You are on page 1of 27

அண்ணாவின் கருத்துக் கதிர்கள்

“இந்த அரசு எந்தக் கொள்கைகளை மக்கள் முன் வைத்து, இம்மாநில


ஆட்சியை ஏற்று நடத்தும் பொறுப்பை மேற்கொண்டதோ அக்கொள்கைகளை
இத்தகைய வரையறைகள் இருப்பினும் உளமாறச் செயல்படுத்த முற்படவேண்டும்
என்பதுதான் இந்த அரசின் உறுதியான நம்பிக்கை.

நாங்கள் நிர்வாகத் துறைக்கும் புதியவர்களாயிருக்கலாம்; ஆனால், 'சமூக


நீதி’யின் அடிப்படையில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டவர்கள்; சேமிப்பு சிக்கனம்
ஆகிய நற்பண்புகளை என்றுமே வலியுறுத்தி வந்திருக்கும் தமிழகத்தின் பழம்பெரும்
பண்பாட்டின் வழிவந்தவர்கள்.

சட்ட மன்றத்தில் 1967- 68 ம் ஆண்டின்

நிதி நிலையறிக்கை வரவு செலவு திட்டத்தில்.

கலைஞர் கருணாநிதியின் கருத்துக் கதிர்கள்

நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன்; மிகவும்


பிற்போக்கான வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஓர் இடம் உண்டு என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற
காரணத்தினால் பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையே பணயமாக
வைத்துப் போராடுவேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

-25-2-69 சட்ட மன்ற விவாதத்தின் பதிலுரையில்.

எனக்கென்று சாதிப் பெருமை கிடையாது. மிக மிகப் பின்னடைந்த


சமுதாயத்தைச் சார்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது.
ராவ்பகதூர் - திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் பெருமை
எனக்கில்லை; கல்லூரிப் பட்டம் எனக்கில்லை.

நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் காஞ்சிக் கல்லூரியும்.

நான் பட்டம் பெறாதவன் என்றாலும் பகுத்தறிவு பணியாளன் என்ற


அருமந்தன்ன தம்பி என்று அண்ணா அவர்களால் தரப்பட்ட பட்டம் எனக்குண்டு.
சாதிப் பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே சாதியென
மதிப்பவன் நான்.

-23-3-69 கோடம்பாக்கம் கூட்டத்தில்.


“1967-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி படுதோல்வி
அடைந்து, தமிழ் நாட்டில் 138 உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.கழக ஆட்சி,
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்தது."

திராவிட முன்னேற்றக் கழகம் சீரிய பகுத்தறிவாளர்களைக் கொண்ட சமுதாய


மறுமலர்ச்சி இயக்கமாதாலால், அது சமுதாயத்தின் தேவைகளை மனத்திலெண்ணி,
அதன் புரட்சிகரமான அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளைக் கடந்த 4
ஆண்டுகளில் மிகச் சிறப்பாக அமுல்படுத்தித் தமிழ்நாட்டில் பொற்காலத்தை
உருவாக்கித் தந்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், கலைஞர் மு.கருணாநிதி


அவர்கள், முதல்வர் பொறுப்பையேற்று, மிகவும் திறமையுடன் தி.மு.க. ஆட்சியை
நடத்திச் சாதனைகளைக் குவித்துள்ளார்.

தி.மு.க. நடுத்தர வர்க்கத்தினர்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக, பாமர


மக்களுக்காக, பிற்படுத்தப் பட்டவர்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும்
ஒரே அரசியல் கட்சியாகும். பகுத்தறிவுக் கொள்கைகளும் சமூகப் பொருளாதார
நீதியும் இவ்வாட்சியின் இரு கண்களாகும்!

ஏகபோகவாதிகள், உயர்சாதிப் பார்ப்பனர்கள், பணத்திமிலங்கள், சங்கிலித்தொடர்


பத்திரிகா சாம்ராஜ்யவாதிகள், நிலப்பிரபுக்கள்,தொழிலதிபர்கள் இவர்களது ஆதரவோ,
ஒத்துழைப்போ இன்றி, இவர்களின் அன்றாட எதிர்ப்பை அலட்சியம் செய்துவிட்டு,
ஏழை, எளிய மக்களின் புன்னகை – சமுதாயத்தின் அடித்தலத்தில்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் – மகிழ்ச்சி
இவைகளையே கருத்தில்கொண்டு, பாடுபடும் ஆட்சியாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று
வருகிறது !

'இன்றுள்ள அமைச்சரவை நாளை இருக்குமோ என்று எண்ணவோ


திட்டமில்லை' என்று அஞ்சும் அரசியல், 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு என்ற
நிலை, இந்தியத் துணைக் கண்டத்து மாநிலங்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கும்
நிலையில்---

நிலையான ஆட்சி !

சரித்திரம் காணாச் சாதனைகள் ! !


என நடுநிலையாளர் அனைவரும் ஒருமுகமாகப் புகழும் வண்ணம் பீடுநடை
போடும் ஆட்சியாகத் தி.மு.க. ஆட்சி இருக்கிறது !

சீரிய கொள்கைகள் என்ற அஸ்திவாரத்துடன் நல்லாட்சி என்ற கட்டிடத்தைச்


சாதனைகள் என்ற கருங்கற்களால் அமைத்து தி.மு.க. தமிழ்மக்களுக்குத் தந்துள்ளது !

பொன்மலர் மணம் வசுகிறது


ீ என்றால், எவ்வளவு பெருமையோ அதுபோலவே,
நல்ல கொள்கைகள் அவ்வாட்சியின் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், நாட்டு
மக்களின் அறியாமையை அழிக்க, ஏழ்மையை ஒழிக்க, - ஏற்றதாழ்வினை நீக்கப்
பயன்படும் செயல் திட்டங்களே பரிணமித்து, அவற்றின் பலனைத் தமிழ்நாடு கடந்த 4
ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டுள்ளது''

1. கல்வி
ஓங்கிவரும் கல்விப் புரட்சி!

கல்விக்கண்ணைத் தமிழக மக்களுக்குத் தருவதற்குத் தி.மு.க. ஆட்சி


எப்போதும் தீவிர ஆர்வம் காட்டியே வந்துள்ளது.

காங்கிரசுக்கு ஆச்சாரியார் பதவிக்கு வந்தபோதெல்லாம் பள்ளிகளை மூடியே


பழக்கம்.

1937-ல் காங்கிரசு ஆட்சியில் 100-க்கு 7 பேர்களே படித்த நிலையில் நாடு


இருக்கையிலேயே, 2,500 ஆரம்பப் பள்ளிக்கூடங்களை அவ்வாட்சி இழுத்து மூடியது.
1952-ல் காங்கிரசு பதவிக்கு வந்தவுடன் 100-க்கு 10 பேர்களே படித்த
நிலையிலும், 6000 ஆரம்பப்பள்ளிகளை இழுத்து மூடியதோடு, ஒரு பாதி நேரம்
படித்தால் போதும்; மற்ற பாதி நேரம் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்
என்ற ஆணை- குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தது.

தந்தை பெரியார் அவர்களது பெருமுயற்சியால், அது ஒழிக்கப்பட்டு, அந்த


இடத்தில் வந்தவர் தாம் நிலைபெற, இதுதான் வழி என்று மூடிய பள்ளிகளைத்
திறந்தார்.

-- [ அந்த ஆச்சாரியாரிடம் அபயம் தேடி விட்ட நிலையில்


நாளை ஆட்சி மாறினால், ஆச்சாரியார் உத்தரவுப்படி
குலக்கல்வித் திட்டமும் பள்ளி மூடுவிழாவும்
மீ ண்டும் வராது என்பதற்கு ஏதும் உத்தரவாதம் இல்லை ? ]
குலதர்மத்தின் முதுகெலும்பை - உடைக்கும் சமுதாயப் புரட்சி இயக்கமான
தி.மு.க., ஆட்சி, தமிழர்களுக்குக் கல்வி நீரோடையை நாடெங்கும் பாயவிடுவதில்,
எந்த ஆட்சிக்கும் சளைக்காத ஆட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

பேசும் புள்ளி விவரங்கள்:

1966-67 1969-70

1. கல்விச் செலவு : ரூ. 44 கோடி ரூ. 66 கோடி

2. பள்ளிச்செல்லும் குழந்தைகள் :
6-11 வயது 46 லட்சம் 50 லட்சம்
11-14 “” 11 லட்சம் 15 லட்சம்
14-17 “” 6 லட்சம் 8 லட்சம்
3. கல்விக்கூடங்கள் :

தொடக்கப்பள்ளிகள் 31,157 32,632


உயர்நிலைப்பள்ளிகள் 2, 172 2,572

தி.மு.க. ஆட்சியில் கல்லூரிக் கல்வி வளர்ச்சி

கல்லூரிகள் மாணவர்கள் மாணவிகள்


1966-67 105 74,112 22,390

1970-71 161 1,24,248 41,608

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்:

1966-67 19 1368 769


1970-71 23 1694
1188

ஆசிரியர்கள் ஆண் பெண்

1966-67 124 79

1970-71 117 113


பி. யு. சி. வரை இலவசக் கல்வி தந்தது தி.மு.க.! அரசு தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை முதல் பல்வேறு வசதி வாய்ப்புகளைத்
தருவது தி.மு.க. அரசு.

