You are on page 1of 5

விளையாட்டுச் செய்திகள் 30-1-2022 ஞாயிற்றுக்கிழமை

காற்பந்து

1. 2021 ஆண்டு சூப்பர் லீக்கில் தங்கக் காலணி விருதைப் பெற்ற Ifedayo Olusegun தமது அணியில்
இணைந்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக Melaka United விளையாட்டாளர் Sony Norde
தெரிவித்தார்.

தாக்குதல் ஆட்டக்காரரான Ifedayo Olusegun இன் வருகை அவ்வணி கோப்பையை வெல்லக் கூடிய
வலுவைப் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தவணை மலேசியக் கிண்ணம் தொடங்கி குறைந்தது 4 ஆட்டங்கள் கடந்தால்தான் அணி


விளையாட்டாளர்களிடையே நல்ல புரிந்துணர்வும் ஒத்துழைப்பையும் உருவாக்க முடியும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக மலாக்கா யூனைட்டெட் அணிக்கு தாக்குதல் பிரிவில் ஆளுமை மிக்க ஆட்டக் காரர்
குறைபாடு இருந்து வந்துள்ளது எனக் குறிப்பிட்ட Sony Norde, இப்பொழுது Ifedayo Olusegun
இணைந்திருப்பது அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் அளவில் இருப்பதாகப் பகிர்ந்து கொண்டார்.

2. இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் சூப்பர் லீக் காற்பந்து போட்டியைச் சந்திக்க Sabah
FC தயாராக இருப்பதாக சபா காற்பந்து சங்கத்தின் தலைவர் Datuk Seri Bung Moktar Radin
தெரிவித்தார்.

கடந்தத் தவணையைக் காட்டிலும் இந்தத் தவணையின் Sabah FC க்காக மிகுந்த கவனமாகவும் சீரானத்
திட்டங்களோடும் விளையாட்டாளர்கல் களமிறக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதனால், இதர
அணிகளுக்கு நல்லதொரு போட்டியை அவ்வணியால் வழங்க முடியும் எனத் தாம் நம்புவதாகவும்
சொன்னார்.

புதுப்பிக்கப்பட்ட தரமான அணியாக உருவெடுத்து களம் காண இருக்கும் Sabah FC புத்துணர்ச்சி


கிடைத்திருப்பதாகத் தெரிவித்த சபாவின் துணை முதலமைச்சரான அவர், அணியின் வெற்றிக்காக அனைத்து
விளையாட்டாளர்களும் ஒருமித்த சிந்தனையோடு எதிரணியினரைச் சந்திக்க வேண்டும் எனவும் சிறந்த
வியூகத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, அவ்வணியின் தயார் நிலை குறித்து தகவல் அளித்த அவர், அணியின் ஆட்டக் காரர்கள்
அனைவரும் வெற்றி என்பதை மட்டுமே குறி வைத்து பயணிக்க இருப்பதாகவும் தலைமைப் பயிற்றுநர்
Datuk Ong Kim Swee இன் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு நடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புதிய இறக்குமதி ஆட்டக் காரர்களோடு Baddrol Bakhtiar, Khairul Fahmi Che Mat, Dominic
Tan, Rizal Ghazali, Irfan Fazail ஆகிய உள்ளூர் விளையாட்டாளர்களின் சேவையையும் உட்படுத்தி
Sabah FC மலேசிய லீக்கிலும் களமிறங்க இருப்பதாக Datuk Seri Bung Moktar Radin
குறிப்பிட்டார்.

எனவே, அணியின் ஆதரவாளர்களும் இரசிகர்களும் தங்களின் தொடர் ஆதரவை Sabah FC க்கு வழங்க
வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
3. இந்தத் தவணை பிரிமியர் லீக்கில் புதியப் பொலிவுடன் களமிறங்கவுள்ள Perak FC. நேற்று தமது
சமூக வலைத்தளப் பக்கத்தில் அவ்வணியின் புதிய சின்னம் LOGO வை அறீமுகப்படுத்தியுள்ளது.

