You are on page 1of 21

12.

7 ரிப்பன், 1880-1884

12.7.1 கத்தோலிக்க வைசிராய்

ஜியர்ஜ் பெரெடெரிக் சாமுவேல் ராபின்சன் என்ற ரிப்பன் பிரபு 1827

அக்டோபர் 24 ஆம் தேதி லண்டன் 10, டௌனிங் தெருவில் (10 Downing street)

அரசியல் செல்வாக்குமிக்க பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை

எப்.ஜே. ராபின்சன் (F.J. Robinson) பிரதமராயிருந்தவர், சிப்பன் எந்த மன்னிக்கும்.

கல்லூரிக்கும் செல்லாமல் முறைசாராக் கல்வித் தேர்ச்சி பெற்ற 1853 ஆம்

ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரானார். 1959 ல் இவரது தந்தை

இறந்தபின் அவரது பிரபுப் பட்டத்துக்கு வாரிசாகி பிரபுக்கள் அவ (House of Lords)

உறுப்பினரானார். பிரதமர் பால்மர்ஸ்டன் (Lord Paimanton) ஆட்சிக்காலத்தில்

ரிப்பன் பல பதவிகளை வகித்தார். அவருக்குப் பின் கிளாட்ஸ்டன் (Gladstone)

பிரதமராக இருந்தபோதும் ரிப்பன் பொறுப்பான பதவிகளுக்கு

நியமிக்கப்பட்டார்.

பிரிட்டன் பிற நாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்வதற்கு

ரிப்பன் பெரிதும் காரணமாக இருந்தார். ரிப்பனின் சேவையைப் பாராட்டி

பிரிட்டிஷ் அரசாங்கம் இவருக்குச் சிறப்புப் பட்டம் (Marquess) of Ribon கொடுத்து

சிறப்பித்தது. ரிப்பன் 1878 இல் கூட்டுறவு காங்கிரசின் (Co- operative Congress) முதல்

நாள் கூட்டத்துக்குத் தலைமைதாங்கி சிறப்பித்தார். கத்தோலிக்கரான ரிப்பன்

இந்திய வைசிராயாக நியமிக்கப்பட்டது. பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கிற்று.

ரிப்பன் 1880 ஜூன் மாதம் இந்தியத் தலைமை ஆளுநராகவும், வைசிராயாகவும்

பொறுப்பேற்றார்.
பிரிட்டிஷ் பிரதமர் கிளாட்ஸ்டன் லிபரல் கட்சி (Liberal Party) சேர்ந்தவர்.

அவர் ரிப்பனை இந்திய வைசிராயாக நியமிக்கும் போது இரண்டு

நிபந்தனைகளைக் கூறினார்: 1) பிரிட்டிஷ் இந்திய ஆட்சி இந்தியருக்கு

இலாபகரமாக இருக்க வேண்டும்; 2) அப்படி லாபகரமாக இருப்பதை அவர்கள்

பார்க்க வேண்டும். ரிப்பன் இந்த இரண்டு நிபந்தனைகளையும் கட்டளைகளாகக்

கருதிக் கடமையா ரிப்பன் ஆட்சிக்கால துயக்கத்திலிருந்து அவர்

பறக்கும்வரை இரண்டு விஷயங்களில் மணத்தெளிவுடன் இருந்தார்: 1)

இந்தியரோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது; 2) அதன் மூலம் அவர்களைத்

தன்னாட்சிக்குத் தயார் செய்வது.

12.7.2 ஆப்கானிஸ்தான் பிரச்னை, 1880

பிரிட்டிஷ் இந்திய-ஆப்கானிஸ்தான் பிரச்னை முடிவில்லாத

தொடர்கதையாக இருந்தது! அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான

முயற்சியை மேற்கொண்டார் ரிப்பன். ஆங்கில நிலையரை நியமிப்பதுதான்

இருநாடுகளுக்கிடையே இருந்த பிரதானப் பிரச்னை, ரிப்பன் பதவிக்கு வந்த

உடனேயே அப்துர் ரஹ்மானை (Abdur Rahman) காபூல் அமீராக அங்கீகரித்தார்.35

அடுத்து காபூலில் ஆங்கில நிலையரை நியமிக்கும் தைக் கைவிட்டார் ரிப்பன்.

அதுமட்டுமல்ல. அப்துர் ரஹ்மானுக்குப் திட்டத்தைக் போதிய பாதுகாப்பு

அளிப்பதாக உறுதி அளித்தார். ரிப்பன் இன்னும் ஒருபடி மேலே சென்று

ஆங்கிலேயர் கைப்பற்றியிருந்த காண்டகார் அருகேயிருந்த மைவாண்ட்

(Maiwand) பகுதியை அமீருக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார் (1881)! இவற்றின்

விளைவாக அமீர் அப்துர் ரஹ்மான் பிரிட்டிஷ் இந்திய அரசின் நம்பகமான

நண்பரானார். ரிப்பனின் இந்நடவடிக்கைகள் பற்றிப் பிரிட்டிஷ்

பாராளுமன்றத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. எனினும் ரிப்பனின்


ஆப்கானியத் தீர்வு அரசியல் விவேகமிக்கது என்பதை வரலாறு உணர்த்தியது.

இது ரிப்பனின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மகத்தான

வெற்றியாகும்.

12.7.3 மைசூர் பிரச்னை, 1881

ரிப்பன் ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்குத் தீர்வு கண்டதைப் போன்று

மைசூர் பிரச்னைக்கும் நியாயமான தீர்வு கண்டார். 1857 பெருங்கிளர்ச்சியின்

போது ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்த மைசூர் மன்னருக்கு

தலைமை ஆளுநர் டல்ஹௌசி நன்றி பாராட்டவில்லை. மைசூரில்

ஆங்கிலேயரது ஆதிக்க ஆட்சி தொடர்ந்தது! ரிப்பன் பதவிக்கு வந்தபின்

மைசூருக்கு இழைக்கப்பட்ட அநீதி அகற்றப்பட்டது. மூன்றாவது கிருஷ்ணராஜ

உடையார் முறைப்படி மைசூர் அரியணையில் அமர்த்தப்பட்டார் (1881).

