You are on page 1of 6

வேலையைக் கொடுக்க நாங்கள் தயார் !

ஆனால் உள்ளூர்வாசிகளின்
ஆதரவில்லையே ! – மைக்கி தலைவர்
கோலாலம்பூர் | 30/9/2021 :-
முடக்கம் கண்டுள்ள பல வணிகங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய்
தளர்வுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அதற்கு வேலை செய்ய ஆள் இல்லாமல் இருப்பது
பெரும்பிரச்சனையாக உள்ளது.
குறிப்பாக, இந்தியப் பாரம்பரிய வணிகங்களான ஜவுளி, நகைக்கடை,
உணவகங்கள் போன்ற வியாபாரங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால்
நிலைமை மோசமடைந்துள்ளதாக மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல்
சங்கங்களின் சம்மேளனம் எனப்படும் மைக்கியின் தேசியத் தலைவர்
டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனை என்பது இன்று
நேற்று தொடங்கியதோ அல்லது கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில்
உருவெடுத்தப் பிரச்சனையோ அல்ல.
ஆகக். கடைசியாக, 2016 ஆம் ஆண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்
தருவிக்க அனுமதி கிடைத்ததைச் சுட்டிக் காட்டிய கோபால கிருஷ்ணன்,
இப்போதுள்ள முடக்கத்தால், ஒட்டு மொத்தத்தில் இந்திய வணிகர்கள் 30%
பெரும் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இந்திய சமுதாயத்தில் 80 முதல் 90
விழுக்காடு வரை அதன் தாக்கம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை விவகாரத்தில், கோவிட்-19 க்கு
முன்னர் அரசாங்கத்தின் கொள்கையைக் காரணம் காட்டப்பட்டதாகவும்,
தர்போதையச் சூழலில் 4.5 விழுக்காடு மலேசியர்களின் வேலையில்லாத்
திண்டாட்டத்தைக் காரணமாக அரசாங்கம் கூறூவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கும் My Future Jobs போன்ற தளங்கள் தொடங்கி
தொழிலாளர் தேவைப்படும் நிறுவானங்கள், கடைகளுன் முன்புறம்
பதாகைகள் உட்பட அனைத்து முயற்சிகளும் செய்தாகி விட்டது.
நியாயமான ஊதியமும் உறுதியளிக்கப்பட்டு இருந்தாலும்,
உள்ளூர்வாசிகளின் ஆதரவு கிடைக்காதச் சூழலில் தான் வெளிநாட்டுத்
தொழிலாளரின் தேவை ஏற்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் ஏற்பட்ட முடக்கத்தால்,
வியாபாரத் தலம் செயல்பட அனுமதி வழங்கப்படாத நிலையில் சிரமப்
பட்டதாகக் குரிப்பிட்ட அவர், இப்போது வியாபாரம் செய்ய அனுமதி
இருந்தும் பணியாட்கள் இல்லாதச் சூழலில் வியாபாரம் செய்ய முடியாதச்
சூழலுக்கு வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டில் 4.5 விழுக்காட்டினர், அதாவது 800,000 க்கும் மேற்பட்டோர்
வேலையில்லாமல் இருக்கின்ற நிலையில், நாங்கள் வேலையைக்
கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதனைப் பயன்படுத்திக்
கொள்ள மலேசியர்கள் தயாராக இல்லை. இதில் எங்கள் மீது எந்தத் தவரும்
இல்லை.
பெரும்பாலானோர் நிர்வாகம், போக்குவரத்து (ஓட்டுநர்) போன்ற
வேலைகளைக் குறி வைத்து இருப்பதால், சேவை, உற்பாத்தி வேலைகளில்
நாட்டமில்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவை சீராக இயங்கினால்,
அவற்றை நிர்வகிக்கவும் ஒருங்கிணைக்கவும் நிச்சயமாக மலேசியகளுக்கு
வேலையை வழங்குவோம்.
இவ்விவகாரத்தில் மனிதவள அமைச்சர் ஆதரவாக இருந்தாலும், பிரதமரும்
தனையிட்டு நலிந்து கிடக்கும் இந்தியப் பாரம்பரிய வணிகங்களுக்கு
உயிரூட்ட வழி வகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
தொடரும்...

