You are on page 1of 17

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


nrhg»UJ, fh®¤âif - 2 rÅ 18.11.2023 ky® - 4, ïjœ - 214

திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து


செய்ய கோரி ப�ோராட்டம்: பலர் கைது
திருச்செந்தூரில் தரிசன
கட்டணத்தை ரத்து செய்யக்கோரி
பக்தர்கள் ப�ோராட்டம் நடத்தினர்.
ப�ோராட்டத்தின் ப�ோது
200க்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது. இந்து முன்னணி
மாநில துணைத்தலைவர் வி vijayabharatham.org
பி ஜெயக்குமார் மாநில ப�ொதுச் செயலாளர் டாக்டர் அரசு
ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில
நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் க�ோட்டச் செயலாளர்
ஆறுமுகசாமி க�ோட்ட தலைவர் தங்கமன�ோகர் ஆகிய�ோர்
உட்பட இந்து முன்னணி த�ொண்டர்கள் முருக பக்தர்கள்
பெருந்திரளாக கலந்து க�ொண்டு ஆயிரம் இரண்டாயிரம்
மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த க�ோரி
க�ோஷம் எழுப்பினர். கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர்
காவல் ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல்
நடத்த துவங்கினார்இதனால் ப�ோலீசாருக்கும் பக்தர்களுக்கும்
இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் திருச்செந்தூர்
கிழக்கு பிரகாரம் ப�ோர்க்களம் ப�ோல் காட்சி ஆனது அநியாயமாக
கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும்
திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை தூவி சாபம் விட்டு
சென்றனர். இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும்
மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர்
மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் திட்டப் பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும்:


ரயில்வே வாரிய உறுப்பினர் அறிவுறுத்தல்
ரயில் திட்டப் பணிகளை
தாமதமின்றி விரைந்து முடித்து,
பயன்பாட்டுக்கு க�ொண்டுவர
வேண்டுமென ரயில்வே வாரிய
உறுப்பினர் ரூப் நாராயண்
சுங்கர் அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளார். இந்திய
vijayabharatham.org ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு
பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெற்கு ரயில்வேயில்
நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய
நேற்று சென்னை வந்தார். சென்னை ஐசிஎஃப் ஆலையில்
உருவாக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்
பெட்டிகள் தயாரிப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். வந்தே
பாரத் ரயில் ப�ோன்ற நவீன த�ொழில்நுட்பத்தில் தயாரிப்பு
1
பணிகளில் ஈடுபடும் ஐசிஎஃப் பணியாளர்களின் திறனை அவர்
பாராட்டினார். இந்த ஆய்வின் ப�ோது, ஐசிஎஃப் ப�ொதுமேலாளர்
மால்யா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இதேப�ோல, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே
நடக்கும் 4-வது புதிய ரயில் பாதை பணிகள், வேளச்சேரி –
பரங்கிமலை மேம்பால ரயில் இணைப்பு திட்டப் பணிகளை
நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், தெற்கு ரயில்வேயில்
நடக்கும் பல்வேறு ரயில் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து,
தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆல�ோசனை நடத்தினார்.
தமிழகம் மற்றும் கேரளாவில் நடைபெறும் ரயில் திட்டப்
பணிகளின் தற்போதைய நிலை குறித்து ரயில்வே அதிகாரிகள்
எடுத்துரைத்தனர்.
ரயில் திட்டப் பணிகளைத் தாமதம் இன்றி விரைந்து
முடித்து, மக்களின் பயன்பாட்டுக்குக் க�ொண்டுவர வேண்டும்
என அதிகாரிகளுக்குஅவர் அறிவுறுத்தினார். இதையடுத்து,
ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், பாம்பன்
பாலம், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை இன்று
நேரில் சென்று ஆய்வு செய்கிறார். கன்னியாகுமரி ரயில்
நிலையம் மேம்பாட்டுப் பணிகள், மதுரை – திருநெல்வேலி,
திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே நடந்து வரும்
இரட்டை பாதை பணிகளை நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.
இதேப�ோல், வரும் 19-ம் தேதி திருவனந்தபுரம், க�ொல்லம்
ரயில் நிலையங்கள் மேம்பாட்டுப் பணிகள், இரட்டை பாதை
பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் ச�ோதனை:


குழந்தைகளின் படுக்கைக்கு அடியில் ராக்கெட் லாஞ்சர்கள்
காசாவில் தரைவழித்
தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள
இஸ்ரேல் ராணுவம் தற்போது
குறிவைத்துள்ளது அங்குள்ள
ம ரு த் து வ மனை க ளை .
அதிலும் குறிப்பாக அல் ஷிபா
மருத்துவமனையில் இஸ்ரேல்
ராணுவம் த�ொடர்ந்து தேடுதல் vijayabharatham.org
வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து காசா சுகாதார
அமைச்சக செய்தித் த�ொடர்பாளர் அஷர்ஃப் அல் குத்ரா
கூறுகையில், "இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பெண்கள்,
குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கான�ோர்
உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அல் ஷிஃபாவில்
மூன்றாவது நாளாக இஸ்ரேல் ராணுவம் ச�ோதனையில்
ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் தலைமை கமாண்டர்கள் அங்குதான்
பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் நீண்ட காலமாக நம்புகிறது.
மருத்துவர்களையும் வெளியேற்றியுள்ளது." என்றார்.
ஜெனின் மருத்துவமனையை முற்றுகையிட்ட இஸ்ரேல்:
ஜெனின் நகருக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் அங்குள்ள
மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளது. 80 ராணுவ
வாகனங்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஜெனின்
மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உள்பட ஓரிடத்தையும்
விடாமல் இஸ்ரேல் ராணுவம் ச�ோதனை செய்தது. அப்போது
ஒலிப்பெருக்கி மூலம் அனைவரையும் வெளியேறும்படி
2
கூறியது. அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள்
அனைவரும் கைகளைத் தூக்கியபடி வெளியேறுமாறு
இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. அவர்கள் அவ்வாறு
வெளியேறும் காட்சி அடங்கிய வீடிய�ோ வெளியாகியுள்ளது.
ஆயுதங்கள், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு: அல் ஷிஃபா
மருத்துவமனையில் ஒரு வாகனத்தில் ஏராளமான AK-47
ரக துப்பக்கிகள், ஸ்னைப்பர் ரைஃபிள்கள், கிரனேடுகள்,
மற்ற வெடிப் ப�ொருட்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
அதேப�ோல், குழந்தைகளின் படுக்கைகளுக்குக் கீழ்
இருந்து ராக்கெட் லாஞ்சர்கள், டாங்கர் எதிர்ப்பு மிசைல்கள்
ஆகியனவற்றை ஹமாஸ் தீவிரவாதிகள் பதுக்கிவைத்துள்ளனர்.
அதேப�ோல் அல் குத்ஸ் மருத்துவமனையிலும் ஆயுதங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன. ரன்டிஸி மருத்துவமனையில் ஹமாஸ்
படையினரின் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையும் இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில்
உறுதி செய்துள்ளது. ச�ோதனைகள் ஒருபுறம் நடந்தாலும்,
4000 லிட்டர் தண்ணீர் 1500 ப�ொட்டலம் உணவை ஷிஃபா
மருத்துவமனையில் வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம்
தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள
பேட்டியில், "நாங்கள் காசாவில் ப�ொது மக்களுக்கு பாதிப்பு
இல்லாமல் ஹமாஸ் அழிப்பை மேற்கொள்ள முயற்சிக்கிற�ோம்.
ஆனால் அதில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற
இயலவில்லை. இருப்பினும் குறைந்தபட்ச சேதாரத்துடன்
எங்கள் வேலையை நாங்கள் முடிப்போம்" என்று கூறியுள்ளார்.

"மக்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது, 150 இடங்களில்


வெற்றி பெறுவோம்" - மத்தியப் பிரதேச பாஜக நம்பிக்கை
"எல்லா இடங்களிலும் மக்கள்
மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.
மாநிலத்தின்அன்புச் சகோதரிகள்,
குழந்தைகள், இளைஞர்கள்,
முதியோர்களிடமிருந்து நான்
அன்பைப் பெறுகிறேன்" என்று
மத்தியப் பிரதேச முதல்வரும்,
vijayabharatham.org பாஜக வேட்பாளருமான சிவராஜ்
சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநில
சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலையில்
தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது வாக்கை பதிவு
செய்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில
முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, அதிக அளவில்
வந்து வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் அவர்
வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
"மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது
ஜனநாயகத் திருவிழா நல்வாழ்த்துக்கள். வாக்களிப்பது என்பது
ஒவ்வொரு குடிமகன்களின் கடமையும் உரிமையுமாகும்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள்,
மருமகன்கள், மருமகள்கள் அனைவரும் தங்களின்
உரிமையினைப் பயன்படுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு
பங்களிக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. முதலில்
3
வாக்களிப்பு.. பின்னர் சிற்றுண்டி..." என்று தெரிவித்துள்ளார்.
பாஜக 150 இடங்களில் வெற்றி பெறும்: இதனிடையே
மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்
என்று பாஜக தேசிய செயலாளரும், இந்தூர்-1 தொகுதி பாஜக
வேட்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா நம்பிக்கைத்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"அனைவரும்
கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று நான் வாக்காளர்களிடம்
தெரிவிக்க விரும்புகிறேன். மத்தியப் பிரதேசத்தில் பாஜக
மீண்டும் ஆட்சி அமைக்கும். இரட்டை எஞ்சின் ஆட்சி இங்கு
அமையும். முன்பு செய்ததைப் போல மாநிலத்தில் வளர்ச்சி
பணிகளை நாங்கள்மீண்டும் செய்வோம். பாஜக 150க்கும்
அதிமான இடங்களில் வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் அவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா கூறுகையில்,
"நாங்கள் பெரும்பான்மையுடன் மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி
அமைப்போம் அதனை வெற்றிகரமாகவும் நடத்துவோம்"
என்று தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் தேர்தல்: மத்தியப்
பிரதேசத்தில் ம�ொத்தம் 230 சட்டப்பேரவை த�ொகுதிகள்
உள்ளன. இங்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு த�ொடங்குகிறது.
மத்தியப் பிரதேசத்தில் ம�ொத்தம் 5.6 க�ோடிவாக்காளர்கள்
உள்ளனர். இவர்களில் 2.88 க�ோடி பேர் ஆண்கள். 2.72 க�ோடி
பேர் பெண்கள். இந்த தேர்தலில் 22.36 லட்சம் இளைஞர்கள்
முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தலைநகர் ப�ோபாலில் உள்ள 7 த�ொகுதிகளில் மட்டும் 2,049
வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
மையத்திலும் 4 தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பதிவாகும் வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு
முடிவுகள் அறிவிக்கப்படும். மத்திய பிரதேசத்தில் பாஜக
- காங்கிஸ் இடையே நேரடி ப�ோட்டி நிலவுகிறது. கடந்த
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும்,
காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது. இங்கு மீண்டும்
ஆட்சி அமைக்க,முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான
பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதேப�ோல, மத்திய
பிரதேசத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்
பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற
நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.

