You are on page 1of 17

கிராம மலர்

மலர் 01 இதழ் 01

கெடு முன் கிராமம் சேர்


கிராமிய இயக்கத்தின் இணையதள வெளியீடு
கிராமிய‌இயக்கமும் கிராம மலரும்- ஒரு அறிமுகம்

"இந்தியா அதன் கிராமங


் களிலே வாழ்கிறது" என் றார் காந்திஜி. 1934 ல் அவர் இந்திய தேசியக்
காங
் கிரஸில் இருந்து விலகினார். அப்போது காங
் கிரஸிடம் வேறு ஒரு அமைப்பை
ஏற்படுத்தவும் அனுமதி பெற்றுக் கொண் டார். அதுதான் "அகில இந்திய‌கிராமத்
தொழில் களின் குழுமம்" ( All India Village Industries Association). அதற்கு அமைப்பாளராகவும்,
செயலாள‌ராகவும் அவரின் சீடரான பொருளியல் மேதை குமரப்பாவைத் தேர்ந்தெடுத்தார்.
தேசிய சுதந்திரம் பெறக் காங
் கிரஸ
் எவ
் வளவு முக்கியப் பங
் கு வகித்ததோ அதே போல்
இந்தியா சமூக‌விடுதலை அடைய வேண் டுமானால் கிராம சுயராச்சியம் முக்கியம் என் று
காந்தி அசையாத கொள் கை கொண் டிருந்தார். அதற்குப் பொருளாதார சுயசார்பு மிக
முக்கியம் ஆதலால் , கிராமத் தொழில் கள் , கிராம சுயராச்சியத்திற்கு மிகவும் அவசியம் என் று
அவர் சுதந்திரத்திற்கு மிக முன் னரே உணர்ந்திருந்தார்.

அதன் பின் னர் நம்மை ஆண் ட வெவ


் வேறு கட்சிகளும் வெள் ளையரை விட இனத்தாலும்
நிறத்தாலும் மட்டுமே மாறுபட்டன - கொள் கைகளிலோ, திட்டங
் களிலோ மேலை
நாடுகளைக் காப்பி அடிப்பது மட்டுமே செய்தன. அவர்களை விடவும் அதிகமாக ஊழல் ,
சுரண் டல் என் று தன் சொந்த ஆதாயத்தை மட்டுமே முழு முனைப்புடன் தேடின. அதன்
விளைவுதான் நாம் இப்போது காணும் இந்தியா. நேருவால் செயலாக்கம் செய்யப் பட்ட புதிய
இந்தியா - மேலை நாடுகளைப் போலவே இயந்திரமயமாக்கல் , நவீன மயமாக்கல் , ஏற்றுமதி-
இறக்குமதி, ராட்சத உற்பத்தி மற்றும் நகர‌ம் சார்ந்த பெரும் தொழிற்சாலைகள் என் ற
பாதையைத் தேர்ந்தெடுத்தது. இதுவே மேம்படுத்துதல் , முற்போக்கு என் று பெரிதும் பிரசாரம்
செய்து இப்போது 70 வருடங
் களில் கிராமங
் களின் நிலைமை மிகவும் கவலைக்கு இடம் ஆகி
விட்டது. 60 சதவிகித மக்கள் வாழும் கிராமங
் களை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு
நகரங
் களை மட்டும் முன் னேற்ற திட்டப் பணிகளும், செலவினங
் களும், சட்டங
் களும்,
கொள் கைகளும் (கொள் ளைகளும்) ஏற்படுத்திக் கொண் டிருந்தால் பாதி இந்தியா அழிந்து
விடும் என் பதில் ஐயமில் லை.

ஊரக வளர்ச்சி என் ற பெயரில் அரசு இயந்திரங


் கள் செய்வதெல் லாம் கிராமங
் களை நகர
மயமாக்க முயற்சிப்பதே . ( கிராமம் தற்சார்பு அடைந்தால் நகரத்தில் இருப்போருக்கு என் ன
வேலை இருக்கும் ? எனவே கிராமம் நகரத்தையும், அதில் உள் ளவரையும் சார்ந்தே
இருக்குமாறே திட்டங
் கள் தீட்டப் படுகின் றன - தன் னைத் தானே ஆண் டு கொள் ளும் ஒரு
கிராமத்தை யாரால் என் ன செய்ய இயலும் ? அப்புறம் எப்படிக் கிராமத்தைச் சந்தையாக
மாற்றி அங
் குள் ள அப்பாவி மக்களுக்கு செல் போன் , சிம் கார்டு, பெட்ரோல் , பற்பசை,
சோப்பு, பிஸ
் கட் போன் றவற்றை விற்பது ? 70 கோடிப் பேர் கொண் ட சந்தையைக் கறக்காமல்
விடலாமா? பெரும் பொருளாதாரக் கொலையாகி விடுமே!)

மறுபக்கமோ நகரங
் களின் நிலைமை சொல் லொணா அவ‌லமாக இருக்கிறது. நீர், நிலம்,
காற்று, வெளி, சக்தி (நெருப்பு) என் று பஞ் ச பூதங
் களுக்கும் பெரும் பஞ் சமான நகர
வாழ்க்கை, மிக அதிக சூழல் கேட்டுடன் பணக்காரர்கள் மட்டுமே நன் றாக வாழ இயலும்
நிலையில் இருக்கிறது. ஒரு அழகான அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அடித்தளங
் கள்
வேகமாகச் சிதிலம் அடைந்து கொண் டிருப்பது போல் தற்போதைய நகர வாழ்வு இருக்கிறது.
கீழ்த்தளத்தில் சதா போராட்டமான வாழ்வு - மேலே உள் ளவர்கள் இன் னும் இடிபாடுகளை
உணராமல் சொகுசுக் கார்களில் பீட்ஸா, ஐஸ
் க்ரீம், பார், சினிமா என் று வாழ்ந்து
கொண் டிருக்கிறார்கள் . இதன் முற்றிலும் நிலையற்ற தன் மையைக் கண் ணுக்குத் தெரியாத
ஒரு பூச்சி கடந்த ஆறு மாதங
் களாக சாயம் வெளுத்துக் கொண் டிருக்கிறது. ஒரு 75 வருடம்
கூடத் தாக்குப் பிடிக்க முடியாத வாழ்முறையை (அழிமுறையை!) எப்படி நாகரிகம் என் று
ஏற்றுக் கொள் வது? முற்போக்கானது என் று பெயரிடுவது?

இந்நிலையில் , மக்கள் நகரங


் களில் இருந்து கிராமங
் களுக்குப் பெயர்வது ஒரு மிக நல் ல
தீர்வு. இதற்குக் கிராமத்தில் வேலை வாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் தேவை.
நகரங
் களில் நாற்பதாயிரம் சம்பாதிப்பதும் கிராமத்தில் , சொந்த வீட்டில் , சொந்த நிலத்தில்
பத்தாயிரம் சம்பாதிப்பதும் ஒன் றுதான் . கிராமங
் களுக்குப் புத்துயிரும், புதுப்பொலிவும்
மீட்டுப் பழைய கௌரவத்துடன் "நான் வாடிப்பட்டியில் வசிக்கிறேன் - இயற்கை
விவசாயமும், சுய தொழிலும் செய்கிறேன் ; நான் கவுந்தப்பாடியில் இயற்கை உணவகம்
வைத்திருக்கிறேன் " என் று இளைஞர்கள் தலை நிமர்ந்து மார்தட்டிச் சொல் ல வேண் டும்.
நகரத்தில் உள் ள படித்த இளைஞர்கள் " நெட்ல பார்த்தேம்பா; கொல் லுமாங
் குடில பற்பசைக்
கம்பெனில விற்பனை மேலாளாருக்கு MBA வேணுமாம் - விண் ணப்பம் போடுடா" என் று
கிராமம் நோக்கி வரவும் செய்ய வேண் டும்.

உலகிற்கு உயிரும் உணவும் அளிக்கும் கிராமங


் களுக்குக் குரல் கொடுக்கவே ஆளில் லாத‌
இச்சூழலில் , இக்கொள் கைகளைப் பரப்பவும், அதற்கான அடித்தளங
் களை ஆராயவும், இக்
கருத்துக்களைப் பிரசாரம் செய்யவும் ஒரு இயக்கம் தேவைப்படுகிறது. இதற்கு எளிமையாக
"கிராமிய இயக்கம்" என் று பெயரிடலாம். இது இன, நிற, மத, மொழி வேற்றுமையின் றி
அனைவருக்கும் பொதுவான ஒரு இயக்கம். இதன் பிரசார பீரங
் கியாக "கிராம மலர்"
அமையும். கிராம மலர்ச்சிக்கு அடிகோலுவதால் இப்பெயர்!

