You are on page 1of 4

காமராசர் தனது 9 ஆண்டு கால முதல்வர் வாழ்க்கையில் செய்த சாதனைகள் நூறு ஆண்டுகள் பேசும் அளவுக்கு

தொலைநோக்கு பார்வையில் அமைந்தது , தனக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காக உழைத்த ஒரே தலைவர்
நம் படிக்காத மேதை காமராசர் தான்,

தமிழ்நாடு, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலமாக இருந்ததால், தொழில் துறையில் பின் தங்கியே
இருந்தது. 1955 வரை பெரும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இயற்கை வள ஆதாரம் பெரும் குறையாகவும்
போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு இல்லாத்துமாக தமிழ்நாடு இருந்தது. போதிய அளவில் மின்சாரமும்
இல்லை. இதன் காரணமாக, உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் கூட எந்தவித முன்னேற்றமும் காண முடியவில்லை.

நம் புரட்சிதலைவர் காமசாரர், பள்ளி, கல்வி மட்டும் போதுமா வேலை வேண்டாமா என யோசித்தவர் பல புது புது
தொழிற்சாலைகள் நிறுவி மக்களின் பசி, பஞ்சம் போக்க வழிவகை செய்தார். கல்வி, தொழில் என்று மட்டும்
நின்று விடாமல் மின் திட்டம், நீர் பாசன திட்டம் போன்றவற்றிலும் காமசாரர் தனது சிறப்பான பணியை ஆற்றினார்
என்று கூறவேண்டும்.

ஆட்சியின் இ􁾠தியில் தமிழகம் ெதாழில் வளத்தில் வடநாட்􁾌 மாநிலங்கைள


பின்􁾔க்குத் தள்ளி இரண்டாம் இடத்ைத பி􁾊த்􁾐விட்ட􁾐.

அவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் சிலவற்றை காண்போம்,

 நெய்வேலி நிலக்கரி திட்டம், (Neyveli Lignite Corporation)


 பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, (Perambur Loco Works)
 திருச்சி பாரதி ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்,(Bharat Heavy Electrical Limited)
 மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, (Mettur Paper Factory)
 மேட்டூர் கால்வாய்த்திட்டம், (Mettur Dam Project)
 காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம் என அவரது பணிகள் நீளும். (Kaveri Delta Project and
so on)
 தமிழகத்தின் தொழில் வளர்சச ் ியில் காமராஜரின் பங்கு:
 நல்ல அரசு நிர்வாகம் என்பது மக்களை கவரும் திட்டங்களை செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயர்
வாங்குவதல்ல. மக்களிடம் உடனடியாக வரவேற்பை பெறாத ஆனால் நீண்ட காலத்தில் பெரிதும்
பயனளிக்க கூடிய திட்டங்களை செயல் படுத்துவதாகும். இதை நன்றாக உணர்ந்த காமராஜர் கல்வி
புரட்சியுடன் சேர்ந்து தொழில் புரட்சிக்கும் தமிழகத்தை தயார்படுத்தினார்.
 நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம், கிண்டி டெலிபிரின்டர்
தொழிற்சாலை, சேலம் இரும்பு எஃகு ஆலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, மேட்டூர் காகித
தொழிற்சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, பாரத மிகு மின் நிறுவனம், போன்ற பல நிறுவனங்கள்
இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக தொழில் வளர்ச்சியில் வட மாநிலங்களை
பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது தமிழகம்.
 நீர் மேலாண்மையில் காமராஜரின் பங்கு:
 ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது நீர் ஆதாரம் என்பதை தெளிவாக அறிந்திருந்த காமராஜர்
நீர் ஆதாரங்களை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மணிமுத்தாறு, வைகை, சாத்தனூர்,
கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற பல்வேறு நீர் பாசன திட்டங்கள் இவரது ஆட்சி காலத்தில்
நிறைவேற்றப்பட்டதாகும்.
 காமராஜர் ஆட்சி என்னும் சொற்றொடர் இந்திய அரசியல்
சொல்லகராதியில் இடம்பெற்றன. விவசாய நிலங்களுக்கு பாசன வசதி
அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்க ஆறுகளின் குறுக்கே
பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் பல்வேறு அணைகளை கட்டப்பட்டது.
பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம், கீ ழ்பவானி  -  நீர்த் தேக்கத் திட்டம்,
அமராவதி - அணைக்கட்டுத்திட்டம்,  சாத்தனூர் - நீர்த்தேக்கத் திட்டம்,
வைகை - அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு   - உயர்மட்ட கால்வாய்
திட்டம்  இப்படி பல அணைகளை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்
பாதுகாத்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். தற்காலம் அறிவியல்
காலம். இதற்கு அடிப்படை தேவை மின்சக்திதான்.
 இந்த மின்சக்தியை பெருக்காமல் தொழில் வளர்ச்சிகாண முடியாது
என்பதை நன்கு அறிந்து பல மின் திட்டங்களை பெருந்தலைவர்
செயல்படுத்தினார்.