நகராட்சிப் பள்ளிகளில் 1-லிருந்து 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு


இலவசமாகப் புத்தகம், சிலேட்டுப் பலகை தரும் திட்டம் இவ்வரசினது.

மதிய உணவு பெறும் மாணவர்களுக்கு அரசு பாட நூல்களை இலவச


விநியோகம்.

புத்தக வங்கிகள் பல பள்ளிகளில் செயல்படுதல்.

ஆங்கிலம் கற்பிக்கும் முறைகளின் தரத்தை உயர்த்த ஆங்கில மொழியைக்


கற்பித்தல் இயக்கம் தொடர்ந்து நடத்தப்படுதல்.

ஒரே சீரும் தரமும் உள்ள புத்தகங்களை அரசு தயாரித்து வெளியிடுதல்.

முதியோர் கல்வி : சென்ற ஆண்டு மட்டில் 50 முதியோர் கல்வி நிலையங்கள்


திறக்கப்பட்டன.

ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி வகுப்புகள் திறக்கப்பட்டன.

விஞ்ஞானம் : ஆய்வுக்கூடங்கள் அமைக்க, அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றுக்கு


ரூ. 40,000 ஆக 108 உயர்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. .

பிற்பட்ட வகுப்பினர்: பி.யு.சி-யில் உபகாரச் சம்பளத்திற்கு 50 மார்க்குகள்


தேவை என்பதை மாற்றி, 40 மார்க்குகள் போதுமென்று மாற்றியுள்ளது.

நூல் நிலையங்கள்; இவைகளை விரிவுபடுத்த - கிராண்டு (grant)


கொடுக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகள் 10,000

நடுநிலைப் பள்ளிகள் 2,500

உயர்நிலைப் பள்ளிகள் 159

மாநகராட்சியின் கீ ழ் உயர்நிலைப் பள்ளிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய


தொடக்கப் பள்ளிகளுக்கும் கிராண்டு உயர்வு 50 சதவிகிதம் முதல் 66 2/3 சதவிகிதம்
வரை.
மொழித்திட்டம்:

1968 - ம் ஆண்டு முதல் இந்தி நீக்கப்பட்டது. பள்ளிகளில் இருமொழித் திட்டம்


அமுல்.

ஆசிரியர்கள் :

தொடக்கப் பள்ளிகளில் பணி புரிவோர் 1 1/2 லட்சம் பேர்; உயர்நிலைப்


பள்ளிகளில் பணி புரிவோர் 50 ஆயிரம் பேர்; அயர்கிரேடு சம்பளத்தில் வேலை பெற்ற
12,500 ஆசிரியர்களுக்கு செகண்டரி கிரேடு சம்பளம் வழங்க உத்தரவு.

உதவி பெறும் பள்ளியாசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுகம் உள்ள


சலுகைகள் நீடிக்கப்பட்டுள்ளன. மேலும் 5 ஆண்டு பணியாற்றிய ஆசிரியர்கள்
குடும்பத்துக்குக்கூட ஓய்வு கால ஊதியம் உண்டு. 1-4-55 க்கு முன் ஓய்வு
பெற்றவர்களுக்கும் ஓய்வு ஊதியம் உண்டென உத்தரவு..

வேலையில்லாத ஆசிரியர்கள் 6,500 பேருக்கு (Apprentice teacher Scheme) மூலம்


வேலை வழங்கப்பட்டுள்ளது.

உதவிபெறும் பள்ளி ஆசிரியரது குறைகளைக் களைய ஒரு குழு ஏற்படுத்தப்


பட்டுள்ளது. அது தனது பரிந்துரையை டிசம்பர் இறுதியில் கொடுத்துள்ளது.

கல்லூரியில்……..

என்.சி.சி.யில் ஆங்கிலக் கட்டளைச் சொற்களையே பயன்படுத்த அனுமதி


பெற்று, இப்போது செயல்படுகிறது.

தொழிற் கல்வி :

பொறியாளர்கள் சொந்தமாகச் சிறு தொழில் தொடங்க விரும்பினால்


உதவிகளை அரசு கொடுக்கிறது.

மருத்துவத் துறை :

ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ள ரூ. 50,000 போதாததினால், 1968 முதல் ரூ. 65,000


ஆக உயர்ந்துள்ளது.

எம். பி. பி. எஸ். பட்டப்படிப்புக்கு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும்


வகையில் தேர்வுக்குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படாத சிலர் கோர்ட்டில் 'ரிட்'
போட்டபோது கூட, சென்னை உயர்நீதிமன்றமும் ’அதில் ஏதும் தவறோ, ஊழலோ
இல்லை; எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றிருக்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு மாணவர்கள் ஜில்லாவாரியாகத் தேர்வு செய்யப்படுவதையும்


கல்லூரிக்கெனத் தேர்வு செய்யப்படும் முறையையும் தான் மாற்றியமைக்க
வேண்டும்' என்று கூறிற்றே தவிர, பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி நடைபெறும்
தேர்வு முறையை அது எந்தத் தீர்ப்பிலும் குறைகூறவில்லை. மாறாகப்
பிற்படுத்தப்பட்டோருக்குத் தேர்வில் இடவொதுக்கீ டு செய்வதை ஆதரித்தே
இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நாட்டின் தொழிலையும் தொழிலாளர் வாழ்வையும் சீர்குலைத்ததைத் தடுத்தது.

சர்க்கரைத் தொழில் பிரச்னைகளைக் கவனிக்கத் தனி இயக்குநரகம் (Directorate

of sugar) ஏற்படுத்தி, அதன் மூலம் சிறப்பாகப் பணிகள் நடைபெறுகின்றன.

விற்பனை வரி வகையிலும் மின்சாரக் கட்டண வகையிலும் கணிசமான


சலுகைகளைத் தமிழ்நாடு அளித்ததால் ஓடிக்கொண்டிருந்த பஞ்சாலைகளின்
எண்ணிக்கை 163-லிருந்த 175 ஆக உயர்ந்திருக்கிறது.

விசைத்தறிகள் :

நமது மாநிலத்தில் சுமார் 12,500 விசைத்தறிகள் புகுத்தவும், அதனால் வேலை


வாய்ப்பு இழப்பு எவருக்கும் ஏற்படாமல் இருக்கவும் தி.மு.க. அரசு ஏற்பாடு
செய்திருக்கிறது.

நமது மாநிலத்தில் உற்பத்தியாகும் பஞ்சு நூலில் 60 சதவிகிதம் வடக்கு


மாநிலங்களிலுள்ள விசைத்தறிகளில் துணிகளாக நெய்யப்பட்டு, அத்துணிகள் பின்னர்,
நமது மாநிலத்திலேயே விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தி, நமது
மாநிலத்திலேயே விசைத்தறிகளை ஏற்படுத்த, எடுத்த நடவடிக்கை தமிழ்நாட்டுத்
தொழில் துறைக்கு மிகுந்த ஆக்கமளிக்கும் ஒரு ஒப்பற்ற முடிவாகும்.

புதுடில்லியில் தேசிய அபிவிருத்திக் கவுன்சில் கூட்டத்திற்குச் சென்ற


முதல்வரும் தொழில் அமைச்சர் திரு.மாதவனும் பிற மாநிலத் தொழிலதிபர்களைச்
சந்தித்துத் தமிழகத்தில் முதலீடு செய்தால், தமது அரசு ஒத்துழைப்புத் தரும் என்று
கூறினர்.
ஸ்திரமான அரசு, தொழிலமைதி கொழிக்கும் மாநிலம், சிறப்பான நிர்வாகம்
இவைகள் காரணமாகப் பல மாநிலங்களிலிருந்தும் தொழில் முதலீடு கணிசமாக
ஏற்படும் வாய்ப்புகள் இனி அதிகமாகும்.

