You are on page 1of 15

É#aghuj«

Ä‹dQ âd ïjœ (jÅ¢R‰W) VIJAYABHARATHAM DAILY


Fnuhâ, á¤âiu - 10 br›thŒ 23.4.2024 ky® - 5, ïjœ - 06

பாஜகவுக்கு முதல் வெற்றி; குஜராத் மாநிலம் சூரத்


தொகுதியிலிருந்து முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்
நிலேஷ் கும்பானியின் வேட்புமனு
நிராகரிக்கப்பட்டதோடு மற்ற
வேட்பாளர்கள் அனைவரும்
வேட்பு மனுக்களை வாபஸ்
பெற்றதையடுத்து, ஏப்ரல்
22 அன்று சூரத் மக்களவைத்
த�ொகுதியில் பாஜகவின் முகேஷ் vijayabharatham.org
தலால் ப�ோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ்
கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுக்கள்
நிராகரிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அவரது வேட்புமனுப்
படிவத்தில் கையெழுத்திடவில்லை என்று அவரது மூன்று
முன்மொழிபவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பிரமாணப்
பத்திரத்தில் கூறியதை அடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாநில பிஜேபி தலைவர் சிஆர் பாட்டீல் எக்ஸ் (முன்னாள்,
ட்விட்டர்) இல், “சூரத் [மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரபாய்
ம�ோடிக்கு முதல் தாமரையை வழங்கியுள்ளார்]” என்று
திரு தலாலை வாழ்த்துவதற்காக பாஜக தலைவர்கள் சமூக
ஊடகங்களில் விரைந்தனர். ஏப்ரல் 21 அன்று, மாவட்ட தேர்தல்
அதிகாரி (DEO) ச�ௌரப் பார்தி, காங்கிரஸ் வேட்பாளரின்
வேட்புமனுவை நிராகரித்தார், ஏனெனில் அவரது மூன்று
முறைகளும் அவரது வேட்புமனு படிவத்தை ஆதரிக்க DEO
முன் வரவில்லை. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம்
ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து ப�ோட்டியிடுகின்றன.
26 இடங்களில் 24 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளது, ஆம் ஆத்மி கட்சி பாவ்நகர் மற்றும் பருச் ஆகிய
இடங்களில் ப�ோட்டியிடுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின்
இணையதளத்தின்படி, காங்கிரஸ் மற்றும் பாஜக தவிர, பகுஜன்
சமாஜ் கட்சி மட்டுமே சூரத் த�ொகுதியில் வேட்பாளரை
நிறுத்தியது.

அய�ோத்தி ராமர் க�ோயிலில் இதுவரை ஒன்றரை க�ோடி பேர் தரிசனம்


உலகப்புகழ் பெற்ற அய�ோத்தி
ராமர் க�ோயில் பிரான்பிரதிஷ்டை
செய்த பின்னர் இது வரை
த�ோராயமாக ஒன்றரை க�ோடி பேர்
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து
ராமபிராமனை தரிசித்துள்ளனர்.
இத்தகவலை ஸ்ரீராம ஜென்ம பூமி
vijayabharatham.org தீர்த்த ஷேத்ரா ப�ொதுசெயலர்
சம்பத்ராய் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த
ஜனவரி 22 ல் அய�ோத்தியில் ராமர் க�ோயில் பிரதிஷ்டை
செய்யப்பட்டது. இந்த நாள் முதல் தினமும் பக்தர்கள்
1
கூட்டம் குறைவில்லாமல் வந்து க�ொண்டிருக்கிறது. க�ோயில்
கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல்
தளம் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
க�ோயிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் கட்டி
முடிக்கப்படும். க�ோயில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள்
நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை
எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.ஒரே
நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக
கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை க�ோடிபேர் தரிசனம்
செய்துள்ளனர். இவ்வாறு சம்பத்ராய் கூறினார்.

மணிப்பூரில் மறு ஓட்டுப்பதிவு: பலத்த பாதுகாப்பு


ஜம்மு காஷ்மீரில் 10 இடங்களில்
தேசிய புலனாய்வு படையினர்
(என்.ஐ.ஏ) அதிரடி ரெய்டு நடத்தி
வருகின்றனர். பயங்கரவாதிகளுடன்
த�ொடர்பு, பணபரிமாற்றம்,
பயங்கரவாத அமைப்பு வளர்ச்சிக்கு
நிதி திரட்டுதல் உள்ளிட்ட
சந்தேகத்தின் அடிப்படையில் இந்த vijayabharatham.org
ரெய்டு நடப்பதாக தெரிகிறது. இது த�ொடர்பாக ஏற்கனவே
மத்திய படை பிரிவு ப�ோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த ரெய்டில் துணை ராணுவத்தினர், மாநில ப�ோலீசார்
பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரசின் ஏ.டி.எம் கர்நாடகா: அண்ணாமலை


கர்நாடகாவை காங்கிரஸ்
ஏ.டி.எம்., ஆக பயன்படுத்தி
வருகிறது என தமிழக பா.ஜ.,
தலைவர் அண்ணாமலை குற்றம்
சாட்டியுள்ளார். கர்நாடகா மாநிலம்
பெங்களூரு தெற்கு த�ொகுதியில்
பா.ஜ., வேட்பாளர் தேஜஸ்வி
vijayabharatham.org சூர்யாவை ஆதரித்து, பா.ஜ., சார்பில்
நடந்த ர�ோடு ஷ�ோவில் அண்ணாமலை பேசியதாவது: வருவாய்
ஆதாரமாக இருந்த கர்நாடகா மாநிலம் காங்கிரசால் தற்போது
வறண்டு கிடக்கிறது. கர்நாடகாவை காங்கிரஸ் ஏ.டி.எம்., ஆக
பயன்படுத்தி வருகிறது. காங்., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு
ம�ோசமாக உள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க
த�ொலைந�ோக்கு பார்வை க�ொண்டவர் பிரதமர் ம�ோடி. இவ்வாறு
அண்ணாமலை பேசினார். ர�ோடு ஷ�ோவில் அண்ணாமலையை
த�ொண்டர்கள் மலர்தூவி வரவேற்றனர்.