அபகரித்து வைத்துக் கொண்டிருந்த ஸ்ரீரங்கப்பட்டிணம் ஆங்கிலேயர் அப

மைசூரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. 50 ஆண்டு கால பிரிட்டிஷ்

ஆட்சிக்குப் பிறகு சட்டப்படி (Instrument of Transfer, 1881) மைசூர் மன்னரிடம்

ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வு இந்திய சமஸ்தானங்களிடம் பின்பற்றப்பட்ட

புதிய கொள்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.36

12,7.4 நிர்வாக சாதனை

வர்த்தக சுதந்திரம்

ரிப்பன் தடையற்ற வர்த்தகத்தில் (Free Trade) நம்பிக்கை உடையவர்.

அரசாங்கத்துக்கு வருவாய் உபரி இருந்தமையால் கிட்டத்தட்ட அனைத்து

இறக்குமதி வரிகளையும் நீக்கிவிட்டார் (1882). அடுத்து அவர் மேற்கொண்ட

நடவடிக்கை அனைத்து மாகாணங்களிலும் உப்புவரியைக் கணிசமாகக்


குறைத்தார். இதனால் அடித்தட்டு மக்களின் வரிப்பளு குறைந்தது. 1862 இல்

அறிமுகப்படுத்தப்பட்ட ஜமீன்தாரி நிலவரி முறை நீக்கப்பட்டது (1883).

நிலத்திர்வை உயர்த்தப்படக் கூடாது என்று உத்திரவிட்டார். உழவர்களின்

நிலத்திக உரிமைகள் பாதுகாக்கப்படுல்குன்று உறுதியளித்தார். சிபவை

இந்நடவடிக்கைகளில் இந்திருந்து பிங்கங்க வில்ண்பாடில்லை என்றாலும்

வைமிராய் அவரது போக்கிலிருந்து பின்வாங்கவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1881

திட்டமிட்ட பொருளாதாரத்துக்கு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு

(Census) இன்றியமையாதது. வைசிராய் மேயோ இறற்கனை முயற்சியை

மேற்கொண்டார் (1872). எனினும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட நாடுகளில்

மட்டும் மேற்கொள்ளப்பட்ட அம்முயற்சி இந்தியா முழுவதும்

விரிவுபடுத்தப்படவில்லை. ரிப்பன் முதல் முறையாக முறையான மக்கள்

தொகைக் கணக்கெடுப்பை நடத்தினா 245 பதிவு செய்யப்பட்ட

தெதளாக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகை 245 மில்லியனாக இருந்தது.

தொழிற்சாலைச் சட்டம், 1861

தொழிற்சாலை திறம்பட செயல்பட வேண்டுமென்றால் தொழிலாளர்

நலன் நன்கு பாதுகாக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்துடையவர் ரிப்பன்.

அவருடைய தாராளமயக் கொள்கை (Liberal Policy) யின் பிரிக்கமுடியாத பகுதி

தொழிலாளர் நலப் பாதுகாப்பாகும். அந்த அடிப்படையில் ரிப்பன் முதன்

முறையாகத் தொழிற்சாலைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தினார் (1881).

இச்சட்டம் தொழிற்சாலைகளில் வேலை செய்த இளம் வயது

தொழிலாளர்களின் வேலை நேரத்தை நிர்ணயித்தது. தொழிற்சாலைகளில்

உள்ள அபாயகரமான இயந்திரங்கள் வேலியிட்டுப் பாதுகாப்பாக இருக்க


வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டது. இச்சட்டம் சரியாக, முறையாக

நடைமுறைப்படுத்தப்படுகின்றது. என்பதைக் கண்காணிப்பதற்காக மேலாளர்கள்

(Inspectors) நியமிக்கப்பட்டனர். ரிப்பன் மேற்கொண்ட இந்நடவடிக்கை

இந்தியாவில் முதன் முறையாகத் தொழிலாளர் நலன் காப்பதற்காக

மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

பத்திரிகை சுதந்திரம், 1882

பத்திரிகைகள் மக்களாட்சியின் பாதுகாவலர்கள்; மக்களின் உரிமைகளுக்காகக்

குரல் பெருக்கும் ஒலிபரப்பிகள்; அரசாங்க அடக்குமுறைக்கு எதிரான

கேடயங்கள். இந்தியரை மக்களாட்சிக்குத் தயார் படுத்த வேண்டும் என்று

விரும்பிய ரிப்பன் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க முனைப்புடன்

செயல்பட்டார். முன்னாள் வைசிராய் விட்டன் கொண்டுவந்த தாய்மொழிப்

பத்திரிகைச் சட்டம் (1878) மக்களிடையே மனக்கசப்பையும், பத்திரிகையாளரின்

மனக்கொதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. மக்களின் நாடித்துடிப்பை நன்கறிந்த

ரிப்பன் அந்த தாய்மொழிப் பத்திரிகைச் சட்டத்தை விலக்கிக் கொண்டார் (1882)

பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. ரிப்பன் மக்கள் மனதில் இடம்

பெற்றார்.

கல்வி சுதந்திரம், 1882

ஹண்டர் கல்விக் கமிஷன்

மக்களுக்கு கல்வி சுதந்திரம் வேண்டும் என்பதில் அசைக்க முடியாத

நம்பிக்கையுடையவர் ரிப்பன். குறிப்பாக கல்வியின் பயன் சமுதாயத்தின்

கடைக்கோடியில் இருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது

அவரது பேரு இந்தியாவின் கல்விமுறை முறைப்படுத்தப்புதல் வேண்டும்.


