You are on page 1of 7

சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம், காஞ்சிபுரம் குருசேகரம்.

ஆண்டறிக்கை - 29.10.2023

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

வரலாற்று சிறப்புமிக்க நமது ஆலயம் இன்றைக்கு 101 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

திரியேக கடவுளுக்கே எல்லா துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக.

இந்த இனிய நாளில் அனைத்து இறைமக்களுக்கும் தோத்திரங்களையும், வாழ்த்துக்களையும்


தெரிவித்துக் கொள்கிறோம். ஆண்டறிக்கையை உங்களுக்கு சமர்பிப்பதில் அதிக மகிழ்ச்சி அடைகின்றோம்.
கடவுளின் திருப்பெயர் மட்டும் மகிமைப்படுவதாக.

நற்செய்தி பணித்தளங்கள்: நற்செய்தி பணித்தளங்களான குப்பைமேடு என்கிற கல்வாரிமேடு, செட்டி குளம்


என்கிற பெதஸ்தா குளம், காமாட்சி நகர், ஒழையூர், அம்மன் குளம் என்கிற ஆண்டவர் குளம் ஆகிய
பணித்தளங்களில் மிஷனரி மற்றும் ஐக்கிய சங்கங்களின் உதவியுடன் நற்செய்திப்பணி நடைப்பெற்று வருகிறது.

எளியோர் திருப்பணி: காஞ்சிபுரம் நகர திருச்சபையில் ஒவ்வொரு மாதமும் 30 அன்பர்களுக்கு மாதந்திர


உதவித்தொகையும், 40 நபர்களுக்கு மேல் அரிசி, பருப்பு, மளிகை வழங்கப்படுகிறது. நற்செய்தி பணித்தளங்களில்
மழைக்காலங்கள், நோய்தொற்று காலங்களில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஆண்டுவிழா: கடந்த 30.10.2022 ஞாயிறன்று குருசேகரத்தின் சார்பாக அனைத்து இறைமக்களுக்கும், மதியம் 12


மணிக்கு ஆண்டுவிழா ஐக்கிய விருந்து பறிமாறப்பட்டது.

சகல பரிசுத்தவான்களின் திருநாள் : கடந்த 02.11.2023 புதன் மாலை 04.30 மணிக்கு சகல பரிசுத்தவான்களின்
திருநாள் வழிபாடு, நமது கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்றது. நமக்கு அருமையான ஆத்துமாக்களை நினைவுக்
கூறும் இந்த வழிப்பாட்டில் அநேகர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். கடவுளுக்கே மாட்சி உண்டாவதாக.

30.11.2022 புதன் மாலை 06.30 மணிக்கு தூய அந்திரேயர் திருநாள் சிறப்பு வழிபாடு நமது ஆலயத்தில் நடைப்பெற்றது. `

கிறிஸ்துமஸ் விழா & புத்தாண்டு: கடந்த ஆண்டு 25.11.2022 வெள்ளி அன்று கிறிஸ்துமஸ் கால நிகழ்வுகள்
கொடியேற்றத்துடன் கூடிய வழிப்பாட்டுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாடகர் குழுவினர் இல்லங்கள்
சந்திப்பு நடைப்பெற்றது

இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விழாக்கள் சிறப்பாக நடந்தேறியது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கலை மற்றும்
விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது.

கிறிஸ்துமஸ் கால சிறப்பு நிகழ்வாக முதியோரை கௌரவித்தல், வெகுமதி ஞயிறு (Gift Sunday), நிறுவனங்கள் மற்றும்

ஐக்கிய சங்கங்களின்பாடல் வழிபாடு, குருசேகர திருப்பணியாளர்கள் கிறிஸ்துமஸ் கூடுகை, கிளை திருச்சபைகளின் பாடல்

வழிபாடு, ஏழைகள் கிறிஸ்துமஸ் விழா, குடும்ப தீப வழிபாடு, அனைத்து ஐக்கிய சங்கங்களின் கிறிஸ்துமஸ் விழாக்கள்,

