You are on page 1of 15

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W)


VIJAYABHARATHAM DAILY
nrhg»UJ, g§FÅ - 1 ÉahH‹ 14.03.2024 ky® - 4, ïjœ - 331
"செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்":
பிரதமர் ம�ோடி பெருமிதம்

vijayabharatham.org
குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார்
ரூ.1.25 லட்சம் க�ோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு
வீடிய�ோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் ம�ோடி அடிக்கல்
நாட்டினார். பின்னர் பிரதமர் ம�ோடி பேசியதாவது: உலக அளவில்
செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
இந்தியா ஏ.ஐ., த�ொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது.
3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தயாரிப்பு மையமாக இந்தியா
உருவெடுக்கும். இது இந்தியாவின் ப�ொருளாதார வளர்ச்சிக்கு
உதவும். பல்வேறு காரணங்களால், முதல் மற்றும் இரண்டாவது
த�ொழில் புரட்சியின் ப�ோது இந்தியா பின்தங்கியது. தற்போது
இந்தியா முன்னோடியாக உள்ளது.
இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். பிரகாசமான
எதிர்காலத்தை ந�ோக்கி ஒரு படி முன்னேறி வருகிற�ோம். இந்தியா
ஏற்கனவே விண்வெளி, அணுசக்தி மற்றும் டிஜிட்டல் துறையில்
சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செமிகண்டெக்டர் துறையில்
இந்தியாவும் உலக வல்லரசாக மாறும் நாள் வெகு த�ொலைவில்
இல்லை. இவ்வாறு பிரதமர் ம�ோடி பேசினார்.

ப�ோதைப் ப�ொருளுக்கு எதிராக பா.ஜ.,


விழிப்புணர்வு பிரசாரம்
ப�ோதைப் ப�ொருள்
புழக்கம் தமிழகத்தில்
அதிகரித்து விட்டதாக பா.ஜ.,
குற்றம்சாட்டியது. இதனை
கண்டித்து நேற்று சென்னை
வள்ளுவர் க�ோட்டத்தில்
அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் vijayabharatham.org
நடந்தது. ப�ோதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி
உள்ளது.

1
இந்நிலையில், தமிழக பா.ஜ., சார்பில், இளைஞர்கள்,
மாணவர்கள் மற்றும் ப�ொது மக்கள் இடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் https://drugfreetamilnadu.com/ என்ற
இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அதில், ‛‛ வாரத்தில்
15 மணி நேரம், ப�ோதைப்பொருளுக்கு எதிரான பிரசாரத்தை
மேற்க்கொள்வதுடன், ப�ோதைப்பொருளுக்கு எதிராக இணைந்து
பணியாற்றுவ�ோம். இளைஞர்கள் மத்தியில் ப�ோதை குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவ�ோம்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமம் முதல்
நகரங்கள் வரை செல்வோம். தீர்வு காண துணை நிற்போம்.
ப�ோதைப்பொருள் கலாசாரத்தை ஆதரிக்கும் தி.மு.க.,வை
விரட்டுவ�ோம். ப�ோதை கலாசாரத்தில் இருந்து தமிழகத்தை
காப்போம்'' என்ற உறுதிம�ொழியை ஏற்றுக்கொண்டு, அதில்
பெயர், ம�ொபைல் எண், இமெயில், முகவரி, த�ொகுதி ஆகிய
விவரங்களை க�ொடுத்தால், அண்ணாமலை கையெழுத்திட்ட
சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதனை அந்த இணையதளத்தில்
இருந்து பதிவிறக்கம் செய்து க�ொள்ளலாம்.

5 ஆண்டில் 22,217 தேர்தல் பத்திரங்கள்


வாங்கப்பட்டுள்ளன: எஸ்.பி.ஐ தகவல்
அரசியல் கட்சிகளுக்கு
நன்கொடை அளிப்பதற்காக, 2017ல்
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை,
பிரதமர் ம�ோடி தலைமையிலான
மத்திய அரசு அறிவித்தது. இதன்படி,
நம் நாட்டை சேர்ந்த தனி நபர் vijayabharatham.org
அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல்
பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு
வழங்கலாம்; இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம்
ரகசியம் காக்கப்படும். இந்த திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்கள்,
ப�ொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க்
ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச
நீதிமன்றத்தில் வழக்கு த�ொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த
உச்ச நீதிமன்றம், 'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள்
அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள்
முறை செல்லாது' என, கடந்த மாதம், 15ம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், பத்திரங்கள் த�ொடர்பான விவரங்களை
தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும் எனவும், அந்த
விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என்றும்
உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, (மார்ச் 12) தேர்தல்
பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களை தேர்தல்
ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., அளித்தது. இது த�ொடர்பாக எஸ்.பி.ஐ
தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்
பத்திரத்தில் அளித்த தகவல்களின்படி, 'நாடு முழுவதும் 2019
ஏப்.,1 முதல் 2024 பிப்.,15ம் தேதி வரை ம�ொத்தம் 22,217
தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030
பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு
க�ோடி ரூபாய் 13,109 தேர்தல் பத்திரங்களும் அடங்கும்' என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
2
ப�ோதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் கூட்டாளி கைது
ப�ோதைப்பொருள் கடத்தல்
வழக்கில் கைதான தி.மு.க.,
முன்னாள் நிர்வாகி ஜாபர்
சாதிக்கின் கூட்டாளி சதா
என்பவரை ப�ோதைப்பொருள்
தடுப்புப் பிரிவு அதிகாரிகள்
சென்னையில் கைது செய்தனர். vijayabharatham.org