சுருங
் கக் கூறினால் , நான் கு நோக்க‌ங
் களுடன் நம் இயக்கம் செயல் பட வேண் டும்

1. கிராமம் பொருளாதாரத் தற்சார்பு அடைய வேண் டும் - அனைவருக்கும் நிரந்தர‌வேலை


வாய்ப்பு உருவாக்க வேண் டும்.
2. இளைஞ‌ர்களைக் கிராமத்திலேயே இருத்த வேண் டும் ; நகரத்து இளைஞர்கள் கிராமம்
நோக்கி வர வேண் டும்
3. கிராமத்தில் இருப்பது சமூகத்தில் ஒரு பெருமைக்கு உரிய விஷயம் ஆக வேண் டும்.
பெண் ணை அமெரிக்க மாப்பிள் ளைக்குக் கொடுப்பதை விட ஆரணியிலும்,
அரிகேசநல் லூரிலும் கொடுக்கப் பெற்றோர்கள் போட்டியிட வேண் டும்!
4. அனைத்திற்கும் மேலாக இவையனைத்தும் கிராமத்து இயற்கை வளங
் களைச்
சுரண் டாமல் , சூறையாடாமல் உருவாக்க வேண் டும். கிராம வளங
் களைப் பாதுகாப்பதே
நிலைத்த பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும்.

மனித இனம் தன் னைப் பாதுகாத்துக் கொள் ள வேண் டும் என் ற‌முற்றிலும் சுயநல‌மான
காரணத்திற்கேனும் நாம் கிராமத்தையும், இயற்கையையும் அதன் வளங
் களையும்
பாதுகாக்க வேண் டும்.

கெடுமுன் கிராமம் சேர் என் பது நம் தாரக மந்திரம். இதைச் செயலாக்க முனைவதே நம்
இயக்கம்.
வந்தனைத் தொழில்கள்
பயணி

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என் றார் மகாகவி. இன் று உழவும்


தொழிலும் மிகவும் சேய்மைப் பட்டு, கிராமத்தில் உள் ள ஒரே தொழில் விவசாயம் என் றும்
அதுவும் அவ
் வள‌வு லாபகரமாக இல் லை என் றும் மாறி விட்டது. நகரத் தொழில் களோ,
சற்றும் வந்தனைக்குத் தகுதி அற்றவையாய், பெரும் முதலீடும், இயந்திரங
் களும், ஆற்றல்
பசியும் கொண் டவையாகவும், மிகக் குறைந்த ஆட்களுக்கே வேலை கொடுப்பவையாகவும்
உள் ளன. லாபம் மட்டுமே தொழிலின் நோக்கமாகி விட்ட சூழலில் , இன் று பாரதி இருந்தால் ,
"வீணில் உண் டு கொழிக்கும் தொழிலை நிந்தனை செய்வோம்" என் று பாடியிருப்பார். நகரத்
தொழில் கள் இயற்கை அழிவினால் மட்டுமே உற்பத்தி செய்வதோட‌ன் றி, மாணிக்க வாசகர்
சொன் னது போல் "சூதும், பல பொய் பேசியதுமாக" உள் ளன. சூழ்ச்சியும், பொய்யும், சூதும்
அற்ற தொழில் என் பது மானிடர்களின் தேவை மட்டுமல் ல, அடிப்படை உரிமையும் கூட.

தொழில் கள் நகரம் சார்ந்து போவதன் மற்றொரு பரிமாணம் என் னவென் றால் , விவசாயி
எப்பொழுதும் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை (raw material ) மட்டுமே ,
அறிந்தோ அறியாமலோ, உற்பத்தி செய்கிறான் . மூலப்பொருட்களின் விலையை
முடிந்தவரை குறைவாக வைத்துக்கொள் வது எல் லாத் தொழில் களின் பாதுகாப்பிற்கும்,
வளர்ச்சிக்கும் அடிப்படைப் பொருளாதாரத் தேவை ஆதலால் , விவசாயிக்கு ஒரு
நியாயமான விலை கிடைக்க இயலாமலே இருக்கிறது. இதனால் விவசாயம் ஒரு
லாபமற்ற/லாபம் குறைந்த‌ தொழிலாக மாறி, அதன் ஆள் ஈர்க்கும் திறனும் மிகவும் மெலிந்து
விடுகிறது. வேறு வேலைக்குத் திறமையற்றவர்கள் விவசாய வேலைக்கு வருவதும்,
படித்தவர்கள் , தொழில் முனைவோர் மற்றும் நிபுணர்கள் அனைவரும் நகரம் சென் று
விடுவதும், கிராமத்தில் ஒரு மூளைப் பற்றாக்குறை (brain drain)ஏற்பட்டு விடுவதும் ஆக
உள் ளது.

இச்சூழலில் , கிராம முன் னேற்றத்திற்கு உழைக்க விரும்பும் அனைவரும், கிராமப் புரங


் களில்
அண் மைத் தொழில் கள் எவ
் வாறு உருவாக்குவது என் று கூர்ந்து ஆராய வேண் டும்.
அண் மைத் தொழில் கள் என் றால் இரு விதமாகப் பொருள் கொள் ளலாம்: மூலப்
பொருட்களுக்கும், உற்பத்திக்கும், நுகர்வோருக்கும் இடையில் அதிக தூரம் இல் லாமல்
அண் மையாய் (local) இருப்பது; இன் னொன் று விவசாயத்திற்கும், கிராம
வாழ்க்கைக்கும்,நேர்மைக்கும் அந்நியப் பட்டுப் போகாமல் நெருக்கமாய், அண் மையாய்
(close, integrated) இருப்பது. முன் னது இயற்கைக்கு நல் லது; பின் னது மனித மனத்திற்கு
நல் லது. இரண் டையும் உள் ளடக்கிய‌, நேர்மையான தொழில் களுக்கு நாம் வந்தனை
செய்வோம். அத்தகைய‌ வந்தனைத் தொழில் களை எவ
் வாறு கிராமங
் களில் நிறுவுவது,
அவற்றின் லட்சணங
் கள் என் ன, அதன் விளைவுகள் என் ன என் று பார்ப்பதே
இக்கட்டுரையின் நோக்கம்.
இன் று மேம்படுத்துதல் (development) என் று சொல் லப்படும் இயந்திரமய‌மான உற்பத்திக்கு
உலகளாவிய ஆதரவு உள் ளது - விஞ் ஞானிகள் , பொருளாதார மேதைகள் ,
அரசியல் வாதிகள் , அரசுக்கள் , வியாபாரிகள் , பாமர மக்கள் என் று மானுடத்தின் 99 %
மக்கள் சேய்மை உற்பத்திதான் பொருளாதார வளர்ச்சி (centralized production is economic
growth) என் று நம்பிக் கொண் டிருக்கின் றனர். அது சரியா என் று யாரும் கேட்பதில் லை -
கேட்டால் 'உருப்படாத வெட்டிப்பயல் ', 'மனித முன் னேற்றத்திற்கு எதிரி', ஹிப்பீ
(Hippie)போன் ற அவச் சொற்கள் அள் ளி வீசப்படுகின் றன. எனினும், இச்சகத்துளோரெலாம்
எதிர்த்து நின் ற போதிலும் உண் மையைக் கண் டறிவது என் ற பிடிவாதம் கொண் ட நாம்
அதைப் பொருட்படுத்தாமல் சற்று மெய்ப்பொருள் காண முயல் வோம். இந்த சேய்மை
உற்பத்தியின் முதல் இயல் பு என் னவென் றால் , இயற்கை வளங
் களை அழித்து, மிகுந்த
சக்தியை உள் வாங
் கி தேவைக்கும் அதிகமான அளவு பொருட்களை உற்பத்தி செய்வது,
உபரி உற்பத்தியை தூர தேசங
் களுக்குக் கொண் டு சென் று தேவை இருக்கிறதோ இல் லையோ
அம்மக்களுக்கு விளம்பர உத்திகளுடன் மூளைச் சலவை செய்து அப்பொருட்களைத்
தலையில் கட்டிவிட்டு தன் லாபத்தைப் பெருக்கிக் கொள் வதுதான் .

