You are on page 1of 13

செய்தி 9

66 மோட்டார் கைக்கிள்களை காவல் துறை பறிமுதல்

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, Lebuh Ismail Sultan , Lebuh Medini Utama ஆகிய
சாலைகளில் Op Khas சோதனையை காவல் துறை கடந்த 2 நாட்களாக
மேற்கொண்டது. அதில் 66 மோட்டார் சைக்கிள்கள், 46 கார்கள் பறிமுதல்
ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தகவல் அளித்த Iskandar Puteri மாவட்டக் காவல் துறை தலைவர்
Asisten Komisioner Rahmat Ariffin தெரிவிக்கயில், பல்வேறு சாலைப்
போக்குவரத்துக் குற்றங்களுக்காக 422 அபராதச் சீட்டுகள் அந்தச்
சோதனையில் வெளியிடப்பட்டன.

மாட் ரெம்பிட் எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில்


ஈடுபடுகிறவர்களையும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த
அவ்வப்போது இது போன்ற சோதனை நடவடிக்கைகள் மேகொள்ளப்படும் என
Rahmat Ariffin தெரிவித்தார்.

Lebuh Ismail Sultan, Medini Utama jadi 'port' mat rempit


செய்தி 8

4 தங்கப்பதக்கங்களுக்கு குறி !

அடுத்த ஆண்டு 2024 இல் நடக்கவிருக்கும் பாராலிம்பிக் போட்டியில்


மலேசியா 4 தங்கப்பதக்கங்களுக்குக் குறி வைத்துள்ளது என மலேசிய
பாராலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அதன் தலைவர் Datuk Seri Megat D Shahriman Zaharudin
குறிப்பிடுகயில், 4 தங்கப்பதங்களுக்கான இலக்கு என்பது
அதிகாரப்பூர்வமானது அல்ல எனக் கூறும் அவர், அந்த இலக்கை அடைய
போட்டியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதற்காக முடிவு
செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இந்த ஆண்டு முழுவதும் விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளின்


அடிப்படையில் நான்கு தங்கங்கள் என்பது யதார்த்தமான எண்ணிக்கை
என மெகாட் கூறினார்.

தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு 2,000 வெள்ளியும் வெள்ளிப் பதக்கம்


வென்றவர்களுக்கு 1,000 வெள்ளியும் வெண்கலப் பதக்கம் வென்றால் 500
பெள்ளியும் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

Empat emas di Paralimpik Paris 2024 realistik - Megat


செய்தி 5

2025 இல் பகாங்கில் 160 மின்னூட்ட நிலையங்கள்

பகாங் மாநிலத்தில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 160 மின்சார வாகன


மின்னூட்ட நிலையங்களை நிறுவ இலக்கு கொண்டுள்ளது அம்மாநில அரசு.
இந்த முன்னெடுப்பால், அதிகமான பகாங் மக்கள் மின்சார வாகனத்தை
தேர்ந்தெடுப்பார்கள் என பகாங் மாநில முதல்வர் Datuk Seri Wan Rosdy Wan
Ismail தெரிவித்தார்.

2025 வரை இலவச சாலை வரி, இறக்குமதி வரி போன்ற சலுகைகள்


வழங்கப்படும் நிலையில் இவ்வாண்டு மின்சார வாகனங்களின் பயன்பாடு 4
மடங்காக அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது வரையில், சில மின்னூட்ட நிலையங்கள் இம்மாநிலத்தில்


நிறுவப்பட்டுள்ள நிலையில் கட்டம் கட்டமாக அந்த எண்ணிக்கை
அதிகரிக்கப்படும் என்றார் அவர்.

மின்சார வாகனங்கள் குறித்து மக்கள் கவலை கொள்ள வேண்டாம்.


அவற்றுக்குத் தேவையான மின்னூட்ட நிலையங்கள் தேவையான
இடங்களில் நிறுவப்படும் என அவர் மேலும் சொன்னார்.

அதே சமயம், மாநில அரசின் அதிகாரப்பூர்வ வாகனமாக மின்சார


வாகனங்கள் பயன்படுத்தப்படவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
Pahang sasar 160 stesen pengecas EV menjelang 20253

செய்தி 6

6 மாதங்களில் 54 விழுக்காடு குறைப்பு !