அபிவிருத்தி செய்யப்பட்ட "பிளாட் எஸ்டேட் திட்டப்படி” எல்லா


வசதியுமடங்கிய மனைகள், தொழில் துவங்க வருபவருக்கு அரசினரால்
வழங்கப்படுகின்றன.

ரூபாய் நாணய மதிப்புக் குறைப்பினால் ஏற்பட்ட பெருளாதார மந்தம், அதன்


காரணமாக ஒற்றுமைக் குறைவு, நான்காவது அய்ந்தாண்டுத் திட்ட முதலீடு
காலந்தாழ்ந்த நிலை, எதற்கெடுத்தாலும் மாநில அரசுகள் தொழில் லைசென்ஸ் பெற
டில்லிக்குக் காவடி தூக்கிப் பிறகு பெறும் நிலை - இவ்வுளவுக்கும் இடையில் கடந்த
4 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி தொழில் துறையில் இத்தகைய சாதனைகள்
செய்துள்ளது என்பதைப் பிற சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு நோக்குவோம்.

தொழில் வளர்ச்சிக்கு அரசின் ஊக்கம்

புதிய தொழிற்சாலைகட்கு ஆரம்ப 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்ட கட்டண


வதத்திலுள்ள
ீ சலுகை மேலும் தளர்த்தப்பட்டது..

மத்திய தொழிற்கூடங்கள் இரவில் இயங்குவதாக இருந்தால், அதற்கு மேலும்


40 சதவதக்
ீ கட்டண வதத்தில்
ீ சலுகை அளிக்க உத்தரவிடப்பட்டது.

புதிய உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு மின்சாரக் கட்டணம்


செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

மேட்டூர் அருகே உள்ள தொழிற்கூடங்கள் பாசன காலங்களில் மட்டும்


(அதாவது ஜூலை முதல் பிப்ரவரி வரை) மின்சாரத்தை எடுத்துக் கொள்வதாக
ஒப்புக் கொண்டால், மின்சாரக் கட்டண விகிதத்தில் 25 சதவதம்
ீ சலுகை
அளிக்கப்படும். பயன்படுத்திய மின்சாரத்திற்கும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.

தொழில் துறையில் பின் தங்கிய பகுதிகளில் துவங்கப்படும் புதிய


தொழிற்கூடங்களுக்குக் கட்டண விகிதத்தில் 15 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும்.

சென்னை வட்டாரத்தில் அனல் மின்சாரப் பகுதியிலுள்ள உயர் அழுத்த


தொழிற்சாலைகள் மீ திருந்த 10 சதவிகித மின்சார வரியை ரத்து செய்தது
குறிப்பிடத்தக்கதாகும்,
3. விவசாயம்

1. விவசாயக் கருவி, டிராக்டர் விற்பனைக்கு 6 நிலையங்களை அமைக்கிறது,


இவற்றிற்கு 55 லட்சம் செலவிடுகிறது.

2. கோதுமை விளையும் மாநிலத்தில் விற்பனை செய்யும் விலையைவிடத்


தமிழ்நாட்டில் லிட்டருக்கு 16 காசு குறைவாகவே விற்கப்படுகிறது.

3. தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு அவசரச் சட்டம் மூலம்


கூலி நிர்ணயம் செய்து அமைதி காத்தது - உற்பத்தியைப் பெருக்கிற்று!

4. ரூ, 45 கோடி உலக பாங்கு உதவி - தமிழ்நாடு விவசாயப் பணிக்கு வழங்கும்.


இதற்கு முன்னோடியாக உலக பாங்கு குழுவினர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு வளர்ச்சிப் பணிக்கு வழி செய்துள்ளனர்.

5. சேலம், வடஆற்காடு மாவட்டங்களில் விவசாய முன்னோடித் திட்டத்திற்கு


மத்திய அரசிடம் ரூ. 2 கோடி மான்யம் பெற்றுத் தந்துள்ளது.

6. தீவிர விவசாயத் திட்டங்களை அமுல் நடத்தப்படும் பகுதிகளிலுள்ள


குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 2,620 ஆக உயர்த்தி யுள்ள து.

7. குறுவை நெல் விற்பனை செய்ய விவசாயி களுக்கு வசதியாகத் தஞ்சை


மாவட்டத்தில் அரசு 70 'வாங்கும் நிலையங்களை அமைத் துள்ளது.

8. (அ) 3000 டிராக்டர்கள் வாங்க உலக பாங்கு - கடன் வழங்கச் சம்மதித்துள்ளது.


(ஆ) ஏ.டி.டி. 27, அய்.ஆர்.8, கருணா ஆகிய உயரின நெல் வகைகளைப் புகுத்தி,
உணவு உற்பத்தியைப் பலமடங்கு உயர்த்தியது.

9. ரூ. 2 கோடி செலவில் ''விவசாயப் பல்கலைக் கழகம்” வரும் ஆண்டுமுதல்


செயல்படும்.

10. கம்பம் பகுதியில் விவசாயத் துறையில் நல்ல திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. 4


-வது திட்டத்தில் ரூ. 2 கோடி அளவில் இத்திட்டம் செயல்படும்.

11. தமிழ்நாடு வேளாண்மைக் கழகம் 600 டிராக்டர்களை விவசாயிகளுக்கு


விற்பனை செய்துள்ளது.

12. உயர் ரகங்களை மக்களுக்கு வழங்கி உற்பத்தியைப் பெருக்கிட மாநில விதைப்


பண்ணைகளை அமைத்திட்டது.
13. சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் பட்டா செய்யப்பட்டன.

1967.68 - 22,849 ஏக்கர்


1967.69 1968-69 - 51,852 ””
1969-70 - 1,55,813 “”
1970.71 - 2,30000 ‘”

14. விவசாயிகளுக்கும் குத்தகைதாரர்களுக்கும் நியாய வாரம் கிடைக்க வழி


செய்தது.
15 1972-க்குள் கொடுக்கத் திட்டமிட்ட நில அளவு 4,34,000 ஏக்கர்கள் ஆகும்.
16. உச்சவரம்பு சட்டத்தின்கீ ழ் கரும்புத் தோட்டங்கள், மேய்ச்சல் நிலங்களுக்கு
அளிக்கப்பட்ட விதிவிலக்கை நீக்கியது.
17. விவசாயிகளின் நன்மைக்காகப் புஞ்சை நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த
வரி முற்றிலும் நீக்கப்பட்டது.
18. இருபோக, முப்போகச் சாகுபடித் திட்டம் ஊக்குவிக்கப்பட்டு, உணவு
உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.
19. கழக அரசு ஆண்டுதோறும் உணவு உற்பத்தியைப் பன்மடங்காகப் பெருக்கி
வருகிறது.

எடுத்துக்காட்டு :

1. 1968-69-ல் 53 லட்சம் டன் உற்பத்தியானது. இதில் 35.5 லட்சம் டன் அரிசி.

2. 1969-70-ல் 65 லட்சம் டன் உற்பத்தி செய்தது.

3. 1970-71-ல் உணவு தான்ய உற்பத்திக்கான திட்ட இலக்கு 67 லட்சம் "டன்.


இதில் 47 லட்சம் டன் அரிசி உற்பத்தி அடங்குகிறது.

20. தமிழ்நாட்டில் நெல் சாகுபடி நடைபெறும் மொத்தப் பரப்பு 66 லட்சம் ஏக்கர்.


இதில் 37.5 லட்சம் ஏக்கரில் உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிடும் திட்டம்
செயல்படுகிறது.

21. பின்தங்கிய புதுக்கோட்டையின் பகுதி வேக மாக அபிவிருத்தி செய்யும்


பொருட்டுக் குடுமியான்மலை 1000 ஏக்கர் "அண்ணா விவசாய ஆராய்ச்சிக்
கழகமும் விவசாயக் கல்லூரியும் அமைத்திட, ஆரம்ப நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. ரூ. 1 கோடி செலவில் புஞ்சைப் பண்ணை
விரிவுபடுத்தப்படும்.
22. விவசாய உற்பத்திப் பெருக்கத்திற்காகப் பல லட்சம் ஏக்கர்களில் விமானம்
மூலம் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

23. இந்தியாவிலேயே மிக அதிக அளவு முந்திரிப்பருப்பைத் தமிழ்நாடு உற்பத்தி


செய்கிறது.

24. தீவிர" முந்திரி சாகுபடித் திட்டத்தின் கீ ழ் திருச்சி, தென்னாற்காடு


மாவட்டத்தில் புதிதாக 20,000 ஏக்கர் நிலத்தில் முந்திரி சாகுபடி
செய்யப்படுகிறது.

