You are on page 1of 3

வெறிச்சோடிப் போய் கிடக்கும் தங்கும் விடுதிகள் ! எப்போது பிறக்கும் முழுமையான விடிவு காலம் ?

சுற்றுலா துறையில் ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பல இலட்சக்கணக்கான சுற்றுலாப்


பயணிகள் மலேசியாவுக்கு வந்து செல்கின்றனர். அதனால், பல்வேறு நகரங்களிலும் ஏராளமான
தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

பல்வேறு நட்சத்திரத்தரம் பெற்றத் தங்கும் விடுதிகளில் விருந்தினர்களின் மனம் மகிழும் வண்ணம்


எண்ணற்ற வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. விடுதிகளில் பல்வேறு விழாக்களை நடத்தவும்
கண்கவர் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரமான உணவு தயாரித்து பரிமாறுவதற்காகவும்,
தங்கும் விடுதிகளை சுத்தமாக பராமரிப்பதற்காகவும் ஏராளமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தற்போது கோவிட்-19 தாக்கத்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ளதால்,


கடந்த மார்ச் மாதம் தொடங்கி இருந் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறையோடு ஒன்றிய தங்கும் விடுதி தொழில்துறையும் தற்போது மிக மோசமாகப்


பாதிக்கப்பட்டுள்ளது.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் நாடு தழுவிய நிலையில் தங்கும் விடுதிகளில் பல


முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சனவரி மாதம் தங்கும் விடுதி குடியிருப்பு
ஏறத்தாழ 80 விடுக்காடு சரிவு கண்டு எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சீனப்
புத்தாண்டுக் கொண்டாட்ட சமயத்தில் அதிகமான மக்கள் முன்பதிவு செய்திருந்தார்கள். ஒவ்வொரு
முறையும் அரசாங்கம் விதிக்கும் 2 வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் தங்கும் விடுதி
தொழில்துறை ஏறத்தாழ 300 மில்லியன் ரிங்கிட் இழக்கிறது”
என மலேசியத் தங்கும் விடுதிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ என் சுப்ரமணியம் கூறினார்.

“ தற்போதையச் சூழலில் மக்கள் மாநிலம் கடக்க அனுமதியளிக்கப்பட்டு உள்நாட்டுச் சுற்றுலா


ந்நடவடிக்கைகளில் தடையின்றி செயல்பட்டால் ஓரளவு தங்கும் விடுதி தொழில் துறையும் அதை நம்பி
இருக்கும் வணிகர்களும் ஊழியர்களும் செயல்பட முடியும். அதனால், அரசாங்கம் எங்களுக்கு சிறப்பு
நிதி ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் எங்களால் இந்த கோவிட்-19 காலக் கட்டத்தில் தாக்குப் ப்டிடிக்க
முடியும்” என அவர் மேலும் சொன்னார்.

“கடந்தாண்டு கொஞ்ச நாட்கள் தங்கும் விடுதிகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. ஓரளவு வருமானம்


வரத் தொடங்கியது. பின்னர் சில பாதுகாப்பு காரணங்களுக்கான மீண்டும் மூடப்பட்ட
ஆணையிடப்பட்டன. இதனால் அங்கு பணியாற்றும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
வேலைவாய்ப்பு இழந்து போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.”

“மேலும், ஹோட்டல் மேனேஜ்மண்ட் துறைகளில் தற்சமயம் படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலம்


கேள்விக் குறியாக மாறியுள்ளது, அடுத்தத் தவணை மாணவர்கள் இந்தத் துறைக்கு வருவது சந்தேகமே
என்பதால் புதிய வியூகத்தை அணுக வேண்டும் என ஜோகூர் லோட்டஸ் டேசாரு பீச் ரிசோர்ட் தங்கும்
விடுதி மற்றும் லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி டத்தோ ரெனா இராமலிங்கம் கூறியுள்ளார்.

“தங்கும் விடுதிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டதால் வருமானம் இல்லை, ஆனால், மின்சாரம்,


ஊரட்சி மன்ற உரிமக் கட்டணம், வங்கிக் கடன் போன்ற செலவுகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே,
அரசாங்கம் இந்தக் கட்டணங்களுக்கு விலக்கு கொடுக்க வேண்டும். மேலும், எங்களின் ஊழியர்களின்
சம்பள விவகாரத்தில் அரசாங்கம் ஒரு பங்கு மானிய உதவி செய்தால் எங்களுக்குப் பேருதவியாக
இருக்கும்”

என மலேசியத் தங்கும் விடுதி உரிமையாளர் சங்கத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் இராஜ் குமார்

ஆண்டு முழுவதும் விருந்தினர்களால் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்போடு இருந்த தங்கும் விடுதிகள் தற்போது


ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. பெரும்பாலும் தங்கும் விடுதிகளுடன் இணைந்தே
உயர்தர நட்சத்திர உணவகங்களும் நடத்தப்படுவதும் உண்டு. அவையும் செயல்பட முடியாமல்
முடங்கியுள்ளன.

சுற்றுலாத் துறையோடு இயைந்து செயல்படும் தங்கும் விடுகள் நடத்துபவர்களோடு ஊழியர்களும்


மீண்டும் பழைய ஆர்ப்பரிப்போடு அவை செயல்படும் நாளுக்காகக் காத்திருப்பதாக அவர்கள்
தெரிவிக்கின்றனர்.

You might also like