என்ற தீர்மானித்த சார்லஸ் (Sir Charles Wood) (Education Commission) வில்லியம்

ஹண்டர் (Sir William Hunter) என்ற கல்வி நிபுணர் ஆணையத்தில்

நியமிக்கப்பட்டார். இந்த ஆணையத்தின் நோக்கம் இந்தியக் கல்வி நிலை

பற்றி ஆய்வு செய்து, அதை மேலும் விரிவுபடுத்தி மேப்படுத்துவது பற்றிய

பரிந்துரைகளைச் செய்வதாகும்.

பரிந்துரைகள்

ஹண்டர் கமிஷன் அதற்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச்

செய்து முடித்து அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ்பெற்ற அறிக்கை

(Despatch)வை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் துவக்க

(Primary) மற்றும் இடைநிலை (Secondary) கல்வி பற்றி பின்வரும் அடிப்படை

முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளைக் கூறியது: 1) இந்தியாவில் துவக்கக்

அல்லி வருத்தத்தக்க வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2) துவக்கக்

கல்விக்கு நகராட்சிகளும், மாவட்ட மன்றங்களும் பொறுப்பேற்க வேண்டும். 3)

துவக்கக் கல்வியை ஊக்குவிப்பதும், விரிவுபடுத்துவதும், அதற்கான செல்வை

ஏற்றுக்கொள்வதும் மாகாண அரசாங்கத்தின் கடமையாகும். 4) இடைநிலைக்

கல்வியைப் பொறுத்த வரை தனியார் துறை ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.

தனியார் துவக்கும் இடைநிலைப் பள்ளிகளுக்கு அரசாங்கம் மானியம் (Grant-in-

aid) வழங்க வேண்டும். 5) இடைநிலைப் பள்ளிகளில் அறிவியல்-இலக்கியக்

கல்வியும், தொழிற்கல்வியும் (Vocational Education) அளிக்கப்படுதல் வேண்டும்.

6) அரசாங்கம் இடைநிலைப் பள்ளிகளை நேரடியாக மேலாண்மை

செய்வதை நிறுத்திக் கொண்டு பெண் கல்வியில் அதிக அக்கறை காட்ட

வேண்டும். ஹண்டன் அறிக்கை இந்தியாவில் முதன் முறையாக வாழ்வியல்

பாடங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழியை வகுத்துக் கொடுத்தது.37 தி


ஹண்டர் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட ரிப்பன் அதற்குச்

செயல் வடிவம் கொடுப்பதில் முனைப்புடன் ஈடுபட்டார். துவக்ககல்விக்கு

சிறப்பிடம் அளிக்கப்பட்டது. இடைநிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விக்கு

முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப்

பள்ளி (Model School) துவக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

அனைவருக்கும் ஆரம்பக்கள்ளி (Universalisation of Primary Education) என்ற கல்விக்

கொள்கைக்குக் கால்கோள் ஊன்றியவர் ரிப்பன் என்றால் மிகையாகாது.

உள்ளாட்சி சுதந்திரம், 1882

உள்ளாட்சி அரசாங்க அமைப்புகள் (Local Governments) மக்களாட்சியின்

ஆணி வேர்கள். புல்லிதழ் ஜனநாயகத்தின் (Grass-root Democracy) நாற்றங்கால்கள்,

ரிப்பன் கிளாஸ்டன் சகாப்தத்தைச் சேர்ந்த தல சுயாட்சியில்

நம்பிக்கையுடைய தாராளமய (Liberal) க் கொள்கையைக் கொண்டவர். 38 தல

தன்னாட்சி பற்றி அவர் அறிமுகப்படுத்திய தீர்மானம் (Resolution on Local Self-

Government, 1882) வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்திய ராஜதானி நகரங்களில்

மட்டுமே முடக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளை இந்தியா

முழுவதுக்கும் விரிவுபடுத்தினார் ரிப்பன். இதன் முலம் அவர் இந்தியரின்

சுயாட்சி விருப்பத்துக்கு வடிவம் கொடுத்தார்.39

நோக்கங்கள்

ரிப்பன் கொண்டு எந்த உள்றட்சி பற்றிய தீர்மானம் கீழ்கண்ட

அடிப்படை நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டியது: 1) தல தன்னாட்சி

அமைப்புகள் மக்களின் அரசியல் கல்வி அளிப்பதற்கான கருவிகளாக இருக்க

வேண்டும். 2) இவற்றின் தலைவர்களும், பெரும்பான்மையான உறுப்பினர்களும்


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். 3) உள்ளாட்சி அரசாங்க

அதிகாரிகளும், அலுவல்களும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகக்

கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். 4) உள்ளாட்சி நிறுவனங்கள் திறமைகள்

செயல்படவும், அவற்றின் கடமைகளையும் நிறைவேற்றவும் தேவையான நிதி

வளங்கள் கொடுக்கப்படுதல் வேண்டும். 5) மக்கள் தங்கள் விவகாரங்களைக்

தாங்களே நிர்வகித்துக் கொள்வதற்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும். 6)

அரசாங்கக் கட்டுப்பாடு மறைமுகமாக இருக்க வேண்டுமேயன்றி நேரடியாக

இருத்தலாகாது. புறக்கட்டுப்பாட்டைவிட அகக்கட்டுப்பாடே சிறந்தது. எந்த

அரசாங்கம் குறைவாக ஆட்சி செய்கின்றதோ அந்த அரசாங்கமே சிறந்த

அரசாங்கம் என்பது ரிப்பனின் குறிக்கோள்.