சர்வதேச ப�ோதை ப�ொருள் கடத்தல் கும்பல் தலைவனாக


செயல்பட்ட தி.மு.க.,வின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட
அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக்
டில்லியில் மார்ச்9 ல் கைது செய்யப்பட்டார். அவரை, மத்திய
ப�ோதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், ஏழு நாள் காவலில் எடுத்து
டில்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உணவுப் ப�ொருட்களுடன் ப�ோதைப்
ப�ொருட்களை கலந்து கடத்தலுக்கு உதவிய ஜாபர் சாதிக்கின்
கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவரை, மத்திய
ப�ோதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில்
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே


குண்டுவெடிப்பு வழக்கு
ராஜஸ்தான் கர்நாடகா
மாநிலம் ராமேஸ்வரம் கஃபே
குண்டு வெடிப்பு வழக்கில்
திருப்புமுனையாக வழக்கு
தொடர்பாக தேடப்பட்டு
வந்த சந்தேக நபரை
தேசிய புலனாய்வு முகமை
அதிகாரிகள் (புதன்கிழமை)
vijayabharatham.org
கைது செய்துள்ளனர்.
ஷபீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர்
பெல்லாரியில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம்
நடப்பதற்கு முன்பாக கேமராவில் பதிவான நபரின்
நெருங்கிய கூட்டாளி ஷபீர் என்று நம்பப்படுவதாக போலீஸ்
வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட்
அருகில் செயல்பட்டுவந்த ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரப‌ல
உணவகத்தில் மார்ச் 1-ம் தேதி சக்தி குறைந்த குண்டு வெடித்தது.
இதில் காயமடைந்த 10 பேர் தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து
பெங்களூரு ப�ோலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு
செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைத்திருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு மார்ச் 3 தேதி தேசிய புலனாய்வு
முகமைக்கு (ஐஎன்ஏ) மாற்றப்பட்டது.
இந்தநிலையில் மார்ச் 1-ம் தேதி பெங்களூரு மாநகரப் பேருந்து
மற்றும் தும்கூருவுக்கு அரசுப் பேருந்தில் குற்றவாளி பயணம்
செய்த சிசிடிவி வீடிய�ோ கிடைத்தது. அதில் அவர் த�ொப்பி, முகக்
3
கவசம் அணியாமல் மிகச்சாதாரணமாக இருப்பது தெரிகிறது.
இதேப�ோல அவர் மார்ச் 5-ம் தேதி இரவு பெல்லாரி பேருந்து
நிலையம் அருகே நடந்து செல்வது ப�ோன்ற வீடிய�ோவும்
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இந்த
3 வீடிய�ோக்களிலும் குற்றவாளி அடிக்கடி சட்டை, பேண்ட்
ஆகியவற்றை மாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை
கண்டுபிடிக்க புலனாய்வு முகமை பொதுமக்களின் உதவியை
நாடியது. சந்தேகிக்கப்படும் குற்றவாளி உணவகத்தில்
இருக்கும் வீடிய�ோ ஆதாரம் கிடைத்த நிலையில், குற்றவாளி
குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக
வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

"ப�ொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்"

vijayabharatham.org
"பதற்றத்தை உருவாக்கி ப�ொய் குற்றச்சாட்டுகளை
பரப்புவதை நிறுத்துங்கள்" என பா.ஜ., செய்தி த�ொடர்பாளர் ரவி
சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது குறித்து டில்லியில் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு
அளித்த பேட்டி: எந்த இந்தியர்களின் குடியுரிமையையும்
குடியுரிமை திருத்தச் சட்டம் பறிக்கவில்லை. குடியுரிமை
திருத்தச் சட்டத்திற்கும் இந்திய குடிமக்களுக்கும் எந்த
த�ொடர்பும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில்
வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி ப�ொய் குற்றச்சாட்டுகளை
பரப்புவதை நிறுத்துங்கள். குறிப்பாக தமிழகம் மற்றும்
கேரளாவை சேர்ந்த மாநில கட்சிகள் நிறுத்த வேண்டும்.
மேற்குவங்கத்தில் ப�ொய் குற்றச்சாட்டுக்களை மம்தா பானர்ஜி
பரப்புகிறார். நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிற�ோம்.
எந்த அளவிற்கு அவர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு
வருகிறார். துன்புறுத்தப் படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை
அளிக்கிறது. யாருடைய வேலைய�ோ குடியுரிமைய�ோ
பறிக்கப்படாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிற�ோம்.
வாக்கு வங்கி அரசியலுக்காக கெஜ்ரிவால் பேசி வருகிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் வெற்றி பெற்றதாக உள்துறை
அமைச்சர் அமித் ஷா தெளிவாக ச�ொல்லி வருகிறார். இந்திய
முஸ்லீம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு கூறியுள்ள
நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் அவதூறு பரப்புகின்றன?.
இவ்வாறு அவர் கூறினார்.
4
''ஒவ்வொரு முஸ்லிமும் சிஏஏ சட்டத்தை வரவேற்க வேண்டும்''

