You are on page 1of 4

விளையாட்டுச் செய்திகள் காரிக்கிழமை 13-11-

2021
1. மின்னியல் விளையாட்டு – காற்பந்து
மலேசியாவின் E – Sports குழுவான Team Haq Esports Club இல் இணைந்த "Chanks" என
அழைக்கப்படும் FIFA E SPORTS தேசிய விளையாட்டாளர் Moehamad Zulisar பாதுகாப்பாக நேற்று
மலேசியா வந்தடைந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், தமது சக விளையாட்டாளர்களுடன் பயிற்சியில் இணைவார். Hotel


PJ Hilton தங்கும் விடுதியில் 10 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தலில் இருப்பார்.
எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாள் நடக்கவிருக்கும் அனைத்துலகப் போட்டியான FIFA Global Series
Qualifier 1 தகுதிப் போட்டியில் Chanks Team Haq இல் இணைந்து கலந்து கொள்ள உள்ளார்.
இது குறித்து தகவல் அளித்த THQ இன் தலைமைச் செயல்முறை அதிகாரியான Muhammad
Aimanulhaq Zaharuddin, Chanks பாதுகாப்பாக மலேசியா வந்தடைந்தது தனக்கு மிகுந்த
மகிழ்ச்சியைத் தந்ததாகக் கூறினார்

மேலும், மிக விரைவில் Chanks இப்புதிய சுற்றுச் சூழலில் தம்மை பழக்கிக் கொள்வார் எனவும் அவர்
நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதனிடையே, Chanks தற்போது தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவாறு தமது பயிற்சியை


மேற்கொண்டு வருவதாகவ்கும் Muhammad Aimanulhaq Zaharuddin தெரிவித்தார்.

FIFA Global Series, Singapore Open , FIFAe Club Series ஆகிய மூன்று முக்கியப் போட்டிகளில்
Team Haq கலந்து கொள்ள இருக்கிறது.

2. Kejohanan Sukan Petanque Dunia


இம்மாதம் ஸ்பெயின் நாட்டில் நடக்கவிருக்கும் Kejohanan Sukan Petanque Dunia போட்டியில் பங்கு
கொள்ள மலேசியாவைப் பிரதிநிதித்து 8 போட்டியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

Nur Durratul Hikmaah Yazit, Nur Durratul Iffah Yazit, Nurazana Sening, Nur Syahirah
Sabri ஆகியப் பெண் போட்டியாளர்கள் நாளை தொடங்கி தங்களின் போட்டியைத் தொடங்க
இருக்கிறார்கள் எனவும்

Muhammad Danial Syazwan Mohd Noor, Mohd Fadzrul Ismansyah Mohd Faizal, Mohd
Hisyam Mad Sapi @ Mad Sepi, Mohd Faizal Pa’ie ஆகிய நான்கு ஆண் போட்டியாளர்கள் நவம்பர்
15 முதல் 23 வரையில் தங்களின் போட்டியை தொடங்குவர் என Persekutuan Sukan Boules
Malaysia அமைப்பின் பொதுச் செயலாளரான Maya Heng தெரிவித்தார்.
எனவே, பெண் விளையாட்டாளர்கள் கடந்த புதன் கிழமை ஸ்பெயினுக்குப் புறப்பட்ட நிலையில், ஆண்கள்
அணியினர் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நவம்பர் 16 ஆம் நாள் புறப்பட உள்ளதாக என அவர்
சொன்னார்.

ஸ்பெயின் நாட்டின் Santa Susanna வில் நடக்கவிருக்கும் Kejohanan Petanque Dunia போட்டியில்
50 நாடுகளைச் சேர்ந்த 2,000 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. போலிங் – உலகக் கிண்ணப் போட்டி


துபாயில் நடந்த உலக போலிங் போட்டியில் கலந்து கொண்ட மலேசிய அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி
கண்டு போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய அணியைச் சேர்ந்த Syafiq Ridhwan Abdul Malik, Muhammad Rafiq Ismail,
Muhammad Syazirol, Timmy Tan Chye Chern ஆகியோரின் கூட்டணி 226 – 234 எனும்
புள்ளிகளில் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்தனர்.

இதனிடையே, Narasha Mohamed Roslan,m Siti Safiyah Amirah abdul Rahman, Nur
Syazwani Sahar, Faten Najihah Ahmad Faik ஆகியோரின் கூட்டணி சிங்கப்பூர் அணியுடன்
மோதியதில் 254 – 203 எனும் புள்ளிகளில் தோல்வி கண்டனர்.

