You are on page 1of 18

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


nrhg»UJ, I¥gá - 30 ÉahH‹ 16.11.2023 ky® - 4, ïjœ - 212

வனவாசி பெருமித தினம்: பிர்சா முண்டா பிறந்த நாளில்


குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை
வனவாசி சமூக சுதந்திரப்
ப�ோராட்ட வீரர் பிர்சா முண்டாவின்
பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசுத்
தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு
துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,
பிரதமர் நரேந்திர ம�ோடி, மக்களவை
சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர்
அவரது உருவப்படத்துக்கு மலர் vijayabharatham.org
தூவி மரியாதை செலுத்தினர். வனவாசி சமூகத்தைச் சேர்ந்த
சுதந்திரப் ப�ோராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள்
வனவாசி பெருமித தினமாக இன்று க�ொண்டாடப்படுகிறது. இந்த
தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில்
உள்ள பிர்சா முண்டாவின் உருவச் சிலைக்கும், அதன் அருகில்
வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கும் குடியரசுத்
தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப்
தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்
மீனாட்சி லேகி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, அங்கு நடைபெற்ற வனவாசி மக்களின்
பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து
க�ொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வனவாசி மக்கள்
கலந்து க�ொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
மீனாட்சி லேகி, வனவாசி பெருமித தினம் மத்திய அரசு சார்பில்
க�ொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டத்தில்
வனவாசி மக்கள் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.
அவர்களின் பங்களிப்பு ஒவ்வொருவரையும் பெருமை க�ொள்ளச்
செய்கிறது. வனவாசி மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய
அருசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என
தெரிவித்தார். பிர்சா முண்டாவின் பிறந்த இடமான ஜார்க்கண்ட்
மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டுவில் உள்ள
அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர ம�ோடி நேரில் மலர்
தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அந்த கிராமத்தில்
நிறுவப்பட்டுள்ள மிகப் பெரிய பிர்சா முண்டாவின் சிலைக்கு
பிரதமர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, குந்தியில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர்
ம�ோடி பார்வையிட்டார்.

மண்டல பூஜையைய�ொட்டி சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்


சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையைய�ொட்டி
நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு
போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன்
தெரிவித்துள்ளார். இது த�ொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில்

1
மிகவும் பிரசித்திபெற்ற
சபரிமலையில் உள்ள ஐயப்பன்
கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும்
மண்டல பூஜை மற்றும் மகர
விளக்கு ஆகிய திருவிழாக்கள்
நடைபெறுவது வழக்கம். இதற்கு
தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள்
vijayabharatham.org
சென்று வர ஏதுவாக முக்கிய
நகரங்களிலிருந்து அரசு விரைவுப் ப�ோக்குவரத்துக் கழகம்
சார்பில் ஆண்டுத�ோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு
வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டும் நாளை (நவ.16) முதல் ஜன.16-
ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி,
கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன
ச�ொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா
இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள்
இயக்கப்படவுள்ளன.
சபரிமலை தேவஸ்தான அறிவிப்பின்படி, டிச.27 முதல் 30-ம்
தேதி மாலை 5 மணி வரை க�ோயில் நடை சாத்தப்படுவதால்,
டிச.26 முதல் 29-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட
மாட்டாது. குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை
அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். சிறப்புப்
பேருந்துகளை www.tnstc.in என்னும் இணையதளம் மற்றும்
TNSTC செயலி வாயிலாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு
செய்து க�ொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,
விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463
மற்றும் 94450 14416 ஆகிய எண்களைத் த�ொடர்பு க�ொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“கூட்டுறவு சங்கப் பணியிடங்களை வேலைவாய்ப்பு


அலுவலகம் மூலம் நிரப்புக” –--அண்ணாமலை வலியுறுத்தல்
"தமிழகத்தில் கூட்டுறவு
துறையின் கீழ் இயங்கி வரும்
கூட்டுறவு சங்கங்களில் 2,257
உதவியாளர் மற்றும் இளநிலை
உதவியாளர் காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியாகி உள்ளது. இன்றைய
நாளிதழில், அரசு வேலைவாய்ப்பு vijayabharatham.org
அலுவலகத்தில் சுமார் 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து
காத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
அவர்களிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல்,
எதற்காக கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கு நேரடி
விண்ணப்பம் க�ோரப்படுகிறது?
கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடந்து அவர்களின்
கண்காணிப்பில்தான் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும்.
ஆனால், கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தாமல்,
அவசர அவசரமாக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம்
க�ோருகின்றனர். அரசுப் பணியிடங்களை நிரப்ப லஞ்சம்
வாங்கியதால்தான் திமுகவின் ஒரு அமைச்சரே சிறையில்
இருக்கிறார். மீண்டும் அதுப�ோல மிகப் பெரிய அளவில்
2
முறைகேடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளத�ோ என்ற சந்தேகம்
எழுகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும்போது,
அவர்களைப் புறக்கணித்து, அரசுப் பணிகளை தங்களுக்கு
வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முயற்சிப்பதை, திமுக
நிறுத்திக்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கான
தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான இளைஞர்களுக்கு
இந்தப் பணிகளில் முன்னுரிமை க�ொடுக்க வேண்டும்
என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என
தெரிவித்துள்ளார்.

மது வாயிலாக அரசுக்கே திரும்ப வரும் மகளிர் உரிமை த�ொகை


தமிழகத்தில் தீபாவளி நாளில்
நடந்த சாலை விபத்துகள்,
க�ொலைகளில், 20 பேர்
உயிரிழந்துள்ளனர். இதற்கு மது
மற்றும் கஞ்சா ப�ோதை தான் காரணம்
என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர்
vijayabharatham.org 10, 11, 12 தேதிகளில் தமிழகத்தில்,
633 க�ோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது,
மகளிர் உரிமைத் த�ொகை திட்டத்தில் வழங்கப்பட்ட, 1,138
க�ோடி ரூபாயில் பாதியாகும்.
மகளிர் உரிமைத் த�ொகையில் பெரும் பகுதி, மது வணிகம்
என்ற பெயரில், அரசுக்கே திரும்ப வரும் அவலம் நடந்து
க�ொண்டிருக்கிறது. இந்நிலை நீடிக்கும் வரை தமிழக மக்களுக்கு
எந்த விடியலும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: அமைச்சர்