vijayabharatham.org
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) யாருடைய குடியுரிமையை
யும் பறிப்பது இல்லை என்றும், இந்தியாவின் ஒவ்வொரு
முஸ்லிமும் சிஏஏ சட்டத்தை வரவேற்க வேண்டும் எனவும்
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன்
ரஷ்வி வலியுறுத்தினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம்
நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மை
யினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச்
சட்ட மச�ோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இம்மச�ோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும்
நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது.
இருப்பினும், பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த
சட்டம் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து ப�ோராட்டங்கள் நடந்தன.
அதனால், இது உடனடியாக அமல்படுத்தப்படவில்லை.
ல�ோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில்,
இதற்கான அறிவிப்பாணை, மத்திய உள்துறை அமைச்சக
இணையதளத்தில் வெளியிடப்பட்டு, குடியுரிமை திருத்தச்
சட்டம் (சிஏஏ) உடனடியாக அமலுக்கு வருவதாக மார்ச் 11ல்
தெரிவிக்கப்பட்டது. இப்போதும் பல அரசியல் கட்சிகள்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்
பிரதேசத்தை சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்
மவுலானா ஷகாபுதீன் ரஷ்வி சிஏஏ சட்டத்தை வரவேற்றுள்ளார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ
சட்டத்தை வரவேற்கிறேன். இந்த சட்டத்தை எப்போத�ோ
அமல்படுத்தி இருக்க வேண்டும். சிஏஏ சட்டம் த�ொடர்பாக
முஸ்லிம்களிடையே நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன.
இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
நம் நாட்டில் முஸ்லிம்களை தூண்டிவிடுகிறார்கள். இச்சட்டம்
குடியுரிமை வழங்குவதே தவிர, யாருடைய குடியுரிமையையும்
பறிப்பது இல்லை.
இதற்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,
வங்கதேசத்தை சேர்ந்த மதத்தால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்
அல்லாத�ோருக்கு இதுப�ோன்ற சட்டம் இருந்ததில்லை.
இந்தச் சட்டத்தால் க�ோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள்
பாதிக்கப்பட மாட்டார்கள்; எந்த முஸ்லிமின் குடியுரிமையையும்
5
பறிக்கப் ப�ோவதில்லை. தவறான புரிதல் காரணமாக கடந்த
காலங்களில் இதற்கு எதிராக ப�ோராட்டங்கள் நடைபெற்றன.
சில அரசியல்வாதிகள், முஸ்லிம்களிடையே தவறான புரிதலை
ஏற்படுத்தினர். இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லிமும் சிஏஏ
சட்டத்தை வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2026ல் செமி கண்டக்டர் சிப்கள் உற்பத்தி

vijayabharatham.org

குஜராத் மற்றும் அசாமில் உள்ள த�ொழிற்சாலைகளில் வரும்


2026ம் ஆண்டு முதல் செமிகண்டக்டர் `சிப்'கள் உற்பத்தி
செய்யப்படும் என டாடா நிறுவனத்தின் தலைவர் நடராஜன்
சந்திரசேகரன் கூறியுள்ளார். செமி கண்டக்டர்கள் 'சிப் '
உற்பத்தி செய்வதற்கான கெடுவை துரிதப்படுத்தி உள்ளோம்.
விரிவுபடுத்தி உள்ளோம். 2026ல் உற்பத்தி செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அசாம் த�ொழிற்சாலையில் நிர்ணயம் செய்யப்பட்ட
காலக்கெடுவுக்கு முன்பாகவே ‘சிப்' உற்பத்தியாகும். 2025
பிற்பகுதி அல்லது 2026 முன்பகுதியில் வணிக ரீதியிலான
செமி கண்டக்டர் ‘சிப் ' உற்பத்தி துவங்கும். குஜராத்திலும் ‘சிப்'
உற்பத்தி துவங்கும். இதன் மூலம் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்
உருவாகும். இது ஆரம்பம் தான். இந்தியாவில் ‘சிப்'களின்
பிரச்னை தீர்வுக்கு வரும். இவ்வாறு நடராஜன் சந்திரசேகரன்
கூறினார். செமி கண்டக்டர் ‘சிப்' உற்பத்தி செய்ய டாடா நிறுவனம்
குஜராத்தில் 2, அசாமில் 1 த�ொழிற்சாலை அமைத்து வருகிறது.

நாட்டின் தற்சார்பை ப�ொக்ரான் மீண்டும்


நிரூபித்துள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ப�ொக்ரானில் ‘பாரத் சக்தி’
என்ற பெயரில் முப்படையினரும் உள்நாட்டு தயாரிப்பு
ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும்
செயல்முறை விளக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர்
ம�ோடி கலந்து க�ொண்டார்.
இதில் டி-90 பீரங்கி வாகனம்,தனுஷ் மற்றும் சாரங் பீரங்கிகள்,
ஆகாஷ் ஏவுகணைகள், ட்ரோன்கள், ரோப�ோட்டிக் ஆயுதங்கள்,
நவீன இலகு ரக ஹெலிகாப்டர், தேஜஸ் ப�ோர் விமானங்கள்,
6
ஆளில்லா விமானங்கள்
ஆகியவற்றின் செயல்முறை விளக்கம்
அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
பிரதமர் ம�ோடி பேசியதாவது:
ப�ொக்ரானில் முப்படையினரும்
காட்டிய வீரம் வியக்கத்தக்கது.
வானிலும், மண்ணிலும் காட்டிய
vijayabharatham.org
வெற்றி முழக்கம் எல்லா
திசைகளிலும் எதிர�ொலித்தது. புதிய இந்தியாவுக்கான அழைப்பு
இதுதான். இந்தியாவின் தற்சார்பு, தன்னம்பிக்கை மற்றும்
தற்பெருமையை ப�ொக்ரான் மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளது.
இதே ப�ொக்ரான்தான் இந்தியாவின் அணுசக்திக்கு சாட்சியாக
இருந்தது. இங்கிருந்துதான் நாம்தற்போது உள்நாட்டு பலத்தை
காண்கிற�ோம். பாரத் சக்தி திருவிழா, வீரம் விளைந்த ராஜஸ்தான்
மண்ணில் நடைபெற்றுள்ளது. இங்கு ஏற்பட்ட குண்டு முழக்கம்
இந்தியாவில் மட்டும் எதிர�ொலிக்கவில்லை, உலகம் முழுவதும்
எதிர�ொலிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர ம�ோடி கூறினார்.