குற்ற வரம்பில் நிதி மோசடி, சைபர் குற்றங்கள்:


மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பாராட்டு
பெரிய அளவிலான நிதி
மோசடிகள், பொன்சி திட்டங்கள்,
சைபர் குற்றங்கள், வாகன திருட்டு,
நில அபகரிப்பு, ஒப்பந்த கொலைகள்
உள்ளிட்டவற்றை திட்டமிட்ட குற்ற
வரம்புக்குள் கொண்டு வருவதற்கு
புதிய கிரிமினல் சட்டத்தில்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. vijayabharatham.org
மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடாளுமன்ற குழு
வரவேற்பு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சட்டங்கள் நில
அபகரிப்பு, ஒப்பந்த கொலை, மிரட்டி பணம் பறித்தல்,
பெரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஆட்கடத்தல்
4
போன்ற கடுமையான குற்றங்களைத் தடுக்கபோதுமானதாக
இல்லை என்பதை பாஜக எம்.பி. பிரிஜ்லால் தலைமையிலான
உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு
கண்டறிந்துள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது
பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 9-ல், கடத்தல்,
கொள்ளை, வாகன திருட்டு, மிரட்டிபணம் பறித்தல், நில
அபகரிப்பு, ஒப்பந்த கொலை, பொருளாதார குற்றங்கள், நிதி
மோசடி, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இணைய
குற்றங்கள், ஆட்கடத்தல், போதைப்பொருள், சட்ட விரோத
பொருட்கள், சேவைகள் அல்லது ஆயுத கடத்தல், பாலியல்
தொழிலுக்காக ஆட்களை கடத்துதல், ஊழல் உள்ளிட்ட
சட்டத்துக்கு புறம்பான செயல்கள் தற்போது திட்டமிட்ட
குற்றத்தின் (ஆர்கனைஸ்டு கிரைம்) வரம்புக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்கள் ஒருவரின் மரணத்துக்கு காரணமாகும்
எனில் அந்த குற்றத்தில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை
அல்லது ஆயுள் தண்டனையுடன், கடுமையான அபராதமும்
விதிக்க புதிய சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது
மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என நாடாளுமன்ற குழு
பாராட்டு தெரிவித்துள்ளது. புதிய மச�ோதாக்கள்: கிரிமினல்
நடைமுறைச் சட்டம் 1898, இந்திய தண்டனைச் சட்டம்
1860, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றுக்கு பதிலாக
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நியாய
சன்ஹிதா,பாரதிய சாக்ஷிய அதிநியம் ஆகிய மசோதாக்களை
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி மக்களவையில் மத்திய அரசு
அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 த�ொழிலாளர்களை


காப்பாற்ற அமெரிக்க இயந்திரம் மூலம் மீட்பு பணி தீவிரம்
உத்தராகண்டில் சார்தாம்
நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு
பகுதியாக சில்க்யாரா-பர்கோட்
இடையே 4.5 கி.மீ. த�ொலைவுக்கு
சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு
வருகிறது. கடந்த 12-ம் தேதி
சுரங்கப்பாதையில் மண் சரிந்தது.
vijayabharatham.org இருபுறமும் மணல் மூடிய நிலையில்
சுரங்கப் பாதைக்குள் 40 த�ொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.
பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள்
இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுரங்கப்
பாதையில் சிக்கியிருக்கும் த�ொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக
குழாய் வழியாக த�ொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது.
மற்றொரு குழாய் வழியாக உணவு ப�ொருட்கள், குடிநீர்
விநிய�ோகிக்கப்பட்டு வருகிறது.
முதலில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுரங்கப் பாதையில்
சரிந்தமண்ணை அகற்றும் பணி நடைபெற்றது. ஆனால்
மேற்புறத்தில் இருந்து த�ொடர்ந்து மண் சரிந்ததால் அந்த திட்டம்
கைவிடப்பட்டது. பின்னர் எர்த் ஆகர் இயந்திரம் மூலம் மணல்
குவியலின் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை
ச�ொருக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த
5
இயந்திரத்தால் பக்கவாட்டில் நீண்டத�ொலைவுக்கு துளையிட
முடியவில்லை. இதைத் த�ொடர்ந்து அமெரிக்க தயாரிப்பு
துளையிடும் இயந்திரங்கள், டெல்லியில் இருந்து விமானங்கள்
மூலம் பர்கோட் விமான நிலையத்துக்கு க�ொண்டுவரப்பட்டன.
தற்போது அமெரிக்க தயாரிப்பு துளையிடும் இயந்திரங்கள்
மூலம் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை ச�ொருக
முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அமைச்சர் வி.கே. சிங் சம்பவ இடத்தை நேற்று
நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, “சுரங்கப்
பாதையின் நடுவே த�ொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அங்கு
சுமார் 2 கி.மீ. த�ொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த இடத்தில்
த�ொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அடுத்த 2 முதல் 3
நாட்களில் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்” என்றார்.

