You are on page 1of 1

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டக் குடும்பங்களுக்கு 4 அமைப்புகளின் உதவிப்

பொருட்கள் !

ஶ்ரீ மூடா | 28/12/2021 :-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 அரசு சாரா அமைப்புகள் உதவிப்
பொருட்களை வழங்கியுள்ளன.

சிலாங்கூரின் பத்து 8, ஶ்ரீ மூடா, மேரு ஆகியப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்
பொருட்களை புக்கிட் பிந்தாங் ரோட்டரி கிளப், சிலாங்கூர் பீப்பல்ஸ் வோய்ஸ், Pertubuhan Pusat
Pemulihan Dalam Komuniti Bandar Botanic, Pertubuhan 99 Kebajikan Insan Selangor
ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கியுள்ளன.

பொது மக்களிடம் இருந்து உதவிப் பொருட்கள் திரட்டப்பட்டதோடு 4 இயக்கங்களின் தனிப்பட்ட


பங்களிப்பும் இருப்பதாக புக்கிட் பிந்தாங் ரோட்டரி கிளப் அமைப்பின் சமூக சேவைப் பிரிவின் இயக்குநர்
மகேஸ் தெரிவித்தார்.

ஶ்ரீ மூடாவில் ஒரு கிடங்கில் பொருட்கள் திரட்டப்பட்டு பின்னர் 3 பகுதிகளாப் பிரித்து அவற்றை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளித்தாக மகேஸ் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களும் சுத்தம் செய்வதற்கான சவர்க்காரமும் வழங்கப்பட்டன.

வெள்ளத்தால் சேதமடைந்த குடும்பத்தினர் வழக்கு நிலைக்குத் திரும்ப பெரும் சிரமத்தை


எதிர்கொண்டிருப்பதால், மனிதாபிமான அடிப்படையிலும் அவ்வமைப்புகளின் சமூகக் கடப்பட்டின்
காரணமாகவும் இந்த உதவி வழங்கப்பட்டதாக மகேஸ் மேலும் சொன்னார்.

You might also like