மழைக்கு முன்பே அனைத்து
மாவட்டங்களிலும் நிவாரண
முகாம்கள் ஏற்படுத்த, முதல்வர்
உத்தரவிட்டார். அதன்படி
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடல�ோர மாவட்டங்களில், 121
பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள்,
4964 நிவாரண முகாம்கள் vijayabharatham.org
தயார் நிலையில் உள்ளன. இதுவரை முகாமில் யாரும்
தங்க வைக்கப்படவில்லை. கண்காணிப்பு அலுவலர்கள்
மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மனித உயிர்
சேதம், கால்நடை உயிர் சேதம் தவிர்க்கப்பட வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை அதிகம் இருக்கும் எனக்கருதப்படும், 27
மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து தண்ணீர்
திறக்கப்படுவதற்கு முன்பு, கரைய�ோரப் பகுதிகளில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ப�ொதுமக்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படுகிறது.
வைகை அணை திறப்பு குறித்து, 80,000 பேருக்கு எஸ்.எம்.
எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. மழையால் சாலை துண்டிப்பு,
3
ப�ோக்குவரத்து பாதிப்பு ப�ோன்ற பிரச்னை இல்லை. ஒவ்வொரு
துறையும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பூண்டி ஏரியில் 60; செங்குன்றம் ஏரியில் 82; செம்பரம்பாக்கம்
ஏரியில் 85 சதவீதம் தண்ணீர் உள்ளது. த�ொடர்ந்து நீர் நிலைகள்
கண்காணிக்கப்படுகின்றன. சாத்தனுார், பேச்சிப்பாறை,
கிருஷ்ணகிரி அணைகள் 90 சதவீதம் வரை நிரம்பி உள்ளன.
கையை மீறி ப�ோகும் அளவுக்கு எதுவும் இல்லை. உள்ளாட்சி
நிர்வாகம், வருவாய் துறை அலுவலர்கள் தயார் நிலையில்
உள்ளனர். சென்னையில் 169 நிவாரண முகாம்கள், 210
பம்புகள் தயார் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதைகள்
கண்காணிக்கப்படுகின்றன.
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 150 பேர், மாநில பேரிடர்
மீட்பு படை வீரர்கள் 400 பேர் தயாராக உள்ளனர். அரசு மழையை
எதிர்கொள்ள, 100 சதவீதம் தயாராக உள்ளது.
கனமழை எச்சரிக்கையை த�ொடர்ந்து, 27 மாவட்ட
கலெக்டர்களுக்கு, வருவாய் துறை நிர்வாக ஆணையர் பிரபாகர்
கடிதம் எழுதி உள்ளார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ தரவரிசையில் குஜராத்தின் சூரத்


முதலிடம்: தமிழகத்தின் மதுரை 8-வது இடம்
திட்டங்கள் நிறைவு மற்றும்
நிதிப் பயன்பாடு த�ொடர்பான
‘ஸ்மார்ட் சிட்டி’ தரவரிசையில்
குஜராத்தின் சூரத் முதலிடத்தில்
உள்ளது. தமிழகத்தின் மதுரை
8-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவின் 100 நகரங்களில்
vijayabharatham.org உள்கட்டமைப்பை மேம்படுத்தி,
ப�ொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் மத்திய அரசால் கடந்த 2015-ல்
க�ொண்டுவரப்பட்டது.
2016 ஜனவரி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை பல்வேறு
சுற்று ப�ோட்டியின் மூலம் 100 நகரங்கள் இத்திட்டத்துக்கு தேர்வு
செய்யப்பட்டன. இந்த நகரங்கள் தங்களின் அனைத்து வளர்ச்சித்
திட்டங்களையும் 5 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என
மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கடந்த மே மாதம், இந்த நகரங்கள்
தங்கள் திட்டப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை
2024 ஜூன் வரை மத்திய அரசு நீட்டித்தது.
இந்த காலக்கெடு நெருங்கிவரும் நிலையில் திட்டங்கள்
நிறைவு, நிதிப் பயன்பாடு மற்றும்பிற அளவுக�ோல்கள்
அடிப்படையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களின் தரவரிசை
வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 நகரங்கள் பட்டியலில்
குஜராத் மாநிலத்தின் சூரத் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து
ஆக்ரா (உ.பி), அகமதாபாத் (குஜராத்), வாரணாசி (உ.பி), ப�ோபால்
(ம.பி), ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
துமக்குரு (கர்நாடகா), உதய்பூர் (ராஜஸ்தான்), மதுரை
(தமிழ்நாடு), க�ோட்டா (ராஜஸ்தான்), சிவம�ோகா (கர்நாடகா)
ஆகியவை முதல் 10 நகரங்கள் பட்டியலில் உள்ள மற்ற
நகரங்கள் ஆகும். இதற்கு மாறாக யூனியன் பிரதேசங்கள் மற்றும்
வடகிழக்கு மாநில நகரங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
4
இதற்குமுன் இல்லாத அளவில் பாஜக மீது
மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு: பிரதமர் ம�ோடி
மத்திய பிரதேசத்தில்
நாளைமறுநாள் (நவ.17-
ல்) சட்டப்பேரவை தேர்தல்
நடைபெறுகிறது. இதற்கான தேர்தல்
பிரச்சாரம் இன்றுடன் நிறைவு
பெறுகிறது. இந்நிலையில் மத்திய
பிரதேசமாநிலத்தின் பெதுல்
மாவட்டத்தில் தனது இறுதிகட்ட vijayabharatham.org
பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர ம�ோடி நேற்று மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மக்களிடையே பாஜக மீதான
நம்பிக்கையும், அன்பும் இதற்கு முன் இல்லாத அளவில்
அதிகரித்துள்ளதை நான் பார்க்கிறேன்.
த�ோல்வியை ஒப்புக்கொண்ட காங். தேர்தலை முன்னிட்டு
தனது த�ோல்வியை காங்கிரஸ் ஒப்புக் க�ொண்டுள்ளது. ம�ோடியின்
வாக்குறுதிக்கு முன், தனது ப�ொய் வாக்குறுதிகள் எடுபடாது என
காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். தேர்தல் தேதி நெருங்குவதால்,
காங்கிரஸின் ப�ொய்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றன.
த�ோல்வியை ஒப்புக் க�ொண்டகாங்கிரஸ், தற்போது
அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் வீட்டில் அமர்ந்துள்ளனர்.
வெளியே செல்லக்கூட அவர்களுக்கு விருப்பம் இல்லை.
மக்களிடம் என்ன ச�ொல்வது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு
தெரியவில்லை. நரேந்திர ம�ோடியின் வாக்குறுதி களுக்கு முன்பு,
தங்களது ப�ொய் வாக்குறுதிகள் நிற்காது என்பதை காங்கிரஸ்
ஏற்றுக் க�ொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்
செய்த ஊழலையும், க�ொள்ளையையும், தடுப்பதற்காக இந்த
தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆட்சி எங்கு வருகிறத�ோ,
அங்கெல்லாம் அழிவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
செல்போன் உற்பத்தியில், உலகளவில் இரண்டாவது பெரிய
நாடாக இந்தியா உள்ளது. இவ்வாறு பிரதமர் ம�ோடி பேசினார்.

