You are on page 1of 3

விளையாட்டுச் செய்திகள் 29-10-2021 வெள்ளிக்கிழமை

1. சுக்மா
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்த மலேசிய விளையாட்டுப் போட்டியான
சுக்மா – ஜோகூர் 2020, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை இளைஞர் விளையாட்டு அமைச்சர் Datuk Seri Ahmad Faizal Azumu
தலைமையேற்ற சுக்மா உயர்மட்ட ஏற்பாட்டுக் குழு சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு கோலாலம்பூரில் சுக்மா – பாரா சுக்மா போட்டியை தேசிய விளையாட்டு
மன்றம் MSN ஏற்பாடு செய்ய அந்தக் குழு வழி செய்துள்ளது.

அவ்விரு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் தேதி குறித்து MSN பரிந்துரைக்கும் எனவும் அதனை
சுக்மா – பாரா சுக்மா உயர்மட்ட ஏற்பாட்டுக் குழு உறுதிப்படுத்தும் என Datuk Seri Ahmad Faizal
Azumu சொன்னார்.
இந்தத் திட்டத்தை இளைஞர் விளையாட்டு அமைச்சு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும்
அவர் சொன்னார்.

2. பூப்பந்து
நாட்டின் முதன்மை பூப்பந்து இரட்டையர் Aaron Chia-Soh Wooi Yik இணையினர் பிரான்சு பொதுப்
பூப்பந்து போட்டியில் Thailand இன், Supak Jomkoh-Kittinupong Kedren இணையினரை வெறும்
27 நிமிடங்களில் 21-12, 21-12 நேர் செட்களில் வீழ்த்தினர்.
கால் இறுதிக்கு முன்னேறும் Aaron-Wooi Yik di இணையினர், இந்தியாவின் Satwiksairaj
Rankireddy-Chirag Shetty யைச் சந்திக்கவுள்ளனர்.
மலேசியாவின் Ong Yew Sin-Teo Ee Yi மற்றோர் இணையினர் இங்கிலாந்தின் Callum Hemming-
Steven Stallwood 21-8, 21-8 நேர் செட்களில் வீழ்த்தி மற்றொரு காலிறுதிச் சுற்றுக்கு
முன்னேறியுள்ளனர்.

அதே சமயத்தில், இந்தோனேசியாவின் Yew Sin-Ee Yi இணையினரை மலேசியாவின் Yew Sin-Ee Yi


எதிர்கொள்ள இருக்கிறார்கள். அரையிறுதி சுற்றுக்குப் போட்டியிடும் இரு அணியினருக்கும் கடுமையாக
இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3. காற்பந்து – 2022 B – 23 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்று


2022 B – 23 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் J குழு நிலையிலான ஆட்டத்தில் மங்கோலியாவைச் சந்தித்த
மலேசியாவின் B-22 அணி 1-0 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
மலேசியாவின் அந்த வெற்றி கோலை Muhammad Nur Azfar Fikri Azhar ஆட்டத்தின் 40 வது
நிமிடத்தில் புகுத்தினார்.

இதனால் மலேசியா 6 புள்ளிகள் பெற்ற நிலையில் தாய்லாந்து 8 புள்ளிகள் பெற்று முன்னணியில் உள்ளது.

கடந்தத் திங்கட் கிழமையன்று நடந்த ஆட்டத்தில் Laos ஐச் சந்தித்த மலேசியா 1-0 எனும் கோல்
எண்ணிக்கையில் வென்ற மலேசியா, அடுத்ததாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தாய்லாந்து அணியைச்
சந்திக்க உள்ளது.

4. மலேசியப் பொதுப் பூப்பந்து போட்டி


அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் ஏற்பாட்டில் நடத்தப்படும் மலேசியப் பொதுப் பூப்பந்து போட்டி
இவ்வாண்டுடன் தொடர்ந்து 2 ஆண்டுகள் இரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனுடன் 'Jelajah Dunia Super 750 போட்டியும் இரத்து செய்யப்படுவதாக அந்த சம்மேளனம்
சொன்னது.

மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகளின் கால அட்டவணையை அந்த அமைப்பின்


இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மே மாதம் 2021 ஆம் ஆண்டு மலேசியப் பொதுப் பூப்பந்து போட்டி கோவிட்-19 தொற்று
காரணமாக ஒத்திவவைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட அப்போட்டி 28-6-2022 ஆம் நாள் முதல் 3/7/2022 வரையிலும்
Masters Malaysia போட்டி 5 – 10 ஜூலை வரையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கானப் பூப்பந்து போட்டிகள் இந்தியாவில் இருந்து தொடங்குகிறது.
இந்தியா பொதுப் பூப்பந்து போட்டி 11-1-2022 முதல் 16-1-2022 வரை
ஷேட் மோடி பூப்பந்து போட்டி 18-1-2022 முதல் 23-1-2022 வரை
ஓடிஷா பொதுப் பூப்பந்து போட்டி 25-1-2022 முதல் 30-1-2022 வரை

தாய்லாந்து பேங்கோக்கில்

2022 க்கான தாமஸ் - ஊபர் கிண்ணப் போட்டி 8-5-2022 முதல் 15-8-2022 வரை
ஜப்பானில்

உலகக் கிண்ணப் பூப்பந்து போட்டி 21-8-2022 முதல் 28-8-2022 வரை

இறுதியாக, சீனாவில்
Jelajah Dunia BWF Akhir போட்டி 14-12-2022 முதல் 18-12-2022 வரை

You might also like