You are on page 1of 37

முன்னுரை

கோயில்களைப் பற்றி சான்றோர் பெருமக்கள் பல்வேறு நூல்களில் பல்வேறு நிலைகளில்


சுட்டிக்காட்டியுள்ளனர் என்றாலும் மிக அரிய செய்திகளையெல்லாம் தம்முள் கொண்டிருக்கும்
கோயில்களின் வரலாற்றை முழுமையாகத் தொகுத்து நூல்கள் தோன்றியதாகத் தெரியவில்லை.
இறைவனுக்கு குளக்கரையோ மரத்தடியோ போதாது என மனிதர்கள் நினைத்தனர். அதனால்
தான் கோவில் கட்டி வழிபட்டு வந்திருக்கின்றனர்.

ஆய்வுத் தலைப்பு

தமிழகத்தில் இன்று பெரும்பாலான கோயில்கள் ஆய்வுக்குரியனவாகக் கருதி


ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டுப்புறவியல் ஆய்வைப் போன்று கோயில் ஆய்வு
சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

“மதுரை மாடக்குளம்- அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார் திருக்கோயில் வழிபாடுகளும்


நம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் நோக்கம்

மனித சமுதாயத்தில் கோவில்களுக்குச் சிறப்பிடம் உண்டு. தமிழகத்தில் உள்ள


ஊர்களில் பெரும்பான்மையான இடத்தை பெறுவன கிராமங்களே ஆகும். இக்கிராமங்களில்
தெய்வ வழிபாடும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.

மதுரை மாடக்குளம் - அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார் திருக்கோயில் வழிபாடுகளும்


நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்ஆய்வில்
திருக்கோவிலின் அமைவிடம் தலவரலாறு திருவிழாக்கள் வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள்
ஆகியவற்றை கள ஆய்வின் துணைக் கொண்டு ஆராய்வதே இதன் நோக்கமாகும்.

ஆய்வு அணுகுமுறை

கோவில் ஆய்விற்கு மிகவும் துணை புரிவது கள ஆய்வு ஆகும். கள ஆய்வின் போது


தகவலாளிகளிடம் மற்றும் கோவிலின் பூசாரியிடமும் கேட்டறிந்த செய்திகள் ஆகியவை
முறையாக வகைப்படுத்தப்பட்டு பகுப்பாய்வு அணுகுமுறை கொண்டு ஆய்வு
மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இவ்ஆய்வில் கடவுளை வணங்கினால் மழை பெய்யும் என
நம்பிக்கைகள் ஆகியன மானிடவியல் அணுகுமுறையில் (யுவொயழசயடழப i உயட யிp சழயஉ h)
ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வுச் சான்றாதாரங்கள்

இக்கோவிலின் தலவரலாறு அங்கு நிகழும் பூசைகள் விழாக்கள் குறித்து தகவலாளிடம்


பேட்டிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட செய்திகளே முதன்மைச்
சான்றாதாரங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் ஆய்வு பற்றிய நூல்கள் துணை
சான்றாதாரங்களாக அமைகின்றன.

ஆய்வுக் கருவிகள்

மதுரை மாடக்குளம் - அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார் திருக்கோயில் குறித்து ஆய்வு


மேற்கொள்ளப்படுவதால் ஆய்விற்குத் தேவையான செய்திகளை சேகரிப்பதற்கும்
புகைப்படக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வு பகுப்பு

இவ்வாய்வு முன்னுரை , முடிவுரை நீங்கலாக மூன்று இயல்களாக பகுக்கப்பட்டுள்ளது.

1
முன்னுரை
இயல் - 1 திருக்கோவில் அமைவிடமும் தலவரலாறும்
இயல் - 2 திருக்கோவில் வழிபாடும் பூஜைகளும்
இயல் - 3 திருவிழாக்களும் நம்பிக்கைகளும்
முடிவுரை
திருக்கோவில் அமைவிடமும் தலவரலாறும் முதல் இயலில் ,

திருக்கோவில் அமைவிடம் கோவில் உருவானவிதம் தல வரலாறு திருக்கோவில் அமைப்பு


அய்யனார் என்பதன் பெயர்க்காரணம் அய்யனார் உருவான விதம் மற்றும் பிற தெய்வங்கள் பற்றி
ஆராயப்பட்டுள்ளது.

திருக்கோவில் வழிபாடும் பூஜைகளும் என்ற இரண்டாம் இயலில்,

வழிபடும் முறைகள் மற்றும் வழிபாட்டின் பயன்கள் ஆகியன பற்றி ஆராயப்பட்டுள்ளது.

திருவிழாக்களும் நம்பிக்கைகளும் என்ற மூன்றாம் இயலில்,

இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் வழிபடுவோர்களின் நம்பிக்கைகள்


அறக்கொடைகள் பக்தி நிலைகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

முடிவுரை

முடிவுரையில் இவ் ஆய்வில் கண்ட இயல்வாரியான முடிவுகள் தொகுத்துத்


தரப்பட்டுள்ளன. இதன் பின்னிணைப்பாக துணை நூற்பட்டியலும் நிழற்படங்களும்
இணைக்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் அமைவிடமும் தலவரலாறும்

மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்றைய காலம் வரை பல்வேளு நாகரிகப்


படிநிலைகளைக் கடந்து வந்துள்ளன. இயற்கை சக்திகளைத் தெய்வங்களாக வணங்கி வந்து
மனிதன் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயற்கையழகும், அமைதியும் நிறைந்த சூழலில்
இறைவனுக்கு உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினான். மனிதனுக்கு உணவைத் தவிர
நிலங்கள் அமைந்திருப்பது போல உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் பக்தி உணர்வுகளை
உண்டாக்கும் வகையில் பல ஆய்வுகள் அமைந்துள்ளது.

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று”1

2
என்று கோவிலின் சிறப்புகளை மிக அழகாக ஒளவையார் எடுத்துரைக்கிறார். நமது உடலில்
உயிருக்கு உயிராக இருந்து உயிரை இயக்கிக் கொண்டு இருப்பவர் இறைவன். இறைவனை
வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

கோவில் என்பதன் விளக்கமும் இலக்கணமும்

‘கோ - இறைவன், அரசன், இல்; - இல்லம்” இச்செய்தியைச் சங்க இலக்கியத்திலும்


சிலப்பதிகாரத்திலும் காணலாம்”2

கோவில் என்பது மனித உடலை பிரதிபலிக்கின்றது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று சேரும்


இடம் மனித உடல் ஆகும். கோவில்கள் உருவ அமைப்பும் இந்த அடிப்படையில் அமைந்துள்ளது.
கோவில் என்பது மனித உடலையும் மனதையும் அமைதிப்படுத்தக் கூடியதாகும்.

கோவில் நமது உடம்பின் வடிவிலேயே அமைக்கப்படுகிறது. கோவில் அமைக்க ஆறு


நிறைந்த பகுதிகள் தேவை. இவற்றை மனித உடலில் உள்ள உறுப்புகளுடன் ஒப்பிட்டு ஆறுமுக
நாவலர் கூறுகிறார்.

கோவில் சிறப்பால் பெயர் பெற்றவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் உண்டு. ஆதியில்


அரசன்(அரண்மனையை) இருப்பிடத்தைக் குறிக்க கோவில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

கோவிலின் அமைப்பின் அடிப்படைத் தத்துவம்

‘மனிதன் உள்ளத்தில் இறைவன் உறைந்துள்ள பாங்கினை உணர்த்துவனவாகவே கோவில்கள்


அமைக்கப்பட்டுள்ளன. பக்தியின் பிறப்பிடமாகவும் திருச்சின்னங்களாகவும் விளங்குவன
திருக்கோவில்கள் ஆகும்”3

இதனால் ,

‘கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா” என்பது போன்ற பழமொழிகள் தோன்றின.


இந்த சமூகத்தில் சிறு தெய்வ வழிபாடுகள் மிகப்பரவலாகக் காணப்படுகின்றன.

இத்தகைய அப்பர் தேவாரத்தில் ‘சென்று நாம் சிறுதெய்வம் சேரோம் அல்லோம்” என்று


பாடியுள்ளார். மேலும் கோயில்கள் கலையின் பண்பாட்டுச் சின்னங்களாகும். பண்டைய கால
மக்களின் நம்பிக்கைகளாகவும் திகழ்கின்றன.

திருக்கோவிலின் அமைவிடம்

பழைமையைக் கொண்டாடும் மாமதுரை இன்றைக்கு மதுரை மாடக்குளம் தாலுகா என்ற


நிர்வாகத்தின் கீழ் இருந்துள்ளது என்பது அனைவருக்கும் அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
மன்னராட்சி முடிந்து ஆங்கிலேயர் காலத்தில் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு பகுதிகளும்
தாலுக்காக்களும் பிரிக்கப்பட்ட பொழுது உதயமானது தான் மதுரை மாடக்குளம் தாலுகா
என்பதாகும். மாடக்குளத்தின் நிர்வாகத்திற்குக் கீழ் அமைந்த பகுதியாக தற்போதைய மதுரை
நகரம் இருந்துள்ளது.

இக்கோயிலின் அருகாமையில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 (காசி 40 யிலிருந்து


கன்னியாகுமரிக்கு) 2.5 கி.மீ . தூரத்தில் உள்ளது.

பு.ளு.வு - புசநயவ ளுழரவாநச n வுசயஉம சழயன.

3
இவை மட்டுமின்றி மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கில் 5 கி.மீ. ம் தெற்கில் திருப்பரங்குன்றம்
5 கி.மீ. லும் மேற்கு பகுதியில் 6 கி.மீ. நாகமலை புதுக்கோட்டை உள்ளது. அதனருகில்
தென்மேற்து விளாச்சேரி 3 கி.மீ லும் பின்பு வடக்கு பகுதியில் அச்சம்பத்து விளம்படிபத்து
கபாலீஸ்வரி அம்மன் கோவிலும் மேற்கில் மலை 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. கீழ்குயில் குடி
2.5 கி.மீ உள்ளது. மேற்குப் பகுதியில் சமணர் படுகையும் உள்ளது.
அய்யனார் என்பது கிராம தெய்வமாகக் கருதப்படுகிறது. மதுரை மாவட்டம் மதுரை மாடக்குளம்
பகுதியின் கண் ஊர் எல்லையில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மதுரை
பெரியார் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை மாடக்குளம் சுற்று வட்டார
மக்களிடம் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.

கோவில் உருவான விதம்

‘நமது முன்னோர்கள் கோவில் கட்டுவதற்கெனத் தனியாக நிலத்தை தேர்வு செய்து பின்


கட்டுகின்றனர். அதற்கு விதி முறைகளும் உண்டு. ஆலயம் கட்டுவதற்கு முன்பு அந்த நிலத்தில்
புனிதமான நீரோட்டம் இருக்க வேண்டும் என்பது மரபு”5

அவ்வாறு கோவிலின் பின்புறம் பெரிய கண்மாய் ஒன்று அமைந்துள்ளது.

அணைப்பட்டி சிறுநாயக்கன்பட்டி போன்ற இருபத்து மூன்று (23) ஊர்களைக் சார்நத்


செம்படவர்கள் மற்றும் மாடக்குளத்தைச் சென்றுள்ளனர். கோவிலாகக் காட்சியளிக்கும்
இவ்விடம் முன்பு காடுகளாக இருந்தது. அவ்வாறு வேட்டையாடச் செல்லும் போது அந்தக்
காட்டில் முயல் போன்று உருவம் தென்பட்டு ஓடி புதருக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு
சிலை ஒன்று இருப்பது கண்டு வியப்புற்றதாகத் தெரிவித்தனர்.

மதுரை மாடக்குளம் கிராம மக்களில் ஒருவர் மீது அய்யன் அருள் வந்து கூறியதால் அங்கு
அக்கோவில் கட்டப்பட்டது. சிவனும் பார்வதியும் தோன்றி அய்யனாரிடம் நீ சென்று மதுரை
மாடக்குளம் என்னும் ஊரில் இருந்து அங்குள்ள மக்களுக்கு அருள்புரிய வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு அவர் நான் உங்களை எப்போது மீண்டும் காணமுடியும் என்று
கேட்டபொழுது நாங்கள் ஆண்டிற்கு ஒரு முறை மகா சிவராத்திரி அன்று அங்கு வந்து உனக்கு
காட்சியளிக்கிறோம்..என்ற சொல்லுக்கு இணங்க அதன்படி ஸ்ரீ ஈடாடி அய்யனார் இங்கு காட்சி
தந்து அருள் கொடுத்து வருகின்றார்.

கோவிலின் சிறப்பம்சம்

இக்கோவிலின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.


அய்யனார் கோவில் கருப்பணசாமி கோவில் என்று தனித்தனி நிர்வாகங்களால்
நிர்வகிக்கப்படுகிறது. அய்யனார் கோவில் நிர்வாகத்தை வேளாளர் சமுதாயத்தைச்
சேர்ந்தவர்கள் தொன்று தொட்டு வழிவழியாக அவர்கள் பொறுப்பின் கீழ் இதனை கவனித்துக்
கொண்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் அச்சமூகத்தைச் சேர்நத


் பங்காளிகள் பூசாரிகளாக மாறிக் கொண்டே
இருப்பர். தற்போது இருளாண்டி வேளாளர் மற்றும் அழகர்சாமி வேளாளர் வாரிசுகள் பரம்பரை
பூசாரிகளாக உள்ளனர். அதில் இராஜேந்திர வேளாளர் பரம்பரை அறங்காவலராக உள்ளார். மற்றும்
தங்களது குல தெய்வம் எது என்று அறியாதவர்கள் அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனாரை
அவர்களது குலதெய்வத்திற்கு ஈடாக நினைத்து வணங்கி வழிபடலாம் என்பது முன்னோர்
வாக்காக உள்ளது.

