You are on page 1of 2

தேதி: 03.07.2022 இடம்: மட்டைப்பிரைஊர்.

திருவண்ணாமலை வடக்கு மாவாட்டம்

இறைவன் அருளால் இந்த இனிய வேளையிலே நாம் அனைவரும்


இங்கு தாமரையின் இதழ்களாக கூடியிருக்கும் காட்சியை கண்டு பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன்....

இந்நிகழ்வைக் கண்டு இறைவனும் நம் பாரதிய ஜனதா கட்சியின்


மூத்த தலைவர்களின் அதாவது நமது சித்தாந்தத்தின் ஸ்தாபகரான
டாக்டர் திரு சியாம பிரசாத் முகர்ஜி மற்றும் பண்டிட் தீனதயாள்
உபாத்தியாயா அவர்களின் ஆத்மாவிற்கும் தலைவணங்கி இந்த
மேடையை அலங்கரித்து நமக்கும் நம் தமிழகத்திற்கும் நல் வாழ்வு
அளிக்க தியாகத்தின் செம்மல்களாக வற்றிருக்கும்...

இவர்கள் அனைவரும் நமது பாரதிய ஜனதா கட்சியின்


சித்தாந்தத்தின் கொள்கைகளை பற்றி சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்
எனவே திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சார்ந்த தேசிய மாநில
மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அன்போடு வருக! வருக! என மெத்த
பணிவன்புடன் அழைக்கின்றோம்...

பண்டித நேருவின் கொள்கைகளை தேசிய அளவில் விமர்சித்து


வந்த டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களுக்குப் பின் நமது பாரதிய
ஜனதா கட்சியின் கட்டுப்பாடு மிக்க கொள்கைக் கவசம் பூண்ட சிலருடன்
அகில இந்திய கட்சியாக உருவாக்க தினதயாள் ஜி மேற்கொண்ட
முயற்சிகள் வரலாறு...

அவ் வரலாற்றை பின் தொடர்ந்து இன்றளவும் அதன் வழி வந்து


கொண்டு இருக்கும் நம் பெரும் தலைவர்களை நாம் காண்கின்றோம்.

நம் பாரத தேசத்தின் நம் தலை சிறந்த தலைவராக தற்பொழுது


விளங்கிக் கொண்டு இருக்கும் நம் பாரத பிரதமர் மாண்புமிகு திரு
நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஆட்சி பீடத்தை அலங்கரித்து
இந்த எட்டு ஆண்டுகளில் இந்திய தேசத்தில் அவர் ஆற்றிய அரிய
தொண்டுகள் பல பல.....

அவர் இந்திய மக்களாகிய நம் எல்லோருக்கும்....

"குன்றின் மேல் இட்ட விளக்காக திகழ்ந்து வருவது"

நாம் செய்த புண்ணியம் என்றே சொல்லலாம்......

"நல் வாழ்வு என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை"

அதனை மேம்படுத்துவதே எனது அரசின் முதன்மை பணி என்று


தன் கொள்கையாக வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்...

அத்தகைய செயல்களுக்கு தறப்போது பதவி வகிக்கும் தலைவர்கள்


அனைவரும் பின் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்.... அவ்வகையிலே
நம் தமிழகத்தில் வரத்திற்கும்
ீ சொல்வன்மைக்கும் எதிரிகளை அஞ்ச
வைக்கும் வரத்தின்
ீ விளைநிலமாக திகழ்ந்துவரும் பாசமிகு நம் தமிழக
மாநிலத் தலைவர் சகோதரர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும்
முன்னாள்.,

"கர்நாடகாவின் சிங்கம்"

இந்நாள்...

"தமிழகத்தின் சிங்கமாக"

வளம் வரும் நம் மாநில தலைவர் வழியில் நாம் அனைவரும் பின்


சென்று...

"லஞ்சம்" "ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை" பாஜகவால் தான் தர


முடியும்.....

என்ற கொள்கைக்கு நாம் அனைவரும் நம்மிடத்தில் எந்த ஒரு கருத்து


வேறுபாடும் இல்லாமல் செயலாற்ற வேண்டும் என்று இருகரம் கூப்பி
கேட்டுக்கொண்டு எனது வரவேற்புரையை முடித்துக் கொள்கிறேன்.,

நன்றி! வணக்கம்!

ஜெய்ஹிந்த்...

பாரத் மாதா கி ஜெய்!

You might also like