அனைத்து நற்செய்தி பணித்தளங்களில் ஐக்கிய சங்கங்களின் வழியாக சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் ( உணவு ,உடை

அன்பளிப்பு) புத்தாண்டு திருவிருந்து வழிபாடுகள் , குடும்ப உடன்படிக்கை வழிபாடு, சாட்சியின் வழிபாடு போன்ற அனைத்து

நிகழ்வுகளும் இறையருளால் சிறப்புடன் நடந்து முடிந்தது.

இவற்றிற்கு உதவியாய் இருந்து செயல்பட்ட சேகரக்குழு உறுப்பினர்கள், கிறிஸ்துமஸ் விழாக்குழு பொறுப்பாளர்கள், திரு. A.P.

லார்ட்சன் சாமுவேல், திரு.N. லாரன்ஸ் ஜெயக்குமார், அனைத்து ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டுனர்கள், ஆலய

பாடகர் குழுவினர், இல்லச் சந்திப்பில் பங்கு பெற்ற பாடகர் குழு, அந்திரசன் விடுதிப் பிள்ளைகள், திருப்பணிவிடையாளர்கள்,

அருளுரைஞர்கள், ஆலயப்பணியாளர்கள், கல்லறைத் தோட்டப் பணியாளர், மேடை அலங்கரிப்பாளர்கள், ஒலி ஒளி


அமைப்பாளர்கள் , Securities, Photographer, Salvation Graphics, மேற்கண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை

குருசேகரத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

31.12.2022 சனி மற்றும் 01.01.2023 ஞாயிறு பழைய புதிய வழிபாடுகள் நடைப்பெற்றது. நமது குருசேகரத்தின் ஆயர் &

குருசேகரத் தலைவருமான அருட்பணி. S. தேவஇரக்கம் அவர்கள் இறைச்செய்தியை அளித்தார்கள்.

ஆன்மீக புத்தாக்கக் கூடுகை:

28.01.2023 அன்று நம் திருச்சபை இறைமக்கள் ஒருநாள் ஆன்மீக புத்தாக்கக் கூடுகையாக மாகாபலிபுரம் SU Camp
Center-ல் நடத்தப்பட்டது. இதில் சவாலான செய்திகள், Fun Games, ஐக்கிய சங்க பாடல்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகள்
நடைப்பெற்றது.

நமது திருச்சபை ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் ஆன்மீக புத்தாகக் கூடுகையாக NMSI நற்செய்தி பணித்தளமான

வடஇந்தியாவிலுள்ள இமாலய பகுதியான டார்ஜலிங் மற்றும் சம்தார் போன்ற பகுதிகளிலுள்ள நற்செய்தி


பணித்தளங்களை பார்வையிட்டனர். அந்த பகுதியில் உள்ள மிஷனரி இல்லங்களில் ஜெபக்கூடுகை நடைபெற்றது.
மேலும் டப்ளிங் என்ற பகுதியில் மிஷனரி சாது சுந்தர் சிங் நினைவாக இயங்கிக் கொண்டிருக்கின்ற CBSE

உயர்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு பயிலுகின்ற மாணவ செல்வங்களையும், ஆசிரியர்களையும் பார்வையிட்டனர்.

நமது திருச்சபை சார்பாக மாணவ செல்வங்களுக்கு சிறிய வெகுமதி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக உத்வேகம்

அடைந்து சம்தார் பகுதியில் ஆலயம் கட்ட தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

நமது காஞ்சிபுரம் குருசேகர கிளைத் திருச்சபை ஊழியர்கள் ஆன்மீக புத்தாக்கக் கூடுகையாக ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான தூய தோமா அவர்கள் முதன் முதலில் இந்தியா வந்து
ஊழியம் செய்த கேரளா மாநிலம் திரிசூரில் கி.பி. 52 ல் கட்டிய தேவாலயம் மற்றும் அதை சுற்றிலும் இருக்கின்ற
வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டனர்.

