You are on page 1of 4

விளையாட்டுச் செய்திகள் 27-10-2021 அறிவன்கிழமை

காற்பந்து

Program Pembangunan Bola Sepak Negara PPBN என்று சொல்லக்கூடிய தேசிய காற்பந்து
மேம்பாட்டுத் திட்டமும் பகாங்கில் உள்ள Akademi Bola Sepak Mokhtar Dahari (AMD) ஆகிய
இரண்டும் மூடப்படுவதாகக் கூறப்பட்டு வரும் வதந்தியை தேசியக் காற்பது சங்கம் FAM மறுத்துள்ளது.

உலகத் தரம் கொண்ட காற்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது PPBN திட்டம்.

இத்திட்டத்தில் தேசிய விளையாட்டு மன்றம் MSN . இளைஞர் விளையாட்டு அமைச்சு KBS,


போன்றவைகள் உட்படுத்தப்பட்டுள்ளன. அது தொடரப்படுவதோடு அது மேலும் சிறப்பாக நடைபெற
மேம்படுத்தப்படும் என FAM இன் செயலாளர் Mohd Saifuddin Abu Bakar தெரிவித்தார்.

அதே சமயம் 2020 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட Skuad Projek FAM-MSN காற்பந்து
அணியும் களைக்கப்படாது என அவர் உறுதிப்படுத்தினார்.

இம்முறை நடந்த பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் அவ்வணி 20 ஆட்டங்களில் ஒரே ஒரு ஆட்டம்
மட்டுமே வெற்றி பெற்றிருந்ததால், அப்போட்டிக்கானப் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த ஆண்டு
தவணையில் கலந்து கொள்ளும் என்பதை MSN ஒப்புதலோடு தெரிவித்தார்.

இந்த அணி உருவாக்கப்பட்டதால் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து
கொள்வதற்காக உருவாக்கப்படும் தேசிய அணிக்கு B-17, B-23 உட்பட பல நிலையிலான
விளையாட்டாளர்கள் தேர்வாக அமையும் என அவர் சொன்னார்.

Akedemi Mokhtar Dahari, இளைஞர் கிண்ணம், மலேசிய பிரெசிடன் கிண்ணம், மலேசிய


விளையாட்டுப் பள்ளி, மாவட்ட பயிற்சி மையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து Skuad Projek FAM-
MSN காற்பந்து அணி உருவாக்கப்பட்டது.

மற்றொரு நிலவரத்தில் இவ்வாரம் சனிக்கிழமை Stadium MBPJ, Kelana Jaya வில் Selangor FC
மற்றொரு B குழு அணியான Kuching City FC யைச் சந்திக்கவிருக்கிறது.

இரவு 9.00 மனிக்குத் தொடங்க இருக்கும் அவ்வாட்டத்தைக் கண்டுகளிக்க வரும் சிலாங்கூர் அணியின்
ஆதரவாளர்களுக்கு அவ்வணி 4 முக்கிய வழிமுறைகளை வலியுறுத்துகிறது.
அவ்வாட்டத்தைக் கண வருகிறவர்கள் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்ட 18 வயதுக்க்கு
மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற எந்த அறிகுறியும்
இருக்கக் கூடாது எனவும் கூறியது. அதே சமயம் WARGA EMAS என்று சொல்லக் கூடிய மூத்த
குடிமக்களை விளையாட்டாரங்கிற்கு வர ஊக்குவிக்கப்பட வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆட்டத்தைக் காண நுழைவுச் சீட்டை இணையத் தளம் வாயிலாக வாங்கப்பட வேண்டும். ஒரு வருக்கு 2
நுழைவுச் சீட்டுகளுக்கு மேல் வாங்க அனுமதி இல்லை. அதனை இன்னொருவருக்கு உரிமையாக்க முடியாது
எனவும் காரணம் அது மைகாட் பதிவோடு வாங்கப்படுகிறது எனவும் அவ்வணி கூறியுள்ளது.

ஆட்டத்தை காண வருகிறவர்கள் மைகாட், தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர


வேண்டும் எனவும் மாலை 6.00 மணிக்கு விளையாட்டரங்கின் நுழைவாயில் திறக்கப்பட்டு முதல் பாதி
ஆட்டத்தில் மூடப்படும் எனத் தெரிவித்தது.
ஆட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னரும் ஆட்டம் முடிந்த பின்னரும் அரங்கின் சூராவும் கழிப்பறையும்
திறந்திருக்கும்.