திருமண பந்தத்தை மீறிய உறவை குற்றமாக அறிவிக்க


வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை
இந்திய தண்டனை சட்டம்,
பிரிவு 497-ன்படி, ஒருவர் திருமண
பந்தத்தை மீறி வேறு ஒருவரின்
மனைவியுடன் பாலியல் உறவு
வைத்துக் க�ொள்வது குற்றமாகக்
கருதப்பட்டது. இதை எதிர்த்து
கேரளாவின் ஜ�ோசப் ஷைன் என்பவர்
vijayabharatham.org உச்ச நீதிமன்றத்தில் த�ொடர்ந்த
வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
“பெண்களின் சுதந்திரம், அடிப்படை உரிமையில் இந்த
சட்டப்பிரிவு தலையிடுகிறது. கணவர் என்பவர் பெண்களின்
எஜமானர் கிடையாது. எனவே இந்திய தண்டனை சட்டம் பிரிவு
497 ரத்து செய்யப்படுகிறது. திருமண பந்தத்தை மீறிய உறவு
குற்றமல்ல" என்று 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
5
இந்த சூழலில் இந்திய குற்றவியல் சட்டத்துக்கு (ஐபிசி) பதிலாக
பாரதிய நியாய சன்ஹிதா 2023, இந்திய குற்றவியல் நடைமுறை
சட்டத்துக்கு (சிஆர்பிசி) பதிலாக பாரதிய நாகரீக் சுரக் ஷா 2023,
இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு (ஐஇசி) பதிலாக பாரதிய சாக்
ஷியா 2023 ஆகிய 3 புதிய மச�ோதாக்களை மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்தார்.
பாகுபாடு கூடாது: புதிய மச�ோதாக்கள் த�ொடர்பாக
நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த
குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், "திருமண பந்தத்தை மீறிய உறவை குற்றமாக்க வகை
செய்யும் சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைக்கு க�ொண்டு
வர வேண்டும். திருமண பந்தத்தை மீறும் விவகாரங்களில்
ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி தண்டனை வழங்கப்பட
வேண்டும்’’ என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: எஸ்கேப் டனல்


அமைக்க திட்டம்: ௪-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்
உத்தராகண்ட் சுரங்க விபத்தில்
சிக்கியுள்ள 40 த�ொழிலாளர்களை
மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக
இன்றும் த�ொடர்ந்து நடைபெற்று
வருகின்றன. அதேசமயம், உள்ளே
சிக்கியுள்ள த�ொழிலாளர்கள்
சுவாசிக்க வசதியாக குழாய்
மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு vijayabharatham.org
வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும்
விநிய�ோகம் செய்யப்பட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது
சுரங்கம் இடிந்து விழுந்ததில், 40 த�ொழிலாளர்கள் சிக்கி
தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர்
மீட்பு படையினர் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின்
எதிர�ொலியாக, உத்தரகாண்ட் அரசு விபத்து குறித்து விசாரணை
நடத்த 6 பேர் க�ொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த
நிலையில், சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண்
சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, உத்தராகண்ட்
அரசு அமைத்த குழுவில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்து
விசாரணையைத் த�ொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மீட்புப் பணிகள் குறித்து உத்தர்காசி
மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ர�ோஹில்லா (Abhishek Rohilla)
கூறுகையில், “மீட்புப் பணிகள் த�ொடர்ந்து நடைபெற்று
வருகிறது. குழாய் மூலம் பாதுகாப்பு பாதை அல்லது சிறிய
சுரங்கப்பாதை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அதற்கு தேவையான ப�ொருட்கள் வந்துள்ளன.
அவர்களுக்கான பிளாட்ஃபார்ம் தயாரிக்கப்படுகிறது.
அதன்பிறகு எஸ்கேப் டனல் (escape tunnel) அமைக்கும்
பணியும் த�ொடங்கப்படும். அனைவரும் பாதுகாப்பாக
இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உணவு மற்றும்
தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் த�ொடர்
த�ொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக என்எச்ஐடிசிஎல் அதிகாரிகள்
கூறுகின்றனர்” என்றார். மீட்புப் பணிக்கு இன்னும் இரண்டு
6
நாட்கள் ஆகலாம். இதுவரை, உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உத்தரகாசியில் இருந்து யமுன�ோத்ரி செல்ல
106 கி.மீ. த�ொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. புதிய
சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட பிறகு இரு பகுதிகளுக்கு
இடையிலான த�ொலைவு 26 கி.மீ. ஆக குறையும். ம�ொத்தம்
4.5 கி.மீ. த�ொலைவு க�ொண்ட சுரங்கப்பாதையில் இதுவரை
200 மீட்டர் த�ொலைவுக்கு சுரங்கம் த�ோண்டப்பட்டு உள்ளது.
இரவு, பகலாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த
நிலையில்,கடந்த 12-ம் தேதி தீபாவளிஅன்று அதிகாலை 4 மணி
அளவில்சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் 40 த�ொழிலாளர்கள் சிக்கிக் க�ொண்டனர். உடனடியாக
தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய
- திபெத் எல்லை பாதுகாப்பு படை, எல்லை சாலை அமைப்பு,
தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த மீட்பு படை வீரர்கள்
விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாலுவுக்காக நிலத்தை அபகரித்த நண்பர்