பேரா மாநிலக் கொடியின் நிறங்களான வெள்ளை, மஞ்சள், கருப்பு ஆகிய வண்ணங்களில் Perak Football
Club எனும் பெயருடன் அவ்வணீயின் அடையாளச் சின்னமான காட்டெருமையும் அதில்
இணைக்கப்பட்டிருந்தது.

மலேசிய லீக்கில் பட்டியலிடப்பட்டுள்ள Perak FC முன்னதாக 3 சின்னங்களைப் பயன்படுத்தி இருந்தது.


2021 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட சின்னம் குறித்து அவ்வணியின் இரசிகர்களிடம் இருந்து பல
விமர்சங்களைப் பெற்ற பின்னர் கடந்த ஆண்டு புதிய சின்னம் தயாரிக்கும் போட்டியினை அவ்வணி ஏற்பாடு
செய்திருந்தது.
தற்போத் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சின்னத்திற்ௐஉ நல்ல வரவேற்பு இரசிகர்கள் மத்தியில்
கிடைக்கவே, இந்தப் புதிய சின்ன, அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படலாம் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

4. மலேசியக் காற்பந்து தொடர்பில் காற்பந்து வல்லுநர்களுடன் ஒன்றினைந்து கலந்துரையாலில் ஈடுபட


Johor Darul Ta’zim (JDT) அணியின் உரிமையாளர் ஜோகூர் இளவரசர் Tunku Ismail Sultan
Ibrahim தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அக்கலந்துரையாடலில் ஹரிமாய் மலாயாவின் முன்னாள் பயிற்றுநர் Tan Cheng Hoe உடன் Bojan
Hodak, Lim Teong Kim ஆகியோரின் பெயரையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை துபாயில் நடந்த ஒரு பேட்டியில் தெரிவித்த அனைத்துன் சிக்கல்களுக்கும் இந்த
விவாதக் களம் ஒரு தீர்வாக அமையக்கூடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தாம் அளித்தப் பேட்டி குறித்து அனைத்து விவகாரங்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிவி மறைவு இன்றி
விளக்கமளிக்க இருப்பதாகவும் அதன் பொருட்டு மலேசியக் காற்பந்து சங்கமான FAM அதற்கு ஒத்துழைத்து
காற்பந்து இரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவு கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என TMJ
தமத்ய் டுவிட்டர் பக்கத்தில் கருத்துரைத்திருந்தார்.

கடந்த வியாழக்கிழமை, ASTRO ARENA அலைவரிசையில் இடம்பெற்ற CakapSukan எனும் பேட்டி


நிகழ்ச்சியில் FAM குறித்தும் தேசிய காற்பந்து அணியான Harimau Malaya குறித்தும் சில தகவல்களைப்
பதிவு செய்திருந்தார் TMJ. முக்கியமாக, JDT அணியின் மேம்பாட்டு பயிற்றுநராக சேவையாற்ற Teong
Kim RM374,000 ஊதியமாகக் கேட்டது உட்பட பல விவகாரங்கள் குறித்தும் அதில் TMJ பேசி இருந்தார்.
தேசிய அணியின் பயிற்றுநராக Teong Kim நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டது குறித்து தம்மிடம்
வினவியபோது, Teong Kim கேட்ட ஊதியம் உட்பட தமக்குத் தெரிந்தவற்றைத்தான் அந்தப் பேட்டியில்
பதிவு செய்திருந்ததாகவும், ஒரு வேளை Teong Kim மறுத்தால் தம் வசம் சாட்சி இருப்பதாகவும் TMJ
குறிப்பிட்டிருந்தார்.