முதல் எம்சிஓவில் சேமிப்பு காப்பாற்றியது ! 2 வது எம்சிஓவில் அடமானப்


பொருட்கள் காப்பாற்றியது ! 3 வது எம்சிஓவில் கிட்னி தான் மிச்சம் உள்ளது
! – தட்டுத் தடுமாறும் இந்திய முசுலிம் உணவகங்கள்

வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை (பகுதி 2)

கோலாலம்பூர் | 1/10/2021 :-

முந்தைய எம்சிஓ நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் சேமிப்பு,


பணம், நகை என எல்லாம் பயன்படுத்தப்பட்டு விட்டது. இனி மிச்சம்
இருப்பது கிட்னி மட்டும் தான். அதைத் தான் விற்க வேண்டியச் சூழல்
உள்ளது என இந்திய முசுலிம் உணவக உரிமையாளர்கள் வேதனையில்
கூறுவதாக மலேசிய இந்திய முசுலிம் உணவக உரிமையாளர் சங்கம்
ப்ரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தெரிவித்தார்.
வியாபாரம் செய்ய அனுமதியும் கால அளவு நீட்டிப்பையும் அரசாங்கம்ம்
வழங்கி இருந்தாலும், தொழிலாளர் பற்றாக்குறையால் உணவகங்களின்
செயல்படும் நிலை இன்னும் முடக்கத்திலேயே இருப்பதாக அவர் சுட்டிக்
காட்டினார்.

முன்னாள் அமைச்சர் துன் சாமிவேலு காலத்தில், அதாவது 1993 – 1994


காலத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர் விவகாரம் குறித்து மிகவும்
துணிச்சலாக நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பேசினார்.
அதற்குப் பிறகு அது போன்று எந்தவித உதவியும் எங்களுக்குக்
கிடைக்கவில்லை.

பின்னர் டத்தோ ஶ்ரீ சரவணன் நேரடியாக எங்களைச் சந்தித்து


இவ்விவகாரம் குறித்து சில நம்பிக்கையான வார்த்தைகளைக்
கொடுத்துள்ளார்.

தற்போதுள்ள தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலால், இந்திய முசுலிம்,


இந்திய உணவகத் துறைக்கு மட்டுமே 10,000 வேலையாட்கள்
தேவைப்படுகிறது என ஆள் பல இலாகாவிடம் நேரடியாகவே கேட்டோம்.
ஆனால், இந்தத் துறைக்கு அவ்வளவாக நாட்டமில்லாமல் இருக்கிறார்கள்
என இலாகாவினர் தெரிவித்ததாக ஜவஹர் அலி சொன்னார்.

முன்னர் இந்த துறை சார்ந்த வேலை 3D வேலை என (Dirty, dangerous and


demeaning) அழுக்கான, ஆபத்தான, கடினமான வேலைகளாகப்
பார்க்கப்படுகின்றன. அதனால்தான் என்னவோ, உள்ளூர்வாசிகள்
அத்தொழில்கள் ஈர்க்கவில்லை போலும்.

அண்மையில் கூட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இறக்குமதி விவகாரத்தில்


15% ஆகக் கட்டுப்படுத்தப்படும் என ஐந்தாண்டுத் திட்டமான 12 வது
மலேசியத் திட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
தெரிவித்தார்.

ஆனால், வெளிநாட்டுத் தொழிலாளர்களையே அதிகமாக சார்ந்திருக்கும்


சிங்கப்பூர், புருனெய், துபாய் போன்ற நாடுகளில் இவ்விவகாரத்தி,
எவ்வாறான நடவடிக்கைகளும் முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதை
அரசாங்கம் ஆய்வு செய்யுமேயானால், தற்போது நிலவி வரும் வெளிநாட்டுத்
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இயலும்.

பெர்க்கேசோ போன்ற அமைப்புகளின் வழி பெஞ்சானா திட்டத்தின் கீழ்


ஜவுளிக்கடை,, நகைக்கடை,, மளிகைக்கடை, முடிதிருத்தகம், உணவகங்கள்
ஆகியவற்றுக்குத் தேவையான வேலை வாய்ப்பு குறித்து
விளம்பரப்படுத்தப்பட்டாலும் அஃது உள்ளூர்வாசிகளின் தேர்வாக இல்லை
எனக் கூறப்பட்டதாக ஜவஹர் அலி சொன்னார்.

அண்மையில், உணவகங்களை காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி


வரை இயங்க அனுமதியை அரசாங்கம் கொடுத்திருந்தாலும், அந்த நேர
அடிப்படையில் பல உணவகங்கள் இயங்கத் தயாராக இல்லை. காரணம்
பணியாள் பற்றாக்குறை.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு முன்னர், அரசாங்கத்தின்


கொள்கைப்படி, CHECK – OUT MEMO வழி ஒரு வெளிநாட்டுத் தொழிலாளர்
சொந்த நாட்டுக்குத் திரும்பினால், அவருக்கு மாற்றாக இன்னொரு
தொழிலாளரை அரசாங்கம் கொடுக்கும் என உறுதிப்படுத்தப்பட்டு
அனுமதியும் வாங்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்ப்பாராத வண்ணம்
கோவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கத்தால் அது கிடப்பிலேயே உள்ளது.