கிராமத்தைப் பொருத்தவரை, உழவும் தொழிலும் ஒன் றுக்கு ஒன் று இசைந்து, இசையும்,


தாளமும் போல இயங
் க வேண் டும். இயற்கை வேளாண் மை என் பது கிராமப்
பொருளாதாரத்திற்கு இன் றியமையாத ஒன் று. உழவன் விடுதலை என் பது கிராம
சுயராச்சியத்திற்கும், சூழல் மற்றும் சமூக நலத்திற்கும் இன் றியமையாத ஒன் று. இதில்
மாற்றுக் கருத்துக்கே இடமில் லை. உழவு ஒரு வெற்றிகரமான தொழிலாக மாறினால் , பல
படித்த இளைஞர்கள் தாங
் கள் பிறந்த கிராமத்திலேயே நிறைவோடு இருப்பார்கள் என் பது
திண் ணம். நான் சந்திக்கும் பல இளைஞர்கள் , "வருமானத்திற்கு நல் ல வாய்ப்பிருந்தால்
நாங
் கள் எங
் கள் பிறந்த மண் ணை விட்டு புகைச்சலும், இரைச்சலும் நிறைந்த நகரங
் களுக்கு
ஏன் போகிறோம்? ஆனால் விவசாயத்தை நம்பி இருக்க முடிவதில் லையே" என் று நவீன
வாழ்முறையின் சிக்கலை வெளிப்படுத்துகிறார்கள் .

இயற்கை வேளாண் மை என் பது மண் ணையும், நுகர்வோரையும் காப்பாற்றலாம் - ஆனால்


உழவனைக் காக்குமா - உழவனின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா என் பதுதான் நாம்
கேட்க வேண் டிய முக்கிய கேள் வி. செயற்கை வேளாண் மை காக்கப் போவதில் லை என் பது
பச்சைப் புரட்சிக்குப் பின் நலிந்துள் ள உழவின் நிலையிலிருந்தே தெளிவாகிறது. ஆனால்
உழவனுக்கு இயற்கை வேளாண் மை மட்டும் பொருளாதார நிறைவு அளிக்குமா என் றால்
இல் லை என் பதே உண் மை. பாரம்பரிய விதைகளும், இயற்கை சார் தொழில் நுட்பங
் களும்
உழவனின் இடுபொருள் செலவைக் குறைத்துக் கடன் சுமையிலிருந்து காப்பாற்றும்.
"மினிமம் காரன் டி" என் று சினிமாக்காரர்கள் சொல் வது போல் ஒரு குறைந்த பட்ச
விளைச்சலுக்கும் உத்தரவாதம் அளிக்கும். இதில் ஐயமில் லை. ஆனால் தன் னிடம் உள் ள
நிலத்தில் ஒரு உழவன் நல் ல வருமானம் பெறுவது எப்படி? இதுவே உழவன் விடுதலைக்கு
ஒரு அடிப்படைக் கேள் வி.

நல் ல வருமானம் என் றால் என் ன? முதலில் அதைச் சற்று ஆராய்வோம். இக்கட்டுரை
எழுதும் நேரத்தில் சராசரியான விவசாயத் தொழிலாளியின் சம்பளம் ஒரு நாள் ரூ.500.
வருடம் 200 நாள் வேலை செய்தால் அவன் வருட வருமானம் ரூ.100,000. ஒரு உழவன் ஒரு
ஏக்கர் நிலத்தில் ஒரு விவசாயித் தொழிலாளியின் அளவாவது பொருள் ஈட்ட வேண் டும்.
இதுவே ஒரு நியாயமான வருமானமாகக் கொள் ளலாம். ஆனால் இன் றைய விவசாயத்தில்
ஒரு ஏக்கர் நிலத்தில் வருடம் 100,000 ஈட்டும் உழவர்கள் 10 விழுக்காட்டிற்கும் குறைவே.
இன் றைய கலைந்து போகும் பருவநிலையில் மூன் று போகம் என் பது வெறும் கனவாகவே
இருக்கிறது. இரண் டு போகம் ஒழுங
் காக நட்டமின் றி விளைவிக்க முடிந்தால் உழவன்
வெற்றியடைந்து விட்டதாகவே நினைக்கிறான் .

ஒரு எடுத்துக்காட்டிற்கு, 2 காணி (2.67 ஏக்கர்) நிலமுள் ள ஒரு உழவனை எடுத்துக்


கொள் வோம். நம் கணக்கின் படி, உழவன் விடுதலைக்கு இதில் இருந்து வருடம் ஒரு
ஒன் றரை லட்சமாவது வருமானம் பெற வேண் டும். சுருங
் கச் சொன் னால் ஒரு ஏக்கருக்கு
ஒரு போகம் 50,000 நிகர லாபம் பெற வேண் டும். இது எப்படிச் சாத்தியம்?

சென் னகுணம் காந்தி உழவர் சங


் கத்தில் விவ‌சாயிகள் இயற்கை நெல் சாகுபடி செய்த போது
கீழ்க்கண் ட உண் மைகள் புரிந்தது.

செயற்கை நெல் சாகுபடி

ஏக்கருக்கு

செலவு - 25,000

வரவு - 33 மூட்டை (75 கிலோ ) மூட்டைக்கு 1275 ரூ - 42000 [மிக உயர்ந்த விளைச்சல் !]

நிகர லாபம் - 17,000

இயற்கை நெல் சாகுபடி

ஏக்கருக்கு

செலவு - 19,000

வரவு - 24 மூட்டை நெல் - மூட்டைக்கு 1950 ரூ - 46800

நிகர லாபம் - 27,800

இன் னும் அடுத்தடுத்த போகங


் களில் இயற்கை வேளாண் மையில் விளைச்சல்
கூடுமேயன் றிக் குறையாது. எனவே ஒரு போகத்தில் 30,000 நிகர‌ லாபம் என் பது ஒரு எட்டக்
கூடிய எதிர்பார்ப்பே. ஆனால் இது எதனால் சாத்தியமாகிறது? நெல் கிலோ 26 ரூபாய்க்கு
சங
் கம் கொள் முதல் செய்வதால் அல் லவோ இது இயல் கிறது? காந்தி உழவர் சங
் கத்திற்கு
எப்படிச் சாத்தியமாகிறது? கொள் முதல் செய்த நெல் லை ஒரு வருடம் தூற்றிக் காய
வைத்துப் பாதுகாத்து அதன் பின் அதனை அரிசியாக அரைத்து நுகர்வோரிடம் அரிசி
கிலோ 67 ரூ என் று விற்பனை செய்வதால் சாத்தியமாகிறது.

உழவன் தன் உணவை முடிந்தவரை தானே உற்பத்தி செய்தால் இது ஒரு விதமான
வருமானமாகக் கொள் ளலாம். செலவைக் குறைப்பதும் வருமானம்தானே! ஆனால்
குழந்தைகள் கல் வி, மருத்துவச் செலவுகள் , போக்கு வரத்து என் றெல் லாம் உள் ள
செலவுகளுக்குப் பணமும் தேவைப் படுகிறது. எனவே கொஞ் சம் பணப்பயிரும் சாகுபடி
செய்ய வேண் டும். ஆனால் அரசும் விரிவாக்கப் பணியாளர்களும் கூறும் கரும்பு, மஞ் சள்
போன் ற பணப்பயிர்கள் , வியாபாரிகளுக்கும் நிறுவனங
் களுக்கும் மட்டுமே பணப்பயிர்கள் .
பெரும்பாலும் உழவனுக்கு அவை ரணப் பயிர்களே - அதிக லாபத்தைக் கருதி அதிக
முதலீடு செய்யும் சூதாட்டப் பயிர்களோ பல பருவங
் களில் பிணப் பயிர்களாகவும் ஆகி
விடுகின் றன. எனவே விடுதலையில் ஆர்வமுள் ள உழவர்கள் உணவுப் பயிர்களையே
விளைக்க வேண் டும். உணவுப் பயிர்களைப் பணப்பயிர்கள் ஆக்க விற்பனை
அமைப்புக்கள் வேண் டும்.