தீவிரவாதம் மற்றும் ப�ோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக


நாடு முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ ச�ோதனை
ப�ோதைப் ப�ொருள் கடத்தல்
மன்னன் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும்
அவரது கூட்டாளிகளுக்கு எதிராக
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
சட்டவிர�ோத செயல்கள் தடுப்பு
சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு
vijayabharatham.org
பதிவு செய்தது. நாடு முழுவதுவம்
பல்வேறு மாநிலங்களில் இந்த கும்பல் செயல்பட்டு வருவதும்
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் பிரதீப் குமார் ப�ோன்ற
மத மற்றும் சமூக தலைவர்களின் க�ொலைகள் உட்பட பல்வேறு
க�ொடூர குற்றங்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருவதும்
விசாரணையில் தெரியவந்தது. த�ொழிலதிபர்களை மிரட்டி
பணம் பறிக்கும் செயலிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களின் பல்வேறு சதிச் செயல்கள் பாகிஸ்தான்,
கனடா ப�ோன்ற வெளிநாடுகளில் இருந்தும்அல்லது இந்திய
சிறைகளில் உள்ள தீவிரவாத கும்பல்களின் தலைவர்களாலும்
திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தீவிரவாதிகள், குண்டர்கள் மற்றும் ப�ோதைப்பொருள்
கடத்தல்காரர்களின் இந்த கூட்டு சதித்திட்டங்களை தகர்க்கும்
முயற்சியாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம்
மற்றும் சண்டிகரில் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று
ச�ோதனை நடத்தினர். மாநில ப�ோலீஸாருடன் இணைந்து
நேற்று காலை முதல் இந்த ச�ோதனை நடபெற்றது. வழக்கில்
ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட
விசாரணையின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த ச�ோதனை
நடத்தினர். இந்த ச�ோதனையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை
சேர்ந்தவர்களின் 3 அசையா ச�ொத்துகள் மற்றும் ஒரு அசையும்
ச�ொத்தை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இந்த ச�ொத்துகள் தீவிரவாதத்தால் ஈட்டிய வருவாயில்
7
வாங்கப்பட்டதும், த�ொடர்ந்து தீவிரவாத செயல்களுக்கு
இவைபயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்ததால் இவை
முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

க�ோயிலில் பணி செய்யும் பெண்களுக்கும் ஊதியத்துடன்


மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்
சென்னை, ஓட்டேரியில் உள்ள
அருள்மிகு செல்லப் பிள்ளைராயர்
க�ோயிலில் தமிழ்நாடு திருக்கோயில்
த�ொழிலாளர் யூனியனின் சென்னை
க�ோட்ட நிர்வாகிகள் மற்றும்கிளை
நிர்வாகிகளுக்கான கூட்டம் நேற்று
vijayabharatham.org
நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை க�ோட்டத் தலைவர் சு.தனசேகர்
தலைமை தாங்கினார். மாநில மகளிரணிச் செயலாளர் செந்தமிழ்
செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் வருமாறு: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
க�ோயில்களில் பணியாற்றும் உழைக்கும் பெண்களுக்கான
ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 23-ம் தேதி நடத்தப்படும்.
சென்னையில் சாதனைப் பெண்கள் சிறப்பு விருந்தினராக
கலந்து க�ொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அரசு பணியாளர்
ப�ோன்று திருக்கோயிலில் உழைக்கும் பெண் பணியாளர்களுக்கு
ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும்.
கர்ப்பிணிகள் அலுவலகத்தில் வசதியாக உட்கார்ந்து பணிகளை
கவனிக்க பிரத்யேக இருக்கைகள் செய்துதர வேண்டும்.
குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி முறையாக செய்து
தர வேண்டும்.பெண் பணியாளருக்கு வரையறுக்கப்பட்ட
பணி நேரத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. த�ொடர்ந்து, மகளிரணி சென்னை
க�ோட்ட துணைச் செயலாளர்களாக அமிர்தா மற்றும் மகேஸ்வரி,
திருவ�ொற்றியூர் ஆர்.கே.நகர் ராயபுரம் கிளைச் செயலாளராக
மைதிலி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ப�ோதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க