வாரணாசியில் நகரத்தார் புதிய சத்திரத்துக்கு அடிக்கல்:


நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
தமிழக பக்தர்கள் தங்குவதற்காக, உத்தர பிரதேச மாநிலத்தில்
உள்ள வாரணாசியில், ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர
மேலாண்மை கமிட்டி கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல்
(ஏப்.,21) நாட்டப்பட்டது. இதில் மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் கலந்து 2 க�ொண்டார். ஹிந்துக்களின்
புனித தலமான வாரணாசியில்,
நாட்டுக்கோட்டை நகரத்தார்
சமூகத்தினருக்கு ச�ொந்தமான
சத்திரம் உள்ளது. 1813-ல்
கட்டப்பட்ட இந்த சத்திரத்தில், 210
ஆண்டுகளாக, தமிழக பக்தர்கள்
தங்கி, காசி விஸ்வநாதரை தரிசித்து
vijayabharatham.org
செல்கின்றனர். தற்போது, இந்த
சத்திரத்தில் ஒரே நேரத்தில், 620 பக்தர்கள் தங்கும் வசதி
உள்ளது. இந்நிலையில், சிக்ரா என்ற பகுதியில், ஆக்கிரமிப்பில்
இருந்த 240 க�ோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 2022ல் உ.பி.,
முதல்வர் ய�ோகி ஆதித்யநாத் மீட்டு க�ொடுத்துள்ளார். அங்கு,
100 அறைகளுடன், 10 மாடிகள் க�ொண்ட புதிய தங்குமிடம்
கட்டப்படும் என, நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை
கமிட்டி அறிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான அடிக்கல்
நேற்று நாட்டப்பட்டது. இதில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா
சீதாராமன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஸ்பிக்
குழுமங்களில் தலைவர் முத்தையா, அபிராமி மெகா மாலின்
சேர்மேன் அபிராமி இராமநாதன் ஆகிய�ோர் கலந்து க�ொண்டனர்.

பயங்கரவாதத்தை பிரதமர் ம�ோடி


ஒழித்துவிட்டார்: அமித்ஷா பெருமிதம்
நாட்டில் இருந்து
பயங்கரவாதத்தை பிரதமர் ம�ோடி
ஒழித்துவிட்டார் என மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷா
தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர்
மாநிலம் கான்கேர் மாவட்டத்தில்
நடந்த ப�ொதுக்கூட்டத்தில்
vijayabharatham.org அமித்ஷா பேசியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ப�ோது,
ஐந்து ஆண்டுகளாக நக்சல்கள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை
பிரதமர் ம�ோடி ஒழித்துவிட்டார். அனைவருடைய ச�ொத்துக்களும்
கணக்கெடுக்கப்படும் என்று பிரதமர் ம�ோடி தேர்தல்
அறிக்கையில் கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சல்
ஏற்பட்டுள்ளது. விரைவில் நக்சலைட் தாக்குதல்கள் முடிவுக்கு
வரும். ஓட்டு வங்கிக்காக அய�ோத்தியில் ராமர் க�ோவில்
கும்பாபிஷேக விழாவில் காங்கிரசார் பங்கேற்கவில்லை. கடந்த
10 ஆண்டுகளில், நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த
பிரதமர் ம�ோடி உழைத்துள்ளார். சத்தீஸ்கர் மக்கள் நலனுக்கு
காங்கிரஸ் அரசு என்ன செய்தது. இதை ராகுலிடம் நான் கேட்க
விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியா பெருமிதம் க�ொள்கிறது; - இந்திய செஸ் வீரர்


டி.குகேஷுக்கு பிரதமர் ம�ோடி வாழ்த்து
கேண்டிடேட்ஸ் செஸ் த�ொடரில் வெற்றி பெற்ற இந்திய செஸ்
வீரர் டி.குகேஷுக்கு பிரதமர் ம�ோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது த�ொடர்பாக பிரதமர் ம�ோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
"கேண்டிடேட்ஸ் செஸ் த�ொடரில் மிக இளம் வயதில் வெற்றி
3
பெற்றவர் என்ற சாதனையை
படைத்த டி.குகேஷ் பற்றி இந்தியா
பெருமிதம் க�ொள்கிறது. குகேஷின்
சாதனை அவரின் அசாதாரண
திறமை மற்றும் அர்ப்பணிப்பை
வெளிப்படுத்துகிறது. அவரது
சிறந்த செயல்திறன், வெற்றியை
ந�ோக்கிய பயணம் மில்லியன் vijayabharatham.org

கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.


கேண்டிடேட்ஸ் செஸ் த�ொடரின் 14-வது சுற்றில் இந்திய
கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றார்.
ம�ொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப்
த�ொடருக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். கனடாவில்
உள்ள ட�ொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ்
த�ொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் க�ொண்ட இந்த
செஸ் த�ொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற
சாதனையை டி.குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம்
உலக சாம்பியன்ஷிப் த�ொடரில் பங்கேற்கும் இரண்டாவது
இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டியுள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற 14-வது சுற்று ஆட்டத்தில்
டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு
நகமுராவுடன் ம�ோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன்
விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார். இதையடுத்து
அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உ.பி.யின் லாரியா டா


கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநிய�ோகம்
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர்
மாவட்டத்தில் இருந்து 49 கி.மீ
த�ொலைவில் மத்திய பிரதேச
எல்லையின் மலைப் பகுதியில்
அமைந்துள்ளது லாரியா டா என்ற
கிராமம். இங்கு சுதந்திரத்துக்கு
முன்பாக ஒரு சில குடும்பங்களே
vijayabharatham.org தங்கள் கால்நடைகளுடன்
வசித்தனர். இவர்கள் இங்குள்ள நீரூற்றில் தங்களுக்கு
தேவையான தண்ணீரை பெற்று வந்தனர்.
தற்போது இங்கு மக்கள் த�ொகை அதிகரித்து விட்டது.
ஊற்றில் சுரக்கும் நீர் கிராம மக்களின்தேவையை நிவர்த்தி
செய்யவில்லை. க�ோடை காலங்களில் நீரூற்று வற்றிவிட்டால்
இங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும். சமவெளிப் பகுதிக்கு
பால் வியாபாரத்துக்கு செல்பவர்கள் திரும்பிவரும்போது, பால்
கேனில் குடிநீர் க�ொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர். கடந்த
25 முதல் 30 ஆண்டுகளாக டேங்கர் மூலம் இந்தகிராமத்துக்கு
தண்ணீர் க�ொண்டுவரப்பட்டு விநிய�ோகிக்கப்பட்டது. இதனால்
இந்த கிராமத்தின் ஒட்டும�ொத்த பட்ஜெட்டும் தண்ணீருக்கே
செலவானது. இதற்க முன்பு இங்கு ரூ.4.87 க�ோடியில்
உருவாக்கப்பட்ட குடிநீர் திட்டம் பலனளிக்கவில்லை. இதனால்
லாரியா டா கிராம மக்கள்மாவட்ட ஆட்சியரை சந்தித்து
மனு அளித்தனர். அதன்பின் ரூ.10க�ோடியில் புதிய திட்டம்
க�ொண்டுவரப்பட்டது. புவியியல் நிபுணர்கள், பனாரஸ் இந்து
4
பல்லைக்கழக குழுவினர், ஜல் ஜீவன் திட்ட அதிகாரிகள், உ.பி
குடிநீர் வாரிய அதிகாரிகள், நமாமி கங்கை திட்ட அதிகாரிகள்
இணைந்து உருவாக்கிய குடிநீர் குழாய் திட்டம் தற்போது
பலனளித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மின் ம�ோட்டார்கள்
ப�ொருத்தப்பட்டு, தண்ணீர் மலை உச்சியில் உள்ளலாரியா டா
கிராமத்துக்கு க�ொண்டுசெல்லப்படுகிறது. இந்த கிராமத்துக்கு
கடந்தாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி குடிநீர் குழாய் இணைப்பு
க�ொடுக்கப்பட்டதால், தற்போது குடிநீர் விநிய�ோகம் தடையின்றி
கிடைக்கிறது. சுமார் 80 ஆண்டுகளுக்குப்பின் லாரியா டா என்ற
த�ொலைதூர கிராமத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் விநிய�ோகம்
செய்யப்பட்டுள்ளது.