25. முந்திரி உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தவும், ஊக்குவிக்கவும் 'முந்திரி


கார்ப்பரேஷன் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசிற்குப் பரிந்துரை
செய்துள்ளது.

26. நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் தீவிரத் தென்னைச் சாகுபடித்


திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

27. வகைதெரிந்து விவசாயிகள் தக்க பயிரினைப் பயிரிட வழி செய்யும்


பொருட்டு, மண்வளம் பற்றிய மாதிரி சர்வேயை அரசு தயாரித்து வருகிறது.
வரும் ஆண்டு விவசாயிகளுக்கு உதவியாக வழங்கப்படும்.

28. வாழை உற்பத்தியை அரசு அதிகம் ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டில்


உற்பத்தியாகும் வாழைப்பழத்திற்கு ஜப்பான், ரஷ்யா போன்ற இதர
அய்ரோப்பிய நாடுகளில் நல்ல கிராக்கியுள்ளது. எனவே, ஜப்பானுக்கு
வாழைப்பழம் நிறைய ஏற்றுமதி செய்யத் தமிழ்நாடு அரசு வகை செய்துள்ளது.

29. தூத்துக்குடிப் பகுதியில் 6000 ஏக்கரில் வாழைப் பயிர் செய்யும் பொருட்டு ரூ.
4.40 கோடி ’விவசாய நிதி உதவிக் கழகம்' அளிக்கின்றது.

30. தூத்துக்குடியிலிருந்து ஜப்பானுக்கு வாழைப்பழம் அனுப்பப்படுவதன் மூலம்


ஆண்டுதோறும் ரூ. 6 கோடி அந்நியச் செலவாணி கிடைக்கும்,

31. இவ்வாண்டு வடாற்காடு மாவட்டத்தில் வாழை ஆராய்ச்சி நிலையம்


அமைத்திடவிருக்கிறது.

32. கரும்பு உற்பத்திப் பெருக்கால் சீனி கட்டுப் பாடின்றித் தாராளமாகக்


கிடைப்பதுடன், கட்டுப்பாட்டு விலைக்கே பொதுச்சந்தையிலும் கிடைக்கும்
வகை செய்துள்ளது.
33. தமிழ்நாட்டில் மொத்தம் 50 ஆயிரம் ஏக்கரில் இன்று மஞ்சள் சாகுபடி
நடக்கிறது.

34. கோவை மாவட்டத்தில் ஈரோடு, கோபிச் செட்டிப்பாளையம் பகுதியில் 2500


ஏக்கரில் புதிய அதிதீவிரச் சாகுபடித் திட்டத்தின் கீ ழ் மஞ்சள் சாகுபடி
நடைபெறுகிறது.

35. மஞ்சள் சாகுபடிக்காக ஏக்கருக்கு ரூ. 1800 கூட்டுறவுக் கடனுதவி


அளிக்கப்படுகிறது. இவ்வகையில் இதுவரை ரூ.40 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

36. ரூ. 2.48 கோடி மதிப்புள்ள 10,356 பம்பு செட்டுகள் (1968-70) வழங்கப்பட்டன.

37. ரூ. 87 லட்சம் மதிப்புள்ள 221 டிராக்டர்கள் (1968-70) கடனாக வழங்கப்பட்டன.

38. 748 டிராக்டர்கள் ரொக்க விலைக்கு அளிக்கப்பட்டன.

39. 4633.76 ஏக்கரில் தமிழ்நாடு முழுதும் மொத்தம் 62 அரசுப் பண்ணைகள்


உள்ளன.

40. விவசாயிகட்கு நல்ல ரக விதைகளை வழங்கிட 'மாநில விதைப் பண்ணைகள்'


பல தொடங்கப்பட்ட பட்டுள்ளன.

41. 4-வது திட்ட காலத்தில் விதைப் பண்ணைகள் ஏற்படுத்தும் பொருட்டு,


ஆண்டுதோறும் 2,780 டன் நெல்லும், 505 டன் எண்ணெய் வித்துக்களும்
வழங்கத் திட்டமிட்டது.

42. 25 ஏக்கர் பரப்புள்ள 230 'விதைப் பண்ணைகள்' அமைக்கப்படும்.

43. பொருளாதார நிலையை உயர்த்த மண்வளக் காப்பு நடவடிக்கை, பாசன


வசதிகள் ஆகிய திட்டங்களின் மூலம் 1968-69-ல் அரசு விதைப் பண்ணைகளிலிருந்து
கிடைத்த லாபம் ரூ. 7,61,190.

44. விதைப் பண்ணைகளின் ஊழியர்கட்கு உற்சாகமூட்டத் 'திறமை பரிசுகள்'


ரொக்கமாக வழங்கப்படுகின்றன.

45. வடாற்காடு நவலோக்கில் உள்ள அரசு விதைப்பண்ணையில் 'வித்து


பதனப்படுத்தும் நிலையம்’ ஒன்று அமைக்கப்பட்டது.
46. தரமான விதைகளை விவசாயிகட்கு நேரிடையாக வழங்கப் பொறுக்கு விதை,
நடவு விதைகள் உற்பத்தியாகின்றன. 1968-69-ல் 2,855 டன், முதல்நிலை நெல்
வித்துக்களும், 1969-70-ல் 2,738 டன்னும் பகிர்ந்தளித்தது.

47. வித்துக்களின் தரத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் 'விதைச் சான்றிதழ்'


திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

48. விதைகளின் தரத்தைப் பரிசோதனை செய்யக் கோவையில் 'ஆய்வுக் கூடம்'


நிறுவப்பட்டுள்ளது.

49. பத்திரப் பதிவுக் கட்டணம், நிலத்தீர்வை அடிப்படையில் நிர்ணயிக்கவேண்டும்


என்ற விவசாயிகள் கோரிக்கையை அரசு ஏற்றுச் செயல்படுத்துகிறது.

50. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பின் தங்கிய வகுப்பினருக்கு, இலவசமாக உழவு


மாடுகள் வழங்குவதற்காக ரூ.12000 - மும், பழங்குடியினருக்கு ரூ.2800 - ம்
அளித்துள்ளது.

4. உணவு உற்பத்தி

1. முதன்முதலாக மத்திய அரசிற்கு 1 லட்சம் - டன் அரிசி விற்பனை செய்கிறது.

2. உணவு உற்பத்தியில் முன்னேற்றங்கண்டதால், உணவுக் கட்டுப்பாட்டை


அடியோடு நீக்கிற்று.

3. வெளி மாநிலங்களில் நிலம் வைத்திருப்போர் அரிசி கொண்டுவர அரசு


அனுமதி வழங்கியுள்ளது.

4. குடும்பக் கார்டு மூலம் இம்மாநிலத்தில் 11/4 கோடி பேருக்கு நியாய


விலையில் அரிசி வழங்கியது.

5. நியாய விலைக் கடைகள் திறந்து, உணவுப் பொருள்களும் காய்கறிகளும்


நியாய விலையில் எல்லோருக்கும் கிடைத்திடச் செய்தது.

6. சென்னையிலும், கோவையிலும் படி அரிசித் திட்டம் கொண்டுவந்து


ஏழைகளும் குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயன் பெறச் செயல்
படுத்துகிறது.

காங்கிரஸ் அரசாட்சியில் உணவுக்குப் பஞ்சம்; அரிசிக்கு ரேஷன். ''எட்டு


அவுன்ஸ், ஏழு அவுன்ஸாகிப் பிறகு ஆறு அவுன்சு”' ஆன பழைய கதையிலிருந்து,
திங்கள் இரவு சாப்பிடாதீர்; வியாழன் இரவு விரதம் இருப்பீர் என்ற கட்டுப்பாடு வரை
நாடு மறக்காது.

அரிசிக்கு ஆலாய்ப் பறந்தார்கள்; படி அரிசி சென்னையில் மூன்றே முக்கால்


ரூபாய் விற்ற காலம் அவர்கள் ஆட்சி! அட்டை (ரேஷன் கார்டு) இங்கே; அரிசி
எங்கே? என்று மக்கள் குமுறிய ஆட்சி.

தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அரிசி கள்ளக் கடத்தலைத் தடுத்தது;


கொள்முதல் ஏராளம் செய்தது. பணக்காரர்களிடம் தட்டிக் கேட்டது; ஏழை

விவசாயிகளிடம் அன்புடன் கேட்டது. Tap the rich and pat the poor என்பது அதன்
கொள்முதல் கொள்கையாயிற்று.

படி அரிசி திட்டத்தைச் சென்னையிலும் கோவையிலும் அமுல்படுத்திற்று.

