You are on page 1of 6

2023 மாநாட்டு கொள்கை உரை

கொள்கை உரையில் முக்கிய புள்ளிகளின் முடிவு

முதலாளித்துவ சர்வதேச பொருளாதார அமைப்பு கொண்ட ஒரு நாட்டில்,


பின்தள்ளப்படும் அல்லது தடுக்கப்படும் ஒரு சிறிய இடதுசாரிக் கட்சியின் பங்கு
என்ன? யு.எஸ்.எஸ்.ஆர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 1980-கள் வரை
இருந்த மாற்றுப் பொருளாதார அமைப்பு மற்றும் உலக முதலாளித்துவ
அமைப்புடன் போட்டியிடத் தயாராக இருந்த சீனா அரசு காலாவதியானது.
இன்னும் "கம்யூனிஸ்ட்" கொள்ளை கொண்ட அரசாங்கங்களால்
வழிநடத்தப்படும் நாடுகள் கூட சர்வதேச முதலாளித்துவ அமைப்பில் சேர்ந்து,
தங்கள் நாடுகளில் முதலாளித்துவ முதலீட்டை ஊக்குவிப்பதில் மும்முரமாக
உள்ளன - உதாரணமாக சீனா மற்றும் வியட்நாம். இந்த நிலையில் பி.எஸ்.எம்
போன்ற இடதுசாரிக் கட்சியின் பங்கு என்ன?

நான் உட்பட பி.எஸ்.எம்-மின் அனைத்து நிறுவனர்களும், சோசலிசக் கட்சியின்


முக்கிய பங்காக கருதுவது, எந்த நேரத்திலும் ஒரு விசுவாசமிக்க தோழர்களாக
எளிய மக்களுடன் நிற்பதுதான். மேலும்,

- சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணர்ந்து செயல்படுவது

- மக்களின் பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைக் கடப்பதற்கான


வழிகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பகுப்பாய்வு செய்வது

- மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான காரணங்களை மக்களுக்கு


உணர்த்தி, மக்களை எழுச்சி பெறவும், நம்மோடு இணையவும், நாட்டின்
கொள்கை மற்றும் சட்ட அமைப்பில் மாற்றங்களைக் கோரவும்.

- மக்களின் கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல இன மக்கள் இயக்கத்தை


உருவாக்குவது.

- சமூக நிறுவனங்களில் பதவிகளைப் பெறுவதற்கு மக்களுக்கு அதிகாரம்


அளித்தல் மற்றும் அவர்களிடையே தலைமைத்துவத்தை உருவாக்குவது.
சமத்துவமான நாட்டை நோக்கிய போராட்டத்தில் மலேசியர்களுக்கு அதிகாரம்
அளிக்க வகை செய்வதில் பி.எஸ்.எம்-மின் பங்கை வலுப்படுத்த, பி.எஸ்.எம்
ஆர்வலர்கள் இந்நேரத்தில் நம் நாட்டை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சினைகளை
ஆழமாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

இடதுசாரி இயக்கம் கவனம் செலுத்த வேண்டிய 3 பெரிய பிரச்சினைகளைத்


பட்டியலிடுவதற்கு என்னை அனுமதியுங்கள்.

1. மலேசியர்களிடையே அதிகரித்து வரும் இன பேதம்

நமது நாடு சுதந்திரமடைந்து 66 வருடங்கள் கடந்துள்ள போதிலும்


இனங்களுக்கிடையில் நாம் இன்னும் பலமான புரிதலை ஏற்படுத்தவில்லை.
மறுபுறம், இனங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.

உண்மையான சுதந்திரத்தைக் கோரும் இடதுசாரி இயக்கத்தை உடைக்க 1950-


களில் இருந்து காலனித்துவவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட இனவாத
அரசியல் அமைப்பு, இதற்கு முக்கிய காரணமாகும்.1960-களின் பிற்பகுதியில்
ஐஎஸ்ஏ போன்ற சட்டங்களைப் பயன்படுத்தி இடதுசாரி கூட்டணியை
உடைந்த பிறகு, எதிர்க்கட்சிகள் உட்பட நாட்டின் அனைத்து முக்கிய அரசியல்
கட்சிகளும் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான அரசியல்
கட்சிகலாகவே இருந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக மலேசியர்கள்
இனவாத பகுப்பாய்வு மற்றும் வாதங்களால் மூழ்கியுள்ளனர்.

மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் நிலையைப் பாதிக்கும் என்ற


வாதத்தின் மூலம் பெரிகாத்தான் நேஷனல் (PN) அரசியல் தலைவர்கள்
மலாய் சமூகத்தை அச்சுறுத்துகின்றனர்.