 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பட்ட


மத்திய அரசு திட்டங்கள்..
 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டித்
தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில் 7000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்
கிடைத்தது.
 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தானாக அச்சுப் பொறுத்தி செய்தி
ஏற்கும் கருவி, டெலி பிரிண்டர் பொறி தொழிற்சாலை கிண்டியில் அமைக்கப்பட்டது.
 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சினிமா, எக்ஸ்ரே,
புகைப்படங்களுக்கான ஃபிலிம்கள் தயாரிப்பதற்கு இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை ஊட்டியில்
அமைக்கப்பட்டது.
 அறுவை சிகிச்சைக்கான கருவிகள் தயாரிக்கும் ஆலை கிண்டியில் தொடங்கப்பட்டது.
 750 ஏக்கர் பட்டா நிலத்தையும் 2400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் அளித்து திருச்சியில் பாரத்
மிகுமின் நிறுவனம் ( பெல் ) அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக் கணக்கானோர்ககு ் வேலை
வாய்ப்பளிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியும் பெருகியது.
 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆவடியில் பீரங்கித் தொழிற்சாலை
அமைக்கப்பட்டது.
 சேலத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலை துவங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் துவங்கப் பட்ட சில முக்கியமான 
தனியார் தொழிற்சாலைகள்..
 ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், சென்னை. ஆண்டொன்றுக்கு 6000 கார்களை உற்பத்தி செய்யும் திறன்
கொண்டது.
 அசோக் லேலண்ட், சென்னை. ஆண்டொன்றிற்கு 5400 சேசிஸ் தயாரிக்கும் திறன் கொண்டது.
 டி.ஐ சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை. ஆண்டொன்றிற்கு சுமார் 30 லட்சம் சைக்கிள்களை உற்பத்தி
செய்தது.
 பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சிம்சன்ஸ், இந்தியா பிஸ்டன்ஸ,்
டி.வி.எஸ் மற்றும் திருச்சித் துப்பாக்கித் தொழிற்சாலை போன்ற முக்கிய தொழிற்சாலைகளும் அமைக்கப்
பட்டன.
 1962 ல் சவுத் இந்தியா விஸ்கோஸ் என்ற கூட்டுறவு ஆலை கோவை சிறுமுகையில் நிறுவப்பட்டது.
 காமராஜர் ஆட்சிக்கு முன் 3 ஆக இருந்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது.
 பல்வேறு இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன.

 இந்திய அரசியலில் காமராஜரின் பங்கு:


 காமராஜர் பதவியை விட கட்சி பணியையும் தேச பணியையும் பெரிதும் நேசித்தார். 9 ஆண்டு காலம்
முதலமைச்சராக இருந்த காமராஜர், கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர்களிடம்
ஒப்படைத்துவிட்டு கட்சி பணிக்கு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கே-பிளான் என்ற திட்டத்தை
கொண்டுவந்தார். அதற்கு உதாரணமாக தன் முதலமைச்சர் பதவியை பக்தவச்சலத்திடம்
ஒப்படைத்துவிட்டு தில்லி சென்றார். 1963-ஆம் ஆண்டு அக்டோபர்-ல் அகில இந்திய காங்கிரஸ்
தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.
 கே-பிளான் திட்டத்தின் படி மொராஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி, எசு.கே.பட்டேல், செகசீகன்ராம்
போன்ற மூத்த தலைவர்களும் பதவியை விட்டு விலகி இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் தேசிய
அளவில் காமராஜரின் மதிப்பு உயர்ந்தது. 1964-ஆம் ஆண்டு நேருவின் மறைவுக்கு பிறகு லால் பகதூர்
சாஸ்திரியை இந்திய பிரதமராக்கினார். 1966-இல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தை
தொடர்ந்து நேருவின் மகளான இந்திரா காந்தியை அடுத்த பிரதமராக்கினார். இப்படி இந்தியாவின்
பிரதமர்களை தீர்மானிக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற தலைவராக விளங்கினார் காமராஜர்.