சுமார் 6 லட்சம் ஏக்கராவில் இருபோக சாகுபடித் திட்டம் வகுத்தது.

நீர்ப்பாசன வசதி, வடிமுனைக் குழாய்க்கிணறு, ஏழை உழவர்களுக்கு எளிய


வகையில் கடன் வசதி, ஆங்காங்குக் கூட்டுறவு நிலவள வங்கி போன்ற ''பல
முனைத் தாக்குதலை'' உணவுப் பற்றாக்குறை மீ து நடத்தி, அதனைச்
சமாளித்ததோடு, இன்று அபரிமித ஸ்டாக் ஏற்பட்டு, "கண்ட்ரோல்” ரத்தான்து
மட்டுமல்ல, அரிசியை அதிக விலை தருவோருக்கு ஏலம் போட்டு,
வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியின் உணவுக்
கொள்கையும் செயல்திறனும் மக்களின் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றுள்ளது!
இதன் விளைவு,

1966-67-ல் 1970-71-ல்

1. மொத்த தானிய உற்பத்தி 53 லட்சம் டன் 65 லட்சம் டன்

2. நைட்ரஜன் உரங்களைப்

பயன்படுத்தும் அளவு 85,000 டன் 1,52,000 டன்

3.விமானம் மூலம் பயிர்கட்கு மருந்து

தெளிப்பு- 28,000 ஏக்கர் 10 லட்சம் ஏக்கர்

4. மிகு பயன் தரும் விதைகளைப்

பயன்படுத்திய பரப்பு 5.27 லட்சம் 216 லட்சம்


ஏக்கர் ஏக்கர்

5. தஞ்சை மாவட்டத்தில் ஒரு 1966-67.ல் 1970-71-ல்,

போக நிலங்களில் இரு போக

சாகுபடி விவசாயத்திற்குக் கூட்டுறவு மூலம்

கடன் உதவி 31.44 கோடி 65.50 கோடி

6. நிலவள வங்கிகள் எண்ணிக்கை 105 166

7. டிராக்டர்கள் வழங்கல் 209 1,136

பசுமைப் புரட்சி

காவிரி டெல்டா அபிவிருத்தித் திட்டத்திற்கு ரூபாய் 40 கோடி செலவு அரசு


செய்ய முனைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்துக்கு ரூ. 50 கோடியில் ஊற்று நீர்ப் பாசனத் திட்டம்.

கோவையில் விவசாயப் பல்கலைக் கழகம் அமைக்கும் ஏற்பாடு முடிவுக்கு


வந்துவிட்டது.

பொதுப்பணித் துறையில் நீர்ப்பாசனப் பிரிவில் நடப்பு ஆண்டில்


மேற்கொண்டுள்ள திட்டங்கள் மூலம் மேலும் 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப்
புதிதாகப் பாசன வசதி அளித்திருப்பதுடன் 11/2 லட்சம் ஏக்கர்களுக்குமேல் பாசன
வசதிகளைக் கணிசமான அளவுக்கு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அரணையாறு அணைக்கட்டு


மூலம் 7,500 ஏக்கர் நிலங்கள் புதிதாகப் பாசன வசதி பெற்றுள்ளன.

மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இருப்பது போல


அகவிலைப் படி, நகர ஈட்டுப்படி, விடுப்பு நாட்களை ரொக்கமாக மாற்றிக்கொள்ள
வசதி உண்டு.

ரூ.2000 வரை திருமணக் கடன், ஓய்வு கால வசதிகளில் கூடுதல்


அனுகூலங்கள்.
புதிதாக வந்த இரண்டாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரையை ஏற்று, ரூ.21
கோடிக்கு அரசு ஊழியர்கட்கு ஊதிய உயர்வு. இது வரலாறு காணாத சாதனையாகும்.

இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் முதல் சம்பளக் கமிஷன் மூலம்


கொடுக்கப்பட்ட தொகை 5 கோடி ரூபாய் தான்.

போலீஸாருக்கு………

காவல்துறையினரது குறை நீக்க, அவர்கட்குப் புது வாழ்வு - வளமிக்க வாழ்வு


அளிக்கப் போலீஸ் கமிஷன் ஒன்றைத் தி.மு.க. அரசு அமைத்து, அதன்
பரிந்துரையைப் பெற்றுள்ளது. விரைவில் அவர்கள் நிலை உயர ஆவன செய்வதில்
அரசு தீவிரம் காட்டும்.

போலீஸார் வடுகளில்
ீ 10 யூனிட் மின்சாரம் தான் என்று இருந்ததை 20 யூனிட்
என்று உயர்த்தியது தி. மு. க. அரசு.

அண்ணா - பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் முதலமைச்சர் விருது (State Anna


Medals) வழங்கும் திட்டம் .

சிறந்த சேவை செய்யும் போலீஸாருக்கு அண்ணா பிறந்த நாளன்று ஆண்டு


தோறும் 3000, 2000, 1000 என்ற அளவில் பண முடிப்பு வழங்கி ஊக்குவித்து வரும்
திட்டம் அது.

காவலர் நிதி 50,000 த்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

9. குடியிருப்பு வசதிகள்

இந்தியாவிலேயே வட்டு
ீ வசதித் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு
முதலிடம் வகிக்கிறது. குஜராத் இரண்டாவது இடம் வகிக்கின்றது. மற்ற
மாநிலங்களில் வட்டு
ீ வசதித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம்
செலவழிக்கப்படாமல் மீ தி இருக்கின்றன.

(1) ஏழைகட்கும் வடு


ீ கட்ட கடனுதவி :

வடு
ீ கட்ட ஏழைகளுக்குக் கடன் உதவி செய்வதற்குத் தமிழ்நாட்டரசு திட்டம்
வகுத்துள்ளது. கூட்டுறவு அடமான வங்கிகள் மூலமாக வடு
ீ கட்டுவதற்குத் தற்போது
ரூ.20 ஆயிரம் வரை கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. சமுதாயத்தின் மேல்
மட்டத்திலுள்ளவர்கள் தான் பயனடைகிறார்கள்.

ஏழைகள் வடு
ீ கட்டிக்கொள்ள ரூபாய் 3 ஆயிரம் வரை கடன் வழங்கும்
திட்டம் தி.மு.க, அரசு கண்ட தனித்திட்டம்.

இந்தக் கடனை மாதம் 30 ரூபாய் வதம்


ீ தவணை முறையில் திருப்பிக் கட்டிக்
கொண்டுவந்தால் 15 ஆண்டுகளில் வடு
ீ சொந்தமாகிவிடும். இந்த திட்டத்திற்காக வடு

அடமான வங்கிகள் மூலம் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 84
நகரசபைகளிலும் 457 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

தி. மு, க, சாதனை ஒரு தனி ”ரிகார்ட்”

1956-லிருந்து 67-ம் ஆண்டுவரை 11 ஆண்டுகளில் வசதி வாரியம் கட்டிய


வடுகள்
ீ - 4,073.

1967-69 வரை (தி. மு. க. ஆட்சியில் கட்டிய வடுகள்)


ீ -- 6,322

இவ்வாண்டு மேலும் -- 528

ஆக 67 முதல் 70 வரை கட்டப்பட்ட வடுகள்


ீ 6,850

குறைந்த வருமானக்காரர்கள், நடுத்தர வருமானக்காரர்கள்,

அரசு ஊழியர்கள் ஆகியோர்கட்காக 1956 முதல் 1967 வரை கட்டப்பட்ட

குடியிருப்புகள் 8,917

கழக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில்

கட்டப்பட்டவை 10,028

கட்ட மேலும் திட்டமிடப்பட்டவை. 1,869

(3) குடிசைவாழ் பகுதிகளில்……..

ரூ. 6 கோடியே 87 லட்சம் செலவில் சென்னையில் குடிசை வாழ் பகுதிகளில்


11,508 குடியிருப்புக்களைக் கட்டித்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இத்திட்டம்


நிறைவேற்றப்பட்டுவிடும்.
இத்தகைய திட்டங்களுக்காக தி.மு.க. அரசு மத்திய அரசிடம் 14 கோடி ரூபாய்
உதவித் தொகையை மான்யமாகப் பெறக் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை நகரில் ஏழைகளுக்கு எரியாத வடுகள்


ீ சுமார் 6000 இதுவரை கட்டித்
தரப்பட்டுள்ளது.