மறுபுறம், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் (PH) மலாய்க்காரர்கள் அல்லாத


சமூகத்தை மிரட்டி, PN நிறுத்தப்பட்டால், மேற்கு தீபகற்பத்தின் உள்ள
மாநிலங்களை பச்சை அலை மூழ்கடித்து, சுதந்திரத்தை கட்டுப்படுத்தும்
சட்டங்களை கொண்டு வரும் என்று எச்சரித்தார்.

சாதி அரசியல், மக்களிடையே உள்ள வேறுபாடுகளை வலியுறுத்தி சாமானிய


மக்களை முட்டாளாக்கியுள்ளது. அரசியல்வாதிகள் எதிராளியை மோசமான
எதிரியாகவும், குறைந்த ஒழுக்கம் கொண்டவர்களாகவும் மற்றும் தீய
நோக்கத்துடன் சித்தரிக்கின்றனர். எல்லா தரப்புக்கும் பொதுவான புள்ளிகளைக்
கண்டறியும் முயற்சிகள், மற்றும் இனக்குழுக்களுக்கு இடையே
உரையாடலை ஒழுங்கமைத்தல் ஆகியவை வாக்காளர் ஆதரவிற்கான
போட்டியில் புறக்கணிக்கப்படுகின்றன.

இன பாரபட்சத்தை போக்க, பி.எஸ்.எம் ஓர் உறுதியான நிலைப்பாட்டை


எடுக்கிறது

- இன உணர்வுகளில் விளையாடுவதைத் தவிர்க்கவும்;

- முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற அனைத்து இனக்குழுக்களின்


நல்வாழ்வுக்கான பிரச்சாரங்களில் கவனம் செலுத்துதல், பொது சுகாதார
அமைப்பை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம், சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பதற்கான பிரச்சாரங்கள் மற்றும் பல. இத்தகைய பிரச்சாரங்கள் பல
இனங்களைச் சேர்ந்த மக்களை சந்திக்கவும், நட்புகொள்ளவும், ஒன்றாக வேலை
செய்யவும் ஒரு தளத்தை உருவாக்குகிறது;

- அவ்வப்போது எழும் இனப்பிரச்சினைகளை பகுத்தறியவும் நியாயமான


தீர்வுகளையும் வழங்க முடியும். உதாரணத்திற்கு -

இன ஒதுக்கீ டு பிரச்சினை

பூமிபுத்திரா அல்லாத பலர், இன ஒதுக்கீ ட்டுக் கொள்கையை வெறுக்கிறார்கள்,


ஏனெனில் இந்தக் கொள்கையின் காரணமாக IPTA இல் நுழைவதற்கான வாய்ப்பு 50
ஆண்டுகளாக தடுக்கப்பட்டுள்ளது. மலாய்க்காரர் அல்லாத B40 குழுவிற்கு இந்தக்
கொள்கையின் விளைவு மோசமாக உள்ளது, ஏனெனில் அவர்கள் தனியார்
கல்லூரிகளில் கட்டணம் செலுத்த கஸ்டப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஒரு இடதுசாரி கட்சியின் பங்கு, பின்வரும் அணுகுமுறை


மற்றும் உண்மைகளைக் குறிப்பிடுவதன் மூலம் பகுத்தறிவு விவாதத்தை
ஏற்பாடு செய்வதாகும்.

a/ உண்மை: 1957-ல் பல்கலைக்கழக சேர்க்கைக்கான இன ஒதுக்கீ ட்டு முறை


ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஏனெனில் அந்த நேரத்தில் நவன
ீ துறைகளில்
மலாய்க்காரர்களின் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. உதாரணமாக,
அந்த நேரத்தில் மலாயாவில் 5% க்கும் குறைவான மருத்துவர்கள் மற்றும்
பொறியியளர்களாக மலாய்க்காரர்கள் இருந்தார்கள்.

b/ அணுகுமுறை: IPTA க்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நாம் எந்த


முறையைப் பின்பற்றினாலும், நமது நாடு கொண்டிருக்கும் சமூக இன
இனங்களின் விகிதத்தைக் கொண்டு மாணவர்களின் விநியோகத்தை
உருவாக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு இனக்குழுவிலும் உள்ள சமூக-
பொருளாதார அடுக்குகளுக்கு இடையிலான விகிதத்தையும் கருத்தில்
கொள்ள வேண்டும்.

