You are on page 1of 6

விளையாட்டுச் செய்திகள் 28-1-2022 வெள்ளிக்கிழமை

Deaflympic
1. இவ்வாண்டு மே 1 முதல் 15 ஆம் நாள் வரையில் பிரேசில் Caxias Do Sul நகரில் நடைபெற
இருக்கும் செவிப்புலம் அற்றோருக்கான ஒலிம்பிக் எனப்படும் Deaflympic போட்டியில் மலேசியா
குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என மலேசிய செவிப்புலம் அற்றோர் விளையாட்டுச்
சங்கம் இலக்கு கொன்டுள்ளது.

இது குறித்துத் தகவல் அளித்த அதன் தலைவர் Ong Shin Ruenn தெரிவிக்கயில், கடந்த 2019 ஆம் ஆண்டு
பூப்பந்து விளையாட்டு ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற Boon Wei Ying மீது அந்த நம்பிக்கையை
வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மலேசியாவைப் புரட்திநிதித்து boling, badminton, karate, தடகளம், மலைப் பகுதி கைச்சிளோட்டம்


ஆகிய 5 விளையாட்டுகளில் 24 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக, Yakult Malaysia விடம்
இருந்து ரிம 243.700 மதிப்புள்ள நன்கொடை பெற்ற பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் Ong Shin
Ruenn குறிப்பிட்டார்.
Yakult Malaysia விடம் இருந்து பெற்ற நன்கொடையை Deaflympic போட்டி, கொரியா நாட்டில்
நடைபெற உள்ள செவிப்புலம் கோளாதோருக்கான ஆசிய பசிபிக் காற்பந்து போட்டி ஆகியன உட்பட
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் துறாஇ மேம்பாட்டிற்குப் பயன்படுத்த இருப்பதாக அவர்
குறிப்பிட்டார்.

அதே சமயம், நாடளாவிய நிலையில் தமது அங்கத்தினருக்கு தலைமைத்துவப் பயிற்சியையும் ஏற்பாடு


செய்ய இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, கடந்த திசம்பர் 11 ஆம் நாள் செராஸில் உள்ள கோலாலம்பூர் காற்பந்து மைதானத்தில் Yakult
Malaysia ஏற்பாடு செய்திருந்த காற்பந்து போட்டியின் வாயிலாக அந்நிறுவனம் ரிம 315,000 நிதி
திரட்டியதாகவும் அதனை தங்களின் ஆண்டுத் திட்டமாகத் தொடர்ந்து நடத்தவும் தலைமை நிர்வாகி Hiroshi
Hamada கூறினார்.

காற்பந்து

2. Kedah Darul Aman (KDA) FC காற்பந்து அணியின் அதிகாரப்பூர்வ தொலைத் தொடர்பு


நிறுவனமாக Halo Telco நிறுவனம் புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமானது.

KDA FC தலைமைச் செயல்முறை அதிகாரி Khamal Idris Ali யும் Halo Telco நிறுவனத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி Mohd Shukrie Rahim மும் இதில் கையொப்பமிட்டனர்.
இது குறித்துத் தகவல் அளித்த Mohd Shukrie Rahim, 2022 ஆம் ஆண்டுத் தவணைக்கான KDA FC
அணி குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் தமது தரப்பு பெருமை கொள்வதாகவும் அதன் ரசிகர்களின்
ஆதரவு தமது நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து KDA FC சிறப்பு சிம் கார்டுகளை அந்நிறுவனம் கெடா அணியின்


ஆதரவாளர்களுக்காக ரிம 5.00 விலையில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் கிடைக்கப்பெறும்
இலாபத்தில் அவ்வணிக்கு நன்கொடையாகக் கொடுக்க இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த சிறப்பு சிம் கார்டுகள் 100,000 புதியப் பயனர்கள் வாங்கிப் பதிவு செய்வார்கள் எனத் தாம்
நம்புவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சிந்த சிறாப்பு சிம் கார்டுகள் வெளியிடப்படுவதால் இரு தரப்பினருக்குமான உறவினை வலுப்படுத்தும் அதே
சமயம் குறுகிய கால – நீண்டகால பலனைக் கொடுக்க வல்லது எனவும் Khamal Idris சொன்னார்.