அய்யனார் கோவிலின் தெற்கு பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஐந்நூற்றி


இருபத்து நான்கு படிகளைக் கொண்ட மலை ஒன்று உள்ளது. அம்மலை கபாலீஸ்வரி மலை
ஆகும். கபாலீஸ்வரி மலையில் கணக்குப் பிள்ளைக் குடும்பத்தினருள் ஒருவர் கோவில்

4
பூசாரியாக இருந்தார். இவர் அம்மனுக்கு நாள் தோறும் வழிபாடு செய்யும் பொழுது பால்
அபிஷேகம் செய்வார்.

ஒரு நாள் அம்மனுக்கு வைத்திருந்த பாலை பூசாரியின் மனைவி தன் குழந்தை


அழுதவுடன் அப்பாலை கொடுத்து விடுகிறாள். பாலைக் குடித்தவுடன் அம்மன் தோன்றி பாலை
குடித்த அவள் என் மகளாகி விட்டாள்.. என்று கூறி தன் முன்புறம் குப்புறத் திருப்பி படுக்க
வைக்குமாறு கூறியதால் இன்று வரை அம்மனுக்கு முன்னால் அந்நிலையிலேயே
காணப்படுகிறது. அக்குழந்தை அழங்காரி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

பூஜை செய்யும் போது கபாலீஸ்வரி அம்மனுக்கும், அலங்காரி அம்மனுக்கும் இன்று வரை


பால் ஊற்றி பூசைகள் நடைபெறுகிறது. இதுமட்டுமன்றி செவ்வாய் மற்றும் வெள்ளிக்
கிழமைகளில் மக்கள் இம்மலைக்குச் சென்று அம்மனை வழிபடுகின்றனர். இவ்வூர் மக்களுக்கு
குல தெய்வமாகக் காட்சியளிக்கின்றாள். இம்மலையின் பின்புறம் மூன்றரை கிலோ மீட்டர்
தூரத்தில் முருகனின் அறுபடை வீடுகளுள் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை
காணப்படுகிறது. இக்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

இது மட்டுமன்றி இக்கோயிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கப்


பகுதியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது . இதன் சிறப்பம்சமாகும். முன்பு பாண்டிய
மன்னர்கள் இருந்த காலத்தில் ஊரணி இருந்தது. ஊரணி என்பது குதிரைகளை குளிப்பாட்டும்
இடமாகும் கொட்டாரக்களமும் காணப்பட்டது. கொட்டார்க்களம் என்பதற்கு குதிரைகளை
அடைத்து வைக்கப்படும் இடம் என்பது பொருளாகும்.

அடைத்து வைக்கப்படும் இடமானது தற்பொழுது ஊர் பொது மன்றமாகத் திகழ்கிறது.


அதில் ஊர்த் திருவிழாவின் போது ஏற்பாடு செய்யக்கூடிய நாடகம் இசை நிகழ்ச்சி ஆகியன
இன்றும் இந்த இடத்தில் தான் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் மதுரை
மீனாட்சி அம்மன் கோவில் அமைப்பதற்கு அடித்தளம் போடுவதற்காக இக்கோவிலில் இருந்து
தான் வாய்க்கால் அமைத்து கரும்பு பால் கடுக்காய்ச் சாறு சுண்ணாம்பு போன்ற மூன்று
பொருள்களையும் எந்திரத்தின் உதவியின்றி மக்கள் தன் கையால் அரைத்து அச்சாற்றினை
வாய்க்கால் வழியாகக் கொண்டு சென்று மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலின் அடித்தளம்
போடப்பட்டது.

ஆதலால் கரும்பால வாய்க்கால் என்று அப்போது அழைக்கப்பட்டது. தற்போது மதுரை


வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது . இக்கோவிலின் பின்புறம் உள்ள மதுரை மாடக்குளம்
கண்மாயானது, மதுரை மாநகராட்சியின் முக்கிய நீர்வள ஆதாரமாக விளங்குகின்றது.
இக்கோவிலின் மேற்கு பகுதியில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் மதுரை காமராசர்
பல்கலைக்கழகம் இயங்கக் கூடிய பகுதியான நாகமலை புதுக்கோட்டை அமைந்துள்ளது.

இதிலிருந்து ஒன்றரை கிலோ மீடட் ர் தூரத்தில் சமணர்கள் வாழ்நத


் இடமான சமணர் படுகை
இருக்கக் கூடிய மலையான கீழ்குயில் குடி என்னும் ஊர் காணப்படுகிறது. இக்கோவிலில்
் ர் தொலைவில் அமைந்துள்ளது.
இருந்து இரண்டரை கிலோமீடட

அய்யனாரின் சிறப்பு வரலாறு

சூரபத்மன் சிவனிடம் வரம் வேண்டி நீண்ட ஆண்டுகள் கடும் தவம் புரிந்து வந்தான்.
இதைக் கண்ட சிவபெருமான் சூரபத்மனிடம் சென்று உனக்கு வேண்டும் வரத்தினைக் கேள்
என்று கேட்ட பொழுது சூரபத்மன் நான் யார் தலையினைத் தொட்டாலும் அவர்கள் அழிந்து விட
வேண்டும் என்னும் வரத்தினைக் கேட்டான்.

சிவபெருமானும் அவ்வாறே கேட்ட வரத்தினை அளித்தார். சூரபத்மன் சிவன் அளித்த


வரத்தினை சோதிப்பதற்காக, வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க எண்ணி தொட
முயன்றான். அதைக் கண்ட சிவபெருமான் ஓட அவரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றான்.

5
இதனை அறிந்த மகாவிஷ்ணு அவனது ஆவணத்தை அழிக்க எண்ணி மோகினியாக தனது
தோற்றத்தினை மாற்றி பெண்ணாக உருவெடுத்து அவ்வழியே வருகின்றார்.

வழியில் அப்பெண்ணைக் கண்டதும் அவன் ஆசைப்பட்டு நாம் திருமணம் செய்து கொண்டு


வாழலாம் என்கின்ற தனது விருப்பத்தினை அப்பெண்ணிடம் தெரிவிக்கிறான்.விஷ்ணு பகவான்
அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமெனில் நீ செய்த பாவங்களை எல்லாம் புனித நீரால் நீராடி
கரைத்து விட்டு வா என்று கூறுகின்றார். சூரபத்மனும் அதனை ஏற்றுக் கொண்டு நீராடி விட்டு
வருகிறேன் என்று கூறி அவ்விடத்தை விட்டுச் செல்கிறான்.

மகாவிஷ்ணு தனது திருவிளையாடல் மூலம் எங்கும் புனித நீர் இல்லாதபடி மாய


வித்தைகளைச் செய்கின்றார். சூரபத்மன் எங்கு சென்று தேடியும் புனித நீர் கிடைக்காததால்
ஏமாற்றத்துடன் திரும்ப வந்து மகாவிஷ்ணுவிடம் எங்கு தேடியும் புனித நீர் இல்லை என்கின்ற
நிலையினைக் கூறுகின்றான். மகாவிஷ்ணுவோ நீ புனித நீரால் நீராடி வரவில்லை என்றாலும்
பரவாயில்லை.

ஒரு சொட்டு நீராவது உன் தலையில் வைத்துக் கொண்டு வா என்று கூற இவனும் பல
இடங்களில் தேடிச் சென்ற பொழுது வழியில் மாடு நடந்து சென்ற கால் தடத்தில் நீர் இருக்கக்
கண்டு அந்த நீரை எடுத்து தன் தலையில் வைத்தவுடன் தான் வாங்கி வந்த வரத்தின்
காரணத்தினால் தானே.. அப்பொழுது தவம் செய்து கொண்டிருந்த இந்திராணியை
சூரபத்மனின் தங்கை அசமுகி பார்த்துவிட்டு அண்ணனிடம் பிடித்துக் கொடுக்க எண்ணி
அருகில் நெருங்கினாள். இந்திராணி பயத்தில் நடுங்கி அலறி ஐயனை(ஐயப்பனை)த்
துதிக்கிறாள்.

அது கேட்ட அய்யனாரின் காவலரும் ஏவலருமான வீரமாகாளர் விரைந்து வந்து


அசமுகியிடம் எடுத்துக்கூறி இந்திராணியை விட்டுச்செல்லும் படி கூறினார்;. ஆனால் அவளோ
அருகிலிருந்த துர்முகியிடம் இந்திராணியைப் பிடித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு
வீரமாகாளருடன் போர் தொடுக்கிறாள். அங்கிருந்த பெரிய மலைகளையும் மரங்களையும்
வேரோடுப் பிடுங்கி எறிந்தாள்.

அதனை வீரமாகாளர் தூளாக்கியதோடு துர்முகியின் வலது கரத்தை துண்டாக்கி


சிரங்களில் அறைந்து இருவரையும் விரட்டினர். அதன் பின்னர் இந்திராணி இந்திரனுடன்
இனிதாக வாழ்நத ் ாள். அதாவது அரிஉறர புத்திரனான அய்யப்பனுடைய கட்டளையின் படி வந்து
அசமுகியை வென்று துன்முகியின் கரத்தினை வெட்டி, இந்திராணியை மீட்டு இந்திரனுடன்
ஒப்படைத்து காத்தருளிய ஐயனை ஈடாடி என உலகம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

(ஈடு ூஆள் ூதிஸ்ரீ ஈடாதி) அடைக்கலமாகக் கொடுத்த பொருளுக்குத்


துணையாக இருப்பவன் எனவும் அடைக்கலமானவரை அன்புடன் காப்பவன் என்றும்
குறிப்பிடுகின்றார். ஈடாடி அய்யனார் அடைக்கலம்.

அதற்கு ஆட்பட்டு சூரபத்மன் அழிந்து விடுகிறான்.

இச்செய்தியை உமாதேவியிடம் தெரிவிக்க சிவபெருமான் சென்றபோது மகா விஷ்ணு மோகினி


உருவத்தில் இருப்பதைப் பார்க்கின்றார். அவள் அழகில் மயங்கியதால் தன்னை மறந்த நிலையில்
விந்து (சுக்லம்) சுரப்பதைக் கண்ட மகாவிஷ்ணு விந்து பூமித்தாயின் மேல் படாமல் தன்
கைகளால் தாங்கிப் பிடித்துக் கொள்கின்றார்.அந்த விந்துவே குழந்தையாக மாறியது.

‘மகாவிஷ்ணு தன் கையில் தாங்கிப் பிடித்ததனால் (கையனார்) எனப் போற்றப்பட்டார்.


எனவே அய்யனாரின் அம்மை அப்பன் சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஆவார். அய்யனார்
இரண்டு அவதாரங்கள் எடுத்துள்ளார்.. என்று கேரளாவில் உள்ள ஐயப்பனாகக்
காட்சியளிக்கின்றார். மற்றொரு அவதாரம் மாடக்குளத்தில் இருக்கக்கூடிய அய்யனார் ஆகும்.

6
அங்கு அவர் பூரணா, புஷ்கலை என்கின்ற இரு பெண்களை மணந்து கொண்டு மக்களுக்கு
காட்டியளிப்பதாகக் கூறுகின்றார்.

அய்யனார் பெயர்க்காரணம்

சூரபத்மனுக்கு அஞ்சிய இந்திரன் தன் மனைவியுடன் வந்து சீர்காழியில் தவம் புரிந்து


கயிலைமலை நோக்கித் தேவர்களுடன் செல்லும் போது தனது தேவியாகிய இந்திராணியை
அய்யன் திருவருள் காப்பதாக எண்ணி வேண்டிக் கொண்டு தனியாக விட்டுச் செல்கின்றான்.

கோபுரம்

கோவிலின் ராஜ கோபுரத்தை அவ்வூரில் கணக்குப் பிள்ளைக் குடும்பத்தைச் சேர்ந்த


தங்கையா பிள்ளை என்பவர் கட்டித் தருவதாக ஊர் பொது மக்கள் முன்பு உறுதி அளித்துள்ளார் .
ஆனால் அவரால் அதனை நிறைவேற்ற இயலவில்லை. அதனால் அவர் குடும்பமானது
வறுமையில் வாடியது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த இருபது(20) வயதை உடைய
அவருடைய பேரனான பிரபாகரன் என்பவர் நான் அந்த கோபுரத்தைக் கட்டி முடிக்கிறேன் எனத்
துணிவுடன் கூறியதாகவும், அதன் பின் தன்னுடைய நாற்பதாவது வயதில் நுழைவு கோபுரத்தை
தன்னுடைய நாற்பதாவது வயதில் நுழைவு கோபுரத்தை தன் செலவில் அமைத்துக்
கொடுத்தாகவும் கூறினர்.