ஜோகூர் மாநிலத்தில் வறிய நிலையில் உள்ள 5, 746 குடும்பங்களில் 3,099


குடும்பங்கள் அதாவது 54 விழுக்காட்டினர் அடுத்த நிலைக்கு
மேம்படுத்தப்பட்டுள்ளனர். 6 மாதங்களில் இந்த மேம்பாட்டை அம்மாநில
அரசு மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளதாக அதன் முதல்வர் Datuk Onn Hafiz
Ghazi தெரிவித்தார்.

"விரும்பிய குறிக்கோளை அடைவதற்குப் பயன்படுத்தப்படும்


வித்தியாசமான அணுகுமுறையின் வெற்றிக்கு இது இன்னொரு சான்று.
மாநில அரசு அடைந்த வெற்றியைத் தொடர்ந்து மத்திய அரசும் இதே
போன்ற வழிமுறையைப் படுத்தி மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களை
நிறைவேற்றி வெற்றி பெறும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள வறிய நிலையில் உள்ள குடும்பங்களை அத்தொகுதி


சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்தெடுத்து அவர்களை அடுத்தக் கட்டம் நோக்கி
மேம்படுத்த வேண்டும் என Onn Hafiz கேட்டுக் கொண்டார்.

Johor berjaya kurangkan 54 peratus miskin tegar dalam 6 bulan


செய்தி 10

போலி காவல் துறை அட்டை வைத்திருந்த உணவு விநியோகிப்பாளர்

அம்பாங்கில் உள்ள Jalan Lorong Sabah Taman Melawati யில் காவல் துறை
மேற்கொண்ட சோதனையில் போலி காவல் துறை அட்டையை
வைத்திருந்ததற்காக உணவு விநியோகிப்பாளர் ஒருவர் தடுத்து
வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அளித்த அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறை


தலைவர் Asisten Komisioner Mohd Azam Ismail தெரிவிக்கயில், நேற்று காலை 11.15
மணி அளவில் அந்த ஆடவர் பிடிபட்டார் எனவும் சுயமாக உருவாக்கிய
மஞ்சள் நீல நிறத்திலான அட்டை அவர் வசம் இருந்ததாகவும் Mohd Azam
Ismail கூறினார்.

அந்த அட்டைக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், அந்த


ஆடவர் காவல் துறை சட்டம் 1967 பிரிவு 89 இன் படி விசாரிக்கப்படுவதாகவும்
Mohd Azam Ismail சொன்னார்.

Penghantar makanan ditahan miliki kad kuasa polis palsu


செய்தி 7

சாலை விபத்தில் ஆயுதப்படை வீரர் பலி !

கோலாலம்பூர், Jalan Sultan Yahya Petra சாலைச் சந்திப்பில் சமிக்ஞை விளக்கை


மீறி சென்றதால் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதபடை வீரர்
விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

காலை 7.25 மணி அளவில் நேர்ந்த இந்த விபத்தில் அந்த ஆயுதப்படை வீரர்
எதிரில் வந்த பெண் மோட்டார் சைக்கிளோட்டியை மோதினார்.

39 வயதுடைய அந்தப் பெண்மணி சிகிச்சைக்காக கோலாலம்பூர்


மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த அந்த
ஆயுதப்படைன் வீரரின் சடலம் Hospital Canselor Tunku Muhriz மருத்துவமனைக்கு
உடற்கூறாய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

Anggota tentera maut selepas langgar lampu merah


செய்தி 1

1 பில்லியன் வெள்ளிக்காக அம்னோவின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்


விலை போவார்களா ?

அரசாங்கத் தரப்பில் இருக்கும் அம்னோவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற


உறுப்பினர்கள் தேசியக் கூட்டணியை ஆதரிப்பார்கள் எனக் கூறப்பட்டு வரும்
செய்தியில் உண்மையில்லை என அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான
Datuk Seri Ahmad Maslan தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயலில் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் இறங்க


மாட்டார்கள். அவ்வாறு நடப்பதற்கு சாத்தியமே இல்லை. காரணம், 15 பொதுத்
தேர்தலுக்கு முன்னரே உடன்படிக்கை ஒன்றில் அம்னோ நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள். எனவே, அதனை அவர்கள் மீற
சாத்தியம் இல்லை என அகமட் மலான் குறிப்பிட்டார்.