தல தன்னாட்சிக் கொள்கை

ரிப்பனின் தல தன்னாட்சி அரசாங்கக் கொள்கை (Policy on Local Self-

Government) உள்ளாட்சி நிர்வாகத்தை ஜனநாயகமாக்குவதற்கான உண்மையான

முயற்சியாகும். அது மக்களாட்சிக்கான பாடங்களில் மேற்கொள்ளப்பட்ட

பரிசோதனையாகும்.40 சுயாட்சி நிறுவனங்களில் பங்கேற்று தங்களைத்

தாங்களே ஆட்சி செய்து கொள்வதற்கு மக்களுக்குப் போதிய வாய்ப்பளிக்க

வேண்டும்; இம்முயற்சியில் அவர்கள் தவறு செய்தாலும் பரவாயில்லை

என்றார் ரிப்பன்! இதன் மூலம் மக்கள் தன்னாட்சி பற்றிய அரசியல் அனுபவம்

பெற வேண்டும் என்ற ரிப்பனின் எண்ணம் தற்கால உள்ளாட்சி வளர்ச்சிக்கு

அவர் அளித்த மாபெரும் நன்கொடையாகும். அரசாங்கக் கட்டுப்பாட்டைவிட

கயாட்சி நிறுவனங்களுக்கு அகக்கட்டுப்பாடே சிறந்தது என்ற ரிப்பனின்

கருத்து அவருக்கு அதிகாரவர்க்கத்தின் மீது இருந்த அவநம்பிக்கையின்

வெளிப்பாடாகும். ரிப்பனின் உள்ளாட்சி பற்றிய ஆவணம் தலதன்னாட்சிக்கான


மக்னா கார்டா (Magna Garta of Local Self Government) ஆகும். ரிப்பனை தந்தை

என்று கூறலாம்.41

ரிப்பனின் பங்களிப்பு

ரிப்பன் செய்த புதுமை என்னவெனில் இங்கிலாந்தில் மாவட்ட

உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னரே

இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டதேயாகும். ரிப்பனின் உள்ளாட்சி

சீர்திருத்தத்தை எஸ்.என். பானர்ஜி, ஜி.கே. கோக்கலே, பெரோஸ்ஷா மேத்தா,

ராஜா பிஹாரி போன்ற துவக்ககால இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள்

வரவேற்று மகிழ்ந்தார்கள். சென்னை மாநகராட்சிக் கட்டிடம் ரிப்பன் பெயரைத்

தாங்கி நிற்கின்றது. இன்றைய உள்ளாட்சி முறைக்கு அடித்தளம் அமைந்தவர்

ரிப்பன் ஆவார்.42 இந்திய மக்களின் இதயங்களில் சுதந்திர விதையை

விதைத்தவர் ரிப்பன் என்றால் மிகையாகாது.43

12.7.5 இல்பர்ட் மசோதா எழுப்பிய சினப்புயல், 1883-1884

இல்பர்ட் மசோதா

பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய நீதிபதிகள் ஆங்கில

நீதிபதிகளிடமிருந்து வேறுபடுத்தப்பட்டிருத்தனர். ஒரே தகுதியும், திறமை

இருந்த போதிலும் இந்த வேறுநாடு இந்திய நிதிபதிகளிடைவே மிருந்த மன

வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நீதி அநீதியை நீக்கத் திர்மானித்தார் ரிப்பன்.

அதன் விளைவாக இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டு வரப்பட்டடது.

முதன்மை உறுப்பினரான சி.பி. இல்பர்ட் செய்தார். ஆளுநர் ரிப்பனின் நிர்வாகக்

குழு சட்ட (Sir C.P. Ilbert) இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

மசோதாவின் சாரம்
இல்பர்ட் மசோதா இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர் சம்மந்தப்பட்ட

குற்றவியல் வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்ற சட்டத் தடையை

நீக்கியது. இந்தடை நீக்கத்தால் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியக்

குற்றவாளிகளை விசாரிக்கும் அதிகாரத்தைப் பெற்றனர். அதாவது

நீதிமன்றங்களில் இந்திய நீதிபதிகளும் ஆங்கில நீதிபதிகளும் சமமாக

மதிக்கப்படுவர். இதன்மூலம் சுதேசி நீதிபதிகளுக்கும் விதேசி நீதிபதிகளுக்கும்

இடையே இருந்த வேறுபாடு நீக்கப்பட்டது.

ஆங்கிலேயர் எதிர்ப்பு

இல்பர்ட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது குளவிக் கூட்டில்

கைவிட்டதைப் போன்று ரிப்பன் ஆங்கில எதிர்பாளர் தேனீக்களால்

கொட்டப்பட்டார். ஆங்கிலேயர் அவர்மீது வசைமாறி பொழிந்தனர்.

கத்தோலிக்கராயிருந்தும் ரிப்பன் இந்தகைய மசோதாவை

அனுமதித்ததற்காகக் மீட்பன் மார் குறை ஜாமதித்ததற்காகக் தற்காப்பு சங்கம்

(Defence Association) என்ற அமைப்பை ஏற்படுத்தி, பெருந்தொகை திரட்டி,

ரிப்பனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, அதன் பிரதிநிதிகளை லண்டனுக்கு

அனுப்பி அவரைப் பதவியிலிருந்து திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச்

செய்தனர். ரிப்பனைக் கடத்திச் சென்று நாடு கடத்துவதற்கான முயற்சிகளும்

மேற்கொள்ளப்பட்டன! இங்கிலாந்து பத்திரிகைகள் ரிப்பனை நேரடியாகத்

தாக்கி எழுதின. இல்பர்ட் மசோதாவுக்கெதிராக பொதுக் கருத்து

உருவாக்கப்பட்டது. அரசாங்கப் பதவிகளில் ஆங்கிலேயர் ரிப்பனைப்

புறக்கணித்தனர்.