பிரகாரம்

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள்


காணப்படுகிறது. அந்த தூண்களில் பூக்களில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சப்த
கன்னிமார்களின் சிலைகள் காணப்படுகின்றது. திருவிழாக்களின் போது எடுத்து வந்த
புரவிகள் (குதிரை) வரிசையாக நுழைவு வாயிலின் உள்ளே வலப்புறமாக
வைக்கப்பட்டுள்ளது.என்று வரும் பக்தர்களுக்கு அவர்கள் மீது அன்பு செலுத்தி காத்தருளக்
கூடியவராக விளங்குகின்றார் இந்திராணியை மீட்டுக் கொடுத்ததன் காராணமாக ஈடாடி
அய்யனாருக்கு இந்திரன் மகள்களான பூரணா,புஷ்கலை ஆகிய இருவரையும் மணம் செய்து
கொடுத்துள்ளார். இக்கோவிலில் இவ்விரு தேவியர்களுடன் காட்சி அளிக்கின்றார்.

கோவிலின் அமைப்பு

கோவில் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என பண்டைய காலத்தில் எந்த


இலக்கணமும் வகுக்கப்படவில்லை. பின்பு ஆகமங்கள் தோன்றி கோவில்களுக்கான
இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்


ஊள்ளற்பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தேள்ளத் தெளிந்தார்க்கம் சீவன் சிவாலயம்

குள்ளப் புலனைனத்தும் சூளாமணி விளக்கே”6

என்னும் பாடல் கோயிலின் இலக்கணத்தைப் புலப்படுத்துகிறது.

ஆகம விதிப்படி ஆலயங்கள் பல்வேறு வடிவங்களில் அமைத்துக் காட்டுகின்றனர். தென்


இந்திய முறைப்படி கோவிலின் கருவறையானது சிறியதாகவும் கோபுரம் அகன்று உயரமாகவும்
அமைத்து கட்டப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இக்கோவிலின் கோபுரம் மிகச் சிறியதாகக்
காணப்படுகிறது.இக்கோவிலின் உள்ளே மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு
இருக்கிறது.அம்மண்டபமானது பக்தர்களின் பயன்பாட்டிற்காகவும் ஊர் திருவிழாவின் போதும்
பயன்படுத்திக் கொள்ளும் விதமாக உள்ளது.

7
கருவறை

இக்கோவிலின் கருவறையானது கிழக்கு முகம் பார்தது அமைந்துள்ளது


கருவறையினுள் நடுவில் அய்யனாரும்,வலப்பக்கம் முதல் மனைவியான பூரணாவுடனும்
இடப்பக்கம் இரண்டாம் மனைவியான புஷ்கலையுடனும் காட்சித் தருகின்றார்.அச்சிலைக்கே
அனைத்து பூசைகளும் வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது.கருவறையின் நேர் எதிரே
யானையின் உருவம் வைக்கப்பட்டுள்ளது. யானையின் மூச்சுக்காற்றானது அய்யனார் உந்திக்
கமலத்தை சென்றடைய வேண்டும் என்ற அமைப்ப முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகக்
குறிப்பிடுகின்றனர்.

பிற தெய்வங்கள்

கோவிலின் கருவறை பக்கத்தில் வலப்பக்கம் விநாயகர் சிலையும், இடப்பக்கம்


முருகப்பெருமானின் சிலையும் அமைந்துள்ளது வலது புறம் உள்ள விநாயகருக்கு அருகில் சப்த
கன்னிமார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சப்த கன்னிமார்கள்
1. ப்ராம்ஹி
2. மஹேஸ்வரி
3. கௌமாரி
4. வைஷ்ணவி
5. வாராஉறி
6. இந்திராணி
7. சாமுண்டி
இடது புறம் முருகப்பெருமானின் சிலைக்கு சற்று முன்பு தள்ளி சின்ன கருப்பணசாமி, பெரிய
கருப்பணசாமி ,பேச்சிஅம்மன் ஆகிய தெய்வ உருவச் சிலைகாணப்படுகின்றன்.மேலும் லாட
சன்னியாசி,முத்துக் கருப்பர்,சங்கிலி கருப்பர் போன்ற தெய்வங்களின் சிலைகளும்
காணப்படுகின்றன.வாயிலில் நுழைந்தவுடன் பெரிய உருவ சிலைகளா பெரிய கருப்பர் ,சின்ன
கருப்பர் குதிரை மேல் கம்பீரமாக தோற்றமளிக்கும் நிலையில் காணப்படுகிறது. இந்தக் காவல்
தெய்வங்கள்யாவும் இரவு நேரத்தில் உலாவி கிராமத்துக்குப் பாதுகாவலாக இருப்பதாக இன்று
வரை மக்கள் நம்பிக்கைக் கொண்டு உள்ளனர்.

கன்னிமார் தெய்வங்கள்

கன்னிமார் என்றாலே தேவலோகத்து கன்னிமார்களைக் குறிக்கும் சங்கிலி


கருப்பணசாமி,சந்தன கருப்பணசாமி ஆகிய இரண்டு காவல் தெய்வங்களுக்கும் துணைத்
தெய்வங்களாக அமைந்துள்ளன.சிவ பெருமானின் இடப்பக்கத்தில் என்றும் நீங்காமல் இருந்த
அருளும் அன்னை பராசக்தி எடுத்த திருமேனிகள் ஏழு எனவும்,ஒன்பது எனவும்,
சொல்லப்படுகின்றது அவைகள் சப்த கன்னமார்கள் என்றும் , நவ மாதாக்கள் என்றும்
அழைக்கப்படுகிறது. இவையே கிராமங்களில் கன்னி தெய்வங்களாக விளங்குகின்றன.

விநாயகர்

விநாயகர் வடிவம் விந்தையான வடிவமாகும்,மனித உடலையும்,யானைத்


தலையினையும் பூதப் பெருவயிற்றையும் ஒரு பக்கம் கொம்பும்,பெண் தன்மையும் அ.றிணை.,
உயர்திணை அம்சங்கள் பொருந்திய இந்நிலையை உற்று நோக்கிப்பார்த்தால் விநாயகப்
பெருமான் தேவராய்,மனிதராய்,பூதமாய்,விலங்காய்,ஆணாய்,பெண்ணாய் எல்லாவிதமாகவும்
திகழ்கிறார் என்பது புலனாகும்.

முருகன்

8
இவர் பார்வதியின் இரண்டாம் மகனாகத் திகழ்பவர் இவரின் வாகனம் மயில் ஆகும் .
மேலும் குறிஞ்சி நிலத் தெய்வமாக முருகன் அய்யனாரின் இடதுபுறமாக அமைக்கப்பட்டு உள்ளது
முருகன் என்றால் அழகு, இளமை என்று பொருள் ஆகும். முருகன் குழந்தையாக இருந்த
பொழுதே இந்திரன் செருக்கை அடக்கினார் என்று புராணங்கள் உணர்த்துகின்றது.

சங்கிலி கருப்பர்

இந்த காவல் தெய்வமானது மிகந்த ஆக்ரோசமாக (கோபமாக) இருக்கும்


பொழுது மக்களை ஏதாவது செய்து விடுவார் என அஞ்சி அவரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற
உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணித்த நிலையில் இருக்கின்றார் எனவே சங்கிலி கருப்பர் எனப்
பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.

9
முத்துக்கருப்பர்

மக்கள் சென்று தம் குறைகளைக் கூறி வேண்டி நின்றால் அவர் கொடுக்கும்


வாக்கு(சொல்) முத்து போன்று இருக்கும் சொன்ன சொல் தவறாதவர் ஆகையால் இவர்
முத்துக் கருப்பர் என்று அழைக்கப்படுகின்றார்.

பெரிய கருப்பர்

பெரிய கருப்பர், சின்ன கருப்பர் இரண்டு பேரும் முக்கிய காவல் தெய்வங்களாக


போற்றப்படுகின்றார் “ஆறு குளங்களையும் கொடிய நோயிலிருந்து மக்களையும்,
குழந்தைகளையும் காக்கும் தெய்வமாகவும் காவல் தெய்வங்கள் உள்ளன.”

சின்னக் கருப்பர்

“ சிங்கார அலங்காரத்தில் சீர் கொண்டு வருவர் சின்னக் கருப்பர்” என்ற பெயருக்கு


ஏற்றவாறு பட்டு வேஷ்டி மற்றும் உருமா கட்டி பல்வேறு வித்தான வண்ண மலர்களால்
அலங்கரிக்கப்பட்டு மிக அழகான தோற்றத்தில் காட்சி அளிப்பார்.அய்யனாரின் காவல்
தெய்வமாக விளங்குவது பெரிய கருப்பர்,சின்னக் கருப்பர் ஆகிய இருவரும் ஆவர். இவர்கள்
இருவரும் சகோதரர்களாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது.

மடகருப்பன்

மடகருப்பன் என்பவர் மடையைக்காவல் காக்கம் தெய்வமாகும்.கண்மாயில் நீரந் ிரம்பும்


பொழுது மூன்று படைகளுக்கும் (தெற்கு மடை, நடுமடை,நடுமடை) காவல் தெய்வமாக
இருக்கக் கூடியவர் கண்மாயில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் பொழுது அவ்வூர் மக்களை
நீரினால் அழியாமால் பாதுகாத்துக் கொண்டு இருப்பவர். மேலும் கண்மாய் உடையும் நிலையில்
இருக்கும் பொழுது பெரிய கருப்பு,சின்ன கருப்பு ஆகிய மூவரும் அய்யனார் கண்மாயில் தன்
காலை வைத்து அடைத்து நின்று கொண்டு மடக் கருப்பரை ஊருக்குள் சென்று
ஊர்மக்களைஅழைத்து வந்து கண்மாயை அடைக்கும் படி செய்தவர். மடக்கருப்பரை வணங்கக்
கூடிய தாழ்தத் ப்பட்ட இனத்தவர்களுள் ஒருவர் மேல் இறங்கி அருள்வாக்க கூறி மடையை
அடைத்தும், நீர்வரத்தினைத் தடுத்தும் நிற்பார். எவ்வாறு அடைப்பது என்று கேட்டதற்கு என்
தங்கையாகிய அம்மிச்சியின் தலையை வெட்டி இரத்தப் பலி கொடுத்தால் நின்று விடும் எனக்
கூறியவுடன் மக்கள் அவ்வாறே செய்த உடன் மடையை உடைத்து வந்த நீர் நின்று விட்டது .அந்த
அம்மாச்சி என்பவளே அம்மனாக மாறி மலையின் மீது எறி அமர்நது ் கொண்டாள் அதுவே
தற்போது கபாலீஸ்வரி அம்மன் என அழைக்கப்படுகிறாள்.

மடக்கருப்பர் உடனே ஊர் நாட்டாமை,அல்லது கணக்குப்பிள்ளைக் குடும்பத்தினரில்


யாரேனும் ஒருவருடைய கனவில் வந்து கண்மாய் உடையப் போகிற நிலையில் இருக்கின்றது .
ஆகையால் அதனை வந்து அடைக்குமாறு அழைப்பார்.இவ்வூருக்கு இன்றும் கண்மாயின்
தெற்கு மடைக்கரையில் காவல் தெய்வமாக நின்று மக்களைக் காத்துக் கொண்டு இருக்கிறாள்.

தெய்வங்களின் ஆயுதங்கள்

அய்யார்தான் இவ்விடத்தில் ராஜாவாக(தலைவனாக) திகழக் கூடியவர்.எனவே அவர்


தனது ஒரு கையில் சின் முத்திரையும், மற்றொரு கையில் சுவால சாட்டையும் வைத்தக்
கொண்டு இருப்பவர்,சங்கிலி கருப்பர் முத்துக் கருப்பர் ஆகிய இருவரும் கையில்
தண்டாயுதத்தை வைத்துள்ள நிலையில் காணப்படுகின்றனர். பெரிய
கருப்பணசாமியும்,சின்னகருப்பன சாமியும், கையில் அரிவாள் வைத்துள்ள கம்பீரம் நமக்கு
அச்சத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.

10
அய்யனார் வேட்டைக்குச் செல்லும் பொழுது உடன் நாயை அழைத்துச் செல்வது
வழக்கமாகும.; எனவே நாயின் உருவச்சிலையும் இங்கு உள்ளது. இது தவிர சிவன் கையில்
சூலமும் , பெண் தெய்வங்களின் கையில் உடுக்கை,அங்குசம் போன்ற ஆயுதங்களும
;காணப்படுகின்றன.வேளாளர் சமூகத்தைச் சேர்நதவர்கள் தான் பரம்பரைப் பரம்பரையாக
அய்யனாருக்குப் பூஜை செய்து கொண்டு வருகின்றனர். பிள்ளைமார் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் கருப்பன சாமிக்குப் பூசை செய்யக் கூடியவராக இருக்கின்றனர்;.

கோவிலின் உறுப்புகள்

கோவிலின் கட்டிடத்தில் ஆறு உறுப்புகள் உண்டு அவை

1.அடி
2. உடல்
3.தோள்
4.கழுத்து
5.தலை
6.முடி.
என அழைக்கப்படுகிறது. இதற்கு சிற்ப நூலில் வேறு பெயர்கள் உள்ளன.

“1. அடி அல்லது தரை அமைப்பு - இதற்கு அதிட்டானம் மசூரம்,ஆதாரம் தலம்,பூமி முதலிய
பெயர்கள் உண்டு.