(4) ரூ. 40 கோடியில் குடிசை மாற்றுத் திட்ட வாரியம் (Slum Clearence Board)

'' ஏழைகளின் சிரிப்பே எங்கள் அண்ணனின் லட்சியம்'' என்ற குறிக்கோளுடன்


சுமார் 40 கோடி ரூபாய் செலவிடும் திட்டமாக, குடிசை மாற்றுத் திட்டம் தமிழ்நாடு
தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 40 கோடி ரூபாய்களை 7 ஆண்டுகளில்
செலவழித்து, சென்னை நகரில் குடிசைகளையகற்றி, அவற்றில் வாழ்வோரை புதுக்
கட்டிடங்களில் வடுகளில்
ீ குடியமர்த்த, சிறப்பான. ஏற்பாடுகளை சிங்கப்பூரில் செய்தது
போல் செய்யத் தி.மு.க. ஆட்சி திட்டமிட்டும் அதற்கான திட்டங்களை ''மேஷம்,
மீ னம்" பார்க்காமல் உடனடியாகத் துவக்கிவிட்டது. இதுவும் ஒரு வரலாறு காணாத
பிரமிக்கத்தக்க சாதனையாகும்.

10. சமதர்மத்தை நோக்கி.....!

சமூக ஏற்றத்தாழ்வைப் போலவே பொருளாதாரத் துறையில் உள்ள


ஏற்றத்தாழ்வினையும் ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைத் தி.மு.க. ஆட்சி
வெறும் வாய்ஜாலமாக வைக்காமல் கைவண்ணமாகச் செயலாக்கிக் காட்டியுள்ளது!

(1) அண்ணா சமர்ப்பித்த முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே போக்குவரத்துத்


துறையில் 75 மைல்களுக்கு மேற்பட்ட பஸ் ரூட்டுகளை, அவை காலாவதி ஆக ஆக
அரசு நாட்டுடைமை ஆக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அது செயலாகியது.

அதனை எதிர்த்துப் பஸ் முதலாளிகள் அய்க்கோர்ட்டுக்கும் சுப்ரீம்


கோர்ட்டுக்கும் சென்று முயன்றும் தோல்வியடைந்தனர்.

1969 மார்ச் வரை 380 பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. 1969-70-ல் 60,
பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆக இதுவரை சுமார் 440 பஸ் ரூட்டுகள்
அரசினரால் எடுத்துக்கொள்ளப் பட்டன.

பஸ் முதலாளிகளையே நம்பிப் பழைய காங்கிரஸ் தேர்தலை நடத்தியது


என்ற நிலையில், அவர்களால் முடியாததை விஞ்ஞான பூர்வ சோஷலிசத்தைத்
தேர்தல் பிரகடனமாகக் கொண்ட தி.மு.க. செய்து காட்டியது!
(2) நில உச்சவரம்புச் சட்டம் காங்கிரஸ்காரர்கள் காலத்தில் 30 ஸ்டாண்டர்டு
ஏக்கரா என்று வைக்கப்பட்டது. அதுவும் காங்கிரசில் அப்போது அமைச்சர்களாகவும்
அதற்குத் தேர்தல் நிதி கொடுப்பவர்களாகவும் உள்ள பெரும் நிலப்பிரபுக்கள்
பாதிக்கப்படாத வகையில் ஏராளமான விலக்குகள் மேய்ச்சல் நிலம், கரும்பு நிலம்,
சவுக்கு நிலம் - இப்படிப் பலவற்றினை மனத்திற்கொண்டே விலக்குத் தந்ததுபோல்
செய்தனர்.

தி.மு.க. ஆட்சி நில உச்ச வரம்பினைத் திடீரென 15 ஸ்டாண்டர்டு ஏக்கராவாகக்


குறைத்ததோடு, விலக்குகளை நீக்க ஒரு குழுவும் அமைத்து, அதன் அறிக்கை மீ து
செயல்படக் காத்திருக்கிறது!

இதன் காரணமாக இங்கு நிலப்பறி இயக்கம் வெற்றி பெற முடியாத நிலை


ஏற்பட்டது. சட்டப் பூர்வமாகவே ஆதிக்கத்தைத் தடுக்க முயலுகையில் வன்முறை
வளராதல்லவா ?

(3) நிலமற்ற ஏழை எளிய மக்களுக்குத் தி.மு.க. ஆட்சி, இதுவரை சுமார் 21/2
லட்ச ஏக்கராவிற்கு மேல் பட்டா வழங்கியிருக்கிறது! கடந்த 20 ஆண்டுகால
காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டா 14000 ஏக்கர்தான்.

தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் வழங்கியது 21/2 லட்சம் ஏக்கர்களுக்கான


பட்டாக்கள்.

அதில் சில இடங்களை சட்டமன்ற உறுப்பினர்களில் யார் பெற்றிருந்தாலும்


அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும், அந்தப்படி கொடுக்காவிட்டால்,
அரசு திரும்ப எடுத்துக்கொள்ளச் சொல்லி மாவட்டக் கலெக்டர்களுக்கு உத்தரவிடும்
என்றும் முதல்வர் கலைஞர் கூறியுள்ளார்.

காட்டு நிலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலங்களையும்


ஏழைகளுக்குப் பட்டாக்களாக வழங்க வகை செய்யும் வகையில் திருத்தப்படும் என்று
முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

(எதிர்க்கட்சியினருக்குத் துரும்பைத் துளைக்க இதிலும் வழியில்லாமல்


போயிற்று.)

(4) தமிழ்நாடு 1969-ம் ஆண்டு பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டம்


பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய விகிதங்களில் ஊதியம்
கொடுப்பதற்கும், அதற்குத் தொடர்பானவற்றுக்கு வகை செய்வதற்குமான சட்டமாகும்
இந்தச் சட்டம்.

இச்சட்டத்தின் மூலம் அறுவடைக்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதுடன்,


நிர்ணயித்த நியாய ஊதியம், கதிரடிக்கப்படுகிற களத்து மேட்டிலேயே கொடுக்கப்
படவேண்டும் என்றும், தொடர்புள்ள பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய ஊதியம்
கொடுக்கப்படாமல் களத்துமேட்டிலிருந்து விளைபொருளின் எந்தப் பகுதியையும்
அப்புறப்படுத்தக்கூடாது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

உரியகாலத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் விளைவாகப்


பண்ணைத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கவும் தஞ்சை
மாவட்டத்தில் ஒழுங்காக அறுவடை நடக்கவும் ஏதுவாயிற்று.

(5) புஞ்சை நிலங்களுக்கு வரிவிலக்கு

வசதிக் குறைவான விவசாயிகட்கு வரிச்சுமையை நீக்கப் புன்செய்


நிலங்களுக்கு அடிப்படைத் தீர்வை நில வரி விலக்கு.

(6) 5 ஏக்கரா உள்ள சிறு உழவர்க்கு நஞ்சைக்கும் வரிவிலக்கு

கெய்வார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, 5 ஏக்கரா வரை உள்ள விவசாயிகளின்


நஞ்சைகட்கு வரி விலக்கு அளிக்க அரசு முனைந்துள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு
ரூ. 6 கோடி.

11. ஜாதி ஒழிப்பு தி. மு. க. ஆட்சி சாதனை

(1) ”பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து


வரும் அதே வேளையில், சாதிபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு
ஊக்கமளிக்க வேண்டியதின் அவசியத்தை நாம் மறந்திடலாகாது. ('பிறப்பொக்கும்
எல்லாவுயிர்க்கும்” என்ற குறள் நெறியினின்றும் வழுவி, மரபழித்துக் கொண்டு
பிளவுபட்டுக் கிடக்கும் தமிழக மக்களிடம் நிதி கப்பிக்கொண்டிருக்கும் சாதிப்பிடிப்பு
நீக்கப்பட்டு, சமூக ஒருமைப்பாடு ஏற்பட்டாக வேண்டுமென்ற கொள்கையிலேயே,
இந்த அரசு பற்றுமிகக் கொண்டருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இன்றைய
பேதமும் பிளவும் நீங்கி, 'எல்லோரும் ஓர் குலம் - ஓர் நிறை' என்ற குறிக்கோள்
வெற்றிபெறக் கலப்புத் திருமணம் பெருகிட வேண்டும் என்ற நோக்குடன்,
கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் மணமக்களுக்கு அரசு தன் பாராட்டுதலைத்
தெரிவித்துக் கொள்ளும் முறையில், ஒவ்வொரு ஆண்டும் பாராட்டுவிழா நடத்தி,
அவர்கட்குப் பொற்பதக்கம் வழங்கி, மதிப்பளிக்கும், திட்டத்தை மேற்கொள்ள, இந்த
அரசு தீர்மானிக்கிறது... இதற்காகக் குத்துமதிப்பாக ரூ.10,000 கொண்ட, தொகை
இவ்வருடம் ஒதுக்க ஏற்பாடாகிறது.''