மசோதாவில் மாற்றம்
எதிர்ப்புப் புயலை எதிர்கொண்ட ரிப்பன் இல்பர்ட் மசோதாவில் ஒரு

மாற்றம் செய்தார். ஐரோப்பியரை விசாரிப்பதற்காக நியமிக்கப்படும் ஜுரர்களில்

(Jury) 50% ஐரோப்பியர் அல்லது அமெரிக்கர் இடம்பெற வேண்டும் என்று

மசோதா திருத்தப்பட்டது. இந்த திருத்தம் இல்பர்ட் மசோதாவின் அடிப்படைக்

கொள்கையை பலியிட்டு விட்டது. இத்திருத்தத்தின் பயன் இந்தியருக்குக்

கொடுக்கப்படாமையால் இனவேறுபாடு (Racial Discrimination) நீடித்தது.44 இல்பர்ட்

மசோதாவுக்கு எதிரான கிளர்ச்சி இந்தியரிடையே இரண்டு விளைவுகளை

ஏற்படுத்தியது: 1) படித்த இந்தியர்களின் மனதில் கோபத்தையும் ஆங்கிலேயர்

எதிர்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியது; 2) ஒரு அமைப்பை உருவாக்கிப்

போராடுவதால் ஏற்படும் நன்மையை உணர்த்தியது.45

நுண்மைச் சிறுபான்மையர்

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி பெற்ற மத்தியதர வகுப்பார் மார்கழிப்

பரிபோல் வெளிப்படையாகத் தெரியாமுழுவதிலும்து வென்றனர். கடந்த 25

ஆண்டுகளாக அவர்கள் இந்தியாமுவெலும் கொடி போல் நீ (Microscop Minority)

தான். இச்சிறுமையிய நோக்கு பொல்லி பொதுக் கருத்துக்கள். மாப்போக்குகள்,

அகில இந்திய பார்வை ஆகியவற்றால் பிணைக்கப் பட்டிருந்தனர். இதை

நன்கறிந் திருந்தம் ரிப்பன். இதை அறியால் போனார் ரிப்பனுக்குப்பின் வந்த

டப்ரின் (Lord Dufferin).46

வழியனுப்பு விழா

1882 ஆண்டு இந்திய இராணுவம் எகிப்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கான

செலவை இந்திய அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றது பிரிட்டிஷ் மறுத்துவி

அரசாங்கம். அதற்கு ரிப்பன் சம்மதிக்க மறுத்துவிட்டார்! அதற்குக் காரஷஷ்


பிரிட்டனின் நலன் காப்பதற்காக அனுப்பப்பட்ட ராணுவச் செலவைப்

பிரிட்டிஷ் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றார். அவரது ஆலோசனையைப்

பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்க மறுத்ததால் ரிப்பன் தனது பதவியைத் துறந்து

விட்டுத் தாய்நாடு திரும்பினார் (1884). ரிப்பன் தாய்நாடு திரும்புவதற்குமுன்

1884 ஆம் ஆண்டு இறுதியில் அவருக்கப் பம்பாயில் வழியனுப்பு விழாவுக்கு

ஏற்பாடு மைசூர், குஜராத், பஞ்சாப் போன்ற செய்யப்பட்டது. இவ்விழாவில்

சென்னை, மைசூர், பல மாகாணங்களிலிருந்து சாதி, இனம், மதம், மொழி

வேறுபாடுகளைத் தாண்டி அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். வந்தவர்கள்

வண்டிகள், கூரைகள், மரங்கள் மீதிருந்து அவர்களது மனம் கவர்ந்த

தலைவருக்குப் பிரியா விடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இது ரிப்பன்

இந்திய மக்கள் மீது கொண்டிருந்த தூய அன்புக்கும், அவர்களது

முன்னேற்றத்துக்காசு அவர் கடைபிடித்த கொள்கைக்கும், மேற்கொண்ட நல

நடவடிக்கைகளுக்கும் அளித்த அங்கீகாரமாகும்.47

12.7.6 ரிப்பனின் பங்களிப்புகள்

ரிப்பனின் பங்களிப்புகளில் முக்கியமானவை: 1) ரிப்பன் இந்திய மக்களின்

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோடன்றி அவற்றுக்கு அமைப்பு

ரீதியான வடிவம் கொடுத்தார். 2) பத்திரிகை சுதந்திரத்துக்குத் தடையாக

இருந்த தாய்மொழிப் பத்திரிகைச் சட்டத்தை விலக்கினார். 3) உள்ளாட்சி

நிறுவனங்களுக்கு உரிய சிறப்பைக் கொடுத்து மக்கள் பிரதிநிதிகளிடம்

ஒப்படைத்தார். 4) இந்திய நீதிபதிகளுக்கும் ஆங்கில நீதிபதிகளுக்கும் இடையே

இருந்த மனக்கசப்பை ஏற்படுத்திய இன வேறுபாட்டைக் கணி கணிசமாகக்

குறைத்தார். 5) இந்தியர் அனைவருக்கும் தரமான துவக்க மற்றும்


இடைநிலைப் பள்ளிக் கல்வி என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். 6)

மைசூர் அரசை மைசூர் மன்னரிடமே திரும்பவும் ஒப்படைத்தது.

12.7.7 மதிப்பீடு

இந்திய முதன்மை ஆளுநர்-வைசிராய்களில் மக்களின் மகத்தான

மதிப்பைப் பெற்ற தாராள உள்ளம் கொண்ட மனிதாபிமானி ரிப்பன். அவர்

பிரிட்டிஷ்-இந்தியப் பேரரசி விக்டோரியா தனது அறிக்கையில் (1858) கொடுத்த

வாக்குறுதிக்கு வடிவம் கொடுத்தவர். இவர் கொண்டு வந்த தாய்மொழி

பத்திரிகைச் சட்டமும், இல்பர்ட் மசோதாவும் இன வேறுபாட்டிடன்

கேடுகளைக் களைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளாகும். ரிப்பனின்

உள்ளாட்சி சீரமைப்பு இந்தியா முழுவதும் தல சுயாட்சி என்ற

ஒருங்கிணைக்கப்பட்ட சித்திர வேலைப்பாடு கொண்ட (Mosaic of Local Self-

Government) ரிப்பனின் இம்முயற்சி இந்திய மக்கள் சுயாட்சி உரிமைகளுக்குத்

தகுதியானவர்கள் என்ற அவரது உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடாகும்.