இலவச திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட


வேண்டும்: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் வலியுறுத்தல்
இந்தியா ப�ோன்ற நாடுகள்,
நலிந்த நிலையில் உள்ள மக்களை
பாதுகாக்கும் ந�ோக்கில் இலவசத்
திட்டங்களைக் க�ொண்டு
வருகின்றன. ஆனால், அந்தத்
திட்டங்களின் செலவினங்கள்
குறித்து மக்களிடம் புரிதல்
ஏற்படுத்துவது அரசின் கடமை. vijayabharatham.org
அதேப�ோல், இலவச திட்ட அறிவிப்பு த�ொடர்பாக அரசியல்
கட்சிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும். சில
மாநிலங்கள் இலவச திட்டங்களை அறிவித்து நிதி ஒழுங்கை
கடைபிடிக்கத் தவறுகின்றன. எனவே இலவசத் திட்டங்கள்
த�ொடர்பாக பரந்த விவாதம் தேவை. இந்தத் திட்டங்களுக்கு
செலவழிப்பதால் என்ன பலன் கிடைக்கும், இந்தப் பணத்தை
வேறு திட்டங்களுக்கு செலவிட முடியுமா என்று சிந்திக்க
வேண்டும். எனவே, மத்திய அரசு இலவச திட்டங்கள் குறித்து
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு சுப்பாராவ்
கூறினார். சுப்பாராவ் மேலும் கூறுகையில், “இந்தியா 2047-
ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால்,
ஆண்டுக்கு 7.6 சதவீத அளவில் வளர்ச்சி காண வேண்டும் என்று
சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளது. இந்த இலக்கு
சவால் மிகுந்த ஒன்று. வளர்ந்த நாடு நான்கு அடிப்படைகளைக்
க�ொண்டிருக்க வேண்டும். சிறந்த சட்டங்கள், வலிமையான
அரசு, ஐனநாயக ப�ொறுப்புணர்வு, நிறுவனங்கள். நம்மிடம்
இந்த நான்கும் இல்லை என்று கூறிவிட முடியாது. அதேப�ோல்,
இவற்றை முழுமையாக நாம் க�ொண்டுள்ளோம் என்றும்
ச�ொல்லிவிட முடியாது. நாம் இன்னும் மேம்பட வேண்டும்”
என்று குறிப்பிட்டார்.

பாஜக 350 இடங்களில் வெற்றி பெறும்; தமிழகத்தில் 5 இடங்களில்


வெல்லும்: ப�ொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கருத்து
ப�ொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40
ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார்.
‘நாம் எப்படி வாக்களிக்கிற�ோம்’ என்ற தலைப்பில்புதிய
புத்தகம் எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களின் மனநிலை
வி வ ரி க ்க ப ்ப ட் டு ள்ள து . அவர் தனியார் டி.வி.
5
ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
கூறியிருப்பதாவது: கடந்த 2019-
ம் ஆண்டு மக்களவை தேர்தலை
விட, இந்த முறை பாஜக அதிக
இடங்களில் வெற்றி பெறலாம்.
புள்ளிவிவரங்கள் அடிப்படையில்
பாஜக தனித்து 330 முதல் 350
vijayabharatham.org இடங்களில் வெற்றி பெறும். பாஜக
கட்சிக்கு பிரதமர் தலைமையில் பிரச்சாரம் நடைபெறுவதால்,
கடந்த 2019-ம் ஆண்டைவிட 5 முதல் 7 சதவீத த�ொகுதிகள்
கூடுதலாக கிடைக்கும் எனத்தெரிகிறது. காங்கிரஸ் கட்சி 44
இடங்களில் வெற்றி பெறலாம். கடந்த 2014-ம் தேர்தலில்
வென்றதைவிட 2 சதவீதம் குறைவாகவே இருக்கும். எதிர்க்கட்சி
கூட்டணியில் உள்ள பிரச்சினை தலைமைதான். தேர்தலில்
வெற்றி பெற 2 விஷயங்கள் முக்கியம். முதலில் ப�ொருளாதாரம்
அடுத்து தலைமை. இந்த இரண்டும் பாஜக.,வுக்கு சாதகமாக
உள்ளது. பிரதமர் ம�ோடியைவிட பாதியளவாவது மக்களை
கவரும்வகையிலான தலைவரை எதிர்க்கட்சி கூட்டணி தேர்வு
செய்திருந்தால், அதை ப�ோட்டியாக கருதலாம். தமிழகத்தில்
பாஜக 5 இடங்களில் வெற்றி பெறும். கூடுதலாக வென்றாலும்
ஆச்சர்யம் இல்லை. கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு
இடங்களில் வெற்றி கிடைக்கலாம். இதற்கு காரணம் மக்களின்
வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம். மக்களின்
வாழ்க்கையில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
என்ற அடிப்படையில்தான் இந்திய மக்கள் வாக்களிக்கின்றனர்.
பணவீக்கம் அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது
எனஎதிர்க்கட்சிகள் எப்போதும் கூறும்.இந்தியாவில் கடந்த 2019-
ம் ஆண்டைவிட வேலைவாய்ப் பின்மை குறைவாகவே உள்ளது.
இவ்வாறு சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடந்து வரும் மக்களவை தேர்தலில் இருந்து