2. உடல் அல்லது கருவறை-இதற்கு கால் பாதம்,ஸதம்பம்,கம்பம் முதலிய பெயர்கள் உண்டு.


3.தோள் அல்லது தளவரிசை-இதற்கு பிரஸ்தம்,மஞ்சள்,கபோதம், முதலிய பெயர்கள் உள்ளன.
4. கழுத்து- இதற்கு கண்டம்,களம்,கர்ணம் முதலிய பெயர்கள் உண்டு.
5. தலை அல்லது கூரை- இதற்கு சிரம், பண்டிகை,சிகரம்,மஸ்தகம் முதலிய பெயர்கள் உள்ளன.
6.முடி அல்லது கலசம் அதற்கு ஸ்தூபி சிகை,துளம் முதலிய பெயர்கள் உண்டு”.8

தொலைவில் தேசிய நெஞ்சாலை எண்-7. ( யேவழையெட ர்i பா றயலள ழே-7)


அமைக்கப்பட்டுள்ளது. இந் நெடுஞ்சாலை காசியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும்
பாதையாகும்.

ஓவ்வொரு வருடம் மாசி மாதம் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை வட்டம்


அணைபட்டி நிறு நாயக்கன் பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ ஈடாடி அய்யனாரை குல தெய்வமாக வழிபடும்
மக்கள் மாசி மாதம் திருவிழாவிற்குத் தங்கள் ஊரில் இருந்து நவீன காலத்திலும் மாட்டு
வண்டியிலேயே வருவார்கள். அதுமட்டுமல் லாமல்,ஆபரணப் பெட்டி தூக்கி வரக்கூடியவர்கள்
சுமார் நாற்பது கிலோ மீட்டர் (40 கி.மீ) தூரம் அவ்வூரில் இருந்து நடந்தே வருகின்றனர்
அப்பெட்டியை தூக்கி வருபவர்கள் தலையில் இருந்து இடையில் எந்த ஒரு இடத்திலும் இறக்கி
வைக்கமாட்டார்கள். அத்தகைய சிறப்பு பெற்றதாக இக்கோவில் விளங்குகின்றது.

11
12
தொகுப்புரை

இவ்வியலின் மூலம் அய்யனார் தோன்றிய விதம், பெயர்க்காரணம் கோவில் உருவான


விதம் பிற தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் ஆயுதங்கள் அமைவிடங்கள் குறித்து
விளக்கப்பட்டுள்ளது. இவ்வூர் மக்கள் அனைவரும் தங்களுடைய தொழிலுக்கு பக்க
துணையாக இருக்க வேண்டும் என்று கருதியே இத்தெய்வங்களை அமைத்துள்ளனர்.

13
குறிப்புகள்

1. ஒளவையார் கொன்றை வேந்தன் பக்கம்2


2. சுப்ரமணிய கவிராயர்.சொ.திருக்குற்றால நாத சுவாமி கோயில் வரலாறும், பண்பாடும்
பக்கம்.22
3. டாக்டர் தொ.பரமசிவன், தெய்வங்களும் சமூக மரபுகளும் பக்கம்.140
4. மேலே குறிப்பிட்ட நூல் பக்கம்140
5. வைத்தியலிங்கம் தமிழ் பண்பாட்டு வரலாறு பக்கம்.335
6. டாக்டர்.சிவ விவேகானந்தன். நாகராஜ கோவில் பக்கம்.33
7. சக்திவேல் நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் பக்கம்.177
8. அருங்கன் ஆலய வழிபாடு பக்கம்.48

இயல் -2
வழிபாடுகளம் பூஜைகளும்
மதுரை மாடக்குளம் - அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார்
திருக்கோயில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும்

உலகில் இறைவனை எய்துவதற்கு வழிபாடு தேவை. அவ்வழிபாடு தான் உயிர்களின்


பாதுகாவலுக்கும் கல்வி அறிவு பொருள் புகழ் முதலான சீரிய செல்வங்கள் சேருவதற்கும்
வழிவழி மரபு சிறந்து மேம்படுவதற்கும் வழிவகுக்கின்றது. இதனைத் தொல்காப்பியர் ,

‘வழிபடு தெய்வம் நிற்புறங்காப்பு


படிதீர் செல்வமொடு வழிவழி சிறந்தது பொலிமின்”1

14
(தொல்-செய்யுளியல்-106)
என்று புறநிலை வாழ்த்து நூற்பாவில் விளக்கியுள்ளார்.

வழிபடும் மாந்தரைத் தெய்வம் முன்னின்று காக்கும் என்பது அழியாத நிலைத்த புகழைத்


தருகின்ற பல்வேறு நலன்களைத் தந்து வாழ்விக்கும் என்பதும் பழிபடுவோரையும் அவர்
வழித்தோன்றல்களையும் முறையாகக் காக்கும் என்பதும் இந்நூற்பாவால் அறிய முடிகிறது.

வழிபாடு என்பதன் விளக்கம்

வழிபாடு என்பது வழிபடுதல் என்னும் பொருளுக்குரிய சொல்லாகும் . வழிபடு என்னும்


தொழிற்பெயர் பெயர்ச்சொல்லாக மாறும் போது ஈற்றயல் நீண்டு வழிபாடு என்றாகின்றது.

‘வழி என்பதற்கு நெறி என்றம் படு என்பதற்கு சொல்லுதல் பொருந்துதல் என்றும் பொருள்
கற்பிக்கப்பட்டு இறையடியார்களும் ஞானிகளும் அறிஞர்களும் காட்டியுள்ள நெறியில் செல்லுக
என்று அறிவுறுத்தும் பாங்கில் இச்சொல் இன்று ஆளப்பட்டு வருவதைக் காண்கிறோம்”.2

வழிபாட்டின் தோற்றம்

இயற்கையை வழிபட்ட மனிதன் கால மாற்றம் காரணமாக வளர்நத


் நிலையில் கோயில்
அமைத்து அங்கு சென்று வழிபட்டு வருகின்றான்.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு


முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி”3

ஆகும் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

தமிழ்க்குடியில் பிறந்த மனிதன் இடி, மின்னல், மழை பெருஞ்சூறாவளி காற்று போன்றவற்றைக்


கண்டு அஞ்சி நடுங்கினான். அவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வழிபட்டான்.

வழிபாட்டின் தன்மைகள்

சிறு தெய்வக் கோயில்களில் ஒரு நாளைக்கு ஒரு முறையும் சில கோயில்களில்


வாரத்திற்கு இரு முறையும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. வழிபாடு முடிந்ததும் அனைத்துக்
கோயில்களிலும் குங்குமத்துடன் மஞ்சள் காப்பும் வழங்கப்படுகின்றன. அக்கோயில் அர்சச
் னை
செய்யப்படுவதில்லை.

வழிபாட்டிற்கான பொருட்கள் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் சந்தனம் பூ பத்தி


முதலியனவாகும். தேங்காய் உடைத்தும் பொங்கல் வைத்தும் இறைவனை வழிபடுவது இந்து
சமய வழிபாட்டில் சிறப்பான ஒன்றாகும்.

நாள் வழிபாடு

நாள்தோறும் காலை மாலை அல்லது இருவேளைகளில் கோயில்களில் நடைபெறும்


வழிபாடானது நாள் வழிபாடு எனப்படும். அவ்வழிபாட்டு முறையில் மக்கள் இறைவனுக்கு
மஞ்சள் நீP ராட்டியும் தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்வார்கள். சில கோயில்களில் பொங்கல்
வைத்தும் வழிபாடு செய்யப்படும். அதிக அளவு வருமானம் கிடைக்கும் கோயில்களில் நாள்
வழிபாடு நடைபெறுவதைக் காண முடிகிறது.

இறை வழிபாடு

இறை வழிபாடு என்பது இறைவனைப் பூசிப்பதும் தியானிப்பதும் ஆகும். ஐந்தன்


பெருமையே ஆலயமாவதும் என்றும் கோயிலின் பெருமையை திருமூலர் காலத்திலே

15
கோயில்களும் கோயில் வழிபாடுகளும் இருந்தன..என்பதை திருமந்திரப் பாடல்களும்
வெளிப்படுத்துகின்றன.

‘நாடும் நகரமும் நற்றிருக் கோயிலுந்


தேடித் திரிந்து சிவபெருமான் என்று

பாடுமின் பாடிப் பணியின் பணிந்தபின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வேன்”4

(திருமந்திரம் -1445.)
நாடு நகரம் தேடிச் சரியை நெறியில் நின்று இறைவரன வணங்கினால் அன்பு ஏற்படும். அவரவர்
உள்ளத்திலும் அப்பெருமான் கோயிலாகக் கொண்டு விளங்குவான்..இந்நிலையினை அவர்கள்
உணர்வார்கள் எனத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

வழிபாட்டின் வகைப்பாடு

பழங்கால மனிதன் தன் மனநிலைக்கு ஏற்ற வகையில் பல வகையான தெய்வங்களை


வழிபடத் தொடங்கினான். அவ்வழிபாட்டை

1. இயற்கை வழிபாடு
2. புனிதப் பொருள் வழிபாடு
3. குலக்குறி வழிபாடு
4. முன்னோர் வழிபாடு
5. சிறு தெய்வ வழிபாடு என்று வகைப்படுத்துகின்றனர்.
இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாடே இறை வழிபாட்டிற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.


இயற்கை வழிபாடு என்பது இயற்கைப் பொருட்களான நிலம் , நீர், காற்று, நெருப்பு, வான், மலை,
கடல்,ஞாயிறு, திங்கள் போன்றவற்றை வழிபடுவதாகும். நாட்டுப்புற மக்களிடையே இயற்கை
வழிபாடு இன்றும் காணப்படுகிறது.

‘திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்”

என இளங்கோவடிகள் இயற்கையைப் போற்றிய விதம சிலப்பதி காரத்தில் மங்கல வாழ்த்துப்


பாடலில் காணமுடிகிறது.

புனிதப் பொருள் வழிபாடு

1760 இல் சார்லஸ் டி பிராசேஸ் (ஊ h யசடநள னுந டீசழளநளள) என்பவர் புனிதப்


பொருள் வழிபாடு பற்றி ஒரு நூலை வெளியிட்டார். இந்நூலில் அவர் அனைத்து சமயங்களும்
புனிதப் பொருள் வழிபாட்டிலிருந்து வந்தவை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உழவன் தன்னுடைய ஏரினை பொன் ஏர் என்று விழாக் கொண்டாடி


உழவுத்தொழிலைத் தொடங்குகிறான். இதற்கு எல்லாம் காரணம் ஒரு பொருளிடம் மனிதன்
கொள்ளும் நம்பிக்கையே புனிதப்பொருள் வழிபாட்டிற்கு அடிப்படையாகும்.

16
குலக்குறி வழிபாடு

விலங்கு ,பறவை இயற்கைப் பொருட்களைக் குலக்குறியாகக் கொண்டனர் . இவற்றை


வழிபடுவதன் மூலம் இவற்றின் ஆற்றல் தங்கட்கும் கிட்டும் என நம்பினர். குலக்குறி கால்வழி
பகுப்புக்கும் திருமண உறவுக்கும் அடிப்படையாக உள்ளது . நாட்டுப்புற மக்களிடையே குலக்குறி
வழிபாடு காணப்படுகிறது.

மனிதர்களின் ஆவி விலங்குகளிடம் சென்று உறையும் என்ற நம்பிக்கையில் எழுந்ததே


குலக்குறி என்கிறார் ‘வில்கெம்”. ஒரு கூட்டத்தினரின் சமூக மனநிலையின் ஒன்றுபட்ட
வெளிப்பாடு குலக்குறி என்கிறார் ’டூர்கைம்”. ஒவ்வொரு குலமும் ஒவ்வொரு வகையான
விலங்கொடும் தாவரத்தோடும் தொடர்பு கொண்டிருக்கிறது..இவ்வாறு விலங்குகளையோ
தாவரங்களையோ கடவுளாகக் கருதி வழிபடும் மரபு குலக்குறி வழிபாடாகும்.

முன்னோர் வழிபாடு

தமிழகத்தில் முக்கியமாக கொங்கு நாட்டில் பெரிதும் இடம் பெறுவது முன்னோர்


வழிபாடு ஆகும். இம்முன்னோர் வழிபாடு அன்பின் காரணமாகவும் அச்சத்தின் காரணமாகவும்
வழிபடப்படுவதாகும். ஆவி வடிவில் வாழும் முன்னோர்களும் குலத்தலைவர்களும் நன்மை
செய்வார்கள்..என்று நம்பினர்.

இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் இறந்துபட்ட முன்னோர்களை வழிபடத் தொடங்கினர்.


இன்று தமிழகத்தில் இறந்தவர்களுக்காக செய்யப்படும் இறப்புச் சடங்குகள் முன்னோர்
வழிபாட்டின் எச்சம் ஆகும். இறந்தவருக்காகச் செய்யப்படும் நீத்தார் நினைவுநாள் வழிபாடு
முன்னோர் வழிபாட்டின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது.

சிறு தெய்வ வழிபாடு

நாட்டுப்புறத் தெய்வங்களைத் தான் சிறு தெய்வங்கள் என்று அழைக்கிறோம். குடும்ப


தெய்வ வழிபாடும் குல தெய்வ வழிபாடும் ஊர் தெய்வ வழிபாடும் இவற்றில் அடங்கும். வீட்டில்
யாரேனும் துன்புற்றாலும் நோய் வாய்ப்பட்டாலும் குடும்ப தெய்வத்திற்குப் பூஜை செய்வர்.
குடும்பத் தெய்வத்தின் பெயரை பிள்ளைகட்கு பெயராகச் சூடுவர்.