இறுதி காலம்:
திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியாற்றிய காமராஜர் 1975-ஆம் ஆண்டு 
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி, தன் 72-ஆம் வயதில் காலமானார். முதலமைச்சராக இருந்த
போதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போதும் வாடகை வீட்டிலேயே வசித்து வந்த காமராஜர் 
இறக்கும் போது அவரிடம் இருந்த சொத்துகள் சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள், 150 ரூபாய் பணம்.

தனக்கென்று அல்லாமல் வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காகவே அர்ப்பணித்த காமராஜரை போற்றும் விதமாக


1976-ஆம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

அவர் மறைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் கடந்த பிறகும் இன்றும் மக்கள் மனதில் நீஙக
் ாத இடம்
பிடித்துள்ளார்…. காமராஜர் புகழ் ஓங்குக…..

 தமிழகத்தின் கல்வி புரட்சியில் காமராஜரின் பங்கு:

அவரின் சாதனைகள் சிலவற்றை நாம் பாப்போம். அதிகம் படிக்காத நம் பெருந்தலைவர் காமராசர் கல்விக்கு
செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி
கற்க 30000 க்கும் மேல் பள்ளிகள் தொடங்கினார், பள்ளிகள் தொடங்கினால் போதுமா மாணவர்கள் வேண்டாமா?
அதற்கு அவர் செய்த தந்திரம் தான் இலவச மதிய உணவுத் திட்டம், தன் பிள்ளையாவது பசி இல்லாமல்
இருக்கட்டும் என பள்ளிக்கு அனுப்பிய பெற்றோரே அதிகம், 7% ஆக இருந்த கற்போரின் எண்ணிக்கையை 37%
ஆக மாற்றி புன்னகைத்தவர் தான்

அவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் சிலவற்றை காண்போம்,

 இலவச மதிய உணவு திட்டம், (Free Meal Scheme at school)


 இலவச புத்தகம், சீருடை திட்டம் (Free uniform and books scheme)
 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1953-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழக முதல்வராக
பொறுப்பேற்றார்.
 கல்வி தான் இந்த நாட்டை வளமாக்கும் என்பதை ஆழமாக நம்பிய காமராஜர் ராஜாஜி ஆட்சி காலத்தில்
மூடப்பட்ட 6000 பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப பள்ளி,
மூன்று கிலோமீட்டரைக்கு ஒரு மேல் நிலை பள்ளி, ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலை பள்ளி இருக்க
வேண்டும் என்ற திட்டம் வகுத்து மேலும் 17000 பள்ளிகளை திறந்தார்.
 பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும் பெரும்பாலான குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிகளுக்கு
வராததை கண்டு மனம் நொந்த காமராஜர் அவர்களை வரவழைக்க ஒரு திட்டத்தை தயார் செய்ய
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 வறுமையில் வாடும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே இலவசமாக மதிய உணவு அளிப்பதன் மூலம்
அவர்களை பள்ளிக்கு வரவழைக்க முடியும் ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசிடம் போதுமான
நிதி ஆதாரம் இல்லை. மக்களிடம் வரிச்சுமையை ஏற்றினால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது ஒரு
அதிகாரி என கூற கேட்ட காமராஜர் கடும் கோபத்துடன் பிள்ளைகளை படிக்க வைப்பதே அரசின் முதல்
கடமை, அரசிடம் நிதி இல்லை என்றால் நான் பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தினை
செயல்படுத்துவேன் என்று அதிகாரிகள் மத்தியில் பேசினார்.
 ஒரு முதல்வரே இந்த நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்காக பிச்சை எடுப்பேன் என்று சொல்ல கேட்ட
அதிகாரிகள் பதில் ஏதும் பேசாமல் உடனடியாக திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இயங்கினர்.
இதன் விளைவாக உதயமானது “மதிய உணவு திட்டம்”.  இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கல்வி புரட்சி
உருவாகி பெருமளவில் மாணவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர்.

You might also like