“சிவசங்கர் ஆதரவாளர்களை பாஜக விடப்போவதில்லை” -–அண்ணாமலை


அரியலூர் மாவட்டம் செந்துறை
அண்ணா நகரிலிருந்து பேருந்து
நிலையம் வரை ‘என் மண் என்
மக்கள்’ யாத்திரையை பாஜக
மாநிலத் தலைவர் அண்ணாமலை
நேற்று மேற்கொண்டார். அப்போது
அவர் பேசியது: திராவிட மாடல்
அரசால் தமிழகம் வளர்ந்துள்ளதாக vijayabharatham.org
அக்கட்சியினர் கூறுவது முற்றிலும் ப�ொய். பெரம்பலூர்
மாவட்டம் இன்னும் பின்தங்கியே உள்ளது. கடந்த 15
ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூரில் ப�ொருளாதார மண்டலம்
அமைக்க திமுக அரசு 3,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
ஆனால் இதுவரை அங்கு ஒரு செங்கல்லை கூட நடவில்லை.
எனவே, இப்பகுதி வளர வேண்டும் எனில் வரும் மக்களவைத்
தேர்தலில் பிரதமர் ம�ோடிக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் யாத்திரையை
த�ொடங்கிய அண்ணாமலை, காமராஜர் வளைவு பகுதியில்
நிறைவு செய்தார். அங்கு அவர் பேசியது: திமுக அமைச்சர்கள் 11
பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இங்குள்ள திமுகவினரில்
க�ொள்ளையடிப் பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலம்
எடுக்கச் சென்ற பாஜக நிர்வாகிகளை தாக்கிய அமைச்சர்
சிவசங்கர் ஆதரவாளர்களை பாஜக விடப்போவதில்லை.
உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
உங்கள் நாட்கள் எண்ணப்பட்டுக் க�ொண்டிருக்கின்றன.
இன்னும் சில மாதங்கள் ப�ொறுத்திருந்து பாருங்கள்.
தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழுக்கு
மிகுந்த மரியாதை க�ொடுப்பவர் பிரதமர் ம�ோடி. 11-வது
இடத்திலிருந்த நாட்டின் ப�ொருளாதாரத்தை 5-வது இடத்துக்கு
முன்னேற்றியவர் ம�ோடி. வரும் நாடாளுமன்ற தேர்தலில்
அவரது கரத்தை வலுப்படுத்துங்கள். இவ்வாறு அவர்
பேசினார். அவருடன், பாஜக மாநில ப�ொதுச் செயலாளர்
கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி தலைவர் தடா
பெரியசாமி, மாநில இணைப் ப�ொருளாளர் சிவ சுப்பிரமணியம்,
மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள்
இருந்தனர்.
6
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்:
க�ோடம்பாக்கம் –பூந்தமல்லி தடத்தில் பணிகள் தீவிரம்
இரண்டாம் கட்ட மெட்ரோ
ரயில் திட்டத்தில், கலங்கரை
விளக்கம் -பூந்தமல்லி வரையிலான
4-வது வழித்தடத்தில் ஒரு
பகுதியான க�ோடம்பாக்கம் -
பூந்தமல்லி வழித்தடத்தில்
தற்போதுவரை 50 சதவீதம்
vijayabharatham.org பணிகள் நிறைவடைந்துள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ
ரயில் திட்டம், 116.1 கி.மீ. த�ொலைவில் 3 வழித்தடங்களில்
செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம்
- பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும்
ஒன்று. இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல்
க�ோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், பவர்
ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டப் பாதையாகவும்
அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ
ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில்
நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட,
சுரங்கப்பாதை பணி மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள்
அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,
இந்த வழித்தடத்தில் க�ோடம்பாக்கம் - பூந்தமல்லி தடத்தில்
பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. குறிப்பாக, இந்த
வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 நிலையங்களில்
13 நிலையங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து
வருகின்றன. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன
அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம்
வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக க�ோடம்பாக்கம்
பூந்தமல்லி வரை தடத்தில், உயர்மட்டப் பாதையில் 50
சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த
பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். இந்த
குறிப்பிட்ட பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, வரும் 2025-
ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம்,
வளசரவாக்கம், சாலிகிராமம், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி
ஆகிய நிலையங்களுக்கான நுழைவு, வெளியேறும் முனை
அமைக்கப்படுகிறது. பல இடங்களில் ரயில் நிலையங்கள்
அமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த
வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப்
பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு
அவர்கள் கூறினர்.

வங்கக் கடலில் உருவானது ‘மிதிலி புயல்’ -


இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றிருப்பதாகவும்,
(18.11.23) அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும்
என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு
பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய
7
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு மிதிலி எனப்
பெயரிடப்பட்டுள்ளது. மிதிலி புயல்
தற்போது ஒடிசாவின் பாரதீப்பிற்கு
கிழக்கே 190 கிமீ த�ொலைவிலும்,
மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து
தென் தென்கிழக்கே 200 கிமீ
த�ொலைவிலும், வங்கதேசத்தின் vijayabharatham.org

கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 220 கிமீ த�ொலைவிலும்


உள்ளது. இந்த நிலையில், நாளை (18.11.23) அதிகாலை
வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
வெளிட்டுள்ள செய்தி குறிப்பில், "இன்று தமிழ்நாடு, புதுச்சேரி
மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,
தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் தனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல்
பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வங்கதேச
கடல�ோரப்பகுதிகளில் இன்று குறாவளிக்காற்று மணிக்கு 60
முதல் 70 கில�ோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கில�ோ
மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒடிசா கடல�ோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு
50 முதல் 60 கில�ோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70
கில�ோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல்
பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கில�ோ
மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கில�ோ மீட்டர்
வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது. வங்கக் கடலில்
மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை, கடலூர்,
நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால்,
பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் 2 ஆம் எண்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி த�ொடங்கியது


இந்தியா – இலங்கை
இடையேயான 9-வது கூட்டு
ராணுவப் பயிற்சி புனே-ல் இன்று
த�ொடங்கியது. இது த�ொடர்பாக
மத்திய அரசு வெளியிட்ட தகவல்:
இந்தியா – இலங்கை இடையேயான
9-வது கூட்டு ராணுவப் பயிற்சி
vijayabharatham.org 'மித்ரா சக்தி -2023' புனேயில்
இன்று த�ொடங்கியது. இந்தப் பயிற்சி இனறு முதல் வரும் 29
வரை நடத்தப்படுகிறது. 120 வீரர்களைக் க�ொண்ட இந்தியப்
படைப்பிரிவில் முக்கியமாக மராத்தா தரைப்படை பிரிவைச்
சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கை தரப்பில் 53
தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை
விமானப்படையைச் சேர்ந்த 5 வீரர்களும் இந்தப் பயிற்சியில்
பங்கேற்கின்றனர்.
8
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது கூட்டு
எதிர்வினைகளை ஒருங்கிணைப்பது இந்தப் பயிற்சியின்
ந�ோக்கமாகும். தாக்குதல், தேடுதல் மற்றும் அழித்தல்
ப�ோன்ற உத்தி சார்ந்த நடவடிக்கைகளை இரு தரப்பினரும்
மேற்கொள்வார்கள். கூடுதலாக, ராணுவ தற்காப்பு கலைகள்,
துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன்
ய�ோகா உடற்பயிற்சி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
மித்ரா சக்தி - 2023 பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் தவிர
ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள்
பயன்படுத்தப்படும். ஹெலிபேட்களை பாதுகாப்பது
மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ப�ோது
காயமடைந்தவர்களை வெளியேற்றுவது த�ொடர்பான
ஒத்திகைகளும் இரு தரப்பினராலும் கூட்டாக ஒத்திகை
செய்யப்படும்.
பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம்
கற்றுக்கொள்ள உதவும் பரந்த அளவிலான ப�ோர்த்
திறன்கள் குறித்த கூட்டுப் பயிற்சிகளின் கருத்துக்களையும்
நடைமுறைகளையும் இரு தரப்பினரும் பரிமாறிக் க�ொள்வார்கள்.
சிறந்த நடைமுறைகளைப் பகிர்வது இந்திய ராணுவத்திற்கும்,
இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான பாதுகாப்பு
ஒத்துழைப்பின் நடவடிக்கையை மேலும் மேம்படுத்தும்.
இந்தப் பயிற்சி இரு அண்டை நாடுகளுக்கும் இடையே
வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 அணிகள் கலந்துக�ொள்ளும் தேசிய ஆடவர்


ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் த�ொடக்கம்
13-வது தேசிய ஆடவர் ஹாக்கி
சாம்பியன்ஷிப் சென்னையில்இன்று
(17-ம் தேதி) த�ொடங்குகிறது. வரும்
28-ம் தேதி வரைநடைபெறும்
இந்தத் த�ொடரின்அனைத்து
ஆட்டங்களும் சென்னை எழும்பூரில்
உள்ள மேயர் ராதாகிருஷ்ணன்
ஹாக்கிமைதானத்தில் நடை vijayabharatham.org
பெறுகிறது.ம�ொத்தம் 28 அணிகள் கலந்து க�ொண்டு
பட்டம் வெல்ல ம�ோதுகின்றன. இவை 8 பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் சத்தீஸ்கர், குஜராத், நடப்பு சாம்பியன் ஹரியாணா
ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தமிழ்நாடு,
இமாச்சல் பிரதேசம், அசாம் அணிகளும், ‘சி’ பிரிவில் கர்நாடகா,
பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ
அணிகளும், ‘டி’ பிரிவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தராகண்ட்
அணிகளும் ‘இ’ பிரிவில் பெங்கால், மத்தியப் பிரதேசம், ஜம்மு
& காஷ்மீர், மணிப்பூர் ஆகிய அணிகளும், ‘எஃப்’ பிரிவில்
ஜார்கண்ட், சண்டி கர், ஆந்திரா, க�ோவா அணிகளும், ‘ஜி’
பிரிவில் உத்தரப்பிரதேசம், புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான்
அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் டெல்லி, ஒடிசா, தெலங்கானா,
அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்
இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் 25-ம்
9
தேதி நடைபெறுகிறது. த�ொடர்ந்து 27-ம் தேதி அரை இறுதி
ஆட்டங்களும், 28-ம் தேதி இறுதிப் ப�ோட்டியும் நடைபெறுகிறது.
இந்தத் த�ொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம்
பெற்றுள்ள அனைத்து வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக
களமிறங்குகின்றனர். த�ொடக்க நாளான இன்று தமிழக அணி
தனது முதல் ஆட்டத்தில் அசாம் அணியை எதிர்கொள்கிறது.
மற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேசம் - மணிப்பூர், மகாராஷ்டிரா
- உத்தராகண்ட் ஆகிய அணிகள் ம�ோதுகின்றன. இத்தகவலை
தமிழக ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் ஜே.மன�ோகரன்
தெரிவித்தார்.

டெல்லி மருத்துவமனையில் 7 ந�ோயாளிகள் உயிரிழப்பு: அறுவை


சிகிச்சை செய்த ப�ோலி மருத்துவர்கள் உட்பட 4 பேர் கைது
டெல்லியில் உள்ள
மருத்துவமனையில் ப�ோலி
மருத்துவர்களின் அறுவை
சிகிச்சையால் இதுவரை 7
ந�ோயாளிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரை
ப�ோலீஸார் கைது செய்துள்ளனர்.
vijayabharatham.org தெற்கு டெல்லியின் கிரேட்டர்
கைலாஷ் பகுதியில் டாக்டர் நீரஜ் அகர்வால் என்பவர் அகர்வால்
மருத்துவ மையம் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி
வருகிறார். இவர் சாதாரண மருத்துவர். அறுவை சிகிச்சை
நிபுணர் அல்ல. ஆனால், ப�ோலி ஆவணங்களை வைத்துக்
க�ொண்டு இவர் தனதுமருத்துவமனையில் அறுவை சிகிச்சை
மேற்கொண்டு வந்துள்ளார்.
இவரது மருத்துவமனையில் அஷ்கர் அலி என்பவர் பித்தப்பை
அறுவை சிகிச்சைக்காக கடந்தாண்டு அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு தகுதி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
ஜஸ்ப்ரீத்சிங் அறுவை சிகிச்சை மேற்கொள்வார் என
தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்
நீரஜ் அகர்வால் அவரதுமனைவி பூஜா, லேப் டெக்னீஷியன்
மகேந்திர சிங் என்பவரும் நுழைந்து அறுவை சிகிச்சை
செய்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப்பின் அஷ்கர் அலி கடும் வலியால்
துடித்துள்ளார். இதனால் அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு
அனுப்பப்பட்டார். ஆனால், அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு
செல்லும் வழியில் இறந்துவிட்டார். இங்கு ப�ோலி மருத்துவர்கள்,
தவறான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக
அஷ்கர் அலி உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து 4
மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் அகர்வால் மருத்துவ
மையத்தில் கடந்த 1-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது். இதில்
அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. இது குறித்து காவல்துறை
துணை ஆணையர் சந்தன் சவுத்திரி கூறியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து டாக்டர் அகர்வாலுக்கு எதிராக
9 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ கவனக்குறைவு
காரணமாக, இதுவரை 7 ந�ோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ப�ோலி
ஆவணங்களை வைத்துக்கொண்டு டாக்டர் நீரஜ் அகர்வால்
அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மருத்துவரின்
கையெழுத்து மட்டும்அடங்கிய 414 வெற்று மருந்துசீட்டுகளும்
10
அவரது மருத்துவமனையில் கைப்பற்றப்பட்டன. இங்கு
கருக்கலைப்பு செய்தவர்களின் விவரங்கள் அடங்கிய
இரண்டு பதிவேடுகளும் கைப்பற்றப்பட்டன. தடை
செய்யப்பட்ட மருந்துகள், ஊசிகள் ஆகியவற்றை இவர்கள்
இருப்பில் வைத்திருந்தனர். காலவதியான அறுவை சிகிச்சை
உபகரணங்கள், 47 வங்கிகளின் காச�ோலைகள், 54 ஏடிஎம்
கார்டுகள், தபால்அலுவலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள்,
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் வசூலிக்கும்
6 பிஓஎஸ் இயந்திரங்கள் ஆகியவை நீரஜ் அகர்வாலின் வீடு
மற்றும் மருத்துவமனையில் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு
சந்தன் சவுத்திரி கூறினார்.
கடைசியாக 2 ந�ோயாளிகள் இறந்தது த�ொடர்பாக டாக்டர்
நீரஜ்அகர்வால், அவரது மனைவி பூஜா,டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங்,
லேப் டெக்னீஷியன் மகேந்திர சிங் ஆகிய�ோரை ப�ோலீஸார்
கைது செய்தனர்.

பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல்வீச்சு;


ஹரியாணா நூ நகரில் புதிய பதற்றம்
ஹரியாணா மாநிலம் நூவில்
மசூதி ஒன்றிலிருந்து அடையாளம்
தெரியாத சிறுவர்கள் சிலர்
பூஜைக்குச் சென்ற பெண்கள் மீது
கற்கள் வீசியதால் அங்கு புதிய
பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நூ மாட்டத்தில் வியாழக்கிழமை
பூஜைக்குச் சென்ற பெண்கள் சிலர் vijayabharatham.org
மீது அங்குள்ள மசூதியில் இருந்து சிறுவர்கள் சிலர் கற்களை
வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கல்வீச்சில் பெண்கள்
காயமடைந்தனர். இந்த கல்வீச்சு சம்பவத்தினைத் தொடர்ந்து
அந்தப் பகுதியில் இரண்டு பிரிவினைச் சேர்ந்த பெண்களும்
கூடினர். இதனால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டது. இதனைத்
தொடர்ந்து நூ எஸ்.பி. போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்குச்
சென்று மக்களைச் சமாதானப்படுத்தினார். மேலும் அந்த மசூதி
மவுலானாவிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து நூ காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர
பிஜர்னியா கூறுகையில், "போலீஸாருக்கு சில வீடியோ
காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் சிறுவர்கள் சிலர் பூஜைக்கு
செல்லும் பெண்கள் மீது கற்கள் வீசுகின்றனர். சம்பவம் நடந்த
மசூதியில் சில கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றது. இச்
சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.20 மணிக்கு நடந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வீடியோவில் உள்ள சிறுவர்களிடம்
விசாரிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டிய நூ
பகுதியில் கடந்த ஜூலை 31ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத்
சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது.
இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தப�ோது
இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய
நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள்
ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பும் ம�ோதிக் க�ொள்ள கலவரம் மூண்டது.
11
இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர்
பலியாகினர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து நூவின் எஸ்.
பி.யாக இருந்த வருண் சிங்லா மாற்றப்பட்டு, நரேந்திர
பிஜர்னியா நூவின் எஸ்.பி.யாக பொறுப்பேற்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தை பிறந்தால் ரூ.2 லட்சத்தில் சேமிப்பு


பத்திரம்: ராஜஸ்தானில் பாஜக தேர்தல் வாக்குறுதி
பெண் குழந்தை பிறந்தால் ரூ.2
லட்சத்தில் சேமிப்பு பத்திரம், நிலம்
ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு
இழப்பீடு பாலிசி ஆகியவை உட்பட
ராஜஸ்தானில் வெளியிட்ட தேர்தல்
அறிக்கையில் பாஜக வாக்குறுதி
அளித்துள்ளது.
vijayabharatham.org ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்
பேரவை தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான
பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள்தேர்தல்
அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பிரச்சார
கூட்டத்தில் கலந்துக�ொண்டார். அப்போது பாஜக.வின்தேர்தல்
அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
• உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு காஸ்
சிலிண்டருக்கு ரூ.450 மானியம் அளிக்கப்படும்.
• 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
• காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க
சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்படும்.
• பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்
மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும். அனைத்து
காவல் நிலையங்களிலும் மகளிர் பிரிவு ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு நகரிலும் ஈவ் டீசிங் பிரச்சினையை தடுக்கும் பிரிவு
த�ொடங்கப்படும்.
• பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ரூ.2
லட்சம் மதிப்பில் சேமிப்பு பத்திரம் வழங்கப்படும்.
• நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
பாலிசி வழங்கப்படும்.
இது ப�ோல் பல வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில்
இடம் பெற்றுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரயில்கள்


அடுத்த 5 ஆண்டுகளில்
நாடு முழுவதும் 3 ஆயிரம் புதிய
ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய
ரயில்வே திட்டமிட்டுள்ளதாக
மத்திய அமைச்சர் அஸ்வினி
வைஷ்ணவ் தெரிவித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: vijayabharatham.org

12
தற்போது இந்திய ரயில்வே ஆண்டுக்கு 800 க�ோடி பயணிகளை
சுமந்து செல்கிறது. இது அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில்
1000 க�ோடியாக அதிகரிக்கப்படும். இதற்காக, நமக்கு 3,000
கூடுதல் ரயில்கள் தேவை. இதற்காக அடுத்த 4, 5 ஆண்டுகளில்
3 ஆயிரம் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். அதேப�ோன்று
ரயில்களின் பயண நேரத்தை குறைப்பதும் மற்றொரு இலக்காக
உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் பெண்கள் மீதான அத்துமீறல்:


குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
சென்னையில், ஐ.டி., துறையில்
பணியாற்றும் பெண் ஒருவருக்கும்,
7ம் வகுப்பு படிக்கும் பள்ளி
மாணவி ஒருவருக்கும் மர்ம
நபர்கள் பாலியல் த�ொல்லை
க�ொடுத்துள்ளனர். இது குறித்து
புகாரளித்தும் இதுவரை யாரும் கைது
vijayabharatham.org செய்யப்படவில்லை. தரமணியில்
உள்ள ஐ.டி., கம்பெனியில் மென் ப�ொறியாளராக
பணிபுரிந்துவரும் இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம்
இரவில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் க�ோயிலில் சாமி
தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். பெருங்குடியில்
உள்ள ஐயப்பன் கிராஸ் தெருவில் தனியாக நடந்து
சென்றப�ோது, மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணை
பின்தொடர்ந்துள்ளார். அவரிடம் 'தவறான சைகை' காண்பித்து
த�ொல்லை தந்துள்ளார்.
மேலும் பசைப்போன்ற திரவத்தையும் அவர் மீது எறிந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அங்கிருந்து தப்பிய�ோடி
வீட்டுக்கு வந்து விவரத்தை கூறியுள்ளார். சம்பவம் த�ொடர்பாக
துரைப்பாக்கம் ப�ோலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.
ப�ோலீசாரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை
ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரும் கைது
செய்யப்படவில்லை.
அதேப�ோல், அண்ணாநகர் கிழக்கு பகுதியில் வசிக்கும்
7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், டி.பி.சத்திரம்
பகுதியில் டியூசன் சென்று வீடு திரும்பியுள்ளார். ஆர்.
வி.நகர் 4வது தெரு அருகே வந்தப�ோது ஹெல்மெட்
அணிந்த நபர் ஒருவர் மாணவியின் அருகில் வந்து பாலியல்
த�ொல்லை க�ொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி சப்தம்
ப�ோட்டதால் அந்நபர் உடனடியாக பைக்கில் அங்கிருந்து தப்பி
சென்றுள்ளார்.
நடந்த சம்பவத்தை மாணவி வீட்டில் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தந்தை டி.பி.சத்திரம்
ப�ோலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த மர்ம நபர்
குறித்து ப�ோலீசார் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை
எனக் கூறப்படுகிறது. தலைநகரில் ஒரே நாள் இரவில்
இரு வேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற
பெண்களுக்கு பாலியல் த�ொல்லை க�ொடுக்கப்பட்டது
மட்டுமின்றி, புகார் அளித்தும் கைது செய்யப்படாததால்,
ப�ொதுமக்கள் இரவில் வெளியே வர அச்சம்
தெரிவித்துள்ளனர்.
13
உலக க�ோப்பை பைனல்: நேரில் காண வருகிறார் பிரதமர் ம�ோடி
நவ.,19ல் நடக்கவுள்ள இந்தியா
ஆஸ்திரேலியா அணிகளுக்கு
இடையேயான உலக க�ோப்பை
கிரிக்கெட் பைனலை பிரதமர் ம�ோடி
நேரில் காண உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. இந்தியாவில்
13வது உலக க�ோப்பை கிரிக்கெட்
த�ொடர் இறுதிக்கட்டத்தை vijayabharatham.org
எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா,
தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள்
அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில்
த�ோல்வியே சந்திக்காத இந்திய அணி, நியூசிலாந்தை
வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. நேற்று (நவ.,16) நடந்த
2வது அரையிறுதியில் தென்ஆப்ரிக்காவை த�ோற்கடித்து
ஆஸ்திரேலியா பைனலுக்கு தகுதிப்பெற்றது.
நாளை மறுநாள் (நவ.,19) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்
உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான
நரேந்திர ம�ோடி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா
அணிகள் ம�ோதுகின்றன. ப�ோட்டிக்கு முன்னதாக நிறைவு
விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக
இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல சினிமா நடிகர், நடிகைகளும் பங்கேற்கின்றனர்.
பைனலை நேரில் பார்வையிட பிரதமர் ம�ோடிக்கு இந்திய
கிரிக்கெட் ப�ோர்டு (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பை ஏற்று, பிரதமர் ம�ோடி பைனலை நேரில் காண வர
முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேப�ோல்,
ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடந்த
20 ஆண்டுகளுக்கு முன்பாக 2003ல் நடந்த உலக க�ோப்பை
பைனலில் ம�ோதின. அதில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம்
வென்றது.

பயன்படுத்தாத யு.பி.ஐ.,க்கு ஆபத்து:


டிச.,31 கடைசி தேதியாம்..
ஓராண்டுக்கு மேலாக பயன்படுத்தாத யுபிஐ ஐடிகளை
டிச.,31க்கு பின் செயலிழக்க செய்யும் வழிகாட்டுதல்களை
என்.பி.சி.ஐ (நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப்
இந்தியா) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண
பரிமாற்றத்திற்கு ஜி பே, ப�ோன்பே, பேடிஎம் உள்ளிட்ட
ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுகின்றன. இந்த
சேவைகள் யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (யு.பி.ஐ)
கீழ் செயல்படுகிறது. பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன்
த�ொடர்புடைய யு.பி.ஐ மூலமாக டிஜிட்டல் முறையில்
பணத்தை பரிமாற்றி க�ொள்ளலாம். இந்த நிலையில்,
ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை செய்யாத யுபிஐ.,கள்
டிச.,31க்கு பிறகு செயலிழந்து விடும் என மத்திய அரசு
எச்சரித்துள்ளது. நமது யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்யும்
14
புதிய வழிகாட்டுதல்களை என்பிசிஐ (நேஷனல் பேமன்ட்ஸ்
கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) அறிவித்துள்ளது. அதன்படி,
அனைத்து வங்கிகளும், ஜி பே, ப�ோன்பே ப�ோன்ற மூன்றாம்
தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த
பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், யுபிஐ
ஐடிகள் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் தடை செய்யப்படும்'
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள்
காரணமாக தவறான நபரின் கணக்கில் பணம். மாற்றப்படுவது
தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை


