவிலக்கு

விழிப்புணர்வு பெண்கள் மற்றும் குழந்தை ஆரோக்கியம்

விழிப்புணர்வு பிரச்சாரம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள்

மூலம் சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர்

கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பாக பெண்

கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேரணி நடந்தது. அருள்புரம்

பஸ் நிலையத்தில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை பேரணி

நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நான்காம் நாளான

12.03 2023 அன்று காலை 9.30 மணி அளவில் கரைப்புதூர்


ஊராட்சிக்குட்பட்ட செந்தூர் காலனியில் மரம் நடுதல் நாட்டு

நலப்பணி திட்டம் கரைப்புதூர் ஊராட்சி தலைவர் திருமதி ஜெயந்தி

கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான நொச்சி

பாளையம் மற்றும் பாரியூர் அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள

நெகிழி கழிவுகளை நீக்கும் பணியில் நாட்டு நலப்பணித் திட்ட

மாணவிகள் கலந்து கொண்டு நெகிழிப் பொருட்களை சேகரித்து

அப்புறப்படுத்தினர் மேலும் நொச்சி பாளையம் கருப்பராயன்

கோவிலையும் சுத்தப்படுத்தினர்.

நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் ஐந்தாம் நாளான 13.03.2023

அன்று காலை 9:30 மணி அளவில் ஆரோக்கியமே செல்வம் பொது

மருத்துவ முகாம் உப்பிலிபாளையம் மற்றும் செந்தூர் காலனியில்

பத்ம சூர்யா மற்றும் திவ்யபாரதி மருத்துவமனை மருத்துவ முகாம்

பணிகள் சிறப்பாக நடைபெற்று கிராம மக்கள் பயன்பெற்றனர்.

முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் வடுகள்


ீ தோறும்

சென்று மருத்துவ முகாம் பற்றிய நோட்டீஸ்களை வழங்கி

விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

உப்பிலிபாளையம் சமுதாய கூடத்தில் உடல் ஆரோக்கியம்

மற்றும் அன்றாட வாழ்வியல் என்ற தலைப்பில் பத்ம சூர்யா

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவமனையின் டாக்டர்

நிவேதா, தலைமை மருத்துவர் உரையாற்றினர்.


பிற்பகல் 2 மணி அளவில் நாட்டு நலப்பணித்திட்ட

மாணவியர்கள் மூலம் செந்தூர் காலனியில் களப்பணிகளான

பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து அதனை உரிய முறையில்

அகற்றும் பணி இனிதே நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஆறாம் நாளான 14.03.2023

அன்று காலை 9:30 மணி அளவில் எல். ஆர். ஜி அரசு மகளிர்

கலைக் கல்லூரியின் நூலகர் முனைவர் ஆர் அனுராதா வாசிப்பு

பழக்கத்தை பேணுதல் பற்றிய பயிற்சியினை உப்பிலிபாளையம்

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே திறம்பட நடத்தி

சிறப்பித்தார். பிற்பகல் 2 மணி அளவில் நாட்டு நலப்பணித் திட்ட

மாணவியர்கள் சுமார் 150 பேர் பங்குபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு

பிரச்சார களப்பணிகள் செந்தூர் காலனியில் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஏழாம் நாளான 15.03.2023 அன்று

காலை 9.30 மணி அளவில் ஆரோக்கியமே செல்வம் என்ற சிறப்பு

முகாமையினை எல் ஆர் ஜி அரசு மகளிர் அரசு மகளிர் கலைக்

கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் ஊட்டசத்தியியல்

துறையினைச் சேர்ந்த உதவி பேராசிரியர் முனைவர் கோ சுபா

அவர்கள் உப்பிலிபாளையம் ஊர் மக்கள் முன்னிலையில் உணவு

மற்றும் ஊட்டச்சத்தின் அவசியத்தினை இனிதாக விளக்கி

முகாமினை திறம்பட சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சிறுதானிய

உணவு தயாரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து செய்முறை

விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.


சிறப்பு முகாம் நிறைவு விழா நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு

முகாமின் இறுதி நாளான 15.03.2023 அன்று பிற்பகல் 2 மணி

அளவில் கரைப்புதூர் ஊராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது

இதனில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பா.சுமதி

வரவேற்புரை நிகழ்த்தினார் இந்த விழாவில் ஒருங்கிணைப்பாளர்

சிறப்புரையாற்றினார். நிறைவு விழாவில் திருப்பூர் எல். ஆர். ஜி

அரசு மகளிர் கலைக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மற்றும்

கரைப்புதூர் ஊராட்சி தலைவர் திருமதி ஜெயந்தி கோவிந்தராஜ்

அவர்களும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள். நாட்டு நலப்பணித்

திட்ட அலுவலர் முனைவர் செ. சுதா அவர்கள் நாட்டு நலப்பணித்

திட்ட சிறப்பு முகாமின் அறிக்கையினை வாசித்தார். இறுதியாக

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் மா சிவமணி

அவர்கள் நன்றியுரை கூறினார்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முதல்வர்

You might also like