You are on page 1of 2

சித்ரா பௌர்ணமி என்பது ...

சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.

#இந்த விழாவை எமலோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர


குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள்.

அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை


அதிகமாக்குவார் என்பது நம்க்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள்
என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள்
உள்ளன..

🌕#விரதம்_இருப்பது எப்படி?

🌝 🔥🪔🔱 #பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும்.


மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு
வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற
மாதங்களில் வருகின்ற பௌர்ணமியைவிட சித்ரா பௌர்ணமியானது
முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும்
சிறப்பானதாகும்.

#சித்ரா பௌர்ணமிதினமான இன்று (26 ஆம் தேதி) பிற்பகல் துவங்கி மறுநாள்


செவ்வாய்க்கிழமை காலை நிறைவடைகிறது.

விரதம் இருப்பது எப்படி?

🌝 🔥🪔#சித்ரா_பௌர்ணமியன்று வட்டை
ீ சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர்
படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும்,
எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க
வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.

🌝 🔥🪔#மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய


வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது
வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பால் சேர்த்து
பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
படையலுடன் எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்த கூட்டு நிவேதிக்க வேண்டும்.
தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க
வேண்டும். குளிர்ந்த பானகங்களை தயாரித்து சித்ரா பௌர்ணமியன்று நண்பகல்
ஏழைகளுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

விரத பலன்கள் :

சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால்


நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த
விரதத்திற்கு உண்டு. மேலும் மனஅமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை
அகலும். புண்ணியங்கள் சேரும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம்
கிடைக்கும்.

முக்கிய_குறிப்பு :

கடந்த ஆண்டு முதல் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை


உள்ளது. இந்த ஆண்டும் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் சித்ரா
பௌர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்
திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட
ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் வட்டில்


ீ இருந்தபடியே
அண்ணாமலையாரை மனமுருக வேண்டிப் பயன் அடைவோம்.⚜ தாமரை
மணிமாலை இருக்கும் இடத்தை சுற்றிலும் நல்ல விஷயங்களே நடக்கும். தீய
தடைகள் ஏதும் நடக்காது. நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணிமாலை
பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது.

You might also like