c/ உண்மை: புதிய பொருளாதாரக் கொள்கை, பூமிபுத்ரா மத்தியில்


நடுத்தரமான வர்க்கத்தை உருவாக்கினாலும், மலேசியாவில்
இனங்களுக்கிடையில் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு
இன்னும் உள்ளது. இந்த உண்மையை பின்வரும் புள்ளிவிவரங்களில்
காணலாம்

55 வயது மற்றும் அதற்குக் குறைவான வயது கொண்ட உறுப்பினர்களுக்கான


சராசரி EPF சேமிப்பு

ஏப்ரல் 2020 -ன் சராசரி டிசம்பர் 2022-ன் சராசரி சேமிப்பு


சேமிப்பு

மலாய் RM 16,938*1 RM 5,529

சீனர் RM 45,756 RM 45,162

இந்தியர் RM 25,724 RM 14,929

பிற நாட்டினர் RM 10,591 RM 3,302


* அதாவது 50% மலாய் பங்களிப்பாளர்கள் கோவிட் காரணமாக சிறப்புப் பணம்
திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஏப்ரல் 2020 இல்
RM 16,938 அல்லது அதற்கும் குறைவான தொகையைச் சேமித்துள்ளனர்.
ஆதாரம்: நாடாளுமன்றத்தில் அமைச்சரின் பதில்
5/8/23 அன்று புள்ளியியல் துறை தலைமை இயக்குநரின் அறிவிப்பை
தொடரும்போது, 6.5 மில்லியன் தனியார் தொழிலாளர்களுக்கு முறையான
துறையில் (sektor formal) சராசரி ஊதியம்

சராசரி சம்பளம் (மாதாந்திரம்)


மலாய் RM 2200#
சீனர் RM 4000
இந்தியர் RM 2500
# அதாவது மார்ச் 2023 இல் முறையான தனியார் துறையில் (sektor formal)
50% மலாய் தொழிலாளர்கள் RM 2200 அல்லது அதற்கும் குறைவான
சம்பளத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

d/ அணுகுமுறை: மேலே விவரிக்கப்பட்ட உண்மையின் காரணமாக,


இனத்தின் அடிப்படையில் IPTA க்கான சேர்க்கை ஒதுக்கீ டு முறை தற்போது
பராமரிக்கப்பட வேண்டும், ஆனால் பின்வரும் நிபந்தனையுடன்;

- மலேசிய மக்கள்தொகையில், ஒவ்வொரு இனக்குழு விகிதத்தோடு


அதன் ஒதுக்கீ ட்டை அணுக வேண்டும்
- ஒவ்வொரு இனத்திற்கும் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீ டு மறுபகிர்வு
செய்யப்பட வேண்டும், இதனால் மொத்த ஒதுக்கீ ட்டில் 50%
அவ்வினத்தைச் சேர்ந்த B40 மக்களால் பயன்பெற முடியும், மேலும்
மொத்த ஒதுக்கீ ட்டில் 35% அந்த இனக்குழுவின் M40 மாணவர்கள் பயன்
அடைவதோடு மீ தமுள்ள 15% விழுக்காட்டில் T20 மாணவர்களுக்கு
அவ்வொதுக்கீ டு திறக்கப்படும்.

ஒரு இடதுசாரி கட்சியின் பங்கு, பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான


கடுமையான போட்டி, வெள்ளைக் காலர் தொழிலாளர்கள் மற்றும் நீலக்
காலர் தொழிலாளர்களின் வருமானத்திற்கு இடையே உள்ள பரந்த
இடைவெளியில் இருந்து உருவாகிறது என்பதை மக்களுக்கு
நினைவூட்டுவதாகும். கியூபாவில், ஒரு பேருந்து ஓட்டுநர் ஒரு
டாக்டருக்கு சமமான சம்பளத்தைப் பெறுகிறார், மாணவர்கள்
அதற்கேற்ப பல்கலைக்கழகத்தில் சேர தேர்வு செய்கிறார்கள்.
நியாயமான சம்பள அமைப்பு மற்றும் சமூக வலைப்பின்னல்
அமைப்பை நிறுவுதல் வேண்டும் என்பது இதன்வழி அறியமுடிகிறது.
தொழிற்சாலைத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள்
ஆகியோரின் பங்களிப்பை ஒரு சமூகம் மதிப்பது மிக முக்கியம்.
மேலும், சுகாதாரம், வட்டுவசதி,
ீ போக்குவரத்து மற்றும்
வயதானவர்களுக்கு ஓய்வூதியம் - இவை வலிமையான
தேவைகளாகும். IPTA-வில் இடங்கள் மற்றும் வேலை
வாய்ப்புகளுக்கான கடுமையான போட்டியைக் குறைக்க இதுவே வழி.

You might also like