ரயில்வே வேலைக்கு நிலத்தை
லஞ்சமாக பெற்ற வழக்கில் கைது
செய்யப்பட்டுள்ள லாலு பிரசாத்
யாதவின் நெருங்கிய கூட்டாளி
அமித் கத்யால், லாலு குடும்பம்
சார்பில் ஏராள மான�ோரிடம் இருந்து
நிலங்களை அபகரித்துள்ளது,
vijayabharatham.org அமலாக்கத் துறை விசாரணையில்
தெரிய வந்துள்ளது. மத்தியில், 2004 - 2009 வரை ஆட்சியில்
இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார்
முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே
அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி,
பலரிடமிருந்து நிலத்தை அவர் லஞ்சமாக பெற்றதாக புகார்
எழுந்தது. இது குறித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை
ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றன. இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விர�ோத பணப்
பரிமாற்றம் த�ொடர்பாக, பீஹாரின் பாட்னாவில் உள்ள லாலு
பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, பீஹார் துணை முதல்வர்
தேஜஸ்வி உள்ளிட்டோர் வீடுகளில், கடந்த மார்ச் மாதத்தில்
அமலாக்கத் துறை அதிகாரிகள் ச�ோதனை நடத்தினர்.
மேலும், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளி அமித்
கத்யால் என்பவர் வீட்டிலும் ச�ோதனை நடத்தப்பட்டது. இந்த
வழக்கில், கடந்த 11ம் தேதி அமித் கத்யாலை கைது செய்த
அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை காவலில் எடுத்து
விசாரித்து வருகின்றனர். இது குறித்து, அமலாக்கத்துறை
அதிகாரிகள் கூறியதாவது:
'ஏ.கே.இன்போசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற
நிறுவனத்தின் இயக்குனராக அமித் கத்யால் இருந்துள்ளார்.
இந்நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி, புதுடில்லியில்
உள்ள லாலு பிரசாத் வீட்டின் முகவரியாகும். ரயில்வே
அமைச்சராக லாலு பிரசாத் இருந்த ப�ோது, நிறுவனத்துக்கு
7
நிறைய சலுகைகளை வழங்கியதால், ரயில்வே வேலைக்கு
விண்ணப்பித்தவர்களிடம் இருந்து, அமித் கத்யால் நிலங்களை
கையகப்படுத்தி உள்ளார்.
இதற்காக அவர், 2014ல் நிறுவனத்தின் பங்குகளை
லாலு பிரசாத் குடும்பத்துக்கு மாற்றி உள்ளார். இது ப�ோல்,
பலரிடமிருந்து அமித் கத்யால் முறைகேடாக நிலங்களை
கையகப்படுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தென்னை நார் த�ொழிலை ஊக்குவிக்க


ஆறு இடங்களில் கயிறு குழும வசதி மையம்
தென்னை நார் சார்ந்த
த�ொழிலில் ஈடுபட்டுள்ள சிறு
நிறுவனங்களுக்கு உதவ, திருப்பூர்,
கரூர் உட்பட ஆறு இடங்களில்,
கயிறு குழும ப�ொது வசதி மையம்
அமைக்கும் பணிகளை தமிழக
அரசு துவக்கியுள்ளது. தேங்காய்
மட்டையில் இருந்து தென்னை vijayabharatham.org
நார் பிரித்து எடுக்கப்படுகிறது. அதிலிருந்து பல்வேறு மதிப்பு
கூட்டப்பட்ட ப�ொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர,
தென்னை நார் பிரித்தெடுக்கும் ப�ோது கிடைக்கும் தென்னை
நார் துகளை பயன்படுத்தி, வீடு உள்ளிட்ட கட்டடங்களில்
மாடித் த�ோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.
அதன் வாயிலாகவே அமெரிக்கா, நெதர்லாந்து ப�ோன்ற
நாடுகளில் காய்கறி, பழங்கள் ப�ோன்றவை அதிகளவில்
விளைவிக்கப்படுகின்றன. இதனால், பல நாடுகளில் தென்னை
நார் துகளுக்கு அதிக தேவை உள்ளது. தமிழக அரசின் சிறு,
குறு, நடுத்தர த�ொழில் துறையின் கீழ், தமிழக கயிறு வணிக
மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை
அலுவலகம், க�ோவை மாவட்டத்தில் உள்ளது.
இந்நிறுவனம், தமிழகத்தில் தென்னை நார் த�ொழிலை
மேம்படுத்தவும், தென்னை நார் மற்றும் துகள் கட்டி ப�ோன்ற
மதிப்பு கூட்டப்பட்ட ப�ொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும்
உதவி செய்கிறது. தற்போது, தென்னை நார் சார்ந்த த�ொழிலில்
ஈடுபட்டுள்ள த�ொழில் நிறுவனங்களுக்கு உதவவும்,
ஊக்குவிக்கவும், திருப்பூர், க�ோவை, தஞ்சை, கரூர் ஆகிய
இடங்களில் ஐந்து கயிறு த�ொழில் குழும ப�ொது வசதி மையம்
அமைக்கும் பணிகளை அரசு துவக்கியுள்ளது. இதை த�ொடர்ந்து,
விருதுநகரிலும் கயிறு குழுமம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சிறு த�ொழில் துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: இந்தியாவில் தென்னை நார், தென்னை துகள் கட்டி
உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கயிறு உற்பத்தி
த�ொழிலில் விவசாயிகள் மற்றும் த�ொழில் முனைவ�ோர்களின்
வருமானத்தை பெருக்கிட, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால்,
இந்த த�ொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு சிறிய நிறுவனத்தால்,
அதிக முதலீட்டில் பெரிய இயந்திர தளவாடங்களை நிறுவுவது
என்பது சிரமம். எனவே, தமிழக அரசின் சார்பில், தற்போது
ஐந்து இடங்களில் கயிறு த�ொழில் குழும ப�ொது வசதி மையம்
அமைக்கப்பட உள்ளது. அங்கு, தென்னை நார் சார்ந்த த�ொழிலில்
ஈடுபட்டுள்ள, 20 - 25 நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில்,
8
ப�ொது இயந்திர தளவாடங்கள் ப�ோன்றவை நிறுவப்படும்.
அதை, ஒவ்வொரு நிறுவனமும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி
க�ொள்ளலாம். இதற்கான ம�ொத்த செலவில், 75 சதவீதத்தை அரசு
மானியமாக வழங்கும்; மீதி, 25 சதவீதம் நிறுவனங்களின் பங்கு.
அவை, தங்களுக்குள் ஒரு ப�ொது நிறுவனத்தை ஏற்படுத்தி,
கயிறு குழுமத்தை நிர்வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