எதிர்ப்பு கண்டு அஞ்சாது, பதவியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்திய

மக்களுக்கு உதவக்கூடிய மனத்திண்மை அவரிடம் இருந்தது.

ரிப்பன் இந்தியரை நேசித்தார்; இந்தியர் சிப்பனை நேசித்தனர். சிப்பன்

எங்கள் அப்பன் என்று கூறி பெருமைப்பட்டனர். ஒரு வரலாற்று மாமனிதரிடம்

இருக்கவேண்டிய ‘பெருக்கத்து வேண்டும் பணிவும்’49 அவரிடம் அபரிமிதமாக

இருந்தது. அவரது அடக்கம் அவரை அமரருள் ஒருவராக்கியது.50 ரிப்பனுக்கும்

கிடைத்த மக்களின் மகிழ்ச்சிக் கைதட்டல் அவருக்கு முன்போ, பின்போ

இருந்த வேறு எந்த வைசிராய்க்கும் கிடைக்கவில்லை.51 1885 ஆம் ஆண்டில்


துவக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் ரிப்பன் கொள்கை மரத்தின் முதல்

கனியாகும்.52 மரம் கனிகளால் அறியப்படும். மாமனிதன் செயல்களால்

தெரியப்படுகிறார்.

மேற்கோள் குறிப்புகள்

1. R. Sathianathaier, History of India, Vol. III, Madras, 1982, p. 408.

2. A.B. Keith, A Constitutional History of India, 1936. P. 386.

3. C. Hibbert, Queen Victoria: A Personal History, London, 2000.

D. Marshall, The Life and Times of Queen Victoria, London, 1972.

L. Strachy, Queen Victoria, London, 1921. Woodham-Smith, Queen Victoria: Her Life and

Times, London, 1972.

1882 மார்ச் 2 ஆம் தேதி ரோடிக் மக்லீன் என்ற புகழ்பெற்ற கவிஞர்

எழுதிய ஒரு கவிதையைப் பேரரசி விக்டோரியா கவிதையென ஏற்றுக்

கொள்ள மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த மக்லீன் வின்ட்சர்

ரயில் நிலையத்தில் விக்டோரியாவைச் சுட்டுவிட்டார்! விக்டோரியா

உயிர் பிழைத்தார். மக்லீன் கைது செய்யப்பட்டார். 1883 மார்ச் 17 ஆம்

தேதி விக்டோரிய வின்ட்சர் அரண்மனையில் கால் தடுக்கி விழுந்து

விட்டார். முடக்கு வாதத்திலிருந்து அவர் மீளவில்லை!

4. R. Sathianathaiar, op. cit., p. 407.

5. அவுரி சாகுபடி செய்த ஐரோப்பியப் பண்ணையார்கள் இந்திய

உழவர்களுக்குச் செய்த கொடுமைகள் பல, டி.பி. மித்ரா (D.B. Mitra)

எழுதிய நீல்தர்பார் (Nil Darbar) என்ற நாடகத்தில் ஐரோப்பியப்


பண்ணையார் செய்த கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு

வந்தார்.

6. 1833 இல் இவ்விரு மாகாண அரசாங்கங்களில் சட்டமியற்றும்

அதிகாரங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அந்த அதிகாரங்களே

இச்சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டன. வங்காளம் (1862), வடமேற்கு

மாகாணங்கள் மற்றும் அயோத்தி (1886), பஞ்சாப் (1897) ஆகியவற்றுக்கும்

சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

7. இச்சட்டமன்ற முறை உடனடியாக நடைமுறைக்கு வந்து விடவில்லை.

நத்தை வேகத்தில் நகர்ந்தது. 1892, 1909 ஆம் ஆண்டுகளில்

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இவ்வதிகாரங்களை உறுதிப்படுத்தின. 1905

ஆண்டுச் சட்டம்தான் சட்டசபைக்குத் தனி அமைப்பையும்,

அந்தஸ்தையும் கொடுத்தது. அதுவரை சட்டசபை தலைமை ஆளுநர்

ஆட்சி அவை (Executive Council) யின் வாலாகவே ஒட்டிக் கொண்டிருந்தது!"

8. 5 ஆண்டுகளுக்குப் பிறகு (186) அலகாபாத் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

9. இந்தியாவில் முதன் முதலாக வருமான வரி விதிக்கப்படுவதற்கு

ஜேம்ஸ் வில்சனும், சாமுவேல் லேங்கும் காரணமாவர்!

10. H.S. Cunningham, Earl Canning, 1891, p. 153.


11. வதாபிகள் இல்லாமிய அடிப்படைவாதிகள் (Islamic Fundamentalists)

தூய்மையான துவக்க கால இஸ்லாமைக் கடைபிடிக்க வேண்டும்

கொள்கையைக் கொண்டவர்கள், முகமது வகாபின் (Muhammad ibn Abd al-

wahhab, 1703-1792) தலைமையின்கீழ் வகாபி இயக்கம் துவக்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் செல்வாக்கு பெற்றது. வதாபித் தீவிரவாதிகள்

சன்னி முஸ்லீம்களை விரோதிகளாகக் கருதி கொன்றனர். வதாபி

இயக்கம் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான ஊற்றுக்கண்ணாகும்.


12. R.Sathianathaier, op.cit., p.415.
13. D. Pal, Administration of Sir John Lawrance, 1952, pp. 171-73.
14. அதற்குக் காரணம் அமெரிக்க உள்நாட்டுப் போரால் (1861-65) இந்தியப்

யருத்தியின் தேவை பன் மடங்கு உயர்ந்ததுதான்.