எதிர்காலத்துக்கான புதிய பயணம் த�ொடக்கம்: பிரதமர் ம�ோடி
‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக
திருவிழாவான மக்களவை தேர்தல்
நடந்து வருகிறது. இதில் இருந்து
எதிர்காலத்துக்கான புதிய பயணம்
த�ொடங்கும் என நம்புகிறேன்’’
என்று பிரதமர் ம�ோடி தெரிவித்தார்.
பகவான் மகாவீர் 2,550-வது ஜெயந்தி
விழா டெல்லியில் உள்ளபாரத vijayabharatham.org
மண்டபத்தில் நேற்று க�ொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு
விருந்தினராக பங்கேற்ற பிரதமர் ம�ோடி பேசியதாவது: நமது
நாடு விரக்தியில் இருந்த கால கட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு
பாஜக தலைமையிலான அரசு ப�ொறுப்பேற்றது. அப்போது
முதல் நமது தேசத்தின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்கு
அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதேநேரம்,
நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் செயல்படுத்தி
வருகிறது. தற்போது உலக அளவில்சந்திக்கும் பல்வேறு
பிரச்சினைகளுக்கு உண்மை, அகிம்சை மூலம் தீர்வு காண
முடியும் என்று இந்தியா தன்னம்பிக்கையுடன் எடுத்துரைக்கிறது.
அதற்கு நமது கலாச்சாரம் முக்கிய பங்காற்றி வருகிறது. ய�ோகா,
ஆயுர்வேதா ப�ோன்றநமது பாரம்பரிய அம்சங்களை
6
உலகம் முழுவதும் க�ொண்டு செல்ல பாஜக அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது. நமது பாரம்பரியம்தான் நமது அடையாளம்
என்பதை புதிய தலைமுறையினர் நம்புகின்றனர். தற்போது
மக்களவை தேர்தல் நடந்து க�ொண்டிருக்கிறது. இதில்
இருந்துதான் நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய பயணம்
த�ொடங்குகிறது என்று நம்புகிறேன். உலக அளவில் பல்வேறு
ம�ோதல்கள் நடந்துவரும் நிலையில், தீர்த்தங்கரர்கள், சமண
குருமார்களின் ப�ோதனைகள் தற்காலத்துக்கும் மிக அவசியமாக
உள்ளன. மத குருமார்களுக்கு தாமரையுடன் நெருங்கிய
த�ொடர்பு உள்ளது. புனிதமான செயல்களில் தாமரைமலர்கள்
பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய தாமரைதான்
பாஜகவின்சின்னமாக உள்ளது. இந்தியா மிக பழமையான
நாகரிகம் க�ொண்டது மட்டுமல்ல. மனித குலத்துக்கு
மிகவும் பாதுகாப்பான இடமும்கூட. பகவான் மகாவீரரின்
அமைதி, ப�ொறுமை, சக�ோதரத்துவம் ப�ோன்ற ப�ோதனைகள்
ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தரக்கூடியவை. இவ்வாறு
பிரதமர் ம�ோடி பேசினார். ராஜஸ்தானின் ஜல�ோர், வகாட்
நகரங்களில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில்
பிரதமர் ம�ோடி கலந்து க�ொண்டார். அவர் பேசியதாவது:
நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். என் வீட்டில் மின்சாரம்,
குடிநீர் வசதி கிடையாது. எனது தாய் விறகு அடுப்பில்தான்
சமையல்செய்வார். அதனால், ஏழைகளின் துயரங்களை என்னால்
புரிந்து க�ொள்ள முடியும். நான் பிரதமராக பதவியேற்ற பிறகு,
முதல்கட்டமாக பெண்களின் துயரத்தை துடைக்க நடவடிக்கை
எடுத்தேன். மத்திய அரசின் திட்டத்தால் ராஜஸ்தானில் மட்டும்
19 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்
தரப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம்
ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு
வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 11 க�ோடி
குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பழங்குடியின, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களின்
நலனுக்காக மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. ரேஷனில் இலவசமாக உணவு
தானியம் வழங்கப்படுகிறது. ஜல்ஜீவன் திட்டத்தில்
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. உஜ்வாலா
திட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ்
இணைப்பு வழங்கப்படுகிறது. இதைத் த�ொடர்ந்து, தற்போது
ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய தகடு ப�ொருத்தும்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தால் ஏழை
குடும்பங்களின் வீடுகளில் மின் கட்டணம் பூஜ்ஜியமாகும்.
லட்சாதிபதி பெண்கள் திட்டத்தில் இதுவரை ஒரு க�ோடி
பெண்கள் லட்சாதிபதிகளாகி உருவெடுத்து உள்ளனர்.
அடுத்தகட்டமாக 3 க�ோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற
அயராது பாடுபட்டு வருகிற�ோம். முத்ரா ய�ோஜனா திட்டத்தில்
இதுவரை ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மத்தியில்
3-வது முறையாக பாஜக பதவியேற்ற பிறகுஇந்த த�ொகை ரூ.20
லட்சமாக உயர்த்தப்படும். நேரு காலத்தில் சர்தார் சர�ோவர்
அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தை
காங்கிரஸ் அரசுகிடப்பில் ப�ோட்டது. நான் குஜராத்முதல்வரான
பிறகு அந்த திட்டத்தை நிறைவு செய்தேன். காங்கிரஸ் கட்சி
ஒரு காலத்தில் 400-க்கும் அதிகமான த�ொகுதிகளில் வெற்றி
பெற்றது. அந்த கட்சி இப்போது 300 த�ொகுதிகளில் மட்டுமே
ப�ோட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் ப�ோட்டியிட
7
தகுதியான வேட்பாளர்கள்கூட கிடைக்கவில்லை. மக்களவை
தேர்தலில் நேரடியாக ப�ோட்டியிடுவதற்குக்கூட காங்கிரஸ்
தலைவர்கள் தயங்குகின்றனர். அவர்கள் ராஜஸ்தானில் இருந்து
மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
காங்கிரஸும், இண்டியா கூட்டணியும் வாரிசு அரசியலை
பின்பற்றுகிறது. அந்த கட்சிகளின் தலைவர்கள், தங்கள்
பிள்ளைகளின் நலனில்மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர்.
பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியில்
அக்கறை செலுத்தி வருகிற�ோம். இண்டியா கூட்டணி
கட்சிகளின் நிலைமையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
அந்த கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே ம�ோதல்கள் அதிகரித்து
வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் ஒருவருக்கு எதிராக
ஒருவர் ப�ோட்டியிடுகின்றனர். இவர்களிடம் எப்படி நாட்டை
ஒப்படைப்பது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