காசாவில் ஹமாஸ் நாடாளுமன்றத்தை


கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்
காசாவில் தரைவழியாக
முன்னேறும் இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் நாடாளுமன்ற
கட்டிடத்தை நேற்று கைப்பற்றியது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில்
உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள்,
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர்
vijayabharatham.org 7-ம் தேதி ராக்கெட் குண்டு வீச்சு
தாக்குதலை நடத்தினர். அதன்பின் தரைவழியாகவும், வான்
வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ்
தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் 1,200 பேரை கண்மூடித்தனமாக
சுட்டுக் க�ொன்றனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச்
சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில்
வான்வழித் தாக்குலில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு
மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் காசாவின் வட
பகுதியில் சுமார் 15 லட்சம் பேர் இடம் பெயர்ந்து
காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில்
தங்கியுள்ளனர்.
காசா எல்லையில் பீரங்கி வாகனங்களுடன் காத்திருந்த
இஸ்ரேல் ராணுவம், காசாவின் வட பகுதியில் கடந்த
மாதம் 27-ம் தேதி ஊடுருவியது. இஸ்ரேல் விமானப்படை
ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களில் குண்டு
மழை ப�ொழிய, இஸ்ரேல் தரைப்படை படிப்படியாக
முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை
கைப்பற்றி வந்தது.
காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ்
தீவிரவாதிகளையும் இஸ்ரேல் ராணுவத்தினர் வேட்டையாடினர்.
காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்-குத்
மருத்துவமனைக்கு வெளியே ராக்கெட் லாஞ்சர்களுடன்
பாதுகாப்பு பணியில் இருந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 24
பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் க�ொன்றனர். ஹமாஸ்
அமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் காமிஸ் தபாபாஸ்,
சீனியர் கமாண்டர் தஷின் மஸ்லாம் உட்பட ஹமாஸ் படையின்
முக்கிய அதிகாரிகள் அனைவரையும் இஸ்ரேல் ராணுவத்தினர்
சுட்டுக் க�ொன்றனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த
நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் ராணுவத்தினர்
கைப்பற்றி உள்ளே புகுந்தனர். காசாவின் வடபகுதியில்
ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து
முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்
வந்துவிட்டது.
9
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட
விவகாரம்: தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த முடிவு
சென்னை கிண்டி ஆளுநர்
மாளிகை முன்பு பெட்ரோல்
குண்டுகள் வீசப்பட்ட விவகாரம்
குறித்து தேசிய புலனாய்வு
முகமை (என்ஐஏ) அதிகாரிகள்
புதிதாகவிசாரணை நடத்த முடிவு
செய்துள்ளனர். இதுத�ொடர்பாக ரவுடி
கருக்கா வின�ோத் மீது வழக்கு பதிவு vijayabharatham.org
செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு
கடந்த அக்.25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள்
வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுத�ொடர்பாக
நந்தனம் எஸ்.எம். நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வின�ோத்
(42) மீது 5 பிரிவுகளில் கிண்டி ப�ோலீஸார் வழக்கு பதிவு
செய்தனர். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற
காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை
ப�ோலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
‘‘நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் தற்கொலை
செய்துக�ொள்வது த�ொடர்ந்து நடந்ததால் மன உளைச்சல்
அடைந்தேன். என் மகன் 6-ம் வகுப்பு படிக்கிறான். நீட் தேர்வு
இருந்தால் அவன் எப்படி டாக்டர் ஆவான். இதனால்தான்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முன்பு
பெட்ரோல் குண்டு வீசினேன்’’ என்று அவர் வாக்குமூலம்
அளித்ததாக ப�ோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழும்
நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பும்
ஏற்கெனவே அவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். தவிர, அவர்
மீது 14 குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், ஆளுநர்
மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால், இந்த வழக்கின்
முக்கியத்துவம் கருதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த
வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளது.
காவல் ஆணையரிடம் மனு: முன்னதாக, ஆளுநர் மாளிகை
தரப்பில், ‘பெட்ரோல் குண்டு வீசியவர் மீதுதேசிய பாதுகாப்பு
சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல்
குண்டுவீசப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்
என்பதை கண்டறிய வேண்டும்’ என்று சென்னை காவல்
ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், கருக்கா வின�ோத் மீது இந்தசட்டப் பிரிவுகளின்கீழ்
வழக்கு பதிவு செய்யாமல், முதலில் புகார் அளித்த கிண்டி
ப�ோலீஸாரின் புகார் மனுவை ஏற்று அதன்படி, வழக்கு
பதிவு செய்யப்பட்டது. இதைத் த�ொடர்ந்து, ப�ோலீஸாரின்
செயல்பாட்டை விமர்சித்து ஆளுநர் மாளிகையின்
அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், ‘தாங்களாகக�ொடுத்த
புகாரின் அடிப்படையில்காவல் துறை வழக்கு பதிவு
செய்துள்ளது. ஒரு தாக்குதலை சாதாரண நாசகார செயலாக
நீர்த்துப்போக செய்துள்ளனர். அவசர கதியில் கைது நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு, மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி,
குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால்
10
பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய
விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான
விசாரணை, த�ொடங்கும் முன்பேக�ொல்லப்படுகிறது’ என்று
கூறப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுக்கு டிஜிபி மறுப்பு: இந்த குற்றச்சாட்டுக்கு
டிஜிபி மறுப்பு தெரிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இதில்
ஈடுபட்டதாக ஆளுநர் மாளிகைதரப்பில் தெரிவிக்கப்பட்ட
குற்றச்சாட்டையும் மறுத்த டிஜிபி, ‘கருக்கா வின�ோத்
தனியாக வந்தே பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்’
என்று கூறி, அதற்கான வீடிய�ோ பதிவு காட்சிகளையும்
வெளியிட்டார். இந்த சூழலில்தான் தற்போது, இந்தவழக்கை
என்ஐஏ கையில் எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சக
அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த வழக்கில் புதிதாக
விசாரணையை த�ொடங்க என்ஐஏ திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது. மேலும், ரவுடி கருக்கா வின�ோத் மீது புதிதாக
வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதி


இலங்கை தலைநகர்
க�ொழும்பு அருகேநேற்று காலை
பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுக�ோலில் 6.2
புள்ளிகளாக பதிவானதால், மக்கள்
பீதியடைந்தனர். இலங்கையின்
தென்கிழக்கு பகுதியில் இந்தியப்
vijayabharatham.org பெருங்கடலில் கடலுக்கு அடியே 10
கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. க�ொழும்பில்
இருந்து தென் கிழக்கே 800 கி.மீ. த�ொலைவில் நிலநடுக்கம்
ஏற்பட்டிருந்ததாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
தலைநகர் க�ொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இந்த
நிலநடுக்கத்தின் தாக்கம் மிக கடுமையாக உணரப்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தநிலநடுக்கத்தால்
இலங்கைக்கு எந்தவிதபாதிப்பும் இல்லை என்றும், சேதம்
எதுவும்ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் சுனாமி
பேரலை எழலாம் என மக்கள் பீதியடைந்தனர். ஆனால்,
தற்போதைய நிலையில் எந்தவித ஆபத்தும் இல்லை என்று
புவியியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேப�ோல, சூடான், உகாண்டா எல்லை பகுதிகளிலும்
நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு 4.9 என்ற புள்ளிகள்
அளவில் ரிக்டர் அளவுக�ோலில் பதிவானது. கடலில் 8 கி.மீ.
ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை
ஐர�ோப்பிய மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள புவியியல்
ஆய்வு மையம் (இஎம்எஸ்சி) தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.
சங்கரய்யா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு
வயது 102. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த
தலைவரும், சுதந்திரப் ப�ோராட்ட வீரருமான என்.சங்கரய்யா
சென்னை குர�ோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார்.
11
அவருக்கு சளி த�ொந்தரவு,
காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன்
குறைவு ஏற்பட்டதால் சென்னை
அப்போல�ோ மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அவருக்கு
மருத்துவர்கள் சிகிச்சை அளித்து
வந்த நிலையில் சிகிச்சை
vijayabharatham.org
பலனின்றி அவரது உயிர் இன்று
(நவ.15) பிரிந்தது. முன்னதாக, கட்சியின் மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்
ஜி.ராமகிருஷ்ணன் ஆகிய�ோர் மருத்துவமனைக்கு சென்று
அவரை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை
த�ொடர்பாக கேட்டறிந்தனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன்
மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன்
உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்து
கவனித்து வந்தனர். ஆனால், சிகிச்சைக்கு அவர் உடல்
ஒத்துழைக்காமல் உயிர் பிரிந்தது. இந்நிலையில் அவரது மறைவு
அக்கட்சியினர் மத்தியில் பெரும் ச�ோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
* பள்ளிக் கல்வி முடிந்த பிறகு, மதுரை அமெரிக்கன்
கல்லூரியில் வரலாறு பாடத்தில் சேர்ந்தார். அங்கு
பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மன்றத்துக்கு ராஜாஜி,
சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட
பல தலைவர்களை அழைத்துவந்து பேச வைத்தார். மாணவப்
பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல
ப�ோராட்டங்களிலும் பங்கேற்றார்.
* சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன்
உள் ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலையாகி
வெளியே வந்த பிறகு, ப�ொதுவாழ்க்கைக்குத் தன்னை
முற்றிலுமாக அர்ப்பணித்துக் க�ொண்டார். நேதாஜி 1939-ல்
மதுரை வந்தப�ோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து,
அதில் நேதாஜியை உரையாட வைத்தார்.
* 1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ம�ொத்தம்
11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து
முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான உரைகளை ஆற்றியுள்ளார்,
* எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், கதராடையே அணிந்து
வருபவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து,
அவற்றில் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்ற பின்னரும்கூட,
கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆல�ோசனைகள் வழங்குவது
உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார்.

இரு நாட்கள் பெய்த த�ொடர் மழையால் பாகூர்


பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு
முதல் த�ொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான
இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட
ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
புதுச்சேரி நகரப் பகுதியைப் ப�ோலவே ஊரகப் பகுதிகளிலும்
12
நேற்று முன்தினம் இரவு முதல்
த�ொடர் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக பாகூர் சுற்று வட்டார
பகுதிகளில் நேற்று முன்தினம்
பிற்பகல் முதலே மழை பெய்யத்
த�ொடங்கியது. த�ொடர் மழையால்,
இப்பகுதியில் வாய்க்கால்கள் நிரம்பி,
vijayabharatham.org
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக சித்தேரி வாய்க்காலில் தண்ணீர் அதிகரிப்பால்,
சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விளை
நிலங்களுக்குள் புகுந்துள்ளது.
பாகூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் புதிதாக
நடவு செய்த நெற்பயிர்களில் அதிகளவு தண்ணீர் புகுந்துள்ளது.
கடலூர் - புதுச்சேரி சாலையில் குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர்
தேங்கியுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து
சென்று வருகின்றன. மேலும் புதிதாகப�ோடப்பட்ட இப்பகுதி
சாலையில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.
த�ொடர் மழையால் பாகூர் ஏரியின் க�ொள்ளளவு 2.80 மீட்டர் வரை
உயர்ந் துள்ளது. கன்னியக்கோயில் பகுதியில் அமைந்துள்ள
மணப்பட்டு தாங்கல் ஏரி முழு க�ொள்ளளவை எட்டி, கடந்த சில
தினங்களாக வழிந்த நிலையில், தற்போது தண்ணீர் வெளியேறி
வருகிறது. ப�ொதுப் பணித்துறை அளவீட்டின்படி, பாகூர்
பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை
8 மணி வரை 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
த�ொடர்ந்து மழை பொழிந்து வருவதால் அதிக அளவு விவசாய
நிலங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை
பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்,
அக்டோபர் 1-ம் தேதி முதல் நேற்று வரை பதிவான மழையின்
சராசரி அளவு 23 செ.மீ. இந்த காலக் கட்டத்தின் இயல்பான
அளவு 27 செ.மீ ஆகும். தற்போது பெய்துள்ள மழையும்
இயல்பை விட குறைவு தான். எனினும் இரு நாட்களில் பெய்த
தொடர் மழைப் பொழிவால் புதுச்சேரியில் பல பகுதிகளில்
தண்ணீர் தேங்கி நிற்கிறது.