ஒரு வேளை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த உடன்படிக்கையை


மீறி செயல்பட வேண்டுமே என்றால், தேசியக் கூட்டணி தலா 1 பில்லியன்
வெள்ளியைக் கொடுத்தால் மட்டுமே சத்தியம். காரணம், முன்னர் குறிப்பிட்ட
உடன்படிக்கையின்படி, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 மில்லியன்
மதிப்பிலான உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டுள்ளார்கள் என்றார் அவர்.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து 30 பேரும் தேசியக்


கூட்டணிக்கு ஆதரவாக மாறினாலும்கூட, இன்னும் 117 பேர் அரசாங்கத்திற்கு
ஆதரவாக இருக்கின்றனர். எப்படியும் நடப்பு அரசாங்கம் கவிழாது, கை
மாறாது என்றார் அவர்.

10 MP UMNO nak sertai PN kena sediakan RM1 bilion - Ahmad Maslan

செய்தி 2

மலேசியாவில் வெள்ளை நுரையீரல் நோய்ப் பாவல் ஆபத்து !

மூச்சுத் திணறல், நுரையீரல் ஆகியவற்றை உட்படுத்திய சீனாவில்


இப்போது பரவும் நிமோனியா பாதிப்பு கிட்டதட்ட உலகின் மற்ற
பகுதிகளிலும் இருக்கும் White Lung Syndrome எனப்படும் வெள்ளை
நுரையீரல் சிண்ட்ரோம் போலவே இருக்கிறது.
இருந்தாலும், சீன நாட்டு சுற்றுப் பயணிகளை அரசாங்கம் ஏற்றுக்
கொள்ளத் தயாராக இருக்கின்றது என சுற்றுலா, கலை, பண்பாட்டு
அமைச்சர் Datuk Seri Tiong King Sing தெரிவித்தார்.

சீன நாட்டு சுற்றுப் பயணிகள் உட்பட அனைத்து சுற்றுப்பயணிகளின்


சுகாதாரத்தைக் கண்காணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தமது
அமைச்சும் சுகாதார அமைச்சும் இறங்கும் என அவர் மேலும் சொன்னார்.

நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் உடல் வெப்பநிலை


ஸ்கேனர்களளையும் இதர தயார் நிலை நடவடிக்கைகளையும் சுகாதார
அமைச்சு மேற்கொண்டுள்ளது என Tiong King Sing கூறினார்.
முன்னதாக, சீன நாட்டிகுச் செல்லும் மலேசியர்களுக்கும் மலேசியாவுக்கு
வரும் சீன நாட்டவருக்கும் 30 நாட்கள் இலவச விசாவை இரு நாடுகளும்
அறிவித்துள்ளன.
நாட்டின் சுற்றுலா துறைக்கு நல்ல பலனைக் கொடுக்கும் வல்லமை
அந்தத் திட்டத்திற்கு இருந்தாலும், தற்போது சுகாதார பிரச்சனை குறித்த
விவகாரம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்குக் காரணமாக
பெரும்பாலும் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளைத் தாக்கும்
அந்நாட்டில் பரவி வரும் சுவாச நோய் எனக் கூறப்படுகிறது/
மக்களை கவலை கொள்ளும் அளவுக்கு ஊடகங்களும் சமூக
வலைத்தளங்களும் தவறானத் தகவலைப் பரப்ப வேண்டாம் என அவர்
கேட்டுக் கொண்டார்.

Ancaman 'White Lung': Malaysia siap siaga pantau pelancong China - Tiong King Sing

செய்தி 11

மலேசியாவுக்கு வந்த 26 மில்லியன் சுற்றுப் பயணிகள்

இவ்வாண்டு சனவரி முதல் நவம்பர் 15 வரை மலேசியாவுக்கு 26 மில்லிய


சுற்றுப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர் என மலேசிய குடிநுழைவுத் துறை
வெளியிட்ட புள்ளி விவரம் காட்டுகிறது.