10, 11, 12 வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை கூடுகை
மூன்று முறை நடைபெற்றது.

19.02.2023 அன்று மருத்துவ ஞாயிறு சிறப்பு வழிபாடு மற்றும் கூடுகை நடைப்பெற்றது. இக்கூடுகையில் சிறப்பு
அழைப்பாளராக Dr. சாந்தி எட்வர்ட் கலந்துக்கொண்டு இறைசெய்தியை பகிர்ந்துக் கொண்டார்கள். அன்றைய
தினம் மருத்துவ குழுவினரால் இலவச மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது

லெந்து கால நிகழ்வுகள்

05.02.2023 ஞாயிறு அன்று 11.00 மணி அளவில் அருளுரைஞர்களுக்கான லெந்துகால ஆயத்த வகுப்புகள் சென்னை
பேராயத்தின் முன்னால் செயலர் Rev. Dr. B. J. பிரேமையா அவர்களால் நடத்தப்பட்டது. இது அனைத்து
ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

22.02.2023 சாம்பல் புதன் கிழமையைத் தொடர்ந்து, 40 நாட்கள் ஒவ்வொரு நாளும் காலை 06.00 மணி முதல் 07.00 வரை
லெந்துகால தியானம் மற்றும் ஜெபம் நடைப்பெற்றது. லெந்து நாட்களில் திருச்சபை வழியாக நாள்தோறும் 50
நபர்களுக்கு “பசித்தோருக்கு உணவு” என்ற திட்டத்தின் வழியாக இலவச உணவு வழங்கப்பட்டது. இறைமக்கள்
உற்சாகமாய் தங்கள் குடும்பத்தின் சார்பாக உணவளித்தனர்.

பரிசுத்த உபவாச நாட்களை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மாலை வழிபாடு நடைப்பெற்றது.

04. 03.2023 மற்றும் 05.03.2023 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடைப்பெற்ற லெந்துகால நற்செய்தி கூட்டத்தில்
Rev. ஸ்டீபன் பிரபு அவர்கள் இறைவார்த்தையை பகிர்ந்துக் கொண்டார்கள்.

02.04.2023 குருத்தோலை ஞாயிறு அன்று சாட்சி பவனியாக திருச்சபை இறைமக்கள் மற்றும் பல்வேறு குழுக்களுடன்
ஆயர், தலைமையில் CSI கிறிஸ்தவ ஆலயம் தொடங்கி முக்கிய வீதிகளில் (4 மணி நேரம்) 14 டிராக்டர்கள் வாயிலாக
நற்செய்தி அறிவிக்கப்பட்டது. இதில் இயேசு பிறப்பு முதல் உயிர்ப்பு வரை தத்ருபமாக காண்பிக்கப்பட்டது. இதில்
கலந்துக் கொண்ட அனைத்து ஐக்கிய சங்கங்கள் மற்றும் கிளைத் திருச்சபைகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சாட்சி பவனியின் போது வீதிகளில் சென்ற 1000 பொதுமக்களுக்கு கைப்பையுடன் கூடிய மரக்கன்றும், நற்செய்தி
கைப்பிரதியும் வழங்கப்பட்டது.

03, 04, 05.04.2023 திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் தூயவார மறுமலர்ச்சி கூட்டங்கள்
நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக CSI சென்னை பேராயத்தின் முன்னாள் உப தலைவர். Rev. Dr. S. விக்டர்
மனோவா ஐயா அவர்கள் கலந்துக்கொண்டு கடவுளின் வார்த்தைகளை பகிர்ந்துக் கொண்டார்.