எனவே, தாம் கூறியதை மாற்றியோ அல்லது திரித்தோ யாரும் பேச வேண்டாம் எனவும் தாம்
தெளிவாகத்தான் அந்தப் பேட்டியில் பேசியிருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Sepak Takraw
5. Emas Anuar Liga Sepak Takraw (STL) போட்டியில் Putrajaya Cyborg அணி தொடர்ந்து
சீரான அடைவு நிலையைப் பதிவு செய்து வருகிறது. ஆகக் கடைசியாக Stadium Titiwangsa, Kuala
Lumpur நடந்த ஆட்டத்தில் Kuala Lumpur Thunder அணியச் சந்தித்து 2 – 1 எனும் புள்ளிகளின்
அடிப்படையில் வீழ்த்தியது Putrajaya Cyborg.

இது அவ்வணியின் ஆறாவது வெற்றியாகும்.

9 ஆட்டங்களைக் கடந்து வந்த Kuala Lumpur Thunder அணி தொடர்ந்து 5 வெற்றிகளைக் கண்டு
வந்தது. இதனால், இரு அணிகளும் 12 புள்ளிகளைப் பெற்றதோடு முதல் மூன்று இடங்களைப் பிடிப்பதில்
கடும் போட்டியினை ஏற்படுத்தி Sepak Takraw இரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டி
இருக்கின்றன.

Putrajaya Cyborg அணிக்கும் Kuala Lumpur Thunder அணிக்கும் இடையேயான ஆட்டத்தில்


புத்ராஜெயா அணி Abdul Aziz (tekong), Suhairi Sulaiman (pengumpan), Amar Putra
Rohaimee (perejam) ஆகியோரைக் களமிறக்கி 27 நிமிடங்களில் 21-16 எனும் புள்ளிகளில் முதல்
செட்டை வென்றது.

இருந்த போதிலும், Syahir Rosdi (tekong), Amirul Zazwan Amir (pengumpan) dan Hanafiah
Dolah (perejam ஆகியோரைக் களமிறக்கிய Kuala Lumpur Thunder அணி இரண்டாம் செட்டில் 21-
13 எனும் புள்ளிகளில் வெற்றி அடைந்தது.
ஆட்டத்தின் வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது செட்டில் இரு அணிகளும் கடுமையானப் பீட்டியை
வழங்கியதில் அவ்வாட்டம் 1 மணீ நேரம் 27 நிமிடங்கள் வரை நீடித்தது.

எனினும், அவ்வாட்டத்தில் புத்ராஜெயா 21-16 எனும் புள்ளீகளில் வென்றது.


பூப்பந்து

6. மலேசியப் பூப்பந்து சங்கமான BAM உடன் தொடர்ந்து பயணிக்காவிட்டாலும்கூட, தேசியப்


பெண்கள் இரட்டையர் பிரிவின் விளையாட்டாளர் Lee Meng Yean தனிநபர் விளையாட்டாளராகத்
தொடர்ந்து நீடித்திருப்பார் என அவர் உறுதியளித்துள்ளார்.

தேசிய அமைப்பான BAM இல் இருந்து விலகும் முடிவை எடுக்கத் தாம் சிரமப் பட்டாலும், தொடர்ந்து
நாட்டிற்காக அவர் போட்டிகளில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாக 27 வயதான அவர் சொன்னார்.

BAM இல் தமது பயிற்சி தொடர வில்லை என்பதால் பூப்பந்து துறையில் இருந்து விலகிவிட்டதாகவோ
அல்லது விளையாடுவதை நிறுத்தி விட்டதாகவோ பொருள் கிடையாது என்றார்.
இது வரை தமக்கு தோள் கொடுத்து ஆதரஆக இருந்த தமது நண்பர்களுக்கு நன்றியினை முகநூல் வழி பகிர்ந்து
கொண்டார்.

முன்னதாக, Lee Zii Jia, Goh Jin Wei ஆகிய நாட்டின் முன்னணி பூப்பந்து விளையாட்டாளர்கள் BAM
இன் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை அண்மையில் ஏற்படுத்தி இருந்தது.

அதே வழித்தடத்தில் தற்போது Lee Meng Yean உன் இவ்வாறான முடிவை எடுத்துள்ளார்.

இதனை BAM வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தி இருந்தது.

You might also like