You are on page 1of 7

தற்போது NEET இல்லாத படிப்புகள்-

ஓட்டமெடுக்கும் IAS-
கள்vbdfabdnbytnbt

இலவச திட்டங்களின் கதி இனி என்னவாகும்? -NEET இல்லாத


படிப்புகள்-ஓட்டமெடுக்கும் IAS-கள்|விகடன் ஹைலைட்ஸ்

ஜெயலலிதா தொடங்கி வைத்த இலவச


சைக்கிள் வழங்கும் திட்டம்

இலவச வாக்குறுதிகளை கட்டுப்படுத்த


நிபுணர் குழு: இலவச திட்டங்கள் இனி
என்னவாகும்?

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச


பொருட்கள், வாக்குறுதிகள் தொடர்பாக மத்தியில் ஆட்சியில் உள்ள
பாஜகவும், பிரதமர் மோடியும் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த
நிலையில், இலவசங்களை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழுவை
அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செய்துள்ள பரிந்துரை,
இலவச திட்டங்கள் தொடர்பான நிலையை கேள்விக்குறியாக்கி
உள்ளது.

இலவச திட்டங்களில் முன்னோடி தமிழகம்

இலவச வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களைப் பொறுத்தவரை


இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் மிக
அதிக அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

* 1967 -க்கும் முன்னர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்


முதலமைச்சராக இருந்த காமராஜ் கொண்டு வந்த பள்ளிக்
குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு திட்டம் மகத்தானதாக
பார்க்கப்பட்டது.

* அதன் பின்னர் 1967 ல் தமிழகத்தில் மிக கடுமையான அரிசி பஞ்சம்


நிலவிய காலத்தில், 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி
நிச்சயம்' என்ற வாக்குறுதியைக் கொடுத்து அண்ணா
தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்தது.

* 2006-2011 வரையிலான திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக


அறிவிக்கப்பட்டது ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம்
வழங்கப்பட்ட அரிசி திட்டம்தான். 2006 ல் திமுக ஆட்சிக்கு வந்ததும்
ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்ட அரிசி, 2008 ல் ஒரு
ரூபாயாக விலை குறைக்கப்பட்டது.

* மேலும் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ், முதல்


தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டண சலுகை, ஏழை
பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், கலப்புத் திருமண
உதவித் திட்டம்,

* கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டம், மகளிர்


இலவச படிப்புத் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும்
திட்டம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இலவச கலர் டிவி
எனத் தொடர்ந்த திமுக ஆட்சியின் இலவச திட்டங்கள்,

* இன்றைய ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் பெரிய


சாதனையாக சொல்லப்படும் பெண்களுக்கான இலவச பேருந்து
பயணத் திட்டம், பள்ளிகளில் காலை நேர இலவச உணவு திட்டம்
வரை தொடர்கிறது.

திமுக வழியில் அதிமுக...

அதேபோன்று அதிமுகவைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த


எம்ஜிஆரும் சத்துணவு திட்டம், இலவச காலணி எனப் பல இலவச
திட்டங்களைத் தொடங்கினார் என்றால், அவர் வழியில் ஆட்சியைப்
பிடித்த

* ஜெயலலிதாவும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள், இலவச


மடிக்கணினி, குறைந்த விலையிலான அம்மா உணவகம்,
கோயில்களில் அன்னதானம் என அவரது பங்குக்கும் பல
திட்டங்களைச் செயல்படுத்தினார்.

எதிர்ப்புகளும் விமர்சனங்களும்...

இருபெரும் திராவிட கட்சிகளின் இந்த இலவச திட்டங்கள் குறித்து, "


மக்களைச் சோம்பேறியாக்குகிற திட்டம், அவர்களை எப்போதும்
யாசகம் பெறுவர்களாகவே வைத்திருக்கக்கூடியவை மோசமான
அணுகுமுறை" என்றும், ஓட்டுக்காக வழங்கப்படும் இந்த இலவச
திட்டங்களால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்றும்
விமர்சனங்கள் எழுந்தன.