07.04.2023 அன்று புனித வெள்ளி வழிபாட்டின் போது அனைத்து இறைமக்களுக்கும் கஞ்சி, பன், மோர்
வழங்கப்பட்டது. 09.04.2023 ஞாயிறு அன்று அதிகாலை 04.30 மணிக்கு உயிர்தெழுந்த திருநாள் வழிபாடு சிறப்பாக
நடைப்பெற்றது.

02.07.2023 ஞாயிறு அன்று நற்செய்தி பெருவிழா வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது. இதில் CSI Synod Seva Board
Director Rev. நவஞான பிரசாத் அவர்கள் கலந்துக்கொண்டு கடவுளின் வார்த்தையை பகிர்ந்துக்கொண்டார்.

28.07.2023 அன்று பெந்தேகோஸ்தே ஞாயிறு வழிபாடு நடைப்பெற்றது. நமது குருசேகர ஆயர் அவர்கள்
இறைச்செய்தி அளித்தார்கள்.

15.08.2023 அன்று செவ்வாய் கிழமை காலை 07.00 மணிக்கு நமது ஆலயத்தில் இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர
தின விழா சிறப்பாக நடைப்பெற்றது. ஆயர் அவர்கள் கொடியேற்றினார்கள்.

27.08.2023 அன்று காலை ஞாயிறு வழிபாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட குருசேகர அலுவலர்கள், உறுப்பினர்கள்
மற்றும் பொறுப்பாளர்களை குருசேகர ஆயர் அவர்கள் ஜெபித்து நியமனம் செய்தார்.

27.09.2023 புதன்கிழமை அன்று நமது தென்னிந்திய திருச்சபையின் 77 வது நிறுவன நாளையொட்டி, நமது
ஆலயத்தில் சிறப்பு திருவிருந்து வழிபாடு மாலை 06.30 மணிக்கு நடைப்பெற்றது.

ஆண்கள் ஐக்கிய சங்கம் : கடந்த 2022 ஆகஸ்டு மாதம் நமது ஆயருடைய பெரிதான முயற்சியால்
ஆரப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 07.00 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்க
ஜெபக்கூடுகை நடைப்பெறுகிறது.கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்வாக 40 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒரு
போர்வையும், உணவு பொட்டலமும் (பிரியாணி) வழங்கப்பட்டது. ஆலய பயன்பாட்டிற்காக 3 வது நூழைவாயில்
அமைப்பதற்கு ஆண்கள் ஐக்கிய சங்கதின் சார்பாக ரூபாய் 57,000 வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பருத்தி குளம்
அருகிலுள்ள அம்மன் குளம்(ஆண்டவர் குளம்) பகுதியில் நற்செய்தி குழுவோடு இணைந்து ஊழியம் நடைப்பெற்று
வருகிறது.

பெண்கள் ஐக்கிய சங்கம்:

25.02.2023 சனிக்கிழமை அன்று பெண்கள் ஐக்கிய சங்கத்தின் மூலம் திருமறைத் தேர்வு நடத்தப்பட்டது

8.10.2023 ஞாயிறு அன்று பெண்கள் ஐக்கிய சங்க சிறப்பு கூடுகை நடைப்பெற்றது. இதற்கு முன்பதாக 24.09.2023
மற்றும் 07.10.2023 ஆகிய நாட்களில் பல போட்டிகள் நடைப்பெற்றது. நகர மற்றும் கிராம சபை மக்கள் உற்சாகமாய்
கலந்துக் கொண்டனர். 08.10.2023 ஞாயிறு அன்று நடைப்பெற்ற பெண்கள் ஐக்கிய சங்க சிறப்பு வழிபாட்டில்
அந்திரசன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை திருமதி. குளோரி இன்பசேகரன் அவர்கள் பங்குபெற்று
இறைசெய்தியை வழங்கினார்கள்.

இளையோர் ஐக்கிய சங்கம்:

02.10.2023 திங்கட்கிழமை அன்று பெருங்களத்தூர் CSI St. John Church- ல் நடைப்பெற்ற EXOUSIA ஒருநாள் இளையோர்
ஐக்கிய சங்க கூடுகையில் நமது இளையோர் ஐக்கிய சங்கத்தினர் கலந்துக் கொண்டு பரிசு பெற்றுள்ளார்கள்.