15. C. Aitchison, Lord Lawrance, 1892, p.16.


16. R. Sathianathier, op. cit., pp. 418-19.
17. வண்டனில் கிழக்கிந்திய கம்பெனி கல்லூரி விடுதிக்கும், பாயல்

கல்லூரி விடுதிக்கும் வாரன்றின் பெயர் சூட்டப்பட்டது. அதே போன்று

இந்தியாவில் டார்ஜிலிங் புளித பால் விடுதிக்கும் இவர் பெயர்

வைக்கப்பட்டது. சுப்ரின்காரன்சுக்கு எழுப்பப்பட்ட சிலையில் ஒரு

கையில் பேனாவும், மற்றொரு கையில் வாகும் உள்ளள! லண்டனில்

உள்ள வாட்டர்லூ வளாகத்தில் லாரன்சின் சிலை உள்ளது. R.B. Smith, Life of

Lord Litwrence, 2 Volms, London, 1883


18. அவற்றுள் முக்கியமானவை: 1) பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் தன்னை

அமீராக அங்கீகரித்து அவரது மூத்த மகனுக்கு பதில் இளைய மகனை

வாரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 2) தேவைப்படும் போது ராணுவ

உதவி செய்ய வேண்டும். 3) ஆண்டுதோறும் உதவித்தொகை கொடுக்க

வேண்டும்.

19. R. Sathinathiser, op. cit., p. 420


20. W.W. Hunter, The Earl of Mayo, 1891, p. 96.
21. ஷெர் அலி என்ற ஆப்கானியன் கொலைக் குற்றத்துக்காக

நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டான் (1069)

செய்யாத குற்றத்துக்கு சிறைப்பட்டதாகக் கருதிய அந்தக் கொலையாளி

ஒரு ஆங்கில உயர் அதிகாரியைக் கொலை செய்து பழி தீர்த்தும்

கொள்ளத் தீர்மானித்தார். அத்தீர்மானத்தின் விலையே அவன்


மேயோவைக் கொலை செய்ததாகும்! விசாரனைாயின் போது கொலை

செய்ததை ஷெர் அலி தன்னைக் ‘குற்றவாளியல்ல’ என்று

வாதாடினான்! ஷேர் அலி தூக்கிலிடப்பட்டான். W.W. Hunter, op. cit., p. 199.

22. செயிஸ்தான் கமிஷன் ஆப்கானிஸ்தானத்துக்கும்,

பர்சியாவுக்குமிடையேயான எல்லைப் பிரச்னை பற்றி விசாரித்து அதன்

அறிக்கையைப் பர்சியாவுக்குச் சாதகமாகப் பரிந்துரைத்தது!

23. PE. Roberts, History of British India, 1952, p. 428.


24. நார்த் புரூக்கின் கொள்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்

கொண்டிருந்தால் இரண்டாம் ஆப்கானியப் போரைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் அப்போது இந்தியச் செயலராக இருந்த ஆர்கில் பிரபு (Duke of

Argyll) அதை நிராகரித்து விட்டார்! பதவியைத் துறந்து இங்கிலாந்து

சென்ற நார்த்புரூக்கிற்கு பிரபுப் பட்டம் (Vicount Baring, Earl of Northbrook)

வழங்கப்பட்டது. பிரதமர் கிளாட்ஸ்டனின் இரண்டாவது

அமைச்சரவையில் நார்த் புரூக்கிற்கு உயர் பதவி (First Lord of the Admiralty)

அளிக்கப்பட்டது. அவர் எகிப்துக்குச் சிறப்புக் கமிஷனராக

அனுப்பப்பட்டார் (1884), பின்னர் அவர் ராயல் ஆசியக் கழகத்தின் (Royal

Asiatic Society) தலைவராகப் பணியாற்றினார் (1890-93). ஏற்ற இரக்கங்களைச்

சந்தித்த நார்த்புரூக் 1904 நவம்பர் 15 ஆம் தேதி உயிர் நீத்தார்.

25. அவர் ஒரு கொடுங்கோலர், நடத்தைக் கேடுடையவர், பெண்களைக்

கொடுமைப்படுத்தினார், நிர்வாகச் சீரழிவுக்குக் காரணமாக இருந்தார்

போன்ற குற்றச்சாட்டுகள்.

26. வேல்ஸ் இளவரசர்தான் பின்னர் பிரிட்டனின் ஏழாம் எட்வர்டு (Edward VII)

ஆனார்.
27. Percival Spear, A History of India, Vol. II, Middlesex, England, 1965, p. 154. எலிசபெத்தை

மணந்த நார்த்புரூக் (1848) மனைவி இறந்தபின் (1867) பிரம்மச்சரியாகவே

இருந்தார்! இவருடைய மகள் வழிப் பேத்தி டெல்லியைச் சேர்ந்த ராஜா

லால் மாலா என்ற இந்தியரைத் திருமணம் செய்து கொண்டார்! 1904

நவம்பர் மாதம் தனது 78 வது வயதில் ஹாம்ஷெயரில் ஸ்நாட்டன்

பூங்காவில் இறந்த நார்த்புரூக்கிற்கு கிழக்கு ஸ்ராட்டனில் நினைவுச்

சின்னம் எழுப்பப்பட்டது. அப்போதய பஞ்சாபில் முல்தான் நகரின்

மையப் பகுதியில் நார்த்புரூக் பெயரில் மணிக்கூண்டு (Clock Tower)

கட்டப்பட்டது.

28. ஷெர் அலி ஆங்கிலேயர் பக்கம் இருந்தாலும் அவர் ஆட்சி செய்வதற்கு

அருகதையற்றவர் என்று கருதி பதவி நீக்கம் செய்யப்பட்டு

இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது மாமனாரும் ரஷ்யாவின்

ஆதரவில் சாமர்கண்டில் அகதியாக இருந்தவருமான அப்துல்

ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது! ஆனால் பேச்சுவார்த்தை

முடியும் முன்பே பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிளாட்ஸ்டன்

மீண்டும் பிரதமரானார். புதிய அரசு ஆப்கானியக் கொள்கையை

அடியோடு மாற்றியது. காந்தமக் உடன்படிக்கை மாற்றப்பட்டது.