மக்களுடன் சேர்ந்து பெரிய யுத்தம்
தமிழகத்தில் ப�ோதைப்
பொருட்கள் புழக்கம்
அதிகரித்திருப்பதாக கூறி, திமுக
அரசை கண்டித்து தமிழக பாஜக
சார்பில் சென்னை வள்ளுவர்
vijayabharatham.org
க�ோட்டம் அருகே (12.3.2024) அன்று
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்ட
நிர்வாகிகள் பேசினர். கருப்புச் சட்டை அணிந்து ப�ோராட்டத்தில்
கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை
பேசியதாவது: தமிழகத்தில் ப�ோதைப் பொருட்கள் புழக்கம்
அதிகரித்துள்ளது. அதனால், பள்ளி, கல்லூரிகளில் இருந்து
வீட்டுக்குவரும் குழந்தைகளின் பைகளில் ஏதாவது இருக்கும�ோ
என்ற அச்சத்தில் தாய் தேடிப் பார்க்கும் அளவுக்கு திமுக அரசு
8
நடந்து கொண்டிருக்கிறது. எந்த தாய்க்கும் இந்த நிலை வராமல்
இருக்க பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளாக மாறி, மாறி வாக்களித்து எந்தப்
பயனும் இல்லை. அதனால், ப�ோதைப் பொருட்கள் ஒழிப்புக்கு
பாஜக என்ன தீர்வு சொல்லப் ப�ோகிறது என்று மக்கள், குறிப்பாக
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ப�ோதைப் பொருட்கள் ஒழிப்புக்கான தீர்வை ந�ோக்கி பாஜக
சென்று கொண்டிருக்கிறது. அதன்படி, இன்று முதல் (மார்ச்
13) முதல் 19-ம் தேதி வரை ஒருவாரம் பாஜக தலைவர்கள்,
தொண்டர்கள் தினமும் 2 மணி நேரம் வீதம் 15 மணி நேரம்
ப�ோதை ஒழிப்புக்காக உழைக்க வேண்டும். உங்கள் வேலையை
பார்த்துக் கொண்டே காலையில் 1 மணி நேரம், மாலையில் 1
மணி நேரம் சமுதாய நலனுக்காக உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புகள், பேருந்து
நிலையம், பூங்காக்கள் ப�ோன்ற பொது இடங்களில்
ப�ோதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேச
வேண்டும். மருத்துவர்களைக் கொண்டு ஆல�ோசனை முகாம்
நடத்தலாம். மாணவர்கள், இளைஞர்களை ப�ோதை மறுவாழ்வு
இல்லங்களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ளவர்களின்
நிலையை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வரும் 16-ம் தேதி காலை 11 மணிக்கு 50 ஆயிரம் பூத்
தலைவர்கள், உறுப்பினர்கள் 50 பேர், 100 பேரை அழைத்து
ப�ோதை ஒழிப்புக் கூட்டம் நடத்தவேண்டும். ப�ோதைப்
பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரிமா சங்கம்,
ர�ோட்டரி சங்கம், தன்னார்வலர்கள் மற்றும் மக்களுடன்
சேர்ந்து மிகப்பெரிய யுத்தம் நடத்த வேண்டும். ஆளும்
கட்சியைக் கண்டித்து ஆண்ட கட்சியினர் கருப்புச் சட்டை
அணிந்து ப�ோராடுகின்றனர். இது என்ன கபட நாடகம். உங்கள்
ஆட்சியிலும் 5,500 மதுக்கடைகள் இருந்தன. பாஜக ஆட்சிக்கு
வந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள்
திறக்கப்படும். ப�ோதைப் பொருட்கள் மட்டுமல்ல, திராவிடக்
கட்சிகளும் நமக்கு வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

என்னவென்று தெரிந்து க�ொள்ளாமலேயே குடியுரிமை


திருத்த சட்டத்தை கட்சிகள் எதிர்க்கின்றன
இது த�ொடர்பாக, தமிழக பாஜக
தலைமையகத்தில் (12.03.24)
அன்று செய்தியாளர்களிடம் அவர்
கூறியதாவது: குடியுரிமை திருத்தச்
சட்டம் என்னவென்றே தெரியாமல்
அவர்களாக ஊகித்துக் க�ொண்டு, தமிழக
அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. vijayabharatham.org

1950-ம் ஆண்டு ஜன.26 முதல் 1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 2003-ம் ஆண்டு வரை, தந்தை, தாய் இருவரும்
இந்தியாவில் பிறந்திருந்தால் மகன் அல்லது மகளுக்கு குடியுரிமை
வழங்கப்பட்டது. 2003-ம் ஆண்டுக்குப் பின் தந்தை, தாய்
இருவரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் மற்றொருவர்
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்திருக்கக் கூடாது என்னும்

9
விதிமுறை பின்பற்றப்பட்டது.
இவ்வாறு 3 முறை குடியுரிமை வழங்குவதில் மாற்றம்
செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் சட்டம் திருத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 அண்டை
நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துவிட்டன.
அங்கு மதம் காரணமாக சலுகைகள் மறுக்கப்பட்ட பிற மதத்தினர்
வெவ்வேறு காலகட்டத்தில் இந்தியாவுக்குள் வந்துவிட்டனர்.
அவர்கள் அகதி மறுவாழ்வு முகாமில் உள்ளனர். அவர்களுக்கு
குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் க�ொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் 11 ஆண்டுகள் இந்தியாவில்
வசித்திருந்தால் இயற்கையாகவே குடியுரிமை கிடைக்கும்.
தற்போதைய திருத்தச் சட்டத்தின்படி, 2014-ம் ஆண்டு டிச.31-க்கு முன்
இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர், 5
ஆண்டுகள் வசித்திருந்தாலே குடியுரிமை கிடைக்கும்.
இது குடியுரிமையை க�ொடுப்பதற்கான சட்டமே தவிர,
குடியுரிமையைப் பறிப்பதற்கான சட்டம் அல்ல. எனவே, முதல்வர்
மு.க.ஸ்டாலின், மக்களைக் குழப்புவதை விட்டுவிட்டு, எங்கு தவறு
நடந்துள்ளது என ச�ொல்ல வேண்டும். இதை தமிழகத்தில் அனுமதிக்க
முடியாது என கூற முதல்வருக்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறுவது, முதல்வர் எடுத்த சத்திய பிரமாணத்துக்கு
எதிரானது. இலங்கை அகதிகள் அனைவருக்கும் விரைவாக
குடியுரிமை க�ொடுக்க வேண்டும் என்பதே பாஜக நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில், தமிழக பாஜக துணைத் தலைவர்
கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர்
உடன் இருந்தனர்.

குஜராத் கடல�ோரப் பகுதியில் ரூ.480 க�ோடி ப�ோதைப்


ப�ொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல், 6 பேர் கைது
பாகிஸ்தானிலிருந்து தரைவழி,
கடல்வழி, வான்வழியாக இந்திய
எல்லைக்குள் பெரும் எண்ணிக்கையில்
ப�ோதை ப�ொருட்கள் கடத்தப்படும் சம்பவம்
அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
கடல்வழியாக இதுப�ோன்ற கடத்தல்களை vijayabharatham.org
தடுப்பதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிநவீன கப்பல்கள்
சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ர�ோந்து மற்றும் கண்காணிப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் எல்லையில் ப�ோதை ப�ொருட்கள்
கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை,
ப�ோதை ப�ொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை
இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது
ப�ோதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் ச�ோதனையில் குஜராத்
மாநிலம் ப�ோர்பந்தர் அருகே கடல�ோரப் பகுதியில் ரூ.480 க�ோடி
மதிப்புள்ள ப�ோதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. குஜராத்தின்
கடல�ோரப் பகுதி வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த மர்மப்
படகிலிருந்து இந்த ப�ோதைப் ப�ொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ப�ோதைப்பொருள் கடத்தல் த�ொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை
கைது செய்து ப�ோதைப்பொருள் தடுப்பு பிரிவு ப�ோலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர். குஜராத் மாநிலத்தின் ப�ோதைப்பொருள் தடுப்பு
பிரிவு, கடல�ோர காவல்படை ச�ோதனையில் இதுவரை ரூ.3,135 க�ோடி
ப�ோதைப்பொருள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