சிறுவர் ஐக்கிய சங்கம்:

12.02.2023 அன்று சிறுவர் ஐக்கிய சங்கத்தின் 2022-2023 இறுதி ஆண்டிற்கான தேர்வுகள் நடைப்பெற்றது.

22.03.2023 புதன் கிழமை அன்று பேராய குழும (Cluster) அளவில் நடைப்பெற்ற VBS ஒருநாள் கூடுகையில் நமது
குருசேகர மற்றும் கிளைத் திருச்சபை இயக்குநர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

29.04.2023 முதல் 07.05.2023 வரை விடுமுறை வேதாகமப் பள்ளி சிறப்பாக நடைப்பெற்றது. நகர திருச்சபைகளில் 302
பிள்ளைகள் கலந்துக் கொண்டனர், திருமதி. நிர்மலா வின்சென்ட், திருமதி. எப்சிபா எழிலரசி ,திரு. ஈவன் ஆல்மேன்
ஆகிய மூன்று இயக்குநர்களோடு 35 ஆசிரியர்களும், 15 தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து சிறப்பாக
நடத்தினர்.இதில் கிராமத் திருச்சபையில் 188 பிள்ளைகளும் 16 ஆசிரியர்களும் 13 தன்னார்வத் தொண்டர்களும் 5
இயக்குநர்களும், நற்செய்தி பணித்தளங்களில் 80 பிள்ளைகளும் ஆக மொத்தம் 570 பிள்ளைகளும் 51
ஆசிரியர்களும் 28 தன்னார்வ தொண்டர்களும் 8 இயக்குநர்களுமாக இந்த வருடம் விடுமுறை வேதாகமப் பள்ளி
சிறப்பாக நடைப்பெற்றது.

ஜூலை மாதம் நமது பேராய அளவில் நடைப்பெற்ற நற்செய்தி பெருவிழாவில் நமது திருச்சபை சேர்ந்த 48 அன்பர்கள்
மனன வசன போட்டியில் கலந்துக் கொண்டு சான்றிதழ் பெற்றனர் கலந்துக் கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும்
திருச்சபை சார்பில் பரிசுகளை பெற்றனர். இதில் 7 பேர் பேராய அளவில் பரிசுகளை பெற்றனர் இவர்களுக்கு
வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 24.09.2023 அன்று ஞாயிறு காலை சிறுவர்களுக்கான திறனறிவுத் தேர்வு
நடைப்பெற்றது. நமது திருச்சபை பிள்ளைகள் கலந்துக் கொண்டனர். பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும்,
ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் நன்றி.

07.10.2023 சனிக்கிழமை அன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.00 வரை காஞ்சிபுரம் குழுமம் அளவில் சிறுவர்
ஐக்கிய சங்க சிறப்பு கூடுகை நடைப்பெற்றது.

NMSI

03.09.2023 அன்று ஞாயிறு NMSI வழிபாடாக நடைப்பெற்றது, அதில் NMSI General Secretary Rev. ஹென்றி ஜெபா ரிச்சர்டு
அவர்கள் கலந்துக்கொண்டு இறைச்செய்தியை அளித்தார்கள். அவருடன் NMSI மிஷனரிகள் மற்றும்
பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். அன்றைய தினம் NMSI-காக சிறப்பு காணிக்கை எறெடுக்கப்பட்டது. நமது
திருச்சபை மக்கள் உதாரத்துவமாய் காணிக்கைகள் கொடுத்தார்கள். NMSI நற்செய்தி பணித்தளமான ஜவ்வாது
மலை, புதூர் நாடு விடுதி பிள்ளைகள் கலந்துக் கொண்டு சாட்சி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