ஆக உழவன் விடுதலைக்கு, மூன் று விடயங


் கள் அடிப்படையில் தேவை.

- இயற்கை வேளாண் மை
- தன் உணவைத் தயாரித்தல்
- வருமானத்திற்கான பயிரும், அவ
் விளை பொருளுக்கு ஒரு நல் ல விலை கொடுத்து
வாங
் கும் ஒரு அமைப்பும்

வெறும் இயற்கை வேளாண் மை மட்டும் செய்தால் உழவன் ஒரு சக்கர மிதிவண் டி ஓட்டும்
வித்தைக்காரனைப் போல் எப்போதும் திணற வேண் டி இருக்கிறது.

சென் னகுணத்தில் நெல் கொள் முதலுக்குத் தேவைப்படும் மூலதனத்தை நண் பர்கள் வங


் கி
வட்டி வந்தால் போதும் என் ற சிந்தனையுடன் முதலீடு செய்துள் ளோம். மூலதனம் என் று
பார்த்தால் ஒரு ஏக்கர் நெல் லைக் கொள் முதல் செய்ய 35,000 ரூபாய் வேண் டியிருக்கும்.
அந்தப் பணம் வட்டியுடன் திரும்ப 18 மாதம் முதல் 24 மாதம் ஆகும். 400- 500 ஏக்கர் கொண் ட
ஒரு சிறிய கிராமம் என் று எடுத்துக் கொண் டால் , அதை மட்டும் நிர்வகிக்க ஒன் றரைக் கோடி
ரூபாய் வேண் டும்! இவ
் வளவு பணத்திற்குத் தனி மனிதர்கள் , அதுவும் தன் னார்வலர்கள்
எங
் கே போவார்கள் ?

அடுத்த பட்டத்தில் எங
் கள் சங
் க உழவர்கள் சிலர், மல் லாட்ட என் று அவர்கள் செல் லமாக
அழைக்கும் நிலக்கடலையைப் பயிர் செய்து இயற்கையாக அறுவடையும் செய்துள் ளார்கள்
- இதனைக் கொள் முதல் செய்வதானால் ஏக்கருக்கு 35,000 ரூபாய் வேண் டும். இதை மதிப்புக்
கூட்டிய பொருளாக ஆக்க ஒரு சிறு செக்கு வேண் டும். 2250 வாட் மின் சாரத்தில் மாட்டுச்
செக்கைப் போல மெதுவாக உழன் று அரைக்கும் ஒரு மர‌ச்செக்கை நண் பர் ராஜா சங
் கர்
பொள் ளாச்சி ஆனைமலையில் வடிவமைத்துள் ளார். அத‌ற்கு மூலதனம் என் று பார்த்தால்
சுமார் ஆறு லட்சம் ரூபாய் வேண் டும். இதைச் செய்தால் சுமார் 70 முதல் 80 ஏக்கரில்
விளையும் கடலையை எண் ணையாக அரைத்து அருகிலுள் ள நுகர்வோரிடம் விற்கலாம்.

இதே போல் சிறு தானியங


் களை எடுத்துக் கொண் டால் தினை, வரகு, சாமை போன் றவற்றை
மரத் திருகிலோ, இழைந்திரக் கல் லிலோ இப்போது யாரும் அரைக்கத் தயாரில் லை. நெல்
அரைக்கும் மில் போல இவற்றையும் அரைத்துத் தோல் /உமி நீக்க சிறு இயந்திரங
் கள் மிக
அவசர, இன் றியமையாத தேவையாய் இருக்கிறது. இவற்றிற்கான தொழில் நுட்ப
ஆராய்ச்சியும், பரிசோதனை முயற்சிகளும் செய்யத் தேவையான‌ நிதி ஒதுக்கீடு அரசிடமோ,
நபார்ட் போன் ற அமைப்புக்களிடமோ இல் லை என் பதே உண் மை.
இதே போல் இயற்கைப் பருத்தியில் சட்டை தயாரிக்கும் ஒரு முயற்சியிலும் தற்சார்பு இயக்கம்
முனைந்துள் ளது. 15 ஏக்கரில் மானாவாரியாக இயற்கையாக விளையும் பருத்தியைக்
கொள் முதல் செய்து அதை இயற்கைச் சாயம் , கைத்தறி போன் ற தொழில் நுட்பங
் களுடன்
சட்டையாக்கி விற்பனை செய்யும் ஒரு தொழிலுக்கு சுமார் 12 முதல் 15 லட்சம் முதலீடு
தேவைப்படுகிறது.

கிராமங
் கள் மலர்ச்சி அடையவேண் டும் என் றால் நல் ல முதலீடு தேவை. அறிஞர்
குமரப்பாவும் 60 வருடங
் களுக்கு முன் னரே " வல் லுநர்களும், தொழில் முனைவோரும் ஒட்டு
மொத்தமாய் வெளியேறுவதால் நம் கிராமங
் கள் மிகவும் நலிவடைகின் றன" (The village
suffers from the exodus of experts and entrepreneurs) என் று எழுதியுள் ளார். கிராமங
் களில்
வேலை வாய்ப்பு உருவாக்கும் சிறு தொழில் கள் , விவசாயப் பொருட்களை மூலப்
பொருட்களாகக் கொண் ட அண் மைத் தொழில் கள் தேவை.

எது சிறு தொழில் என் று கண் டறிய, Small is Beautiful என் ற நூலில் ஈ.எஃப். சூமாக்கர் ஒரு
அழகான வழி கூறுகிறார். ஒரு தொழிலை உருவாக்கத் தேவைப்படும் மூலதனம் அந்தத்
தொழில் எத்தனை வேலைகளை உருவாக்குகிறதென் று பார்க்க வேண் டும். அது
உருவாக்கும் வேலையின் ஓர் ஆண் டுச் சம்பளம் அந்தத் தொழிலின் மூலதன‌மாக இருந்தால்
அது ஒரு நல் ல சிறு தொழில் . "The capital cost of creating a job" என் று இதைப் பொருளியலில்
ஆங
் கிலத்திலே கூறுகிறார்கள் . 4300 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங
் கப்படும் ஃபோர்டு
நிறுவனத் தொழிற்சாலை 4300 வேலைகளையே உருவாக்குகிறது. ஒரு வேலை உருவாக்கத்
தேவைப்படும் மூலதனம் ஒரு தொழிலாளியின் 50 வருட சம்பளத்தை மூலதனமாகக்
கேட்கிறது! இத்தகைய தொழில் கள் மிகுந்த வன் முறையை உள் ளடக்கியவை -
முதலீட்டாளாரைத் தவிர‌ யாருடைய நன் மையையும் கருத்தில் கொள் ளாதவை. ஒரு
கிராமத் தொழிலாளியின் ஆண் டு வருமானம் ரூ 100,000 என் று கொண் டோமானால் , ஆறு
லட்ச ரூபாய் முதலீட்டில் துவங
் கப் படும் தொழில் 6 பேருக்கு வேலை கொடுக்க வேண் டும்.
இதுவே ஒரு நல் ல சிறுதொழிலின் உரைகல் .

நான் செல் லும் எல் லாக் கூட்டங


் களிலும், நான் ஒரே பல் லவியைத் தான் பாடுவேன் : நாம்,
நமக்கு இருக்கும் நில மற்றும் இயற்கை வளங
் களையும், மனித வளத்தையும் முறையாய்ப்
பயன் படுத்தினால் இந்தியன் வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல் வதை விட்டு, நாம்
வெள் ளைக்காரர்களுக்கும், பிறருக்கும் வேலை மற்றும் விஸா கொடுக்க இயலும் . இது கேட்க
விநோதமாக இருந்தாலும் இதில் உண் மை உள் ளது. இன் றைக்கு $30,000 (வருடம் 15 லட்சம்)
என் பது அமெரிக்க நாட்டிலே ஒரு நல் ல வருமானமாகக் கருதப் படுகிறது. ஒரு
முனைப்புள் ள அமெரிக்கன் நம் நாட்டிலே 15 லட்சம் முதலீடுள் ள ஒரு அண் மைத் தொழில்
தொடங
் கி உழைத்தால் , வருடம் 15 லட்சம் ஈட்டும் நிலையை 2-3 வருடங
் களில் எட்டலாம் -
இதற்குப் பல கிராமத் தொழில் கள் உள் ளன.