10
கடல்பகுதியில் மர்மமாக திரிந்த படகை, வழிமறித்த
கடல�ோரக் காவல்படையினர் அதிரடி ச�ோதனையிட்டு ப�ோதைப்
ப�ொருட்களை பறிமுதல் செய்தனர். கடந்த 11-ம் தேதி இந்த சம்பவம்
நடைபெற்றுள்ளதாக கடல�ோரக் காவல்படை மூத்த அதிகாரி
ஒருவர் தெரிவித்தார். கடந்த மாதம் 26-ம் தேதி குஜராத்திலுள்ள
அரபிக் கடல்எல்லையில் 3,300 கில�ோ எடையுள்ள ப�ோதைப்
ப�ொருட்களை ப�ோதை மருந்து தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தது
குறிப்பிடத்தக்கது.

சிஏஏ அமல்படுத்தியதற்கு பாகிஸ்தான் பெண் நன்றி


குடியுரிமை திருத்த சட்டம்
(சிஏஏ) அமல்படுத்துவது
த�ொடர்பாக மத்திய உள்துறை
அமைச்சகம் (11.3.24)
அறிவிப்பாணை வெளியிட்டது.
இதனிடையே, பாகிஸ்தானின்
சிந்து மாகாணத்தைச் சேர்ந்த
சீமாஹைதர் என்ற பெண் vijayabharatham.org
பாகிஸ்தானில் தனது முதல் கணவர் குலாம் ஹைதரை பிரிந்து
கடந்த ஆண்டு இந்தியா வந்து சச்சின் என்பவரை மணந்து
ந�ொய்டாவில் வசித்து வருகிறார். பாகிஸ்தானிலிருந்து தனது நான்கு
குழந்தைகளுடன் கடந்தாண்டு இந்தியாவில் சட்டவிர�ோதமாகக்
குடிபுகுந்தார். குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது குறித்து
சீமாஹைதர் தனது 4 குழந்தைகள் மற்றும் கணவர் சச்சினுடன்
சேர்ந்து நின்று நேற்று முன்தினம் வெளியிட்ட வீடிய�ோ பதிவில்
கூறியிருப்பதாவது:
குடியுரிமை திருத்த சட்டத்தை இந்திய அரசு இன்று
அமல்படுத்தியுள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்திய
அரசுக்கு வாழ்த்துகள். உண்மையாகவே தனது வாக்குறுதியை
ம�ோடி நிறைவேற்றிவிட்டார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு
கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு நன்றி தெரிவித்துக் க�ொண்டே
இருப்பேன். இந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில், எனது குடியுரிமை
த�ொடர்பாக சட்டப்போராட்டம் நடத்திய எனது சக�ோதரரும்
வழக்கறிஞருமான ஏ.பி.சிங்குக்கும் வாழ்த்து தெரிவித்துக்
க�ொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம், ராதே ராதே, பாரத் மாதாகி ஜே. இவ்வாறு
அவர் தெரிவித்தார்.
சீமா ஹைதரின் சக�ோதரர் ஏ.பி. சிங் கூறும்போது, ‘‘பாகிஸ்தான்,
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து
துரத்தியடிக்கப்பட்ட வெவ்வேறு மதத்தினர் எப்படிய�ோ இந்தியாவில்
தஞ்சம் புகுந்தனர். இத்தனை நாட்கள் இந்திய குடியுரிமை
கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த அவர்களுக்கெல்லாம் இது ஒரு
மகத்தான நாள்’’ என்றார்.

ஜ�ோத்பூரில் இந்து அகதிகள் க�ொண்டாட்டம்


பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்து அகதிகள்
ஏராளமான�ோர் ராஜஸ்தானின் மேற்கு மாவட்டங்களான பார்மர்,
பிகானேர் மற்றும் ஜ�ோத்பூரில் வசிக்கின்றனர். இந்நிலையில் சிஏஏ
அமலுக்கு வந்ததை வரவேற்று, ஜ�ோத்பூர் இந்து அகதிகள்முகாமில்
வசிப்பவர்கள் நேற்றுமுன்தினம் இரவு க�ொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர். வீட்டு வாயில்களில் விளக்கு ஏற்றியும் பட்டாசு
வெடித்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இங்குள்ள அகதிகள் கூறும்போது, “இது எங்களுக்கு உண்மையான
ராம ராஜ்ஜியம் ப�ோன்றது. சிஏஏ தற்போது நனவாகி விட்டது.
இதற்காக நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தோம். அகதிகளாக

11
பரிதவிக்கும் நாங்கள் சிறப்பான
வாழ்க்கை வாழ இது உதவும்.
நீண்ட காலமாக குடியுரிமைக்காக
காத்திருக்கும் பலருக்கு இது
உதவியாக இருக்கும். அவர்கள்
விரைவில் இந்திய குடிமக்களாக
மாறுவார்கள் என நம்பலாம்” என்று
தெரிவித்தனர். vijayabharatham.org