07.07.2023 மற்றும் 08.07.2023 வெள்ளி, சனிக் கிழமைகளில் 24 மணி நேர உபவாச ஜெபக் கூடுகை நடைப்பெற்றது,
இதில் மிஷனரிகள். M. விஜயராணி, C.R. ஜார்ஜ், சகோதரி. வசந்தி ஜார்ஜ் , T. ஆல்பின் ஆகியோர் கலந்துக் கொண்டு
தங்கள் அனுபவங்களையும்,, இறைசெய்தியுடன் கூடிய படக்காட்சியையும் விளக்கிக் கூறினார்கள். இதில் அநேக
இறைமக்கள் கலந்துக்கொண்டனர்.

13 & 14.10.2023 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 24 மணி நேர உபவாச ஜெபக் கூடுகை நடைப்பெற்றது, இதில்
NMSI நற்செய்தி பணித்தளமான ஜவ்வாது மலைப்பகுதியில் ஊழியம் செய்து வருகின்ற திரு. பாலாஜி சாத்ராக்,
திருமதி. பிரீத்தா பாலாஜி, திரு. பர்னபாஸ், திரு. ஸ்டீபன் ராஜபதி, Rev. கேரட் தேவதாசன் (NMSI organizing secretary)

அவர்கள் கலந்துக் கொண்டு இறைச்செய்தி அளித்தார்கள். இதில் துதிப்பாடல் ஆராதனை, சாட்சியின் நேரம், குழு ஜெபம்,

ஆவிக்குரிய செய்திகள், படக்காட்சியிடன் கூடிய விளக்கங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. வாரந்தோறும்

வெள்ளிக்கிழமைகளில் மன்றாட்டு ஜெபம் நடைபெறுகிறது மற்றும் ஞாயிறு தோறும் நற்செய்திபணி ஐக்கிய சங்களின் வழியாக

நமது ஆலயத்தில் நடைப்பெற்று வருகிறது.

சமுகப்பணி

தையற்பயிற்சி மையம்: நமது காஞ்சிபுரம் நகர திருச்சபையிலும் மற்றும் களியனூர் திருச்சபையிலும் 3 வது ஆண்டாக

தையற்பயிற்சி மையம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. வருடந்தோறும் தையற்பயிற்சி பள்ளியில் படிக்கும் வறுமை

கோட்டிற்கு கீழ் இருக்கின்ற தலா 2 பேருக்கு இலவச புதிய தையற் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது, பயிற்சி பெறுகின்ற

அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 120 க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளார்கள்.

ஒவ்வொரு கிராம திருச்சபைகளில் புதியதாக தையற்பயிற்சி மையம் ஆரம்பிக்க முயற்சி செய்யப்படுகிறது. இதற்காக சபையார்

ஜெபித்துக் கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.


குடிநோய்க்கான மறுவாழ்வு: வாரத்தில் இரண்டு நாட்கள் நம் திருச்சபையில் Alcoholic Anonymous வழியாக குடிநோய் மற்றும்

குடி பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட ஆலோசனை கூடுகை நடைப்பெறுகிறது. இதில் எந்த சமய பாகுபாடின்றி பங்கு

பெற்றுவருகிறனர் இதன் மூலம் அநேகர் குடிநோயிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறுகிறார்கள்.

மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு வழிபாடு:

நமது திருச்சபையில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஞாயிறு வழிபாடு காலை 11.00 முதல் 12.30 மணி வரை

நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்டோருக்கு உதவி: 18.04.2023 அன்று குருவிமலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பத்தின்

மக்களுக்கு தலா 25 கிலோ அரிசியும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் நமது திருச்சபை மூலம்

வழங்கப்பட்டது. கைலாசநாதர் கோயில் மேட்டுத்தெரு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு

பொட்டலம் (பிரியாணி) வழங்கப்பட்டது.