* ஆனால், " இந்த இலவச திட்டங்களின் பின்னால் ஓட்டுப்பெறும்


ஆதாயம் இருக்கிறது என்றாலும், இந்த திட்டங்களால் தமிழகம்
அடைந்திருக்கிற சமூக மாற்றமும் முன்னேற்றமும் மகத்தானவை.

* மதிய உணவு கொடுத்ததால்தான் பிள்ளைகள் பள்ளிக்கு


வந்தார்கள்; கல்விக் கட்டணம் இல்லை என்றதால்தான் பல
கிராமப்புற பட்டதாரிகள் உருவானார்கள்;

* இலவச சைக்கிள்தான் மாணவிகளை உயர் கல்வி நோக்கித்


தள்ளியது.

தலை நிமிர்ந்த தலைமுறைகள்...


தமிழகத்தில் இன்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும், காவல்
துறை, இராணுவத் துறை, விமானத்துறைகளில்
பணிபுரிபவர்களாகவும், மருத்துவர்களாக, இன்ஜினியர்களாகவும் பல
கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் உயர்ந்த நிலையை
எட்டிப்பிடித்து, பல தலைமுறைகள் உயர்ந்துள்ளது என்றால்,
இவற்றிற்கெல்லாம் முழு முதற்காரணம் திராவிடக் கட்சிகளின்
இந்த திட்டங்கள்தான் காரணம் என்று வாதிடுகிறார்கள்
இத்திட்டங்களுக்கு ஆதரவான பொருளாதார நிபுணர்கள்.

மேலும், "அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில்


ஆகப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக,
நேர்முக வரிப்பணம்தான். ஏழைகளின் வரிப்பணத்திலிருந்து
ஏழைகளுக்குச் செலவிடுவதை 'இலவசம்' என்று எப்படி அழைக்க
முடியும்?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அண்டை மாநிலங்களின் நிலை என்ன?

* தமிழகத்தின் நிலை இதுவென்றால், அண்டை மாநிலமான கேரளா


தொடங்கி, வடக்கே டெல்லி வரை பல மாநிலங்களும் இலவச
திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. இவை தமிழகம் அளவுக்கு
இல்லை என்றாலும்,

* டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான


ஆம் ஆத்மி அரசு பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்
உள்பட பல இலவச திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
அடுத்தடுத்து பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அந்தக்
கட்சி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் நிலையில், மத்தியில்
ஆளும் பாஜக இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பிரதமர் மோடி,

* "தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர இலவச திட்டங்களை


அறிவிக்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள்,
நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இந்திய அரசியலில்
இருந்து இலவச திட்ட கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்." என்று
கூறியிருந்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம்
எழுந்தது. இலவசம் குறித்த மோடி அரசின் கருத்தை கடுமையாக
விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால்,

'பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் இலவசம் இல்லையா?'

" பெரு நிறுவனங்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம்


வாங்கிவிட்டுத் திரும்பச் செலுத்தாமல்விடுவதால், வங்கிகள்
திவாலாகின்றன. அப்போது அந்த நிறுவனங்கள் அரசாங்கத்துக்குப்
பணம் கொடுத்துவிட்டு, தங்கள்மீ து நடவடிக்கை பாயாமல்
பார்த்துக்கொள்கின்றன. இதற்குப் பெயர்தான் இலவசங்களைக் காட்டி
ஏமாற்றுவது.

உங்கள் நண்பர்களின் ஆயிரம் கோடி ரூபாய்க் கடன்களை ரத்து


செய்வதும், வெளிநாட்டு அரசுகளின் ஒப்பந்தங்களை உங்கள்
நண்பர்களின் நிறுவனங்களுக்கு வழங்குவதும்தான் இலவசங்களைக்
காட்டி ஏமாற்றும் செயல்" எனக் காட்டமாக கூறியிருந்தார்.