4. கடற்கரை காற்பந்து
கடற்கரை காற்பந்து அணியை உருவாக்கும் முயற்சியில் மலேசியக்
காற்பந்து சங்கமான FAM முழு வீச்சில் இறாங்கியுள்ளது.
இது குறித்து பேசிய FAM இன் Futsal, கடற்கரை காற்பந்து செயற்குழுவின்
தலைவர் Datuk Seri Rosmadi Ismail தெரிவிக்கயில், அப்போட்டிக்கான சீரான அமைப்பு
முறைகளைக் கையாண்டு நிரந்தரமான கடற்கரை காற்பந்து குழுவை அமைக்கத் திட்டமிட்டு வருவதாகக்
கூறினார்.

மேலும், அவ்விளையாட்டுக்கான தேசிய நிலையிலானப் போட்டியையும்


ஏற்பாடு செய்ய இருப்பதாக அவர் சொன்னார்.
முன்னரே இது குறித்து திட்டமிட்டு இருந்தாலும் நாடு கோவிட்-19
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக
அது நடைமுறைப்படுத்த முடியவில்லை என அவர் சொன்னார்.
கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து Chonburi நடந்து முடிந்த AFF 2021 கடற்கரைக்
காற்பந்து போட்டியில் FAM இன் கீழ் இருக்கும் Markless Komii அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து
கருத்துரைத்த Datuk Seri Rosmadi Ismail அவ்வாறு சொன்னார்.

5. காற்பந்து
நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் Sarawak United FC அணியை
வெற்றி கொள்ள குழு நிலையிலான நிலவரத்தில் எந்த ஆட்டத்திலும்
தோல்வி அடையாமல் இருப்பது போதுமானதாக இருக்காது என Terengganu
FC அணியின் தலைமைப் பயிற்றுநர் Nafuzi Zain தெரிவித்தார்.
இம்முறை பிரிமியர் லீக்குன் இரண்டாம் நிலை வெற்றியாளரான சரவாக்
அணியை மலேசிய லீட் காலிறூதி ஆட்டத்தில் எதிர்கொள்ள இருக்கும்
திரங்கானு அணிக்குப் பெரும் சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
எனினும் சொந்த அரங்கில் விளையாடுவதால் தங்களின் ஆதரவாளர்கள்
அதிகமாக இருப்பது தமது அணி விளையாட்டாளர்களுக்கு அது கூட்தல்
உற்சாகத்தைக் கொடுக்கும் என மிக உறுதியாக அவர் நம்புகிறார். மேலும்
எதிர்வரும் நவம்பர் 18 ஆம் நாள் அதே சரவாக் அணியை இரண்டாவது
முறை திரங்கானு களம் காணும் எனவும் Nafuzi Zain எனக் குறிப்பிட்டார்.
குழு நிலையிலான 5 ஆட்டங்களில் தமது அணி விளையாட்டாளர்கள் மிகச்
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் திரங்கானு அணி 4 ஆட்டங்கள்
வெற்றி பெற்றும் Kuching City FC யுடனான ஆட்டம் சமநிலையிலும்
முடிந்தன.
ஆனால், காலிறுதிச் சுற்றுக்கான அழுத்தாம் வேறானது எனக் குறிப்பிட்ட
அவர் இது knock-out சுற்று என சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், Sarawak United FC அணியின் மிக முக்கியமான ஆட்டக்
காரர்களான Sandra Da Silva, Ucha Agra ஆகியோர் ஆட்டத்தைத் தங்கள் வசம்
திசை திருப்பி அதிகமாகத் தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்ளும்
வாய்ப்புகள் இருப்பதை தமது அணியினருக்கு நினைவு படுத்தினார்.
மேலும், B-22 தேசிய அணியின் இடம் பெற்றிருக்கும் தங்களின் ஆட்டக்
காரர்களான NIK AKIF SYAHIRAN NIK MAT, MAKIMI ABDULLAH, AZAM AZMI
MURAD ஆகியோரை அடுத்த ஆட்டத்தில் தாம் களமிறக்கப் போவதில்லை
எனக் கூறிய Nafuzi Zain அவர்கள் இப்போதுதான் தனிமைப்படுத்தலை
முடித்து திரும்பி இருப்பதாகவும் சொன்னார்.

You might also like