அது காலாவதியாகி விட்டதால், மீண்டும் அதற்கான விண்ணப்பத்தைச்


செய்திருப்பதாக அவர் சொன்னார்.

பெருந்தொற்று அச்சத்தால், சொந்த நாட்டிற்குத் திரும்பிய வெளிநாட்டுத்


தொழிலாளர்களை My Travel Pass வாயிலாக மீண்டும் மலேசிவுக்குக்
கொண்டு வர ஏற்பாடு செய்யலாம். ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டதால், விசா,
வேலை அனுமதி போன்றவை காலாவதி யாகி இருக்கக்கூடும். இதற்கு
அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் நாணய மாற்றுத் தொழில் நம்மவர்கள் நடத்தி வந்தனர்.


இப்போது அது காணாமல் போகும் சூழலில் இருக்கின்றது. அந்த
வரிசையில், உணவகத் தொழிலும் வந்து விடுமோ எனும் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.
முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில், சேமிப்பு
எங்களைக் காப்பாற்றியது. மோரோட்டோரியம் கொஞ்சம் கை கொடுத்தது.
இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் சில நகைகள்
சொத்துகள் போன்றவற்றை அடமானம் வைத்துக் காலம் தள்ளப்பட்டது.
மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் கிட்னியை
விற்கும் சூழலுக்கு வந்து விடுவோமோ ?

மோரோட்டோரியத்தைப் பெறவே சில மாதங்கள் ஆயின. பேங்க் நெகாரா


பரிசீலித்து கொடுத்திருந்தாலும் அதன் வட்டி விகிதங்கல் மிக அதிகமாக
இருந்தன.

இவ்வளவு சவால்களைக் கடந்து எல்லாராலும் தொடர்ந்து இந்தத் துறையில்


நீடித்திருக்க முடியாது.

பிரெஸ்மாவைப் பொருத்தவரையில், தங்களின் 12,500 க்கும் மேற்பட்ட


உணவக உரிமையாளர் உறுப்பினர்களில் ஏறத்தாழ 2,000 க்கும்
மேற்பட்டவர்கள் தங்களின் உணவகங்களை நிரந்தரமாக மூடிவிட்டனர்
எனக் குறிப்பிட்டார்.

உணவகங்கள் செயல்பட அனுமதி இருந்தாலும் தொழிலாளர்


பற்றாக்குறையால் இயங்க முடியாமல் போகிறது. அதன் தொடர்ச்சியாக,
நிதிப் பிரச்சனை, வாடகை, மாதாந்திர வங்கிக் கட்டணம் போன்ற நிரந்தர
செலவுகள் ஆகியவற்றால் இன்னும் பல உணவகங்கள் நிரந்தர மூடுவிழா
ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அரசாங்கம் விதிக்கின்ற விற்பனை – சேவை வரியைச் சேகரித்துக்


கொடுக்கும் இடைத் தரகராக மட்டுமே வணிகர்கள் இருக்கிறார்கள். மேலும்
வருமான வரியைச் செலுத்திக் கொண்டும் இருப்பதாகவும் அதனைச்
செலுத்துவதற்குத் தாங்கள் இயங்க உரிய தொழிலாளர் பற்றாக்குறையை
அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
வணிகர்கள் நலமாக இருந்தால் அரசாங்கத்தின் வருமானத்திற்குக் குறை
நேராது.

மேலும், உணவகங்கள் செயல்படுவது தடைபடுமேயானால், அவர்களைச்


சார்ந்திருக்கும் மளிகைக் கடைகள், மொத்த – சில்லறை வியாபாரிகள்,
காய்கறி, உணவை சமைக்கத் தேவையானப் பொருட்களை விற்பனை
செய்யும் அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்படுவர்.
இது பலர் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு தொடர் வலைப் பின்னல்.

ஆகவே, மொத்தச் சுழற்சியும் கால ஓட்டத்தில் பாதிப்புகளைச் சந்திக்காமல்


இருக்கவும் தொடர்ந்து தடையில்லாமல் உணவகங்கள் இயங்கவும்
அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறையை உடனடியாகத்
தீர்த்து வைக்க வழி வகை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

You might also like