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அகதிகளின் நலனுக்காக சீமந்த்


ல�ோக் சங்கதன் என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஜ�ோத்பூரில்
சுமார் 35,000 இந்து அகதிகள் குடியுரிமைக்காக காத்திருப்பதாகவும்
கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து
அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்த அமைப்பு
கூறுகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஹிந்து சிங் ச�ோதன்
கூறும்போது, “சிஏஏ அமலுக்கு வந்துள்ளதை வரவேற்கிற�ோம்.
ஆனால் 2014டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு
மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறமுடியும். இதன்
பிறகு இந்தியா வந்தவர்களுக்கு பழையகுடியுரிமை சட்ட விதிகள்
மட்டுமே ப�ொருந்தும். இது அநீதியானது. கடந்த 10 ஆண்டுகளில்
பாகிஸ்தானில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் இந்தியா வந்துள்ளனர்”
என்றார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அகதிகள் கூறும்போது, “பகவான் ராமரின்
அவதாரமாக பிரதமர் நரேந்திர ம�ோடியை கருதுகிற�ோம். எங்களுக்கு
வாழ்வளித்த அவருக்கு நன்றியை உரித்தாக்குகிற�ோம்" என்று
தெரிவித்தனர்.

முஸ்லிம்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா ?


'மதம் மாறிய முஸ்லிம்கள்,
தங்கள் விருப்பம் ப�ோல, ஏழு
முஸ்லிம்கள் பிரிவில் எதில்
வேண்டுமானாலும் ஜாதி சான்றிதழ்
பெற்றுக் க�ொள்ளலாம்' என,
அரசாணை வழங்கிய தமிழக அரசு,
சீர் மரபினர் பழங்குடியினர் என
சான்று வழங்காமல், 68 திராவிட vijayabharatham.org
சமூக மக்களை மட்டும் தவிக்க விடுவது ஏன் என, தமிழ்நாடு
சீர்மரபினர் நலச்சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
துரைமணி மற்றும் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள
கடிதம்: சீர்மரபு பழங்குடிகள், சீர் மரபினர் என்ற இரட்டைச் சான்றிதழ்
முறையை ஒழித்து, 1979ம் ஆண்டுக்கு முன் வழங்கியது ப�ோல், 'டி.
என்.டி.,' எனப்படும், சீர்மரபு பழங்குடிகள் சான்றிதழ் வழங்க க�ோரி,
தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கம், பல்வேறு ப�ோராட்டங்களை
நடத்தி வருகிறது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ப�ோது, தற்போதுள்ள, டி.என்.
டி., - டி.என்.சி., என்ற இரட்டை சான்று இழிவை சரி செய்து, டி.என்.டி.,
என்ற ஒற்றைச் சான்று வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள்;
தற்போது மவுனம் காக்கிறீர்கள். கடந்த 2018ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
அதுல்ய மிஸ்ரா தலைமையிலான குழு, டி.என்.டி., பெயர் மாற்றத்திற்கு
சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
இட ஒதுக்கீடு நீதிமன்ற வழக்கிற்கும், இந்த க�ோரிக்கைக்கும்
சம்பந்தம் இல்லை. அரசாணை வழியே பெயர் மாற்றம் செய்து
க�ொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது.
ஆனாலும், மாற்றம் செய்யப்படவில்லை. அதேநேரம் சட்டத்தை
12
திருத்தாமல், முஸ்லிம்களுக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர்
முஸ்லிம் என்ற புதுப்பெயரை, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதுடன்,
வழக்கு நிலுவையில் இருக்கும் ப�ோது, மதம் மாறிய முஸ்லிம்கள்,
தங்கள் விருப்பம் ப�ோல ஏழு முஸ்லிம்கள் பிரிவில் எதில்
வேண்டுமானாலும், ஜாதிச் சான்று வாங்கிக் க�ொள்ளலாம் என,
அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
ஆனால், 68 திராவிட சமூக மக்களை மட்டும் தவிக்க விட்டுள்ளீர்கள்.
முதல்வருக்கு திராவிடர்கள் மீது உண்மையான பற்று இருந்தால்,
அம்மக்களுக்கு க�ொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற
வேண்டும். கடந்த, 2019ல் வெளியிட்ட அரசாணையை திருத்தி, ஒரே
டி.என்.டி., சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடுங்கள். இவ்வாறு
கடிதத்தில் கூறியுள்ளனர்.

50,000 இடங்களில் பா.ஜ., விழிப்புணர்வு கூட்டம்

vijayabharatham.org
''ப�ோதைப் ப�ொருளை ஒழிக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் வரும்
சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, 50,000 கிளைக் கூட்டங்கள்
நடத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என, தமிழக
பா.ஜ., தலைவர்அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பா.ஜ., சார்பில்,
தமிழகத்தை ப�ோதைப்பொருள் தலைநகரமாக மாற்றியதை கண்டித்து,
சென்னை வள்ளுவர் க�ோட்டம் அருகில் நேற்று மாலை கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், அண்ணாமலை பேசியதாவது: பள்ளி செல்லும் மாணவர்கள்
மது குடிப்பதை பார்க்க முடிகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் கஞ்சா
புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி விடுதிகளில் எளிதில்
கிடைக்கிறது. தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக், 2,000 க�ோடி ரூபாய்
மதிப்பிலான ப�ோதைப்பொருளை கடத்தியுள்ளார்.
நாளையில் இருந்து ஏழு நாட்கள், 19ம் தேதி வரை பா.ஜ.,வின்
ஒவ்வொரு த�ொண்டனும், நிர்வாகியும் ப�ோதைப் ப�ொருளை ஒழிக்க,
தினமும், 2 மணி நேரம், 3 மணி நேரம் என, ஒரு வாரத்திற்கு, 15
மணி நேரம் நேரம் வேலை செய்வர். பள்ளி, கல்லுாரி, அடுக்குமாடி
குடியிருப்புகள், பஸ் நிலையங்களுக்கு சென்று ப�ோதைப் ப�ொருளால்
ஏற்படும் விளைவு குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்துவர்.
ப�ோதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் வரும்
சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, 50,000 கிளைக் கூட்டங்கள்
நடத்தப்படும். இதில், ப�ொதுமக்கள் பங்கேற்பர். கள்ளுக்கடை திறப்பதன்
வாயிலாக, அரசுக்கு, 2028ல், 1 லட்சம் க�ோடி ரூபாய் வருவாய்
கிடைக்கும் என்று பா.ஜ., வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்களுடன் இணைந்து ப�ோதைப் ப�ொருளுக்கு எதிராக, பா.ஜ.,
யுத்தம் நடத்தும். இதற்காக, தனி இணையதளம் உருவாக்கப்படும்.
ச�ொந்த குழந்தையை தாய் சந்தேகப்படும் அளவுக்கு, தி.மு.க.,வின்
ஆட்சி நடக்கிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், இந்த அவலம் நடக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
13
10 ஆண்டு ஆட்சி வெறும் 'டிரெய்லர்' தான் இனி
வரப்போவது தான் சாதனைகள் பிரதமர் ம�ோடி உறுதி