5 ஆண்டுகளில் 13 க�ோடி இந்தியர்கள் வறுமையில்


இருந்து மீட்பு: பிரதமர் ம�ோடி பெருமிதம்
'கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும்
13 க�ோடி இந்தியர்கள் வறுமையில்
இருந்து மீட்கப்பட்டுள்ளனர்''
என ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி
மாவட்டத்தில் நடந்த பேரணியில்
பிரதமர் ம�ோடி பேசினார்.
அரசு விழாக்களில் பங்கேற்க
பிரதமர் ம�ோடி ஜார்க்கண்ட் vijayabharatham.org
சென்றுள்ளார். ராஞ்சியில் அமைந்துள்ள சுதந்திர ப�ோராட்ட
வீரர்கள் அருங்காட்சியகம் மற்றும் பிர்சா முண்டா நினைவு
அருங்காட்சியகத்தை ம�ோடி பார்வையிட்டார்.
இதையடுத்து பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், 15வது
தவணைத் த�ொகை 2000 ரூபாய் இன்று(நவ.,15) வரவு
வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர ம�ோடி
13
கலந்து க�ொண்டு 15வது தவணை த�ொகையை வெளியிட்டார்.
இதையடுத்து, குந்தி மாவட்டத்தில் நடந்த பேரணியில் பிரதமர்
ம�ோடி பேசியதாவது: இன்றைய நாள் நல்ல அதிர்ஷ்டம்
நிறைந்த நாளாகும். பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும்
சுதந்திரப் ப�ோராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும்
வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த
அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாக்கியம்
எனக்கு கிடைத்தது. பழங்குடியினரின் பெருமை தினத்தை
முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள்
ஆகியவை நாட்டின் 4 தூண்கள். இந்த நான்கு தூண்களும்
வளர்ச்சி அடையும் ப�ோது நாடு வளர்ச்சி அடையும். இன்று
நாம் ஜார்க்கண்ட் நிறுவன தினத்தை க�ொண்டாடுகிற�ோம். இது
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முயற்சியால் தான் நடந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 13 க�ோடி இந்தியர்கள்
வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட்
மாநிலத்திற்கு ரூ.50,000 க�ோடி மதிப்பிலான திட்டங்கள் பரிசாக
கிடைத்துள்ளது. விஸ்வகர்மா ய�ோஜனா திட்டத்தின் கீழ் 13,000
க�ோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ரூ. 15 ஆயிரம் க�ோடி
வரை கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி ப�ோடப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் ம�ோடி பேசினார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் ம�ோடி
வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு
அதிகாரம் வழங்குவது என்பது பாஜ.,வின் முன்னுரிமை. இது
தான் எங்கள் இலக்கு. 21ம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தை
வளர்ச்சி அடைந்ததாக மாற்ற பாஜ.,வால் தான் முடியும்.
காங்கிரசின் வாரிசு அரசியல், எதிர்மறை சிந்தனையால் ம.பி
மக்கள் க�ோபத்தில் உள்ளனர். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர்
ம�ோடி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில்


புதிய மாற்றங்கள்
சென்னை விமான நிலையத்தில்
புத்தம் புதிய மாற்றங்கள்
செய்யப்பட்டு, இன்று இன்று
(நவ.,15) முதல் செயல்பாட்டுக்கும்
க�ொண்டு வரப்பட்டுள்ளது.
உள்நாட்டு முனையம் 'டெர்மினல்
- 1, டெர்மினல் - 4' என, இரண்டு
vijayabharatham.org பிரிவுகளாக செயல்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த
சர்வதேச முனையத்தை, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில்,
2,467 க�ோடி ரூபாய் மதிப்பில், இரண்டு கட்டங்களாக கட்ட,
இந்திய விமான நிலைய ஆணையம், 2018ல் பணிகளை
துவங்கியது.
முதல் கட்ட பணி, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில்,
1,260 க�ோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் - 2 பிரிவை
கடந்த ஏப்., மாதம் பிரதமர் ம�ோடி திறந்து வைத்தார். ஏற்கனவே
சர்வதேச முனையமாக செயல்பட்ட, டெர்மினல் - 3, டெர்மினல் -
4 ஆகியவை முழுதுமாக மூடப்பட்டன. டெர்மினல் -3ஐ இடிக்கும்
14
பணி நடந்து வருகிறது. அந்தப் பணி முடிவடைந்ததும்,
இரண்டாம் கட்ட கட்டுமான பணி துவங்கும். பழைய சர்வதேச
முனையத்தின், டெர்மினல் - 4, நல்ல நிலையில் இருந்ததால்,
அதை இடிக்காமல், கூடுதல் உள்நாட்டு முனையமாக
பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு
செய்தது. அதை மாற்றி அமைக்கும் பணி முடிந்துள்ளது.
நேற்று டெர்மினல் - 4ல், ச�ோதனை அடிப்படையில்,
விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்தது.
இந்நிலையில் இன்று (நவ.,15) முதல் புதிய உள்நாட்டு
முனையமான டெர்மினல் - 4, முழு அளவில் செயல்பாட்டிற்கு
வந்தது.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் - 4 ல், ஏர்
இந்தியா, மற்றும் அதை சார்ந்த அலயன்ஸ் ஏர் விமானங்கள்
இயக்கப்படும் டெர்மினல் - 1ல், இண்டிக�ோ உள்ளிட்ட மற்ற
விமான நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும். சென்னை
உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் - 1, டெர்மினல்
- 4 என்று இரு முனையங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால்,
பயணியருக்கு இட நெருக்கடி இல்லாமல், கூடுதல் இடவசதி
கிடைக்கும். அத�ோடு கூடுதல் உள்நாட்டு விமான சேவைகளும்
துவங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

காங்கிரசின் அடையாளம் வாரிசு அரசியலும்


ஊழலும் தான்: அனுராக் தாக்கூர்

''காங்கிரசின் அடையாளம் வாரிசு அரசியல் மற்றும் ஊழல்


தான். எங்கே ஊழல் இருக்கிறத�ோ, அங்கே காங்கிரஸ் ஆட்சி
தான் இருக்கிறது'' என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
நிருபர்கள் சந்திப்பில் கூறினார்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மத்திய
அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நவம்பர் 17ம் தேதி, பூபேஷ் பாகேல் நீதிமன்றத்தில் பதிலளிக்க
வேண்டும். அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
பல ஊழல் வழக்குகளிலும் பூபேஷ் பாகேல் சிக்க உள்ளார்
என்பது தெளிவாக தெரிகிறது. சத்தீஸ்கர் மக்கள் பணத்தை
க�ொள்ளையடித்து காங்கிரசின் கஜானாவை நிரப்பியதால்
பூபேஷ் பாகேலை ப�ொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
காங்கிரசின் அடையாளம் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் தான்.
15
எங்கே ஊழல் இருக்கிறத�ோ, அங்கே காங்கிரஸ் ஆட்சி தான்
இருக்கிறது. இப்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மக்களுக்கு
பதில் ச�ொல்ல முடியாமல், அவர்கள் திணறி வருகின்றனர்.
காங்கிரஸ் எப்பொழுதும் ப�ொய்யான வாக்குறுதிகளையே
வழங்குகிறது. ஆனால், ஐந்து வருடங்களாகியும் அவர்கள்
க�ொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு
காங்கிரஸ் பதிலளிக்கத் தவறியதால், பிரியங்கா பிரதமர்
ம�ோடிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்