[-பேரறிஞர் அண்ணா பட்ஜெட் 1967-68]


இதன்படி 48 கலப்புத் திருமணத் தம்பதிகள் பதக்கம் பெற்றுள்ளனர்.

1968 69-ம் ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் ரூ. 35,000 ஒதுக்கினார்!

20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் சமதர்மம் பற்றியும், சாதியொழிப்புப்


பற்றியும் உதட்டளவில்தான் பேசப்பட்டு வந்ததே தவிர, இதுமாதிரி உருப்படியான
வகையில் காரியம் ஏதும் செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(2) சாதி, சமயம், கோத்திரம், சடங்கு போன்ற எதனையும் கவனிக்காது, இருவர்


கருத்தொருமித்துத் திருமணம் செய்துகொள்ளும் சுயமரியாதைத் திருமண
முறையினைத் தந்தை பெரியார் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளாக நாட்டில் பெரும்
எதிர்ப்புக்கிடையில் ஏற்படுத்தி, அதனைப் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள்,
திராவிடர்கள் ஏற்றுச் சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தி வருகையில்,
நீதிமன்றத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம் காரணமாக 'அது சட்டப்படி
செல்லத்தக்கது. அல்ல' என்று 1953-ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

சமுதாயத்தில் மிகப் பெரும்பாலான மக்களால் ஏற்றுப் பின்பற்றப்பட்ட


போதிலும்கூட சட்டத்தின் முன்---கணவன் மனைவியாக இல்லாமல்----கணவன்,
வைப்பாட்டியாக வாழும்-அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமற்ற
குழந்தைகள் (Illegitianate Children) என்ற அவலநிலையைப் போக்கக் காங்கிரஸ்
ஆட்சியின்போது, எதிர்க் கட்சியாயிருந்த தி.மு.க.வினர் முயற்சியைச்
சனாதனவாதிகள் காங்கிரஸார் எதிர்த்தனர். அதற்குமுன் இருமுறை அந்தத்
தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் தோற்கடித்தனர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், இந்தச்


சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படிச் செல்லன வைக்கும் வகையில், இந்து
திருமணச் சட்டத்தைத் திருத்தி அதனைச் சட்டமன்றத்தில் ஏகமனதாக
நிறைவேற்றினார். இரு சபைகளிலும் ஏகமனதாக நிறைவேறி, ஜனாதிபதியின்
ஒப்புதலும் பெற்று, சுயமரியாதைத் திருமணச் சட்டம் முழு வடிவம் பெற்று, முன்பு
நடந்த திருமணங்களும்கூட இதன் படி (Retrospective Effect) செல்லுபடியாகும்
என்பதாயிற்று.

தமிழ்நாட்டின் சமூகப்புரட்சி வரலாற்றில் இந்தச் இதனை சரித்திரப்


புகழ்வாய்ந்த ஒன்று!

(3) ஆண்டவனைத் தொழும் நிலையில்கூட சாதிக் கொடுமையுண்டு. காரணம்,


கருவறை என்ற கர்ப்பக் கிருகத்துக்குள் சென்று, கடவுளுக்குப் பூசை செய்ய
அர்ச்சகருக்கு மட்டுமே உரிமை. அர்ச்சகராக இருக்கப் பிறப்புத் தகுதி தான்; பார்ப்பனர்
-- “மேல்சாதிக்காரர்''. மட்டுமே அர்ச்சகராகலாம் என்ற வழி வழிக் கொடுமை தன்
இரும்புப் பிடியுடன் இங்குப் பிடித்துக் கொண்டிருந்ததை உடைத்தெறிந்து, கல்வி
அடிப்படையில் சில தகுதிகளைப் பெற்று, அனைத்துச் சாதி யாரும் அர்ச்சகராகலாம்
என்று சட்டத்தைத் திருத்தியமைத்தது தி.மு.க. ஆட்சியாகும்!

இந்தச் சட்ட திருத்தமும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமண


மசோதாபோல், எதிர்ப்பேயின்றி நிறைவேறியது குறிப்பிடத்தக்கது! (அப்போது
சட்டமன்றத்தில் இதனை ஆதரித்த எதிர்க்கட்சியினர் இப்போது வெளியே இதைக்
குறித்துப் பிரசாரம் செய்வது அசல் பித்தலாட்டமல்லவா? சிண்டிகேட் காங்கிரஸ்
கட்சியைச் சார்ந்த ஒரு பார்ப்பன எம்.எல்.ஏ.வும். சட்டமன்றத்திற்கு ஆதரவு
தெரிவித்துப் பேசியதும் நினைவு கூர்த்தக்கது.)

இந்தியாவிலேயே இப்படியொரு மெளனப் புரட்சியைச் செய்த ஆட்சி


தி.மு.கழக ஆட்சியைத் தவிர, வேறு ஆட்சியாக இருக்கவே முடியாது!

12. சமூக நீதி

பிற்படுத்தப்பட்டோர் நலன்-தாழ்த்தப்பட்டோர் நலன்

பேரறிஞர் அண்ணாவின் தலைமையின்கண் உருவான இந்த ஆட்சி,


சமுதாயத்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்ட
கோடிக்கணக்கான மக்களைக் கைதூக்கி விடும், விழிதிறந்து வழிகாட்டும் அரசாகும்.

”தந்தை பெரியார்க்கு எங்கள் அமைச்சரவையே காணிக்கை'' என்றார்


சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள். ”பெரியார்தான்
தமிழக அரசு; தமிழக அரசுதான் பெரியார்!'' என்றார் இன்றைய முதல்வர் கலைஞர்!
அத்தகையோர் ஆட்சியில், சாதியால் மிகமிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்
சார்ந்தவன் தான், என்பதைப் பெருமையோடு கூறினவர்--கூறுகிறவர் முதல்வர்
கலைஞர்.

எனவே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனும் நல்வாழ்வும்


தி.மு.க. ஆட்சியின் தலையாய லட்சியங்களில் ஒன்றென்பதை வலியுறுத்தவும்
வேண்டுமோ?

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் மிக்க அக்கறையுள்ளவர்கள்


இவர்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இரண்டு அமைச்சர்கள் உள்ளனர்;
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து ஆறு பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கெனத் தனியிலாகா இருப்பது போலவே,


பிற்படுத்தப்பட்டோருக்கும் தனி இலாகா இருத்தல் வேண்டுமென்பதைக் காகா
கலேல்கார் கமிட்டியாரது “அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு'' வின்
பரிந்துரையில் 1954-லேயே கூறியிருந்தும், அதுபற்றி அப்போது ஆண்ட காங்கிரஸ்
ஆட்சியாளர் கவனித்து நடவடிக்கையேதும் எடுக்கவே இல்லை. தி.மு.க. ஆட்சி தான்
அதனை முதன் முறையாகச் செய்தது!

(1) பிற்படுத்தப்பட்டவர் நலத்துக்கெனத் தனி டைரக்டர் (அய்.ஏ.எஸ். அதிகாரி,


தனி டைரக்டரேட்) தனி அமைச்சர் என்று உண்டாக்கப்பட்டனர்.

(2) கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட--தாழ்த்தப்பட்ட


இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு, இட ஒதுக்கீ ட்டைச் சரிவரக் கண்டிப்பாக
அமுல்படுத்தியாக வேண்டுமென்று வற்புறுத்திச் சுற்றறிக்கையனுப்பியது தி மு. க.
அரசு. முந்தைய அரசு அதனை வெறும் ஏட்டுச்சுரைக்காயாகத்தான் வைத்தது!

(3) பிற்படுத்தப்பட்டோர் நலத்தை ஆராயவும், அவர்கள் முன்னேற்றத்துக்காகத்


தனிக்குழு (கமிஷன்) ஒன்றை, வன்னியர் சமூகத்தைச் சார்ந்த திரு ஏ. என்.
சட்டநாதன் அவர்கள் தலைமையில் தி.மு க. அரசு நியமித்து, அதன் பரிந்துரைகள்
சில வாரங்கட்கு முன்னர் கிடைக்கப்பெற்ற நிலையிலவற்றைப் பரிசீலித்துக்
கொண்டுள்ளது,

(4) பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு (அவர்களுக்குள்ள


தனித்தகுதி ஏதும் குறைக்காமலேயே) பல பெரிய உத்தியோகங்களை வழங்குவதில்
தி.மு.க. அரசு சமூக நீதி உணர்வுடன் செயலாற்றி உள்ளது. (விவரம் பின்னர் காண்க)
(5) பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கல்விச் சலுகையளிக்க, 45-50 சதவிகித
மார்க் தேவையென்ற பழைய காங்கிரஸ் அரசாங்க உத்தரவை மாற்றி, 40
சதவிகிதமே போதுமானதென்று திருத்தியது.