இன் னும் சில உதாரணங


் களைப் பார்ப்போம். 400 ஏக்கர் உள் ள ஒரு சிறு கிராமம், வருடம் 45
லட்சம் வரை உரம் மற்றும் பூச்சி கொல் லிகளுக்குச் செலவழிக்கிறது. நான் கு கிராமங
் களுக்கு
மத்தியில் ஒரு கம்போஸ
் ட் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவினால் , வருடம் 2 கோடி அதனால்
விற்பனை இலக்கை எட்ட முடியும். இயற்கை முறையில் தயாரித்த உணவுப்
பொருட்களையும், அவற்றின் மதிப்புக் கூட்டிய பொருட்களையும் (நெய், அவல் , உடைத்த
பருப்பு, வெல் லம், எண் ணெய் போன் றவை), தயாரிக்கும் சிறு தொழில் கள் கிராமத்தில்
உருவானால் , விவசாயப் பொருட்களுக்கு ஒரு நல் ல விலை கிடைக்க வழி ஆகும். தென் னை
நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழில் , வாழை நாரில் ஆடை நெய்வது, கோரைப்புல்
கொண் டு பாய் செய்வது என் று பல விதமான தொழில் கள் உள் ளன.

கிராமக் கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் உழவர்கள் தங


் கள் பொருட்களை
மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்; அதற்குத் தடையாய் இருப்பது முதலீடோ, மூலப்
பொருட்களோ அல் ல - தொழில் முனைவோரும், விவரம் அறிந்தவர்களும் இல் லாததுதான்
மிகப் பெரிய தடையாகும். எனவே கிராமத்திற்கு இன் றைய மிக அத்தியாவசியமான தேவை
வழி நடத்திச் செல் லக் கூடிய, சேவை மனப்பான் மை உள் ள நேர்மையான
தலைவர்கள் தான் .

கிராமம் நகரத்தை விடப் பெரிய சந்தை. அச்சந்தைக்கு கிராமங


் களிலிருந்தே உற்பத்தி
செய்வது கிராமத்தின் செல் வத்தை கிராமத்திலேயே இருத்த உதவும். விவிலியத்திலே
கூறியது போல எங
் கு நம் புதையல் இருக்கிறதோ அங
் கு நம் இதயமும் இருக்குமாதலால் ,
கிராம மலர்ச்சிக்கும், இளைஞர்களை கிராமத்தில் இருத்துவதற்கும், வேலை மற்றும் தொழில்
வாய்ப்பு இன் றியமையாதது. கிராமத் தொழில் என் றால் ஊதுவத்தியும், பப்படமும்
மட்டும்தான் என் று நாம் நினைத்து விடக் கூடாது. சிறு தொழில் முனைவோர்,
கிராமங
் களுக்குப் பெயர்ந்தால் , தாங
் களும் முன் னேறலாம், அங
் குள் ளவர்களையும்
முன் னேற்றலாம். உலகிலேயே உயர்ந்த கொடை தன் னைக் கொடுப்பதுதான் !

இதை அடிப்படையாகக் கொண் டு இளைஞர்களைக் கிராமத்தில் இருத்துவது எப்படி, சிறு


தொழில் கள் தொடங
் கத் தேவையானவை என் ன, உழவன் விடுதலையும், கிராம சுயாட்சியும்
எப்படி இத்தகைய சிறு தொழில் களால் சாத்தியப்படும், இதில் தன் னார்வலர்கள் எப்படிப்
பங
் கு கொள் வது, நகரத்தில் வசதியாய் இருந்தாலும் மனசாட்சி உறுத்தலுக்காய் ஏதாவது
செய்ய வேண் டும் என் று எண் ணுவோர் என் ன செய்யலாம் போன் றவற்றை வரும்
இதழ்களில் ஆராய்வோம்.

அவல் தயாரிக்கும் இயந்திரம்


யாதானும் தொழில் புரிவோம்
துல்யா

அமெரிக்காவில் தான் செய்து வந்த கணினித் தொழிலைக் கடாசி விட்டுக் கழனித்


தொழிலைக் கைக்கொண் ட நண் பர் ஜெய்சங
் கர் "விவசாயிக்கு விவசாயமும் அதன் ஊடே
வேறு ஒரு பக்க‌-வருமானத்துக்கு ஏதுவான தொழிலும் தேவை" என் பார். விவசாயிக்கு
நிரந்தர வருமானம் தேவை. மாதம் ஒரு பத்தாயிரமாவது உபரி வருமானம் இருந்தால் , கடன்
இல் லாது நிம்மதியாய் கிராமத்தில் குடும்பம் நடத்தலாம். விவசாயத்தில் ஒட்டு மொத்தமாக
அறுவடையின் போது வரும் தொகையை வைத்து ஏதாவது உருப்படி செய்யலாம். அப்படி
என் னென் ன தொழில் களைக் கிராமத்திலேயே செய்ய்லாம் என் ற கேள் வியில் பிறந்ததுதான்
இத்தொடர். அத்தகைய கிராமத் தொழில் களைக் கண் டறிந்து அதில் ஈடுபட்டுள் ளோரைப்
பேட்டி கண் டு வெளிச்சமிடுவதே இத் தொடரின் நோக்கம்.

இன் று நாம் பார்க்க உள் ள தொழில் கைவினை வகையைச் சார்ந்தது - அதுதான் தென் னங

கீற்று முடைதல் . இயற்கை முறையில் வீடு கட்டுவதற்குத் தன் வாழ்க்கையே அர்ப்பணித்துக்
கொண் ட லாரி பேக்கர் என் னும் காந்தியவாதக் கட்டிடக் கலை நிபுணர், பிறப்பில்
ஆங
் கிலேயர் ஆனாலும், ஒரு இந்தியப் பெண் ணை மணம் புரிந்து இந்தியக் குடியுரிமை
பெற்றுக் கேரளாவில் தன் பெரும்பகுதி வாழ்க்கையை வாழ்ந்தவர். அவர் இந்தியாவில்
வேலை வாய்ப்பைப் பற்றிக் கூறுகையில் , " விவசாயத்திற்கு அடுத்து அதிக மக்களுக்கு
வேலை அளிக்கக் கூடியது கட்டிடக்
கலைதான் " என் று சொல் லியிருக்கிறார்.

நம் நாட்டில் தென் னை மரங


் கள் ஏராளம் .
காய்ந்து விழும் தென் னை ஓலைகளைக்
கொண் டு கீற்றுக்கள் முடைந்து அதை
மூங
் கில் அல் லது சவுக்குத் தப்பைகளால்
ஆன சட்டங
் களில் கூரை வேய்ந்து மிக
நுட்பமான, அழகிய, வீடுகளை நம்
முன் னோர் உருவாக்கி இருக்கின் றனர்.
இன் றும் நம் தமிழ்நாட்டில் மிக
அதிகமாகப் பயன் படும் வீட்டுக் கூரைகள்
தென் னம் கீற்றால் வேய்ந்தவைதான் .
இக்கீற்றுக்கள் டெல் டா மாவட்டங
் களில்
மிகுந்த சந்தை உள் ளவை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் , ஆறுபாதி,


மன் னம்பந்தல் போன் ற ஊர்களில்
இக்கீற்று முடைவதை எல் லாரும் உப‌தொழிலாகக் கொண் டிருக்கின் றனர். நம் நிருபர்
ஜெயக்குமார் இத்தொழிலைத் தனியாகச் செய்துவரும் மன் னம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த‌
திரு. கலியமூர்த்தி (கைபேசி -8940826118) அவர்களைப் பேட்டி கண் ட போது அவர்
கூறியவை:
"டெல் டா தோப்புக்களில் , வயல் களில் உள் ள தென் னை ஓலைகள் , ஒரு ஓலை 4-5
ரூபாய்க்கு வாங
் கப் படுகிறது (உயரத்தைப் பொறுத்து). ஒரு ஓலையில் இரண் டு கீற்றுக்கள்
முடையலாம். பொள் ளாச்சித் தோப்புக்களின் கீற்றுக்களோ மிக நீளமானவை - அவற்றில்
மூன் று கீற்று முடையலாம். இவை 12 கீற்றுக்கள் கொண் ட கட்டு 90 ரூபாய் என் ற அளவில்
விற்கப்படுகிறது. எப்படியாயினும், ஒரு கீற்று முடைந்தால் 4.50 ருபாய் முதல் 5.00 ருபாய்
முடைவோரின் உழைப்புக்கு ஊதியமாகக் கிடைக்கிறது. ஒரு மணி நேரத்தில் 12 கீற்றுக்கள்
முடையலாம். ஒரு நாளில் காலை ஒரு மணிநேரம் மாலை ஒரு மணி நேரம் இதை உப‌
தொழிலாகச் செய்தால் மாதம் நபர் ஒன் றுக்கு 3000 ருபாய் ஈட்ட இயலும். 3 அல் லது 4 பேர்
கொண் ட குடும்பம் நாள் ஒன் றுக்கு 100 முதல் 150 கீற்றுக்கள் அதிக சிரமம் இன் றி
முடையலாம். குடும்ப வருமானம் பத்தாயிரம் முதல் 15000 வரை கூடுதலாகக் கிடைக்கும். [
இக்கட்டுரை எழுதும் நேரத்தில் ஒரு கீற்று 7
ரூபாய்க்கு விற்கின் றது!]