இத்தவணை மட்டும் இன்று தொடர்ந்து அடுத்தத் தவணைக்கும் Halo Telco நிறுவனத்தின் ஆதரவும்
தொடரும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.

தடகளம்

3. இவ்வாண்டு மே மாதம் 12 முதல் 23 வரையில் வியாட்நாம் ஹனோர் நகரில் நடைபெற இருக்கும்


31 வது சீ விளையாட்டுப் போட்டிக்கு தகுதி அடிப்படையில் 20 தடகள வீரர்கள் அனுப்பப்பட உள்ளதாக
மலேசியத் தடகள அமைப்பான KOM இன் தலைவர் Datuk SM Muthu தெரிவித்தார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் 4 – 6 ஆம் நாள் வரையில் நடக்கவுள்ள 97 வது மலேசியப் பொது தடகளப்
போட்டியே விளையாட்டாளர்களுக்கு இறுதி வாய்ப்பு எனவும் அதில் சிறந்த அடைவு நிலையைப் பதிவு
செய்கிறவர்கள் ஹனோய் செல்லக் கூடிய வாய்ப்பு பெற இயலும் என அவர் குறிப்பிட்டார்.

நேரம், தூரம், உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு


முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.
இதுவரையில் தகுதி பெற்றவர்களாக

இரும்பு குண்டு வீடும் போட்டியில் Jackie Wong Siew Cheer


சக்கரம் வீசும் போட்டியில் Muhammad Irfan Shamsuddin
உயரம் தாண்டுதல் போட்டியில் Nauraj Singh Randhawa
ஊன்றுகோலைக் கொண்டு உயரம் தாண்டும் போட்டியில் Mohd Iskandar Alwi
1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் Mohammad Amirul Arif Mohd Azri
அதிவேக ஓட்டப் போட்டியில் Muhammad Zulfiqar Ismail, Russel Alexander Nasir Taib
ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

பெண்கள் பிரிவில்

இரும்பு குண்டு வீடும் போட்டியில் Grace Wong Xiu Mei


சக்கரம் வீசும் போட்டியில் Queenie Ting, Choo Kang Ni ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

இதனிடையே,

உயரம் தாண்டும் போட்டி வெற்றியாளர் Lee Hup Wei

100 மீட்டர் ஓட்டப் பந்தய வெற்றியாளர் Muhammad Haiqal Hanafi


நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்க வெற்றியாளர் Andre Anura Anuar
2017 ஆம் ஆண்டு மின்னல் வீரர் பட்டத்தை வென்ற Khairul Hafiz Jantan
தடைகள் தாண்டும் 110 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் இரு முறை வெற்றியாளர் Rayzam Shah
Wan Sofian
ஆகியோர் பெயர்கள் இன்னும் தகுதி பெறாதோர் பட்டியலில் நிலுவையில் உள்ளன,

அதே சமயம், மலேசியப் பொது தடகளப் போட்டியைத் தவிர்த்து திர்வரும் ஜூன் மாதத்தில் 3 வது Grand
Prix Malaysia, ஜூலை மாதத்தில் தேசிய இளையோர் தடகளப் போட்டி, செல்தெம்பரில் தேசிய ரிலே
போட்டி, நவம்பரில் நெடுந்தூர ஓட்டப் போட்டி உட்பட மலேசிய நிலையிலான இன்னும் 6 போட்டிகளை
KOM ஏற்பாடு செய்ய இருப்பதாக முத்து கூறினார்.
அவற்றோரு இவ்வாண்டு அக்தோபர் 22 – 23 ஆம் நாட்களில் தென்கிழக்காசிய நிலையிலான இளையோர்
தடகளப் போட்டியையும் KOM ஏற்று நடத்த எண்ணம் கொண்டிருப்பதாகவும் முத்து கூறினார்.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022

எதிர்வரும் பிப்பரவரி 4 முதல் 20 வரையில் நடைபெற உள்ள 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்
போட்டிகளை விளையாட்டு இரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் அதன் அதிகாரப் பூர்வ ஒளிபரப்பினை
Radio Televisyen Malaysia (RTM) மேற்கொள்ள இருக்கிறது.
பிப்பரவரி 4 ஆம் நாள் நடைபெற இருக்கும் அதன் தொடக்க விழாவினை RTM TV 2 இலும் Myfreeview
அலைவரிசை 111 இலும் rtmklik.rtm.gov.my எனும் இணையத் தளம் வாயிலாகவும் இரவு 7.55 மணி
முதல் நேரலையாகக் காணலாம்.