நாட்டுப்புறங்களிலும் அந்தந்த குலத்துக்குரிய தெய்வத்தின் பெயரைத் திருமண


அழைப்பிதழில் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குல தெய்வத்தை வழிபடுபவர்கள்
அனைவரும் பங்காளிகள் ஆவர். சிறு தெய்வங்கள் வேதக் கடவுளோடு பெரும்பாலும் தொடர்பு
கொள்ளாதவையாக இருக்கிறது.

‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவேன்


குலதெய்வத்தை கும்பிட்டுக் கும்மியடி”5

என்பது குல தெய்வ வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகிறது. சில நேரங்களில்;;;; செல்வாக்கு


மிக்க குலதெய்வம் ஊர்த் தெய்வமாகவும் பின்னர் பல ஊர்த் தெய்வமாகவும் மாறுவதுண்டு.

‘மாயோன் மேய காடுறை உலகமும்


சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்”6

17
(தொல் - அகம்5)
என்ற வரிகள் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் மக்களிடையே கடவுள் வழிபாடு
குறிப்பிடப்படுவதை அறியலாம். ஆகவே திருக்கோயில் வழிபாடு நமது மரபாகக்
கருதப்படுகின்றது.

வழிபாட்டின் பயன்கள்

வழிபாடு செய்வதால் மக்கள் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ முடிகிறது.
கால்நடைச் செல்வங்களாகிய ஆடு, மாடு, கோழி, பசு, எருமை போன்றவை பெருகுவதுடன்
மக்கள் தொழில் வளம் செழிக்கும் என்றும் எவ்வித இடையூறும் இன்றி மக்கள் வாழ முடிகிறது
என்று நம்பப்படுகிறது.

வழிபாடு மக்களின் வாழ்வுக்குத் தேவையாகும். இதனையே அப்பர் பெருமான் பின்வரும்


பாடலால் விளக்குகிறார்.

‘வாழ்;த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்


தாழ்த்த சென்னியுந் தந்த தலைவனைச்

் மாமவர் தூவித் துதியாதே”7


சூழ்தத (தேவாரம் -890)
நம் தேகத்தின் உறுப்புக்களைக் கொண்டு(வாய், நெஞ்சு, தலை) ஈசனை வழிபட்டால் பிறவிக்கு
காரணமான வினைகள் யாவும் தீரும் என அப்பர் பெருமான் பாடியுள்ளார்..

வழிபாட்டை மனம், மொழி, மெய் என்ற மூன்று நிலைகளில் செய்யலாம். உலகியலில் உழன்று
கொண்டிருக்கும் மனத்தை இறைவனிடம் செலுத்தி, வழிபடுவதன் மூலம் இப்பிறப்பில் சுகமும்,
மறுபிறப்பில் முத்தி நலமும் வாய்க்கப் பெறலாம் என நம்புகின்றனர்.

வழிபாடுகள் கோயில்களில் காலந் தவறாமல் நடைபெற வேண்டும். அவ்வாறு


இல்லையென்றால் நாட்டிற்கும் உலகிலுள்ள மக்களுக்கும் தீமை ஏற்பட்டு விடும். மழையானது
பருவத்தில் பெய்யாது என்ற இச்செய்தியினைத் திருமூலர்

‘ஆற்றரு நோய் மிகக் கவனி மழையின்றிப்


போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்று தைத்தான் திருக்கோயில் களெல்லாம்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே”8

என்று கூறுகிறார்.

கோயிலில் வழிபடுவோர் மூன்று முறை, ஐந்து முறை, பிரகாரங்களைச் சுற்ற வேண்டும் என்று
குறிப்பிடுவது, மூவகை உடம்புகளையும் ஐந்துவித கோஷங்களையும் கடந்து இறைவன்
விளங்குகின்றான் என்பதை நினைப்பதற்காகும்.

கடவுள் என்பது மனிதன் நம்புகின்ற ஒரு நம்பிக்கை ஆகும். இத i னை,

‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்


எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்ல.துறும் கழுமலை வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”9

18
(தேவாரம் - 252)
என்று திருஞானசம்பந்தரும் இறைவனைக் கண்டு வணங்குபவர்களுக்கு இப்பூவுலக வாழ்வில்
மகிழ்ச்சியும் வளமும் பெற்று குறைவில்லாமல் சிறப்போடு வாழலாம்..எனப் பாடியுள்ளார்.

அய்யனார் வழிபாடு

அய்யனார் இடதுபுறமாக புஷ்கலையும் வலதுபுறமாக பூரணா தேவியும் அமைந்திருக்க


அய்யனார் நடுவாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார். வருகின்ற பக்தர்களைத் தன்வசப்படுத்தி
அவர்கள் என்ன வரம் வேண்டுமென்கிறார்களோ அதை நிறைவேற்றி தரக்கூடிய வண்ணமாய்
காட்சி அளிக்கின்றார்.

கிராமத் தெய்வமான அய்யாரை வணங்கினால் மக்கள் நோய் நொடி மற்றும் எந்த


விதமான துன்பமும் இல்லாமல் இன்பமுடன் வாழலாம் என நம்புகின்றனர் . இக்கோயிலில்
நாள்தோறும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகின்றது. தம் வாழ்வில் சிக்கல்கள் இன்றி
நன்மைகள் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கு இவருக்கு எண்ணெய் தீபம் இட்டு வணங்குதல்
சிறந்தது எனக் கருதுகின்றனர்.

அய்யனாரை வழிபடும் பக்தர்கள் அனைவரும் தேங்காய் ,பழம், பூ, சூடம், ஊதுபத்தி,


எண்ணெய் முதலியவற்றை படைத்து தங்கள் குறைகளைக் கூறி வழிபடுகின்றனர்.

19
பூஜையும் அதன் பயன்களும்

‘பூ” என்பது பூலோகத்தில் உள்ள போக பாக்கியங்கள் என்று பொருள். ‘செய்” என்பது
செய்வது உண்டு பண்ணுவது என்று பொருள். பூலோகத்தில் போக பாக்கியங்களை உண்டு
பண்ணுவதற்காகப் பூஜை செய்யப்படுகின்றது. பூஜைக்கு முக்கியமான சாதனங்கள் பூவும் நீரும்
ஆகும்.

‘புண்ணிய செய்வோர்க்குப் பூவுண்டு நீருண்டு


அண்ணலு மதுகண்டு அருள்செய்ய நிற்கும்”

நல்ல மலர்களைக் கொண்டு இறைவனை நாள்தோறும் வழிபாடு செய்ய வேண்டும். அதுவே


மெய்யும் கையும் பெற்றதற்குப் பயனாகக் கருதப்படுகின்றது.

பூஜையினால் உண்டாகும் பலன்கள்

எல்லா நலன்களும் பூஜையால் ஒருவனுக்கு கைக்கூடும். எண்ணிய எண்ணங்கள்


யாவும் ஒருங்கே எய்தும் ,அரிய காரியங்களையும் செய்து முடிக்கலாம். ஊடல் நலம் ஊநலம்
உணர்வு நலம் ஆகிய அரிய நலன்களும் விளையும்.

கோயிலில் செய்யப்படும் அபிஷேகங்கள்

அய்யனார் கோயிலில் பூஜையின் போது பல்வேறான அபிஷேகப் பொருட்களுடன் வழிபாடு


செய்யப்படுகின்றன். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏதாவது ஒன்றைக் காணிக்கையாக
வழங்கிச் செல்வது மரபாகும்.

1. நல்லெண்ணெய்
2. பால்
3. தேன்
4. பன்னீர்
5. திருநீறு
6. சந்தனம்
7. திருமஞ்சனம்
8. இளநீர்
9. புனித தீரத
் ்தம்
முதலியவை அபிஷேகப் பொருட்களாக அமைகின்றன.

அபிஷேகத்தின் பயன்கள்

அய்யனாரை வணங்க வரும் பக்தர்கள் இளநீர் போன்றவற்றை அவர்களின் திறமைக்கு


ஏற்பக் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படுகின்றது.

பல வாசனை மிக்க மலர்களையும் கொண்டு வழிபாடு செய்கின்றனர். இதன் பயன்கள் பற்றி


ஆகமங்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன.

1.தீர்த்தம் - மனச்சுத்தம்
2.எண்ணெய் - பக்தி
3.மஞ்சள் பொடி - மங்களம்

20
4.தண்ணீர் - சாந்தி கிடைக்கும்
5. சந்தனப் பொடி - செல்வம் கிடைக்கும்
6. பால் - ஆயுள் விருத்தி
7. நெய் - சுகவாழ்வு
8. பழச்சாறு - ஜனவசீகரம்
9. பஞ்சகவ்வியம் - ஆன்மசக்தி
10. பன்னீர் - புகழ்
11. தயிர் - மக்கள் விருத்தி
12. இளநீர் - மக்கட்பேறு
13. குங்குமம் - மாங்கல்ய சுபம்
14. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
15. விபூதி - ஞானம்
பூஜை முறை

அம்மன் கோயில் மற்றும் பெரும்பாலான கோவிலில் காலை, மாலை என்று இரு


வேளைகளில் பூசை நடைபெறும். ஆனால் இக்கோயிலில் ஒரு கால பூஜையானது காலை
வேளையில் மட்டுமே நடைபெறுகின்றது. மற்ற நேரங்களில் பூஜை நடைபெறுவதில்லை. மக்கள்
அனைவரும் பொதுவாக எந்த நேரம் வேண்டுமானாலும் சென்று அய்யனாரை வழிபட்டு விட்டு
செல்கின்றனர்.

பூஜை செய்வோர்

பூரணா தேவி , புஷ்கலை என்னும் இரு தேவியர்களுடன் காட்சி தரும் மூலவரான


அய்யனார்க்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக பூஜை செய்து
வருகின்றனர். அதில் தற்போது இருளாண்டி வேளாளர் மற்றும் அழகர்சாமி வேளாளர்
பூசாரிகளாக உள்ளனர்.

விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களுக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன.


முத்துக் கருப்பணசாமி, வேடன், வேடச்சி, கன்னிமார்சாமி, சங்கிலி கருப்பு ஆகிய
தெய்வங்களும் உள்ளன. காவல் தெய்வங்களான பெரிய கருப்பணசாமி, சின்ன கருப்பணசாமி,
பேச்சியம்மன், சோணைச்சாமி போன்ற சன்னதிகளுக்கு தனி நிர்வாகம் மற்றும் தனி பூசாரிகள்
உள்ளனர். இவ்ஊரைச் நீலமேகம் பிள்ளை வகையைச் சேர்நத ் வர்கள் பரம்பரைப் பூசாரிகளாக
இருக்கின்றனர்.

தொகுப்புரை

மதுரை மாடக்குளம் - அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவிலில் நடைபெறும்


வழிபாடுகளும் , பூஜைகளும் எவ்வாறு நடைபெறுகிறது என்ற செய்திகள் இவ்வியலின் மூலம்
எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

21
வழிபாடு என்பதன் விளக்கம், வழிபாட்டின் தோற்றம், வழிபாட்டின் தன்மைகள், நாள்
வழிபாடு , இறை வழிபாடு என வழிபாடுகள் பற்றிய அனைத்து செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

பூஜையினால் உண்டாகும் பலன்கள் பூஜை முறைகள் , பூஜை செய்வோர்கள் பற்றிய


விவரங்களைப் பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழிபாடுகள் , பூசைகள் பற்றிய செயல்கள் இதில் சிறப்பான இடத்தைப்


பெற்றுள்ளது..என்பதை நாம் இவ்வியலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

குறிப்புகள்

1.
2. கருப்பத்தேவன், திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள் பக்கம் 36
3. போ.வெ. சோமசுந்தரனார், புறப்பொருள் வெண்பாமாலை பக்கம் 221
4. சுப்பிரமணிய கவிராயர், சொ. திருக்குற்றால நாத சுவாமி கோயில் வரலாறும்
பண்பாடும் பக்கம் 22

5. சு. சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு பக்கம் 225


6.யு. சுப்பிரமணியன் தமிழர் சமயம், தமிழர் வேதம்
தமிழகத்துக் கோயில்கள் பக்கம் 54-55

7. வ.த. இராமசுப்ரமணியம், பன்னிருத்திருமுறைகள் தொகுதி8 பக்கம் 545


8. ராஜசேகரன், திருக்கோயில்களில் தொழில் சமுதாய உறவுகள் பக்கம் 139
9. வ.த. இராமசுப்ரமணியம், பன்னிருத்திருமுறைகள் தொகுதி5 பக்கம்224

22
இயல் -3
திருவிழாக்களும் நம்பிக்கைகளும்

திருவிழாக்கள்

திருவிழா அல்லது உற்சவம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில
நாட்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படுவதாகும். திருவிழா அல்லது ஊர்வலம் என்பதே
சரியான தமிழ்ப்பதம் ஆகும். உற்சவம் என்பது மொழிச் சொல்லாகும்.

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே திருவிழாக்கள்


நடைபெற்று வருகின்றன.