சீனா, இந்தியா ஆகிய நாட்டில் இருந்து மலேசியா வரும் சுற்றுப்


பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச விசா கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,
அவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுற்றுலா, கலை, பண்பாட்டு
அமைச்சர் Datuk Seri Tiong King Sing தெரிவித்தார்.

Malaysia terima 26 juta pelancong setakat November


செய்தி 4

இளைஞர் மோதியதில் காவல் துறை அதிகாரிக்குக் காயம் !

ஷா ஆலாம், Persiaran Perbandaran Seksyen 14 இல் நடந்த காவல் துறை


சோதனையில் இருந்து தப்பிக்க 21 வயது ஆடவர் மோட்டார் சைக்கிளில்
சாலைப் போக்குவரத்து காவல் துறை அதிகாரியை மோதியதில் அவர்
பலத்தக் காயங்களுக்கு உள்ளாகி ஷா ஆலாம் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் இச்சம்பவம் நேர்ந்தது. மோதிய


ஆடவருக்கும் சில காயங்கள் ஏற்பட்ட நிலையில் அதே மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றார்.

மோட்டார் சைக்கிளில் பக்க வாட்டில் இருக்கும் கண்ணாடி இல்லாதக்


காரணத்தால், அந்தச் சோதனை நடவடிக்கையில் இருந்து தப்பித்துச் செல்ல
வேண்டிய அவசியம் இல்லை. அது பெரிய தவறும் இல்லை என ஷா
ஆலாம் சாலைப் போக்குவரத்து புலபாய்வு, அமலாக்கப் பிரிவின் தலைவர்
Deputi Superintendan SH Roslee SH Mohd Norrani தெரிவித்தார்.

பதற்றத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் இந்த ஆபத்து


நேர்ந்துள்ளது எனக் கூறிய அவர், இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 307
இன் படியும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் படியும் விசாரிக்கப்பட
இருப்பதாகத் தெரிவித்தார்.

Koperal di zon merah hospital dirempuh remaja lari sekatan jalan

செய்தி 12

இன்றிரவு வரை இடியுடன் கூடிய மழை

உலு சிலாங்கூர் பகுதியில், இன்றிரவு வரை இடி மின்னலுடன் கூடிய


பலத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான
MetMalaysia கணித்துள்ளது.

பினாங்கு, கெடா, பேரா, பகாங், ஜோகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களில்


உள்ள பல மாவட்டங்களிலும் இதே வானிலை நிலவும் என்று
எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

வானிலை தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு பொதுமக்கள் MetMalaysia


இணையத்தளத்தையோ அல்லது அதன் சமூக ஊடகப் பக்கங்களையோ
பார்வையிடலாம்.
https://www.facebook.com/malaysiamet/posts/
pfbid02d8EzCCWCRaE4fe2iJTsZto676edV23ByPCp3eRQ4MoL9qtCYSEJwnW4dCT3reFWhl

செய்தி 3

குடிசைவாசிகளின் பிரச்சனையைத் தீர்க்க, ஜோகூரில் அதிகமான பிபிஆர்


வீடுகள் !

ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள 134 கிராமங்களில் கண்டறியப்பட்ட 10,301


குடிசைவாசிகளின் பிரச்சினையைத் தீர்க்க ஊராட்சி மேம்பாட்டு அமைச்சும்
மாநில அரசும் இணைந்து செயல்பட உள்ளது

இது குறித்து பேசிய அவ்வமைச்சின் துணை அமைச்சர் Akmal Nasrullah Mohd.


Nasir தெரிவிக்கயில், மக்கள் வீட்டுத் திட்டம் என்றழைக்கப்படும் பிபிஆர்
வீடுகள். மக்கள் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது பி 40
மக்களிம் பயன்பாட்டிற்காக கட்டப்படுவதாகும். இந்த PPR திட்டத்தால், மாநில
அரசு நிலையில் உள்ள குடிசைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஓரளவுக்கு
உதவியாக இருக்கும் என்றார் Akmal Nasrullah .

எனவே, புதிதாக கட்டப்பட்ட PPR வீடுக்ளில் குடிசைவாசிகளை இடமாற்றம்


செய்ய மாநில அரசு பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும்
சொன்னார்.

KPKT perhalusi isu setinggan Johor, bina lebih banyak PPR

You might also like