பெய்ஜிங் 2022 போட்டியை

காலை 9.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்,

பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும்

இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் என

ஒவ்வொரு நாளும் மூன்று முறை Sukan RTM அலைவரிசையில் ஒளிபரப்பட்ட உள்ளது.

அதே சமயம், காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி
ஒளிபரப்பப்பட உள்ளது.

மிக முக்கியமாக மலேசியாவைப் பிரதிநிதித்து 17 வயது Salehhuddin , Alpine Ski போட்டியில் slalom
பிரிவிலும் பெண்களுக்கான giant slalom பிரிவிலும் கலந்து கொள்வது அதிக கவனத்தை ஈர்க்கும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
RTM இன் இகச் சிறந்த வருணனையாளர்களான Rasdi Jumaat, Syafiq Asyraf, Dr Harmi Taazim
ஆகியோர் போட்டிகல் குறித்த மிக அண்மையத் தகவல்களை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூப்பந்து

நாட்டின் முதல்நிலை பூப்பந்து விளையாட்டாளர்களான Lee Zii Jia, Goh Jin Wei ஆகியோர் மலேசியப்
பூப்பந்து சங்கமான BAM இன் இரண்டு ஆண்டுகள் தடை குறித்த விவகாரம் மிக சுமூகமான முறையில்
முடிவு பெற்றுள்ளது.

தனி நபர் பூப்பந்து விளையாட்டாளராகத் தனித்து இயங்க BAM ஆல் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ள
நிலையில் உலக இளையோர் பூப்பந்து முன்னாள் வெற்றியாளரான Jin Wei க்கும் அதே ஆசீர்வாதம்
கிடைத்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த BAM இன் தலைவர் Tan Sri Mohamad Norza Zakaria குறிப்பிடுகயில்,
இரு விளையாட்டாளர்களுமே இனி தனித்து இயங்க அனுமதிக்கப்படுவதோடு எந்தவித நடவடிக்கையும்
அவர்கள் மீது எடுக்கப்படாது எனக் குறிப்பிட்டார்.

மேலும், Zi Jia அனைத்துலக நிலையிலானப் போட்டிக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்ளவும்


அனுமதிக்கபடுகின்றனர்.

அதே சமயம், தேசிய விளையாட்டாளராக Jin Wei பதவி விலகியதை BAM ஏற்றுக் கொள்வதாகவும் உடல்
சுகாதாரம் காரணமாக அவர் விலகிக் கொள்வதையும் உறுதிப்படுத்தினார்.
இதன் தொடர்பில் பிரதமரையும் சந்தித்து அனைத்துப் பூசல்களும் சுமூகமான முறையில்
தீர்க்கப்பட்டிருப்பதைத் தெரிவித்திருப்பதையும் சுட்டிக் காட்டிய Tan Sri Mohamad Norza, அச்செய்தி
கேட்டு பிரதமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் சொன்னார்.
தனித்து இயங்கத் தொடங்கி விட்டாலும் நாட்டிற்காக மிகச் சிறந்த முறையில் நற்பெயரைப் பெற்றுத் தர இரு
விளையாட்டாளர்களுக்கும் பிரதமர் ஆலோசனை வழங்கி இருந்தார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் தலையிட்டு தீர்வுக்கு வழி வகுத்த பிரதமர், Mohamad Norza,
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Datuk Seri Ahmad Faizal Azumu ஆகியோருக்கு Jin Wei
தமது நன்றியை முகநூல் பக்கத்தின்வாயிலாகத் தெரிவித்தார்.

You might also like