அவ்வுடன்படிக்கை மூலம் கொடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து

ஆங்கிலப்படை வெளியேற அரசு முடிவு செய்தது. தலையிடாக்

கொள்கை மீட்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அம்மாற்றத்தைச்

செய்வதற்காக ரிப்பன் வைசிராயாக நியமிக்கப்பட்டார்.

29. 29. R. Sathianathaier, op. cit., p. 428. அடிப்படையில் 1883 ஆம் ஆண்டு

பஞ்ச்சட்டத் தொகுப்பு தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

(Famine Code)
30. Perceival Spear, op. cit., p. 154, 1896-97, 1899-1900 ஆண்டுகளில் ஏற்பட்ட

பஞ்சங்களைப் போக்குவதற்காகப் பஞ்சக் கமீன் பரிந்துரைத்த

திட்டங்களே பின்பற்றப்பட்டன. ஆர்.சி.மஜூம்தார், பக். 336.

31. வாரப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்ட இந்து வார இதழ் 1800 ஆம்

ஆண்டிலிருந்து தினத்தாளாக வரத் துவங்கியது. 1878 தாய்மொழி

பத்திரிகைச் சட்டம் மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு பத்திரிகைகளைக்

கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு அதிகாரங்களைத் கொடுத்தது. அவர்கள்

அரசாங்கத்துக்கு எதிராக எதையும் எரு என்று பத்திரிகைகளிடமிருந்து

வாக்குறுதி பெறலாம்; பத்திரிகையை வெளியிடுவோரிடமிருந்து

பாதுகாப்பு முன்தொகை பெறலாம்; சட்ட விதிகளை மீறும்

பத்திரிகையின் முன்தொகையைப் பறிமுதல் செய் இக்கடுமையான

சட்டம் (Draconian Act) மக்களுக்குக் குரல் கொடுக்கும் பத்திரிகை

சுதந்திரத்தின் குரல் வளையை நெறித்துவிட்டது.

32. இந்தியப் பேரரசின் பட்ட வரிசை (Order of the Indian Empire) பண்பை (Chivalry)

அங்கீகரிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. இந்த வரிசையில் 3

வகுப்பினார் இடம் பெற்றிருந்தனர் : 1) பெரு நிலக்கிழார் பெருந்தலைவர்;

(Knight Grand Commander - GCIE) 3) பெருநிலக்கிழார் : (Knight Commander-KCIE) 3)

(Companion-CIE) இந்த பிரிட்டிஷ் பட்டமுறை இந்தியா விடுதலை

அடைந்தபின் விலக்கிக் கொள்ளப்பட்டது. கபூர்தலாவின் மகாராஜா

ஜகத்ஜித் சிங் பெருந்தலைவர் பட்டத்தைப் பெற்றார். தர்பங்கா

மகாராஜாதான் இப்பட்டத்தைக் கடைசியாகப் பெற்றவர்.

33. சட்டப்படியான அரசுப் பணி ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிய அரசுப்

பணி (Covenanted Civil Service)க்கு இணையாகக் கருதப்பட்டாலும்


அப்பணியிடங்களில் ஆறில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது

என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

34. R. Sathinathaier, op. cit., p. 429. லிட்டன் புகைபிடிப்பதைக் கண்ட

சிம்லாவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். Perceival Spear, op. cit., p. 154.

35. ஹுராத் ஷெர் அலியின் மகன் அயூப்கான் ஆட்சியின் கீழும், காந்தாரம்

ஷெர் அலிகாள் ஆட்சியின் கீழும் இருந்தன.

36. ஆர்.சி. மஜும்தார், பக்.297.

37. D.S. Kothart Commission Report on Education and National Development (1964-66), New Delhi,
1966, p.8.
38. PE. Roberts, History of British India under the Company and the Crown, Reprint, 1967, p. 463.
39. L. Wolf, Life of the First Marquies Ripon, Vol. II, 1921, p. 92.
40. G. Malley (Edu.), Modern India and the West: A study of the Interaction of their Girlisation,
Reprint, 1968, p. 633.
41. S. Maheswari, Local Government in India, Allahabad, 1971, p. 19.

42. R. Sathianathaler, op. cit., p. 432.

43. ரிப்பனின் உள்ளாட்சித் திட்டத்தின் விளைவாக இந்தியா முழுவதும்

தாலூக்கா மன்றங்களும், மாவட்ட மன்றங்களும் அமைக்கப்பட்டன.

இதாக்கப்புகளில் சொவதும் மன்றங்கள் தேர்ந்தெக்குக்கட்டன பிரதிநிதிகளே

உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் மக்கள் நல நில்லாகத்தில் பயிற்சி

பெற்றனர். இவர்களே பின்னர் மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களில்

மக்களாட்சி நடைமுறைப்படுவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று ரிப்பன்

கருதினார். மக்களாட்சியின் அடிப்படைக் மக்கள் உணர்வதே அவருக்குக்

கிடைத்த வெற்றி என்று கருதினார். இந்திய மக்களாட்சி பற்றிய ரிப்பனின்

தொலைநோக்கு வியப்புக்குரியது.

44. R. Sathinathier, op. cit., p. 433.


45. ஆர்.சி. மஜும்தார், பக். 365-66.

46. Perceival Spear, op. cit., p. 169.

47. A. Seal, The Emergence of Indian Nationalism: Competition and Collaboration in the late
Nineteenth Century, Cambridge, 1968.

48. N. Goradia, Lord Curzon, The Last of the British Moguls, Delhi, 1993, p. 249.

49. குறள், 963

50. குறள், 121

51. Perceival Spear, op. cit., p.156

52. R. Sathianathaier, op. cit., p. 433

You might also like