You are on page 1of 1

பினாங்கி8 ல் விற்கப்படாத 3,000 சொத்துகள் !

ஒஇனாங்கு மாநிலத்தில் இன்னும் விற்கப்படாமல் 2,947 சொத்துகள் தேக்க


நிலையில் இருப்பதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ
சுந்தரராஜூ சோமு தெரிவித்தார்.

தேசிய சொத்துடைமை தகவல் மையத்தின் அடிப்படையில், அவற்றில் 17


விழுக்காடு, 300,000 வெள்ளிக்கும் குறைவான விலை மதிப்பினானவையும்
அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

அவற்றை வாங்க விண்ணப்பிப்பவர்களுக்கு நிதியுதவி கிடைக்காத நிலையில்,


அவை விற்கப்படாமல் தேக்க நிலையில் இருப்பதாக இன்று சுந்தரராஜூ
சொன்னார்.

பினாங்கில் வீட்டுவசதி மேம்பாடு சீரான முறையில் நடைபெறுவதை மாநில


அரசு தொடர்ந்து உறுதி செய்யும். மலிவு விலை வீடுகளின் வளர்ச்சிக்கு
மானியம் வழங்கப்படுகிறது

வளர்ச்சித் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு, விலையுயர்ந்த


வீடமைப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் இந்த குறைந்த
விலை வீடுகளுக்கும் உள்ளன.

மாநில அரசின் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மலிவு விலையில் வீடுகள்


தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டம்
பெரும் பங்காற்றுகிறது.

நிலப் பயன்பாட்டை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்


மறுமலர்ச்சித் திட்டம் ஒரு வியூக நடவடிக்கையாக செயல்படுத்தப்படுகிறது
என்று சுந்தர ராஜூ கூறினார்.

You might also like