ஆட்டம் நடைபெறுகின்ற வேளையில், அரங்கில் உணவு உண்ண அனுமதி இல்லை. அரங்கின் வெளியில்
நினைவுப் பரிசுப் பொருட்கள் விற்கப்படும் என சிலாங்கூர் அணி தனது முகநூல் பக்கத்தில் தகவல்
வெளியிட்டுள்ளது. அதனை அவ்வணியின் ஆதரவாளர்கள் முழுமையாக் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

பூப்பந்து – Czech குடியரசு பொதுப் பூப்பந்து போட்டி

Czech குடியரசு பொதுப் பூப்பந்து போட்டியில் முதன் முறையாகக் கூட்டணி அமைத்த Ching Yik
Cheong-Teoh Mei Xing இணையினர் அப்போட்டியில் உச்சநிலை வெற்றியைக் குறி வைக்கவில்லை
என்றாலும் அவர்களின் வெற்றி இன்ப அதிர்ச்சியாக இருந்தது என Mei Xing தெரிவித்தார்.
எங்களால் முடிந்த வரை முயற்சி செய்து முழு உழைப்பைப் போட்டு அந்தப் போட்டியை எதிர்கொண்டதாக
அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த Febby Valencia Dwijayanti Gani-Jesita Putri Miantoro


இணையினரை 21-15, 16-21, 21-17 ஆகியப் புள்ளிகளில் இறுதிச் சுற்றில் மலேசிய அணி வெற்றி
கொண்டது.

24 வயது கொண்ட Mei Xing, Uber கின்ணப் போட்டியில் Yap Ling உடன் இணைந்து
போட்டியிட்டார். அதே சமயம், 2021 Austria பொதுப் பூப்பந்து போட்டியில் 23 வயது மிக்க Anna Yap
Cheng Wen உடன் இணைந்து வெற்றி கொண்டனர்.
Anna வுடன் இவ்வாண்டு இறுது வரையில் இணைந்து போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக Mei
Xing தெரிவித்தாலும், அது குறித்த இறுதி முடிவை பயிற்றுநர் குழுவிடமே விட்டுவிடுவதாகக் கூறினார்.
இன்று நடைபெறவுள்ள Belgium பொதுப் பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் Anna-Mei Xing
கூட்டணி க்கு bye கிடைத்ததால், அடுத்தச் சுற்றில் இந்தோனேசியாவின் Febby-Jesita
இணையினருடனோ அல்லது ஜப்பானின் Chisato Hoshi-Aoi Matsuda இணையினருடனோ
மோதக்கூடும்.

இதனிடையே, Czech குடியரசு பொதுப் பூப்பந்து போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச்
சுற்றில் இந்தோனேசியாவின் சந்தித்த மலேசியாவின் Putri Kusuma Wardani யைச் சந்தித்த Siti
Nurshuhaini Azman 16-21, 5-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டு இரண்டாம் நிலையை
அடைந்துள்ளார்.
அந்த வெற்றியைத் அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி கொள்ள ஒரு வழித் தடமாகக் கொள்ள இருப்பதாக
அவர் சொன்னார்.

இறைவன் அருளால் இந்த முறை வெற்றி பெற்று விட்டதாகக் கூறிய அவர், முதற்கட்டத்தில் முடியும் என
நம்பிககிக் கொண்டிருந்ததாகவும், அடுத்த்ச் சுற்றில் தமது கவனம் சிதறி விட்டதாகவும் தெரிவித்தாகவும் அவர்
சொன்னார்.
கடின உழைப்புடனும் சிறு சிறு குறைகளை நீக்கியும் அடுத்தடுத்தப் போட்டிகளில் களமிறங்க வேண்டும் என
பயிற்றுநர் Indra Widjaja அறிவுறுத்தியதாகவும் அவர் சொன்னார்.

பூப்பந்து – பிரான்சு பொதுப் பூப்பந்து போட்டி

முன்னதாக, நாட்டின் கலப்பு இரட்டையர் அணி Chan Peng Soon-Goh Liu Ying டென்மார்க் பொதுப்
பூப்பந்து போட்டியில் அடைந்த தோல்வியை ஈடுகட்ட இந்தியாவின் Dhruv Kapila- N. Reddy Sikki
அணியை 21-19, 21-19 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குச் சென்றுள்ளனர்.