"எனக்கு மூட்டு வலி உள் ளதால் 3 மணி நேரத்திற்கு


மேல் உட்கார்ந்து செய்ய முடியவில் லை. என் றாலும்,
வேறு வேலை எதுவும் தேடத் தேவை இல் லாமல் என்
தேவைக்கு வேண் டிய வருமானம் இதில்
கிடைக்கிறது. விற்பனை என் பது பிரச்சினையே
இல் லை. நம்மிடம் கீற்று இருக்கிறது என் று
தெரிந்தால் வியாபாரிகள் அவர்களே வந்து
வண் டியில் எடுத்துக் கொண் டு போய்விடுகிறார்கள் .
பல குடும்பங
் கள் இதையே முழுநேரத் தொழிலாகக்
கொண் டிருக்கின் றன."

என் றார்.

மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் ஒரு காய்ந்த


இலைக்குள் ஒரு சிறந்த பொருளாதாரம் அடங
் கி
இருப்பது மலைப்பாகவே இருக்கிறது. இது எந்த
ஜி.டி.பி கணக்கில் வரும்? யார் இதன் மதிப்பை
அளவிடுவார்? ஒட்டு மொத்த உள் நாட்டு உற்பத்தி
என் பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானே!
மானாவாரிக்கு ஒரு மகத்தான பயிர்
ஆமணுக்கு தரும் ஊக்கம்
இராஜேந்திரன்

தமிழ்நாட்டில் மானாவாரி வேளாண் மை படிப்படியாகக் கைவிடப்படுகின் றது.வருமானக்


குறைவு, பருவமழை தவறிப்போதல் , போதிய சந்தை வாய்ப்பின் மை போன் ற
காரணங
் களால் மானாவாரி நிலங
் கள் தரிசாக விடப்படுவதும், அப்படி மீறி ஏதும் நட்டால் ,
நட்டத்தில் கொண் டுபோய் விடுவதுமாக ‌வேளாண் மை ஒரு நிலைத்தன் மை இன் றி
நடைபெறுகின் றது.மானாவாரி வேளாண் மைக்கு வழிகாட்டவோ,ஆதரவாகவோ
இருப்பவர்கள் குறைவு. நாற்பது வருடங
் களுக்கு முன் புவரை சோளம்,கம்பு,உளுந்து,
பச்சைப்பயறு, மொச்சை, துவரை, ஆமணுக்கு என பலபயிர்களைக் கலந்து ஒன் றாக
விதைத்துக் கலப்புப் பயிராக மானாவாரி வேளாண் மை ஒன் பது மாதங
் கள்
நடைபெறும்.படிப்படியாக சிறுதானியங
் கள் அறுவடைக்கு வரும்.

இதைக் கைவிட்டு ஒற்றைப்பயிராக நிலக்கடலை போன் ற பணப்பயிரை மட்டும் பயிரிடும்


போக்கு, விவசாயியின் அடிப்படை வருமானத்திற்கான உத்தரவாதத்தைப் பெரிதும்
வலுவிழக்கச் செய்து விட்டது. நாம் கைவிட்ட பயிர்கள் அனைத்தும் வறட்சியை தாங
் கும்
திறன் கொண் டவை. உழவர்களின் குடும்ப உழைப்பு இழந்ததும், மானாவாரி
வேளாண் மையின் வருமானக் குறைவுக்கு மிகப்பெரிய காரணமாகின் றது.

கிராமியப் பொருளாதாரத்தில்
வேளாண் மையின் பங
் கு மிக
முக்கியமானது. இச்சூழலில் ,
மானாவாரி வேளாண் மையை
மீட்டெடுக்க வேண் டியது நம்
அனைவரின் கடமையாகும்.
மாறிவரும் பருவம், நிலையற்ற
மழை போன் ற இடர்களை
எதிர்நோக்கி இருக்கும் உழவன் ,
வறட்சியையும்,
வெள் ளத்தையும் தாங
் கும்
பயிர்களைத் தேர்ந்தெடுக்க
வேண் டும். அவற்றில்
விளக்கெண் ணை என் று
விற்கப்படும் ஆமணக்கு
எண் ணையின் வித்தான
ஆமணக்கு [Castor - Ricinius
communis L.] மிகவும் சிறப்பான ஒரு பயிராகும்.
ஆமணக்கு விதை செலவு குறைவு,வற‌ட்சியைத் தாங
் கும், சந்தை வாய்ப்பு அதிகம்.
மோட்டார் வாகனங
் களின் எஞ் ஜின் களில் பயன் படுத்தப்படும் எல் லா எண் ணைகளும்
ஆமணக்கு எண் ணையால் தயாரிக்கப் படுபவைதான் . இன் று விளக்கு எண் ணெய் என் ற
பெயரில் விற்பனை செய்வது பாமாயில் தான் . ஆமணக்கு எண் ணெய் நமது
குடும்பத்திற்கென‌ வீடுகளில் விற்பனை செய்தாலே நல் ல வருமானம் ஈட்ட முடியும் . ஏக்கர்
ஒன் றுக்கு 300 கிலோ ஆமணக்கு கிடைத்தாலே 100 லிட்டர் எண் ணெய் 20,000 ரூபாய்க்கு
விற்பனை செய்ய முடியும். அதிக அளவில் உற்பத்தி செய்தால் கிலோ 55 ரூபாய் அளவில்
வியாபாரிகளிடம் விற்கலாம்.எப்படியாயினும் ஒரு ஏக்கருக்கு ஆறு மாதத்தில் 15,000 வரை
ஈட்ட இயலும். எனவே மானாவாரியை மீட்டெடுக்க ஆமணக்கு பெரிய அளவில் ஊக்கம்
தரும்.

மேலும் விவரம் அறிய -


ப.தி .இராஜேந்திரன் 95004 35680
கலசபாக்கம், திருவண் ணாமலை

தமிழில் மேலாண்மைக் கல்வி


கிராமப் பொருளாதாரம் முன் னேற வேண் டுமானால் , கிராமத்தில் சிறுதொழில்
முனைவோர் உருவாக வேண் டும். பெரு நிறுவனங
் கள் ஏன் தொழிலில் சிறந்து
விளங
் குகின் றன என் று பார்த்தோமானால் , அவை மிகுந்த செயல் திறனுடன் செயல்
படுகின் றன என் பது தெரியவரும். விளம்பரங
் களால் மக்களைக் கவர்தல் , எப்போதும்
ஒரே தரத்துடன் பொருட்களை விற்றல் , எப்போது போய் எந்தக் கடையில் கேட்டாலும்
எளிதாகக் கிடைத்தல் போன் ற பல சௌகரியங
் கள் மக்களை அவற்றின் பொருட்களை
நுகரச் செய்கின் றன. உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, நிதி நிர்வாகம், விலை நிர்ண‌யம்,
விற்பனை, விநியோகம் போன் ற எல் லா அங
் கங
் களும் ஒரு விஞ் ஞானமாக ஆக்கி அதை
மிகுந்த நேர்த்தியுடனும், ஒழுக்கத்துடனும் கடைப்பிடிக்கின் றன. இவற்றை
முழுமையாகப் பாடத்திட்டமாகக் கற்ற எம்.பி.ஏ பட்டதாரிகளை அவை வேலைக்கு
அமர்த்தி எளிதாய் நம்மை வெல் கின் றன.

