You are on page 1of 1

நாளை செப்டம்பர் 23 ஆம் நாள் ஜோகூர், உலு திராம் வட்டாரத்தில்

உள்ள தாமான் பெலாங்கி இண்டா பொது மண்டபத்தில் KARNIVAL


KESIHATAN BANGSA JOHOR 2023 சுகாதார முகாம் நடைபெற உள்ளது.

காலை 8.00 மணி அளவில் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில்


சுகாதாரப் பரிசோதனை, மனநல பரிசோதனை, முழங்கால் ULTRASOUND
பரிசோதனை, கண், காது. மூக்கு, தொண்டை பரிசோதனை ஆகிய
அங்கங்கள் ஏற்பாடு செய்யப்படுகிற்து.

மேலும், இரத்த தானம், ZUMBA பயிற்சி, சுகாதார விளக்கவுரைகள்,


தகவல் முகப்புகள், சுகாதாரக் கண்காட்சிகள் போன்ற நடவடிக்கைகள்,
மாலை 5.00 மணி வரை பொது மக்களுக்காக ஏற்பாடு
செய்யப்படுகிறது.

PERUBATAN MADANI இலவச மருத்துவ சிகிச்சை, PEKA B 40 போன்ற


அரசாங்கத்தின் மக்கள் நலன் திட்டங்கள் குறித்தும் இந்நிகழ்ச்சியில்
விளக்கம் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை பிகேஆர் கட்சியின் தெப்ராவ் கிளை, POLIKLINIK


TIRAM, JEIWA சமூக நல அமைப்பு ஆகியோர் இணைந்து ஏற்பாடு
செய்கின்றனர்.

ஜொகூர் மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஜொகூர் சுகாதார முகாமில்


அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் உடல் நலத்தை
இலவசமாகச் சோதித்துக் கொள்ள ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்
கொண்டுள்ளனர்.

You might also like