vijayabharatham.org
ஆமதாபாத், ''கடந்த, 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த வளர்ச்சி
பணிகள் வெறும் டிரெய்லர் தான். வளர்ந்த நாடு இலக்கை எட்ட,
வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பணிகளில் சாதனை புரியப்படும்,''
என, பிரதமர் நரேந்திர ம�ோடி குறிப்பிட்டார்.
குஜராத்தின் சபர்மதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 85,000
க�ோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் உட்பட நாடு முழுதும்,
1.06 லட்சம் க�ோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர்
ம�ோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சியில் ரயில்வேயின் பங்களிப்பு மிகப் பெரியது.
ஆனால், இதற்கு முன் அதற்கு முக்கியத்துவம் தரப்படாமல்
இருந்தது. குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களை திருப்திபடுத்தும்
வகையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே ரயில்வே
பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்,
ஒரு குறிப்பிட்ட ரயில், தங்களுடைய த�ொகுதிக்கு உட்பட்ட ரயில்
நிலையத்தில் நிறுத்தப்பட்டால், எம்.பி.,க்கள் பார்லிமென்டில் வரவேற்று
ஆர்ப்பரிப்பர். இப்படி தான் நிலைமை இருந்தது. ரயில்வேயை
ஒட்டும�ொத்தமாக மேம்படுத்தவே, அதற்கு அதிக நிதி கிடைக்கவே,
ப�ொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்தோம்.
தற்போது 'வந்தே பாரத்' ப�ோன்ற அதிநவீன ரயில்கள்
இயக்கப்படுகின்றன. ரயில்வே நிலையங்கள் மேம்படுத்தப்படு
கின்றன. ரயில் பாதைகளை விரிவுபடுத்துவது, இரட்டிப்பாக்குவது,
மின்மயமாக்குவது என, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நாங்கள் வளர்ச்சிப் பணிகளில் காட்டும் வேகத்தை, அரசியலாக்கு
கின்றனர். தேர்தலுக்காக செய்வதாக கூறுகின்றனர். வளர்ச்சிப்
பணிகள் என்பது தற்போது ஒரு இயக்கமாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும், 11 லட்சம் க�ோடி ரூபாய்
மதிப்புள்ள திட்டங்களை துவக்கியுள்ளோம். இது, இந்தியாவை
வளர்ந்த நாடாக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான்.
கடந்த, 10 ஆண்டுகளில் நடந்தவை எல்லாம், ஒரு டிரெய்லர்
தான். 10 ஆண்டுகளுக்கு முன், நாம் பட்ட கஷ்டங்களை, நம்முடைய
இளைய தலைமுறையினர் சந்திக்கக் கூடாது என்ற ந�ோக்கத்தோடு
திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி திட்டங்களில் பல
புதிய சாதனைகளை படைப்போம். இதுதான் ம�ோடியின் உறுதிம�ொழி.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மைசூரு - சென்னை
உட்பட 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் ம�ோடி
14
துவக்கி வைத்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சபர்மதி
ஆசிரமத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ம�ோடி, அங்குள்ள காந்தி
சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்குடன், பிரதமர்


ம�ோடி த�ொலைபேசி உரை

vijayabharatham.org
பிரிட்டன் பிரதமருடன், பிரதமர் ம�ோடி த�ொலைபேசியில்
உரையாடினார். பிரதமர் ம�ோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன்
த�ொலைபேசியில் த�ொடர்பு க�ொண்டு உரையாடினார். அப்போது
பிரதமர் ம�ோடி மற்றும் சுனாக் இருவரும் பரஸ்பரம், இரு
நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்தும் விதமாக தடையில்லா
வர்த்தக ஒப்பந்தம் , பிராந்திய ஒத்துழைப்பு, மற்றும் உலகளாவிய
முன்னேற்றம் உள்ளிட்ட பங்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
முன்னதாக இரு நாட்டு பிரதமர்களும் ஹ�ோலி பண்டிகை
வாழ்த்துக்களை பரிமாறிக் க�ொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி
சுனாக்குடனான உரையாடல் குறித்து பிரதமர் ம�ோடி தனது ‛‛எக்ஸ்
'' வலைதளத்தில் பதிவேற்றினார்.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî« .
93613 99006
xU M©L rªjh - %. 600/-
ïu©lh©L rªjh - %. 1150/-
Iªjh©L rªjh - %. 2750/-
rªjhjhu® Må® ! njáa g¡F njhŸ bfhL¥Õ®!!
15

You might also like