இதனுடன் போட்டியிட வேண் டுமானால் , நம் கிராமிய‌சிறுதொழில் முனைவோர்


தங
் களைத் தாங
் களே த‌யார் செய்து கொள் ள வேண் டும். இதற்குத் தமிழில் நல் லதொரு
நடைமுறை மேலாண் மைக் கல் வி அத்தியாவசிய‌ம் ஆகிறது. தொழில் மேலாண் மைக்கும்
கணினிப் பயன் பாட்டிற்கும் ஆங
் கிலக் கல் வி அவசியம் என் ற எண் ணத்தை நாம்
விடவேண் டும். ஆங
் கிலம் சற்றும் தெரியாத ஜப்பானியர்களும், பிரஞ் சுக்காரர்களும் பல
சிறப்பான தொழில் களைச் செய்து சிறந்து இருக்கிறார்கள் .

எனவே கிராமப் பொருளாதாரத்திற்கு அனைவருக்கும் புரியும்படியான‌தமிழில்


மேலாண் மைக் கல் வி தேவைப்படுகிறது. இதை ஒரு பாடத்திட்டம் போல் வடிவமைத்து
தமிழில் இயல் பான, நடைமுறை மேலாண் மைக் கல் வித் திட்டம் ஒன் றை வடிவமைக்கும்
முனைவில் நம் கிராம இயக்கம் ஈடுபட்டிருக்கிறது. இதன் விவரங
் களை வரும்
இதழ்களில் வெளியிடுகிறோம்.
கிராம சுயாட்சி

ராம்

[இக்கட்டுரை ஆசிரியர், தமிழக அரசுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களில் ஆலோசகராக உள்ளார்.

பஞ்சாயத்துக்களின் அதிகாரம் மற்றும் அரசியல் சுயாட்சி பற்றி ஆய்வு செய்து வருபவர்]

கிராமத்தில் நம்மை நாமே ஆளுவது கடினமா?

ஆட்சிமுறைமையை இரண் டு அங
் கங
் களாகப் பிரிக்கலாம் - ஒன் று பொறுப்பு;
இன் னொன் று தன் செயல் பாட்டிற்குப் பதில் சொல் ல வேண் டிய கடமை. இதைப்
பொறுப்புவிளக்கம் (accountability) என் று கூறலாம்.

சமூகம் மற்றும் அதன் நலனுக்கான பொறுப்பு, உரிமையை வழங


் குகிறது; மறுபக்கம்
பொறுப்புவிளக்கம் உறுதி செய்வது நம்பிக்கையை உருவாக்குகிறது. இரண் டுமே
அரசியலமைப்பில் உள் ளடங
் கி உள் ளன‌,. கிராம பஞ் சாயத்துகளுக்கு அதை உறுதி
செய்வதற்கான அதிகாரங
் கள் வழங
் கப்படுகின் றன.

இருப்பினும், தமிழ்நாட்டில் உள் ள கிராம பஞ் சாயத்து இன் று செயலூக்கமான அமைப்பாக


இல் லை. இதற்கான முக்கிய காரணம், பஞ் சாயத்துத் தலைவர்கள் யாரும் உள் ளூர் அரசாங
் க
அதிகாரத்திற்கு எதிராக‌நிற்கத் தயங
் குவதே. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை,
அதிகாரிகள் ஒரு அடிமட்ட அரசாங
் க சிப்பந்தியாகவே கருதுவது தமிழகத்தில் பஞ் சாயத்து
அதிகாரங
் கள் பகிர்ந்தளிக்கப்பட்ட விதத்தின் சாபங
் களில் ஒன் றாகும். அரசியலமைப்பின்
11 வது அட்டவணை கிராம பஞ் சாயத்துக்கு 29 பொறுப்புகளை வழங
் குகிறது, அதேசமயம்
1994 ஆம் ஆண் டின் தமிழக பஞ் சாயத்து சட்டம், பிரிவு 110, கிராம பஞ் சாயத்து 6
செயல் பாடுகளை மட்டுமே செய்ய வேண் டும் என் று கட்டளையிடுகிறது. நமது அறியாமை
மற்றும் பஞ் சாயத்து செயற்பாட்டாளர்களின் அடிபணிதல் ஆகியவற்றால் மட்டுமே நமது
தற்போதைய நிர்வாக அமைப்பு எந்தவொரு அரசியலமைப்பு அனுமதியுமின் றி தொடர்ந்து
செயல் படுகிறது.

தமிழகத்தில் பஞ் சாயத்து மட்டத்தில் அதிகாரங


் களை பகிர்ந்தளிப்பது, மாநிலத்தின்
அதிகாரங
் களுடன் முரண் படுவதாக மாநில அளவிலான அதிகாரிகளால் கருதப்படுகிறது,
மேலும் மாநில அளவில் எங
் கும் புரையோடியுள் ள லஞ் ச கலாச்சாரம், அதிகாரங
் களை
மேலும் பகிர்ந்தளிப்பதற்குத் தடையாக உள் ளது.

சமீபத்திய ஆய்வில் , தமிழ்நாடு,பஞ் சாயத்துகளுக்கு செயல் பாடுகளை பகிர்ந்தளிப்பதில்


மாநிலங
் கள் மத்தியில் 11 வது இடத்தில் உள் ளது. ஐந்தாவது மாநில நிதி ஆணையம் இந்த
வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறது, மேலும் மாநில நிதி ஆணையத்தை (59%) அதிகமாக
நம்பியிருப்பதாகவும், அதே நேரத்தில் அதன் சொந்த வளங
் களும் வரிகளும் அதன் மொத்த
பட்ஜெட்டில் மிகக் குறைவான (12%) பங
் களிப்பை அளிக்கின் றன என் றும் கூறுகிறது. இது
மாநில அரசாங
் கத்தின் மீது அதிக சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குகிறது. கிராமப்புற
உள் ளாட்சி அமைப்புகள் மூலம் செலவழிக்க வேண் டிய பணத்தை அதன் சொந்த
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு எவ
் வாறு தலையிட முடியும் என் பதற்கான மற்றொரு
முரண் பாட்டை நிதி ஆணைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதைச் செய்ய முயற்சிப்பதாக
மாநில அரசு அண் மையில் நிறைவேற்றிய GO, மாநிலம் முழுவதும் பஞ் சாயத்து
தலைவர்களால் சரியான எதிர்ப்பைச் சந்தித்துள் ளது.

பஞ் சாயத்து அளவில் அதிகாரப் பகிர்வு நாட்டில் லேயே மிக அதிகமாக இருக்கும் அண் டை
மாநிலமான‌கேரளாவில் , தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செயல் படுவதில் அதிகாரிகள்
தலையிட முடியாது. உண் மையில் ஆரம்ப சுகாதார மையம் (பி.எச்.சி) போன் ற கிராமப்புற
நிறுவனங
் கள் பஞ் சாயத்து கட்டுப்பாட்டில் உள் ளன. இவற்றின் நிர்வாகத்தை உள் ளாட்சி
அமைப்பு கவனிக்கிறது, இதனை மாவட்ட மற்றும் பிற அதிகாரிகள் கேள் வி கேட்க
முடியாது, பஞ் சாயத்துகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. எனவே,
கடந்த 25 ஆண் டுகளில் பஞ் சாயத்து தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சரித்திரமே
அங
் கு இல் லை.

கிராம பஞ் சாயத்து அபிவிருத்தி திட்டமிடல் (VPDP) என் பது இந்திய அரசு இன் று
பரிந்துரைக்கும் ஒரு செயல் முறையாகும், இதன் மூலம் ஒவ
் வொரு கிராமமும்
அபிவிருத்திக்கு அதன் சொந்த திட்டங
் களை உருவாக்க முடியும். கேரள அரசு
பஞ் சாயத்துகளுக்கு 25-30% நிதியை நேரடியாக சுகாதாரம், கல் வி, வேளாண் மை, வீட்டுவசதி,
பெண் கள் மற்றும் குழந்தைகள் நலன் , எஸ
் சி / எஸ
் டி மேம்பாடு, பழங
் குடியினர் நலன்
போன் றவற்றுடன் வழங
் கியுள் ளது. இந்த திட்ட வடிவம் வெறும் பரிந்துரையே அன் றி அது
கிராம பஞ் சாயத்தைக் கட்டுபடுத்த முனைய‌வில் லை; இந்தச் செயல் முறையை சரியாகப்
பயன் படுத்தினால் நமது கிராமங
் கள் மேலும் தங
் களது அதிகாரத்தை பரவலாக்கவும்,
உள் ளூர் தேவைக்கு ஏற்றவாறு திட்டங
் களை வகுக்கவும் இயலும்.