2023-−24 நிதி ஆண்டில் மத்திய நேரடி வரி வசூல்


ரூ.19.58 லட்சம் க�ோடி: இலக்கை விட 7.40% அதிகம்
2023 ஏப்ரல் முதல் 2024
மார்ச் வரையிலான நிதி ஆண்டில்
ரூ.18.23 லட்சம் க�ோடி நேரடி வரி
வசூலிக்க மத்திய அரசு இலக்கு
நிர்ணயித்தது. இந்நிலையில்,
தற்போது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்
பட்டஅளவை விட ரூ.1.35
vijayabharatham.org லட்சம் க�ோடி கூடுதலாக வரி
வசூலாகியுள்ளது. 2023−-24 நிதி ஆண்டின் ம�ொத்த நேரடி வரி
வசூல் ரூ.23.37 லட்சம் க�ோடியாக உள்ளது. ரீபண்ட்டுக்குப்
பிறகான நிகர வரி வசூல் ரூ.19.58 லட்சம் க�ோடி ஆகும். 2022−-
23 நிதி ஆண்டில் ம�ொத்த நேரடி வரி வசூல் ரூ.19.72 லட்சம்
க�ோடியாகவும், ரீபண்ட்டுக்குப் பிறகான நிகர வரி வசூல்
ரூ.16.64 லட்சம் க�ோடியாகவும் இருந்தது. அந்த வகையில் 2022−-
23 நிதி ஆண்டுடன் ஒப்பிட 2023−-24 நிதி ஆண்டில் நிகர நேரடி
வரி வசூல் 17.70% அதிகரித்துள்ளது. தனிநபர் வருமான வரி
மற்றும் கார்ப்பரேட் வரி உள்ளிட்டவை நேரடி வரி வகையின்
கீழ் வருபவை. 2023−-24 நிதி ஆண்டில் நிகர தனிநபர் வருமான
வரி வசூல் ரூ.10.44 லட்சம் க�ோடியாக உள்ளது. இது முந்தைய
நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.23% அதிகம். அதேப�ோல்
நிகர கார்ப்பரேட் வரி வசூல் ரூ.9.11 லட்சம் க�ோடியாக உள்ளது.
இது 10.26% அதிகம் ஆகும். 2023−-24 நிதி ஆண்டில் ரூ.3.79
லட்சம் க�ோடி வரி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி
ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 22.74% அதிகம் ஆகும்.

குஜராத்தில் கழுதை பண்ணை வைத்து


மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் ச�ோலங்கி
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த திர்ரன்
ச�ோலங்கி தனது கிராமத்தில் கழுதைப் பண்ணை வைத்துள்ளார்.
அதில் இப்போது 42 கழுதைகள் உள்ளன. ஒரு லிட்டர் கழுதை
பால் சுமார் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. இதன்
மூலம் மாதந்தோறும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை
சம்பாதிக்கிறார். இதுகுறித்து ச�ோலங்கி கூறியதாவது: நான் அரசு
8
பணியில் சேர முயற்சி செய்தேன்.
ஆனால் தனியார் நிறுவனத்தில்தான்
வேலை கிடைத்தது. இதன்மூலம்
கிடைத்த சம்பளம் குடும்பத்தை
நடத்த ப�ோதுமானதாக இல்லை.
அப்போது கழுதை வளர்ப்பு குறித்து
கேள்விப்பட்டேன். இதுபற்றிய
vijayabharatham.org
தகவலை திரட்டிக்கொண்டு என்
ச�ொந்த கிராமத்தில் ரூ.22 லட்சம் முதலீட்டில் 20 கழுதைகளுடன்
ஒரு பண்ணையை நிறுவினேன். இப்போது என்னிடம் 42
கழுதைகள் உள்ளன. குஜராத்தில் கழுதை பாலுக்கான தேவை
அவ்வளவாக இல்லை. முதல் 5 மாதத்தில் லாபம் எதுவும்
கிடைக்கவில்லை. பின்னர் தென்னிந்தியாவில் கழுதை பாலுக்கு
தேவை இருப்பதை உணர்ந்து, அங்குள்ள சில நிறுவனங்களை
அணுகி கழுதை பாலுக்கான ஆர்டர் பெற்றேன். இப்போது
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி
வருகிறேன். குறிப்பாக சில அழகுசாதன ப�ொருட்கள் தயாரிப்பு
நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகிறேன். அந்நிறுவனங்கள்
தங்கள் தயாரிப்பில் இந்த பாலை பயன்படுத்துகின்றன. ஒரு
லிட்டர் பால் ரூ.5 ஆயிரம்முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை
ஆகிறது. கழுதை பாலைபிரீஸர்களில் வைத்து பாதுகாக்கலாம்.
பாலை உலர வைத்து தூள் வடிவிலும் விற்பனை செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கழுதைப் பால் ந�ோய் எதிர்ப்பு
சக்தி உட்பட பல்வேறு மருத்துவ குணங்களைக் க�ொண்டது.
மனித பாலுக்கு நிகரான குணம் க�ொண்ட இந்த பால்
பழங்காலத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
எகிப்து ராணி கிளிய�ோபட்ரா குளிப்பதற்காக கழுதைப் பாலை
பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், கல்லீரல், மூக்கில்
ரத்தம் வடிதல், விஷமுறிவு, த�ொற்று ந�ோய்கள் மற்றும் காய்ச்சல்
குணமாக, கிரேக்க நாட்டின் மருத்துவர் ஹிப்போகிரேட்ஸ்
கழுதைப் பாலை பரிந்துரை செய்தார் என வரலாறு கூறுகிறது.
இவ்வளவு பலன்கள் இருந்தும் கழுதை பால் கிடைப்பது அரிதாக
உள்ளது. இதனால் அதன் விலை அதிகமாக உள்ளது.