உச்ச நீ திமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு...

இந்த நிலையில்தான் இலவச வாக்குறுதிகளுக்கு எதிராக


தொடரப்பட்ட பொது நலன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று
விசாரணைக்கு வந்தது.

* மத்திய அரசு தரப்பில் வாதிட்ட, சொலிசிடர் ஜெனரல் துஷார்


மேத்தா, "தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு
இலவச அறிவிப்புகளை வெளியிடுவது பொருளாதார சீரழிவுக்கு
வழி வகுக்கும்" என்றார்.

* தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இலவசங்கள்


மீ தான நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகத்தான் தேர்தல்
ஆணையத்தின் கைகள் கட்டப்பட்டன" என கூறினார்.

'இலவசங்களை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழு'

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "அப்படியானால் அந்த தீர்ப்பை


உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யும்.
* இலவசங்களை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க
வேண்டும். இந்த குழுவில் நிதி ஆயோக், நிதி ஆணையம், ஆளும்
மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் இதர
தரப்பினர் இடம் பெற வேண்டும்.

* அவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினரின்


இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்துவது பற்றிய
ஆலோசனைகளை மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச
நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்.

* அரசியல் கட்சியினர் அறிவிக்கும் இலவச வாக்குறுதிகள் நாட்டின்


பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதன் சாதக,
பாதகங்களை தீர்மானிக்க இந்த குழு தேவை. தேர்தல் ஆணையம்
சரியான நடவடிக்கை எடுக்காததால், இந்த நிலை ஏற்பட்டது"
என்றனர்.

இனி இலவச திட்டங்களின் கதி என்னவாகும்?

இலவச வாக்குறுதிகள் தொடர்பாக மத்திய அரசு, தேர்தல்


ஆணையம் ஒரே கருத்தைக் கொண்டிருக்கும் நிலையில், உச்ச
நீதிமன்றமும் இலவசங்களை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழுவை
அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பதால், இலவச திட்டங்களை
இனி அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு அறிவிக்க முடியாத நிலை
ஏற்படலாம்.

* பொதுவாக அத்தியாவசிய உணவு, கல்வி, சுகாதாரம், சமூக


மேம்பாடு சார்ந்த இலவச திட்டங்களின் பயன்களை அனுபவித்த
ஒரு தலைமுறையின் முன்னேற்றம்தான் அதற்கான பலனாக
வெளிப்பட்டது.

அதனைத் தெரிந்துகொள்ள குறைந்த பட்சம் 10 ஆண்டுக்காலமாவது


ஆனது.

* தற்போது இலவச திட்டங்கள் நிறுத்தப்பட்டால், மாநில அரசுகள்


அதற்காக செலவழிக்கும் கடன் சுமை பெரிய அளவில் குறையும்.
* அதன் மூலமாக அந்த மாநில மக்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன,
சமூகத்தின் வளர்ச்சி எல்லா படிநிலைகளிலும் ஒரே அளவில்
உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இன்னொரு 10
ஆண்டுக்காலத்திற்கு காத்திருக்க வேண்டும்..!

இத்தகைய சூழ்நிலையில், "பெரும்பாலும் அரசின் கொள்கைகளானது,


தத்துவங்கள், மதிப்பீடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றின்
அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. ஆனால், கொள்கைகளும்
திட்டங்களும் அதன் சரியான இலக்கை எட்டுகிறதா என்பதுதான்
தெரிவதே இல்லை. காரணம், சரியான முறையான தரவுகள்
இல்லை.

நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில்


ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்கள் என்ன
செய்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை" என்று மிகக்
கடுமையாக சாடியுள்ளார் தமிழக அரசின் நிதி மற்றும் திட்டம்,
மனிதவளம் ஆகிய துறைகளின் அமைச்சர் பழனிவேல்
தியாகராஜன். 

You might also like