‘மனித சமுதாயம் பல்வேறு காரணங்களால் பல்வேறு பிரிவுகளாக வாழ்ந்திருந்த போதும்


அச்சமுதாயம் ஒன்றிணைந்து கொண்டாடுவது திருவிழாக்கள் ஆகும்.”1

ஆண்டு முழுவதும் பாடுபட்டு உழைக்கும் மனிதன் ஓய்வு நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க


விரும்புவது இயல்பான ஒன்றாகும். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாள்களில்
கோயில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

திருவிழாக்கள் அனைத்தும் கோயிலுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. அவ்விழாக்கள்


சமயத்தின் தொடர்பாக மட்டுமின்றி கலைகளின் வளர்நிலையினையும் காட்டுகின்றது.

திருவிழா நடைபெறுவதற்குரிய காரணங்கள்

திருவிழாக்கள் பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவில்


ஆண்டுதோறும் பல்வேற விதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. திருவிழாக்கள்
தனிமனித உறவுகளை மேம்படுத்தவதற்கும், மனிதர்களிடையே நல்ல உறவுகளை வளர்ப்பதற்கும்
காரணமாக அமைகிறது. திருவிழாக்களின் பொழுது சமூகத்தில் வாழும் பலதரப்பட்ட மக்கள்
ஒன்று கூடுவதால் சாதி சமய வேறுபாடுகள் நீங்கி அவர்களிடையே ஒற்றுமை உணர்வை
ஏற்படுத்தும் பாலமாக அமைகின்றது.

‘திருவிழாக் கொண்டாட்டங்களின் போது மக்கள் தங்களுக்குள் வேறுபாடுகளின்றி


பழக்கவழக்கங்கள் மற்றும் நாகரீகத்தையும் வெளிப்படுத்துகின்றனர்”2

திருவிழா நேரம்

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் மதுரையாகும். இம்மதுரையானது திருவிழா


நகரம் என்றழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள

23
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு ஒவ்வொரு மாதத்திலும் 10 நாட்கள் குறையாமல்
திருவிழா நடைபெறும் நிலை காணப்படுகிறது.

விழாவின் சிறப்பு

விழாவானது மனிதனை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாகும். விழாவின் போது


மனிதர்கள் தனது துன்பங்களை மறந்து மன மகிழ்ச்சியோடு இறைவனை வழிபடுகின்றனர்.
மனித சமுதாயம் பல்வேறு காரணங்களால் பல்வேறு பிரிவுகளாக வாழ்ந்திருந்து போதிலும்
அச்சமுதாயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து திருவிழா நடத்தி வருகிறது.

கலைகளின் வளர்ச்சிக்குத் திருவிழா தான் மூலக்காரணம் என்பது மிகையாகாது.


திருவிழாக்கள் பண்பாட்டு உறவையும் வளர்க்க சிறந்ததாக அமைகிறது.

‘ஊர் கொண்ட சீர்கெழு விழாவினும்


ஆர்வலர் ஒத்த மேவரு நிலையினும்”3

என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது.

திருவிழா என்பதற்கு ‘மங்களச்சடங்கு” என்பது பொருளாகும். விழாவின் போது இறைவன் மனம்


குளிர்ந்து மக்களுக்கு அருள் புரிந்து காப்பான் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
திருவிழாவானது மகிழ்ச்சியின் ஊற்றுப் பெருக்காகும். இங்கு சாதி , மதம் பேதமின்றி மக்கள்
ஒன்று கூடி கொண்டாடுகின்றனர்.

கிராமத்துத் திருவிழா

தென் மாவட்டங்களில் நடக்கும் கிராமக் கோவிலின் திருவிழாக்களைக் காண கண்


கோடி வேண்டும் என்பர். நடைபெறும் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு
காரணங்கள் உண்டு. மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வந்து
கண்மலர் காணிக்கையாக்குதல் பொங்கலிடுதல் போன்ற பல நேர்த்தி கடன்களை பக்தர்கள்
முழு பக்தியோடு செய்வர்.

இதற்காக விரதமிருந்து தம் பக்தியினை வெளிப்படுத்துவர். விழாவுக்கு ஒரு வாரம் முன்னதாக


கோவில்களில் காப்பு கட்டுதல் என்னும் விழா நடைபெறும். அதன் பின்பு பல்வேறு நிகழ்ச்சிகள்
தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இன்பம் அடைவர்.

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆண்டுப்பிறப்பான சித்திரை


மாதத்தில் பௌர்ணமி முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம்
மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களில் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாள் தமிழ்
வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. புத்தாடை அணிந்து விருந்துண்டு வருடப்
பிறப்பைக் கொண்டாடுகின்றனர். முதல் நாள் மகிழ்ச்சியாகயிருப்பின் ஆண்டு முழுவதும்
மகிழ்ச்சி நிலவும் என்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு.

ஒவ்வொரு நிறைமதி நாளும் ஒவ்வொரு வகையில் விழாவாக் கொண்டாடப்படுகிறது.

‘கார்த்திகையில் விளக்கீடாகவும் மார்கழியில் ஆதிரையாகவும் தையில் பூசமாகவும் மாசியில்


மகமாகவும் பங்குனியில் உத்திரமாகவும் காட்சி தரும் விழா, சித்திரைத் திங்களில் மீன் சேர்ந்த
நாளாக காட்சி நல்குகின்றது”4

24
கோயில் திருவிழாக்கள் ஆகம தெய்வத் தொடர்புடையது. நாட்டுப்புறத் தெய்வத்
தொடர்புடையது எனப் பகுத்துக் காணலாம். வருடாந்திர விழாக்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில்
நடந்ததே தீரும்.

நாட்டுப்புற தெய்வ விழாக்கள் தெய்வத்தின் அருள் கேட்ட பின்பே நடத்தப்படுகின்றது. கோயில்


திருவிழாக்களில் பாட்டும் தெருக்கூத்தும் நாடகமும் நடனமும் சேர்ந்து காணப்படும். இவை
விழாத் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொன்றாக நடைபெறக் கூடும்.

அய்யனார் திருக்கோயிலின் திருவிழாக்கள்

ஆடி - ஆடி மாதத் திருவிழா

புரட்டாசி - புரவி எடுப்பு விழா, ஊர் பொங்கல் விழா

மாசி - மாசி சிவன்ராத்திரி வழிபாடு (அல்லது)

மாசி களரி திருவிழா

இத்திருவிழாக்கள் மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் ஊரின்


நன்மைக்காகவும் கொண்டாடப்படுகின்றது. திருவிழாக் காலங்களில் மக்கள் தங்களின்
நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். அய்யார்க்கும் மற்றும் இக்கோயிலின் பிற
தெய்வங்களுக்கும் சிறப்பான பூசைகள் நடத்தப்படுகின்றது.

ஆடி, புரட்டாசி, மாசி, ஆகிய மூன்று மாதங்களிலும் இக்கோவிலில் நடைபெறும்


திருவிழாக்கள் ஒருநாள் மட்டுமே நடைபெறுவதாக இருந்தாலும் கோலாகலத்துடன்
கொண்டாடப்படும் . இத்திருவிழாக் காலங்களில் இக்கோவிலின் தோற்றமானது
பார்ப்பவர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கும்.

விழா சாட்டுதல்

சாட்டுதல் என்பது ஊர் பெரியதனம் என்பவர் வலியோர் ஒருவரிடம் அய்யனாரை


வழிபடுவதைப் பொதுமக்களிடம் தெரிவிக்குமாறுக் கூறி ஊரைச் சுற்றி வலம் வருதலே ஆகும்.

திருவிழா எடுக்கும் நாள், கிழமை , நேரம் குறிப்பது பற்றி ஊர் பெரியோர்கள் சேர்ந்து பொது
மக்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர். விழாத் தொடங்கும் நாளை ஊர் மக்களுக்கு
பறை அறிவித்தல் மூலம் தெரியப்படுத்துவர். ஊரில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டையும்
மனத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வர். இந்நாளில் பல்வேறு நேர்த்திக் கடன்களை
வேண்டிக் கொள்வர்.

திருவிழாக் காலங்களில் தங்கள் ஊரில் அடுத்த ஊர்க்காரர்கள் வந்து தங்கவோ, திருவிழாச்


சாட்டியபின் மற்ற ஊர்களுக்குச் சென்று தங்குதலோ கூடாது. என்று சில கட்டுப்பாடுகளை
விதித்திருக்கின்றனர். திருவிழா சாட்டியபின் ஊர் முழுவதும் வாழை மரம் மாவிலை தோரணம்
வேப்பிலை தோரணம் நார்தத ் ங்காய் இளநீர் கரும்பு போன்றவை அலங்காரத்திற்காகக்
கோயிலின் முன் உள்ள பந்தலில் கட்டப்படும்.

திருவிழாக் காலங்களில் ஊரில் நடைபெறக் கூடிய திருமணம் சடங்கு நீராட்டு போன்ற


நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை.

கம்பம் நடுதல்

25
திருவிழாவில் சிறப்பாக நடைபெறக் கூடியது கம்பம் நடும் விழா ஆகும். முகூர்த்த
காலில் மா இலை நவ தானியங்கள் காணிக்கை ஆகியவை சேர்த்து ஒரு மஞ்சள் துணியில்
வைத்துக் கட்டி நீண்ட மூங்கிலில் மஞ்சள் குங்குமம் தடவி அம்மூங்கில் கம்பை கோயிலின் முன்
புறத்தில் முகூர்த்த காலாக நடுகின்றனர்.

இத்திருவிழாவானது அய்யனார்க்கு எடுக்கும் விழாவாகும். அலரிப் பூவைப் பறித்து


அய்யனார்க்குப் படைத்து வேப்ப மரத்தின் மூன்று கொம்புள்ள கிளையைக் கோயில் வாயிலில்
ஊன்றுவர். மாலைப் பொழுதில் அக்கம்பத்தைச் சுற்றி பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடி
மகிழ்ச்சியோடு கொண்டாடுவர்.

செவ்வாய்க் கிழமையன்று பொங்கலும் புதனன்று தேரோட்டமும் நடைபெறும். வியாழக்


கிழமையன்று உடலில் அலகுகளைக் குத்திக் கொண்டு

ஊரைச் சுற்றி கோயிலை வந்தடைவர். அன்று இரவில் உற்சவர் சிலையினைத் தூக்கிக்


கொண்டு ஊரைச் சுற்றி வருவர். மறுநாள் திருவிழாவின் இறுதி நாளாகும்.

அன்று கோயிலில் ஊன்றிய கம்பத்தை கிணற்றுக்குள் போடுகின்றனர். பத்தாம் நாளில்


மீண்டும் மாவிளக்கைக் காணிக்கையாகச் செலுத்திக் கும்பத்தைக் கிணற்றுக்குள் போட்டு
விடும் வழக்கம் காணப்படுகிறது. கோயில் பூசாரி பண்டாரம் தன் கையில் கட்டிய காப்பையும்
கிணற்றினுள் போட்டு விடுவர். அன்றிரவு தெருக்கூத்தோ அல்லது சதிராட்டமோ நடைபெறும்.

மின் விளக்கு அலங்காரம் கோயிலின் முன் பந்தல் இடுதல், பலவிதமான தோரணங்கள்


ஊரில் அனைத்து தெருக்களிரும் கட்டப்படுவது போன்றவை மக்கள் வழக்கத்தில்
கொண்டுள்ளனர்.

ஆடி மாதத் திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அய்யனாரைக் காவல் தெய்வமாகக் கொண்டு பெரிய


கருப்பணசாமி , சின்னக் கருப்பணசாமி, பேச்சியம்மன், சோனைச்சாமி மற்றும் பரிவாரத்
தெய்வங்களும் காணப்படக்; கூடிய இக்கோவிலில் ஆடி மாதத் திருவிழா நடைபெறுகின்றது.

இத்திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடல் பாடல் மேளதாளத்துடன்


தான் வசிக்கும் ஊரான மாடக்குளத்தில் இருந்து கிளம்பிச் சென்று ‘ வைகை “ ஆற்றினைச்
சென்றடைவர் அங்கிருந்து அவர்கள் பால்குடம் சந்தனக்குடம் அலகு குத்துதல் போன்ற அவரவர்
் ிக் கடன்களைச் செலுத்துவர்.
வேண்டுதல்களுக்கு ஏற்றாற்போல் நேர்தத

அதன்பின் பால் குடங்களை சுமந்த படி மீண்டும் ஆடல் பாடல் மேளத்துடன் ஊர்வலமாய்
ஊர் முழுவதும் உள்ள வீதிகளின் வழியே வலம் வந்து கோவிலை சென்று அடைவர்.

கோவிலை அடைந்தவுடன் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பான முறையில்


பாலினால் அபிஷேகம் செய்யப்படும். பெரும் திரளாக மக்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி
நிற்பர்.

புரவி எடுப்பு விழா

புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புரவி எடுப்பு விழா இக்கோவிலில்


கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் குதிரையின் கண் திறப்பு
குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கின்றது.

சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் நன்கு அலங்கரிக்கப்பட்டு வரிசையாக மேல்


மந்தை என்றழைக்கப்படும் இடத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும். அதில்
கிராமத்தின் சார்பாக பொதுவில் செய்யப்படும் குதிரையில் அய்யனார் சிலையை முன்னதாக

26
வைத்திருப்பர். மற்ற குதிரைகள் பக்தாள்களால் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட
குதிரைகளாகும்.

சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் என்பதால் அதில் வைக்கோலை உள்ளே வைத்து


தூக்கிச் செல்வர்.

இந்தக் குதிரைகள் ஒவ்வொன்றும் பக்தர்களால் சுமக்கப்பட்டு நடுமந்தையில் கொண்டு


சென்று வைக்கப்படும். அங்கு சேவலின் காலை அறுத்து அந்த இரத்தத்தின் மூலம்
அக்குதிரைகளுக்கு கண் திறப்பு செய்யப்படுகிறது. அதன் பின் அங்கிருந்து கிளம்பும்
குதிரைகள் ஆடல் பாடல் மேளதாளங்களுடனும் வானவேடிக்கை போன்ற அதிர் வேட்டுகளுடனும்
கோவிலுக்குக் கிளம்பி ஊர்வலமாகச் செல்லும் பொழுது அந்தக்குதிரைகளுக்குப் பின்னால்
பொங்கல் பானைகள் வரிசை வரிசையாக அணிவகுத்து செல்வது மரபாகும்.

புரவிகள் செய்ய அய்யனார் கோவில் குளத்தில் மண் எடுப்பர். புரவிகளை வண்டியில்


ஏற்றி அய்யனார் கோவிலுக்குக் கொண்டு செல்வர். கோயில் பூசாரி நெல்லைப் பரப்பி சேவலைப்
பலி கொடுத்து அதன் இரத்தத்தை புரவியின் கண்களில் தடவுவர். பின்னர் புரவிகள் அய்யனார்
கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். அய்யனார்க்கு பலி கொடுப்பதுடன் விழா முடிவடைந்து
விடும்.

மாசி சிவராத்திரி வழிபாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் அணைப்பட்டி, சிறு நாயக்கன்


் வர்கள், தங்கள் பெட்டியை கழுவிக்கொண்டு இருந்த போது அப்பெட்டியானது
பட்டியைச் சேர்நத
ஆற்றில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு இறுதியாக மதுரை மாடக்குளம் கண்மாய்க்கு வந்து
சேர்ந்தது. அப்படி வந்தப் பெட்டிக்குள் மணி தீபக்கால் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள்
இருப்பதைக் கண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அணைப்பட்டி சிறுநாயக்கன்பட்டி கிராமப் பகுதியில்


இருந்து இந்தப் பெட்டி மிதந்து வந்ததை அறிந்து கொள்கின்றனர். அதன் பிறகு இச்
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் எழுப்பி இறை வழிபாடு செய்து வருகின்றனர் என்று ஒரு
செய்தி கூறப்படுகிறது.

அதன்படி இன்றைக்கும் மாசி சிவன் ராத்திரி அன்று அணைப்பட்டி சிறுநாயக்கன்பட்டி


கிராமப் பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக சுமார் 50 மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன்
வந்து தங்களது குல தெய்வத்தை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அன்று ஒரு நாள் மட்டும்
கோவிலின் சாவியினை அவ்வூர் மக்களிடம் ஒப்படைத்து விடும் வழக்கம் இன்றும் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சிவராத்திரி மிகவும் சிறப்பாகவும்


விழாக்கோலமாகவும் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவினை ‘ மாசி களரி திருவிழா”
என்று கூறுகின்றனர். அன்றைய நாளில் ஸ்ரீ ஈடாடி இய்யனாரை குல தெய்வமாக
வழிபடுபவர்கள் மதுரையின் பல்வேறு இடங்களில் இருந்தும் கோவிலுக்கு வருகின்றனர்.

அதுமட்டுமன்றி தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் பக்தர்களும் கோவிலுக்கு


வந்து தங்களுடைய நேர்த்திக் கடன்களைச் செலுத்தி விட்டுச் செல்வர். வெகுதொலைவில்
எந்த ஊரில் வசித்தாலும் பெரும்பாலான பக்தர்கள் தவறாமல் சிவராத்திரி வழிபாட்டில் கலந்து
கொண்டு மகிழ்ச்சி கொள்வர்.

மாசி மாத அமாவாசை நாளை ‘ மகா சிவராத்திரி” என்று அழைப்பர். சிவபெருமான்


நஞ்சை உண்டு இவ்வுலகைக் காப்பாற்றினார் என்பது புராண வரலாறாகும். சிவராத்திரியானது
மக்கள் விரதமிருந்து கண் விழித்து ‘ ஓம் நமசிவாய” என்று கூறி மறுநாள் குளித்துச்

27
சிவனைவழிபட்டுவிரதத்தை முடித்துக் கொள்வர். கிராமங்களில் சிவராத்திரியன்று வீடு
வீடாகச் சென்று பயறு வகைகளான மொச்சை சுண்டல் போன்றவற்றை வாங்கி வேக வைத்து
தெய்வத்திற்குப் படைக்கின்றனர்.

பங்காளிகள் எனப்படும் ஒரே இனத்தைச் சார்ந்தவர் அனைவரும் ஒன்று கூடி


கொண்டாடும் விழாவான மாசி சிவன்ராத்திரியன்று அய்யனார் கோவிலின் அனைத்து
தெய்வங்களுக்கும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றது. அன்றைய நாளில் அய்யனார்
கோவில் திருவிழாக் கோலத்தில் காட்சியளிக்கும். ஊர் மக்கள் அனைவரும் மிகவும்
கொண்டாட்டத்துடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவர்.

அணைப்பட்டி பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அதிகாலையில் ஒன்று கூடி நிற்கும்


காட்சி அழகின் உச்சநிலையாகும். அன்றைய திருவிழாவினைச் சிறப்பாக முடித்து விட்டு
மறுநாள் கோவில் சாவியை தர்மகர்தத் ாவிடம் கொடுத்து விட்டுச் சென்று சென்று விடுவார்கள்.

நெல் அறுவடையான பின்பு முதல் அறுவடை செய்த நெல் தெய்வத்திற்கு உரியதாகக்


கருதப்படுகிறது. ஆகையால் புன்செய்யில் உள்ள தானியங்களை இத்திருவிழாவின் போது
இறைவனுக்குப் படைக்கின்றனர்.

ஊர் பொங்கல் விழா

ஈடாடி அய்யனார்க்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ‘ஊர் பொங்கல் விழா”


நடத்தப்படுவது வழக்கமாகும். இந்தத் திருவிழாவினைக் காண்பதற்கு இரு கண்களும் மட்டும்
போதாது.

அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு ஆட்டம், பாட்டத்துடன் கோவிலுக்குச் சென்று


மொட்டையிட்டு காவல் தெய்வமான சோனைச் சாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து,
மூன்று மணி அளவில் மீண்டும் வீடு திரும்புவர். சிலர் விடியும் வரை அக்கோவிலிலேயே தங்கி
விடுவதும் உண்டு.

அன்றைக்கு மதுரை மாடக்குளம், அதன் அருகில் உள்ள பழங்காநத்தம் மற்றும்


இங்கிருந்து இடம் பெயர்ந்து போனவர்கள் என அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி
் ஊர் பொங்கல் விழாவினைக் கொண்டாடுவது வழக்கமாகும்.
சொந்தங்களுடன் சேர்நது

கிராம மரபு வழி மரியாதைக்குரியவர்களான தலைக்கட்டு என்று


சொல்லக்கூடியவர்களிடம் வீட்டு வரியினை வசூல் செய்து நடத்தப்படும் விழாவாகும்.
இத்திருவிழாவில் ஊர் மக்கள் பொங்கல் வைத்து அய்யனாரையும் மற்றும் உள்ள அனைத்து
தெய்வங்களையும் வழிபடும் வழக்கம் காணப்படுகின்றது.

முதலில் ஊருக்குள் (மதுரை மாடக்குளம்) இருந்து பொங்கல் பானைகளைச் சுமந்தபடி


பெண்கள் வரிசை, வரிசையாகக் கோவிலுக்குச் செல்லுவர். கிராம நாட்டாமை வீட்டுப் பொங்கல்
பானையை முதலில் சுமந்து செல்வர். அடுத்த பானைகாகக் கிராம சேர்வைக்காரர் வீட்டுப்
பொங்கல் பானையும் மற்றுமுள்ளவர்கள் அதன் பின்னே செல்வதும் மரபாக உள்ளது.

இவ்விழாவானது இரவு முழுவதும் நடைபெறக்கூடியதாகும். அனைவரும் பொங்கல்


வைத்து முடித்தவுடன் ஒவ்வொருவரின் பொங்கல் பானையிலும் அய்யனார் கோவில் பூசாரியும்
கருப்பணன் கோவில் பூசாரியும் இரண்டு, இரண்டு கரண்டிகள் அளவு பொங்கலினை எடுத்து
அய்யனார் கோவில் மற்றும் கருப்பணக் கோவில் சன்னதியில் தலைவாழை இலைவிரித்து பெரிய
படையலாகப் போடப்பட்டு , அதன்பின் பூசைகள் செய்யப்படுகின்றது.

் ப்படுகிறது.மற்றக்
இந்தப் பொங்கல் படையலின் மூலம் ஊரின் ஒற்றுமை உணர்தத
கோவில்களில் பூசாரிகள் மட்டுமே பொங்கல் வைக்கம் வழக்கம் இருக்கும். ஆனால்

28
இக்கோவிலில் ஊர்ப் பெண்கள் அனைவரும் சென்று பொங்கல் வைக்கும் வழக்கம்
காணப்படுகிறது.

இத்திருவிழா முடிந்ததும் அருகில் உள்ள மலையில் வீற்றிருக்கும் கபாலீஸ்வரி


அம்மனுக்கான விழா துவங்கி விடும். ..இந்த விழாவும் இங்கு வெகு சிறப்பாக ஆண்டுதோறும்
கொண்டாடப்படுகிறது.

நம்பிக்கைகள்

‘நாட்டுப்புறவியல் என்பது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால்


பாதுகாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடாகும்.”5

நாட்டுப்புற நம்பிக்கை நாட்டுப்புறவியலின் அடிப்படைப் பொதுக்கூறு எனப்படும். மக்களின் அறிவு,


கலை, ஒழுக்கம், சட்டம், வழக்கம் முதலியவை தாம் பண்பாடாக மலர்கின்றன என்கிறார்
..மானிடவியல் ரேறிஞர் டெய்லர் அவர்கள். பண்பாட்டினை வாழ்முறையாகக் கருதினால்
மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் இதன் கண் அடங்கி விடுகின்றன.
பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில்
தோன்றியவையாகும்.

நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு அம்மக்களின் சமுதாய உணர்வுகளே


நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. நம்பிக்கைகள் காலங்காலமாகத் தொடர்ந்து
வருகின்றன. நம்பிக்கைகள் பெரும்பாலும் அச்சவுணர்வின் அடிப்படையாகத் தோன்றியதாகக்
காட்சியளித்தாலும் , இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராத பொழுதும் மனித
வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பித்துக் கொள்ள இயலவில்லை .
அந்நிலையில் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது.
அவைகளே நம்பிக்கைகளாக உருவெடுக்கின்றன. மனித மனத்தின் விளைவாக நம்பிக்கை
தோன்றுகிறது.

‘நம்மிலே கடவுள் நம்பிக்கை உள்ளவரே மிகப் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை


உடையோரிலும் ஒவ்வொருவரும் தங்கள் மனத்திற்குப் பிடித்த ஒரு வடிவத்தைக் கடவுளாகக்
கற்பனை செய்து கொள்கிறார்கள். கடவுளுக்கும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனியே
தொடர்பு இருக்கிறது..என்ற கற்பனையை மதவாதிகள் மக்கள் நெஞ்சிலே மிக ஆழமாகப்
பதித்திருக்கின்றனர். இவ்வகையான தனிமனிதன் கடவுள் உறவு மதங்கள் உருவான பின்
எழுந்ததாகும்.”6

் ்காணும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட்டு வருகின்றனர்.


அய்யனாரை வழிபடுவோர் கீழக

1. பூக்கேட்டல்
2. மழை வளம் வேண்டுதல்
3. அன்னதானம் வழங்குதல்
4. நோய் நீக்குதல்
5. குடும்பக் கஷ்டங்கள் நீங்குதல்
6. விளைச்சல் வளம்
7. பெயரிடல்
8. திருமணம் வேண்டுதல்
9. கால்நடைகள் நலம் வேண்டுதல்
10. கிடா வெட்டுதல்
பூக்கேட்டல்

29
அய்யனார் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நம்பிக்கைகளில்
பூக்கேட்டல் முறையும் ஒன்றாகும். தாம் மேற்கொள்ளும் செயல் நன்றாக முடியுமா? முடியாதா?
என்ற கேள்வி மனதில் ஏற்படும் . வெள்ளைப்பூ, சிவப்புப் பூ என்ற இரண்டு பூக்களையும் சிறு.சிறு
பொட்டலங்களாக மடித்து அந்தப் பொட்டலங்களைக் குலுக்கிப் போடுவர். சிறு குழந்தையை
விட்டு ஏதேனும் ஒன்றை எடுக்கச் சொல்லி தம் மனதில் நினைத்த காரியமானது எவ்விதத்
தடையும் இன்றி வெற்றிகரமாக முடியும் என்று மக்கள் நம்புகின்றனர்.