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்:


கண்ணீருடன் மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை
கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச்
சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்
ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில்
காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார்.
இவரது மகள் நேஹா ஹிரேமத்,
ஹுப்பள்ளியில் உள்ள கே.எல்.இ.
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்
vijayabharatham.org எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து
வந்தார். அவருடன் படித்த ஃபயாஸ் (23) என்ற மாணவர்
பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி
கொலை செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள்
சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த
சம்பவத்துக்கு லவ் ஜிகாத் தான் காரணம் என மாணவியின்
தந்தை குற்றம் சாட்டி உள்ளார். இந்த நிலையில் கொலை
செய்த ஃபயாஸின் தந்தை இந்த சம்பவம் மிகுந்த
9
அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளதாக கூறியதுடன்
இருகரம் கைகூப்பி மன்னிப்பும் கோரியுள்ளார். இதுகுறித்து
பாபா சாஹேப் சுபானி கூறியதாவது: இந்த கொலை சம்பவம்
குறித்து வியாழன் மாலை 6 மணிக்குத்தான் தகவல் தெரிந்தது.
அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். எதிர்காலத்தில் இதுபோன்ற
செயலை யாரும் செய்யத் துணியாத வகையில் அவன் (மகன்
ஃபயாஸ்) தண்டிக்கப்பட வேண்டும். நேஹாவை இழந்து
வாடும் குடும்ப உறுப்பினர்களிடமும், கர்நாடக மக்களிடமும்
நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவளும் என் மகள்
போன்றவள்தான். நானும் எனது மனைவியும் 6 வருடங்களாக
பிரிந்து வாழ்கிறோம். ஃபயாஸ் அவரது தாயாருடன்தான்
தங்கியுள்ளான். ஃபயாஸும், நேஹாவும் ஒருவரையொருவர்
விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும்
கூறினான். ஆனால் அதற்குநான் மறுப்பு தெரிவித்தேன். என்
மகனின் இந்த செயல் முனவல்லிக்கே (ஃபயாஸின் சொந்த
ஊர்) கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது. இதற்காக என்னை
மன்னித்து விடுங்கள். இவ்வாறு சுபானி கூறினார். நேஹாவை
குத்தி கொலை செய்த ஃபயாஸை தூக்கிலிட வேண்டும்.
அப்போதுதான் தங்களது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என
மாணவியின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணி;


இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு க�ொண்டுவர திட்டம்
சென்னை நகரின் ப�ோக்குவரத்து
நெரிசலைக் குறைக்கும்
வகையில், வண்டலூரை அடுத்த
கிளாம்பாக்கத்தில் ரூ.394 க�ோடி
மதிப்பில் புதிய பேருந்து நிலையம்
கட்டப்பட்டு, கலைஞர் நூற்றாண்டு
புதிய பேருந்து முனையம் என்று
பெயரிடப்பட்டு கடந்த ஜனவரி vijayabharatham.org
மாத இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில்
ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்த பேருந்து நிலையத்துடன் புறநகர்
மின்சார ரயில் சேவையை இணைக்கும் வகையில், தாம்பரம் -
செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில்
க�ோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பயணிகளின்
வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து
நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தெற்கு
ரயில்வேயிடம் தமிழக அரசு கேட்டுக் க�ொண்டது. இதையடுத்து,
ரூ.20 க�ோடிமதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு
செய்யப்பட்டது.
அதன்படி, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையம்
அமைக்க, பணிகள்தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய
கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து,
மக்கள் பயன்பாட்டுக்கு க�ொண்டுவர சென்னை ரயில்வே
க�ோட்டம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே
10
க�ோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரூ.20 க�ோடி மதிப்பில்
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி த�ொடங்கி
நடைபெறுகிறது. இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார
ரயில்கள் நின்று செல்லும் வகையில், மூன்று
நடைமேடைகளுடன் அமையஉள்ளது. நடைமேடை
அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள்
நடைபெற்று வருகின்றன. இதுவரை, 10 சதவீத பணிகள்
முடிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளம் மறுசீரமைப்பு உள்பட
பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மின்தூக்கி,
நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம், ரயில்
நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் ப�ோன்ற
உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த
ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு
க�ொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள்
கூறினர்.

டாக்டர் ஹெட்கேவார் ஸமாரக் சமிதி சார்பில் அம்பேத்கர்


க�ொள்கையை பின்பற்றி சேவை செய்த 5 பேருக்கு விருது
டாக்டர் ஹெட்கேவார்
ஸமாரக் சமிதி சார்பில் அம்பேத்கர்
க�ொள்கையை பின்பற்றி சேவை
செய்த 5 பேருக்கு விருது
வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்-ன்
ஒரு அங்கமான டாக்டர்
ஹெட்கேவார் ஸமாரக்
vijayabharatham.org சமிதி அறக்கட்டளை சார்பில்
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சமுதாய
நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழா சென்னை
சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில்
நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு ராமகிருஷ்ண மிஷன்
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.சுகுமாரன், துளசிதாஸ்
பவுண்டேஷன் நிறுவனர் வி.டி.பிரதீப்குமார், வட தமிழகம்
ஆர்எஸ்எஸ் மாநில இணை செயலாளர் ஏ.ராமகிருஷ்ண
பிரசாத்,முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், டாக்டர்
ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அறக்கட்டளை தலைவர் எம்.
கே.ஆர்.ம�ோகன் உள்பட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து
க�ொண்டனர். இந்த விழாவில், அம்பேத்கரின் க�ொள்கைகளை
பின்பற்றி, சமுதாயத்தில் நிலவும் வேறுபாடுகளை களைந்து,
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சேவை செய்துவரும்,
ஸ்ரீ ரங்க பராங்குச பரகால ராமானுஜமடம் மடாதிபதி
பிள்ளை நரசிம்மப்பிரியா, டாக்டர் அம்பேத்கர் ப�ொதுநல
மன்றத்தின் தலைவர் பகத்சிங்,டாக்டர் அம்பேத்கர்
டியுஷன் சென்டர் (வியாசர்பாடி) நிறுவனர் சுகன்யா,
டாக்டர் அம்பேத்கர் மன்றம் டியூஷன் சென்டர் (பெரம்பூர்)
நிறுவனர் வி.சூரியகுமார், சிவபண்டார வழிபாடு நீத்தார்
கடன் மற்றும் முத்தி வழிபாடு அருள் சேவகர் ஸ்ரீகாந்த்
உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட
தமிழகம் ஆர்எஸ்எஸ் மாநில இணை செயலாளர் ஏ.ராமகிருஷ்ண
பிரசாத் பேசியதாவது: சமுதாயத்தில் எதிர்மறையான
விஷயங்கள்தான் தற்போது அதிகம்வெளியே தெரிகிறது.
ஆனால், நமதுசமுதாயம் உண்மையில் அவ்வாறு இல்லை.
11
நேர்மறையான விஷயங்களும் அதிகம் சமுதாயத்தில் இருக்கிறது.
அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. டாக்டர் ஹெட்கேவார்
ஆர்எஸ்எஸ் பயிற்சி பெறுபவர்களுக்கு நேர்மறையான
சிந்தனைகளை விதைத்திருக்கிறார். சமுதாயத்தில் இன்றைக்கும்
நல்ல விஷயங்கள் செய்யக்கூடியவர்கள் ஏராளமான�ோர்
உள்ளனர். அனைவரையும் மதிக்க வேண்டும். இதைத்தான்
அம்பேத்கரும், டாக்டர் ஹெட்கேவாரும் கூறுகிறார்கள். இந்து
தர்ம க�ொள்கையும் அதைதான் ச�ொல்கிறது. அனைவருக்குள்ளும்
இறை தன்மை உள்ளது. அதனால், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என
யாரும் இல்லை. நாம் உள்வாங்கும் விஷயங்கள் எதிர்மறையாக
இருக்கும்போது அதுநமது ஆர�ோக்கியத்தை பாதிக்கிறது.
சமுதாயத்தில் அற்புதமான விஷயங்கள் ஏராளமாக நடக்கின்றன.
அதனைஉள்வாங்கினால், நமது ஆர�ோக்கியம் நன்றாக இருக்கும்.
எனவே,சுயநலம் இல்லாமல், மற்றவர்கள் செய்யக்கூடிய நல்ல
விஷயத்தையும் நாம் வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர்
கூறினார்.