அடுத்தச் சுற்றில் ஜப்பானின் Yuki Kaneko-Misaki Matsutomo இணையினரைச் சந்திக்கவுள்ளனார்.

மற்றொரு ஆட்டத்தில் மலேசியாவின் Goh Soon Huat-Shevon Lai இணையினர் நியூசிலாந்தின் Oliver
Leydon-Davis-Anona Pak இணையினரை 25 நிமிடங்களில் 21-9, 21-12 எனும் நேரடி செட்களில்
வீழ்த்தி 2 ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதனிடையே, ஆண்கள் இரட்டையர் பிரிவில் தேசிய விளையாட்டாளர்களான Ong Yew Sin-Teo Ee Yi,
மலேசியாவின் மற்றோர் இணையினரான Goh Sze Fei-Nur Izzuddin Rumsani யை 22-24, 22-20,
21-17 எனும் புள்ளிகளில் வீழ்த்தினர். இரு அணியினரும் கடுமையனாப் போட்டியை வழங்கியதால் 70
நிமிடங்கள் வரை நீடித்தது.
அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய Ong Yew Sin-Teo Ee Yi இணையினர், இங்கிலாந்தின் Callum
Hemming-Steven Stallwood இணையினரைச் சந்திக்கவுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில், ஜெர்மனியின் Mark Lamfuss-Marvin Seidel மலேசியாவின்
Tan Kiang Meng-Tan Wee Kiong இணையினர் 21-18, 21-15 எனும் புள்ளியில் தோல்வி கண்டனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் டென்மார்க்கின் Alexandra
Boje-Mette Poulsen இணையினர்
மலேசியாவின் Vivian Hoo-Lim Chiew Sien 21-12, 21-14 எனும் புள்ளிகளில் தோல்வி கண்டனர்.

10 PIN BOWLING
துபாயில் நவம்பர் 6 முதல் 17 ஆம் நாள் வரையில் நடக்கவிருக்கும் 10 PIN BOWLING உலகப்
போட்டிக்கு மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பெயர்ப்பட்டியலை
Malaysia Tenpin Bowling Congress MTBC விரைவில் அறிவிக்கவுள்ளது.
மிகக் குறுகியக் காலம் மட்டுமே பயிற்சியை மேற்கொண்டிருந்தாலும், கிடைத்த வாய்ப்பினை நன்கு
பயன்படுத்தி விட வேண்டும் என உறுதி கொண்டுள்ளனர் மலேசிய அணியினர்.

தாம் தயாராகி விட்டதாககும் மேலும் சில புது முகங்கள் ஆறிமுகப்படுத்தப்படலாம் எனவும் 2012 ஆ,ம்
ஆண்டு AMF உலகக் கிண்ணப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற Syafiq Ridhwan தெரிவித்தார்.

ஒரு வேளை இம்முறை போட்டிக்கான ஆட்ட முறை மாற்றம் கண்டிருந்தால், அது நிச்சயமாகத் தமக்குச்
சவாலாக அமையக்கூடும் எனவும் அவர் சொன்னார்.

வழக்கமாக MTBC 6 ஆண் போட்டியாளர்களையும் 6 பெண் போட்டியாளர்களையும் அனுப்பும். ஆனால்,


இம்முறை அதிகபட்சமாக 4 ஆண் போட்டியாளர்களையும் 6 பெண் போட்டியாளர்களையும் மட்டுமே
அனுப்புகிறது என அவர் தெரிவித்தார்.

எனவே, அனைத்து பிரிவிலும் அவர்கள் சுழற்சி முறையில் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர்
குறிப்பிட்டார்.

பெண்கள் பிரிவில், கடந்த இரண்டு ஆண்டுகள் எந்த அனைத்துலக நிலையிலானப் போட்டியிலும் கலந்து
கொள்ளாமல் இருந்த Nora Lyana Nastasia இம்முறை நடக்கவிருக்கும் இந்தப் போட்டியில் கலந்து
கொள்ள மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாகவும் அதனை MTBC முடிவு செய்யும் எனவும்
கூறினார்.

You might also like