அறையில் சுழலும் மின்சார விசிறி--விளக்கடியில் 'ஓவல்' பானம் அருந்திப்


பாடம் படிக்கும் அய்.ஏ.எஸ். அதிகாரியின்-அக்கிரகாரத்தின் மகன் மார்க்கும்--சேரியில்
குடிசையில் மண்ணெண்ணெய் விளக்குதவியுடன் வாசிக்கும் குப்பனின் மார்க்கும்
ஒன்றாகுமா? அதனால் தான், இத்திருத்தத்திற்கு சர்க்கார் காலர்ஷிப்புக்கு ஒன்றரை
கோடி ரூபாய்க்கு மேல் செலவு.

எஞ்சின ீயர் பட்டப்படிப்புக்கு 60 சதவிகித மார்க் வாங்கினால்தான் மனு


போடலாம் என்றது, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பேரிடி இதனைப்
பழைய காங்கிரஸ் ஆட்சி, வெங்கடராமனார் காலத்தில் அமுலாக்கியது. இதனை
”விடுதலை'' நாளேடு விடாமல் எதிர்த்து வந்தது.

தி.மு.கழக ஆட்சி, இதனை மாற்றி 55 சதவிகித மார்க் இருந்தால்


போதுமென்றாக்கியது. ஏராளமான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள்
எஞ்சின ீயர்களாக இதன் மூலம் வர வாய்ப்புண்டாகிவிட்டது.

அனைத்துச் சாதியினர்க்கு

1966-67 1969-70
முதலீட்டுக்கு ஒதுக்கிய தொகை 184 லட்சம் 314 லட்சம்
படிப்பு, ஸ்காலர்ஷிப்புகள் 94 லட்சம் 300 லட்சம்

தாழ்த்தப்பட்டோர் நலன்:

1. தாழ்த்தப்பட்ட மக்களில் பலருக்குப் பல உயர்ந்த உத்தியோகங்கள், பதவிகள்


தி. மு. கழக ஆட்சியில் தரப்பட்டுள்ளன. (பின்னால் பட்டியல் காண்க)
2. தாழ்த்தப்பட்ட மக்கள் தொழில்-வாணிபம் 'தொடங்கிட அளிக்கப்படும்
வட்டியில்லாக் கடன் சுமார் 5000 ரூபாய் வரையிலாகும். இதற்குப் பல லட்ச
ரூபாய் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன.
3. தாழ்த்தப்பட்டோர் குழந்தைகட்கு இலவசப் பால் விநியோகம். இதுவரை சுமார்
5 லட்ச ரூபாய்க்குமேல் செலவு.
4. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், பெண்கள் தொழிற்பயிற்சி பெறத் தொழிற்பயிற்சி
நிலையங்களை அரசு தொடங்கிவருகிறது.
5. தாழ்த்தப்பட்டோருக்கென 22 புதிய மாணவர் விடுதிகளை ஏற்பாடு
செய்துள்ளது.
6. தாழ்த்தப்பட்ட மாணவர்கட்கு இலவச மருத்துவ பரிசோதனை.
7. அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் அதிக மாணவர்கள் தேர்ச்சியடைந்த
பள்ளிகளுக்குப் பரிசு வழங்கல்.
8. காந்தியார் பிறந்த நாளில், எஸ்.எஸ்.எல்.சி.யில் அதிக மதிப்பெண் பெறும்
தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியர்கட்கு ஒவ்வொரு மாவட்டத்தினை
ஓரளவாகக் கொண்டு ரூ. 1000 அரசின் பரிசு என்று முதல்வர் கலைஞர் 2--10-70
அன்று அறிவித்தார்.
9. தாழ்த்தப் பட்டோர் 1966-67 1970-71

நலனுக்கு ஒதுக்கியது தொகை ரூ. 405 லட்சம் 519 லட்சம்

10. நிலப்பட்டா கொடுப்பதில் தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கி, (7- வது


வரிசையில் உள்ளவர்களை இரண்டாவது வரிசைக்குக் கொணர்ந்து, பழைய
காங்கிரசு அரசின் உத்தரவை மாற்றியமைத்து, தாழ்த்தப்பட்டடோர்கள்
(ஆதிதிராவிடர்கள்) எளிதில் நிலம் பெற வழிவகை செய்தது தி.மு.கழக அரசு.

13. தெரிந்துகொள்ளுங்கள் !

--நல்ல முத்துக்கள்"

1. தமிழ் நாடு '' வந்தது.

சென்னை ராஜ்யம் என்றிருந்த பெயரைத் "தமிழ்நாடு'' என்று மாற்றியது


தி.மு.க. அரசு.

-பேரறிஞர் அண்ணா அவர்கள் இதனைத் தமது ஓராண்டுகால ஆட்சியின்


முப்பெருஞ் சாதனைகளுள் ஒன்றென்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

2. இரு மொழிக் கொள்கை மலர்ந்தது:

இந்தி, இங்கிலீஷ், தமிழ் என்று மும்மொழித் திட்டத்தையொழித்து, இங்கிலீஷ்-


தமிழ் என்ற இரு மொழிக் கொள்கையை அறிவித்தது தி. மு. க. அரசு

இது இந்திக்கு லாலிபாடிய காங்கிரசு ஆட்சியில் என்றென்றும் நடைபெற


முடியாத மாபெருஞ் சாதனையாகும்!

3. ’ திரு ' வந்தது “ ஸ்ரீ ' ஒழிந்தது :


1937-ம் ஆண்டு ஆச்சாரியார் காலத்திலிருந்து இயக்க மாநாடுகள் பலவற்றில்
தீர்மானம் இயற்றப்பட்ட திட்டப்படி அரசினர் குறிப்பில் பெயருக்கு முன்னர்
எழுதப்பட்ட 'ஸ்ரீ', 'ஸ்ரீமதி', 'குமாரி', என்பவைகளுக்குப் பதிலாக முறையே 'திரு',
'திருமதி', 'செல்வி' மலர்ந்தன.

4. கல்லக்குடி கண்டோம்

டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றத்திற்காக மாபெரும் போராட்டம்


ஆச்சாரியார் ஆண்டபோது கலைஞர் திரு.மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது
அதற்காகத் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டு, இரு பிணங்கள் விழுந்தன.

தி.மு.கழக ஆட்சியில் டால்மியாபுரம் - 17 ஆண்டுகளுக்குப் பிறகு ”கல்லக்குடி''


என்று ஆகியது.

கலைஞருக்குத் தந்தை பெரியார் வாழ்த்துத் தந்தி அனுப்பினார்!

5. பெயரில் என்ன இருக்கிறது?

”ஆகாஷ்வாணி” - “ வானொலி

’பிராந்தியச் செய்தி’ - ”மாநிலச் செய்தி"

''மதராஸ் வானொலி - சென்னை வானொலி நிலையம்''

-என்றெல்லாமாகித் தமிழின உணர்வூட்டியது தி.மு.க. ஆட்சியின் சாதனை


திறத்தால்தான்.

[ இந்தியாவை- 'பாரத்' ஆகவும் காசியை “வாரணாசி' 'ஆகவும் ஆக்கியவர்கள்


இதனைக் கண்டு, '' பெயர் மாற்றம் ஏன்?'' என்று பொறுமுகிறார்கள் ! விசித்திரம் II]

6. சென்னையில் தேம்ஸ்!

கூவம் நதி சீரமைப்புத் திட்டம்!

சென்னை நகரில் துர்நாற்றம் வசும்


ீ கூவத்தைத் தூய்மைப்படுத்தி, நாற்றத்தைப்
போக்கி, அதனை எளிய நீர் போக்குவரத்துடைய ஆறாக ஆக்கினால், நகருக்கு நல்ல
அழகு ஏற்படும் மலிவான வகையில் மக்களுக்குப் பயன்படும் என்ற சீரிய
நோக்கத்தை மனத்திற்கொண்டு, தி.மு.க. ஆட்சி, கூவம் சீரமைப்புத் திட்ட
வேலைகளை 19-9-1967-ம் ஆண்டு முதல்வர் அண்ணா தொடங்கி வைத்தார். இதற்குத்
தமிழ்நாட்டரசு ஒரு கோடியே பத்து லட்சத்து அய்ம்பதினாயிரம் ரூபாய்த் தொகையை
1967-ல் ஒதுக்கி, அனுமதியளித்தது.

You might also like