அ.தி.மு.க., ப�ொதுச்செயலாளர்
பழனிசாமி வெளியிட்ட
அறிக்கையில் பயிர்
காப்பீட்டுக்கான பிரீமியம் த�ொகை
செலுத்துவதற்கான அவகாசத்தை
டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க
வேண்டும். கால அவகாசத்தை
நீட்டிப்பது த�ொடர்பாக முதல்வர் vijayabharatham.org
ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்
எனக்கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட
பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்
நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து க�ொண்டு
ஒழுக்கம் உள்ள குழந்தையை பெறுவேன் என்று
நீங்கள் நம்பினால் அது ஒரு ப�ோதும் நடக்காது'' என
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு பாகிஸ்தான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு
க�ோரி உள்ளார். பாகிஸ்தானில், நேற்று (நவ.,14) டிவி
நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் ரசாக் பேசும் ப�ோது, பாகிஸ்தான்
அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில்
யூனிஸ் கான் ஒரு கேப்டனாக நல்ல எண்ணம் க�ொண்டு
இருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை
அளித்தது.
உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி
மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு
இல்லை. நான் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து க�ொண்டு
நல்ல குணமும், ஒழுக்கமும் க�ொண்ட குழந்தையைப்
பெறுவேன் என்று நீங்கள் நம்பினால் அது ஒரு ப�ோதும்
நடக்காது.'' என்றார். இதனை கேட்டு அருகில் இருந்த
வீரர்கள் உமர் குல் உள்ளிட்டோர் சிரித்தனர். இந்த வீடிய�ோ
சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
பலரும் அப்துல் ரசாக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்க
துவங்கினர். இதனையடுத்து, தனது கருத்துக்கு
மன்னிப்பு கேட்டு அப்துல் ரசாக் கூறியதாவது: நேற்று நாங்கள்
கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம்.
அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய்
தவறி குறிப்பிட்டு விட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட
முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும்
புண்படுத்தும் ந�ோக்கம் எனக்கு இல்லை''. இவ்வாறு அவர்
கூறினார்.

16
குழந்தைகள் க�ொலையை நிறுத்த அறிவுரை
வழங்கிய கனடா பிரதமர்: இஸ்ரேல் பிரதமர் பதிலடி

காசாவில் குழந்தைகள், பெண்கள் க�ொல்லப்படுவதை


இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின்
ட்ரூட�ோ கூறியுள்ளார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
பதிலடி க�ொடுத்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான
ம�ோதல் 40 நாட்களை கடந்துள்ளது. அதில், காசாவில் 11 ஆயிரம்
பேர் உயிர் இழந்து உள்ளனர். 15 லட்சம் பேர் இடம்பெயர்ந்து
உள்ளனர்.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட�ோ,
அந்நாட்டு பத்திரிகை நிருபர்களிடம் கூறியதாவது: அதிகபட்ச
கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்ரேல்
அரசை வலியுறுத்துகிறேன். உலகம் உங்களை பார்த்து க�ொண்டு
இருக்கிறது.
டிவி, சமூகவலைதளம் வாயிலாக டாக்டர்கள், குடும்பத்தினர்,
உயிர் பிழைத்தவர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும்
குழந்தைகளின் சாட்சியங்கள் வந்து சேர்கின்றன. பெண்கள்,
குழந்தைகள், சிசுக்கள் க�ொல்லப்படுவதை உலகம் பார்க்கிறது.
இது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடி க�ொடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: ப�ொது மக்களை
குறிவைப்பதற்கு ஹமாஸ் பயங்கரவாதிகளை தான் குற்றம்சாட்ட
வேண்டும். இஸ்ரேலை அல்ல. அக்., 7 ம் தேதி ஹமாஸ் நடத்திய
தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் க�ொல்லப்பட்டனர். அவர்கள்
இஸ்ரேலுக்குள் நுழைந்து எம் மக்களை தலையைத் துண்டித்தும்,
எரித்தும் படுக�ொலை செய்தனர். யூத இன அழிப்புகளிலேயே
அண்மைக்காலத்தில் நடந்த மிக ம�ோசமான தாக்குதல் இது.
ப�ொது மக்களை ஆபத்தில் இருந்து விலக்கி வைக்க எல்லா
நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொள்கிறது. ஆனால்,
ஹமாஸ் அப்பாவிப் ப�ொது மக்களை ஆபத்தின் வழியில்
நிறுத்துகிறது. நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் காசாவில்
பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்திக் க�ொடுத்தோம்.
ஆனால், துப்பாக்கி முனையில் அவர்களை ஹமாஸ் அமைப்பினர்
தடுக்கின்றனர்.
ப�ொது மக்கள் பின்னால் மறைந்து க�ொண்டு, ப�ொது
மக்களையே தாக்கும் இரட்டை ப�ோர்க்குற்றங்களில் ஈடுபடும்
ஹமாசை தான் ப�ொறுப்பாக்க வேண்டும். இஸ்ரேலை
அல்ல. இந்தச்சூழலில் பண்பட்ட நாடுகள் ஹமாசின்
17
காட்டுமிராண்டித்தனத்தை த�ோற்கடிக்கும் வகையில்
இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு
நெதன்யாகு கூறினார்.
கனடா பிரதமர் ப�ோல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல்
மேக்ரானும் கருத்துக்கூறியிருந்தார். அதற்கும் நெதன்யாகு
பதிலடி க�ொடுத்து இருந்தார்.

அரசு பள்ளி மாணவர்கள் 46,216 பேர்


'நீட்' இலவச பயிற்சிக்கு ஆர்வம்
மருத்துவ படிப்புக்கான
நீட் தேர்வு எழுத, அரசு பள்ளி
மாணவர்கள், 46,216 பேர் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய
மருத்துவ படிப்புகளில் சேர, நீட்
vijayabharatham.org தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது
கட்டாயம். அதேப�ோல், ஐ.ஐ.டி., ப�ோன்ற உயர்கல்வி
நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ.,
நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தாண்டு நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர, அரசு
பள்ளி மாணவர்கள், 46,216 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பில், நீட்
இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜே.இ.இ., தேர்வு பயிற்சிக்கு, 29,279 மாணவர்கள்
விண்ணப்பித்துள்ளனர். நீட் மற்றும் ஜே.இ.இ.,
ஆகிய, 2 தேர்வுகளையும் எழுத, 31,730 மாணவர்கள்
விண்ணப்பித்துள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக
அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நீட்
தேர்வுக்கு விலக்கு க�ோரி, ஆளும் தி.மு.க., சார்பில், கையெழுத்து
இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், 46,000த்துக்கும்
மேற்பட்டோர், நீட் தேர்வு எழுத ஆர்வம் தெரிவித்து, அரசின்
இலவச பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî«.
93613 99006, 96004 78526
18

You might also like