மழை வளம் வேண்டுதல்

நாட்டில் மழை பெய்து நாடு செழிக்க அய்யனாரின் அருள் வேண்டுமென நினைத்து


மக்கள் வேண்டுவர். இதனால் மழை பொழிந்து ஊர் செழிக்கின்றது. .என்ற நம்பிக்கை
உடையவர்களாக வாழ்கின்றனர். மக்கள் ஏழை வளம் வேண்டும் தன்மையானது,
் ப்படுகின்றது.
திருப்பாவையில் உள்ள நான்காவது பாடல் மூலம் உணர்தத

‘ஆழிமழைக் கண்ணா ஒன்று நீரைகர வேல்


் றி”.7
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ததே

இந்தப் பாடலை பாடினால் மழை வரும் என்று நம்பி மக்கள் இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

மக்களின் வேண்டுதல்களில் மகிழ்ந்த இறைவன் ஊர் செழிக்க மழை கொடுப்பார் என்ற


நம்பிக்கை காலங்காலமாய் மக்களிடையே காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக
இறைவனுக்குப் பூசைகளும் சிறப்பு வழிபாடுகளும் திரு விழாக்களும் மற்றும் நேர்த்திக்
கடன்களும் செலுத்துகின்றனர்.

அன்னதானம் வழங்குதல்

அன்னதானம் செய்வதால் தங்களுடைய குடும்பம் செழிப்பாக இருக்கும் என்று


கருதினர். அன்னதானத்தின் மூலம் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடும். ..என்ற
நம்பிக்கை மக்களிடம் நிலவி வருகின்றது. மதுரை மாடக்குளம் பழங்கானத்தம் பகுதிகளில்
உள்ள மக்கள் இணைந்து மாபெரும் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்ற அன்றைய நாளில்
ஐயாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது சிறப்பிற்குரியதாகும்.

நோய் நீக்குதல்

கண்நோய் முதலான உடம்பில் ஏற்படும் எவ்விதமான நோய்கள் என்றாலும்


அந்நோய் குணமாகும் பொருட்டு மக்கள் அய்யனார் மீது பெரிதும் நம்பிக்கை வைத்து
வழிபடுகின்றனர். நோயினைத் தீர்க்கும் விதமாக மக்கள் அய்யனை வழிபட்டு குணமாக புரவி
எடுத்தல் மாவிளக்கு போடுதல் போன்ற வேண்டுதல்களைச் செய்கின்றனர்.

குடும்பக் கஷ்டங்கள் நீக்குதல்

குடும்பத்தில் ஏற்படும் துன்பம் நீங்க வேண்டும் என்று எண்ணி அய்யனாரிடம்


வேண்டிக்கொள்வர். அப்பொழுது பால் போன்றவற்றை இறைவனின் உருவச் சிலைக்கு
அபிஷேகம் செய்தால் துன்பம் நீங்கும் என மக்கள் நம்புகின்றனர்.

விளைச்சல் வளம்

30
தான் செய்யும் தொழில் நல்ல விளைச்சல் அடைய வேண்டும் என்று எண்ணி விளைச்சல்
வரும் பயிர்களைக் கொண்டு கோயிலுக்கு அன்னதானம் நன்கொடை விளைச்சலில் பாதியை
அப்படியே தருதல் போன்றவைகளை செய்வார்கள்.

மதுரை மாடக்குளம் கிராம மக்கள் எந்தப் பயிர் அறுவடை செய்தாலும் முதலில் மரக்கால்
படி எடுத்து அய்யனாரிடம் வைத்து வழிபடுவர். இது அக்கிராம மக்களின் வழக்கமாகும்.

பெயரிடல்

பெயர் வைத்தல் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.


மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காக பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்களுடைய
வம்சம் தலைமுறை தலைமுறையாக வளர்வதற்கு ஒவ்வொரு குடும்பத்தவரும் தங்களுடைய
குலதெய்வம் பெயரை வைக்கின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் கருப்பன் கருப்புச்சாமி என்ற
பெயர்களை வைக்கின்றனர். இவ்வாறு பெயர் வைப்பதால் தங்களுடைய குடும்பம் செழிப்பாக
இருக்கும் என்று நம்புகின்றனர்.

திருமணம் வேண்டுதல்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் முக்கியமான நிகழ்ச்சி திருமணம் ஆகும்.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை


பண்பும் பயனும் அது.”8

கன்னிப் பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் வேண்டி செவ்வாய் மற்றும் வெள்ளிக்


கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றியும் வழிபடுகின்றனர்.
மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் புரவி எடுக்கின்றனர்.

கால்நடைகள் நலம் வேண்டுதல்

தங்கள் மாடுகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால் அய்யனாரை


வேண்டுவர். அதன் உடல் நலமாகி விடும் பொழுது புரவி எடுத்து தங்களின் நேர்த்தி கடனை
செய்வார்கள்.

அய்யனார்க்கு மக்கள் தங்கள் நோய் நீக்கம் பதவி உயர்வு விளைச்சல் வளம்


கல்வி திருமணம் போன்ற குறைகளை வேண்டி அதற்காக கிடா வெட்டுவர். தங்கள் குறைகள்
தீர கிடா வெட்டினால் சுகமாகும் என்பது மக்களிடையே நிலவும் நம்பிக்கையாகும்.

் விடுவர்.
கோயிலுக்கு என்று ஆட்டுக்கிடாய் கன்றுக் குட்டி என மக்கள் நேர்நது
அதுவே கோயில் காளையாக இருப்பதாகும்.

31
32
தொகுப்புரை

1. திருவிழாக்களும் நம்பிக்கைகளும் மற்றும் அதற்கான காரணங்கள் போன்றவற்றை


இவ்வியலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

2. திருவிழாவின் சிறப்பாக கிராமத்துத் திருவிழா சித்திரைத் திருவிழா பற்றிய


விவரங்களை இவ்வியலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

3. அய்யனார் திருக்கோயிலின் திருவிழாக்களின் செயல்கள் விழா சாட்டுதல் கம்பம்


நடுதல் ஆடி மாத திருவிழா புரவி எடுப்பு விழா ஊர் பொங்கல் விழாக்கள் இவ்வியலில்
இடம் பெற்றுள்ளன.

4. நம்பிக்கைகளின் மூலம் மக்கள் வேண்டுவது பூக்கேட்டல் மழை வளம் வேண்டுதல்


அன்னதானம் வழங்குதல் நோய் நீங்குதல் கஷ்டங்களைப் போக்குதல் விளைச்சல் வளம்
இவைகள் பற்றி இவ்வியலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

33
குறிப்புகள்

1. சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு பக்கம் 235


2. மேலே குறிப்பிட்ட நூல் பக்கம் 235
3. சி. விவேகானந்தன், நாகராஜ கோவில் பக்கம் 46
4. ஈ.கே. சண்முகம், இந்திய விழாக்கள் பக்கம் 169
5. சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு பக்கம் 189
6. முனைவர்தொ. பரமசிவன் , தெய்வங்களும் சமூக மரபுகளும் பக்கம்1
7. அன்பரசு, ஆண்டாள் திருப்பாவை பக்கம் 20(பாடல் எண்4)
8. வரதராசனார்.மு. திருக்குறள் இல்வாழ்க்கை பக்கம்11(குறள் எண்45)

34
ஆய்வு நிறைவுரை

முடிவுரை

அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனாரை அணைப்பட்டி மற்றும் சிறுநாயக்கன்பட்டியைச்


சேர்ந்த 23 ஊர் செம்படவர்கள் மேலும் பல இனத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் அனைவருக்கும்
பொதுவான தெய்வமாக வணங்கி வருகின்றனர்..என்பதனை இவ்ஆய்வு தெளிவாக
விளக்குகிறது.

அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார் தல வரலாறு கோயில் அமைப்பு தொடக்க காலம் முதல்
இன்று வரை நடைபெறும் கோயில் திருவிழாக்களும் பக்தர்களின் வழிபாட்டு முறைகளும்
மக்களின் நம்பிக்கைகளும் முதலியன பற்றி கள ஆய்வின் துணை கொண்டு தனித்தனியே
தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.

இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் பக்தர்களால் சிறப்பாக


கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழா மற்றும் பூசைகளைக் காண வரும் பக்தர்களின்
பக்தித் திறன் கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு கோயில்கள் இப்பகுதியில் இருப்பினும் மக்கள் அன்றாடம் வணங்கும்


பெருமையுடைய திருக்கோயிலாக இக்கோயில் அமைந்திருக்கிறது. அருள்மிகு ஸ்ரீ ஈடாடி
அய்யனார் திருக்கோயில் வழிபாடுகளம் பூசைகளும் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றன.

வழிபாட்டு நிலையில் பூசை மற்றும் பூசையினால் உண்டாகும் பலன்கள் கோயிலில் செய்யப்படும்


அபிஷேகங்கள் அபிஷேகத்தின் பயன்கள் இக்கோயிலில் செய்யப்படும் பூசைகள் , பூசைப்
பொருட்கள், பூசை செய்வோர் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

மக்கள் சாதி மத வேறுபாடுகளை மறந்து இக்கோயிலில் அனைவரும் சமம் என்ற


நிலையில் வழிபாடு செய்கின்றனர்.

இன்றைய அறிவியல் உலகில் காலங்கள் மாறினாலும் நாகரீகம் பண்பாடு மாறினாலும்


நாட்டுப்புறங்களில் நாட்டுப்புறத் தெய்வங்கள் தனக்கென்ற ஒரு தனிச் செல்வாக்கை
எப்பொழுதும் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை இவ்ஆய்வின் மூலம் அறிய
முடிகிறது.

35
துணை நூற்பட்டியல்

முதன்மை ஆதாரம்

அருள்மிகு ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவில்


மதுரை மாடக்குளம்
மதுரை மாவட்டம்
துணை ஆதாரம்

1. அன்பரசு - ஆண்டாள் திருப்பாவை


சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அப்பர் அச்சகம்
சென்னை. முதற் பதிப்பு -1959

2. வ.த. இராமசுப்ரமணியம் - பன்னிருத்திருமுறைகள் தொகுதி-8


வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை - 600 017

3. கனக சபாபதி.ப. - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்


திருத்தலவரலாறு உடுமலை.
முதற்பதிப்பு – 1997

4. கிருபானந்த வாரியார் - அருள்வாக்கு ஸ்ரீ கோமதி அச்சகம்


சென்னை. முதற்பதிப்பு - 1990
5. சு.சக்திவேல் - நாட்டுப்புற இயல் ஆய்வு
மாணிக்கவாசகர் பதிப்பகம்
சென்னை. முதற் பதிப்பு -1983.
6. சுப்ரமணியன் .பெ. - தமிழர் திருவிழாக்களும் பண்பாடும்
ராம்குமார் பதிப்பகம்
பழனி. முதற் பதிப்பு - 1959.

7. சுப்ரமணியன்.யு. - தமிழர் சமயம் தமிழர் வேதம்


தமிழகத்துக் கோயில்கள்
தஞ்சாவூர். இரண்டாம் பதிப்பு-1990.
8. சுப்ரமணிய கவிராயர்.சொ - திருக்குற்றால நாத சுவாமி கோயில்
வரலாறும் பண்பாடும்
உலகத் தமிழாய்ச்சி நிறுவனம்
சென்னை. முதற்பதிப்பு -1998.
9. திரு. பொ.வெ. சோமசுந்தரனார் -புறப்பொருள் வெண்பாமாலை
சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் மதுரை. ம.ப -1969.
10. தொ. பரமசிவன் - தெய்வங்களும் சமூக மரபுகளும்
நியூ செஞ்சுரி புக் உறவுஸ்(பி) லிட்
அம்பத்தூர் .சென்னை – 600 018. முதற்பதிப்பு – ஜனவரி.

11. ம.பொன்னுச்சாமி. - பச்சையம்மன் வரலாறும் வழிபாடும்


பொன்மணி பதிப்பகம் ஓசூர். முதற்பதிப்பு-
2001.

36
12. வரதராசனார்.மு - திருக்குறள்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அப்பர் அச்சகம்.
சென்னை. முதற்பதிப்பு- 1959.
13. வைத்தியலிங்கம்.செ - தமிழ்ப் பண்பாட்டு வரலாறு
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முதற்பதிப்பு – 1997.
14. ரமேஷ்குமார்.மு. - உறலோ மதுரை. மாத இதழ்
ஆகஸ்ட் 2017
நாகமலை புதுக்கோட்டை
மதுரை – 625019.
பின்னிணைப்பு
தகவலாளி பெயர்

வ.எண் பெயர் பாலினம் ஊர் வயது


1. வி.ஆர் நாகராஜன் ஆண் மதுரை மாடக்குளம் 67
2. எம். கணேசன் ஆண் மதுரை மாடக்குளம் 58
3. எஸ். ஜெகதீசன் ஆண் மதுரை மாடக்குளம் 52
4. ஜி.விஜயலட்சுமி பெண் மதுரை மாடக்குளம் 62
5. முத்துக்குமார் ஆண் மதுரை மாடக்குளம் 48
6. செல்லம் சிவாச்சாரியார் ஆண் விளாச்சேரி 66
7. என். பிரபாகரன் ஆண் மதுரை மாடக்குளம் 52

37

You might also like