உடனடியாக திரும்பப் பெறுக: அரசுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
"விவசாயிகள் 7 பேர் மீதான
குண்டர் தடுப்புக் காவல்
சட்டத்தை உடனடியாக திமுக
அரசு திரும்பப் பெற வேண்டும்.
இல்லையெனில், விவசாயிகளின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் அவர்களுக்கு ஆதரவாக,
அதிமுக ப�ோராட்டத்தையும், vijayabharatham.org
ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்"
என்று அக்கட்சியின் ப�ொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கூறியுள்ளார்.
இதுத�ொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் த�ொகுதி,
அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை,
குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான்,
இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த
சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு க�ொண்ட விவசாய விளை
நிலங்களை `சிப்காட் த�ொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற
பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த திமுக
அரசு பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய
வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை
கையகப்படுத்தக் கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும்
15
விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக
அறப் ப�ோராட்டத்தைக் கையிலெடுத்து த�ொடர்ந்து
ப�ோராடி வருகின்றனர். ப�ோராட்டத்தில் பங்கெடுக்கும்
விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும்
என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும்
என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள்
மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் திமுக அரசு
த�ொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது. எல்லாவற்றிற்கும்
மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான
முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது த�ொடர்
வழக்குகளைப் பதிவு செய்துள்ளத�ோடு, அவர்கள் ப�ொது
அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக்
காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை
இந்த திமுக அரசு ப�ோட்டிருக்கிறது.
மேல்மா கூட்டு ர�ோடு, கூழமந்தல் ப�ோன்ற பகுதிகள்
ப�ோர்க்களம் ப�ோல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் ச�ொல்ல
வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்
ப�ோட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் ப�ோல, அங்கே
முள் வேலிகளைக் க�ொண்டுவந்து தடுப்புகளை அமைத்து,
பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா
வாகனங்களையெல்லாம் க�ொண்டுவந்து நிறுத்தி, விவசாயப்
பெருங்குடி மக்களின் ப�ோராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு
முயல்கிறது.
அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின்
நியாயமான ப�ோராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய
நிலங்கள் பறிப�ோய்விடும�ோ என்ற அச்சத்தில் வேளாண்
பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் ப�ோராடி
வருவதை ஒடுக்குவதற்கும், திமுக அரசு காவல் துறையை
த�ொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது.
விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக்
காவல் சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற
வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அதிமுக
ப�ோராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும்
என்று எச்சரிக்கிறேன்.

தமிழகத்திற்கு மின்சாரம்; நிறுவனங்கள் கைவிரிப்பு!


அடுத்த ஆண்டு க�ோடை காலத்திற்கு தேவையான மின்சாரம்
க�ொள்முதல் செய்ய, மின் வாரியம் ஏற்கனவே, 'டெண்டர்'
க�ோரிய நிலையில், ஒரு நிறுவனமும் முன்வரவில்லை. இதனால்,
ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, 1,500 மெகா வாட்
மின்சாரம் வாங்க, மீண்டும் டெண்டர் க�ோரப்பட்டுள்ளது. தமிழக
மின் தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட் என்றளவில்
உள்ளது. அதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் ச�ொந்த மின்
நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் ப�ோதவில்லை.
அதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம்
இருந்து, மின்சாரம் க�ொள்முதல் செய்யப்படுகிறது.
வரும், 2024ல் க�ோடை வெயிலுடன், ல�ோக்சபா தேர்தலும்
நடக்கிறது. எனவே, இந்தாண்டு ஏப்ரலில், 19,000 மெகா
வாட்டாக அதிகரித்த மின் தேவை, 2024ல், 20,000 மெகா
வாட்டை தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதை
பூர்த்தி செய்ய, அதிக மின்சாரம் தேவை. இதனால், 2024 மார்ச்
16
1 முதல் 31 வரை தினமும், 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்க,
மின் வாரியம் இந்தாண்டு செப்டம்பரில் டெண்டர் க�ோரியது.
மேலும், இந்தாண்டு டிச., 1 முதல் 2024 பிப்., வரை தினமும்
காலை 6:00 முதல் 8:00 மணி வரை, 1,000 மெகா வாட்; மாலை
6:00 முதல் 9:00 வரை, 2,200 மெகா வாட் க�ொள்முதல் செய்ய,
அக்டோபரில், 'டெண்டர்' க�ோரப்பட்டது.
இதுதவிர, 2024 மார்ச் முதல் மே வரை, மாலை 6:00 முதல்
இரவு 9:00 வரை, 2,000 மெகா வாட்டும்; 2024 ஏப்ரலில்
தினமும், 500 மெகா வாட் மின்சாரம் வாங்க அறிவிப்பு
வெளியானது. ல�ோக்சபா தேர்தலால், அனைத்து மாநில
அரசுகளும் மின்சாரம் வாங்க, பல்வேறு நிறுவனங்களுடன்
ஒப்பந்தம் செய்து வருகின்றன. இதனால், மின்சாரத்திற்கான
தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க, ஒரு
நிறுவனமும் முன்வரவில்லை. இதையடுத்து, 2024 ஜன., 1ம்
தேதி முதல் மே 31 வரை தினமும் காலை 6:00 முதல், 8:00 மணி
வரை, 250 மெகா வாட்டும்; மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி
வரை, 1,000 மெகா வாட்டும் மின்சாரம் வாங்க, மின் வாரியம்
நேற்று, 'டெண்டர்' க�ோரியுள்ளது. இது தவிர, ஜன., முதல் மே
வரை ஐந்து மாதங்களுக்கு, 24 மணி நேரமும், 250 மெகா வாட்
மின்சாரம் வாங்கவும் டெண்டர் க�ோரப்பட்டுள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின்
வாரியம், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மின்சாரம் வாங்க
அறிவிப்பு வெளியிடுவதால், நிறுவனங்கள் முன்வரவில்லை.
எனவே, மீண்டும் டெண்டர் க�ோரப்பட்டுள்ளது. 1 யூனிட்
மின்சாரம், 6 ரூபாய் அளவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî«.
93613 99006, 96004 78526
17

You might also like