சிறுதொழில் ஊக்குவிப்பு: சுயதொழில் செய்யும் ஒரு அன்பருக்கு நமது திருச்சபை மூலம் ஒரு இஸ்திரி பெட்டி அளித்து

ஊக்குவிக்கப்பட்டது.

கல்வி ஊக்கத்தொகை: நமது திருச்சபை மூலமாக கல்வி கட்டணம் செலுத்த முடியாத பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கின்ற 38

மாணக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இறைமக்கள் வழியாக பெறப்பட்ட நன்கொடைகள்

1. ஆலய பயன்பாட்டிற்காக 6 ஒலிப்பெருக்கிகள் (Speakers) வாங்க நமது திருச்சபை சேர்ந்த Dr. கிருபாகரன் மற்றும் Dr
செல்வபாண்டியன் அவர்களின் குடும்பத்திலிருந்து நன்கொடையாக பெறப்பட்டது. அக்குடும்பத்தாருக்கு நன்றி
தெரிவிக்கப்பட்டது

2. 12.03.2023 அன்று பெயர் குறிப்பிட விரும்பாத திருச்சபை குடும்பத்தார் மூலம் இறைமக்களின் பயன்பாட்டிற்காக 25
லிட்டர் RO Unit ஒன்று வழங்கப்பட்டது. அக்குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

3. 17.09.2023 நமது திருச்சபை நற்செய்தி பணித்தள பயன்பாட்டிற்காக நற்செய்தி பணிவாரிய கன்வீனர் திரு.
ஜோசப் ஜெயராவ் அவர்கள் 6 Tambourine வாங்கிக் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

2022- 2023 ஆண்டில் நிறைவேற்றின செயல்பாடுகள்

1. நமது காஞ்சிபுரம் குருசேகரத்தின் கிளை திருச்சபைகள், முனிசிபல் லைன் ஆலய பயன்பாட்டிற்காக சொந்தமாக 1661 சதுர அடி

நிலமும், பூந்தோட்டம் ஆலய பயன்பாட்டிற்காக 1100 சதுர அடி நிலமும் வாங்கும் படியாக கடவுள் உதவி செய்தார்.

2. மக்கள் மண்டப பயன்பாட்டிற்காக புதிதாக ஆழ்துளை கிணறு (Bore Well) அமைத்து மோட்டார் பொருத்தப்பட்டு பயன்பாட்டில்

உள்ளது.
3. நமது ஆலயம் மற்றும் மக்கள் அரங்கம் (மெக்ளின் அரங்கம்) பாதுகாப்பிற்காக ஆலய வளாகம் முழுவதும் 32 CCTV Camera

பொருத்தப்பட்டுள்ளது

4. நமது ஆலய பயன்பாட்டிற்காக 3 வது நூழைவாயில் அமைக்கப்பட்டுருக்கிறது அதற்காக நமது திருச்சபையை சேர்ந்த ஆண்கள்

ஐக்கிய சங்கத்தினர் தங்களுடைய பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

5. Rev. மெக்ளின் மக்கள் அரங்கம் முழுவதும் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வெள்ளை மற்றும் வண்ணம் (White Wash &

Painting) அடித்தல் பணி நடைப்பெற்றது.

6. பொருளர் அலுவலக பயன்பாட்டிற்காக ஒரு புதிய கணினி மற்றும் பிரிண்டர் வாங்கப்பட்டுள்ளது.

7. கடந்த நாட்களில் விழுந்துப்போன கல்லறைத் தோட்ட சுற்று சுவரின் ஒருபகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

8. நமது ஆயர் அலுவலக பயன்பாட்டிற்காக புதியதாக குளிசாதன கருவி (Air Conditioner) பொருத்தப்பட்டுள்ளது.