மாநில அரசும், மாவட்ட அதிகாரிகளும் பஞ் சாயத்து நடவடிக்கைகளின் எல் லைக்குள்


நுழையும்போது, ஆட்சியில் பொறுப்பு மற்றும் பொறுப்புவிளக்கம் தளர்கின் றன, மாறாக
“கடமை”, “உரிய நடைமுறை” மற்றும் “முறையான சேனல் களால் ” நிர்வாகத்தின் முக்கிய
அம்சங
் களாக மாற்றப்படுகிறது. இன் றய அரசாங
் க கட்டமைப்பில் “கடமை”
துரதிர்ஷ் டவசமாக உயர் அதிகாரியின் அனைத்து கருத்துக்களுக்கும் கீழ்ப்படிதலுக்கு
சமமாக உள் ளது. மற்றும் “சரியான சேனல் ” கிட்டத்தட்ட அதிகாரத்துவத்தை தெய்வீக
ஒழுங
் குமுறைக்கு உயர்த்துகிறது. இந்த செயல் முறைகள் பொறுப்பு மற்றும்
பொறுப்புவிளக்கம் குறைத்து மதிப்பிடுகின் றன, இதன் மூலம் உள் ளூர் மட்டத்தில்
பயனுள் ள நிர்வாகத்தின் திறனை நீர்த்துப்போகச் செய்கின் றன. இவற்றைத் தாண் டியே நாம்
இன் று கிராம அளவிலான பஞ் சாய‌த்து மற்றும் கிராம சபை கொண் டு ஆட்சி செய்ய முயல
வேண் டும். அதற்கான பல வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
குமரப்பாவிடம் கேட்போம்

- தமிழில் அமரந்தா

பந்தயக் குதிரைகளும் வெள் ளை யானைகளும்


[ வெகுமக்களுக்கான தன் னாட்சி ” என் ற தொகுப்பில் இருந்து… ]

ஒரு காலத்தில் இங
் கிலாந்தில் குதிரைகள் தான் பொருளாதார
நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங
் கின. அந்நாட்களில்
குதிரைகளை மேன் மையாக உருவாக்குவதில் மக்களுக்கு மிகுந்த
ஆர்வம் இருந்தது. 'மன் னர்களின் விளையாட்டு' என் று கருதப்பட்ட குதிரைப்
பந்தயத்திற்கும் மக்கள் நல் வாழ்விற்கும் நேரடித் தொடர்பிருந்தது. இப்போதோ குதிரைப்
பந்தயம் என் பது சூதாடிகளுக்கும் சோம்பேறிகளுக்குமான விளையாட்டாகி விட்டது. நம்
நாட்டு மகாராஜா ஒருவர் கொள் ளை, கொள் ளையாக இங
் கிலாந்தில் இருக்கும் பந்தயக்
குதிரைகளுக்காகச் செலவிடுகிறார் என் று செய்தித் தாள் கள் தெரிவிக்கின் றன. இதுபோன் ற
நியாயமற்ற ஆடம்பரச் செலவுகளைத் தடுத்து நிறுத்த வழியே இல் லையா? திப்பு சுல் தான்
போன் ற கடமை மறவாத நம் நாட்டின் மன் னர்கள் , கால் நடை வளர்ப்பைத் தம்
பொழுதுபோக்காகக் கொண் டிருந்தனர். இன் றளவும் மைசூர்க் கால் நடைகளின்
மேன் மையான நிலைக்குத் திப்பு சுல் தானின் வள் ளல் தன் மையே காரணம். மோர்வியின்
இன் றைய மகாராஜாவிற்கும் அவரது மாட்டுப் பண் ணையின் மேல் அபாரமான ஈடுபாடு
உள் ளது.

அதிகாரம் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வசம் உள் ளதால் , குதிரைப்


பந்தயம் சட்டத்திற்குப் புறம்பானது என் று தடை செய்யப் படும் என் று எதிர்பார்ப்பது
தவறா? அதிகமான பொருட்செலவில் பராமரிக்கப்ப்ட்டு வரும் பந்தய மைதானங
் களை
உழுது, மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை விளைவிக்கப்
பயன் படுத்துவார்களா? கால் நடை வளர்ப்பிற்குரிய கவனம் அளிக்கப் படுமா? உணவு,
உடை, வீட்டு வசதி, கல் வி, மருத்துவ வசதி ப்பொன் ற பிரச்சினைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்ட மக்கள் அரசுகள் எப்படித் தீர்வு காணப் போகின் றன என் றறிய‌மக்கள் மிகுந்த
ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் .புதிய அமைச்சர்கள் தீர்வுக்கான சூட்சுமக் கயிறுகளை
இயக்கக் கற்றுக் கொண் டிருக்கும் வேளையில் , தன் னல‌வாதிகள் மக்கள் நலனுக்குக் கேடு
விளைவிக்கக் கூடிய வெள் ளை யானைகளை முன் னிறுத்தி அமைச்சர்களின் முயற்சிக்கு
முட்டுக்கட்டை போடுகிறார்கள் .

பீகாரின் சிந்திரி மாவட்டத்தில் , பத்தரைக் கோடி ரூபாய் செலவில் உரத் தொழிற்சாலைகளை


நிறுவ வெளி நாட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள் ள இயந்திரங
் கள் இறக்குமதி
செய்யப் படுகின் றன என் று அறிவிக்கப் பட்டுள் ளது. ஒரு சில பிராந்திய அரசுகளின்
அருளால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள் ள டிராக்டர்களும் இறக்குமதி
ஆக‌ப்போகின் றன. ஜவுளி ஆலைகள் , வனஸ
் பதித் தொழிற்சாலைகள் , சர்க்கரை ஆலைகள்
ஆகியவை மாகாண அர‌சுகளின் ஆதரவில் காளான் களைப் போல அங
் கங
் கே முளைத்து
வருகின் றன. மேற்சொன் ன ஆலைகளுக்கு, 'இதற்கு முன் பிருந்த இடைக்கால அரசே உரிமம்
அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது' என் று சாக்குச் சொல் வது முறையல் ல. மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இந்த ஆலைகள் தேவைதானா என் று நாம் மறுபரிசீலனை
செய்ய வேண் டும். அதற்கு ஏதேனும் முயற்சி செய்திருக்கிறார்களா? அதை விட்டுவிட்டு இந்த
ஆலைகளின் திறப்பு விழாக்களில் கலந்து கொள் கிறார்கள் . இவர்கள் எல் லாம் காற்று வீசும்
திசைக்குத் திரும்பும் காற்றாடிகளைப் போல் அல் லவா இருக்கிறார்கள் ? மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங
் கள் கொள் கைகளை வெளிப்படையாக மக்கள் முன் னம்
ஏன் இன் னமும் வைக்கவில் லை ? அப்பொழுதுதானே இதைவிட மோசமான
எவற்றையெல் லாம் நாம் எதிர்நோக்க வேண் டி வரும் என் று நமக்குப் புலப்படும்?

எந்த சமூகக் கொள் கையை நடைமுறைப் படுத்துகிறோம் என் ற தெளிவே


அமைச்சர்களுக்கு இல் லையென் றால் , அவர்கள் தங
் கள் பதவியை விட்டு விலகுவதுதான்
அவர்களுக்கும் நல் லது; அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நல் லது. வேறு
வேலையில் லாத போது பொழுதுபோக்கிற்காக கிராமப்புற மறுகட்டமைப்புப் பற்றிப்
பேசுவதும் , மற்ற நேரங
் களில் சிறிதளவு சொந்த லாபத்திற்காகச் சுரண் டல் வாதிகளுடன்
கமுக்கமாய்க் கைகோர்த்துக் கிராமப்புறங
் களை அழிக்கவும் தயங
் காத இவர்களால் எந்தப்
பயனுமில் லை!

J C Kumarappa
Swaraj for the Masses 1948

You might also like