க�ோவை த�ொகுதியில் வாக்காளர்கள் நீக்கம்; திமுகவின் திட்டமிட்ட


விஞ்ஞான முறைகேடு: பாஜக விவசாய அணி மாநில தலைவர் குற்றச்சாட்டு
வாக்காளர்கள் நீக்கம் திமுகவின்
திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு
என பாஜக விவசாய அணி
தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம்
சாட்டியுள்ளார்.
இதுத�ொடர்பாக, அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப் பதாவது: மக்களவைத் vijayabharatham.org
தேர்தலில் க�ோவையில் உள்ள 2,048 வாக்குச்சாவடி களிலும்
பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடியவர்கள் நீக்கப்பட்டிருக் கிறார்கள்
என்ற செய்தி, அன்றைய தினம் 12 மணியளவில் வெளியானது.
இதனால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க
முடியாமல் பலர் திகைத்து நின்றப�ோதே தெரிந்தது. இவர்கள்
அனைவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாக்களித்து
வருபவர்கள். ச�ொந்தவீட்டில் வசித்து வருபவர்கள்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே வாக்காளர்கள்
நீக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்தும் ம�ௌனம் காத்து
கூட்டுச்சதி செய்துள்ளார்கள். ஏனென்றால் இவர்கள் வாக்குகள்
இக்கட்சிகளுக்கு விழாது. இது திமுகவின் விஞ்ஞான முறைகேடு.
அதில் உச்சகட்டமே கவுண்டம் பாளையம் சட்டப்பேரவைத்
த�ொகுதி வாக்குச்சாவடி எண் 214அங்கப்பா பள்ளியில் 823
வாக்காளர் கள் நீக்கப்பட்டிருப்பதுதான்.
அதேப�ோல் தெப்பக்குளத்தில் வாக்குச்சாவடி எண் 158-ல்
40 வாக்குகளும்,157-ல் 45 வாக்குகளும்,156-ல் 20 வாக்குகளும்,
155-ல் 40 வாக்குகளும்,154 –ல் 30 வாக்குகளும்,153-ல் 25
வாக்குகளும் என 200 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதுப�ோல
க�ோவையில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
1,353 வாக்குகள் இருந்த அங்கப்பா மேனிலைப்பள்ளியில்
823 வாக்குகள் குறைந்தப�ோதே விழித்திருக்க வேண்டிய
மாவட்டநிர்வாகம் மவுனம் காத்து திமுகவின் விஞ்ஞான
முறைகேட்டுக்கு துணைப�ோயிருக்கிறது. மாவட்ட ஆட்சியர்
உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளர்
12
பட்டியல் திருத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இது
சம்பந்தமாக மனுக�ொடுக்க முற்பட்டப�ோது அங்கு காத்திருந்த
வழக்கறிஞர்களை நீண்டநேரம் காக்க வைத்து தேர்தல்
முடிந்தபின்பு புகார் மனுவை பெற்றுக்கொண்டதே திமுகவின்
முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகம் துணைப�ோகிறது
என்பதற்கு சாட்சி. ஆனால், பாஜக இத்துடன் விடாது. ஜனநாயக
ரீதியாக த�ொடர்போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு
அவர் குறிப்பிட் டுள்ளார்.

திமுகவின் சர்வாதிகாரப் ப�ோக்கு ஜனநாயகத்துக்கு


ஆபத்து; அண்ணாமலை கண்டனம்
"அரசியலமைப்புச் சட்டம்,
குடிமக்களுக்கு வழங்கியிருக்கும்
அடிப்படை உரிமையான
வாக்களிக்கும் உரிமையைக்
கூட, தங்கள் விருப்பப்படிதான்
நடத்த வேண்டும் என்ற
திமுகவின் சர்வாதிகாரப் ப�ோக்கு,
vijayabharatham.org ஜனநாயகத்துக்கு மிகுந்த
ஆபத்தானது." என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுத�ொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள
பதிவில், "கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள
பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த க�ோமதி என்பவர், வாக்குப்
பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால்
அடித்துக் க�ொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த
அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு
வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப்
பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள்
வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட
திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத்
தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு
வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும்
உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும்
என்ற திமுகவின் சர்வாதிகாரப் ப�ோக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த
ஆபத்தானது. இந்தியாவைக் காப்பாற்றப் ப�ோவதாகக் கனவு
கண்டு க�ொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், முதலில் தனது
கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும்
வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக்
குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும்
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."
என்று தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் க�ோதண்டராமர் க�ோவில் மறு கட்டுமானப்