9. நமது ஆலய வராண்டாவிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு Paver Block மூலம் புதிய

நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

10. Rev. மெக்ளின் மக்கள் மண்டபம் இடது பகுதியில் Paver Block மூலம் புதிய நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

2023 – 2024 ஆண்டிற்கான புதிய செயல்பாடுகள்

01. நமது திருச்சபை 100 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, NMSI நற்செய்தி பணித்தளமான
வடஇந்தியாவிலுள்ள இமாலய பகுதி, டார்ஜலிங் அருகில் உள்ள சம்தார் என்ற கிராம பகுதியில் புதியதாக ஆலயம்
கட்டுதல்.
02. கிளைத் திருச்சபைகள் மற்றும் நற்செய்தி பணித்தளமான வையாவூர் பகுதியில் ஆலய பயன்பாட்டிற்காக நிலம்
வாங்குதல்.
03. காஞ்சிபுரம் ஆலய விரிவாக்கம் (ம) புதுப்பித்தல்.
04. ஆயர் இல்லம் கட்டுதல்.
05. ஆலய நூற்றாண்டு விழா வளைவு.
06. முனிசிபல் லைன் ஆலய கட்டடம் கட்டுதல்.
07. பூந்தோட்டம் ஆலய கட்டடம் கட்டுதல்.
08. நற்செய்தி பணித்தளமான காமாட்சி நகர், ஒழையூர், கல்வாரிமேடு (குப்பைமேடு), பெதஸ்தா குளம் (செட்டி குளம்),
ஆண்டவர் குளம் (அம்மன் குளம்) போன்ற பகுதிகளில் தற்காலிக கொட்டகைகள் அமைத்தல் மற்றும்
அப்பகுதிகளில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இலவச சிறப்பு வகுப்புகள் நடத்துதல்.
09. கிராம திருச்சபைகளில் தையல் பயிற்சி மையங்கள் தொடங்குதல்.
10. ஆலய வளாகம் அழகு படுத்துதல்.
11. வெங்கடேச பாளையம் திருச்சபையில் சிறுவர் ஐக்கிய சங்க பயன்பாட்டிற்காக மேற்கூரை அமைத்தல்.

கடந்த கடந்த ஓராண்டில் நடந்து முடிந்த அனைத்து நிகழ்வுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றோம். அத்தனை

நிகழ்வுகளையும் கடவுளுடைய துணையோடும் நமது குருசேகர ஆயரின் ஆலோசனையோடும். இதற்கு உறுதுணையாக

இருந்து செயல்பட்ட குருசேகர செயலர், பொருளர் சேகர குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள்,

கூட்டுனார்கள் ஆலய பாடகர் குழுவினர், அந்திரசன் மாணவர் விடுதி பிள்ளைகள், காப்பாளர்கள் அருளுரைஞர்கள்,

திருபணிவிடையாளர்கள், ஆலய பணியாளர் திரு. அசோக் குமார், கல்லறைத் தோட்ட பணியாளர் திரு. அருள், தூய்மை
பணியாளர் திருமதி.எலிசபெத், ஆலய தோட்ட பணியாளர் திரு யாக்கோபு, தையற் பயிற்சி பள்ளி ஆசிரியை திருமதி. சாராள்

தேவகிருபை, கணினி பொறுப்பாளர் செல்வன். A. பிரவீன் குமார், திரு. மோசஸ் போட்டோகிராபர், திரு. எட்வின் ஜோசப்

சால்வேஷன் கிராபிக்ஸ், மேடை அலங்கரிப்பாளர் திரு. ஜேம்ஸ் மார்ட்டின், ஒலி ஒளி பொறுப்பாளர் திரு. கிருபைநாதன் மற்றும்

பாதுகாப்பு பணியாளர்கள் மேற்கண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை குருசேகரத்தின் சார்பில்

தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைபணியில்.

திருமதி. K. ஷீபா சுகிர்தவதி திரு. A.P. லார்ட்சன் சாமுவேல்

சேகர பொருளர் சேகர செயலர்

அருட்பணி .S.தேவஇரக்கம்

ஆயர் & குருசேகரத் தலைவர்

You might also like