பணி அனுமதிக்கு கடல�ோர குழுமம் பரிந்துரை
பாரம்பரிய சிறப்புமிக்க ராமேஸ்வரம் க�ோதண்டராமர்
க�ோவில் மறுகட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கும்படி,
மத்திய அரசுக்கு, கடல�ோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை
குழுமம் பரிந்துரைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில்,
12 கி.மீ., த�ொலைவில், வங்காள விரிகுடா, மன்னார்
13
வளைகுடா சந்திக்கும் இடத்தில்
க�ோதண்டராம சுவாமி க�ோவில்
உள்ளது. ராமர், சீதை, லட்சுமணனை,
விபீஷணன் வணங்கும் வகையில்
இந்த க�ோவில் அமைந்துள்ளது.
இது, வேறு எங்கும் காண
முடியாத சிறப்பு. ராமாயணத்துடன்
vijayabharatham.org
த�ொடர்புடைய தலங்களில் இதற்கு
மிக முக்கியத்துவம் உண்டு. கடந்த 1964ல் ஏற்பட்ட புயலில்
தனுஷ்கோடி முற்றிலுமாக அழிந்தப�ோது, இப்பகுதியில்
க�ோதண்டராமர் க�ோவில் மட்டுமே எஞ்சி நிற்கிறது. நாடு
முழுதும் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து
செல்வதால், இந்த க�ோவிலை மறுகட்டுமானம் மேற்கொள்ள
முடிவு செய்ய்பட்டது.
தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை, இதற்கான
வரைவு திட்டத்தை தயாரித்துள்ளது. கடலின் நடுவில்
அமைந்துள்ள இந்த க�ோவில் த�ொடர்பான கட்டுமான
பணிகளை மேற்கொள்ள, கடல�ோர ஒழுங்குமுறை மண்டல
குழும அனுமதி பெற வேண்டும். இதற்காக, தமிழக கடல�ோர
ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமத்திடம், ஹிந்து
சமய அறநிலையத்துறை விண்ணப்பித்தது.
வல்லுனர் குழு க�ோப்புகளை ஆய்வு செய்து அனுப்பிய
பரிந்துரை அடிப்படையில், மாநில அளவிலான குழுமம்
திருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து, க�ோதண்டராமர்
க�ோவில் மறுகட்டுமான பணிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான
க�ோப்புகளை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு
பரிந்துரைத்து, மாநில குழுமம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும்,
விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் எனவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.

வாக்காளர்கள் பெயர் க�ொத்து க�ொத்தாக நீக்கம்:


கலெக்டர் விளக்கம் திருப்தி இல்லை; பா.ஜ., அறிவிப்பு
பா.ஜ., விவசாயிகள் பிரிவு மாநில
தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை:
க�ோவை ல�ோக்சபா த�ொகுதி,
கவுண்டம்பாளையம் சட்டசபை
த�ொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி
எண், 214 அங்கப்பா பள்ளியில், 823
ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால்,
vijayabharatham.org 1,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்
ஓட்டுப�ோட முடியவில்லை. அவர்கள் அனைவரும், 30
ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். ச�ொந்த வீட்டில்
வசிப்பவர்கள். நல்லாட்சியை விரும்பி, ஓட்டளிக்கக் கூடிய ஒரு
குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேப�ோல், தெப்பக்குளம் பகுதி வாக்குச்சாவடி எண்,
158-ல், 40 ஓட்டுகளும், 157-ல், 45 ஓட்டுகளும், 156-ல், 20
ஓட்டுகளும்,155-ல் 40 ஓட்டுகளும், 154ல், 30 ஓட்டுகளும்,
153-ல் 25 ஓட்டுகளும் என, 200 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.
இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர். பிரதமர் ம�ோடிக்கு
ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இப்படி க�ோவையில் மட்டும் 5
சதவீத ஓட்டுகள்; அதாவது, 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய,
14
1 லட்சம் ஓட்டுகள், எந்த முன்னறிவிப்போ, கள விசாரணைய�ோ
இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தேர்தல்
பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கியுள்ளனர்.
இது த�ொடர்பாக, கலெக்டரை நேரடியாக சந்திக்க அவரது
அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. ப�ோனில்
த�ொடர்பு க�ொண்டோம். 'சேலஞ்ச்' ஓட்டு ப�ோடவும் சட்டத்தில்
இடமில்லை என்று கூறினார்.
அங்கப்பா மேல்நிலைப்பள்ளியில், 1,353 ஓட்டுகள் இருந்த
நிலையில், 823 ஓட்டுகள் குறைந்தப�ோது விழித்திருக்க
வேண்டிய மாவட்ட நிர்வாகம், மவுனம் காத்து தி.மு.க.,வின்
விஞ்ஞான முறைகேட்டிற்கு துணை ப�ோயிருக்கிறது.
கலெக்டர் உரிய நடைமுறைகளை பின்பற்றியே, வாக்காளர்
பட்டியல் திருத்தப்பட்டது என்கிறார். ஆனால் ஓட்டுச்சாவடி
எண், 214-ல் ஓட்டுகள் மறுக்கப்பட்டது வாக்காளர்களுக்கு
தெரிவிக்கப்படவில்லை. கலெக்டர் த�ொடர்ந்து மவுனம் காத்து
வருகிறார். இது சம்பந்தமாக மனு க�ொடுத்தோம். அப்போதும்,
வக்கீல்களை, நீண்ட நேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்த
பின்பே மனுவை பெற்றுக்கொண்டார். இது தி.மு.க.,வின்
முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் துணைப�ோவதைக்
காட்டுகிறது. கள்ள ஓட்டு ப�ோட்டு, அன்று ஆட்சியை பிடித்த
தி.மு.க., தற்போது நல்ல ஓட்டுகளை நீக்கி முறைகேடு
செய்து, தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில்
தள்ளியிருக்கிறது. இதை இத்துடன் பா.ஜ., விடாது. ஜனநாயக
ரீதியாக த�ொடர் ப�ோராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு
அவர் தெரிவித்துள்ளார்.

É#aghuj« njáa thu ïjœ


rªjh brY¤j / òJ¥ã¡f
www.vijayabharatham.org
v‹w ïizajs« mšyJ
044 - 26420870 v‹w bjhiyngá
v©Âš bjhl®ò bfhŸsî«.
96004 78526
M©L rªjh: E 600/–
ïu©lh©L rªjh: E 1,150/–
Iªjh©L rªjh: E 2,750/–
mid¤J rªjhjhuU¡F« ÔghtË ky® ïytr«
rªjhjhu® MF§fŸ! njáa¥ g¡F njhŸ bfhL§fŸ!!
15

You might also like